Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2f2438da32c95bb20c4e02991170f95a.jpg

இது எனது 71ஆவது பக்கம்....கடந்த ஓராண்டுக்கு மேல் ஆதரவு தரும்,மௌனமாய பார்த்து செல்லும்,கருத்துக்களை வளங்கும்  அத்தனை உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்......

தொடர்ந்து வரும் காலங்களில் உங்கள் மௌனங்களை கலைத்து ஒரு வரியேனும் பதிவிடுவீர்களேயானால் மீண்டும் தொடர்வதற்கு ஊக்க மருந்தாக இருக்கும்..அன்புடன் யாயினி...

 

 

இவ்வருட பெப்ரவரி மாதத்தின் சிறப்புகள் தெரியுமா?

12510413_232280637103383_7303805355178351510759_1548930212034197_227929442927267

2016-ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் , பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது .

மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் பெப்ரவரி 29யில் பிறக்கும் குழந்தைகளுக்கு 4 வருடங்களுக்கு ஒரு தரம் தான் பிறந்த நாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.

 
mayoora pic IMG_5445 (1)
 
 

இயல் அமைப்பின் செய்தி
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.

இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.
மனித குலத்தின் அறிவு உருவாக்கத்தில் விக்கிப்பீடியாவின் தோற்றம் ஒரு பாய்ச்சல் எனலாம். தமிழ் மொழியை நவீன அறிவுத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மூலமான அறிவு உருவாக்கம் பரவல் தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவையாக வளர்ந்துள்ளன. அத்துடன் இது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்ட குழுமத்தை பாராட்டுவதுடன் விக்கிப்பீடியா நிறுவுநரான திரு இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருதை வழங்கி கௌரவிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது இயல் விருது கேடயமும் பரிசுத்தொகைப் பணம் 2500 டொலர்களும் வழங்கப்படும்.

 

http://www.jeyamohan.in/82804#.Vo1HePwg4gw.facebook

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளிக்கு பறக்கிறார் முதல் ஈழத்துப் பெண்!

முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.

அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு ஈழத் தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இவரோடு இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து சில நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர். படத்தில் இருப்பவர் டியானா மற்றும் சியோபன்.

முதல் முறையாக தமிழர் ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே !

‪#‎வாழ்த்துக்கள்‬

 
Nadarajah Sanjeev's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
குங்கும நிற புங்கமலர்

pongamia%2Bpinnata%2B.jpg

வெளிரிய குங்கும நிற புங்கமலர்

ponga.jpg

 

http://inithal.blogspot.co.uk/2016/01/blog-post_6.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பிழைப்புக்காக கூட வாங்காமல் வாழ்வுக்காக நீர் தூக்கியெறிந்த வேட்டியில்தான் காக்கப்பட்டிருக்கிறது ஏழைக்கிழவனின் 
மானமும் அம்மணமும்! 
‪#‎போட்டோக்காகவேட்டிக்கட்டியகார்பரேட்காமெடியன்களுக்கு‬!

12509860_1638506419733698_50891749047278

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

10262054_1239617422721333_60660154847687

‘ ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்!’’
- அன்பு அப்பா பிரித்விராஜ்

சமீபத்தில் நடிகர் `பப்லு' பிரித்விராஜுக்கும் அவர் மகனுக்கும் ‘சோல்மேட்’ விருது வழங்கியிருக்கிறது, ‘வி மேகசின்’. சென்ற வருடம் ‘வாவ் மேகசின்’ அவருக்கு ‘பெஸ்ட் ஃபாதர்’ அவார்டு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.இதற் கெல்லாம் காரணம்... ஆட்டிஸம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு, அற்புத அப்பாவாக பிரித்விராஜ் அன்பு செய்து வருவதுதான்!

‘‘மீடியாவில் காலூன்றி, என் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பயணம் நல்லபடியா போயிட்டிருந்தப்போ, எனக்குத் திருமணமும் முடிந்து, அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. எனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க வந்த அந்தக் குழந்தைக்கு, ‘அஹத் மோகன் ஜபார்’னு பேர் வெச்சோம். ‘அஹத்’னா `அரபிக்' மொழியில் ‘ஒருவன்’னு அர்த்தம். ‘மற்ற குழந்தைகளைப் போல சேட்டை இல்ல, அஹத் ரொம்ப அமைதி!’னு நான் சந்தோஷப்பட்டுட்டு இருக்கும்போது, ‘இல்ல, அவன் அப்நார்மலா இருக்கான். டாக்டர்கிட்ட காட்டணும்’னு சொன்னார் என் மாமனார். அவர் எப்படி என் பையனை அப்படிச் சொல்லலாம்னு, கோபப்பட்டேன். கோபம் அடங்கி, நிதானமா யோசிச்சப்போ, டாக்டர்கிட்ட போகலாம்னு எனக்கும் தோணுச்சு.

டாக்டர், ‘உங்க பையனுக்கு ஆட்டிஸம்!’னு சொன்னார். அந்த வார்த்தையைக் கேட்ட நொடியில், வானமே இடிஞ்சு என் தலையில விழுந்ததுபோல இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் மனஉளைச்சலுக்கு ஆளானாலும், ‘இது கடவுளால் நமக்குப் பரிசளிக்கப்பட்ட தூய்மையான குழந்தை, இதை நல்லபடியா காப்பாத்தணும்!’னு நானும் மனைவியும் ஆத்மார்த்தமா முடிவெடுத்தோம். பலரும், இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொன்னாங்க. ஆனா, அந்தக் குழந்தையும் இதேபோல பிறக்க வாய்ப்பிருக்கு; ஒருவேளை அது நல்லபடியா பிறந்தாலும், அஹத் எங்களுக்கு ரெண்டாம்பட்சம் ஆகிடுவான்னு, அதைத் தவிர்த்துட்டோம்.

பொதுவா, ஆட்டிஸம் குழந்தைகளுக்கு ஏதாவது தனித்திறன்கள் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, அப்படி நாங்க எதையும் அஹத்கிட்ட தேடலை. மாறா... அவனோட உலகத்தில் நாங்களும் அவனோட சேர்ந்துகொண்டோம். அவனோட சந்தோஷத்தை, அவனோட கஷ்டத்தை, அவனால செய்ய முடியுறதை, முடியாததை நாங்க புரிஞ்சுக்கிட்டோம். நீலாங்கரையில் ‘வி கேன்’ என்ற ஆட்டிஸ குழந்தைகளுக்கான பள்ளியை இவனுக்காகவே ஆரம்பிச்சோம். அஹத் 12 வயசு வரைக்கும் அங்கதான் படிச்சான். அதுக்கு மேல அவனால படிக்க முடியலை. அவனை சிரமப்படுத்தாம, நிறுத்திட்டோம். இப்போ அவனுக்கு 19 வயசாகுது. அவன் வேலைகளை அவனே செய்துக்கிற அளவுக்கு அவனைப் பழக்கியிருக்கோம். அஹத்துக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு புரியும். போட்டோ எடுக்கும்போது `ஒன், டூ, த்ரீ' சொன்னா சிரிப்பான்.

நான் நிறைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஹத்தையும் கூட்டிட்டுப் போவேன். 2006-ம் வருஷம் ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூருல இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தப்போ, ஏர்போர்ட்ல செக்கிங் ஆபீஸர் என் பையனைச் செக் பண்ணும்போது இவன் சரியா ஒத்துழைக்கலை. உடனே என்னைப் பார்த்து, ‘உங்க பையன் லூஸா?’னு கேட்டார். அந்த வார்த்தை ஒரு அப்பாவா என் மனசை ரணமாக்கிருச்சு. ‘நீங்க ஒரு ஆபீஸர். அப்படி பேசக்கூடாது’னு சொன்னேன். ‘நான் அப்படித்தான் கேட்பேன்’னு அவர் சொல்ல, தகராறா ஆயிருச்சு. பிரச்னை செய்தவரை கேமராவில் ஷூட் செய்து, சி.என்.என் செய்தி சேனலில் கொடுத்தேன். அது பரபர மீடியா செய்தியாகி, மாற்றுத்திறனாளிகள் குறித்து பெரியளவில் விழிப்பு உணர்வு ஏற்பட்டது. அந்தப் பிரச்னையால ஒரு நல்மாற்றம் வந்தது.

அதுக்கப்புறம், விமானம் மற்றும் ரயில் பயணங்களில் அவங்களுக்கான உரிமைகள், சலுகைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், எங்கிட்ட மன்னிப்புக் கேட்டாங்க.

எங்க பையன்தான் எங்களுக்கு உலகம். அவன்தான் எங்களோட சந்தோஷம். அவனைப் பத்தின எந்த வருத்தமும் எங்களுக்கு இல்லை. ஒரு நார்மல் குழந்தை ஒரு விஷயத்தை ஒரு நாளில் கத்துக்கிட்டா, இவனுக்கு ஒரு மாசம் ஆகும். அவ்வளவுதான். பொதுவா, மூணு வயசு வரைக்கும் குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்தை யும் புதுசா செய்யும்போது, பெத்த வங்களுக்கு ‘நடந்துட்டான்’, ‘அப்பா'னு சொல்லிட்டான்’, ‘அ’எழுதிட்டான்’னு சந்தோஷமா இருக்கும். அதுக்கு அப்புறம் அவங்க செய்ற விஷயங்கள் அவங்களுக்கு வாடிக்கை ஆயிடும். ஆனா, இன்னிக்கு வரைக்கும் எங்க பையன் புதுசா செய்ற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்குப் பரவசம்தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவனா பர்ஃப்யூம் போட்டுக்கிட்டான். எங்களுக்கு அன்னிக்கு இன்னொரு திருவிழா! இப்படி அவனோட ஒவ்வொரு புது நடவடிக்கையும்தான் எங்களுக்கு தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், நியூ இயர் எல்லாம்.

எங்களோட 19 வயசுப் பையன் அஹத், இப்பவும், எப்பவும் தப்பு, தவறுகளே அறியாத குழந்தை. பொய், துரோகம், சூது எதுவும் அவனை எப்பவும் அண்டாது. பிள்ளைங்க மேல அன்பைக் கொட்டி வளர்த்தாலும், சில பிள்ளைகள் கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை விட்டுப் போயிடலாம்; இல்லைன்னா சொத்துக்காக வந்து நிக்கலாம். ஆனா, என் பையன், கடைசி வரை எங்ககூட, எங்களுக்காகவே இருப்பான்; நாங்க அவனுக்காகவே வாழ்வோம்!’’

- பிரித்விராஜ் மகனை இறுக அணைத்துக்கொள்ள, வாய்விட்டுச் சிரிக்கிறான் அஹத்!

- வே.கிருஷ்ணவேணி, படம்: தி.குமரகுருபரன் ‪#‎அவள்விகடன்‬

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்காக தயாராகியது சிங்கப்பூர்

12510232_1106698632704243_76763745016735

 

 

 

மோகத்தைக் கொன்றுவிடு அல்லாலென் தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு, அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு ...பாரதி
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி 10: தன் இனிய குரலால் ரசிகர்களை மயக்கும் பாடகர் கே.ஜே.யோசுதாஸ் பிறந்த தினம் இன்று.

அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.

 

 

யேசுதாஸ் எனும் மகா கலைஞன்! - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு


ஒரு மலையாள நடிகர் தன் பேட்டியில், முதன் முதலில் தன்னுடைய வாய்ஸ் டெஸ்ட்க்காக திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷன் சென்ற பொது அவர்களால் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர்களே இவரை இவர் இல்லத்தில் சென்று காணும் நிலை ஏற்பட்டது என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன இவர் கே,ஜே.யேசுதாஸ்.

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தவர். 2016 ஜனவரி 10 ஆம் தேதியோடு 76 வயதை நிறைவு செய்கிறார்.

முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். அந்தப்பாடலே வரவேற்புப் பெற்றதென்றாலும், எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் இவர் பாடிய விழியே கதை எழுது பாடல் இவருக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததென்று சொல்கிறார்கள்.

தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே உட்பட ஏராளமான இனியபாடல்களைப் பாடி தமிழ்மக்களின் வாழ்வில் பிரிக்கமுடியாதவராகவே மாறிப்போனார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் விரிகிறது.

1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. 1965ல் இந்தியா - சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார். தமது திரை வாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார். திரையிசையுடன்,கர்நாடக இசைக்கச்சேரிகள்பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்திருந்தாலும் 1977 இல் வெளியான அந்தமான் காதலி படத்தில், அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகிய இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர். இவற்றில் இரண்டாவது பாடலான நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.. திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ். இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ். சென்னையில் கடந்த 2015 ஜனவரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ். அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பைக் குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள்.

அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள். உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது. இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.

செயற்கரிய பல சாதனைகளுக்குப் பிறகும், தான் செய்தது பிழை என்பதை உணர்ந்து பொதுமேடையில் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தது, அவர் செய்த சாதனைகளிலேயே பெரிய சாதனை என்று பலராலும் பாராட்டுப் பெற்றார்.

 

12401996_664847563617789_242103481549882

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12509177_1548677702059448_89311217855235

 

''ராணி கீ வாவ்'' கம்பீரமான இந்தியப் படிக்கிணறு

இந்தியாவில் படிக்கிணறுகள் கட்டும் வழக்கம் 7-ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இந்த படிக்கிணறுகள் முதலில் குஜராத் பகுதிகளில் கட்ட ஆரம்பிக்கப்பட்டாலும், மெல்ல ராஜஸ்தானிலும் அற்புதமான கட்டிடக்கலை படைப்புகளாக படுக்கிணறுகள் தோன்ற ஆரம்பித்தன. 

அதிலும் 11 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் எண்ணற்ற படிக்கிணறுகள் இந்தப் பகுதிகளில் கட்டப்பட்டன. 

இவ்வகை படிக்கிணறுகள் பெரும்பாலும் அந்தக் காலங்களில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு உருவாகப்பட்டாலும், மிக நேர்த்தியாக நம் கலாச்சாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் எடுத்துக்காட்டும் உன்னத கலை வடிவங்களாக இன்று நம்மிடையே மிஞ்சியுள்ளன.

சோலாங்கி அரசாட்சியை உருவாக்கிய தன் கணவர் முதல் பீம்தேவ் அரசரின் காதல் நினைவாக 1063-ஆம் ஆண்டு உதயமதி கட்டிய படிக்கிணறு நினைவகம் குஜராத்தில் உள்ளது. 

உதயமதி இதை கட்ட ஆரம்பித்தாலும் இதனை கட்டி முடித்தது அவரது மகன் முதலாம் கரன்தேவ். 

இந்த கிணற்றில் உள்ள பல படிகள் சரஸ்வதி ஆற்றின் தண்ணீரால் சேற்றுப் பதிவாக உள்ளது. 

இங்குள்ள தூண்கள் உங்களை சோலாங்கி அரசாட்சியின் காலத்திற்கு, அவர்களின் கட்டடக்கலைக்கு கூட்டிச் செல்லும். 

உள்ளே எல்லா இடங்களிலும் இடைவெளி இல்லாமல் சிற்பங்கள். 

சுவர்கள் மற்றும் தூண்களில் காணப்படும் பல செதுக்கல்கள் விஷ்ணு பகவானின் பல அவதாரமான ராமர், வாமணர், மஹிஷாசுரமர்தினி, கல்கி போன்றவைகளை நினைவு கூறும். 

இந்த கிணற்றில் இருந்து கிட்டதட்ட 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்க வழி உள்ளது. 

கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு அருகேயுள்ள சித்ப்பூர் என்ற நகர் வரை உள்ளது. 

இது தண்ணீர் செல்லும வழியா... 

அல்லது, தப்பி செல்லும் வழியா என்று சொல்ல முடியவில்லை. 

இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழியும் இதுவே.

படிகளாக இறங்கி செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. 

பாதிக்கு மேல் செல்ல இன்று அனுமதி இல்லை. 

இந்த நிலத்தடி கிணறின் நீளம் 64 மீட்டர் நீளமும், 27 மீட்டர் அகலமும் கொண்டது. 

இந்த கிணற்றின் வடிவ நேர்த்தியை எந்த கோணத்தில் நின்று நோக்கினாலும் பரவசத்துடன் உணர முடியும். 

1998 முதல் இது யுனெஸ்கோவால் பாதுக்காக்கப்படுகிறது. 

அலாவுதீன் கில்ஜியால் இடித்துத் தள்ளப்பட்ட இந்த கலை அற்புதம் மேலும் மேலும் செங்கல் விழுந்து மண்மூடிப் புதைந்து கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகள் எவருக்கும் தெரியாமல் கிடந்தது. 

அந்த இடம் மக்களால் ராணி கீ வாவ் என அழைக்கப்பட்டது.

1958ஆம் ஆண்டு இந்த இடம் அகழ்வாரய்ச்சி கழகத்தின் கவனத்திற்கு வந்தாலும். 

1972ஆம் ஆண்டுதான் அகழ்வு மீட்பு பணிகள் தொடங்கின. 

1984 ல்தான் இது பொது பார்வைக்கு வைக்கப்பட்டது, 

ஆனால் இந்தியாவின் சுற்றுலா பயணிகள் கலையார்வலர்கள் பலர்க்கு இந்த இடம் பற்றி தெரியாது. 

மிக மிக குறைவாகவே இங்க பயணிகள் வருகின்றனா். 

மிகுந்த கவனத்துடன் இந்த கிணற்றிலிருந்து சிற்பங்கள் மீட்க படுகிறது. 

இதன் கட்டமைப்பில் 30 சதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. 

அதுவே பிரமிக்க செய்கிறது. 

இதை போன்ற ஒரு மகத்தான கட்டுமானம் உலகில் வேறு எங்கும் உண்டா என்பதே ஐயம்தான்.

 

படித்ததிலிருந்து....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்கோ 
ஒலிம்பிக்ஸ் 1980

12400566_1548529955407556_81027112676630

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12342392_1539724239621461_22304702374233

உலகின் முதல் ஆம்புலன்ஸ் உருவான வரலாறு.....

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். 

(பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தை
க்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். 

முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது.

மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. 

உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். 

ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. 

உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்

நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. 

மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். 

கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். 

ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!

பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். 

பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...

அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...

ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். 

அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். 

அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. 

மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...

அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். 

பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. 

முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். 

இது ஆங்கிலப் பத்திரிகை. 

இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...

நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். 

இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். 

இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். 

அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்.
படித்ததிலிருந்து...
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியன் புகைப்படக் கலைஞர் எடுத்த இந்த படங்களுக்கு 'Land of Nothingness' என்று பெயர் சூட்டியிருக்கிறார். 
இந்தப் புகைப்படங்கள் எடுத்த இடம் 
நமீபியா

12360100_665490586886820_79148895387672912507155_665490596886819_66376059012733812523065_665490583553487_401733331427404943933_665490620220150_7023082135186394110649467_665490623553483_14012550384920512417679_665490626886816_67292423810893312510264_665490656886813_71852823284510812418007_665490663553479_86634480314292612512824_665490680220144_68251563572934212410537_665490693553476_23512538424576012549111_665490700220142_12724548925572912552863_665490726886806_205121579881184

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

School bus cancellations, weather-related closures for Jan. 12, 2016

School bus cancellations in Ontario

Bus cancellations:

Elgin County: All buses cancelled

Middlesex County: All buses cancelled

Oxford County: All buses cancelled

North Wellington: All buses are cancelled in Division 

 

17.png8.png38.png38.png

Residents of the GTHA will be in for a rough morning commute as snow and strong winds hit the region today.

Environment Canada is calling for five to 10 centimetres of snow by this afternoon with "brief heavy snow and strong wind gusts" also possible. 

"Motorists are advised to exercise caution as the road conditions may suddenly become hazardous," a statement on the national weather agency's website says.

Pearson International Airport is advising passengers to check their flight status ahead of time due to weather-related delays and cancellations.

Metrolinx spokesperson Anne-Marie Aikins said GO Transit is taking extra precautionary steps to handle the snowfall.

"We've initiated our storm protocol which means all hands on deck. We were checking corridors during the night but roads are expected to be the worst so we bring our bus drivers in early and have extra on standby," she told CP24. 

"It will be slow so people should plan ahead. Bundle up. Check our website before you leave."

Some minor delays have been reported the Lakeshore West, Kitchener and Barrie GO train lines.

"The buses are slow moving so you need to give yourself some extra time," Aikins warned.

"Rushing during this kind of weather is very dangerous." 

Hector Moreno, manager for road operations for the City of Toronto, said crews are out salting roadways.

He said drivers are asked to stay 150 metres behind salt trucks.

"Stay a safe distance… and give them sufficient space to do the work," he said. 

So far, only minor collisions have been reported across the GTA.

"Overall we have only had eight property damage collisions since 1 a.m. That’s pretty good," Toronto police Const. Clint Stibbe said.

OPP Sgt. Kerry Schmidt said traffic is moving slower than usual this morning on GTA roads.

"We’ve got little crashes all over the place. Most of them are just minor in nature," he said. 

"We had a crash involving a car and a snowplow... You’ve got to be careful. When you see those flashing lights ahead of you, let them do their jobs."

 

cp24.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலை முன்னிட்டு 
3D முப்பரிமாண கோலம்
#S_சுகாகன்
வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியில்
10-01-2016 Youth பொங்கல் விழா வில்

1923789_938834176153230_4079669825378800

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழர் செறிந்து வாழும் ஈஸ்ட்ஹாம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதான வீதியின் நடுவில் கட்டப்பட்டிருக்கும் பதாகை. 
 

12507687_514466022067616_759454353794647

படப்பிடிப்பு:- புங்கை முகிலன்

நன்றி ஈஸ்ட்ஹாம் மாநகரசபை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கவிருக்கும் தை நாளுக்காக இறந்துகொண்டிருக்கிறது ஒட்டடைப் பூச்சி

லி.ரி

12509441_966346690110880_146161565350433
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12400958_511193759063260_999536488731286

உழவர் திருநாளை முன்னிட்ட அறிமுகம்..அம்மா கரும்பு.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தை எடை பார்க்க ஆரம்ப காலத்தில் இதை பயன்படுத்தினார்கள் எங்கள் முன்னோர்கள் ஒரு குண்டுமணியின் எடை 100 மில்லி தற்போதைய எடைக்கு ... #குன்றின்மணி

1923930_1026298864100794_268500481551747

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடந்தேறிய ஏறுதழுவல்... 

ஆதாரம் சேலம் மியூசியம்.

12540652_1551065655153986_59446709421665

16 minutes ago, யாயினி said:

தங்கத்தை எடை பார்க்க ஆரம்ப காலத்தில் இதை பயன்படுத்தினார்கள் எங்கள் முன்னோர்கள் ஒரு குண்டுமணியின் எடை 100 மில்லி தற்போதைய எடைக்கு ... #குன்றின்மணி

1923930_1026298864100794_268500481551747

யாயினி மஞ்சாடி, குண்டுமணி அளவில் எப்படி இருந்தாலும் நிறையில் ஒன்றா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

யாயினி மஞ்சாடி, குண்டுமணி அளவில் எப்படி இருந்தாலும் நிறையில் ஒன்றா?

தகவலைக் கொள்ளை அடிச்ச இடத்தில் கேட்டு சொல்கிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1551_861961803901662_7913655584196124350

புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக யாரோ எழுதியதை இன்று படித்தேன் ...மிகவும் பொருத்தமாகவே இருந்தது ..
புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை ..." சப்தமிட்டு நடக்காதீர்கள் , இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் ", 
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் ," உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது . நல்ல வேளை இவள் பிணமானாள் , இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ".
மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் , " இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது " .. 
ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் , "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான் " ....
அரசியல்வாதியின் கல்லறையில் , " தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் , இவன் எழுந்து விடக்கூடாது ". 
ஒரு விலை மகளின் கல்லறை வாசகம் , " இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள் ,தொந்தரவு செய்யாதீர்கள் , பாவம் இனி வர முடியாது இவளால் "....
இவ்வளவு தானா வாழ்க்கை ??? ஆம் அதிலென்ன சந்தேகம் ?? ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல் .... உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான் .
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள் .....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் , ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை ..... நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ?? நமது பதவியா ?? நாம் சேர்த்த சொத்து சுகங்களா ? நமது படிப்பா ?? நமது வீடா ?? நம் முன்னோர்களின் ஆஸ்தியா ?? நமது அறிவா ?? நமது பிள்ளைகளா ?? ஆணவத்தை பறைசாற்றும் நமது ஜாதியா ?????? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ??? ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ... பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் . இறந்த பின்னும் இறைவனோடு பேரின்ப வாழ்க்கை . கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் . ஜாதி ....இந்தத்தீ தான் இன்றைய பயங்கரம் .. நல்லவன் கெட்டவன் இந்த இரண்டு ஜாதி மட்டுமே நிஜம் . ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் .... அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....பிறரை வாழ வைத்து வாழ்வோம் ...ji ji

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12549124_235949093403204_659814765719081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.