Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சாமிர்தம்!

Featured Replies

 

  • பேரிச்சம் பழம் - 10
  • வாழைப்பழம் - 4 - 5
  • வெல்லம் - அரை கப்
  • கல்கண்டு - கால் கப்
  • உலர்ந்த திராட்சை - 10
  • சூடம் - சிறிய துண்டு
  • தேன் - 2 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி

 

A12120_01.jpg

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

 
A12120_02.jpg

வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும்.

 
A12120_03.jpg

வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும்.

 
A12120_04.jpg

பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

 
A12120_05.jpg

பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும்.

 
A12120_06.jpg

அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

 
A12120_07.jpg

கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்து உண்ணவும்.

 
A12120_08.jpg

சுவையான பஞ்சாமிர்தம் தயார்.

 

 

கற்பூரம் ஒரு நஞ்சு.
 
சிறுவர்கள், கர்பிணிகளுக்கு பாதிப்பு அதிகம் !!   :unsure:
 
Camphor is UNSAFE when taken by mouth by adults or children. Ingesting camphor can cause severe side effects, including death. The first symptoms of camphor toxicity occur quickly (within 5 to 90 minutes), and can include burning of the mouth and throat, nausea, and vomiting.
 
 
 
 
பழனி பஞ்சாமிர்தம் செய்யும் முறை இருந்தால் இணையுங்கோ அலைமகள்.  :)
  • கருத்துக்கள உறவுகள்

 

கற்பூரம் ஒரு நஞ்சு.
 
சிறுவர்கள், கர்பிணிகளுக்கு பாதிப்பு அதிகம் !!   :unsure:
 
Camphor is UNSAFE when taken by mouth by adults or children. Ingesting camphor can cause severe side effects, including death. The first symptoms of camphor toxicity occur quickly (within 5 to 90 minutes), and can include burning of the mouth and throat, nausea, and vomiting.

 

ஆரதி பஞ்ச்சாமிர்தத்தின் கீழ், இதனை போட மறந்துவிட்டா ஈசன். :D  :icon_idea:

 

I don't guarantee the correctness of the recipe. Try at your own risk! 

 

- ஆரதி

 

கற்பூரம் என்பது வாசனைப் பொருளாக மட்டுமின்றி புனிதத்தன்மை வாய்ந்த்தாக கருதப்படுகிறது. பசுமை மாறாத கற்பூர மரம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச்சேர்ந்த. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கற்பூரம் தயாரிக்க தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது. கற்பூர எண்ணெய் உயரமான பசுமையான மரத்தின் பட்டை மணம் கொண்டது. கட்டைப்பகுதி கடினமானது. மஞ்சள் பழுப்பு நிறமுடையது. அதிக மணம் கொண்டது. இலைகள் தடித்தவை. மணமுடையவை. தளிர்கள் செம்மை நிறத்துடன் தோன்றி பின்னர் கரும்பச்சை வண்ணம் பெறுகின்றன. மஞ்சள் நிறமுடைய மலர்கள் சிறியவை. கற்பூர மரத்தின் கட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. பதிமூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த மார்கோபோலோ என்ற மாலுமி கற்பூர எண்ணெயினை சீனர்கள் பெரிதும் பயன்படுத்தினர் எனக் குறிப்பிட்டுள்ளார். செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் கற்பூரமரத்தில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் உள்ளன. கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், இவற்றுடன் லிக்னான்களும் காணப்படுகின்றன. மார்புச்சளி போக்கும் உடல்வலிகளுக்கு மேல் பூச்சாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. வலிபோக்கும் தயாரிப்பு மூட்டுவலி, நரம்பு புடைப்புகள், மற்றும் முதுகுவலி போக்க உதவும். மார்புச்சளி போக்க மார்பு மீது பூசப்படுகிறது. குழந்தைகளின் மார்புச்சளி போக்க தேங்காய் எண்ணெயினை சற்று சூடுபடுத்தி அதில் சிறிதளவு கற்பூரத்தினைக் கரைத்து கை மருந்தாக மார்பில் பூசப்படுகிறது. கற்பூரத்தினால் சளி, இசிவு, ஜன்னி, வாந்தி, சுரம், மந்தம், தீப்புண், சிலேத்தும வாதப்பிணிகள், கிருமிநோய், காதுவலி, முகநோய் முதலியன குணமாகும். இதைச் துணியில் முடிந்து முகர்ந்துவர ஜலதோஷம், தலைவலி, சுரதோஷம் முதலியன குணமாகும். வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது கற்பூரம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிராகச் செயல்படும் பூச்சிக் கொல்லிகளில் இடம்பெறுகிறது . ஆலிவ் எண்ணெய் (4 பங்கு) கற்பூரம் (1 பங்கு) கலந்த கலவையானது தசைவலி, மற்றும் வீக்கங்களை போக்க வல்லது. தோல் வியாதிகளான கடுங்குளிர் கொப்புளங்கள் மற்றும் குளிர் புண்களுக்கு தடவப்படுகிறது. விஷபேதிகட்கு வழங்கும் மருந்துகளுடன் இதையும் குன்றியெடை சேர்த்துக் கொடுக்க விரைவில் குணப்படும். கற்பூரத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து சீதளம் மிகுந்துள்ள பாரிசம்களில் தேய்க்க உஷ்ணம் பிறக்கும். பச்சைக்கற்பூரத்தினால் குன்மம், சூலை, வாதம், கபம் மேகப்பிணிகள் முதலியன குணமாகும். கற்பூர எண்ணெய்யினை மருந்து, வாசனைப்பொருள் மற்றும் இறந்தவர் உடலைப் பதப்படுத்தும் திரவமாகவும் பயன்படுத்துகின்றனர்.

 

Medicinal benefits of Camphor tree | மார்புச்சளி போக்கும் கற்பூரம்! Camphor tree grows natively in China and Japan where it is used for oils and timber. In 1875 camphor tree was introduced into Florida and established in plantations for camphor production, although it was not profitable for growers. Camphor oil can help relieve nasal congestion and cough when rubbed on the chest. Camphor is used as an ingredient in tooth powders because of its anti-bacterial property.

Read more at: http://tamil.boldsky.com/health/tips/2011/24-medicinal-benefits-camphor-tree-aid0174.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.