Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கிளாயில் தனியார் காணியில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100 வருடத்தின் பின்பு பெளத்த தமிழர் சிங்கள பெளத்தருக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்துவினம்.....:D

  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply

தனித்துவம் என்று நீங்கள் எதைச் சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை.

இந்த தனித்துவத்தை புலம்பெயர்ந்த தமிழனும் என்னும் புலம்பெயர துடித்துக்கொண்டிருக்கும் தமிழனும் எவ்வாறு பாதுகாக்கின்றான் என்பதையும் சொல்லுங்கள்.

எதில் புலம்பெயர்தவனும் , இண்டு நீங்கள் சிங்களவனுக்கு அடிபணிந்து வாழ வேணும் எண்டு அறிவுரை சொல்ல முயலும் தாயக தமிழனும் எந்த விதத்தில் தனித்துவமாக இல்லை எண்று முதலில் சொல்லுங்கள்...

இண்டைக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களின் பொருளாதார பலமும் அரசியல் மூல பலமும் புலம்பெயந்த மக்களால் மட்டும் தங்கி இருக்கிறது...

தமிழனின் வீடு வாசல் மொழி கலாச்சாரம் நிலம் எல்லாத்தையும் சிங்கள இனம் எடுத்துக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்பட்ட நிலையில் எப்படி தப்பிப்பிழைப்பது என்பதே இங்கு எனது கருத்தின் நிலைப்பாடு.

நான் ஐந்து வருடம் பின்தங்கி நிற்பது பெரியவிசயமில்லை ஆனால் நீங்கள் பத்துவருடத்துக்கு முன்பு துப்பாக்கியோடு இருந்த மாயையில் இருக்கின்றீர்கள் அதுதான் என்னும் சகிக்கக் கஸ்டமானது.

ஈழத்திலை உங்களின் பிரச்சினையாக தெரிவது என்ன...?? வெறும் உயிர்வாழ்வு மட்டுமா...?? இல்லை தக்கவைத்து கொள்வதா...?? வெறும் உயிர் வாழ்வது மட்டுமாக இருந்தால் அதுக்காக பலவளிகள் உண்டு...

அடங்கி போய் மொழியையும் மதத்தையும் ஏன் உணவு உடை பழக்கவளக்கங்கள் எல்லாத்தையும் மாற்றிக்கொண்டு மாறிவிடலாம்..., அல்லது இருக்கும் இடம் விட்டு இடம் பெயர்ந்து உள் நாட்டுக்குள்ளேயே அகதியாகவும் முடியும்... !!

அல்லது இருக்கிறதுகளை எல்லாம் விட்டு விட்டு தப்பி பிறநாடுகளுக்கு ஓடி வந்துவிட முடியும்..

ஆனால் அப்படி ஓடி வரும் மக்களை பற்றி வேறு ஒரு தளப்பொழுதில் நீங்கள் எழுதிய கருத்துக்களை படித்து பார்க்கவும்...

தக்க வைத்து கொள்வதாக இருந்தால் உங்களின் அறிவுரை முழு முட்டாள் தனமானது... அடி பணிந்தால் சிங்களம் உங்களின் உடமைகளை உருக்குலைக்காமல் அப்படியே உங்களிடம் தந்து விடும் என்பது கூட உங்களின் கனவே ..

சிங்கள அதிகாத்துக்குள்ளாகவே தமிழ்த்தேசீயம் இலங்கையில் தனது இருப்பை தக்கவைக்கமுடியும். தக்கவைப்புக் குறித்துதான் இங்கு பேசபபடுகின்றது தவிர சிங்கள அதிகாரத்துடன் மல்லுக்கட்டுவது குறித்து இல்லை. அதற்கான பலமும் இல்லை அதற்கான சாத்தியமும் தற்போதைக்கு இல்லை.

ஒரு விகாரையை இல்லை குடியேற்றத்தை தடுக்கும் பலம் புலம்பெயரந்த தமிழனிடமோ இல்லை தாயகத்தில் இருக்கும் தமிழனிடமோ இருக்கின்றதா? இல்லை அதுதான் நடமுறைக்குச் சாத்தியமா? இல்லை என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தபின்பும் ஒரு விகாரை அமைத்ததை வைத்து புலம்பெயர் நாட்டில் இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் தாங்கள் சொறிந்துகொள்வது. அதில் விகாரைக்கு எதிராக கதைப்பவர் தன்னை ஒரு தேசியவாதியாக அடயாளம் தேடிக்கொள்வார். இங்க மல்லுக்கட்டுறதுக்கு அங்கபோய் கடப்பாரை எடுத்து விகாரையை இடிக்கவேண்டியதுதானே?

இலங்கை அரசியல் யாப்பில் தமிழர்களின் நிலங்கள் , உரிமைகளை காக்கும் எந்த சரத்தும் இல்லாது சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை கொண்டதாக இருக்கும் வரைக்கும் தமிழர்கள் அங்கு அடிமைகளே...

சிங்கள அதிகரத்துக்கு எதிராக ஒண்டும் புடுங்க முடியது எண்டால் கூட்டமைப்பு காறர் என்னத்தை புடுங்க இந்தியாவுக்கும், ஐநாவுக்கும் போய் பேசுகிறார்கள் எண்ட கோதாரி உங்களை போண்ற அறப்படிச்ச சிலருக்கு தான் விளங்கும் போல...

உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே எனக்குப் புரியவில்லை.

ஏன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்குக் கொடுக்கின்றாய் என்று மகிந்தனையும் கோத்தாவையும் பார்த்து கேளுங்கள். அதை யாரும் தடுக்கவில்லை. தாராளமாகக் கேளுங்கள். அவர்களும் நிச்சயமாக நியாமாக உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். நீங்கள் பிற்க்க முதல் இருந்தே இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அதை தொடருங்கள்.

புலம்பெயரந்தவனுக்க இவ்வாறான கேள்விக்கு அருகதையோ தகுதியோ இல்லை.

தாயகத்தில் இருப்பவன் தனது வாழ்வுக்காக இதை தொடர்ந்து கேட்கவேண்டிய தேவை இருக்கின்றது.

அதற்கு அவன் வாழ்க்கை நிலைத்திருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

புலம் பெயந்து வந்தா போல வெளியிலை என்ன நடக்கிறது எண்டதை தாங்கள் பார்க்கிதே இல்லை போல... இல்லை வெள்ளை காறனோடை மட்டும் தான் உறவோ...!!

குறைஞ்சது நாங்கள் என்ன செய்கிறம் எண்டு பார்க்க வேண்டாம்... பதிலாக மகிந்தவோ , கோத்தாவோ , இல்லை இலங்கை அரசாங்கம் என்ன பதில் சொல்கிறது எண்டதையாவது கேட்டு பதில் எழுத முயலுங்கள்...

சரி புலம் பெயந்தவனுக்கு தகுதி இல்லாத போது அடங்கி போ எண்று தாயகத்திலை இருக்கும் தமிழனுக்கு அறிவுரை சொல்ல உங்களுக்கு தகுதி எப்படி வந்தது...???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்
சரி புலம் பெயந்தவனுக்கு தகுதி இல்லாத போது அடங்கி போ எண்று தாயகத்திலை இருக்கும் தமிழனுக்கு அறிவுரை சொல்ல உங்களுக்கு தகுதி எப்படி வந்தது...???
அதே ........

Edited by putthan

சரி புலம் பெயந்தவனுக்கு தகுதி இல்லாத போது அடங்கி போ எண்று தாயகத்திலை இருக்கும் தமிழனுக்கு அறிவுரை சொல்ல உங்களுக்கு தகுதி எப்படி வந்தது...???

நான் அடங்கிப்போ தலைவணங்கிப்போ என்று எங்கும் அறிவுரை சொல்லவும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை ஏனெனில் எனக்கு நன்கு தெரியும் இலங்கையில் தமிழர்கள் சிங்கள அடக்குமுறைக்குள் சிங்கள அதிகாரத்துக்குள் தான் இருக்கின்றார்கள் என்பது. அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு தாயகத்தில் உள்ள மக்களின் முயற்சியே முக்கியமானது அதற்குப் ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் இருப்பது பொருந்தும் என்பதும் நா க அரசு போன்ற கோமாளிக்கூத்துகளை எதிர்த்தும் தொடர்ச்சியாக கருத்தை எழுதியுள்ளேன்.

உங்களுக்கு தெரிந்தது அடங்க மறு திருப்பி அடி என்ற உசுப்பேத்தல் மட்டுமே. அவ்வாறு உசுப்பேத்தித்தான் முள்ளிவாய்க்காலில் வன்னியை காவு கொடுத்தது. அவ்வாறு காவு கொடுத்ததில் எஞ்சிய மக்களுக்கு மீண்டும் நீங்கள் அடங்க மறு விகாரையை திருப்பி இடி என்று சொல்ல முற்படுகின்றீர்கள். ஏனெனில் நீங்கள் பலியாகவோ பாதிக்கப்படவோ போவதில்லை. அதே போல் பேரினவாதமும் மையவாதமும் நண்பர்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிங்களவர்களோடு அண்டிப்பிழைக்கத்தெரிந்த யாழ்ப்பாணமும் பாதிக்கப்படப்போவதில்லை. போரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான நிதியில்தான் குடாநாடு அலங்கரிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட வன்னியில் மக்கள் தண்ணீருக்கே வழியில்லாமல் அல்லல்படுகின்றார்கள். இன்னிலையில் மையவாதமும் பேரினவாதமும் நல்லூரில் காவடி ஆடுகின்றது.

இவ்வாறு பல யதார்த்தங்கள் இருக்க எங்கோ வன்னியில் ஒரு விகாரை வந்ததும் குய்யோ முறையோ என்று கத்துவது. உடனே கத்துபவர்களை மற்றவர்கள் தீவிர தேசிய வாதிகள் என்று அங்கீகரிக்கவேணும்? சரி நம்பீட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

.

இவ்வாறு பல யதார்த்தங்கள் இருக்க எங்கோ வன்னியில் ஒரு விகாரை வந்ததும் குய்யோ முறையோ என்று கத்துவது. உடனே கத்துபவர்களை மற்றவர்கள் தீவிர தேசிய வாதிகள் என்று அங்கீகரிக்கவேணும்? சரி நம்பீட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள பாடசலையையும்,விகாரையையும் பலதடைவைகள் யாழ்மையவாதிகள் இடித்ததை மறந்துவிட்டிர்கள் போல.......இன்று இடிக்க முடியாதபடி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது...

நான் அடங்கிப்போ தலைவணங்கிப்போ என்று எங்கும் அறிவுரை சொல்லவும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை ஏனெனில் எனக்கு நன்கு தெரியும் இலங்கையில் தமிழர்கள் சிங்கள அடக்குமுறைக்குள் சிங்கள அதிகாரத்துக்குள் தான் இருக்கின்றார்கள் என்பது. அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு தாயகத்தில் உள்ள மக்களின் முயற்சியே முக்கியமானது அதற்குப் ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் இருப்பது பொருந்தும் என்பதும் நா க அரசு போன்ற கோமாளிக்கூத்துகளை எதிர்த்தும் தொடர்ச்சியாக கருத்தை எழுதியுள்ளேன்.

இஞ்சை நீங்கள் புலம் பெயர்ந்தவர்கள் பற்றி நீங்கள் யாரும் விட்ட அறிக்கைகள் பற்றி யாருக்கும் அக்கறை கிடையாதண்ணை... சேர்ந்து ஏதாவது செய்ய முனைகிறீர்களா...?? நல்வரவு.. !!

மிக குறிப்பாக நீங்கள் இது வரை சொன்ன கருத்துக்களின் பிழிவு தமிழர்கள் சகிப்பு தன்மையோடை இலங்கை ஆதிக்கத்துக்கு கீழ் படிய வேண்டும் என்பதே... இதிலை நீங்களாக மாற்ற செய்து கொண்டு குத்துக்கரணம் அடிப்பது எனது வெற்றியே...

உங்களுக்கு தெரிந்தது அடங்க மறு திருப்பி அடி என்ற உசுப்பேத்தல் மட்டுமே. அவ்வாறு உசுப்பேத்தித்தான் முள்ளிவாய்க்காலில் வன்னியை காவு கொடுத்தது. அவ்வாறு காவு கொடுத்ததில் எஞ்சிய மக்களுக்கு மீண்டும் நீங்கள் அடங்க மறு விகாரையை திருப்பி இடி என்று சொல்ல முற்படுகின்றீர்கள். ஏனெனில் நீங்கள் பலியாகவோ பாதிக்கப்படவோ போவதில்லை. அதே போல் பேரினவாதமும் மையவாதமும் நண்பர்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிங்களவர்களோடு அண்டிப்பிழைக்கத்தெரிந்த யாழ்ப்பாணமும் பாதிக்கப்படப்போவதில்லை. போரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான நிதியில்தான் குடாநாடு அலங்கரிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட வன்னியில் மக்கள் தண்ணீருக்கே வழியில்லாமல் அல்லல்படுகின்றார்கள். இன்னிலையில் மையவாதமும் பேரினவாதமும் நல்லூரில் காவடி ஆடுகின்றது.

இவ்வாறு பல யதார்த்தங்கள் இருக்க எங்கோ வன்னியில் ஒரு விகாரை வந்ததும் குய்யோ முறையோ என்று கத்துவது. உடனே கத்துபவர்களை மற்றவர்கள் தீவிர தேசிய வாதிகள் என்று அங்கீகரிக்கவேணும்? சரி நம்பீட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

நாங்கள் யாரையும் உசுப்பேத்த வில்லை ஊரில் இருந்து இடம்பெயர்து வெளிநாடு வரும் மக்களை கூட தங்களை போன கேவலமாக விமர்சிப்பதும் இல்லை... அறிவுரைகளையும் இலவசமாக அள்ளி விடுவதோ , இல்லை புலம் பெயர்ந்த மக்களையோ , தாயக மக்களையோ கேவலமாக விமர்த்து அறிக்கைகள் விடுவது கூட கிடையாது... !!

அதை விடுத்து ஒரு முக்கிய பிரச்சினையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்... இங்கு பிரச்சினைக்குரிய கொக்கிளாய் கிராமம் எப்போதும் வன்னியோடு இணைந்த கிராமம் கிடையாது , இது இலங்கை அரசாகட்டும் புலிகளாகட்டும் திருகோண மலை மாவட்டத்தோடு இருக்கும் ஒரு ஊர்..

அந்த ஊர் மூண்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு களப்பு பிரதேசம்... ஒரு பக்கம் புல்மோட்டைக்கு இடைப்பட்ட கடல் பகுதியும், ஒரு பக்கம் சிறுகடல் பகுதியும் அதன் அடுத்த கரையாக தென்னமரவாடி எனும் அழகான ஒரு தமிழ் கிராமம் ( ஒரு காலத்தில் இருந்தது..) மறு பக்கம் பெரும் கடலும் கொண்ட ஒரு ஊர்...

இந்த கிராமத்தில் 1970களில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு காலப்போக்கில் தமிழர்கள் எல்லாம் விரட்டப்பட்டு 500 வரையான சிங்கள மீனவர் குடும்பங்களால் நிரப்ப பட்டு இருந்த மீன் வளம் மிக்க ஒரு ஊர்..

அந்த பிரதேசத்துக்கு பாதுகாப்பாக கொக்கு தொடுவாயில் முகாம் ஒண்றை இந்த களப்பு பிரதேசம் ஆரம்பிக்கும் இடத்திலும் பின்னர் கருவாட்டு கேணி எனும் இடைப்பட்ட பகுதியிலையும் இன்னும் ஒரு முகாமையும் சிங்களம் நிறுவி பாதுகாப்பு குடுத்து வருகிறது...

கொக்கிளாயில் இண்றைய பெயர் சம்பத்நூவா....!!

இப்ப பிரச்சினைக்கு வருவம்... சொந்த ஊரில் இருக்க முடியாது மக்கள் நாயாற்றிலும் , அளம்பிலிலும் ,இடம்பெயர்ந்து இருக்கிறார்கள்... அந்த மக்களுக்கு நீங்கள் சொல்லவரும் நியாயம் பொருந்துமா என்பதை தங்களின் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பின் வாருங்கள் பேசலாம்...

இந்த பிரச்சினை சமபந்தமாக ஊரில் இருக்கும் மக்கள் எடுத்த நடவடிக்கைகள் மகஜர்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக ஏராளமான செய்திகள் இணையத்தில் இருக்கிறது அவைகளை படித்து விட்டு வாருங்கள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.