Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசியாவின் சூதாட்டமையமாக கொழும்பு மாறிவருகிறது என்று இந்திய நாளிதழ் தகவல்!

Featured Replies

gambling%20hotspot%2065515.jpg

 

இந்தியாவில் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக இந்தியர்கள் பலர் சூதாடுவதற்காகவே கொழும்புக்குச் செல்கின்றனர் என்றும் இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ஹைதராபாத் விடுதிகளில் சூதாடுவதற்கு எதிராகப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
இதனால் பண வசதியுள்ளவர்கள் சூதாட்டத்துக்காக இலங்கை செல்கின்றனர். இதேபோன்று தெலுங்கான முதலமைச்சர், விடுதிகளில் சூதாட்டம் இடம்பெறுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என்றும், அப்படி சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொலிஸாருக்கு கடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சூதாட்டம் இடம்பெற்ற விடுதிகள் பல தெலுங்கானாவில் மூடப்பட்டுள்ளன.
 
இதனால் சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் அதேவேளை பணவசதி படைத்தவர்கள் இலங்கை செல்கின்றனர் என்றும், இலங்கையில் உல்லாசப்பயணம், பொலிஸ் தொந்தரவுகள் இல்லாத சூழ்நிலை போன்றவற்றால் சூதாட்ட பிரியர்களுக்கு இலங்கை மிகவும் விருப்பமான நாடாகக் காணப்படுகின்றது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் உல்லாசப்பயணம், பொலிஸ் தொந்தரவுகள் இல்லாத சூழ்நிலை போன்றவற்றால் சூதாட்ட பிரியர்களுக்கு இலங்கை மிகவும் விருப்பமான நாடாகக் காணப்படுகின்றது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாரதகுமாரா :D
  • கருத்துக்கள உறவுகள்

போப்பாண்டவருக்கும் இவ்விடங்களை சுற்றிக்காட்டலாம். இலங்கையின் மகிமையை உலகம் அறிய வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

மகா பாரதத்தில் கூட, சூதாட்டம் விளையாட தடை இல்லாத போது....
இந்தியாவின் தேசிய விளையாட்டான சூதாட்டத்தை ஏன் தடை செய்தார்கள்.
சேது கால்வாய் கட்ட,  ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொன்ன,

சுப்பிரமணி வகையறாக்கள்.... இந்த விடயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.