Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா

நீங்கள் யாரென்று நன்றாக எனக்குத் தெரியும், ஒரு தாயக நிகழ்வுக்கும் போகாதவர்களுக்காக மற்றவர்களையும் குறை சொல்லக்கூடாது. பொழுது போக்கு என்று எடுத்துக்கொண்டால் இப்படியான விழ மட்டுமல்ல உங்கள் பாசையில் பல தப்பு செய்கின்றோம். உதாரணம் இன்ரனெற் பார்ப்பது, வீடியோவில் படம் பார்ப்பது

அண்ணா தெரின்சால் எனக்கும் கொன்சம் சொல்றது... :oops:

  • Replies 108
  • Views 11.7k
  • Created
  • Last Reply

அண்ணா தெரின்சால் எனக்கும் கொன்சம் சொல்றது... :oops:

ஆ ஆ இவன்ட பாடோ பெரிய பாடு நாளக்கு நான் துங்காபிக்கு வாரேன் அங்கே 2 பேரும் பார்ப்போம்

:wink: :wink:

ஜேசுதாசும் தமிழ்த்தேசிய ஆதரவும்

untitled7777777777uu3.png

ஜேசுதாஸின் கச்சேரி சென்ற ஞாயிற்றுக்கிழமை சிட்னி ஒபரா அரங்கத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற இவ் அரங்கில் நிகழ்ந்த முதலாவது தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையினை இக்கச்சேரி தட்டிக்கொண்டது. அரங்கு நிறைய 90 வீதத்துக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் பார்வையாளர்களாக இன்னிகழ்வுக்கு வந்து கச்சேரியினை ரசித்தார்கள்.

சிட்னியில் சென்ற திங்கள் கிழமை( நேற்று) அரசாங்க விடுமுறையான தொழிலாளர் தினம். பொதுவாக திங்கள் கிழமைகளில் விடுமுறை வந்தால் சிட்னித்தமிழர்களில் சிலர் வெள்ளி இரவே சுற்றுலாச் சென்று திங்கள் மாலை வருவார்கள். இத்தினங்களில் தமிழ்த் தேசிய ஆதரவுக்கூட்டங்கள் நடந்தாலும் அக்கூட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் சுற்றுலாவிற்குத்தான் செல்வது வழக்கம். கேட்டால் வேறு தினங்களில் வைத்திருந்தால் கலந்து கொண்டிருப்பேன் என்பார்கள். ஆனால் இம்முறை ஜேசுதாசின் விழாவிற்கு சென்றார்கள்.ஏன் சுற்றுலாவுக்குச் அவர்கள் இம்முறை செல்லவில்லை?

கோம்புஸ் பேர்லிங்டன் வீதியில் பல தமிழர்கள் வாழ்கிறார்கள். அருகில் உள்ள பாடசாலையில் தமிழ்த்தேசிய ஆதரவு நிகழ்வுகள் நடப்பதுண்டு. 10 நிமிடங்களில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ள அப்பாடசாலை நிகழ்வுக்கு பெரும்பாலும் குறைவான மக்களே கலந்து கொள்வதுண்டு. ஆனால் ஜேசுதாசின் கச்சேரிக்கு கன்பரா, நீயூகாசில் போன்ற நகரங்களில் இருந்து 3 மணித்தியாலம் பிரயாணம் செய்து மக்கள் கலந்து கொண்டார்கள். 10 நிமிடமா, 3 மணித்தியாலமா கூட?

தாயகத்துக்கு உதவி செய்ய நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நுளைவுச்சீட்டு 25,50 வெள்ளி (அதிகவிலை எனக்காரணம் சொல்லி) என்று தவிர்த்த மக்கள் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு 70 ,100,120,140,160,200 வெள்ளி நுளைவுச்சீட்டுக்கள் கொடுத்துப்பார்த்தார்கள். இது அதிக விலை இல்லையா?

தாயகம் சம்பந்தமாக கதைக்கும் சிலர் மாவீரர் தினம், கறுப்பு ஜுலை தினம், அன்னை பூபதி தின நிகழ்வுகளுக்கு வேலையில் லீவு தரமாட்டினம் என்று சொல்லிக் கலந்து கொளவதில்லை. ஆனால் ஜேசுதாஸ், ரகுமான் நிகழ்ச்சிக்கு எவ்வாறு அவர்களுக்கு லீவு கிடைத்தது?

சைவசமயத்தவர்கள் இன்று நாயன்மார் குருபூசை, கிறிஸ்தவ சமயத்தவர் இன்று ஞாயிற்றுக்கிழமை. கோவில், தேவாலயம் செல்ல வேண்டும். இதனால் நிகழ்ச்சிகளுக்கு போக முடியவில்லை என்பினம். ஜேசுதாஸின் நிகழ்ச்சி நடந்ததும் ஞாயிற்றுக்கிழமை. ஏன் அன்று மாலையில் தேவாலயம் செல்லவில்லை?அன்று நவராத்திரி வீட்டுப்பூசை. ஏன் அவர்கள் அன்று இரவில் வீட்டுப் பூசை கொண்டாடவில்லை? பலர் மத்தியானம் வீட்டுப்பூசையும், சிலர் கச்சேரி முடியவந்து இரவு 12மணிக்குப்பிறகு(அடுத்த நாள்) வீட்டுப்பூசை கொண்டாடினார்கள்.

சிட்னியில் 1ம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் சிறுமியின் பெற்றோர்கள் 1ம் திகதி ஜேசுதாஸ் நிகழ்ச்சி என்பதினால் வருகிற 7ம் திகதி பிறந்த நாள் விழா வைத்திருக்கிறார்கள்.ஆனால் அன்று சிட்னியில் தியாகி திலிபனின் நிகழ்வு நாள். உயிரா, பாடலா பெரியது?

கலந்து கொண்ட சில பெண்மணிகள் கண்களில் இருந்து, ஜேசுதாசினை மேடையில் கண்டதும் ஆனந்தத்தினால் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. ஆனால் செஞ்சோலையில் இறந்த பாடசாலை மாணவிகளினை நினைத்து இவர்களின் கண்களில் நீர் வரவில்லை. சொந்த சகோதரர்கள் என்றால் கண்களில் இருந்து கண்ணீர் வராதா?

இதைவிட சில பெண்கள் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு இலங்கை, இந்தியா,சிங்கப்பூரில் இருந்து விலை உயர்ந்த ஆடைகள் வரவழைத்து,அதற்கேற்ற நகைகள் அணிந்தும் சென்றார்கள்.

சிலர் ஜேசுதாசுடன் கதைக்க வேண்டும் என்று நிகழ்ச்சி முடிந்தபின்பும் அங்கே இருந்தார்கள்.

ஜேசுதாசிடம் தங்கள் பிள்ளைகளை மூன்று மாதம் அனுப்பி சங்கீதம் கற்பிக்க வேண்டும் என ஒரு குடும்பம் முயற்சித்த நகைச்சுவை சம்பவமும் அங்கே நடந்தது.

தாத்தா இது மட்டுமா வெளியே வந்த அநேகமானோர் நயந்தராவையும்,சிம்புவையும் பார்க்க முடியவில்லை என்று ரொம்ப வருத்த பட்டவை இவை இரண்டு பேரும் தமீழத்தற்காக பாடுபட்ட பெரிய ஆட்கள் தானே

:wink: :wink:

வணக்கம் ஜமுனா

நீங்கள் யாரெண்டு நான் சொல்லவேண்டுமென்றால் ஒரு சின்ன க்ளூ , மெல்பன் எப்படியிருந்தது?

வணக்கம் ஜமுனா

நீங்கள் யாரெண்டு நான் சொல்லவேண்டுமென்றால் ஒரு சின்ன க்ளூ , மெல்பன் எப்படியிருந்தது?

சொறி அண்ணா மெலொஅன் போனவர் புத்தன் அவர் சனிகிழமை தான் வருவார்

:wink: :wink:

உங்களைப் போல எனக்கும் யாழில் 2 பெயர் வைத்து எழுதுவேன், நன்றி ஜமுனா மற்றும் புத்தன்

உங்களுக்கு எப்படி விளங்கபடுத்துவது என்று தெறியாது ஆனால் நான் புத்தன் இல்லை ஆனால் உங்களுக்கு நல்லா தெறிந்த ஆள் தான் கணுபிடியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல எனக்கும் யாழில் 2 பெயர் வைத்து எழுதுவேன், நன்றி ஜமுனா மற்றும் புத்தன்

கானபிரபா சார் 2 பெயர் வைத்து எழுதிரியளா

இது கந்தப்புவிற்கு மட்டுமல்ல உங்களுக்கும் நன்கு பொருந்துகின்றது. தேசியத் தொலைக்காட்சியே விசேட நிகழ்ச்சிகளுக்கு கங்கைஅமரன் ,மணிவண்ணன் போன்ற இந்தியக் கலைஞர்களையே சிறப்பு விருந்தினர்களாக அழைத்துக் கௌரவிக்கின்றது. இவற்றையெல்லாம் மறந்து உண்மைகளைச் சுட்டிக் காட்டினால் மாற்றுக் கருத்தென்று மறுதலிக்க நினைப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அண்னா நான் சொல்லவில்லை போக வேண்டாமென்று பொயிட்டு ஓவர் பில்டப் கொடுக்க வேண்டாம் என்று தான் சொன்னனான் அது சரி தேசிய தொலைகாட்சி அவர்களை பேட்டி எடுக்கிறது பற்றி எனக்கு தெறியாது ஆனால் இதற்கு இந்திய களைஞரை கூப்பிட்டது அப்ப தான் ஆட்கள் வருவீனம் என்று நான் சொல்லவில்லை மேலேயுள்ளவர்கள் கருத்து முன்வைத்திருந்தார்கள் மேலே கருத்து கூறியவர்களே அண்ணன் கேள்வி கேட்டுள்ளார் இப்ப என்ன சொல்ல போறீங்கள் நீங்கள் இவ்வாறு செய்து கொண்டு அதற்கு ஒரு போலி சாக்கு சொல்வதும் தான் நம் தேசியத்திற்கான முதல் தடையாக இருக்கிறது :evil:

இப்படியான நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டு ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி சமாளிக்க வேண்டிய நிலை இங்கு யாருக்கும் இல்லை. அவர்கள் தங்கள் கருத்தைத் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.

ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இங்கு வந்து ஓவர் பில்டப் கொடுத்து ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வோர் விடயத்திலேயே.

இது சிட்னில மட்டுமில்லை கந்தப்பு......

சுரணையற்ற தமிழன் பரந்திருக்கிற எல்லா இடத்திலயும் இதுதான் ராசா நடக்குது. இன உணர்வு இல்லாத உயிர்களை இதுகள் என்று சொன்னாலே எங்க களத்திற்குள் ஒருவர் இருக்கிறார்... சண்டைக்கு வருவார்.... அதுவும் ஆதி புலப்பக்கம் எழுத வந்தாலே.... பொல்லோட வந்து விடுவார்... அதனால ஆதி எஸ்கேப்.....

வணக்கம் ஆதிவாசி!

இன உணர்வு இல்லாத உயிர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் நீங்கள் கனடாவில் உள்ள எல்லோரையும் தான் அதுகள் இதுகள் என்று கதைத்து இருந்தீர்கள். எல்லோரையும் ஒரே பார்வையில் வைத்து தான் உங்கள் கருத்தைஎழுதினீர்கள். அதற்காகத்தான் நான் உங்களுக்கு பதில் எழுதினேன். உங்கள் எழுத்துக்கள் என்னை பாதித்தபோல பல இன உணர்வளார்களை பாதித்திருக்கும். அந்த பாதிப்புடன் தான் உங்களுக்கு பதில் எழுதினேன். மற்றும்படி உங்களுக்கு பொல்லடி தரவேணும் என்று எனக்கு கனவு கிடையாது. உங்களுடைய எழுத்துக்களை கூர்ந்து கவனித்து எதிர்கருத்து எழுதவேணும் என்றா எண்ணமும் எனக்கில்லை. விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

வணக்கம் எல்லாருக்கும்

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வந்து போகாதே என்று ஒட்டுமொத்த தமிழரைக் கிண்டலடிப்பது ஒருவகை, ஒரு நிகழ்ச்சிக்க்கு போக வாய்ப்பில்லாது அதே நேரத்தில் இன்னும் பல பொழுதுபோக்கு (பிறந்த நாள் உட்பட) போய் விட்டு போகாத நிகழ்ச்சி பற்றிக் கிண்டலடிப்பது ஒரு வகை என்று நம் கள உறவுகளில் பல வகை

திறமையான கலைஞர்களை உள்வாங்கி கெளரவிப்பது ( இந்தியக் கலைஞர்கள் உட்பட) நமது தேசியத் தலைவரின் தெளிவான பார்வைக்கு ஒரு உதாரணம்.

இப்படியான வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு போவதும் போகாததும் ஒவ்வொருவனதும் தனிப்பட்ட சுதந்திரம். அத்றகாக 3 தலைமுறை தாண்டிய கலைஞனை ஏளனம் செய்வது நம் அறியாமையின் விளைவு.

இந்த மெல்பன் சிட்னி நிகழ்ச்சிகளுக்கு தமிழீயம் சார்ந்த அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட வந்தார்கள். அதே நேரத்தில் தேசிய உணர்வு சார்ந்த நிகழ்வுக்க்கு வரும் அதே மக்கள் கூட்டமும், இப்படியான நிகழ்வுக்க் வராதவர்க் கூட வந்தார்கள். புலம் பெயர்ந்து வந்துவிட்டோம். நாம் ஒவ்வொருவர் செய்யும் காரியமும் சரி மற்றவன் செய்தால் பிழை. இது தான் எம் நிலை.

இப்படியான களியாட்ட நிகழ்வுக்கும் போய் அதே நேரத்தில் ஒரு தேசிய நிகழ்வுக்கும் வராதவர்கள் குறித்த கவலை எனக்கும் உண்டு. இது மாறாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதிவாசி!

இன உணர்வு இல்லாத உயிர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு கவலையில்லை.

:lol::lol:

ஆனால் நீங்கள் கனடாவில் உள்ள எல்லோரையும் தான் அதுகள் இதுகள் என்று கதைத்து இருந்தீர்கள்.

:evil: :evil:

உங்கள் எழுத்துக்கள் என்னை பாதித்தபோல பல இன உணர்வளார்களை பாதித்திருக்கும்.

மற்றும்படி உங்களுக்கு பொல்லடி தரவேணும் என்று எனக்கு கனவு கிடையாது. .

வரசித்தி விநாயகா, ஐயப்பா, நாராயணா, ரப்ஸ்கொட் நாகபூஸனி, மிசசாக்கா துர்க்கையம்மன் மற்ரும் எல்லாக் கடவுளரையும் தலை கீளாக் கையால நடந்து வரம் கேக்கிறன் ஆதீட தலையில இடிவிழ அருள் பாலிக்குமாறு. :lol::lol:

ஆதி நீர் தமிழ்க் கனேடியன்ஸ் ஓட ரொம்பத்தான் விளையாடுறீர். றமா நல்ல மனசு பண்ணி மன்னிச்சலும் மற்ரவையால உமக்கு கஸ்ட காலம் பிறக்கப்போகுது. :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், என்னுடைய கருத்தினை வடிவாக வாசித்துப்பார்த்தால் ஜேசுதாஸைப்பற்றியோ அதில் கலந்து கொண்ட எல்லாமக்களைப்பற்றியோ நான் எழுதவில்லை. கானாபிரபா சொல்வது போல மெல்பேர்ணில் சேகரிக்கப்பட்ட பணத்தில் 50000 வெள்ளிகள் தாயகத்துக்கு அனுப்பப்பட்டது. இது பாராட்டக்கூடிய விசயம்.

கலந்து கொண்ட சிலர்(எல்லோரும் அல்ல) தாயகத்து நிகழ்வு என்றால் அதில் கலந்து கொள்ள எதாவது சாக்குப்போக்குகள் சொல்லுவார்கள். ஏன் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு அந்தச் சாக்குப் போக்குகள் சொல்லவில்லை?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாருக்கும்

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வந்து போகாதே என்று ஒட்டுமொத்த தமிழரைக் கிண்டலடிப்பது ஒருவகை, ஒரு நிகழ்ச்சிக்க்கு போக வாய்ப்பில்லாது அதே நேரத்தில் இன்னும் பல பொழுதுபோக்கு (பிறந்த நாள் உட்பட) போய் விட்டு போகாத நிகழ்ச்சி பற்றிக் கிண்டலடிப்பது ஒரு வகை என்று நம் கள உறவுகளில் பல வகை

திறமையான கலைஞர்களை உள்வாங்கி கெளரவிப்பது ( இந்தியக் கலைஞர்கள் உட்பட) நமது தேசியத் தலைவரின் தெளிவான பார்வைக்கு ஒரு உதாரணம்.

இப்படியான வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு போவதும் போகாததும் ஒவ்வொருவனதும் தனிப்பட்ட சுதந்திரம். அத்றகாக 3 தலைமுறை தாண்டிய கலைஞனை ஏளனம் செய்வது நம் அறியாமையின் விளைவு.

இந்த மெல்பன் சிட்னி நிகழ்ச்சிகளுக்கு தமிழீயம் சார்ந்த அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட வந்தார்கள். அதே நேரத்தில் தேசிய உணர்வு சார்ந்த நிகழ்வுக்க்கு வரும் அதே மக்கள் கூட்டமும், இப்படியான நிகழ்வுக்க் வராதவர்க் கூட வந்தார்கள். புலம் பெயர்ந்து வந்துவிட்டோம். நாம் ஒவ்வொருவர் செய்யும் காரியமும் சரி மற்றவன் செய்தால் பிழை. இது தான் எம் நிலை.

இப்படியான களியாட்ட நிகழ்வுக்கும் போய் அதே நேரத்தில் ஒரு தேசிய நிகழ்வுக்கும் வராதவர்கள் குறித்த கவலை எனக்கும் உண்டு

சிகப்பில் அடையாளம் இட்டதினைத்தான் நானும் சொன்னேன். எல்லோரையும் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஆ இவன்ட பாடோ பெரிய பாடு நாளக்கு நான் துங்காபிக்கு வாரேன் அங்கே 2 பேரும் பார்ப்போம்

:wink: :wink:

ஒய் என்ன நக்கலா? நான் பையன்கள எல்லாம் மீட் பன்னிறேல... :lol::lol:

என்ன சுண்டல்

தூங்காபியில அப்பிடி என்ன வச்சிருக்கிறீர், நைற் கிளப்போ:-) :-)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்களுக்கு ஜெசுதாசின் கூத்துதான் முக்கியம் உங்களையேலலாம் நம்பி உயிரை கொடுக்குதுகளே அப்பாவிகள் அவர்களை சொல்லவேணும் :twisted: :twisted: :evil: :oops:

ஏன் tension ஆகிறிங்கள்...

"ஈழத்தில் நீங்கள் உயிர்துறக்க உங்கள் தியாகத்தால் புலத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கோழைகளில் ஒருவன் நான். என்னை மன்னித்து விடுங்கள்!"

எண்டு அவையும் சொல்லுவினம். இதுக்கு போய் சும்மா tension ஆகிக்கொண்டு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜேசுதாசில் கலந்து கொண்டவர்கள் எல்லாரையும் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நான் சொன்னது ஏன் தாயக நிகழ்வுகளுக்கு/பங்களிப்புக்களுக்குச் போகமால்/பங்களிக்காமல் அதற்கு காரணம் தேடுபவர்கள் ஏன் ஜேசுதாஸின் நிகழ்ச்சிக்கு காரணம் சொல்லவில்லை.

திரைப்படம், கச்சேரிகளுக்கு பாக்கிற, போகிறவர்களில் பலர் தாயக நிகழ்வுகளுக்கும் பங்களிப்புச் செய்கிறர்கள். அவர்களைச் சொல்லவில்லை.

சிலர் தாயக நிகழ்வு என்றால் முற்றாகப் புறக்கணிக்கிறார்கள். இவர்களைப்பற்றித்தான் சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்றோ கச்சேரிகளில் கலந்து கொளவதில்லை என்றோ ஒரு முறையும் யாழில் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த பலர் சிட்னியில் இருக்கிறார்கள். அவர்கள் தாயக நிகழ்ச்சி என்றால் வேணுமென்றே சில காரணங்கள் சொல்லி அன்னிகழ்ச்சிகளினைத் தவிர்க்கிறார்கள். அதே காரணங்களினை ஏன் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு அவர்களுக்கு வரவில்லை?. செஞ்சோலை,அல்லைப்பிட்டிச் சம்பவங்களுக்கு கண்டன ஊர்வலங்களுக்கு வேலையில் இருந்து விடுமுறை கிடைக்காது.

ஆனால் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானா பிரபா நீங்கள் சிட்னியில நான் நாடகம் போட்ட போதும் வரவில்லைத்தானே.. நீங்கள் ஈழக்கலைஞனின் ? நிகழ்ச்சிக்கு ஏன் வரேல்லை

ஓ நீங்களும் அடிக்க வந்துட்டியளே:-) சுவிஸிலை ஒரு நாடகம் போடுங்கோ வாறன்:-)

கானா பிரபா நீங்கள் சிட்னியில நான் நாடகம் போட்ட போதும் வரவில்லைத்தானே.. நீங்கள் ஈழக்கலைஞனின் ? நிகழ்ச்சிக்கு ஏன் வரேல்லை

எல்லார்ட வண்டவாளமுன் தண்டவாளம் அக்கிறது போல இந்த பக்கத்தில் கூட நேரம் நிற்பது சரியில்லை பிறகு யமுனா பற்றியும் அம்பலமாகிவிடும்

:P :P :P

கந்தப்பு தாத்தா அப்படி போடுங்கோ நீங்களும் இந்த தள்ளாத வயதிலும் கத்துறீங்க ஆனால் நாங்கள் கேட்கமாட்டோம்

:wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.