Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தேர்தலுக்காக செயற்படும் தலைவன் அல்ல! - என்கிறார் ஜனாதிபதி மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் தேர்தலுக்காக செயற்படும் தலைவன் அல்ல! - என்கிறார் ஜனாதிபதி மகிந்த

[Thursday 2014-09-18 07:00]
mahinda-rajapaksa-speech-200-news.jpg

நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் ஆட்சிக்கு வந்த நான் தேர்தலுக்காக செயற்படும் தலைவன் அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் இறுதி தேர்தல் பிரசார நாளான நேற்று மஹியங்கனை நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களுக்கு சேவை செய்யவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் அதை உச்ச அளவில் முழுமையாக நிறை வேற்றியுள்ளேன்.

  

வெற்றிலைக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுக்க ஊவா மக்கள் இப்போதே உறுதியான தீர்மானம் எடுத்துள்ளனர். இதற்கிணங்க பெரும்பாலான வாக்குகளால் இம்முறை ஊவா வெற்றிபெறுவது உறுதி. நாட்டின் தலைவன் என்ற வகையில் ஊவா மாகாண மக்கள் மீதான முழுமையான நம்பிக்கை எனக்கு உண்டு. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குறுதி வழங்குவது எமது கொள்கையல்ல. நாட்டுக்கு சேவை செய்யும் நிகழ்ச்சித் திட்டமே எமதாகும். 2005 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எம்மிடம் நாட்டை மீட்டுத்தருமாறு கோரினார்கள்.

30 வருட யுத்தத்தை மூன்று வருடங்களில் நிறைவு செய்து நாம் நாட்டை மீட்டுள்ளோம். சிங்கள மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது எமது அரசாங்கமே. மின்கட்டணத்தை நாம் குறைத்தது தேர்தலை இலக்காகக் கொண்டல்ல. அன்று நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அதனை மேற்கொண்டோம். நுரைச்சோலை நிர்மாணிக்கப்பட்டதன் பின் மின்கட்டணத்தை குறைப்போம் எனக் கூறியிருந்தோம். அதற்கிணங்க நுரைச்சோலை ஆரம்பிக்கப்பட்டதும் நாம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்.

தற்போது நாடெங்கிலும் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 2010 தேர்தலில் நாம் தோல்வியடைவோம் என சில சக்திகள் பிரசாரங்களை முன் னெடுத்தன. எனினும் 18 இலட்சம் வாக்குகளால் நாம் வெற்றிபெற்றோம். மீதமாக உள்ள அபிவிருத்தியை மேற் கொள்வதற்காக வாய்ப்பளிக்குமாறு எதிர்க்கட்சியினர் மக்களைக் கேட்கின்றனர். முழுமையான அபிவிருத்தியுடன் நாட்டைக் கட்டியெழுப்ப எம்மால் முடியுமானால் மீதமுள்ள சிறுசிறு பாதைகளை அமைப் பதற்கும் அவற்றைப் புனரமைப்பதற்கும் எதிர்க்கட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்றும் ஜனாதிபதி கேள்வி யெழுப்பினார்.

அதேவேளை, வெள்ளவாயவில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷ குடும்பம் யுத்தத்தை வைத்து சம்பாதிக்கவில்லை. மாறாக யுத்தத்தை கூட ஜனநாயக ரீதியில் நடத்தி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது என்றார்.

 

seithy.com

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா.. ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்திட்டு.. ஒரு முழு நேர பெளத்த துறவியாக மகிந்தவால் மாற முடியுமா..??! இல்லை இல்ல. பிறகெதற்கு சிங்களவர்களை ஏமாற்றும் உந்தக் கதையளப்பு. :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.