Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்' -மாவை

Featured Replies

'தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளைக்கான புதிய நிர்வாகிகளுக்கு வரபேற்பளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, துளசி மண்டபத்தில் சனிக்கிழமை(28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு வழங்காவிட்டால் எமது கட்சியின் மாநாட்டு பிரகடனத்தின் பிரகாரம் நாம் எமது சாத்வீகப் போராட்டத்தை தொடங்குவோம். இதற்காக தமிழ் மக்கள் அனைவரும் எமக்கு பின்னால் அணிதிரள வேண்டும்.

இந்த அரசாங்கம் மட்டுமல்ல, சிங்கள தலைவர்கள் அனைவருமே எம்மை ஏமாற்றி வந்துள்ளனர்.

ராஜபக்ஷ அரசாங்கம் தமிழத் தேசத்தை அழித்து வருவதுடன் தமிழ் பிரதேசங்களில் அராஜகத்தையும் அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

முஸ்லிம்களின் மத அடையாளத்தையும் இனத்தின் பெயரால் அழித்து வருகின்றது. தமிழர்களின் காணி இன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எமக்கான தீர்வு வழங்காவிட்டால் நாம் சாத்வீக போராட்டத்தில் இறங்குவோம்.

இதற்காக முஸ்லிம்களின் ஒத்துழைப்பையும் மலையக மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இந்த சாத்வீகப் போராட்டத்தை நடத்துவோம்.

தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லிம்கள் சிவில் அமைப்புகள் மலையக தமிழர்கள் ஒன்றிணைந்தால் சாத்வீக போராட்டம் வெற்றியடையும் இதற்கு நாம் தயாராக வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்த மாகாணமாகவே எப்போதும் இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால் எமக்கு 41 ஆசனங்கள் இருக்கின்றது.

சிங்களவர்களுக்குள்ள இறைமையும் நீதியும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் இருக்கின்றது. நீதியும் சமத்துவமும் பேனப்படல் வேண்டும். அந்த நீதிக்காக தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் குரல் கொடுக்கும்.

இந்திய பிரதமரும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைபற்றி நன்றாக விளங்கிக்கொண்டுள்ளார். இது எமக்கு சாதகமாக அமையும்.
என்னைத்தலைவர் என்று சொன்னபோது எனக்கு கஸ்டமாக இருந்தது.  எனது வரலாறு இரத்தம் தோய்ந்த வரலாறு. அன்று நான் இளைஞனாக இருந்த போது சாத்வீக போராட்டத்துக்காக ட்டக்களப்புக்கும் வந்துள்ளேன்.

அப்போது நான் கைதுசெய்யப்பட்டேன். மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்தவித விசாரணையுமின்றி ஏழு எட்டு மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டேன்.

தமிழ் மக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக சேர்ந்து இந்த அடக்கு முறைக்கு எதிராக அணி திரள்வதுடன் எமக்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.http://www.pathivu.com/news/34174/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியக்கடதாசியைக் குடுத்திருக்கத் தேவையில்லை.

மாவை தலைவராக வரவேண்டும் என்று விரும்பியவை எல்லோரையும் போராட்டத்திற்கு தயாராகட்டாம்  :)
 
ஐப்பசி முதல் வாரம் ஐரோப்பிய நாடுகளிலும் மாத முடிவில் கனடாவுக்கும் வரப்போகின்றாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை தலைவராக வரவேண்டும் என்று விரும்பியவை எல்லோரையும் போராட்டத்திற்கு தயாராகட்டாம்  :)

 

ஐப்பசி முதல் வாரம் ஐரோப்பிய நாடுகளிலும் மாத முடிவில் கனடாவுக்கும் வரப்போகின்றாரம்.

 

மாவை அண்ணே 1974களில் எங்களை கூப்பிட்டவர்(அழைத்தவர்)நாங்கள் போகமல் சுழிச்சு போட்டோம்....இனியா போகப் போறம்....அண்ணேயின் பகிடி வெற்றி எங்களுக்கு தெரியும்தானே................................................................................................... ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து ...........[1977 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறையில் இருந்த ஏனைய இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டனர். காசிஆனந்தன், வண்ணைஆனந்தன், சேனாதிராசா,சத்தியசீலன் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். நம்மை அவர்கள் சிறந்தமுறையில் வழி நடத்துவார்களென நம்பினேன். விடுதலை செய்யப்பட்டு யாழ்தேவியில் யாழ்ப்பாணம் வந்தவர்களை ஏனைய தோழர்களோடு வவுனியா வரை சென்று உணர்ச்சிகர கோசங்களை முழங்கியவண்ணம் அழைத்து வந்தோம். அடிக்கடி சந்தித்து அடுத்து என்ன செய்யலாமெனப் பேசுவோம்.] அவர்கள் வார்த்தைகளால் மட்டும் எம்மைத் திருப்திப் படுத்தினார்களே தவிர செயலளவில் எவ்வித நடவடிக்கையிலும் இறங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எப்ப குடும்பத்த இந்தியாவில் இருந்து கூப்பிடப் போறியள்?

ஒரு படத்தில் சத்யராஜ் கட்டில்ல ஏறி நிண்டு அரசியல்ல குதிக்கப் போறேன், அரசியல்ல குதிக்கப்போறேன் என்பார் அப்படி இருக்கு அண்ணர்ர ஜோக்.

மாவை தலைவராக வரவேண்டும் என்று விரும்பியவை எல்லோரையும் போராட்டத்திற்கு தயாராகட்டாம்  :)

 

ஐப்பசி முதல் வாரம் ஐரோப்பிய நாடுகளிலும் மாத முடிவில் கனடாவுக்கும் வரப்போகின்றாரம்.

 

முதல் தயாராக போகிறவர் திரு சம்பந்தர் அவர்கள். அதன் பின்னர் தமிழரசு கட்சியின் பேச்சாளர்களாக இங்கு அடிக்கடி தலை காட்டுபவர்கள். அதன் பின்னர் மக்கள்.

முதல் தயாராக போகிறவர் திரு சம்பந்தர் அவர்கள். அதன் பின்னர் தமிழரசு கட்சியின் பேச்சாளர்களாக இங்கு அடிக்கடி தலை காட்டுபவர்கள். அதன் பின்னர் மக்கள்.

நாங்கள் வந்தால் தலைமைப்பதவிதான் ,அதிகாரமற்ற பீச்சாலரெல்லாம் வேண்டாம் .நாங்கள் போராடினால் தமிழீழம் அல்லது புலம்பெயர் தேசத்தில் சுகவாழ்வு .எப்ப துவங்கி பதவிகள் கொடுக்கிற வேலை   :)  :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.