Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..!

 

 

danger-sign-st-maarten.jpg

 

 

கரீபியன் தீவுகளின் "மஹோ பீச்" (Maho Beach) பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

 

இத்தீவில் அமைந்துள்ள பிரின்ஸஸ் ஜூலியனா சர்வதேச விமான நிலயம், கடலுக்குக்கு மிக அண்மித்து மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் இதன் விமான ஓடுபாதையின் நீளம் (2300மீ) கடற்கரையை தொட்டுக்கொண்டுள்ளது. அதனால் கடற்கரைக்கும், ஓடுபாதைக்கும் இடையே செல்லும் குறுகிய சாலையிலும், அதன் அண்மித்த கடல் மணற் பரப்பிலும் மக்கள் யாரும் நிற்க வேண்டாமென காவல் துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டும், விமானத்தை மிக அண்மித்து பார்க்கும் ஆர்வலர்கள், காமிரா சகிதம் தினமும் ஓடு பாதையின் வேலியை ஒட்டி நின்று விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம்.

 

040.jpg

 

 

விமான இறக்கையில் பொருந்தியுள்ள எந்திரங்கள் உயிர்பெற்று, சீற்றத்துடன் முன்னிருக்கும் காற்றை உள்வாங்கி வால் பகுதியில் மிக வேகத்துடன் வெளியேற்றுவதால் ஏற்படும் உந்து சக்தி மூலம் விமானம் மேலெழும்பி செல்வதை பார்ப்பது மகிழ்ச்சிதான். ஆனால் பாதுகாப்பாக நின்று பார்க்க வேண்டுமல்லவா?

 

 

Maho-Beach.jpg

 

 

கடற்கரையில் குளிக்கும் இம்மக்கள், புழுதியையும் தூசிகளையும் வாரியிறைத்துக் கிளம்பும் விமான தரை இறக்கம் ஏற்றங்களை எப்படி பார்க்கிறார்களென கீழேயுள்ள காணொளியில் காணுங்கள்...

 

இரண்டாவது காணொளியை அவசியம் பார்த்து அனுதாபம் தெரிவிக்கவும்! :icon_idea:

 

 

:( துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..! :o

 

 

http://youtu.be/wpdnLoram4Q

 

http://youtu.be/eV21f1MZ5iU

 

http://youtu.be/X9fZ3FG1pB8

 

http://youtu.be/97U_6oyjeDA

 

http://youtu.be/RILkG2yhAAM

 

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

போக வேண்டும் என்று நெடு நாள் ஆசை ........ லீவு கிடைக்க மாட்டேன் என்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தமாதிரி விடயங்களைக் காண விருப்பம். :D

எனது வீட்டிலிருந்து விமான நிலையம் குறைந்த தூரம்தான்.. ஒருமுறை அருகில் செல்லும்போது விமானம் ஒன்று தரையிறங்கியது.. கண்கொள்ளாக் காட்சி.. :D இந்த அலுமினியத்தை நம்பி மக்கள் போகிறார்களே என்கிற நினைப்பும் வந்தது.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19280119.jpg

 

742.jpg

 

65118551.jpg

 

 

துபை சர்வதேச விமான நிலைய ஓடுபாதையும் துபை-சார்ஜா சாலைக்கு அண்மித்தே இருக்கிறது... சாலையின் மிக அருகே இருக்கும் விமான தரிப்பிடத்தில்,இரண்டடுக்கு தள  ஏர்பஸ் 380 விமானங்களை மிக அருகேயே பார்க்கலாம்..

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..!

 

http://youtu.be/eV21f1MZ5iU

 

பாவம் அந்தப் பெண்.

தேவையில்லாத வேலை பாக்கப் போய்....

சுற்றுலா போன இடத்தில், தடுப்பு சுவருடன்.... மண்டையை மோத வைச்சுட்டு நிக்குது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான விமான தரையிறக்கங்கள் சில இந்த காணொளியில்..

 

http://youtu.be/YRb-xF0RW-k

 

இப்பொழுதிருக்கும் மூன்றாவது முனையம்(Terminal 3) கட்டுவதற்கு முன்னர் 'துபை ஏர்ஷோ' சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது..

 

சாலையில் நாம் நிற்கும் பொழுது, தலைக்குமேலே மிகத் தாழ்வாக பறந்து செல்லும் விமான சாகசங்களைப் பார்க்கையில் கிட்டும் திரில்லே அலாதிதான்... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.