Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி (Yazidi) மக்கள் – ஒரு வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர்.

“யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர்.

முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம்.

மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சார கருத்தியல், பிற்காலத்தில் வலிந்து புகுத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் இருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள ஈராக்கில் வாழும், யேசிடி மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில், கிட்டத்தட்ட இதே மாதிரியான புராணக் கதை இருந்து வருகின்றது.

யேசிடி என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர்.

yzidi-peacock.jpg

ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம்.

தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது.

முருகனைப் பற்றிய கதைகளில் ஒன்று, முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கூறுகின்றது. முருகன் குழந்தையாக இருந்த நேரம், ஏழு அல்லது ஆறு கார்த்திகைக் கன்னியர்கள் அவனை சரவணப் பொய்கையில் நீராட்டினார்கள்.

அதனால் முருகனுக்கு ஆறு தலைகள் உண்டாகி, கார்த்திகேயன் (தமிழில் ஆறுமுகன்) என்று அழைக்கப் பட்டான். (ஆரம்பத்தில் ஏழு தலைகள் இருந்தன என்றும் சொல்லப் படுகின்றது.)

இந்துக்களுக்கு மேற்குறிப்பிட்ட புராணக் கதை நன்கு தெரிந்திருந்த போதிலும், அதற்குப் பின்னால் உள்ள வான சாஸ்திர அறிவியலை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலர் தான். விண்வெளியில் இருக்கும் ஏழு கார்த்திகை நட்சத்திரங்கள் தான், அந்த ஏழு கன்னிகைகளும். நமது பூமி உள்ள பால்வெளியில் அந்த நட்சத்திரங்களும் உள்ளன. (ஏழு பின்னர் ஆறாகி உள்ளது. அதற்கும் ஒரு காரணக் கதை இருக்கிறது.)

சரவணப் பொய்கை என்பது அண்டவெளியில் உள்ள பால் வெளியை குறிக்கும். ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், புராணக் கதையில் முருகனின் ஆறு முகங்களாக உருவகிக்கப் பட்டது. உண்மையில் இது மதம் சம்பந்தமான விடயம் அல்ல.

ஆதி கால மனிதர்களின் வான சாஸ்திர அறிவியல், இப்படியான கதைகள் மூலமாகத் தான் பரப்பப் பட்டு வந்துள்ளது. யேசிடி மதத்தவர்கள், இதே மாதிரியான கதையை ஏழு வர்ணங்களாக உருவகித்து உள்ளனர். ஆனால், இரண்டுக்கும் இடையிலான அறிவியல் அடிப்படை ஒன்று தான்.

தென்னிந்திய முருகன் வழிபாட்டில் காணப்படும் சேவல், மயிலில் காலின் கீழ் மிதிபடும் பாம்பு ஆகியன, யேசிடி மதத்தவராலும் புனித சின்னங்களாக கருதப் படுகின்றன.

AZIZ_TAMOYAN.jpg

இவற்றை நேரில் கண்டறிய விரும்புவோர், வட ஈராக்கில் உள்ள லாலிஷ் எனும் இடத்தில் உள்ள யேசிடி மதத்தவரின் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அல்கைதா, ISIS போன்ற முஸ்லிம் மதவெறி இயக்கங்கள், அந்தக் கோயிலை தகர்ப்பதற்கு பல தடவைகள் முயற்சித்துள்ளன.

“முருக வழிபாடு, தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமானது!” என்ற ஒரு பிழையான கட்டுக்கதை தமிழர்கள் மத்தியில் உள்ளது. அநேகமாக, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழினவாதிகளே இது போன்ற கட்டுக் கதைகளை பரப்பி வந்துள்ளனர்.

முருக வழிபாடு, தென்னிந்தியாவில் உள்ள பிற திராவிட இனங்கள் மற்றும் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. அநேகமாக, முருக வழிபாடு ஆரிய மயமாக்கலுக்கு முந்திய திராவிட இனங்களின் வழிபாடாக இருந்திருக்கலாம்.

ஒரு காலத்தில், இந்தியா முதல், அரேபியா வரையில், முருக வழிபாடு இருந்திருக்க வேண்டும். சில அரேபியர்கள் இஸ்லாமியராக மாறிய பின்னரும், முருகனை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

அரபு இஸ்லாமியர் மத்தியில் “அல் கதிர்” என்று அழைக்கப்படும் தெய்வம், முருகனை நினைவுபடுத்துகின்றது. முருகனுக்கு “கதிர் (காமன்)” என்ற இன்னொரு பெயர் இருப்பதை, நான் இங்கே சொல்லத் தேவையில்லை. இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இஸ்லாமியர் வழிபாடு நடத்தும் பகுதி ஒன்று இன்றைக்கும் உள்ளது.

யேசிடி மதத்தவரின் கோயில் பூசாரிகளை “பிர்” என்று அழைப்பார்கள். கதிர்காமத்தில் பூசை செய்பவர்களும் பிராமணர்கள் அல்லர். அதற்கென்று தனியான பூசாரிகள் உள்ளனர்.

அவர்கள் பூசை வழிபாடு நடத்தும் முறை, பிற இந்துக் கோயில்களில் இருந்து மாறுபட்டது. யேசிடி மதத்தில் உள்ள, பக்திப் பாடல்களை “கவ்வல்” என்று அழைப்பார்கள். அவற்றைப் பாடுவோர் “கவ்வாலிகள்” ஆவர்.

இன்றைய பாகிஸ்தானில், கர்நாடக சங்கீதம் போன்று, கவ்வாலி இசை மரபு இருந்து வருகின்றது. தமிழில் “காவாலி” என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அது வேண்டுமென்றே எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது.

இந்து மத மேலாதிக்கவாதிகள், தமிழர்களின் மரபு வழி மத நம்பிக்கைகளை அழிப்பதற்காக, வேண்டுமென்றே அப்படியான தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர்.

ஈராக்கில் வாழும் யேசிடி குர்தியர்கள் திராவிடர்கள் அல்ல, ஆரியர்கள். அவர்களுக்கும் முஸ்லிம் குர்தியர்களுக்கும் இடையில், உருவத் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இல்லை.

குர்து மொழியானது, பார்சி, சமஸ்கிருதம் போன்ற இந்தோ – ஐரோப்பிய மொழிகளுக்கு நெருக்கமானது. குர்து மக்களில் பெரும்பான்மையானோர் சன்னி முஸ்லிம்கள். ஆயினும், மிகக் குறைந்த அளவில், யூத மதத்தை பின்பற்றுவோரும், ஷியா முஸ்லிம்களும், குர்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் வாழ்கின்றனர்.

யேசிடி மதத்தை சேர்ந்த மூன்று இலட்சம் குர்தியர்கள், ஒரு புராதன கால மதத்தை பின்பற்றுவதால், பல்வேறு பக்கங்களாலும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.

அரேபியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். பண்டைய காலத்தில், அரேபியர் என்றால், அரபு மொழி பேசுவோர் என்று அர்த்தம். இனம் பற்றிய கற்பிதங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் தோன்றின.

ஈராக்கில் வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானோர், அரபு மொழியை பேசியதால் அரேபியர் ஆனவர்கள். அவர்களின் பூர்வீகம் கிரேக்கமாக கூட இருக்கலாம். அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்கு பின்னர் ஏராளமான கிரேக்கர்கள் அங்கே குடியேற்றப் பட்டனர்.

அலெக்சாண்டரின் காலத்திலேயே, ஈராக்கில் இருந்த பாபிலோனிய கலாச்சாரம் அழிந்து விட்டது. கூடவே பாபிலோனியரின் மத நம்பிக்கைகளும் காணாமல் போய் விட்டன.

ஆயினும், வெளியுலக தொடர்பற்ற வட ஈராக்கிய மலைப் பிரதேசத்தில், அது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்திருக்கலாம். யேசிடிகள் அந்தத் தொடர்ச்சியை பேணி வருபவர்களாக இருக்கலாம்.

யேசிடிக்கள் ஒரு புராதன கால மதத்தை பின்பற்றினாலும், அது காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அது பிற மதங்களுடன் சமரசம் செய்து கொண்டு (syncretic), தன்னைத் தானே மறு வார்ப்புச் செய்து கொண்டுள்ளது.

ஆதிகால பாரசீக மதமான, சரதூசரின் மதத்தின் சில கூறுகளை கொண்டுள்ளது. அதே நேரம், பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் போன்று ஞானஸ்நானம் எடுப்பது, இஸ்லாமியர்கள் போன்று ஐந்து வேளை தொழுவது.

உண்மையில் “யேசிடி” என்பது அந்த மதத்தின் பெயர் அல்ல. அது, பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். அந்த மதத்தின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது.

அதைப் பின்பற்றும் மக்களுக்கும் தெரியாது. கி.பி. 680 – 683 காலத்தில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபா “யாசிட்” இன் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர்.

ஒருவேளை அந்தக் கால கட்டத்தில், மேற்கத்திய நாடுகளில் இருபதைப் போன்று, ஜனநாயக சமுதாயம் இருந்திருக்கும். பல கல்வியாளர்கள் மத்தியில், அழிந்து போன புராதன மதங்களை ஆராயும் ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். யாசிட் கலீபா அப்படியான அறிஞர்களை ஆதரித்திருக்கலாம்.

அந்தக் காலகட்டத்திற்கு பின்னர் தான், யேசிடி ஒரு மத நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் நமது நாட்டில் உள்ள சிறு தெய்வ வழிபாடு போன்று இருந்து வந்துள்ளது.

இன்றைய லெபனானில் பிறந்த “அடி பின் முஸாபர்” (Adi bin Musafar) பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வி கற்பதற்காக வந்திருந்தார். அங்கே தான் யேசிடி மதம் பற்றி அறிந்து கொண்டார்.

அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, வட ஈராக்கில் உள்ள ஹக்கரி மலைகளுக்கு சென்றார். நமது காலத்தில் அப்படியானவர்களை Anthropologist என்று அழைப்பார்கள்.

ஹக்கரி மலைகளில் வாழ்ந்த குர்து மொழி பேசும் மக்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். அதனால், முஸாபர் அவர்களுக்கு ஒரு மீட்பர் போன்று தென்பட்டார். முஸாபர் அந்த மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார்.

அந்த மக்களை நிறுவன மயப் படுத்தினார். அவரின் விசுவாசிகள் அடவைஜா குழு என்று அறியப் பட்டனர். முஸாபர் இறந்த பின்னரும், மொசுல் நகருக்கு அருகில் இருந்த அவரது சமாதி, புனித யாத்திரை செல்லும் ஸ்தலமாகியது. பதினான்காம் நூற்றாண்டில், இஸ்லாமிய தூய்மைவாதிகள் அந்த சமாதியை உடைத்து விட்டனர்.

இஸ்லாமிய ஈராக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும், புனித நூலின் மக்களாக கருதப் பட்டனர். அதனால் அவர்கள் மேல் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் படவில்லை.

ஆனால், யேசிடி மக்கள் “பிசாசை வழிபடுபவர்கள்” என்று தவறாக கணிக்கப் பட்டார்கள். அதிகார வர்க்கம் ஒடுக்குமுறைகளை பிரயோகித்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த எந்த மதத்தை சேர்ந்த மக்களும் உதவ முன் வரவில்லை. இன்று வரைக்கும் அது தான் நிலைமை.

19 ம் நூற்றாண்டில் இருந்த துருக்கி ஆட்சியாளர்களும், குர்து முஸ்லிம் நிலப்பிரபுக்களும் கூட, யேசிடி மக்களை புறக்கணித்து ஒதுக்கி வந்துள்ளனர். சதாம் ஹுசைன் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் யேசிடி மக்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் மீளக் குடியேற்றப் பட்டனர்.

அதன் விளைவாக, யேசிடிகள் குறிப்பிட சில பிரதேசங்களில் நெருக்கமாக வாழும் சமூகமானார்கள். அவர்களின் பிரதேசங்களை சுற்றிலும் அரேபியர்கள் வாழ்ந்தனர். இது அரசினால் திட்டமிடப் பட்ட, ஒரு வகையான சமூக கண்காணிப்பு எனலாம்.

2003 ம் ஆண்டு, ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த நேரம், அடக்கப்பட்ட சிறுபான்மை இனமான யேசிடி குர்தியர்கள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர். சதாம் காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்த சன்னி அரேபியர்கள் அமெரிக்கப் படையினரின் கடுமையான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அந்தக் காலகட்டம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியருக்கும், யேசிடிகளுக்கும் இடையில் ஒரு பிளவை உண்டு பண்ணியது. அன்று அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய அல்கைதா பாணி இயக்கங்கள், யேசிடிகள் மீது இடைக்கிடையே வன்முறை பிரயோகித்து வந்தன.

அண்மைக் காலத்தில், ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ISIS இயக்கம், சன்னி – இஸ்லாமிய மதவாத இயக்கம் ஆகும். அதனால், ஈராக்கின் சன்னி முஸ்லிம் மக்களும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.

அண்மையில், சின்ஜார் பகுதியில் இடம்பெற்ற யேசிடி இனச் சுத்திகரிப்பின் போது, ISIS இயக்கத்திற்கு உள்ளூர் சன்னி முஸ்லிம் அரேபியரின் ஆதரவு கிடைத்தது. தம்மோடு ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்தவர்கள், அயலவர்கள் காட்டிக் கொடுத்ததாக, அகதிகளாக வெளியேறிய யேசிடி மக்கள் கூறுகின்றனர்.

யேசிடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. மதச் சின்னங்களை அணிவதில்லை. பிற அரேபியர் போன்று நடந்து கொள்கின்றனர். அவர்கள் சரளமாக அரபு மொழி பேசினாலும், உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில், யேசிடிகளின் தாய் மொழி குர்து ஆகும்.

ISIS ஒரு பாசிஸ இயக்கம் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அவர்களது “இஸ்லாமியத் தாயகத்தில்” சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே “பிரஜாவுரிமை” கிடைக்கும். ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகின்றனர்.

யேசிடிகளுக்கு அந்த சலுகை கிடையாது. ஏனென்றால், அவர்கள் “பிசாசை வழிபடுபவர்கள். அதனால், அழிக்கப் பட வேண்டியவர்கள்.” என்பது ISIS முன்வைக்கும் வாதம்.

துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் உள்ள பிற அரேபியர்களும் அந்தக் கருத்தை மௌனமாக வழி மொழிகின்றனர். ஈராக்கில் யேசிடிகளுக்கு எதிரான இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மிகவும் கொடூரமாக நடந்துள்ளன.

அதற்கு, உள்ளூர் மக்களின் மௌனமான அங்கீகாரமும் ஒரு காரணம். சில இடங்களில், சாதாரண அரபி மக்களே, இனச் சுத்திகரிப்புக்கு துணை போயுள்ளனர்.

வசதியான யேசிடி மக்கள் பிரிவினர், துருக்கி சென்று அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஜெர்மனியில் மிகப் பெரும் எண்ணிக்கையில், புலம்பெயர்ந்த யேசிடி மக்கள் வாழ்கின்றனர்.

தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் யேசிடி மதம் வளர முடியுமா? குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருகின்றது. அவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பழைய சடங்குகளை புறக்கணித்து வருகின்றனர்.

யேசிடி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன.

நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்குட்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள் என்பன, யேசிடி மக்களை ஒரு சமூகமாக சேர்ந்திருக்க வைத்தது. நேற்று வரையில், ஈராக்கில் அது சாத்தியமானது. யேசிடி மதம் அழிந்து போகாமல், தொடர்ந்தும் நிலைத்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான்.

 

 

- கலையரசன்-

இக்கட்டுரை எழுதிய கலையரசனுக்கு நன்றி.

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமான பதிவு.
இவற்றை எல்லாம், எங்கு தேடி எடுக்கின்றீர்கள் பெருமாள். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி தமிழ் சிறி ,கு.சாமி,நுனாவிலான்.

அன்றாடம் நடக்கும் உலக நிகழ்வுகளை பார்ப்பதுண்டு சமீபத்தில் ஈராக்கில் Yazidis massacre and kidnapping ஏன் என தேடியபோது யதேச்சையாக அவர்கள் இந்து அதான் போட்டு கும்முது isis என ஒரு சர்வதேச மீடியாவில் காணப்பட்டது பிறகென்ன Yazidi முருகன் கூகிளிட்டால் வந்து விழும்.

 
 
  1.  

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமான பதிவு.நன்றி

மூடநம்பிக்கையா தோன்றுது எனக்கு  :D

http://kalaiy.blogspot.co.uk/2014/08/blog-post_17.html என்ற பதிவில் இருந்து ஒரு வரியையும் தவறாமல் பிரதியெடுத்து இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள்...

ஆனால் அத்தளத்துக்கும் அதை எழுதியவருக்கும் சிறு நன்றியைத் தெரிவித்திருக்கக் காணோம்.... ?

 

எதுக்கு நீங்களே எழுதியமாதிரி பில்ட் அப் ?  :blink: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://kalaiy.blogspot.co.uk/2014/08/blog-post_17.html என்ற பதிவில் இருந்து ஒரு வரியையும் தவறாமல் பிரதியெடுத்து இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள்...

ஆனால் அத்தளத்துக்கும் அதை எழுதியவருக்கும் சிறு நன்றியைத் தெரிவித்திருக்கக் காணோம்.... ?

 

எதுக்கு நீங்களே எழுதியமாதிரி பில்ட் அப் ?  :blink: 

மன்னித்து கொள்ளுங்கள் யாழில் நான் ஒரு கொப்பி பேஸ்ட்டுங்க (வடிவேலு குரலில் படிக்கவும்)

கலையகம் நான் விரும்பி செல்லும் தளம் ஆனால் ( Yazidi முருகன்) அடைப்புக்குள் இருக்கும் இரு சொல்லுகளையும் கூகிளில் தட்டி பாருங்கள் http://ilakkiyainfo.com/ முன்னுக்கு வருது அப்படியே இனைக்க விரும்பும்  தலைப்பையும் yarl.com மீண்டும் கூகிளிட்டால் சில வேளைகளில் முன்னுக்கே யாராவது இனைத்துள்ளார்களா என பார்ப்பதுண்டு அவ்வளவே விடயம்.

இப்ப என்னங்க தேங்காயே உடைச்சு மாலையும் நேரில் சென்று போட்டு விட்டு மன்னிப்பும் நன்றியும் ஒரு சேர செய்கிறன் சந்தோஷமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://kalaiy.blogspot.co.uk/2014/08/blog-post_17.html என்ற பதிவில் இருந்து ஒரு வரியையும் தவறாமல் பிரதியெடுத்து இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள்...

ஆனால் அத்தளத்துக்கும் அதை எழுதியவருக்கும் சிறு நன்றியைத் தெரிவித்திருக்கக் காணோம்.... ?

எதுக்கு நீங்களே எழுதியமாதிரி பில்ட் அப் ? :blink:

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

எமது ஆக்கம் அல்லாத பிறரின் ஆக்கங்களை யாழில் இணைக்கும் போது ஆக்கத்துக்குரியவரின் பெயர் அல்லது அந்த ஆக்கம் எங்கிருந்து பெறப்பட்டதோ அதன் இணைப்பை ஆக்கத்துடன் இணைப்பது இங்கு முறை.

நீங்கள் இணைத்த blog இணைப்பில் சென்று பார்க்க அது "கலையரசன்" என்ற நபருடையது என்று புரிகிறது. பெருமாள் அண்ணா இணைத்த செய்தியிலும் அடியில் "கலையரசன்" என்று குறிப்பிட்டு அந்த செய்தியை எந்த இணையத்திலிருந்து பெற்றாரோ அந்த தளத்தின் இணைப்பை இணைத்துள்ளார்.

அத்தளத்தில் குறிப்பிட்ட செய்திக்கான நேரடி இணைப்பு : http://ilakkiyainfo.com/?p=16814

எனவே பெருமாள் அண்ணா தனது செய்தி போல் பில்டப் காட்டி எழுதியிருக்கவில்லை. இது தனது ஆக்கம் அல்ல, இன்னொருவருடையது என புரியும் படியே பதிந்துள்ளார்.

அந்த இணைய தளத்திலும் அடியில் கலையரசன் என்று சுட்டிக்காட்டப்பட்டே எழுதப்பட்டிருக்கிறது. எனவே அத்தளத்தையும் குறை சொல்ல முடியாது.

Edited by துளசி

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

எமது ஆக்கம் அல்லாத பிறரின் ஆக்கங்களை யாழில் இணைக்கும் போது ஆக்கத்துக்குரியவரின் பெயர் அல்லது அந்த ஆக்கம் எங்கிருந்து பெறப்பட்டதோ அதன் இணைப்பை ஆக்கத்துடன் இணைப்பது இங்கு முறை.

நீங்கள் இணைத்த blog இணைப்பில் சென்று பார்க்க அது "கலையரசன்" என்ற நபருடையது என்று புரிகிறது. பெருமாள் அண்ணா இணைத்த செய்தியிலும் அடியில் "கலையரசன்" என்று குறிப்பிட்டு அந்த செய்தியை எந்த இணையத்திலிருந்து பெற்றாரோ அந்த தளத்தின் இணைப்பை இணைத்துள்ளார்.

அத்தளத்தில் குறிப்பிட்ட செய்திக்கான நேரடி இணைப்பு : http://ilakkiyainfo.com/?p=16814

எனவே பெருமாள் அண்ணா தனது செய்தி போல் பில்டப் காட்டி எழுதியிருக்கவில்லை. இது தனது ஆக்கம் அல்ல, இன்னொருவருடையது என புரியும் படியே பதிந்துள்ளார்.

அந்த இணைய தளத்திலும் அடியில் கலையரசன் என்று சுட்டிக்காட்டப்பட்டே எழுதப்பட்டிருக்கிறது. எனவே அத்தளத்தையும் குறை சொல்ல முடியாது.

 

நன்றிகள் ... உங்கள் கருத்துக்களுக்கு..

எனினும் ஒருவருடைய ஆக்கத்தினை பிரதிபண்ணிப் போடும் போது அவருடைய பெயரையும் அது எங்கே இருந்து எடுத்துப் போடப்பட்டுள்ளது என்று என்பதை ஆக்கத்தின் அடியில் குறிப்பிடுவதில் தப்பேதும் இல்லை என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல http://ilakkiyainfo.com/?p=16814 என்ற இணைப்பை இங்கு இடுவது தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தெரிகிறது. ஏனெனில் அவ் ஆக்கம் 'கலையரசன்' என்ற நபருடையது. அக் கட்டுரை 'கலையகம்' என்ற தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனவே ஆக்கத்தின் கீழ் 'கலையரசன்' என்றும் அவருடை 'கலையகம்' தளத்திற்கான இணைப்பும் கொடுத்தலே சரி என நான் நினைக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ... உங்கள் கருத்துக்களுக்கு..

எனினும் ஒருவருடைய ஆக்கத்தினை பிரதிபண்ணிப் போடும் போது அவருடைய பெயரையும் அது எங்கே இருந்து எடுத்துப் போடப்பட்டுள்ளது என்று என்பதை ஆக்கத்தின் அடியில் குறிப்பிடுவதில் தப்பேதும் இல்லை என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல http://ilakkiyainfo.com/?p=16814 என்ற இணைப்பை இங்கு இடுவது தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தெரிகிறது. ஏனெனில் அவ் ஆக்கம் 'கலையரசன்' என்ற நபருடையது. அக் கட்டுரை 'கலையகம்' என்ற தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனவே ஆக்கத்தின் கீழ் 'கலையரசன்' என்றும் அவருடை 'கலையகம்' தளத்திற்கான இணைப்பும் கொடுத்தலே சரி என நான் நினைக்கிறேன்

 

 

 

- கலையரசன்-

இக்கட்டுரை எழுதிய கலையரசனுக்கு நன்றி

kalaiy.blogspot.

தமிழில் இப்படியாண கட்டுரைகள் எழுதுபவர்கள் மனம் நோகக்கூடியதாக நான் ஒன்றும் வாழ்ந்து கிழிக்கபோவதில்லை மன்னித்து கொள்ளுங்கள் தாங்கள் வேண்டிக்கொண்டபடி தற்போது மாற்றபட்டுள்ளது. இத்துடன் இப்பிரச்சினை முடிவுக்குள்ளாகிறது நன்றி வணக்கம் மேற்கொண்டும் உங்களுக்கு திருப்தியில்லாதுவிடின் நிர்வாகத்திடம் முறையிடுங்கள்.

Edited by பெருமாள்

நன்றிகள் ... உங்கள் கருத்துக்களுக்கு..

எனினும் ஒருவருடைய ஆக்கத்தினை பிரதிபண்ணிப் போடும் போது அவருடைய பெயரையும் அது எங்கே இருந்து எடுத்துப் போடப்பட்டுள்ளது என்று என்பதை ஆக்கத்தின் அடியில் குறிப்பிடுவதில் தப்பேதும் இல்லை என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல http://ilakkiyainfo.com/?p=16814 என்ற இணைப்பை இங்கு இடுவது தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தெரிகிறது. ஏனெனில் அவ் ஆக்கம் 'கலையரசன்' என்ற நபருடையது. அக் கட்டுரை 'கலையகம்' என்ற தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனவே ஆக்கத்தின் கீழ் 'கலையரசன்' என்றும் அவருடை 'கலையகம்' தளத்திற்கான இணைப்பும் கொடுத்தலே சரி என நான் நினைக்கிறேன்

பெருமாள் அண்ணா அந்த இணைய தளத்தில் அக்கட்டுரையை பார்த்ததால் அதில் வந்த செய்தி என நினைத்தே பதிவிட்டுள்ளார். அதனால் அதன் இணைப்பை கொடுத்துள்ளார். இந்த blog இல் தான் முதலில் எழுதப்பட்டது என தெரிந்திருந்தால் நிச்சயம் இதன் இணைப்பை குறிப்பிட்டிருந்திருப்பார்.

முகநூலிலும் சரி, இணைய தளங்களிலும் சரி நாளாந்தம் எமது கண்ணில் பல பதிவுகள் படுகின்றன. ஆனால் அவை அப்பதிவர்களது சொந்த ஆக்கமா அல்லது வேறு எங்கிருந்தாவது பிரதியெடுத்து போட்டுள்ளார்களா என எமக்கு தெரியாது. முதலில் பதியப்பட்டது எங்கே என அதை google இல் தேடி பார்த்து விட்டு இங்கு பதியுமளவுக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே நாம் எங்கே காண்கிறோமோ அந்த இணைப்பை இணைத்து அது எமது சொந்த ஆக்கம் அல்ல என்பதை மட்டும் முடிந்தவரை சுட்டிக்காட்டி விட்டு செல்வதுண்டு.

சிலவேளை கலையரசன் என்பவரே தனது blog இலும் எழுதி அந்த இணைய தளத்திலும் பிரசுரிக்க கொடுத்திருந்தாரோ என்பது கூட எமக்கு தெரியாது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் ஆணா.. பெண்ணா?!

 

OlymHera.jpg

கிரேக்க (தற்போதைய Greece) நாகரிகத்தில் ஒலிம்பஸில் சக்தி மிக்க பெண் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட கீரா (HERA) எனும் பெண் கடவுள்.

 

Murugan_16262553_std.jpg

இந்து நாகரிகத்தில் இந்திய உபகண்டத்தில் சக்தி மிக்க தமிழ் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட முருகன் (Murugan) எனும் ஆண் கடவுள்.

இந்திய உபகண்டத்தில் இந்துக்கள் வழிபட்டது போல கிரேக்கர்களும் கடவுள் என்பதை மனித வடிவில் பெண்களாக ஆண்களாக சித்தரித்து வழிபட்டுள்ளனர். இதன் பின்னணிகள் என்ன..??!

 

http://kundumani.blogspot.co.uk/2008/12/blog-post.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கந்தன் - முருகன் இரண்டு தனித்துவமானவர்களை ஒன்றுபடுத்தியதால் வந்த குழப்பமே இது என நினைக்கின்றேன். மழைக்கடவுளாக இருந்தவர் இந்திரன். இந்திரவிழா என்று தமிழர் கொண்டாடியாதாக சிலப்பதிகாரமும் சொல்கின்றது. ஆனால் ஆரியரின் தேவர்களின் அரசனான காமவெறி பிடித்த தெய்வேந்திரனோடு இந்திரன் இணைக்கப்பட்டதால் தமிழர்களின் மழைக் கடவுளான இந்திரன் காணமால் போய்விட்டான். தமிழர்களின் கடவுளாக இருந்த சிவனை வடக்கில் வந்த உருத்திரனோடு இணைத்தார்கள். அதனால் சிவன் ஒரு அழித்தல் கடவுளாக மாறிப் போய்விட்டான். முருகனைக் ஸ்கந்ததோடு இணைத்தர்கள். ஸ்கந்தனை தெய்வேந்திரனின் யானை மகளான தெய்வானையைத் திருமணம் செய்து வைத்தார்கள். தமிழர் தரப்பு வள்ளியை முருகனுக்குச் செய்து வைத்தனர். ஒன்றிணையும்போது இரண்டு மனைவிகள் வந்தனர்.

கந்தனின் மயில் கதையே குழப்பகரமானது. அவர் சூரனைக் கொல்லும்போது தான் அது சேவலும் மயிலுமாக மாறுமாம். அப்போது தான் மயிலை வாகனமாக ஏற்றுக் கொண்டாராம். ஆனால் சிறுவயதில் மாம்பழத்துக்காக மயில் ஏறி உலகினைச் சுற்றி வருவாராம்..சின்ன வயதில் எப்படி மயில் வந்தது என்பதை முதலில் ஆராயுங்கள். அதன் பின்னர் யாசியினர் இந்துக்களா என்பதை ஆராயலாம்.

உருத்திரனைப் போல கிறிக் கடவுள்களில் ஒன்று பேசிடோன் என்று ஒருவர் இருக்கின்றார். அவரிடமும் சூலாயுதம் உள்ளது. ஆனால் அவர் தொழில் வேறு. http://fc00.deviantart.net/fs71/i/2013/260/4/4/poseidon_by_vanesagarkova-d6m9rpo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சொல்வது சைவம் இந்துவுக்குள் அமிழ்ந்துபோன வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் முருகனுக்கும் யாசி இனக்கடவுளுக்கும் தொடர்பு படுத்துவதால் தான் முதலில் ஸ்கந்தனுக்கும் முருகனுக்கும் உள்ள வேற்றுமையைப் புரிய வேண்டும் என்று சொல்ல வந்தேன். மயில் முருகனின் வாகனமான மாறியதே ஆரியத் திணிப்பாக இருக்கலாம். தமிழ் முருகன் மயிலை வாகனமாகக் கொண்டிருந்தார் என்பது தொடர்பாகத் தெரியவில்லை. ஒளவையார் பாடல்களில் மயில் பற்றி ஏதாவது உள்ளதா என்ன? சூரன் போரில் மயில் முருகனுக்கு வாகனமாக ஆனது என்பது தொடர்பான கதை கூட, மயிலை திணித்ததற்கான செயலாகக் கூட இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.