Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த தரப்பின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற நாயாக அலையும் சிவாஜிலிங்கம்

Featured Replies

வடமாகாணசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான 13 மாகாணசபை உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து அவர் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டு சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக நியமிப்பதற்கு அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சிவாஜிலிங்கத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார் என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரெலோ, ஈ,பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய ஒட்டுக்குழுக்களை சேர்ந்த 13 மாகாணசபை உறுப்பினர்களும் ஈ.பி;.டி.பி மற்றும் அரசாங்க கட்சி மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து விக்னேஸ்வரன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றால் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக நியமிக்க உள்ளார் என்றும் சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 9மாகாண ஆட்சிகளும் மகிந்த ராசபக்சவின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அந்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய இயக்கங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 13 உறுப்பினர்கள் மாகாணசபையில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அவர்கள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினால் என்ன நடக்கும் என்பதனை விக்னேஸ்வரன் புரிந்து கொள்ள வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவாஜிலங்கம் இதனைத் தெரிவித்துள்ளார் என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் நகரசபையை இயங்க விடமாட்டேன் என குழப்பம் விளைவித்து வந்த சிவாஜிலிங்கம் மாகாணசபை உறுப்பினராக தெரிவான பின் மாகாண அமைச்சு பதவி தனக்கு தர வேண்டும் என்று அடம்பிடித்து வந்தார். அது கிடைக்காத நிலையில் மகிந்த ராசபக்ச தரப்புடன் இணைந்து வடமாகாண முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கான சதி நடவடிக்கைகளில் சிவாஜிலிங்கம் ஈடுபட்டு வருகிறார் என நம்பகமான தகவல்கள் தெரவிக்கின்றன.

http://www.thinakkathir.com/

  • கருத்துக்கள உறவுகள்

அதிருக்கட்டும். நீங்கள் இணைக்கும் செய்திகள் சிவாஜிலிங்கத்தை வசைபாடுவதாகவும், ஹரியை ஆதரிப்பதாக மட்டுமே இருக்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அனைத்து மாகாணசபைகளையும் தனக்குக் கீழே வைத்திருக்க விரும்புகின்றார். சிவாஜி லிங்கம் விக்கினேஸ்வரனுக்கு விடுத்த எச்சரிக்கையை மகிந்த பயன்படுத்த நினைப்பதில் தவறு இல்லையே.
ஒரு சின்ன மாகாண சபையிலேயே ஒற்றுமையைக் காட்டத் தெரியாத இவர்கள் எல்லோருமே ஒதுங்கி இருப்பது மக்களுக்கு நல்லது.

மேற்படி செய்தியை பார்த்தவுடன் அதிர்ச்சியானதாக இருந்தது. ஆனால் செய்தி மூலம் தினக்கதிர். செய்தியை இணைத்தவர் Gari என்பதை பார்த்தவுடன் உள் நோக்கத்துடன் இணைக்கப்பட்ட செய்தி என்பதை தெரிந்து கொண்டேன். தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒட்டு மொத்தமாக பலப்பட வேண்டும், என்பதே அனைத்து தமிழ்மக்களினதும் விருப்பம். ஆனால் அதில் உள்ள தனது எஜமான விசுவாசத்தில் அவர்களை மட்டும் பலப்படுத்துவதே சிலரின் தொழிலாக உள்ளது.

தினக்கதிரில் வரும் செய்திகள் மூன்றாம் தரமானவை. அதில் வரும் செய்திகளை இணைக்கும் போது அவதானமாக இருக்குமாறும் அதை கறுப்பு பட்டியலில் சேர்க்க ஆலோசித்து வருவதாகவும் நிர்வாகத்தால் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

Edited by tulpen

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அதிருக்கட்டும். நீங்கள் இணைக்கும் செய்திகள் சிவாஜிலிங்கத்தை வசைபாடுவதாகவும், ஹரியை ஆதரிப்பதாக மட்டுமே இருக்கின்ற

நீங்கள் தவற விடும் செய்திகளையும் ,புல்லுருவிகளையும் இரட்டை வேடம் போடும் கபடதரிகளையும் மக்களுக்கு இனம் காட்ட வேண்டிஇதை இணைத்தேன் .தனக்கு வல்வெட்டித்துறை மக்கள் வாக்களித்து தலைவர் பதவியை தரவில்லை என்பதற்காக தனது சொந்த உஊர் மக்களையே பழிவாங்குவதற்கு செயற்பட்ட ஓருவன் தன்னுடைய சுயநலத்திற்காக எதையும் செய்வான் .

[size=5]ஹரி ஆனந்தசங்கரி T N A இக்கு பல உதவிகளை செய்துள்ளார் ,திருகோணமலையின் எல்லைகிராமமான தென்னமரவடி மக்களுடைய புனர்வாழ்வுக்காக தன்னுடைய நண்பர்கள் முலமாக 10000.00டொலர்களை திரட்டித்தந்தார் .தாயக மக்களுக்கு பல உதவிகளை செய்கின்றார் ,அதனால் அவரை ஆதரித்தேன் .

Edited by Gari

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மேற்படி செய்தியை பார்த்தவுடன் அதிர்ச்சியானதாக இருந்தது. ஆனால் செய்தி மூலம் தினக்கதிர். செய்தியை இணைத்தவர் Gari என்பதை பார்த்தவுடன் உள் நோக்கத்துடன் இணைக்கப்பட்ட செய்தி என்பதை தெரிந்து கொண்டேன். தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒட்டு மொத்தமாக பலப்பட வேண்டும், என்பதே அனைத்து தமிழ்மக்களினதும் விருப்பம். ஆனால் அதில் உள்ள தனது எஜமான விசுவாசத்தில் அவர்களை மட்டும் பலப்படுத்துவதே சிலரின் தொழிலாக உள்ளது.

தினக்கதிரில் வரும் செய்திகள் மூன்றாம் தரமானவை. அதில் வரும் செய்திகளை இணைக்கும் போது அவதானமாக இருக்குமாறும் அதை கறுப்பு பட்டியலில் சேர்க்க ஆலோசித்து வருவதாகவும் நிர்வாகத்தால் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

எந்தக்காலத்திலும் எனக்கு நானேதான் எஜமான் ,நீங்கள் உங்களை முன் நிறுத்தி கருத்து எழுதுவது போலுள்ளது ,உங்களுக்கு சிவாஜிலிங்கம் பிதாமகனாக இருந்து வழிகாட்டுபவராக இருக்கலாம் ,எங்களுக்கு இவரெல்லாம் முன்மாதிரியான ஆள் கிடையாது .

இலங்கை இராணுவத்திற்கும் ,இந்திய இராணுவத்திற்கும் கூலிக்கு மாரடித்து அந்த காலகட்டத்தில் மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்த இவர்களெல்லாம் இன்று மனித உரிமை பற்றி குரல் கொடுக்கிறாங்கள் ,மனித உரிமையாளர்களை கொலை செய்த கூட்டம் .வெளிநாட்டு இராஜதந்திரிகள் இப்படியானவர்களை பார்த்து சிரிக்கிறார்கள் .

இவர்கள் மக்களுக்கு சேவைசெய்ய வரவில்லை ,தாங்கள் செய்த தவறுகளுக்கு பரிகாரம் தேடுகிறார்கள் .

http://www.yarl.com/forum3/index.php?/topic/148928-

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.