Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர் ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  ‘‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’ white_spacer.jpg கைகொடுக்கும் கண்வலி கிழங்கு

p10e.jpg‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால்,

‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும்.

ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’!

நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்கும் கிழங்குதான் கண்வலி கிழங்கு. இதைக் கார்த்திகைக் கிழங்கு என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). இதன் கிழங்கும், விதையும் மிகுந்த விஷத்தன்மை உடையவை. ஆகவே, கிராமப்புறத்து காடு, மேடுகளில் எவர் இந்தச் செடியைக் கண்டாலும் ஆவேசம்கொண்டு வெட்டித்தள்ளி விடுவார்கள். இது... பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. இன்றோ, பல விவசாயிகளை தலைநிமிர்ந்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

p10c.jpgதமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திண்டுக்கல், கரூர், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் என்று பல இடங்களில் தீவிரமாக கார்த்திகைக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் விளைச்சல் அதிகம். வெள்ளம் மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக பிற பகுதிகளில் விளைச்சல் குறைந்துவிட, வேதாரண்யம் பகுதியில் விதைகளை வாங்க ஏக போட்டி.

‘எங்களிடம் விதைகளை விற்றால் கிலோவுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும்’ என்று கவர்ச்சிகரமான நோட்டீஸ்களை விநியோகித்து, போட்டிப் போட்டு விதைகளை வாங்கியுள்ளனர் விதை முகவர்கள். 

 

புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ‘‘எனக்கு நிலம், நீச்சு ரொம்பக் கிடையாது. மேட்டுக்காடாயிருந்த கொஞ்ச நிலத்தை வெட்டி சமப்படுத்தி மூணு வருஷமா கார்த்திகை கிழங்கு பயிரிடுறேன். ரெண்டு வருஷத்துக்கு முந்தி பொண்ணைக் கட்டிக் கொடுத்த கல்யாண கடன் அப்படியே இருந்துச்சு, இந்த வருஷம் விதை நல்ல விலைக்குப் போனதால் கடனை மொத்தமா அடைச்சுட்டேன்’’ என்று நெகிழ்ந்து போனவராகச் சொன்னார்.

இதே கிராமத்தின் ஜெயலட்சுமி, ‘‘என் வீட்டுக்காரர் மலேசியா போய் சரியா வேலை கிடைக்காம திண்டாடினாரு. இங்க ரெண்டு பிள்ளைகளை வெச்சுகிட்டு குடும்பம் நடத்த ரொம்பவே சிரமப்பட்டேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்களைப் பார்த்து கார்த்திகை கிழங்கு போட்டேன். முறையா கவனிச்சதால எனக்கு நல்ல லாபம். அந்த பணத்தை வெச்சி புதுசா நிலம் வாங்கியிருக்கேன்’’ என்றார் உற்சாகத்துடன்.

தீவிர விவசாயியான சாமிநாதன், கொஞ்சம் விரிவாகவே பேசினார்.

‘‘கடலோர மணற்பாங்கான பகுதி என்பதால் இங்கு தென்னை, மா, முந்திரிதான் அதிகம். இப்பொழுது எல்லோரும் கார்த்திகை கிழங்கு சாகுபடியில் இறங்கிவிட்டனர். பொதுவாக மணற்பாங்கான இடங்களிலும், செம்மண் பூமியிலும் கார்த்திகை கிழங்கு நன்கு வளர்கிறது. தண்ணீர் தேங்காத, நல்ல வெயில் உள்ள மேட்டுப் பகுதியிலேயே இதைச் சாகுபடி செய்யவேண்டும். கிழங்கு விதைப்பதற்கு முன் சில ஆயத்த வேலைகள் உள்ளன. எவ்வளவு இடத்தில் சாகுபடி செய்யப்போகிறோமோ அந்த இடத்தில் முதலில் பந்தல் போடவேண்டும். கொடி படர்வதற்காக பாகல், புடலைக்கு பின்னுவதுபோல பந்தல் மீது குறுக்கு நெடுக்கில் கயிறு மூலம் பின்னல் அமைக்க வேண்டும். பிறகு 75 செ.மீ. இடைவெளியில் குச்சிகளை நட்டு, பாத்தி அமைத்து உரமிட்டு தண்ணீர் விடவேண்டும்.

p10f.jpgஆயத்தப் பணிகள் முடிந்தபின் கிழங்கை இரண்டாக ஒடித்து ஒவ்வொரு குச்சிக்கு அருகிலும் மூன்று அங்குல ஆழத்தில் விதைக்கவேண்டும். பெரிய கிழங்கு எனில் குச்சிக்கு இரண்டும், சிறிய கிழங்கு என்றால் மூன்றும் விதைக்கலாம். தொடர்ந்து ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். விதைத்த பதினைந்தாவது நாள் முளை விடும். சில சமயம், முளை வந்த கிழங்குகளை விதைப்பதும் உண்டு. செடி வளர ஆரம்பித்ததும் குச்சியோடு சேர்த்துக்கட்டி பந்தலில் விட்டால் கொடியாகப் படரும். மூன்றாவது மாதத்தில் பூ பூக்கும். ஆறாவது மாதத்திலிருந்து காய்களை அறுவடை செய்யலாம். ஒன்பதாவது மாதம் வரை விளைச்சல் இருக்கும்’’ என்றார் சாமிநாதன்.

தோண்டி எடுத்த கிழங்குகளை இரண்டாக ஒடித்து அடுக்கிக் கொண்டிருந்த சிவஞானம், ‘‘மலேசியாவில் வேலை பார்த்துகிட்டிருந்த நான் கார்த்திகை கிழங்குப் பற்றி கேள்விப்பட்டதும், வேலையை உதறிட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்த வருஷம் அமோக விளைச்சல்’’ என்றபடியே நோய்த் தாக்குதல் பற்றி சொன்னார்.

p10.jpg‘‘பச்சைப் புழுவும், கம்பளிப் புழுவும்தான் கார்த்திகைச் செடிக்கு எமன்கள். இலைகளின் அடிப்பகுதியில் பச்சைப் புழுக்களின் முட்டைகள் இருக்கும்பொழுதே கவனித்து அழித்துவிட வேண்டும். செடி பந்தலை அடையும் வரை கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும். பச்சைப் புழுக்களைக் கவனிக்காமல் விட்டால், நூற்றுக்கணக்கில் பெருகி ஒரே இரவில் நுனிக்குருத்தை கபளீகரம் செய்துவிடும். அப்புறம் அந்தச் செடி வளராது, பூக்காது. பூச்சி மருந்துகளை மாதத்துக்கு மூன்று முறை வீதம் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து அடிக்க வேண்டும்.

ஆவணிமாத இறுதியில் விதைப்பைத் தொடங்கலாம். கார்த்திகை மாதத்தில் பூ பூக்கும். அதனாலயேதான் இதற்கு கார்த்திகை பூ என்ற பெயரும் இருக்கிறது. ஒரு செடியில் 20 முதல் 150 காய்கள் காய்க்கும். ஒரு கிலோ எடையுடைய தரமான காய்களில் இருந்து கால் கிலோ விதை கிடைக்கும். புதிதாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய சுமார் 500 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். இத்துடன் கம்பு, கயிறு, ஆள் செலவு, உரம், மருந்து எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் வரை செலவாகும். ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ வரை விதைகள் மகசூலாகக் கிடைக்கும். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டால் இந்த அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது. விதைக்கிழங்கு மூலமாகவும் உபரி வருமானம் கிடைக்கும். ஆகக்கூடி மூன்று முதல் நான்கு லட்சம் வரை லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

p10b.jpgசெம்போடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், விதைகளை வாங்கும் முகவராகவும் இருக்கிறார். அவர், ‘‘கார்த்திகைக் கிழங்கு, கண்வலி கிழங்கு, குரங்குப்பூ என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவப் பயிர். சென்ற ஆண்டு கிலோ ஐநூறு ரூபாய்க்கு விதைகளை வாங்கினோம். இந்த ஆண்டு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு வாங்கியுள்ளோம்.

அதிக அளவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கே விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலி மிக அதிக அளவிலும் அதற்கடுத்து நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளும் இந்த விதைகளை கொள்முதல் செய்கின்றன.

தமிழ்நாடு, அந்தமான் மற்றும் இலங்கையில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவில் டெல்லி, பாம்பே, ஓசூர், ஹைதராபாத் நகரங்களில் விதை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்திலிருந்து வாங்கப்படும் விதைகள் இங்கு அரைக்கப்பட்டு, பவுடராக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது. ஆண்டுக்கு 700 முதல் 1,000 டன் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால் விதைகளுக்கு கிராக்கி இருக்கிறது'' என்று சொன்னவர்,

''இந்தப் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்தால் கூடுதல் லாபம் பார்க்கமுடியும். வேதாரண்யம் பகுதியில் கடற் காற்று அதிகமாக இருப்பதால் மகரந்தசேர்க்கை தானாகவே நடந்துவிடுகிறது. ஆனால், மற்ற இடங்களில் அது அவ்வளவாக நடப்பதில்லை. அதனால் ஒரு p10g.jpgசெடியிலிருக்கும் பூவிலிருந்து எடுத்து, மற்றொரு செடியிலிருக்கும் பத்து பூக்களுக்கு மகரந்த சேர்க்கை செய்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். சாகுபடியோடு தேனீ வளர்ப்பையும் மேற்கொண்டால் அயல் மகரந்த சேர்க்கைக்கு வசதியாக இருக்கும்.

ஒரு முறை நடவு செய்தால், எட்டு முறை கூட மகசூல் பார்க்கலாம். ஆனால், வேதாரண்யத்தைப் பொறுத்தவரை மணற்பாங்கான பூமி என்பதால், ஒவ்வொரு முறையும் புதுக்கிழங்குதான் விதைக்கப் படுகிறது. அப்படியே விட்டுவைத்தால், வெப்பத்தின் காரணமாக கிழங்கு வீணாகிவிடும் என்பதுதான் காரணம்.

ஆரம்பத்தில் சேலம் பகுதியில் அதிக அளவில் இது பயிராகி பலரையும் வாழ வைத்தது. ஒரு கட்டத்தில் திடீரென விலை வீழ்ந்துபோகவே, அதை விவசாயிகள் கைவிட்டனர். பத்து ஆண்டு களுக்குப் பிறகு தற்போதுதான் விலை உயர்ந்தி ருக்கிறது. அதனால் தற்போது சாகுபடி பரப்பும் கூடியிருக்கிறது. எனவே வரும் காலத்தில் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், மழை வெள்ளம் காரணமாக ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்பட்டால் விலை உயரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, விவசாயிகள் நாலும் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு பயிரிடுவது நல்லது'' என்று சொன்னார். (தொடர்புக்கு செல்: 94423-99141, 04369-276121).

 

 

வயாகராவெல்லாம் உடான்ஸ் !

p10a.jpgநாகை மாவட்ட தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் ரஷீது, கண்வலி கிழங்கு பற்றி பேசும்போது, ''இதன் கிழங்கு மற்றும் விதையிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தொழுநோய், மூட்டுவலி உட்பட பலவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கிழங்கில் இருப்பதை விட, விதைகளில் இரு மடங்கு வீரியம் அதிகம். அதன் காரணமாகத்தான் விதைகளை அதிக அளவில் வாங்குகிறார்கள்.

இதை நேரடியாகச் சாப்பிட்டால்தான் விஷம். இதிலிருந்து வயாகரா தயாரிக்கிறார்கள் என்று சொல்வது தவறு. கிழங்குகளை நிலத்தில் அப்படியே விட்டுவிடக் கூடாது. பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். அப்படியே விட்டுவிட்டால் நிலத்தின் தன்மை லேசாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்காக ஒரேயடியாக பயப்பட வேண்டியத் தேவையில்லை. நிலத்தின் தன்மையையே மாற்றிவிடும்... நிலமே விஷமாகிவிடும் என்று சொல்வதெல்லாம் உண்மையல்ல. இது ஒரு மூலிகைப்பயிர் என்பதால் நிலத்துக்கு நன்மையைத்தான் தரும்'' என்று சொன்னார்.

 

 

என்னென்ன உரங்கள்?

இது மூலிகைப் பயிர் என்பதால் இயற்கை உரம் போடுவதுதான் நல்லது. வைக்கோல் மடிசல், இலுப்பை சருகு, சாணம் ஆகியவற்றை இயற்கை உரங்களாகப் பயன்படுத்தலாம். இது கிடைக்காதவர்கள் 50:30:20 விகிதத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் உள்ள உரங்களைப் பயன்படுத்தலாம். செடி வளரும் பருவம், கிளைவிடும் பருவம், பூக்கும் பருவம் என்று மூன்று பருவங்களில் இந்த உரங்களைப் போடவேண்டும்.

http://www.vikatan.com/

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இதனை தேசிய மலராக அறிவித்த போது சிங்கள.. ஹிந்திய ஊடகங்கள்.. சயனைட் குப்பியை நினைவு படுத்தவே நச்சுச் செடியை ஞாபக சின்னம் ஆக்குகிறார்கள் என்று சொல்ல.. சில மேற்குலக ஊடகங்களும் அதற்கு வக்காளத்து வாங்கின.

 

இன்று..?????????! :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.