Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள்

Featured Replies

ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள்

 

.

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார்.

 

"தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்.

நெருக்கமான சில போட்டிகளை நாம் தோற்றது என்னை மிகவும் காயப்படுத்தியது, அச்சமூட்டக்கூடியதாக அந்தத் தோல்விகள் அமைந்தன. தோல்விகளிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையே என்னை விட்டுப் போய் கொண்டிருந்தது. ஒரு சமயத்தில் கிரிக்கெட்டை விட்டே போய் விடலாம் என்று சீரியசாக யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றார்.

 

சச்சின் டெண்டுல்கர் 1997-ஆம் ஆண்டு கேப்டனாக மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்த போது பெற்ற தோல்விகளே அவரை இந்த முடிவுக்கு வரவைத்தது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை டிரா செய்த இந்தியா 3-வது டெஸ்ட்டில் ஒரு அரிய வெற்றி வாய்ப்பைப் பெற்றது. இலக்கு 120 ரன்களே. ஆனால் இந்தியா அதிர்ச்சிகரமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. லஷ்மண் தவிர ஒருவரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

இந்த தோல்வி குறித்து சச்சின் கூறும்போது, “மார்ச் 31, 1997- அந்தத் திங்கட் கிழமை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாள். என்னுடைய கேப்டன்சி வாழ்வில் மிகவும் மோசமான தினம். முதல் நாள் இரவு பார்படாஸில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் உணவு விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்த போது, வெயிட்டர் ஒருவர் மேற்கிந்திய அணி வெற்றி பெறும் என்று உறுதியாக என்னிடம் கூறினார். கர்ட்லி ஆம்புரோஸ் இந்திய அணியை பவுன்ஸ் செய்து வீழ்த்திவிடுவார் என்று என்னிடம் அவர் கூறினார்.

 

நான் கூட அதற்கு விளையாட்டாக பதில் கூறினேன், அதாவது முதல் இன்னிங்ஸில் பிராங்க்ளின் ரோஸ் எனக்கு பவுன்சர் வீசினார். அதனை ஸ்டாண்டிற்கு அடித்தேன். எனவே ஆம்புரோஸ் எனக்கு பவுன்சர் வீசினால் அந்தப் பந்தை ஆன்டிகுவாவுக்கே அடிப்பேன் என்று கூறினேன்.

மேலும் அங்கிருந்த ஃபிரிட்ஜைக் காட்டி அதில் ஷாம்பெய்ன் பாட்டில் ஒன்றை வையுங்கள், நாளை இந்தியா வெற்றி பெற்றவுடன் நான் அதனைத் திறப்பேன், கொண்டாடலாம் என்றேன்.

 

ஆனால் 81 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தோம். அதுபோன்ற மோசமான பேட்டிங்கிற்கு மன்னிப்பே கிடையாது. அது ஒரு கடினமான பிட்ச் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அது என்னுடைய வழியல்ல. இருந்தாலும், இது போன்று தோல்வியடைந்த ஒரு அணியில் நான் இருந்தேன், நான் பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக மோசமான பேட்டிங் வீழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை இப்போது நினைத்தாலும் பதறுகிறது.

 

நானே அந்த டெஸ்ட் போட்டியில் 4 ரன்களுக்கு அவுட் ஆனேன். பந்தை தொட வேண்டும் என்ற ஆவலில் ஆடப்போக எட்ஜ் எடுத்தது. நான் அந்தப் பந்தை விட்டிருக்க வேண்டும், அல்லது எதிர்தாக்குதல் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். இந்தத் தோல்வியால் வெகுவாக உடைந்து போனேன், 2 முழுநாட்கள் எனது அறையின் கதவைத் திறக்காமல் முடங்கிப் போனேன். இன்றும் கூட அந்தத் தோல்வி என் மனத்தை பதைபதைக்கச் செய்கிறது.

5 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 0-1 என்று இழந்து ஒருநாள் போட்டித் தொடருக்குச் சென்றோம். ஆனால் அதிலும் தோல்வி கண்டோம். அதிலும் 3-வது ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வி என்னை மேலும் அச்சுறுத்தியது. செயிண்ட் வின்செண்டில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 47 ரன்கள் தேவை. 6 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ராகுல் திராவிடும், கங்குலியும் வெற்றிக்கான களத்தை அமைத்துக் கொடுத்தனர்.

 

ஆனால் நான் எவ்வளவோ பெரிய ஷாட்களுக்குச் செல்ல வேண்டாம், ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது நிதானமாக ஆடினாலே வெற்றி பெறலாம் என்று வீரர்களுக்கு கூறினேன், ஆனால் பின்கள வீரர்கள் தொடர்ந்து பந்தை மேலே தூக்கி அடித்து வீழ்ந்தனர். தற்கொலைக்குச் சமமான ரன் அவுட்கள் வேறு. வெற்றி பெறும் நிலையிலிருந்து அணி தோல்வியடைந்தது எனக்கு கடும் கோபத்தைக் கிளப்பியது.

ஆட்டம் முடிந்து வீரர்களை அழைத்துக் கூட்டம் கூட்டினேன், அன்று நான் எனது ஓர்மையை இழந்து வீரர்களிடத்தில் சத்தம் போட்டேன். நான் இதயபூர்வமாக பேசினேன், இந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றேன். எதிரணியினர் சிறந்த முறையில் ஆடி நாம் தோற்றால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வி அடைவது அணியினரிடத்தில் சீரியசான பிரச்சினை இருப்பதாகவே என்னை நினைக்க வைத்தது.

 

நான் அந்தத் தோல்விக்குப் பிறகு மிகவும் சோர்வடைந்தேன், அன்று மாலை அனில் கும்ப்ளேவும், ஸ்ரீநாத்தும் என் அறைக்கு வந்து என்னைத் தேற்றினர். தோல்விகளுக்கு என்னை நானே குற்றம்காணக்கூடாது என்று என்னிடம் அவர்கள் இருவரும் கூறினர், ஆனாலும் என் மீது தோல்வி விழுந்து அழுத்தவே செய்தது.

என் மனைவி அஞ்சலிதான், எல்லாம் சரியாகி விடும், வரும் மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஆறுதல் கூறினார். திரும்பிப் பார்க்கும்போது எனக்கு தோல்விகள் வெறுப்பாகவே உள்ளது” என்று தன் சுயசரிதையில் அந்தத் தொடர் பற்றி எழுதியுள்ளார் சச்சின்.

இந்த சுயசரிதை நூலை அவர் கிரிக்கெட் எழுத்தாளர் போரியா மஜும்தாருடன் இணைந்து எழுதியுள்ளார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6560954.ece

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

திராவிடை நீக்க முயன்றார் கிரெக் சாப்பல்: சுயசரிதையில் சச்சின் அதிர்ச்சித் தகவல்
 

 

2007 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு ராகுல் திராவிடை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் முயன்றார் என்று தனது சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர் அதிர்ச்சித் தகவலை பதிவு செய்துள்ளார்.

அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல், சச்சின் டெண்டுல்கர் வீட்டுக்கு வந்த போது, “நாம் இருவரும் (அதாவது சச்சின், சாப்பல்) இந்திய கிரிக்கெட்டை பல ஆண்டுகளுக்கு வழி நடத்தலாம், திராவிடிடமிருந்து எனக்கு கேப்டன்சியைப் பெற்றுத் தர உதவி புரிகிறேன்” என்று சாப்பல் தன்னிடம் கூறியதைக் கேட்டு தான் கடும் அதிர்ச்சியடைந்ததாக சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’-யில் பதிவு செய்துள்ளார்.

கிரெக் சாப்பல் மீது சச்சின் டெண்டுல்கர் கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்:

 

"ஒரு ரிங்மாஸ்டர் போல் வீரர்கள் மீது தனது எண்ணங்களைத் திணித்தார். அவர்கள் இது பற்றி வசதியாக உணர்கிறார்களா, சங்கடமாக உணர்கிறார்களா என்பதைப் பற்றிய சிறு கரிசனை கூட அவரிடம் இருக்கவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு வந்தார் கிரெக் சாப்பல், நான் திகைக்கும் விதமாக ஒன்றை தெரிவித்தார். ராகுல் திராவிடிற்குப் பதிலாக நான் கேப்டன்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

எங்களுடன் இருந்த என் மனைவி அஞ்சலி அவர் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதாவது நாமிருவரும் இந்திய கிரிக்கெட்டை சில ஆண்டுகள் வழிநடத்தலாம் என்று கூறியதைக் கேட்டு உண்மையில் அதிர்ச்சி அடைந்தோம்.

கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடர் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அணியின் கேப்டனுக்கு அவர் கொஞ்சம் கூட மதிப்பளிக்கவில்லை என்பது எனக்கு திகைப்பூட்டியது.

 

2 மணி நேரம் அவர் என்னை வற்புறுத்தினார். நான் முடியாது என்றவுடன் சென்று விட்டார்.

இதற்கு சில நாட்கள் கழித்து நான் பிசிசிஐ-யிற்கு இது பற்றி எழுதும்போது, உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது பயிற்சியாளர் கிரெக் சாப்பல் வருவது நல்லதல்ல என்று பரிந்துரை செய்தேன்.

ஆனால் அது நடக்கவில்லை. 2007 உலகக் கோப்பை பெரும் தோல்வியில் முடிந்தது. இந்திய கிரிக்கெட் சாப்பல் பயிற்சியின் கீழ் ஒரு அடி கூட நகரவில்லை என்று நான் கூறினால் நான் ஓரளவுக்குச் சரியாகக் கூறுவதாகத்தான் அனைவரும் உணர்வர்.

மூத்த வீரர்களின் நேர்மையை சந்தேகித்தார். எங்களது அர்ப்பணிப்பை கேள்விக்குட்படுத்தினார். என்ன காரணம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் மூத்த வீரர்களை நியாயமாக நடத்தவில்லை.

 

சவுரவ் கங்குலியால்தான் அவர் பயிற்சியாளரானார் என்பதை அவர் பல முறை பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்காக கங்குலியை வாழ்நாள் முழுதுன் ஆதரிக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல என்பதையும் அவர் நேரடியாகவே பதிவு செய்தார்.

உண்மையைக் கூற வேண்டுமெனில், இந்த நாடு உற்பத்தி செய்த மிகச்சிறந்த வீரர்களில் சவுரவ் கங்குலியும் ஒருவர். எனவே அவர் அணியில் நீடிக்க சாப்பல் போன்றவர்களின் ஆதரவோ, பரிந்துரையோ தேவையில்லை.

மூத்த வீரர்கள் அனைவரையும் அவர் அணியை விட்டே அனுப்ப நினைத்தார். இதன் மூலம் அணியில் இருந்த ஒத்திசைவைக் குலைத்தார். ஒருமுறை லஷ்மணை தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றார்.

 

ஆனால் லஷ்மண் அதனை அமைதியாக மறுத்தார். அதற்கு கிரெக் சாப்பல் அளித்த பதில்தான் எங்களுக்கு ஆச்சரியமளித்தது, அவர் லஷ்மணிடம் ஜாக்கிரதையாக இருங்கள், 32 வயதில் அணியில் மீண்டும் வந்து ஆடுவது கடினம் என்றார்.

பின்னால் நான் தெரிந்து கொண்டேன், கிரெக் சாப்பல், மூத்த வீரர்கள் அனைவரையும் அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் பேசியுள்லார் என்பதை அறிந்தேன்.

2007 உலகக் கோப்பை முடிந்த பிறகு நாங்கள் இந்தியா திரும்பினோம். ஊடகத்துறையினர் என் வீடு வரை வந்தனர். நம் நாட்டைச் சேர்ந்தவர்களே வீரர்களின் கடமை உணர்வை சந்தேகித்தது எனக்கு காயத்தை ஏற்படுத்தியது. எங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்று கூறுவது நியாயமாகாது.

 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பது அப்போது உண்மைதான், அதற்காக எங்களை துரோகிகள் போல் சித்தரிப்பதா. சில சமயங்களில் எதிர்வினை மிகவும் காழ்ப்புடன் இருந்தது, சில வீரர்கள் தங்கள் பாதுகாப்பை குறித்துக் கூட அச்சப்படத்தொடங்கினர்.

எண்டுல்கர் (Endulkar) என்று தலைப்பிட்ட செய்திகள் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தின. 18 ஆண்டுகால அயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு இது போன்று பெயர் அளிப்பது காயம் ஏற்படுத்தியது. ஓய்வு அறிவித்து விடலாம் என்று என் மனதில் தோன்றியது. ஆனால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு உற்சாகமூட்டினர். நான் சில நாட்கள் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டேன், அதாவது உலகக் கோப்பை தோல்வியை மண்டையிலிருந்து வேர்வையாக வெளியேற்ற ஓடினேன்.”

இவ்வாறு தன் சுயசரிதை நூலில் சச்சின் கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6561350.ece

 

  • தொடங்கியவர்

சச்சின் டெண்டுல்கருக்கு கிரெக் சாப்பல் மறுப்பு
 

 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் இருந்த போது, அப்போதைய கேப்டன் ராகுல் திராவிடை நீக்க அவர் முயற்சி செய்தார் என்று சச்சின் தனது சுயசரிதை நூலில் கூறியிருப்பதை கிரெக் சாப்பல் மறுத்துள்ளார்.

சச்சின் வீட்டிற்கு ஒருநாள் வந்திருந்த கிரெக் சாப்பல், சச்சினிடம், கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொள்ளுமாறும், திராவிடிடமிருந்து கேப்டன்சியை மாற்றி சச்சினிடம் தர உதவி செய்வதாகவும் அவர் கூறியதைக் கேட்டு தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று சச்சின் குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சாப்பல் காலக்கட்டத்தில் இந்திய அணி சீரழிவைச் சந்தித்தது என்றும் சச்சின் கடுமையாக தனது சுயசரிதையில் சாடியிருந்தார்.

 

இதில் திராவிடை நீக்கும் முயற்சி பற்றிய சச்சின் கருத்திற்கு மட்டும் மறுப்பு வெளியிட்டுள்ளார் கிரெக் சாப்பல்:

நான் சொற்போரில் ஈடுபட விரும்பவில்லை. என்னுடைய பயிற்சிக் காலக்கட்டத்தில் நான் ராகுல் திராவிடை நீக்கவோ, சச்சினை கேப்டனாக்கும் முயற்சிகளையோ மேற்கொள்ளவில்லை. எனவே சச்சின் நூலில் இவ்வாறு வந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

 

என்னுடைய பயிற்சி காலக்கட்டத்தில் சச்சின் வீட்டிற்கு ஒரு முறைதான் சென்றேன். அதுவும் உடற்பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர் ஆகியோருடன் சென்றேன். சச்சின் காயமடைந்து குணமாகும் காலக்கட்டத்தில் இருந்தார். இந்தச் சந்திப்பு அந்த புத்தகத்தில் கூறப்பட்ட காலத்தில் அல்ல, மாறாக அதில் கூறப்பட்டிருப்பதற்கு சுமார் 12 மாதங்களுக்கு முன்பாக சச்சின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் நன்றாக, மகிழ்ச்சியுடன் உரையாடினோம், கேப்டன்சி பற்றிய விவகாரம் அங்கு எழவில்லை”

என்று சாப்பல் மறுத்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6563719.ece

 

  • தொடங்கியவர்

திராவிடால் கிரெக் சாப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை: கங்குலி
 

 

சச்சின் சுயசரிதை கிளப்பியுள்ள சர்ச்சை இப்போது முற்றியுள்ளது. கிரெக் சாப்பல் பற்றி சச்சின் கூறியது முற்றிலும் உண்மைதான். சச்சின் போன்ற நம்பகமான ஒருவர் உண்மையை இப்படி உடைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் திராவிடால் அப்போது பயிற்சியாளர் கிரெக் சாப்பலை கட்டுப்படுத்த முடியவில்லை, என்கிறார் கங்குலி.

"நான் உண்மையில் அந்தக் காலகட்டத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அது எப்படி இருந்தது என்பது அப்போது ஆடப்பட்ட போட்டிகளின் முடிவுகளே தெரிவிக்கும். கிரெக் சாப்பல் பயிற்சிக் காலம் இந்திய கிரிக்கெட்டின் மிக மோசமான காலம். குறிப்பாக எனக்கு மிக மோசமாக அமைந்தது. பொய்கள் மேல் பொய்கள், பிறகு 6 மாதங்கள் சென்று ராகுல் திராவிடை நீக்கி விட்டு சச்சினை கேப்டனாக்க விரும்பியுள்ளார். இதுவே அவர் எப்படி தனது பயிற்சியாளர் பணியை செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது.

 

2007 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. நான் அணிக்குள் மீண்டும் வந்த போது நீண்ட நாட்கள் கழித்து இப்படி இப்படியெல்லாம் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று ராகுலிடம் விளக்கினேன். அவர் தானும் இவற்றையெல்லாம் அறிவேன், ஆனால் கிரெக் சாப்பலை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.

 

2005 நவம்பர்-டிசம்பரில் நான் எனது கேப்டன்சியை இழந்தேன். ராகுல் கேப்டன் ஆனார். இவரை கேப்டனாக்கிய 8 மாதங்களுக்குப் பிறகு சச்சினை கேப்டனாக்க முயன்றிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் எவ்வளவு சேதத்தை விளைவித்தார் என்பதை இது அறிவுறுத்துகிறது. இது அவருடைய குணச்சித்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. கங்குலியாக இருந்தாலும் திராவிடாக, சச்சினாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சாப்பல் என்ற மனிதரை நம்பத்தகுந்தவர் இல்லை என்றே கூறுவார்கள்.

சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை நூலை எழுதியுள்ள விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் பங்களிப்பு அபரிமிதமானது. அவருடைய சுயசரிதை இன்று பலரது கண்களையும் திறக்கும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் சச்சின், இது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி.

 

அப்போது என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் எழுதப்பட்டன, நான் என் கேப்டன்சியை இழந்தேன். பிறகு அணிக்குள் வந்தேன் விளையாடினேன். ஆனால் அந்தக் காலக்கட்டம் எனக்கு நன்றாக அமையவில்லை. சச்சின் போன்ற ஒரு நம்பகமானவர் இதைப் பற்றி எழுதியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருநாள் எனக்கு நடந்ததையும் நான் எழுதுவேன். அப்போது ஜிம்பாவே தொடர் முதல் அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுக்கு நான் எதுவும் பேசாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இப்போது சச்சின் அதனைச் செய்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றி கங்குலி பொரிந்து தள்ளியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/article6563763.ece

 

  • தொடங்கியவர்

சச்சின் கூறியது உண்மைதான்: சொல்கிறார் ஹர்பஜன் சிங்
நவம்பர் 03, 2014.

 

புதுடில்லி:‘‘சாப்பல் குறித்து சச்சின் கூறியது உண்மைதான். இந்திய கிரிக்கெட் அணியை சாப்பல் சீர்குலைத்தார்,’’ என, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறினார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இந்தப்புத்தகம் நாளை வெளியாகிறது.

இதில் சச்சின், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளராக இருந்த சாப்பலை பற்றி சில விஷயங்கள் தெரிவித்துள்ளார். அதில்,‘‘ கடந்த 2007ல் உலக கோப்பை தொடர் துவங்க ஒரு மாதம் இருக்கும் போது,  எனது வீட்டுக்கு சாப்பல் வந்தார். அப்போதைய கேப்டன்  டிராவிட்டிடம் இருந்து பதவியை பறித்து விட்டு, அதை நான் ஏற்க வேண்டும் என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்,’’ என தெரிவித்திருந்தார்.

 

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியது: முன்னாள் பயிற்சியாளர் சாப்பல் குறித்து சச்சின் கூறிய கருத்துகள் உண்மை. வீரர்களுக்கு இடையில் மோதலை துாண்டிவிட்டார். தவிர, வீரர்களுக்கு இடையிலான நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தினார். இதன் மூலம், அவரது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். இந்திய அணியை சீர்குலைத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415036703/ChappellsoughttoremoveDravidTendulkar.html

  • தொடங்கியவர்

என்னை அணிக்கு திரும்பவிடாமல் தடுத்தார் கிரேக் சாப்பல்: ஜாகீர்கான் கடும் தாக்கு
 

 

நான் பயிற்சியாளராக இருக்கும் வரை நீங்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாது என முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சாப்பல் என்னிடம் தெரிவித்தார். அவர் பயிற்சியாளராக இருந்த தருணம் இந்திய கிரிக்கெட்டின் இருண்டகாலம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது சுயசரிதையான “பிளேயிங் இட் மை வே” என்ற புத்தகத்தில் 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக திராவிடை கேப்டன் பதவியிலிருந்து நீக்க கிரேக் சாப்பல் முயற்சித்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கும் நிலையில், ஜாகீர்கான் மேலும் கூறியிருப்பதாவது:

 

2005-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சாப்பல், ஒரு முறை என்னிடம் வந்து நான் பயிற்சியாளராக இருக்கும் வரை நீங்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாது என்றார். அப்போது நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை? அவரை எதிர்ப்பதா? நடந்த விஷயம் பற்றி கேப்டனிடம் சொல்வதா? சாப்பல் சொல்வதை சரி என ஏற்றுக்கொள்வதா? அவர் ஏன் என்னிடம் இப்படி பேசுகிறார் என எதுவுமே தெரியாமல் நிலைகுலைந்து போனேன்.

 

இந்திய கிரிக்கெட்டில் 2005 முதல் 2007 வரையிலான காலம் மிகவும் மோசமான இருண்ட காலம். சாப்பலின் திட்டத்துக்கு தலையை ஆட்டாவிட்டால் அணியிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் அப்போது புரிந்துகொண்டேன். அணியில் மூத்த வீரர்களுக்கும் சாப்பலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவியது. ஓர் ஆண்டுகாலம் அணியில் இல்லாமல் இருந்த நேரத்தில் நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு முயற்சித்தபோது அதை பல வழிகளில் தடுக்க சாப்பல் முயற்சித்திருக்கிறார்.

எனது பெயர் தேர்வுக்குழுவில் விவாதிக்கப்பட்டபோதெல்லாம் 3 அல்லது 4 மாதம் கழித்து அவரை சேர்த்து கொள்ளலாம் என சாப்பல் கூறியதை பின்னர் தெரிந்துகொண்டேன். நான் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தபோது சாப்பலால் ஏற்பட்ட கசப்பான விஷயங்களை தவிர்த்துவிட்டு சிறப்பாக விளையாடுவது என முடிவு செய்தேன். ஏனெனில் நான் பாதுகாப்பற்ற எண்ணத்தோடு விளையாட விரும்பவில்லை.

உலகக் கோப்பை போட்டிக்கு முந்தைய 4 மாதத்தில் அவருடன் நாங்கள் பெரிய அளவில் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் போராட்டத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டதையும், சாப்பல் தனது தோல்வியை நினைத்து போராடிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன்.

 

இந்திய வீரர்களை மட்டுமல்ல, இப்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் சாப்பலை பற்றி என்ன நினைக்கிறார்கள் என அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் சொல்வதற்கும், அவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என நான் சவால் விடுக்கிறேன்.

2008-ல் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக கிரேக் சாப்பல் இருந்தார். அவரை டிரெஸ்ஸிங் அறையில் பார்த்தபோது கொந்தளித்துப் போனேன். அந்த கோபம்தான் அந்தத் தொடரில் நான் சிறப்பாக செயல்படவும், என்னை நிரூபிக்கவும் உதவியது என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6564262.ece

 

எவ்வளவோ திறமையான  பழைய இந்திய விளையாட்டு வீரர்களை இருக்கத்தக்க வெள்ளைகள் பயிற்சியார்களாக இருக்கவேண்டும் என்றுதான் இந்திய கிரிக்கெட் டீம் இன்றுவரை நினைக்கின்றது .

 

  • தொடங்கியவர்

சாப்பல் அனுப்பிய சர்ச்சை ‘இ–மெயில்’ * ரகசியத்தை சொல்கிறார் ஹர்பஜன்
நவம்பர் 04, 2014.

 

புதுடில்லி: ‘தனது பயிற்சி காலத்தில் இந்திய கிரிக்கெட்டினை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றார் கிரெக் சாப்பல். அப்போதைய கேப்டன் கங்குலிக்கு எதிராக ‘இ–மெயில்’ அனுப்பினார்,’’ என,  ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. இவரது ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை, நாளை வெளியாகிறது. இதில் இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

‘இவை அனைத்தும் உண்மை தான்,’ என, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியது:

சாப்பல் குறித்து சச்சின் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மை தான். இவர் இந்திய கிரிக்கெட்டினை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றார். இந்திய அணியிலுள்ள சில வீரர்கள், இவரது ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக செயல்பட்டனர்.

 

அணியில் பிளவு:

இவர்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து, மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். அதிலும் சிலர், சாப்பல் தான் உலகம் என, கண்ணை மூடிக் கொண்டு அவரை பின்பற்றினர். இந்த வீரர்கள் யார் யார் என்பதை சரியான நேரம் வரும் போது வெளியிடுவேன்.

 

இருவரும் அதிர்ச்சி:

ஜிம்பாப்வேக்கு எதிரான புலவாயோ டெஸ்டில் (2005), அப்போதைய கேப்டன் கங்குலி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பயிற்சியாளர் என்ற முறையில் இதைக் கண்காணிக்காமல், ‘டிரஸ்சிங் ரூமில்’ உட்கார்ந்து, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) ‘இ–மெயில்’ அனுப்பினார் சாப்பல்.

அவரது அருகில் இருந்த எனக்கு அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. சாப்பல் ‘வாஷ் ரூமிற்கு’ சென்ற பின், அவரது ‘லேப்– டாப்’ திறந்து இருந்தது. அனைவரும் அந்த ‘இ–மெயிலை’ பார்க்கலாம். அதில், கங்குலிக்கு எதிரான விவரங்களை பார்த்து அதிர்ந்தேன். கங்குலி வந்ததும் இதுகுறித்து தெரிவித்தேன். அவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.

 

7 வீரர்கள் இலக்கு:

சாப்பல் இந்திய அணியில் இருந்து 7 வீரர்களை வெளியேற்ற வேண்டும் என, விரும்பினார். அவரது முதல் இலக்கு கங்குலி. அடுத்து நான், பிறகு சேவக், நெஹ்ரா, ஜாகிர் கான், யுவராஜ் என, பட்டியல் நீளுகிறது.

 

நம்ப மாட்டோம்:

இவரது பயிற்சியில் பங்கேற்கும் போதெல்லாம் வீரர்களுக்குள் ஒருவித பய உணர்வு இருக்கும். எங்களது கருத்துக்கள், மனவேதனையை பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், வீரர்களில் ஒருவருக்கு ஒருவர் நம்பமுடியாத நிலை இருந்தது.

 

சிண்டு முடிந்தார்:

மொத்தத்தில், ஒரு சிறிய இடத்தில் அடைபட்டு, எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் தான், நாங்கள் இருந்தோம். வீரர்களுக்குள் சிண்டு முடிந்து, தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்ட சாப்பல், பி.சி.சி.ஐ., முன்னாள் நிர்வாகிகள் சிலரையும் தனக்கு ஆதரவாக வைத்துக் கொண்டார்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

 

வாழ்த்த வாய் வராது

ஹர்பஜன் கூறுகையில்,‘‘ 2006 ல் கிங்ஸ்டன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 103 ரன்னுக்கு சுருண்டது. இதில் 13 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினேன். ‘டிரசிங் ரூம்’ திரும்பிய போது, எனது பவுலிங் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. மாறாக, என்னை அவமானப்படுத்தும் வகையில் மற்றொரு வீரரை வாழ்த்தினார். ஏனெனில், என்னை எப்படியும் நீக்கி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருந்தார்,’’ என்றார்.

 

கங்குலி கோட்டையை தகர்த்தார்

கங்குலி குறித்து ஹர்பஜன் கூறுகையில்,‘‘ கடந்த 2001 முதல் 2005 வரை இந்திய அணியை சிறப்பான முறையில் முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்தார் கேப்டன் கங்குலி. ஆனால், பயிற்சியாளர் சாப்பல், இந்த கோட்டையை ஒட்டுமொத்தமாக தகர்த்தார்,’’ என்றார்.

 

ஜாகிரும் ‘வாருகிறார்’

சாப்பல் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் கூறுகையில்,‘‘ சாப்பல் பயிற்சியாளராக இருந்த இரண்டு ஆண்டுகள் (2005–07), இந்திய கிரிக்கெட்டில் கறுப்பு நாட்கள். அணிக்கு பொறுப்பேற்ற பின் என்னிடம் வந்து,‘ நான் பயிற்சியாளராக இருக்கும் வரை, இந்தியாவுக்காக நீங்கள் விளையாட முடியாது,’ என்ற இவர், எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முயன்றார்,’’ என்றார்.

 

சாப்பல் மறுப்பு

சச்சின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து சாப்பல் கூறுகையில்,‘‘ எனது பயிற்சிக் காலத்தில் ஒரு முறை மட்டுமே சச்சின் வீட்டுக்கு சென்றேன், உலக கோப்பை தொடருக்கு ஒரு ஆண்டுக்கு முன், காயத்தில் மீள மறு வாழ்வுப் பயிற்சியில் இருந்த அவரை, துணைப்பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுடன் சென்று சந்தித்தேன். மற்றபடி, ஒருபோதும் டிராவிட்டுக்குப் பதில் சச்சினை கேப்டனாக்கும் முயற்சியில் ஈடுபட்டதில்லை,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415119505/Chappellharbhajanindiacricket.html

  • தொடங்கியவர்

"சேப்பலை பற்றி சச்சின் சொன்னது உண்மைதானுங்கோ..." இலங்கை அணியில் இருந்தும் ஆதரவு 

 

கொல்கத்தா: சச்சின் டெண்டுல்கர் தனது சுய சரிதையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சச்சினுக்கு இந்தியாவின் பிரபல வீரர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பிற நாட்டு வீரர் ஒருவரும் இதே கருத்தை கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீரரான முரளிதரனிடம், சச்சினின் எழுதி வர உள்ள சுயசரிதை புத்தகத்தில் சேப்பல் குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர்.

 

அதற்கு பதிலளித்த முத்தையா, "சச்சின் கூறியதில் உண்மை உள்ளது. இதை இந்திய அணி ஆக்கப்பூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொண்டு, பயிற்சியாளர்களை நியமிக்கும்போது பலமுறை யோசித்துக்கொள்வது நல்லது. இதற்கு மேல் கருத்து கூற முடியாது" என்றார். இந்நிலையில், சச்சின் புத்தகத்தில் உள்ள அம்சங்களுக்கு தன்னால் கருத்து கூற முடியாது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு என்னை அந்த பதவிக்கு கொண்டுவர சேப்பல், சதி செய்தார் என்று சச்சின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், டிராவிட் இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், சச்சினுக்கும்-சேப்பலுக்கும் நடுவே நடந்த உரையாடலை பற்றிதான் புத்தகத்தில் சச்சின் கூறியுள்ளார். எனவே இரு நபர்களுக்கு இடையே நடந்த உரையாடலில் யார் மீது தவறு என்று நான் எப்படி கருத்து கூற முடியும். ஊடகங்களின் வழியாக அறிந்து கொண்ட தகவலுக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்த சர்ச்சையை தவிர புத்தகத்தில் படித்து பார்க்க மேலும் பல நல்ல விஷயங்கள் இருக்கும். எனது கவனம் அதில்தான் உள்ளது" என்று தெரிவித்துவிட்டார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sachin-has-told-the-truth-on-chappell-muralitharan-214220.html

  • கருத்துக்கள உறவுகள்

டிராவிட் மட்டுமே ஒரு துறை நிபுணர்போல பொறுப்பான பதிலைத் தந்துள்ளார்.

  • தொடங்கியவர்

தாயாரிடம் சுயசரிதையை வழங்கிய சச்சின் பெருமிதம்

நவம்பர் 04, 2014.மும்பை:

 

தனது சுயசரிதையின் முதல் பிரதியை தாயாரிடம் வழங்கினார் சச்சின்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த இவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவர், ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில் இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடன் ஏற்பட்ட சர்ச்சை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதன் முதல் பிரதியை நேற்று தனது தாயார் ரஜினி டெண்டுல்கரிடம் வழங்கினார்.

 

இது குறித்து சச்சின் தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘‘ என் சுயசரிதையின் முதல் பிரதியை தாயாரிடம் வழங்கினேன். இதை பெற்றதும் அவரது முகத்தில் பெருமிதத்தை கண்டேன். இது விலைமதிப்பில்லாத தருணமாக அமைந்தது,’’ என, குறிப்பிட்டுள்ளார்.

http://sports.dinamalar.com/2014/11/1415119505/Chappellharbhajanindiacricket.html

 

  • தொடங்கியவர்

கேப்டன் பொறுப்பில் திருப்தியில்லை: சச்சின்

 

புதுடில்லி: ''இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு திருப்தி அளிக்கவில்லை'' என இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர் தனது 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைப்பற்றியும், அதில் சந்தித்த சவால் பற்றியும் சுயசரிதை எழுதி இன்று அதை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, டிராவிட், லட்சுமண், கவாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சச்சின் பெருமிதம்:

தனது சுயசரிதையின் முதல் பிரதியை தாயாரிடம் வழங்கினார் சச்சின்.இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த இவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவர், 'பிளேயிங் இட் மை வே' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில் இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடன் ஏற்பட்ட சர்ச்சை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதன் முதல் பிரதியை நேற்று தனது தாயார் ரஜினி டெண்டுல்கரிடம் வழங்கினார். இது குறித்து சச்சின் தனது 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,'' என் சுயசரிதையின் முதல் பிரதியை தாயாரிடம் வழங்கினேன். இதை பெற்றதும் அவரது முகத்தில் பெருமிதத்தை கண்டேன். இது விலைமதிப்பில்லாத தருணமாக அமைந்தது,'' என, குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் சச்சின் கூறியது: இந்திய கிரி்க்கெட் அணியில் இடம் பிடித்து நாட்டிற்காக விளையாடியதை நினைத்து பெருமையாக உள்ளது. எனது 24 ஆண்டு கிரிக்கெட் மிகவும் கரடுமுரனாதாக இருந்தது. இதில் பல சவால்களை எதிர்கொண்டேன். பல தருணங்களில் பலரின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். சில நேரத்தில் எனது பேட்டிங் மூலம் அதற்கு சரியான பதிலும் அளித்தேன். தற்போது அந்த நினைவுகளை எப்போதும் திரும்பிப்பார்க்கும் வகையி்ல் எனது சுயசரிதை எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் முதல் பதிப்பை எனது தாயாருக்கு பரிசாக வழங்கினேன்.

 

கேப்டன் பொறுப்பு எனக்கு கடும் நெருக்கடி

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சவாலான தருணங்களை எதிர் கொண்டனர். ஆனால் அணியை முன்நின்று வழி நடத்திச்செல்லும் பொறுப்பு என்னிடம் முழுமையாக இருந்தது. அதனால் கேப்டன் பொறுப்பு எனக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ஆதனால் ஒரு முன்னணி வீரராக முழுமையாக செயல்பட முடிவு செயதேன். என இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தி்ல் பார்போடாஸ் டெஸ்ட்டை தான் மிகவும் இருளானதாக கருதுகிறேன். கடந்த 2007 ல் அப்போது பயிற்சியாளராக இருந்த சாப்பல் எனது பேட்டிங் முறை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். என்னுடைய பேட்டிங் குறித்து அவர் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா வீரர்களுக்கும் மோசமான தருணங்கள் வருவது இயற்கை தான். ஆனால் அதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடிய எனக்கு பலனாக 2010ல் சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது. எனது 24 ஆண்டு கிரிக்கெட் பயணத்தில் சாப்பலுடைய பயிற்சிகாலத்தையே மிகவும் மோசமானதாக கருதுகிறேன்.

எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது தற்போது அணியில் உள்ள இளம் வீரர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதில் விராத் கோஹ்லி, ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் எனை நேரில் வந்து சந்தித்தனர். விராத் கோஹ்லி எனது கடைசி டெஸ்ட் முடிந்த பின் அவர் அப்பாவின் மாலையை எனக்கு பரிசளித்தார். பின் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என் காலில் விழுந்தார். அதேபோல் ரகானே மிகவும் சோகமாக காணப்பட்டார். தற்போது உள்ள வீரர்களில் தனித்திறமை பெற்ற ரகானே நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்தார். அவரின் ஆட்டத்தை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இதை அவரிடமே நேரில் கூறினேன். ஆனால் அப்போதைய நேரத்தில் அணியில் அவரின் இடம் குறித்த பெரும் குழப்பம் இருந்தது. ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து போராட வேண்டும் என அவருக்கு அறிவுரை கூறினேன்.

 

கடைசி போட்டிமற்றொரு இளம் வீரரான ரோகித்ஙசர்மா நீண்ட நாட்கள் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தாமல் தடுமாறினார். அவர் எனது கடைசி போட்டிக்காக எனக்கு ஒரு உதவி செய்தார். வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிக்கு முன் என்னுடைய பேட்டில் ஒட்டிய ஸ்டிக்கர் குறித்த தகவல் வெளியாகக்கூடாது என்று அவரது கிட்டை எனக்கு கொடுத்து அதில் என்னுடை பேட்டை வைத்திருக்கும்படி சொன்னார். என் வாழ்வின் முற்பகுதியை நான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டிற்காகவே அர்பணித்தேன்.

சிறந்த பரிசு எது:
இது முழுவதும் எனது மகிழ்ச்சிக்காக செய்ததது. தற்போதுள்ள .பிற்பகுதியை எனது பிடித்தமானர்களுக்கு அர்பணித்து திருப்தி அடைந்து வருகிறேன். அவர்களுக்கு இதைவிட என்னால் வேறு சிறந்த பரிசு எதுவும் தர முடியாது என நம்புகிறேன். தவிர, இந்தியாவின் கிராமங்களில் வளர்ச்சிக்காக கடினமாக தொடர்ந்து பாடுபடுவேன். அதற்கான முழுமுயற்சியையும் மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவின் எல்லா பகுதியிலும் வெளிச்சம் ஏற்படுத்துவதே எனது தற்போதைய முதல் இலக்கு. தற்போது அதை நோக்கி தான் நான் பயணித்து வருகிறேன்.இவ்வாறு சச்சின் கூறினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1107950

  • தொடங்கியவர்

பயிற்சியாளராக கபில் ஏமாற்றமளித்தார்: சுயசரிதையில் சச்சின்
 

 

இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கபில் தேவ், பயிற்சியாளராக ஏமாற்றமளித்ததாக சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

"என்னுடைய கேப்டன்சியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது கபில் தேவ் பயிற்சியாளராக இருந்தார். இந்தியாவுக்கு விளையாடிய சிறந்த வீரர்களுள் ஒருவர் மேலும், அனைத்துகால சிறந்த ஆல்ரவுண்டர் அவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பயிற்சியில் நான் நிறைய எதிர்பார்த்தேன்.

என்னைப் பொறுத்தவரை பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிக முக்கியமானது, குறிப்பாக அணியின் உத்திகளை வகுப்பதில் அவரது பங்கு மிக அதிகம் என்றே கருதுகிறேன், இந்த நிலையில் கபில் தேவை விட ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த உத்திகளை வகுத்து விட முடியுமா என்ன?

 

ஆனால் அவரது ஈடுபாடு மற்றும் சிந்தனைப் போக்குகள் அணியை கேப்டனே வழிநடத்த வேண்டும், கேப்டனே உத்திகளையும், முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் உத்திகள் பற்றிய விவாதங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை” என்று கபில் மீதான ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஒரு உத்தியை தான் கையாண்டபோது அது தோல்வியிலும் அதே உத்தியை மற்ற கேப்டன் கையாளும் போது வெற்றியாகவும் மாறுவது பற்றி சச்சின் தனது சுயசரிதையில் கூறியிருப்பதாவது:

 

"1997-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி டிசம்பர் 14-ஆம் தேதி நடந்தது. நான் இந்தத் தொடரில் அணித் தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப 4-ஆம் நிலையில் களமிறங்கினேன். சவுரவ், நவ்ஜோத் சிங் சித்து தொடக்கத்தில் களமிறங்கினர். சித்து அவுட் ஆகும் போது ஸ்கோர் 143/2. நான் அடுத்ததாக ராபின் சிங்கை அனுப்பினேன், அவர் இடது கை வீரர், மேலும் பாகிஸ்தானின் மன்சூர் அக்தர் லெக்ஸ்பின் வீசிக் கொண்டிருந்தார். எனவே பெரிய ஷாட்களை ஆட ராபின் சிங், அதுவும் இடது கை என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்று அனுப்பினேன், ஆனால் அவர் 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.

அந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு எனது இந்த முடிவுதான் காரணம் என்றும் நான் களமிறங்கியிருக்க வேண்டும் என்றும் ஊடகங்கள் என்னை விமர்சித்தன.

 

ஆனால் ஒரு மாதம் கழித்து அசார் கேப்டனாக இருந்த போது, வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற சுதந்திரக் கோப்பை ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நானும், சவுரவும் நல்லத் தொடக்கம் கொடுத்த பிறகு ராபின் சிங்கை இறக்கினார் அசார். இப்போது ராபின் சிங் 82 ரன்களை எடுக்க இந்தியா வெற்றி பெற்றது.

அதுவும் சக்லைன் முஷ்டாக் இருக்கும் போது ராபின் சிங்கை அவர் அனுப்பினார். ஆஃப் ஸ்பின்னரை இடது கை வீரர் எதிர்கொள்வது சற்று கடினம்தான், ஆனாலும் அன்று கைகூடியது.

 

நான் செய்த பரிசோதனை முயற்சி தோல்வி அடைய, அசார் செய்த பரிசோதனை வெற்றியடைந்தது. அருமையான உத்தி என்று அவரைப் பலரும் பாராட்டினர். அப்போதுதான் புரிந்தது, ‘வெற்றிக்கு நிறைய தந்தைகள், தோல்வியோ அனாதை’ என்று ஏன் கூறுகிறார்கள் என்பது.” என்று கூறியிருக்கிறார் சச்சின்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article6570697.ece

 

  • தொடங்கியவர்

194 ரன்களில் திராவிட் டிக்ளேர் செய்த விவகாரம்: கோபமடைந்த சச்சின்

 

சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் வெளிப்படையாக சில உள்-விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு எதிராக முல்டான் டெஸ்ட்டில் சச்சின் 194 ரன்களில் இருந்த போது கேப்டன் திராவிட் டிக்ளேர் செய்த விவகாரமும். அதுபற்றியும் தனது கோபத்தை சச்சின் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

இரட்டைச் சதம் எடுக்க 6 ரன்கள் இருந்த போது ராகுல் திராவிட் டிக்ளேர் செய்த அந்த சம்பவம் பற்றி தனது மன உணர்வுகளைப் பற்றி சச்சின் எழுதியிருப்பதாவது:

"அந்த டிக்ளேருக்குப் பிறகு நான் ராகுலிடம் தெரிவித்தேன், களத்தில் எனது ஈடுபாட்டை அவரது முடிவு குறைக்காது, ஆனால் களத்திற்கு வெளியே நான் தனியாக இருக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன்.

 

அந்த சம்பவத்திற்குப் பிறகு, நானும், ராகுல் திராவிடும் தொடர்ந்து சிறந்த நண்பர்களாகவே இருந்தோம். எங்கள் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரும் வரையில் கூட எங்களிடையே நல்ல தோழமை உணர்வு நீடித்தது. களத்தில் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தோம். கிரிக்கெட்டோ, நட்போ பாதிக்காத வகையில் நாங்கள் அந்த சம்பவத்தைக் கையாண்டோம்.

அன்றைய தினம் முல்டான் டெஸ்ட் போட்டியில், கங்குலி முதுகு காயம் காரணமாக ஆடவில்லை என்பதால் திராவிட் பதிலி கேப்டனாக இருந்தார். தேநீர் இடைவேளையின் போது நான், ஜான் ரைட் மற்றும் திராவிடிடம் திட்டம் என்னவென்று கேட்டேன். அப்போது பாகிஸ்தானிடம் ஒரு மணிநேரம் பேட்டிங்கை அளிக்கவுள்ளோம் என்றனர். அதாவது 2ஆம் நாள் இறுதியில் 15 ஓவர்கள் வரை பாகிஸ்தானை பேட் செய்ய வைக்கப்போகிறோம் என்றனர். நான் அதனை மனதில் வைத்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு களத்தில் சென்று ஆடினேன்.

 

ஆனால், ஆடிக்கொண்டிருக்கும் போது அரை மணி நேரம் கழித்து பதிலி வீரர் ரொமேஷ் பொவார் என்னிடம் வந்து ரன் விகிதத்தை அதிகரிக்குமாறு கூறியதாக தெரிவித்தார். நான் கூட அவரிடம், எனக்கும் அது தெரியும், கள அமைப்பில் வீரர்கள் தூரத்தில் நிற்கின்றனர், இப்படிப்பட்ட கள அமைப்பில் நாம் அதிகமாக ரன் விகிதத்தை ஏற்றுவது கடினம் என்றேன்.

சிறிது நேரம் சென்ற பிறகு நான் 194 ரன்களில் இருந்த போது ரொமேஷ் பொவார் மீண்டும் வந்து, அந்த ஓவரிலேயே நான் இரட்டைச் சதத்தை எடுக்க வேண்டும், ஏனெனில் ராகுல் திராவிட் டிக்ளேர் செய்ய முடிவெடுத்துள்ளார் என்றார். நான் சற்றே அதிர்ந்தேன், ஏனெனில் என் கணக்குப் படி இன்னும் 2 ஓவர்கள் இருக்கிறது அதற்குள் நான் இரட்டைச் சதம் எடுத்து விடலாம் என்றே நினைத்திருந்தேன்.

ஆனால் பொவார் குறிப்பிட்ட அந்த ஓவரில் ஒரு பந்தைக் கூட நான் எதிர்கொள்ள முடியவில்லை. காரணம், இம்ரான் பராத் வீசினார், யுவ்ராஜ் முதல் 2 பந்தை தடுத்தாடினார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். 4வது பந்தை தடுத்தாடினார். அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

 

அடுத்த பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் களமிறங்கத் தயாராகி வந்து கொண்டிருக்கும் போது ராகுல் திராவிட் டிக்ளேர் என்றார் நாங்கள் பெவிலியன் திரும்பினோம். ஆனால் 16 ஓவர்கள் மீதமிருந்தன. தேநீர் இடைவேளைக்கு முன் பேசியதோ 15 ஓவர்கள்தான், ஆனால் ஒரு ஓவருக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்தனர்.

நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். ஏனெனில் இது அர்த்தமற்ற செயல், இது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மட்டுமே. கடந்த தொடரில் சிட்னியில் அமைந்தது போல் 4ஆம் நாள் அல்ல.

கடும் ஏமாற்றமடைந்த நான் ஓய்வறையில் ஹெல்மெட் மற்றும் பேட்டை தூக்கி எறிவேன் என்று சக வீரர்கள் நினைத்தனர். ஆனால் என் வழி அதுவல்ல. ஆனால் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

 

நான் பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் அமைதியாகக் கூறினேன் பீல்டிங்கிற்குச் செல்லும் முன் கொஞ்சம் அவகாசம் வேண்டும் ஏனெனில் நீண்ட நேரம் பேட் செய்ததால் இறுக்கமாக உள்ளது என்றேன். ஆனால் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தேன்.

நான் பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்த போது ஜான் ரைட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். தான் இதற்குக் காரணம் அல்ல என்றார். நான் ஆச்சரியமடைந்தேன், அணியின் முடிவெடுக்கும் விஷயங்களில் பயிற்சியாளருக்கும் பங்கு இருக்கும் போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றேன்.

நான் அவரிடம் கூறினேன், நடந்தது நடந்து விட்டது, இனி மாற்ற முடியாது. ஆனால், தேநீர் இடைவேளைக்கு முன் நாம் விவாதித்ததற்கு எதிராக டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது. நான் இரட்டைச் சதம் எடுக்க ஒரு பந்தை எதிர்கொள்ளக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து விட்டேன்.

சிறிது நேரம் கழித்து சவுரவ் கங்குலி வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். இந்த முடிவை தான் எடுக்கவில்லை என்றார். எனக்கு இதுவும் ஆச்சரியமாக இருந்தது. தேநீர் இடைவேளையின் போது விவாதத்தில் அவர் இருந்தார். டிக்ளேர் செய்யும் போதும் ஓய்வறையில் இருந்தார். ஆனால் சவுரவிடம் அதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை என்றேன்.

 

சஞ்சய் மஞ்சுரேக்கர் அப்போது வர்னணையாளர், அவர் என்னிடம் வந்து டிக்ளேர் செய்தது ஒரு தைரியமான முடிவு, இது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறி என்றார். இப்படிப்பட்ட தொனியில் மஞ்சுரேக்கர் பேசிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா என்று கூறி அவரை நிறுத்தினேன்.

ஓய்வறை விவாதத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் பேசுகிறீர்கள் தெரியாமல் நீங்கள் உங்கள் முடிவை என்னிடம் கூறுகிறீர்கள். மேலும் அவரது கருத்து எனக்கு பிடிக்கவில்லை என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். வேண்டுமென்றே வித்தியாசப்பட்டவர் போல் அவர் நடந்து கொண்டார் என்றே நான் அப்போது கருதினேன்.

ராகுல் திராவிட் என்னிடம், அணியின் நலனுக்காகவே அந்த முடிவை எடுத்ததாகவும், வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம் என்பதை எதிரணிக்கு உணர்த்தவே டிக்ளேர் செய்ததாக கூறினார். நான் திருப்தியடையவில்லை.

 

நான் கூறினேன், நானும் அணியின் நலனுக்காகவே ஆடுகிறேன். 194 ரன்கள் அணிக்கு எனது தனிப்பட்ட பங்களிப்பு என்றேன்.

இந்தத் தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில், 4ஆம் நாள் ஆட்ட முடிவு நேரத்தில், கேப்டன் சவுரவ் கங்குலி 3 அல்லது 4 மெசேஜ் அனுப்பினார். அதாவது எப்போது டிக்ளேர் செய்வது என்று. ராகுல் திராவிட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த இரு சூழ்நிலைகளும் ஒப்பு நோக்கத்தக்கதே.

முல்டானை விட சிட்னி டெஸ்டில் டிக்ளேர் செய்வது என்பது அணியின் தொடர் வெற்றிக்கு வழிவகுப்பதாகக் கூட அமைந்திருக்கும். முல்டானில் தனது வெற்றி ஆர்வத்தை காண்பித்த திராவிட் சிட்னியில் தான் பேட் செய்து கொண்டிருக்கும் போதும் இதனைச் செய்திருக்க வேண்டும்.” என்று இழந்த இரட்டைசதம் பற்றி சச்சின் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/194-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article6571248.ece

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு இரட்டைச் சதம்தான் முக்கியமாகப் போய்விட்டது.

அணியின் வெற்றியும் முக்கியம் அதே போல ஒரு தனிநபர்களின் சாதனைகளும் மிக முக்கியம் .160-170 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தண்டுல்கர் இரட்டை சதத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் அது தவறு 194 ரன்கள் எடுத்தநிலையில் நிட்சயம் அவரை இரு நூறு ரன்கள் எடுக்க அனுமதித்திருக்கவேண்டும் .

 

இருநூறு ரன்கள் என்பது ஒரு பட்ஸ்மனின் வாழ்க்கையில மிகப்பெரிய விடயம் .அண்மையில் நடந்த ஆஸி -பாகிஸ்தான் தொடரில் பாகிஸ்தான் காப்டன் இரண்டாவது இனிங்க்சில் தானும் மற்ற ஆட்டகாரரும் நூறுகள் அடித்த கையுடன் தான் ஆட்டத்தை நிறுத்தினார் .(Azhar Ali  100 not out   -   Misbah-Ul-Hag 101 not out).விரும்பியிருந்தால் இருவரும் தொண்ணுறுகளில் இருக்கும் போது ஆட்டத்தை நிறுத்திஇருக்கலாம் . 

  • தொடங்கியவர்

கபில், ஸ்ரீகாந்துடன் தகராறு செய்த பாகிஸ்தான் ரசிகர்: முதல் தொடர் பற்றி சச்சின்
 

 

தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவரது சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் தாடி வைத்த பாகிஸ்தானியர் ஒருவர் மைதானத்தில் இறங்கி கபில்தேவ், கேப்டன் ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர் ஆகியோரை வசைபாடியது பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட தருணம் எப்படிப்பட்டது என்பதையும் வர்ணித்துள்ளார்.

 

இனி சச்சின்...

"அது ஒரு அக்னி பரிட்சை. வாசிம், வக்கார் பந்து வீச்சிற்கு எதிராக நான் ஒன்றும் புரியாமல் இருந்த சமயம். நான் எனது பேட்டிங் திறமையை சந்தேகித்தேன், சர்வதேச தரத்திற்கு என்னால் உயரமுடியுமா என்ற சந்தேகம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது.

என்னுடைய அறிமுகப் போட்டியின் முக்கியத்துவம் என்னவெனில் பாகிஸ்தானில் அவர்களது சிறந்த பந்து வீச்சாளர்களான இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அகிப் ஜாவேத், அப்துல் காதிர் ஆகியோரை எதிர்கொண்டதே.

எனது அறிமுக டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரம் வீசிய ஓவரின் 3வது பந்தில் நான் ஸ்ட்ரைக்கிற்கு வந்தேன். அது ஒரு பயங்கர பவுன்சர். வாசிம் அக்ரம் பந்து வீச்சை ஓரளவுக்குக் கணித்திருந்த நான் அடுத்த பந்து பயங்கர யார்க்கராக இருக்கலாம் என்று நினைத்தேன். அதற்குத் தயாராகவும் இருந்தேன். ஆனால் அந்த ஓவர் முழுதையும் பவுன்சர்களாகவே வீசினார் வாசிம்” என்று எழுதியுள்ளார் சச்சின்.

சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் அடி வாங்கியது பற்றி அவர் எழுதுகையில், “வக்கார் பந்து வீச வந்த போது நான் ஒரு ரன் எடுத்திருந்தேன். வக்கார் ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீசினார். நான் பந்தின் பவுன்சை தவறாகக் கணித்தேன். நான் எதிர்பார்த்ததை விட 6 அங்குலம் அதிகமாக பந்து எழும்பியது. அது ஹெல்மெட்டின் முனையில் பட்டு என் மூக்கைப் பதம் பார்த்தது.

 

என்னுடைய பார்வை மங்கத் தொடங்கியது. எனது தலை கனக்கத் தொடங்கியது. அடிபட்டவுடன் எனது உடனடி எதிர்வினை பந்து எங்கு சென்றது என்பதைப் பார்ப்பதாகவே இருந்தது. அதன் பிறகுதான் கவனித்தேன் மூக்கிலிருந்து ரத்தம் சட்டையில் வழிந்திருந்தது.

அடிபட்டதிலிருந்து மெதுவே மீள நினைத்த போது ஜாவேத் மியாண்டட் கூறிய கமெண்ட் என்னை ஆச்சரியப்படுத்தியது, “நீ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், உன் மூக்கு உடைந்து விட்டது” என்றார். எனது இந்த நிலையில் என்னைப் பற்றி பார்வையாளர்கள் வைத்திருந்த பேனர் என்னை மேலும் அசவுகரியப்படுத்தியது. "குழந்தை! நீ வீட்டுக்கு போய் பால் குடி” என்று அந்த பேனரில் எழுதியிருந்தது” என்று நினைவு கூர்ந்துள்ளார் சச்சின்.

அதன் பிறகுதான் அவரை திடுக்கிட வைத்த சம்பவம் பற்றி அவர் எழுதியுள்ளார்:

 

சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் நாளில் நாடகத்திற்குக் குறைவில்லை. குறிப்பாக ஒரு சம்பவம் என்னை சங்கடப்படுத்தியது. உணவு இடைவேளைக்குப் பிறகு தாடி வைத்துக் கொண்டு சல்வார் கமீஸில் மைதானத்திற்குள் புகுந்த ஒரு ரசிகர், நேராக கபில்தேவிடம் சென்று பாகிஸ்தானில் அவர் இருப்பதற்காக வசைச்சொற்களைப் பயன்படுத்தினார்.

கபில்தேவை வசைபாடிய பிறகு மிட் ஆஃப் திசையில் மனோஜ் பிரபாகரிடம் சென்று சிலபல வசைச்சொற்களைப் பயன்படுத்தினார். பிறகு நேராக கேப்டன் ஸ்ரீகாந்திடம் சென்ற அந்த நபர் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டார்.

நான் பாயிண்ட் திசையில் பீல்ட் செய்து கொண்டிருந்தேன், அடுத்து நான் என்ற பீதி என்னைத் தொற்றிக்கொண்டது. அவர் என்னிடம் வந்தால் ஓய்வறை நோக்கி ஓட ஆயத்தமானேன். உண்மை என்னவெனில், இரு நாடுகளுக்கு இடையிலும் கிரிக்கெட் ஆட்டத்தைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பதே” இவ்வாறு சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article6574519.ece

  • தொடங்கியவர்

அதிக எடை கொண்ட பேட்களை பயன்படுத்தியது ஏன்?- சச்சின் விளக்கம்
 

 

சச்சின் டெண்டுல்கர் என்றாலே அவர் பயன்படுத்தும் அதிக எடை பேட் பற்றிய நினைவு வராமல் இருக்க முடியாது. கிளைவ் லாய்ட், இந்தியாவின் சந்தீப் பாட்டீல் ஆகியோர் பேட்களும் அதிக எடை உள்ளவை என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் லாய்ட், சந்தீப் பாட்டீல் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல உயரம் மற்றும் வலுவான உடற்கட்டு உடையவர்கள். சச்சின் உயரமும் அதிகம் கிடையாது. 18,19 வயதில் ஒருவருக்கு அவ்வளவு எடை மிகுந்த பேட்டை பிடித்து ஆடக்கூடிய உடற்கட்டும் இல்லாதவர். இந்த நிலையில் அவர் எடை கூடுதலான பேட்டைக் கொண்டு ஆடியது கிரிக்கெட் நிபுணர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

இது அவர் தனது சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’-யில் எழுதியிருப்பதாவது:

"நான் கனரக பேட்களை பயன்படுத்தி வந்தேன், சில சமயங்களில் எடை குறைவான பேட்களைப் பயன்படுத்தவும் ஊக்கம் காட்டினேன், முயற்சி செய்து பார்த்தேன், ஆனால் எடைகுறைவு பேட்களில் ஆடும் போது நான் வசதியாக உணரவில்லை, ஷாட்களை ஆடும் போது ஒட்டுமொத்த மட்டை சுழற்சியும் பேட்டிங் எடையைப் பொறுத்து அமைந்திருந்தது. எனவே குறைந்த எடை பேட்கள் எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

நான் டிரைவ் ஆடும் போது ஷாட்டில் தாக்கம் அதிகமாக பேட்டையின் எடை முக்கியப் பங்கு வகித்தது. எடை அதிகமான பேட் எனது டைமிங் சம்பந்தப்பட்ட ஒன்று.

என்னைப் பொறுத்தவரை பேட் என்பது எனது கையின் நீட்சியாகும். பேட் என்பது உங்கள் கையின் நீட்சியாக மாறிய நிலைக்கு நீங்கள் வந்தடைந்த பிறகு மட்டையை மாற்றுவது கிரிப்பை மாற்றுவது என்பது ஏன்? நான் பேட்டிங் செய்யும் போது எனது கவனம் நான் வசதியாக உணர வேண்டும் என்பதே.

நான் வசதியாக உணரும்போது, எந்த மைதானத்தில் ஆடுகிறேன், எதிரணியினர் யார் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. பல்வேறு சூழ்நிலைக்குத் தக்கவாறு பேட்டை மாற்றிக் கொண்டிருந்தால் வசதியாக உணரமாட்டோம் என்றே நான் கருதிகிறேன்.

 

அதே போல் நான் பேட்டைப் பிடித்திருக்கும் விதம் பற்றியும் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பேட் கைப்பிடியில் கீழ்ப்பகுதியில் பிடித்து ஆடுவேன். நான் என் அண்ணனுடன் ஆடும் போது, அவர் என்னை விட 10 வயது மூத்தவர். நான் அவரது பேட்டில்தான் ஆட வேண்டும், அவரது பெரிய பேட்டை நான் கைப்பிடியின் கீழ்ப்பகுதியில் பிடித்துதான் ஆடுவேன். அப்போதுதான் அந்த எடையை நான் தூக்க முடியும். பேட் கைப்பிடியின் அடிப்பகுதியில் பிடிப்பது என்பது எனது சிறு வயதுப் பழக்கம்.

சில பயிற்சியாளர்கள் எனது இந்தப்பிடியை மாற்றக் கூறினர். நானும் செய்து பார்த்தேன், ஆனால் எனக்கு வசதியாக இருக்கவில்லை. அதை விடுத்து கைப்பிடியில் சற்றே மேலே பிடித்தால் எனக்கு இயல்பானதாக அமையவில்லை.

 

அதற்காக நான் பரிசோதனைகளைச் செய்யவில்லை என்று அர்த்தமல்ல, எனது பேக்லிப்ட் காலத்தில் மாறிவந்திருக்கிறது.

பவுலர் முனையில் என் கவனம் இருக்கும் போது நான் சிறப்பாக பேட் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பவுலர்களாகட்டும் பேட்ஸ்மென்களாகட்டும் எதிர் முனையில் கவனம் இருக்க வேண்டும், அதாவது பேட் செய்யும் போது பவுலர் என்ன நினைக்கிறார், அடுத்து என்ன வீசுவார் என்பதில் கவனம் செலுத்தவேண்டும், அதேபோல் பேட்ஸ்மென் என்ன நினைக்கிறார், அடுத்த ஷாட்டை அவரை என்ன மாதிரி ஆட வைக்க வேண்டும், எந்த லெந்த்தில் வீசினால் அவரை வீழ்த்த முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.

மாறாக உங்கள் உத்தி பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் அது சரிவராது. உதாரணமாக ஒரு பவுலர் நோ-பால் பற்றிய கவலையில் வீசிக் கொண்டிருந்தால் அவரால் ஒரு போதும் லைன் மற்றும் லெந்த்தில் வீச முடியாது.

கிரிக்கெட் ஆட்டம் என்பது சிறப்பாக ஆடப்படும் தருணம் என்பது என்னைப் பொறுத்தவரை நமது மனம் எதிர்முனையில் இருக்கும் போதுதான் என்றே நான் கருதுகிறேன்.”

இவ்வாறு எழுதியுள்ளார் சச்சின்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6574381.ece

  • தொடங்கியவர்

கோபம், பதிலடி, வேதனை: சுயசரிதையில் சச்சினின் குறிப்புகள்
 

 

கோபப்படுத்திய ‘சைட் ஸ்கிரீன்’

1998-ல் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற சுதந்திர தின வெள்ளி விழா கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது “சைட் ஸ்கிரீன்” பிரச்சினையால் ஆட்டமிழந்தேன். அதனால் கடும் கோபத்துடன் பெவிலியனுக்கு திரும்பினேன். அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் வந்து மன்னிப்புக் கோரினார். அந்தத் தருணத்தில் நான் அவரை திட்டிவிட்டேன். “சைட் ஸ்கிரீன்” பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அடிப்படை விதிகளைக்கூட அமல்படுத்தாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த வங்கதேசம் தகுதியான நாடு அல்ல என்று கூறினேன். ஆனால் நான் திட்டிய நபர் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அஷ்ரபுல் ஹக் என்பது பின்னர்தான் தெரியவந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். அதன்பிறகு எங்கு சந்தித்தாலும் பழைய சம்பவத்துக்காக இருவரும் மாறிமாறி மன்னிப்புக் கேட்க தொடங்கிவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இயான் சேப்பலுக்கு பதிலடி

2007 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தபோது, கிரேக் சேப்பலின் மூத்த சகோதரரான இயான் சேப்பல், பத்திரிகை ஒன்றில் பத்தி எழுதினார். அதில் சச்சின் கண்ணாடியின் முன்னால் நின்று தன்னை பார்த்தால் அவர் ஆடிய மோசமான ஆட்டங்கள் தெரியும். அவர் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது எனக் கூறியிருந்தார்.

அதற்கு தனது சுயசரிதையில் பதிலளித்துள்ள சச்சின், “இயான் சேப்பலை பற்றியெல்லாம் நான் பெரிதாக சிந்திப்பதில்லை. அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வி.பி. தொடரில் சதமடித்ததன் மூலம் அவருடைய விமர்சனத்துக்கு எனது பேட்டால் பதில் சொல்லிவிட்டேன். நான் யாருக்கும் என்னை நிரூபிக்க தேவையில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர். எனினும் சில நேரங்களில் அதுபோன்ற கருத்துகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் தந்துவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

பதவி பறிப்பால் வேதனை

1997-ல் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டிரா செய்த நிலையில், திடீரென கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டது எனக்கு அவமானத்தையும், வேதனையையும் தந்தது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்து யாரும் எனக்கு தகவல் சொல்லவில்லை. ஊடகங்களின் மூலமாகத்தான் நான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது.

ஆனால் அப்போது ஏற்பட்ட வேதனைதான் என்னை வலுவான வீரனாக மாற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவியது. பிசிசிஐ என்னிடம் இருந்து கேப்டன் பதவியை வேண்டுமானால் பறிக்கலாம். ஆனால் எனது ஆட்டத்தை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

டிக்ளேர் செய்ததால் உறவில் பாதிப்பில்லை

முல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் 194 ரன்களில் இருந்தபோது அப்போதைய பொறுப்பு கேப்டனான ராகுல் திராவிட் டிக்ளேர் செய்தது உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேநேரத்தில் மைதானத்தில் இருந்து வெளியேறிய பிறகு, களத்தில் விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இரட்டைச் சதம் அடிக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து மீள்வதற்காக களத்திற்கு வெளியே இருக்கும்போது என்னை தனியாக இருக்க விடுங்கள் என திராவிடிடம் கூறினேன்.

அந்த சம்பவத்தால் எனக்கும் திராவிடுக்கும் இடையிலான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பிறகும்கூட நாங்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய ரன் குவித்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6573491.ece

 

  • தொடங்கியவர்

கிரெக் சாப்பல் பற்றிய சச்சின் கருத்தை மறுக்கிறார் ஆஸி. கிரிக்கெட் எழுத்தாளர்
 

 

2007 உலகக் கோப்பைக்கு முன் தன்னை கேப்டன்சி பொறுப்பை ஏற்குமாறு கிரெக் சாப்பல் வலியுறுத்தியதாக சச்சின் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். அதனை மறுத்து சாப்பல் தரப்புக்காக வாதாடுகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் மால்கம் நாக்ஸ்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் மால்கம் நாக்ஸ் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

“டான் பிராட்மேன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சின் இணைக்கப்படுவதற்காக அருமையாக அன்று போவ்ராலில் வரவேற்கப்பட்டார். ஆனால் சச்சின் சுயசரிதையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பற்றிய கூறியிருக்கும் எதிர்மறைக் கருத்துகள் அப்போது வெளியாகியிருந்தால், சச்சின் இந்த நிகழ்ச்சியில் தடுமாறியிருப்பார். ஆனால் சுயசரிதை இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியானதால் சச்சினின் தர்மசங்கடம் காப்பாற்றப்பட்டுள்ளது.

2005 முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் கிரெக் சாப்பல், மூத்த வீரர்கள் மீது அவர் கவனம் சென்றது உண்மைதான்.

சச்சின் தன் சுயசரிதையில் சாப்பல் தன் வீட்டிற்கு 2007 உலகக் கோப்பை போட்டிகளுக்கு சில மாதங்கள் முன் வந்திருந்தார் என்று கூறியுள்ளார். சாப்பல் அதே நிகழ்வு பற்றி கூறுகையில் சில மாதங்கள் அல்ல 12 மாதங்களுக்கு முன்னதாக சச்சின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறியிருந்தார்.

 

ஒரே நிகழ்வு பற்றி இந்த இரண்டு வேறுவிதமான பதிவுகள் உருவாகியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு கிரெக் சாப்பலின் ஃபியர்ஸ் ஃபோகஸ் என்ற அவரது நூலுக்காக அவருடன் சேர்ந்து நான் பணியாற்ற வேண்டியிருந்தது. அப்போது அவரது டைரியை நான் படிக்க நேர்ந்தது. அதில் மிக விவரமாக இந்த விஷயம் எழுதப்பட்டிருந்தது. சாப்பல் இதனை தனக்காக எழுதிக் கொண்டார். வெளியிடுவதற்காக அல்ல. நான் இப்போது அது பற்றி எழுதுவது கூட அவரது சம்மதம் இல்லாமல்தான். அவரது டைரியைப் படித்த நான் அவரை சச்சினின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

சாப்பலின் டைரியில் ஒரேயொரு முறை சச்சின் வீட்டிற்கு சென்றதன் குறிப்பு இருக்கிறது. சச்சின் கூறுவது போல் அல்லாமல் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஓராண்டுக்கு முன்னால் சாப்பல் சச்சின் வீட்டிற்குச் சென்றார். அதாவது அந்தத் தேதி 2006, மே 9. அதாவது மறுநாள் இந்திய அணி திராவிட் தலைமையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்காக மே.இ.தீவுகள் செல்கிறது.

 

காயம் காரணமாக அந்தத் தொடருக்கு சச்சின் இல்லை. சச்சின் வீட்டிற்கு சாப்பல், உடற்பயிற்சியாளர் ஜான் குளோஸ்டர், கிரண் மோர் (அணித் தேர்வுக்குழுவில் இருந்தவர் சச்சின் குறிப்பிட்டுள்ளது போல் உதவிப்பயிற்சியாளர் அல்ல) ஆகியோர் சென்றனர். அஞ்சலி டெண்டுல்கரும் உடனிருந்தார்.

சாப்பலின் டைரியின் படி, லஞ்ச் எடுத்துக் கொண்டு சச்சினின் உடல் நிலை பற்றி விவாதித்தனர். சச்சினுக்கு மிக ஆதரவாக இருந்தார் சாப்பல். கேப்டன்சி பற்றி எந்த வித பேச்சும் எழவில்லை. எதற்கு எழ வேண்டும்? கங்குலிக்கு பதிலாக திராவிட் கேப்டன்னாக்கப்பட்டதில் சாப்பல் பங்கு இருக்கிறதே.. பின் எதற்கு அவர் கேப்டன்சி பற்றி பேசியிருக்கப் போகிறார்.

 

தனிப்பட்ட முறையிலும், பொதுவிலும் திராவிட் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தார் சாப்பல். அந்த ஒரே வருகைதான் சாப்பல் டைரியில் இருக்கிறது. பிற்பாடு அதே டைரியில் அவர், திராவிடின் கேப்டன்சியை மதிக்காது நடந்து கொள்ளும் வீரர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சச்சின் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் கருதியிருந்தார். ஆனால் சச்சின் மீண்டும் கேப்டனாக வரவேண்டும் என்பதை சாப்பல் கற்பனையில் கூட விரும்பவில்லை. 2,000 ஆம் ஆண்டே சச்சின் கேப்டன்சி பதவி தனக்கு ஒத்து வராது என்று உதறிவிட்டார்.

ஆகவே, என்ன நடக்கிறது? இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்ததா? சதிக்கோட்பாட்டாளர்கள் கூறலாம், சச்சின் குறிப்பிட்ட அந்த சந்திப்பை சாப்பல் தனது டைரியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்று.

ஆனால் நான் சாப்பல் டைரியை பார்த்த ஆண்டு 2011.

டைரி எழுதுபவராக சாப்பலை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு சந்திப்பு, ஒவ்வொரு பயிற்சி முகாம் என்று அனைத்தையும் துல்லியமாக அவர் பதிவு செய்பவர். எனவே இப்போது அந்தச் சந்திப்பை பற்றி இப்படியொரு அவதூறு கிளம்பலாம் என்று அவர் அப்போதே அந்தப் பக்கங்களை நீக்கியிருக்கலாம் என்று கூற முயன்றால் அது நம்பிக்கைச் சார்ந்ததாகவே இருக்கும்.

மேலும், சச்சின் இந்தச் சந்திப்பு பற்றி கூறியதில் துல்லியமில்லை. அவர் தவறாக நினைவு கொண்டிருக்கலாம், அல்லது அவரது கோஸ்ட் எழுத்தாளர் அவர் கூறியதை தவறாக மேற்கோள் காட்டியிருக்கலாம். ஆனால் அவரும் இதுவரை இது பற்றி ஒன்றும் கூறவில்லை.

ஆகவே நான் ஒரே ஒரு முடிவுக்கு மட்டும்தான் வர முடிகிறது. சச்சின் வேண்டுமென்றே இப்படி எழுதியுள்ளார். அவர் ஏன் இப்படி எழுத வேண்டும்? காரணம் உள்ளது. திராவிடின் சாதகத்தை வென்றெடுக்கவே சச்சின் இப்படிக் கூறியுள்ளார். டெண்டுல்கர் போன்று ‘கடவுள் அந்தஸ்து’ திராவிடிற்குக் கிடையாது. அவர் பிற நாட்டு வீரர்கள் மீது பாராட்டுதலும், அபிமானமும், மரியாதையும் உள்ளவர், அவரது நேர்மைக்கு நிகர் அவரே.

2007 உலகக்கோப்பைக்குப் பிறகே இந்திய அணியின் பிரச்சினைகளுக்கு கிரெக் சாப்பல் காரணமாகக் காட்டப்படுகிறார்.

என்று மால்கம் நாக்ஸ் தனது பத்தியில் எழுதியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article6575044.ece

  • தொடங்கியவர்

சச்சின் போலவே சாதனை படைத்த அவரது சுயசரிதை நூல்

 

 

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூல் ‘பிளேயிங் இட் மை வே’ விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

புத்தக வெளியீட்டு தினம் மற்றும் விற்பனைத் தொடங்கும் முன்பே ஹாச்செட் இந்தியா வெளியீட்டு நிறுவனத்திற்கு 1,50,000 பிரதிகளுக்கான ஆர்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

புனைவு மற்றும் புனைவல்லா நூல்களுக்கான ஆர்டர்கள் முன் கூட்டியே இந்த அளவுக்கு வந்ததில்லை. இதில் சச்சின் சுயசரிதை சாதனை படைத்துள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

 

வால்டர் இசாக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு நூல் 1,30,000 பிரதிகள் விற்றுள்ளது. சச்சின் நூல் தற்போது இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

“அவரது பேட்டிலிருந்து சாதனைகள் பிறந்தது போல் அவரது பேனாவும் சாதனைகளை உருவாக்குகிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இப்போது அவர் ஆயிரம் நூறுகளைத் தொட்டுள்ளார். இந்த இன்னிங்ஸ் இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்று ஹாச்செட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஆப்ரகாம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/article6577953.ece

 

  • தொடங்கியவர்

5 கேப்டன்களுக்கு சச்சின் பாராட்டு
 

 

தன்னுடைய சுயசரிதையான ‘பிளேயிங் இட் மை வே’-யில் 5 கேப்டன்களுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளார் சச்சின்.

சச்சினின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் 4 இந்திய கேப்டன்கள் மற்றும் ஒரு இங்கி லாந்து கேப்டன் என 5 பேரைப் பாராட்டி எழுதியுள்ளார் சச்சின்.

 

கங்குலி

கங்குலி வியூகம் வகுப்பதில் வல்லவர். கிரிக்கெட்டைப் பற்றி நன்கு புரிதல் உள்ளவர். கடுமையான நேரங்களில், பரிசோதனை செய்து பார்ப்பதில் தயக்கம் காட்டமாட்டார். கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான் இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தது.

 

கும்ப்ளே

வீரர்களுடன் கருத்துகளைச் சரியாக பரிமாறுவதில் வல்லவர். ஒவ்வொரு வீரரிடமும் தான் என்ன எதிர்பார்க் கிறேன் என்பதை வெளிப்படை யாக சொல்லிவிடுவார். உள்ளுணர்வு மீது நம்பிக்கை வைத்து ஆடுபவர்.

 

திராவிட்

பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட வழிமுறைகளுடன் கிரிக்கெட்டை அணுகுபவர். மன உறுதி மிக்கவர். அதிக பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடமாட்டார்.

 

தோனி

உள்ளுணர்வு மீது அதிக நம்பிக்கை வைப்பவர். கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். வித்தியாசமாக முயற்சி செய்வதில் தயக்கம் காண் பிக்க மாட்டார். அழுத்தம் கொடுக்கும் தருணங்களை நன்றாக கையாள்பவர்.

 

நாசர் ஹுசேன்

வியூகம் வகுப்பதில் வல்லவர். சிலசமயம் அவருடைய வியூகங்கள் எதிர்மாறாகவும் அமைந்துவிடும். ஒரு பேட்ஸ்மேன் எப்படி ஆடுவார் என்பதை முன்பே கணித்து அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்தி விடுவார்.

 

http://tamil.thehindu.com/sports/5-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article6580306.ece

 

  • தொடங்கியவர்

‘உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்’: சச்சின் நம்பிக்கை
 

 

2015 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற வுள்ளது. இந்த நிலையில் சச்சினின் சுயசரிதை புத்தகம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

 

அப்போது உலகக் கோப் பையை வெல்லும் வாய்ப் புள்ள அணிகள் குறித்து சச்சினிடம் கேட்டபோது, “இந்தியா உலகக் கோப்பையை வென்று அனைவருக்கும் ஆச்சர்ய மளிக்கும் என நினைக்கிறேன். சுழற் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என நம்புகி றேன். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எல்லோரும் பேசிக்கொண்டி ருக்கிறார்கள்.

ஆனால் மைதா னங்கள் அனைத்தும் பெரியதாக இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என நான் நம்புகி றேன்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறலாம். எனினும் இந்தியாவைத் தவிர எஞ்சிய 3 அணிகளையும் துல்லியமாக கணிக்க முடியவில்லை’’ என்றார்.

 

இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்புள்ளதா என கேட்டபோது, “கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியின் தற்போதைய பார்மை பார்க்கும் போது, அந்த அணி சவாலான அணியாக இருக்கும் என நினைக்க வில்லை” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6580303.ece

  • தொடங்கியவர்

சச்சின் சுயசரிதையும் முரண்பாடுகளும்
 

 

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையில் அவர் மௌனம் சாதித்த விஷயங்களே உரக்கக் கேட்கிறது என்கிறார் எழுத்தாளர் மகரந்த் வைகங்கர்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்:

இந்திய கிரிக்கெட் சில ஆண்டுகளாக நிறைய ‘சிறு பிராட்மென்களை’ பார்த்துவிட்டது. ஆனால் உயர்மட்ட கிரிக்கெட் ஆட்டத்தின் தேவைகளினால் ஏற்பட்ட நெருக்கடியில் அவர்கள் சோபிக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் மும்பை மைதானங்களிலிருந்து எழுச்சி பெற்ற சுருண்ட முடி கொண்ட ஒரு வீரர் இதற்கு விதிவிலக்கு.

13-வயது சிறுவனாக ஸ்போர்ட்ஸ் ஸ்டார் டிராபியில் விளையாடிய காலத்திலிருந்து சச்சின் டெண்டுல்கரை லட்சக்கணக்கானோர் அறியத் தொடங்கினர்.

 

சச்சின் டெண்டுல்கர், என்ற இந்த ‘அதிசய சிறுவன்’ பேட்டிங்கின் அம்சங்களை கையகப்படுத்திய இவர், சுயசரிதையில் தனது நினைவுக்குறிப்புகள் மூலம் வாழ்க்கையை தனக்கேயுரிய நடையில் வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனால் அவரது பேட்டிங் எனும் கவிதையே உலகின் கண்களை ஈர்த்தது.

இல்லையெனில், மும்பையில் ஏதோ ஒரு மூலையில் விளையாடும் இளம் வீரர் ஒருவர் தனது மூளை மற்றும் இதயம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் கவர்ச்சியான கிரிக்கெட் பொது வாழ்க்கையில் மூழ்கியிருக்க முடியாது.

எனவே அவரது சுயசரிதை நூல் எதிர்பார்ப்புகளை கிளப்பியதில் ஆச்சரியமில்லை, நியாயமானதும் கூட, இவரது மிகப்பெரிய கிரிக்கெட் வாழ்க்கை புள்ளிவிவரங்களினால் பெரிதாகத் தெரிகிறது என்பதோடு, நவீன கிரிக்கெட்டில் இவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதாலும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. 100 சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகள், 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை என்று இவரது பெரிய பங்களிப்பு எதிர்பார்ப்புகளை நியாயமாகவே கிளப்பியுள்ளது.

கிரெக் சாப்பல் ஓரிரு தவறுகள் செய்திருக்கலாம். எந்த கேப்டனும், பயிற்சியாளரும் முழுதும் தவறற்றவர்களாக இருக்க முடியாது.

 

2007 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ‘சில மாதங்களுக்கு முன் சாப்பல் சச்சினிடம் கேப்டன்சியை அளிக்க விரும்பினார்’ என்றால் கேப்டனைத் தேர்வு செய்யும் அணித் தேர்வுக்குழுவிடம், அதாவது தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்காரிடம் இதனை சச்சின் தெரிவித்திருக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறதல்லவா? உடனடியாக கேப்டன் ராகுல் திராவிடிடம் இதனை சச்சின் விவாதித்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா? மாறாக சச்சினின் சுயசரிதை, இழந்த பதவி போல், இந்த விவகாரத்தை இப்போது தெரிவித்துள்ளது.

 

கிரெக் சாப்பல் சச்சின் டெண்டுல்கரின் வீட்டுக்கு 2006-ஆம் ஆண்டு முதல் பாதியில் சென்றதாகவே தெரிகிறது. அதாவது 23007 உலகக்கோப்பை போட்டிகளுக்கு 10 மாதங்கள் முன்பாக. 10 மாதங்களுக்கு முன்பாக என்பது எப்படி ‘சில மாதங்களுக்கு முன்பு’ என்று கூறப்படுகிறது? உடற்பயிற்சியாளர் ஜான் குளோஸ்டர், சாப்பலுடன் சென்றுள்ளார். மதிய உணவின் போது உரையாடல் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டுல்கர் வெளியீட்டில் அந்த உரையாடலின் கூற்றிடச் சூழல் சரியாக பதிவாகவில்லை.

எனவே, சாப்பலை விமர்சிப்பதில் கபடமான நோக்கம் இருப்பதான தோற்றத்தை சச்சின் சுயசரிதையின் இந்தப் பக்கங்கள் ஏற்படுத்துகிறது. இதனை அதிருப்தி வீரர்கள் ஆதரித்துள்ளனர்.

 

சாப்பல் விவகாரம் மட்டுமே இந்த நூலின் ஒரே முரண்பாடு அல்ல. பார்படாஸ் போட்டி தோல்வி பற்றி சச்சின் குறிப்பிடும்போது, கும்ளேயும் ஸ்ரீநாத்தும் தன் அறைக்கு வந்து ஆறுதல் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னரே, தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரீநாத் பயணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். சச்சின் குறிப்பிட்ட அந்த போட்டியின் போது அவர் தென் ஆப்பிரிக்காவில் மருத்துவரை ஆலோசித்துக் கொண்டிருந்தார். அவர் எப்படி சச்சினுக்கு ஆறுதல் கூறியிருக்க முடியும்?

 

தரவுகளை சரியாகக் கொடுக்க 3 ஆண்டுகால ஆய்வு டெண்டுல்கருக்கு, அதாவது அவரது கோஸ்ட் எழுத்தாளருக்கு போதவில்லை போலும். துரதிர்ஷ்டவசமாக அவரது சுயசரிதை விவகாரங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறதே தவிர, அகப்பார்வையுடன் விவரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நடந்தவற்றை விவரிப்பதாக மட்டுமே நூல் இருக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம், ஆனாலும் சச்சின் போன்ற மரியாதைக்குரிய ஒருவர் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலமான சூதாட்டம் பற்றி குறிப்பிடாமல் இருப்பது அவரது குணாம்சத்திற்கு பொருத்தமாகப் படவில்லை.

கிரிக்கெட் சூதாட்ட காலகட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தார் சச்சின். சூதாட்டம் பற்றிய மவுனமே அவரது நூலில் உரக்கக் கேட்கிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6586879.ece

  • தொடங்கியவர்

சச்சின் சுயசரிதையில் கருத்து: சர்ச்சையைத் தவிர்த்த கபில்
 

 

சச்சின் தனது சுயசரிதையில் பயிற்சியாளராக கபில்தேவ் ஏமாற்றமளித்தார் என்று கூறியது அவரது சொந்தக் கருத்து என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

"அது அவரது சொந்தக் கருத்து, ஒவ்வொருவருக்கும் அவரது கருத்தைக் கூற உரிமை இருக்கிறது. நான் அனைவரது கருத்தையும் மதிக்கக்கூடியவன். அவரது நூலுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் கபில்தேவ்.

 

சச்சின் தனது சுயசரிதையான பிளேயிங் இட் மை வே-யில் ஆஸ்திரேலியா பயணத்தின் போது தான் கேப்டனாக இருந்த சமயத்தில் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் அணியின் உத்திகள் பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது ஏமாற்றமளித்தது என்று கூறியிருந்தார்.

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வாய்ப்பு பற்றி கபில் கூறும்போது, “நான் எந்த வித முடிவுகளுக்கும் தாவ விரும்பவில்லை. நம் அணியை வாழ்த்துகிறேன். அவர்கள் அங்கு சென்று நல்ல கிரிக்கெட்டை ஆடுவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6591032.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.