Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் தமிழன் ...(சாட்டை சுழருது)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை முழுமையாகக் கேட்கவில்லை. இருப்பினும் செந்தமிழன் என்பது தொடர்பாகச் சீமானைப் பற்றித் தான் சொல்ல வருகின்றார் என நினைக்கின்றேன். தமிழர் யார் யார் என மரபணு செய்கின்ற நாம் தமிழரின் செயல்களில் ஒரு வீதம் கூட எனக்கு உடன்பாடில்லை. எவன் தம்மைத் தமிழர்களாக நினைத்து வாழ்கின்றார்களோ, அவர்களைத் தமிழர் என்று சொல்வதில் எனக்குப் பூரண உடன்பாடு உண்டு.

செந்தமிழன் என்று சீமான் சொல்லக் காரணம் அவரது தந்தையாரின் பெயர் அதுவாகும். அரைகுறையாக விளக்கம் கொண்டு வாதம் செய்வதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவரரே! Seeman was born in Sivagangai district in South Tamil Nadu to Mr. Senthamizhan and Mrs. Annammal Senthamizhan. He married K. Kayalvizhi, daughter of K. Kalimuthu (Former speaker of Tamil Nadu Legislative Assembly) in September 2013 in the presence of Pazha. Nedumaran and others. The ceremony was held according to Tamil traditions at the YMCA grounds, Nandanam, Chennai.[3][4]-- Wiki--

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டது.. :D இவர் காருக்குள் இருந்து புலம்ப வேண்டியதுதான்.. வெளியில் வந்தால் யாருக்கும் தெரியாது. :lol:

  • தொடங்கியவர்

அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டது.. :D இவர் காருக்குள் இருந்து புலம்ப வேண்டியதுதான்.. வெளியில் வந்தால் யாருக்கும் தெரியாது. :lol:

இசை இவர் இல கோபாலசாமி பிரபல அரசியல் விமர்சகர் ....கருத்தாளர் .என பன்முக தன்மையுள்ளவர் குறைவா எவரையும் மதிப்பிட கூடாது அண்மையில் இவரின் கருத்து பற்றி நாம் தமிழர் உறுப்பினர்கள் தனி மனித தாக்குதல் செய்து இவர் தெலுங்கன் என்று மிக வேகமான பிரச்சரம் செய்கிறார்கள் அதனால் தான் இவர் வீடியோவா விட்டுள்ளார் .. :icon_idea:

மதிமுக இணைய நிர்வாகி கூட .

கேள்வி கேட்கவும் ஒரு தகுதி வேணும் இசை ........ஓ உங்களுக்கு சீமானை விட்டா உலகில் எவரையும் தெரியாதே அப்படித்தான் தெரியும்  :D

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

இசை இவர் இல கோபாலசாமி பிரபல அரசியல் விமர்சகர் ....கருத்தாளர் .என பன்முக தன்மையுள்ளவர் குறைவா எவரையும் மதிப்பிட கூடாது அண்மையில் இவரின் கருத்து பற்றி நாம் தமிழர் உறுப்பினர்கள் தனி மனித தாக்குதல் செய்து இவர் தெலுங்கன் என்று மிக வேகமான பிரச்சரம் செய்கிறார்கள் அதனால் தான் இவர் வீடியோவா விட்டுள்ளார் .. :icon_idea:

மதிமுக இணைய நிர்வாகி கூட .[/size]

கேள்வி கேட்கவும் ஒரு தகுதி வேணும் இசை ........ஓ உங்களுக்கு சீமானை விட்டா உலகில் எவரையும் தெரியாதே அப்படித்தான் தெரியும்  :D

முதலில் குறைத்து மதிப்பிடுவது இந்த இல கோபாலசாமிதான்.. சீமானை மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு இவரை மக்களுக்குத் தெரியுமா? கேள்வி கேட்க ஒரு தகுதி வேண்டாமா? (நீங்கள் சொன்னதுதான்..) :lol:

பெரியவன் யார் என்றால் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துபவன் தான். சீமான் எப்படியோ.. அவர் எமது விடயங்களை அடிமட்ட மக்களிடம் எடுத்துச் செல்கிறார்.. காரின் உள்ளே உட்கார்ந்துகொண்டு பிரச்சாரம் பண்ணுகிறவர்களை நான் மதிப்பதாக இல்லை. இவர் செய்த ஒரு நல்ல விடயத்தைச் சொல்லுங்கள். எனது கருத்தை மாற்ரிக் கொள்கிறேன். மற்றும்படி இவர்மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை.

நான் சீமானைப் பற்றி எழுதுவது உங்களது பதிவுகளுக்கு பதில் வழங்கத்தான். நீங்கள் சீமான் என்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். நானும் அங்கே இருக்க மாட்டேன். :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/Seeman_(director)

அப்பா பெயரை தன் பெயருக்கு முன்னால் போடுகிறார் சீமான் என்று சொல்லுது தூயவனின் பதிவு. விக்கிபீடியாவில் இப்படித்தான் உள்ளது. இதைத்தெரியாமல் புறணி பாடுகிறார் அரசியல் விமர்சகர். என்ன கொடுமை சார் இது. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஒரு காலத்தில் இந்துக்கள் பற்றி யாழ்களத்தில் எழுதப்படும் வாதங்களுக்குப் பதில் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிற்பாடு தான் பெரியார் என்கின்ற ராமசாமி பற்றி முழுமையாக படிக்க ஆரம்பித்தேன்... படித்தபடியால் தான் வெறுப்பு அதிகமானது வேறு விடயம். உண்மையில் யாழ்களத்தில் இந்துக்களை வெறுமனே பாசிய, மதவாதம், என்ற பெயர்களோடு கருத்தெழுதுவதைத் தடுக்கப் போய், கடைசியாக நான் ஒரு இந்துத்துவாதியாக மாற்றம் பெற்றேன். அப்படி அடையாளம் செய்யப்பட்டேன். நான் நாத்திகன் இல்லைத் தான். ஆனால் கடவுள் என்று கோவில் கோவிலாக அலைபவனும் அல்ல. சீமானைப் பற்றி நீங்கள் எழுதப்போய், உங்களுக்கு அந்த நிலை தன் ஆகப் போகின்றது என எண்ணும்போது மனம் களிப்படைகின்றது...

  • தொடங்கியவர்

முதலில் குறைத்து மதிப்பிடுவது இந்த இல கோபாலசாமிதான்.. சீமானை மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு இவரை மக்களுக்குத் தெரியுமா? கேள்வி கேட்க ஒரு தகுதி வேண்டாமா? (நீங்கள் சொன்னதுதான்..) :lol:

பெரியவன் யார் என்றால் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துபவன் தான். சீமான் எப்படியோ.. அவர் எமது விடயங்களை அடிமட்ட மக்களிடம் எடுத்துச் செல்கிறார்.. காரின் உள்ளே உட்கார்ந்துகொண்டு பிரச்சாரம் பண்ணுகிறவர்களை நான் மதிப்பதாக இல்லை. இவர் செய்த ஒரு நல்ல விடயத்தைச் சொல்லுங்கள். எனது கருத்தை மாற்ரிக் கொள்கிறேன். மற்றும்படி இவர்மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை.

நான் சீமானைப் பற்றி எழுதுவது உங்களது பதிவுகளுக்கு பதில் வழங்கத்தான். நீங்கள் சீமான் என்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். நானும் அங்கே இருக்க மாட்டேன். :D

புகழ் விரும்பி சீமானும் உண்மையான ஈழ ஆதரவு ஆளும் ஒன்று இல்லை  :D

சீமானுக்கு இதுதான் பிழைப்பு ஆனால் அவருக்கு வேலை செய்தபடி கட்சிக்கு உழைப்பு இரண்டும் ஒன்று இல்லை இசை  :)

சீமான் சின்ன வட்டம் ஐ லைகிட்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஒரு காலத்தில் இந்துக்கள் பற்றி யாழ்களத்தில் எழுதப்படும் வாதங்களுக்குப் பதில் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிற்பாடு தான் பெரியார் என்கின்ற ராமசாமி பற்றி முழுமையாக படிக்க ஆரம்பித்தேன்... படித்தபடியால் தான் வெறுப்பு அதிகமானது வேறு விடயம். உண்மையில் யாழ்களத்தில் இந்துக்களை வெறுமனே பாசிய, மதவாதம், என்ற பெயர்களோடு கருத்தெழுதுவதைத் தடுக்கப் போய், கடைசியாக நான் ஒரு இந்துத்துவாதியாக மாற்றம் பெற்றேன். அப்படி அடையாளம் செய்யப்பட்டேன். நான் நாத்திகன் இல்லைத் தான். ஆனால் கடவுள் என்று கோவில் கோவிலாக அலைபவனும் அல்ல. சீமானைப் பற்றி நீங்கள் எழுதப்போய், உங்களுக்கு அந்த நிலை தன் ஆகப் போகின்றது என எண்ணும்போது மனம் களிப்படைகின்றது...

என்ன ஒரு வில்லத்தனம்.. :lol: :lol: :lol:

தொண்ணூறுகளில் வைகோ ஐயா கட்சி ஆரம்பித்தபோது அவரது விசுவாசியாக இருந்தேன். எனது முதல் வாக்கு கூட அவரது கட்சிக்குத்தான் போட்டேன் :huh: (எப்படி என்று கேட்க வேண்டாம்.. வாக்காளர் பட்டியலில் பெயர் வந்தது போட்டுவிட்டேன்.. :lol: )

ஆனால் என்றைக்கு அதே திமுக, அதிமுக என்று கூட்டணி வைத்தாரோ.. அன்றே அவரது விசுவாசி என்கிற நிலையில் இருந்து விலகிவிட்டேன்.

சீமானுக்கு நான் விசுவாசி அல்லன். ஆனாலும் ஊகத்தின் அடிப்படையில் அவர்மீது சேறடிப்பதுக்கு நான் ஆதரவு தரவில்லை. என்றைக்கு அவர் இன்னொரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைக்கிறாரோ அன்று அவருக்காக எழுதுவதையும் கைவிடுவேன்.. :lol:

இவ்வளவு சீமான் பேச்சு கேட்டே மாறாதவன் அண்ணே இசையை விட கூடிய சீமானின் பேச்சுக்கள் கேட்பேன் ....படிப்பேன்  :lol:

சீமான் போல காமடியா பேச வேறு எவராலும் முடியாது சிரிக்க கொஞ்சம் ஓய்வுக்கு மட்டும் ஒறவுகளே  :icon_idea:

என்ன ஒரு வில்லத்தனம்.. :lol: :lol: :lol:

தொண்ணூறுகளில் வைகோ ஐயா கட்சி ஆரம்பித்தபோது அவரது விசுவாசியாக இருந்தேன். எனது முதல் வாக்கு கூட அவரது கட்சிக்குத்தான் போட்டேன் :huh: (எப்படி என்று கேட்க வேண்டாம்.. வாக்காளர் பட்டியலில் பெயர் வந்தது போட்டுவிட்டேன்.. :lol: )

ஆனால் என்றைக்கு அதே திமுக, அதிமுக என்று கூட்டணி வைத்தாரோ.. அன்றே அவரது விசுவாசி என்கிற நிலையில் இருந்து விலகிவிட்டேன்.

சீமானுக்கு நான் விசுவாசி அல்லன். ஆனாலும் ஊகத்தின் அடிப்படையில் அவர்மீது சேறடிப்பதுக்கு நான் ஆதரவு தரவில்லை. என்றைக்கு அவர் இன்னொரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைக்கிறாரோ அன்று அவருக்காக எழுதுவதையும் கைவிடுவேன்.. :lol:

ஆக கொள்கை என்பதே இல்லை தங்களுக்கு  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆக கொள்கை என்பதே இல்லை தங்களுக்கு  :D

உங்களுக்கு புரிதலில் பலத்த குறைபாடு உண்டு.. இதையே cognitive skills என்று முன்னரும் குறிப்பிட்டேன். :D

விவாதங்களில் திறந்த மனப்பான்மை (open-mindedness) என்பது மிக முக்கியம். அது துளியும் உங்களிடம் கிடையாது. புரிதல் இல்லாமையால் உருவாகும் தாழ்வு மனப்பான்மையால் எழும் பிரச்சினை இது. அதனால் என்னால் உங்களில் வருத்தம் ஏதும் ஏற்படுவதில்லை. :D

கொள்கை வழுவாத தலைவர்களைப் பின்பற்றுதலே எனது கொள்கை. உதாரணம் தலைவர். வைகோ ஐயா கொள்கை தவறியவர். ஆனாலும் நல்லவர். நல்லவராக இருப்பது மட்டும் அரசியலுக்குப் போதாது. திமுகவுடன் கூட்டணி கண்டபோதே அவர்மீதான அபிமானம் மாறிவிட்டது.

ம்ம் நானும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டணி அமைத்தவுடன் மாறி இருக்கணும் எங்க அப்ப புரில்ல கொள்கை எல்லாம்  :rolleyes:

ஆக சீமான் ஜெயாக்கு ஆதரவா களமாடியது மட்டும் இந்த கொள்கைக்குள் வராது ஈழத்தாய் அல்லவா  :D

விடாக்கண்டன் ....கொடாக்கண்டன் இசை யான்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு சீமான் ஆதரவளித்தார் என்பது கூட்டணியோடு ஒப்பீடு செய்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. எந்தக் கட்சிப் பலமும் இல்லை. எந்த ஆதரவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அதுவும் காங்கிரஸ் நின்ற தொகுதிகளில் மட்டும். அங்கே உள்ள இலக்கு காங்கிரஸ்- திமுக கூட்டணி... ||

ஐயா வைகோ ,கருணாநிதி கட்சியை விட்டு அனுப்பியபோது 13 தமிழர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர் கருணாநிதியோடு கூட்டணி வைத்தார். ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். கருணாநிதி போலவே இந்து சார்புள்ள பாஜகவோடு கூட்டணி வைத்தார்.... தன் கொள்கைக்கும் நிலைக்கும் எதிரான செயல்களை அவர் செய்தார். ஆனால் புலிகள் பற்றிய கொள்கையில் உறுதியாக நிற்க முயன்றார். அதில் இருந்து இயலுமானவரை வழுவாமல் பார்த்துக் கொண்டார்.

இதைத் தான் நிரந்தரக் கொள்கை இல்லாத தன்மை என்று சொல்லலாம்.

துயவன் அண்ணா இந்திய அரசியலில் மாறி மாறி கூட்டணி வைப்பது தவிர்க்க முடியா நிலை எனலாம் ஜெயாவும் பாஜகவின் கூட்டணி வைத்தவர் ....காங்கிராசுடன் கூட்டணி வைத்தவர் ஆக அபப்டி பார்க்க போனால் சீமான் எவருக்கும் ஆதரவா பிரச்சாரம் செய்து இருக்க கூடாது அல்லவா ..

சீமான் முதலே சொன்னது திராவிட கட்சிகள் ........ஜாதி கட்சிகள் உடன் கூட்டணி இல்லை என்று பின்னர் எப்படி திராவிட கட்சிக்கு ஆதரவு பிரச்சாரம் .......

ஆக ஜெயா ஒரு கட்டத்தில் எதிர்த்தால் கருணாநிதிக்கு ஆதரவா நிப்பார கேட்ட அம்மாவை களமாடி வீழ்த்த என்று சொல்வாரா ...

ஜெயாவை விமர்சிப்பதே இல்லை தூபி இடிப்பு ....புலியால் தனக்கு ஆபத்து என்று சொலும் போது  எல்லாம் எதுக்கு அமைதி காக்கவேணும் ..

முரண் அல்லவா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது ஆரம்பமே சறுக்கீட்டுது...... எல்லாம் தெரிஞ்சவர் சிவாஜி பாட்டை எம்ஜிஆர் பாட்டு எண்டுறார்??? :o  :D

  • தொடங்கியவர்

என்னப்பா இது ஆரம்பமே சறுக்கீட்டுது...... எல்லாம் தெரிஞ்சவர் சிவாஜி பாட்டை எம்ஜிஆர் பாட்டு எண்டுறார்??? :o:D

அவரு எம் ஜி ஆர் பாட்டு போட சொல்கிறார் அண்ணே ..☺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஏதோ முக்கியமான விசயம் என்று ஓடி வந்து பார்த்தா... ஒரு விளக்கென்றை ஆய்வாளர் தான் ஊரைசுத்தி கார் ஓடும் போது இருந்த நேரத்தில போன்ல ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்...

ரைம் பாஸ்க்கு பாட்டே கேட்டிருக்கலாம் இவர்...!

  • கருத்துக்கள உறவுகள்

... வாக்காளர் பட்டியலில் பெயர் வந்தது போட்டுவிட்டேன்.. :lol:

டங்கு, இந்திய 'தமிழரா'கிவிட்டார். வாழ்த்துக்கள்! :lol::)

welcome_aboard.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதே நிலையில் கருணாநிதி இருக்கின்றார் என்று வைத்துக் கொண்டிருந்தால் அவர் எந்த ஆதரவாக இருந்தாலும்

துயவன் இந்திய அரசியலில் மாறி மாறி கூட்டணி வைப்பது தவிர்க்க முடியா நிலை எனலாம் ஜெயாவும் பாஜகவின் கூட்டணி வைத்தவர் ....காங்கிராசுடன் கூட்டணி வைத்தவர் ஆக அபப்டி பார்க்க போனால் சீமான் எவருக்கும் ஆதரவா பிரச்சாரம் செய்து இருக்க கூடாது அல்லவா ..

சீமான் முதலே சொன்னது திராவிட கட்சிகள் ........ஜாதி கட்சிகள் உடன் கூட்டணி இல்லை என்று பின்னர் எப்படி திராவிட கட்சிக்கு ஆதரவு பிரச்சாரம் .......

ஆக ஜெயா ஒரு கட்டத்தில் எதிர்த்தால் கருணாநிதிக்கு ஆதரவா நிப்பார கேட்ட அம்மாவை களமாடி வீழ்த்த என்று சொல்வாரா ...

ஜெயாவை விமர்சிப்பதே இல்லை தூபி இடிப்பு ....புலியால் தனக்கு ஆபத்து என்று சொலும் போது  எல்லாம் எதுக்கு அமைதி காக்கவேணும் ..

முரண் அல்லவா .

- கருணாநிதியைப் பார்ப்போம். ஜெயலலிதா புலிகளை அழிக்க வேண்டும், தூக்கிப் போட வேண்டும் என்று சொன்னார். ஆனால் கருணாநிதி சொல்லவில்லை. செய்தார். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் பலர் புலிகளின் ஆதரவாளர்களாகச் சிறை சென்றார்கள். இன்றுவரை மீளவில்லை. ஜெயலலிதாவின் பலவீனம் அவரது ஆணவம். அதே வேளை அது தான் பலமும் கூட. இன்றைக்கு கருணாநிதியை எதிர்ப்பதற்காகத் தமிழ் ஆதரவு நிலையை ஜெயலலிதா எடுத்தார் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்த ஆதரவு நிலையை மழுங்கடிக்க முடியவில்லை. புலிகளால் ஆபத்து என்று அவர் நீதிமன்றில் சமீபத்தில் சொன்ன விடயம் கூட, அவர் அந்த நேரத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள. ஆனால் அதற்காக 4 பேரைப் பிடித்துப் போட்டாரா என்ன. அதே செயலைத் தானே சிறிலங்காவுக்கு ஏன் போக முடியாது என்று புலத்தில் அசலம் அடிப்பவர்கள் கொடுக்கின்றார்கள்.

இடித்ததற்கு நடராஜனும் ஒரு காரணம். அந்த விடயத்தில் ஜெயலலிதாவோடு அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அதைப் பழி வாங்க ஜெயலலிதா அப்படிச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் என்றைக்குமே அப்படித் தான். இப்போது கூட ஜெயலலிதா சிறைக்குப் போகப் போகின்றார் என்ற சூழ்நிலை வந்தபோது சுப்பிரமணியஞ்சுவாமி மீது தொடர்ச்சியாக 5 வழக்குகள் பதியப்பட்டன. ஜாமீன் வாங்கியபோது சுப்பிரமணியஞ்சுவாமி தன் நரிப்புத்தியால் அந்த 5 வழக்குகளுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு வாங்கினார்..

புலிக் கொடி பிடிக்காதே, பேசாதே என்று ஏதாவது சொல்லித் தடுத்திருப்பார். புலிகளால் ஆபத்து என ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக சீமான் ஒன்றும் பேசவில்லை என்றீர்கள் அல்லவா. சரி .. சீமான் அதை எதிர்த்தால் என்ன நடக்கும். ஜெயலலிதாவின் கோபம் உச்சமாகும். அதனால் பாதிக்கப்படப் போவது எம் மக்கள் தான். இப்போதைக்கு இந்திய அரசியலில் இருக்கின்ற ஒரே ஒரு பலம் ஜெயலலிதாவின் ஆட்சி தான். சீமான் மட்டுமல்ல, மற்றய எல்லோருக்கும் அவர் எந்த சூழலில் அதைப் பேசினார் எனப் புரிந்து கொண்டு அமையாகியிருக்கின்றனர்.

தவிர என்றைக்குமே ஜெயலலிதா புலிகளுக்கு ஆதரவாளனாகக் காட்டிக் கொண்டதில்லை. அவர் தன்னைத் தமிழ்மக்களுக்கான ஆதரவாளராகத் தான் சொல்லியிருக்கின்றார். ஈழத்தை அங்கிகரிக்க வேண்டியது பற்றியும் சொல்லியிருக்கின்றார். அதில் அவர் கருணாநிதியைப் போல ஆதரவு என்று சொல்லிவிட்டுக் கழுத்தறுப்பு வேலையாகச் செய்யவே இல்லை. இன்றைய சூழலில் எம்மிடம் எந்தப் பலமுமே கிடையாது. கிடைக்கின்ற பலத்தை வைத்துப் பாவிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம். நாளை கருணாநிதி வந்தாலும் அதை எப்படிப் பாவிப்போம் என்பதில் தான் தங்கியிருக்pன்றோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தத்தில நாங்கள் யாழ் களத்தில் ஒன்றுமே ஆகப்போகத விடயத்துக்காக விவாதம் செய்வம்... 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் படத்தை ஆந்திரா பக்கம் சென்று ஓட்டுங்கள்!!

திமுக இணையதளக் குழுவில் (பொதுவாக மதிமுக'வில் என்று கூட வைத்துக்கொள்ள்லாம்) உள்ள பெரும்பாலானோர் தெலுங்கர்களே என்பதும், அவர்கள் இந்த மண்ணில் தொடர்ந்து (நம்மை ஏய்த்துப் பிழைக்கும்) அரசியல் செய்ய எப்படியெல்லாம் தமிழ் தேசியத்தையும், தமிழர் அரசியலையும் (குறிப்பாக நாம் தமிழர் கட்சியை) இழிவாகப் பேசி வருகிறார்கள் என்பதை அறிவோம்.

இதற்கெல்லாம் உச்சகட்ட நகைச்சுவையாக சமீபத்தில் ஒரு காட்சி அரங்க்கேரியுள்ளது. ஆனால், இந்த முறை சிரிப்பு தான் வரவில்லை. மாறாக, அவர்கள் எந்த அளவிற்கு நாம் தமிழர் கட்சியின் அரசியலால் அடிபட்டு போய் இருந்தால், இப்படியெல்லாம் செய்வார்கள் என்று பரிதாபம் தான் வந்தது.

மதிமுக கட்சியைச் சேர்ந்த இல.கோபால்சாமி என்கிற இணையதள நண்பர் ஒரு காணொளி தயாரித்து வெளியிட்டுள்ளார். அதில், அவரை தெலுங்கர் என்று மற்றவர்கள் (வேறு யாரு? தமிழ் தேசிய தோழர்கள் தான்) அடையாளம் காட்டுவதாக சொல்லிவிட்டு, அவர் பள்ளியில் படித்த மனப்பாடச் செய்யுள்களை ஒப்பிக்கிறார். "ட்மில் மொலில நெரிய பாட்டு இருக்கு" எங்கிறார். மேலும், அண்ணன் சீமானின் தந்தை பெயர் செந்தமிழன் என்பதை அறியாத அறிவிலியாக, "சிலர் பேரு செந்தமிலன்னு தன்ன்னைத் தானே சொல்லிக்கிறான்" என்று மிக நாகரீகமாக தனது 'அறிவார்ந்த(?!)' கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தான் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல மேடையில் அண்ணன் சீமான் செந்தமிழில் பேச முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார். (அவர் சொன்னதை அப்படியே சொல்லவேண்டுமென்றால், "So, மொதல்ல இந்த மெறி டமில் மொலில இருக்குற செந்தமில் பாட்டை எல்லாம் மனப்பாடமா மேடையில பாடிக் காட்டிட்டு அப்புறமா செந்தமிலன்னு போடு" எங்கிறார்.

இதை இவரே சொந்தமாகச் சிந்தித்தார, அல்லது இவர் கட்சியில் இருந்து இவரை இப்படி ஒரு காணொளி தயாரிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்களா என்று தெரியவில்லை. இருப்பினும் அனைத்து கோபால்சாமிகளுக்கும் சேர்த்தே எனது பதிலை எழுத விழைகிறேன்:

மேடையில் மட்டும் செந்தமிழ் இருந்தால் போதாது. எங்கள் இனத்தின் செப்பு (பேசும்) மொழியாக அது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மொழி வாழும்.

'சீமான் மேடையில் செந்தமிழில் பேசுகிறாரா? 'என்னைப் போல தமிழ் செய்யுள்களை ஒப்பிக்கிறாரா?' என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறீகளே? கருணாநிதியிடம் அரசியல் கற்ற நீங்கள் வேறு எப்படி சிந்திப்பீர்கள்? உங்களைப் போன்ற திராவிட வந்தேரிகள், எங்களை அடிமைப்படுத்தத் தானே தமிழ் இலக்கியங்களை எல்லாம் தேர்ந்தெடுத்துப் படிக்கிறீர்கள்? இப்படி மேடையில் சங்க இலக்கியச் செய்யுள்களைக் சொல்லிக் காட்டித் தானே எம் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றீர்கள்? உங்களின் தமிழ் நடையைக் கேட்டு தன் அர்சியல் உரிமையையே உங்களிடம் அடகு வைத்தானே தமிழன்?.

ஆனால், அந்த இனத்தின் வாழ்வியல் மொழியாகக் கூடத் தமிழ் இல்லையே? அதைப் பற்றிக் யோசித்தீர்களா? யோசிக்க மாட்டீர்கள். இந்த இனத்தின் பிள்ளைகளான எங்களுக்குத் தான் அந்த கவலை இருக்கும்.

நாங்கள் இந்த இனத்துக்கான அரசியல் செய்ய வந்தவர்கள். நாள் முழுக்க உழைத்து விட்டு, காய்ந்த்த வயிறோடு மேடைக்கு முன் வந்து உட்காரும் எங்கள் சகோதரனின் வாழ்வியல் மாற்றத்திற்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லுவோமே தவிர வெறும் கைத்தட்டலுக்காகவே சங்க இலக்கியப் பாடல்களை ஒப்பிப்பதும், கிரேக்க வரலாற்றை மேய்வதும் என்பன போன்ற ஏமாற்று வேலை செய்ய வேண்டிய அவசியம் எங்க்களுக்கு இல்லை.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்: அனைத்துலக தாய்மொழி தினம் அல்லது மொழிப்போர் ஈகியர் தினத்துக்கு ஒரு கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில், அண்ணன் சீமான் பேசும்போது எப்படிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பார் என்று பார்ப்போம் (இது வரை அவரது மேடை பேச்சுக்களைக் கேட்டவன் எங்கிற முறையில் எனது கருத்தை முன்வைக்கிறேன்). தமிழ் தெருக்களில் எங்கும் தமிழ் மொழியை காண முடியாத அவல நிலையை எடுத்துரைப்பார். நமது மொழியைப் பிறமொழியுடன் கலந்து பேசுவதால் எவ்வாறு மொழி அழியும், அதணால் எப்படி இனமும் சேர்ந்த்து அழியும் என்று தெளிவுபடுத்துவார். தினமும் ஒரு தூய தமிழ் சொல்லை கற்று பேசுவோம் என்று வலியுறுத்துவார். பிற மொழி கலவாது, சரியான தமிழ் உச்சரிப்புடன் பாமரருக்கும் புரியும் நடையில் பேசுவார்.

இதுவே, உங்களை பேன்றவர்கள் (அல்லது உங்களைப் பயிற்றுவித்த கருணாநிதி போன்றோர்) இதே நிகழ்வுக்குப் பேசினால் எப்படிப் பேசுவீர்கள்? தமிழ் மொழி எவ்வளவு செம்மையானது என்பதை மட்டும் சொல்லி, கம்பராமாயனம் தொடங்கி குற்றாலக் குறவஞ்சி வரை அனைத்து செய்யுட்பாக்களையும் ஒப்பிப்பீர்கள். அந்த செய்யுளுக்கும் கூட்டத்தின் பேசுபொருளுக்கும் தொடர்புள்ளதா என்பதையும், கேட்போருக்கு புரிகிராதா என்பதையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வீர்கள். மேடைக்குக் கீழ் அமர்ந்த்து கேட்க்கும் எங்கள் இன உறவுகள் எதையும் புரியாமல் கையை மட்டும் தட்டுவார்கள். கூட்ட முடிவில் எந்த கருத்தையும் மனதில் வாங்க்கிக் கொள்ளாமல் கலைந்து செல்வார்கள். இறுதியில், எங்கள் தாய்மொழியான தமிழும் எங்கள் இனத்திற்கு தொடர்பில்லாத உங்களின் சொத்தாக மாறிப்போகும். இன்று வரை, உங்களது திராவிட அரசியல் கட்சிகள் அவ்வாறு தானே எங்களை ஆண்டு வந்துள்ளீர்கள்? மொழியயைக் கைப்பற்றி இனத்தைக் கைப்பற்றுவது தானே உங்க்களது இராசதந்திரம்?

இது வரை நாங்கள் அரசியல் தெளிவுபெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது விழித்துக்கொண்டுவிட்டோம். எங்க்கள் மக்களுக்கு என்ன கருத்துக்களை மேடையில் சொல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் படத்தை ஆந்திரா பக்கம் சென்று ஓட்டுங்கள்!!

நன்றி மதிமுகிலன்..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

இல கோபாலசாமி 

நீங்கள் தமிழராக வேண்டுமா?

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏதேச்சையாக ஒரு ஒளிப்படத்தைப் பகிர்ந்தேன் ( http://youtu.be/Il10wDNs_g8 ). அதை இத்தனை பேர் பார்பார்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதில், நான் பேசிய வட்டார வழக்கில் தமிழின் ´ழ´கர உச்சரிப்பு சரியில்லை, எனக் கூறி ´´இம்முறையும்´´ நான் தமிழன் இல்லை எனக் கூறி நிராகரித்து விட்டார்கள் நாம் டம்ளர் ஒறவுகள்... 
அய்யகோ.... நான் என்செய்வேன்!!

கணைக்கால் இரும்பொறையின் கடைசி வாரிசான பெரிய டம்ளர் சீமானிடமும், கடுங்கோ வாழியாதனின் வாரிசுகளான அவரது சின்ன டம்ளர் எடுபுடிகளிடமும், அடுத்த முறையேனும், எப்படியாவது முயன்று ´தமிழன்´ பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். இனி வரும் காலங்களில் அவர்களது தானைத் தலைவன், பிராபகரனின் தம்பி, சிந்தனை சிற்பி, சயனைடு குப்பி அண்ணன் சீமான் மேடை முழக்கம் போலவே, அசை, அளபெடை, மாத்திரை, சந்தம் தவறாது இலக்கணப் பிழை பிசிறின்றி செந்தமிழில் உச்சரிக்க பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். நீங்களும் தமிழனாக வேண்டுமெனில் இத்தகைய பயிற்சியை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

செய்யுளை மனனம் செய்து ஒப்புவித்தால் நீ தமிழன் ஆகிவிட முடியாது எனச் சொல்வதைக் கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் ஒரு டம்ளர் ´´ BA BA BLACK SHEEP பாடலைக் கூடத்தான் குழந்தைகள் பாடுகின்றன. அப்படிப் பாடுகிற குழந்தைகள் எல்லாம் இங்கிலீஷ்கார குழந்தைகளா??? ´´ எனக் கேட்டானே பாக்கணும் ... இந்த ஈடு இணையற்ற அறிவு, பகுப்பாய்வுத் திறமையின் அடிப்படையில் தான் இவனெல்லாம் தலைவனைத் தேர்ந்தெடுத்திருப்பான் போலும் என எண்ணும் பொழுது வருங்காலத் தமிழகத்தின் பிரகாசமான எதிர்காலம் கண்முன் தெரிந்தது....... ஷப்பாஆஆ... மிடில .... புல் பார்ம்ல இருக்காயிங்க....

ஆனாலும் ஒரு சிறு வருத்தம்... எப்பேர்ப்பட்ட சங்கத் தமிழ் பாடலைப் போய் போயும்போயும் பாபா பிளாக் ஷீப் பாடலோடு ஒப்பிட்டு விட்டானே என்று! அதுசரி... அந்த வேறுபாடுகள் எல்லாம் வகுத்துனரும் வழி அறிந்திருந்தால் இவன் ஏன் டம்ளராக இருக்கப் போகிறான் பாவம்...

டம்ளர் தம்பிகளா... நான் தமிழனா இல்லையா என்கிற உங்கள் சான்றிதழ் எனக்கெதற்கு? அதை வைத்து நான் என்ன நாக்கு வளிக்கவா போகிறேன்? இதோ பார்... 2009 ஆம் ஆண்டு உலகத் தமிழ் அமைப்பே என்னைப் பாராட்டி பட்டயம் அளித்துள்ளது! இதைவிடவா உன் சான்றிதழுக்கு மதிப்பு அதிகம்? இன்னொன்றும் சொல்கிறேன் கேள்... இதை நான் பெற்றுக் கொள்ளும் காலகட்டத்தில், உங்க நேசனல் லீடர், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல்வாதி ´செந்தமிழன்´ சீமான் யாரென்று கேட்டால் ஒருத்தனுக்கும் தெரியாது. ஏன் உனக்கே தெரிந்திருக்காது! இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலகட்டத்தில் இத்தகைய சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி உன் தலைவனுக்கே இருக்கவில்லை என்பதுதான் உண்மையும் கூட!!

நாம்பாட்டுக்க சிவனேன்னு புத்தகம், எழுத்து , வாசிப்புன்னு இருக்கேன்... என்னை ஏன் சீண்டிப் பாக்குறீங்க கண்ணுகளா... ஓரஞ்சாரமா போயி விளயாடுங்களேன் தம்பிகளா...

10268457_10152383072472377_8967265768206

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழை அவரே வச்சிருக்கட்டும், அழகு பார்க்கட்டுக்கும்

ஆனால்,இந்த இனத்தின் வாழ்வியல் மொழியாகக் கூடத் தமிழ் இல்லையே? அதைப் பற்றிக் யோசித்தீர்களா? யோசிக்க மாட்டீர்கள் கோபல்சாமி.வந்த நாட்டிலும் தமிழ் இல்லை சொந்த நாட்டிலும் தமிழ் இல்லை.. இந்த இனத்தின் பிள்ளைகளான எங்களுக்குத் தான் அந்த கவலை இருக்கும்.

  • தொடங்கியவர்

தாயகம் சுரேஷ் 

ஆரம்பத்தில் எதிர்த்து எழுதுறவங்களை "நீ தமிழனா" அப்படின்னு கேட்டாங்க.., 
கொஞ்ச நாள் கழிச்சு எல்லோரையும் "வந்தேறி" என்று விளக்கு பிடிச்சு பார்த்தது போல் எகிறானங்க..,
இப்பல்லாம் "திராவிட ............யா பசங்களே" அப்படின்னு தான் தொடங்குறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க 'ஒண்ணுமே' தெரியாதவங்க ,எங்கள துரோகி எண்டு சொல்வது போல்

தமிழ்நாட்டில் நீ தமிழனா எண்டு கேட்கிறாங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.