Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தமிழ் வானொலி முன்னெடுத்த மலையக மக்களுக்கான நிதி சேர் நிகழ்வு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
CTR24-Radio-seithycom-news-350.jpg

மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர்.

   

அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தமது உறவுகள் பலரை இழந்தும் தமது இருப்பிடங்களை தொலைத்தும் நிற்கும் எம் மலையக உறவுகளுக்காக கனேடிய தமிழ் வானொலியூடாக பங்கு கொண்ட எம்மக்கள் குறுகிய நேரத்துக்குள் இருபத்தைந்து ஆயிரம் டொலர்களை முன்வந்து வழங்கினர்.

சில மணி நேரங்களே நடைபெற்ற இவ்வானொலி நிகழ்ச்சியூடாக தமது உறவுகளுக்காக குரல் கொடுத்த எம்மக்கள் மலையக உறவுகள் நீண்டகாலமாக எதிர் கொண்டு வரும் அநீதிகளையூம் அரச அடக்குமுறைகளையும் பேசியதோடு மலையக தமிழர் சமூகமாக அவர்களது வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் எமது தொடர்ச்சியான பங்களிப்பும் ஆதரவூம் இருக்க வேண்டும் எனவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர் . கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சமூகமாக எமது உரிமைகளுக்காகப் போராடிவரும் நாம் அதுவும் குறிப்பாக அதே 'சிறிலங்கா நாட்டின்" இன்னொரு சமூகமாக இருந்துவரும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளிற்காக குரல் கொடுப்பதன் மூலமே அவர்களது போராட்டத்தைப் பலப்படுத்தவும் அதனுடாக எமது போராட்டத்திற்கான ஆதரவை வலுப்படுத்தவும் முடியூம் என்னும் வகையிலான காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குமான களமாக இவ்வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வாறான வகையில் ஆரோக்கியமான உரையாடல்களையும் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் உருவாக்கும் ஒரு ஊடகமாக எம்மை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில் கனடியத் தமிழ் வானொலி எம் மக்களுடன் சேர்ந்து பெருமை கொள்கின்றது. இந் நிகழ்ச்சியில் இணைந்து செயற்பட்ட மண்வாசனை அமைப்பிற்கும் மற்றும் இதில் இணைந்து பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

 

செய்தி - கனடிய தமிழ் வானொலி

 

http://seithy.com/breifNews.php?newsID=120451&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் பேய்ச் சேர்ந்தால் சந்தோசம்..!

இருபது வருடமாக சேர்த்த எந்த காசும் ஊருக்கு போனதாக எனக்கு தெரியாது .டொராண்டோவில் நாலு கட்டிடம் இருக்கு .(எல்லாம் நம்மட ஆட்கள் தான் )

  • கருத்துக்கள உறவுகள்

துன்பப் பட்ட, மக்களின்... பெயரில் சேர்த்த பணத்தை.... அந்த மக்களிடம் கொடுப்பதே... மனித தர்மம்.
மேலுள்ள குற்றச்சாட்டுக்களை, தவிர்ப்பதற்காக, கனடிய வானொலி...

அப்பணத்தை அந்த மக்களிடம், சேர்த்ததற்கான ஆதாரங்களை    வெளியிடுவது தான் முறை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துன்பப் பட்ட, மக்களின்... பெயரில் சேர்த்த பணத்தை.... அந்த மக்களிடம் கொடுப்பதே... மனித தர்மம்.

மேலுள்ள குற்றச்சாட்டுக்களை, தவிர்ப்பதற்காக, கனடிய வானொலி...

அப்பணத்தை அந்த மக்களிடம், சேர்த்ததற்கான ஆதாரங்களை    வெளியிடுவது தான் முறை. 

 

எனக்கு தொிந்து இதுவரையில் எந்த நிதி சோ்ப்புக்கும் ஆதாரங்கள் காட்டப்படவில்லை.

 

தற்போது நிா்வாக மாற்றங்களால் ஏதும் நடந்தால் சாி..!

இருபது வருடமாக சேர்த்த எந்த காசும் ஊருக்கு போனதாக எனக்கு தெரியாது .டொராண்டோவில் நாலு கட்டிடம் இருக்கு .(எல்லாம் நம்மட ஆட்கள் தான் )

 

எல்லா கருத்துக்களுடனும் உடன் படா விட்டாலும்....!

நாலு கட்டிடங்கள் மட்டும் தான் அண்ணாக்கு தொியும் போல..?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CTR24-Radio-seithycom-news-350.jpgஇயற்கை அனர்த்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மலையக உறவுகளின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உடனடியாக உதவும் முகமாக CTR வானொலியூடாக உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டதும், கனடியத்தமிழர் மட்டுமல்ல உலகப்பரப்பெங்கும் இணையத்தளமூடாக வானொலியை கேட்ட தமிழ் மக்களும் கூட வங்கி மூலமும் Pay Pal மூலமும் பணத்தினை வைப்பிலிட்டமையானது உலகப்பரப்பில் நாம் எங்கு வாழ்ந்தாலும், உலகு வாழ் எந்த தமிழர் எங்கு பாதிக்கப்பட்டாலும், நாங்கள் தமிழர்கள் என்ற இன ஒற்றுமையுடன் உதவிக்கரம் கொடுப்போம் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.   

எம் தமிழ் மலையக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அத்தனை உறவுகளுக்கும் கனடியத்தமிழர் தேசிய அவையின் மண்வாசனை வேலைத்திட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். நீங்கள் அனுப்பிய அத்தனை பணமும் மலையக மக்களின் நலனில் அக்கறையோடு உழைக்கும் திரு மனோகனேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பணம் (25,78,800.00 ரூபாய்கள்) இருபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்து எண்ணூறு ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பணம் தந்தவர்களின் விபரங்கள் இத்துடன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

 

 

http://seithy.com/breifNews.php?newsID=121134&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

CTR24-Radio-seithycom-news-350.jpg

----

அத்தனை பணமும் மலையக மக்களின் நலனில் அக்கறையோடு உழைக்கும் திரு மனோகனேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பணம் (25,78,800.00 ரூபாய்கள்) இருபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்து எண்ணூறு ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-----

 

மலையக மக்களுக்கு உதவி, தேவைப்பட்ட போது....

தனது நேயர்களிடம் இருந்து திரட்டிய நிதியை,

தகுந்த ஒருவருக்கே அனுப்பி வைத்த "கனேடிய தமிழ் வானொலிக்கு" நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க வேண்டிய விடையம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.