Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

தவிடுபொடியானது அயர்லாந்து: தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய வெற்றி

 

கான்பெராவில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணியை தென்னாப்பிரிக்கா 201 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

412 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய அயர்லாந்து 45 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அயர்லாந்து அணியில் பால்பர்னி அதிகபட்சமாக 58 ரன்களையும், அடுத்தபடியாக அதிரடி வீரர் கெவின் ஓ ப்ரையன் 48 ரன்களையும் எடுத்தனர்.

 

தென்னாப்பிரிக்க அணியில் கைல் அபாட் 8 ஓவர்கள் வீசி 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோர்கெல் 3 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிசயமாக 2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அவர் பந்தில் மூனி பவுல்டு ஆனார்.

 

அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் தாஹிர் 10 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றாமல் முடிந்தார்.

முதல் முறையாக ஒரே தொடரில் 2 முறை 200 ரன்களுக்கும் மேலான இடைவெளியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. அதே போல் அடுத்தடுத்து 400க்கும் மேல் ரன்கள் எடுத்தும் ஒரு சாதனையை நிகழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

 

10 ரன்களில் ஆம்லாவுக்கு நழுவவிட்ட கேட்ச் :

தொடக்கத்தில் வீசும் கை விக்கெட்டிலிருந்து விலகி வர, ஸ்டம்ப்களிலிருந்து விலகிச் சென்று பக்கவாட்டு கிரீஸ் அருகில் சென்று அபாரமான இன்ஸ்விங்கர்களையும், பிறகு அதே அளவில் பந்தை லேசாக வெளியே கொண்டு சென்றும் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மூனி நன்றாக வீசிவந்தார். அவர் 2 மைடன்களை தொடகத்தில் வீசி டி காக் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

 

இந்நிலையில் ஆட்டத்தின் 6-வது ஓவரை ஆல்ரவுண்டர் கெவின் ஓ ப்ரையன் வீச வந்தார். ஆம்லா அப்போது 10 ரன்களில் இருந்தார். பந்து லெக் திசை பந்து. ஆம்லா பிளிக் செய்தார். பந்து நேராக ஷார்ட் மிட்விக்கெட்டில் அனுபவமிக்க எட் ஜாய்சிடம் கேட்சாகச் செல்ல அவர் அதனை நழுவ விட்டார். அதன் பிறகுஆம்லா 159 ரன்களை விளாசினார். டு பிளேசியும் அவரும் இணைந்து 247 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஒரு நேரதில் இருவரும் இரட்டைச் சதம் அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தன.

 

அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் சோரன்சென் படுமோசமாக வீசி 6 ஓவர்களில் 76 ரன்களைக் கொடுத்தார். டிவில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்கவில்லையெனில் இன்று ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியிருக்கும். அந்தவகையில் அயர்லாந்து பிழைத்தது.

412 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய அயர்லாந்து முதல் 10.2 ஓவர்களில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதில் கைல் அபாட் 3 விக்கெட்டுக்ள், ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகள்.

 

அதன் பிறகு பால்பர்னி, கெவின் ஓ ப்ரையன் ஆடி அயர்லாந்தை ஓரளவுக்கு கேவலமான தோல்வியிலிருந்து காத்தனர் என்றே கூற வேண்டும்.

ஆம்லா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

ஆம்லா, டூ ப்ளெஸ்ஸியின் சதங்கள்

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்களைக் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டூ ப்ளெஸ்ஸி மற்றும் ஆம்லா சதமடித்தனர்.

 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் டி காக், 2-வது ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டூ ப்ளெஸ்ஸி மற்றும் ஆம்லா இணை பொறுமையாகவே ஆடியது. இருவரும் அதிரடியாக ரன் சேர்க்கவில்லை என்றாலும் நிலைத்து ஆடி சீராக ரன் சேர்த்தனர்.

ஓவருக்கு 6 ரன்களுக்கு குறையாமல் வர 35-வது ஓவருக்கு மேல், பேட்டிங் பவர்ப்ளேவைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் அதிரடியை ஆரம்பித்தனர். ஆம்லா 100 பந்துகளில் சதத்தை எட்டினார். டூ ப்ளெஸ்ஸி 109 பந்துகளில் சதத்தை எட்டினார். 39-வது ஓவரில் ப்ளெஸ்ஸி 109 ரன்களுக்கும், சில ஓவர்கள் கழித்து ஆம்லா 159 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

 

அதிகம் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய டி வில்லியர்ஸ் 24 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஆனால் அடுத்து களத்தில் இணைந்த மில்லர், ரூஸாவ் ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை மைதானத்தின் அத்தனை எல்லைகளுக்கும் விரட்டியடித்தது.

 

முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்தது. மில்லர் 23 பந்துகளில் 46 ரன்களும், ரூஸாவ் 30 பந்துகளில் 61 ரன்களும் எடுத்திருந்தனர். கடைசி 51 பந்துகளில் 110 ரன்கள் சேர்க்கப்பட்டன. முன்னதாக, ஆம்லா - ப்ளெஸ்ஸி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 247 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6955025.ece

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்னிடமிருந்து உங்களுக்குத் தலைப்புச் செய்தி கிடைக்காது: மைக்கேல் கிளார்க்
 

நியூசி. அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து ‘சரியான திட்டமிடுதல்’ இல்லை என்று மைக்கேல் கிளார்க் கூறினார், இதனால் அவருக்கும் பயிற்சியாளர் டேரன் லீ மேனுக்கும் மோதல் என்ற செய்திகள் உலா வரத்தொடங்கின.

அந்தச் செய்திகளை ஒரு அலட்சிய தோள்குலுக்கல் மூலம் நிராகரித்த மைக்கேல் கிளார்க், செய்தியாளர்களை நோக்கி, “உங்களுக்கு என்னிடமிருந்து தலைப்புச் செய்தி கிடைக்காது.’ என்றார்.

 

நாளை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பெர்த்தில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது, இந்தப் போட்டி குறித்து கூறிய மைக்கேல் கிளார்க், “இந்தப் போட்டிக்காக நாங்கள் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு தயாரிப்பில் ஈடுபட்டோம். உங்களுக்கு என்னிடமிருந்து தலைப்புச் செய்தி கிடைக்காது.

டேரன் லீ மேன் எங்களிடம் தெளிவாக என்ன எதிர்பார்க்கிறார் என்பதை கூறிவிட்டார். இலங்கைக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமை சிட்னியில் நடைபெறும் போட்டி குறித்து நாளைய ஆப்கன் போட்டி முடிந்த பிறகு அக்கறை செலுத்தலாம் என்பதையும் அவர் எங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

 

வலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மீண்டும் பேட் செய்தார். அதனால் அவருக்கு ஒன்றும் இல்லை.

நான் இப்போதுதான் தேர்வாளர் ராட்னி மார்ஷிடம் பேசிவிட்டு வந்தேன், ஆடும் 11 வீரர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பாக அனைவரது தயாரிப்புகள் பற்றி அவர் என்னிடம் கேட்டறிந்தார்.

 

ஆப்கானிஸ்தான் அணி தாங்கள் ஒரு நல்ல அணி, இந்த மட்டத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்திற்கு இது நல்லது. அதிக அணிகள் கிரிக்கெட் தொடர்களில் இடம்பெறுவது கிரிக்கெட்டை வளமடையச் செய்யும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு.” என்றார் கிளார்க்.

வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், கமின்ஸுக்கு பதிலாக இடம்பெறலாம் என்று தெரிகிறது. அதே போல் ஷேன் வாட்சன் அல்லது மிட்சல் மார்ஷ்க்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் அணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article6955173.ece

  • தொடங்கியவர்

பெரிய கிரிக்கெட் தொடர்களுக்கான அணி இந்தியா: பிராட் ஹாக்
 

 

உலகக்கோப்பை போன்ற பெரிய கிரிக்கெட் தொடர்களுக்கான அணி இந்தியா, அதனால்தான் கோப்பையை இந்தியா வெல்லும், என்கிறார் பிராட் ஹாக்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டிகளில் எழுச்சிபெற்றதையடுத்து, கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை ஏற்படுத்துவதாக ஆஸி. முன்னாள் பவுலர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறும்போது, "இந்திய அணியிடம் என்னை மிகவும் கவர்ந்திழுத்த அம்சம் ஃபீல்டிங். நான் விளையாடிய போது, எப்போதும் இந்திய பீல்டிங்குக்கு எதிராக கூடுதல் ரன்களை எடுக்கலாம் என்றே நாங்கள் நினைப்போம். குறிப்பாக பவுண்டரி அருகே பீல்டிங் இறுக்கமாக இருக்காது.

ஆனால், அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர் ஆகிய இருவரையும் ரன் அவுட் செய்தனர். இதனால் ஆட்டம் திருப்பு முனை கண்டது. தென்னாப்பிரிக்காவிடமிருந்து ஆட்டம் பறிக்கப்பட்டது.

 

பீல்டிங்கை திறம்படச் செய்வது இந்திய அணியின் பவுலர்கள், பேட்ஸ்மென்கள் மீதான சுமையைக் குறைக்கிறது. இதனால்தான் கூறுகிறேன், உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று.”

 

இவ்வாறு கூறினார் பிராட் ஹாக்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article6955347.ece

  • தொடங்கியவர்

ஊசலாட்டத்தில் பாக், ஆஸி.. வாழ்வா சாவா போட்டியில் நாளை எமிரேட்ஸ், ஆப்கனுடன் மோதல்! 

 

நேப்பியர்: உலக கோப்பையில் நாளை இரு போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நாளை மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பாகிஸ்தான் இதுவரை ஆடிய போட்டிகளில் ஜிம்பாப்வேயிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே அடுத்தடுத்த போட்டிகள் அனைத்திலும் அது வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு செல்ல முடியும்.

 

ஊசலாட்டத்தில் பாக், ஆஸி.. வாழ்வா சாவா போட்டியில் நாளை எமிரேட்ஸ், ஆப்கனுடன் மோதல்! அதே நேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, இதுவரை ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி மிக மோசமாக விளையாடி தோல்வியுற்றது. இருப்பினும் அதற்கு முந்தைய போட்டிகளில் எமிரேட்ஸ் சிறப்பான பங்களிப்பை தந்தது. எனவே, தடுமாறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு , எமிரேட்ஸ் அணி கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

மற்றொரு போட்டி பெர்த் மைதானத்தில் நாளை பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவிலுள்ள ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் ்தில் மோதுகின்றன. ஆஸ்திரேலியா இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வியடைந்துள்ளது. வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியில் இருந்து வெளியே வந்து ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

 

இப்போட்டியில் வென்றால்தான் ஆஸ்திரேலியாவால் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேநேரம், கடந்த போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. எனவே இந்த போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-cup-2015-pakistan-vs-uae-australia-vs-afghanist-222064.html

  • தொடங்கியவர்

பாகிஸ்தான்
v
ஐக்கிய அரபு அமீரகம்
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)
ஆஸ்திரேலியா
v
ஆப்கானிஸ்தான்
(14:30 local | 06:30 GMT | 07:30 CET)

  • தொடங்கியவர்

கோப்பையைத் திருப்பிக் கொடுக்க மாட்டோம்’

 

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இந்தியா என்னும் குதிரை மீது பந்தயம் கட்ட யாரும் தயாராக இல்லை. வழக்கம்போல ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்லப் பட்டது. தென்னாப்பிரிக்காவும் நியூஸிலாந்தும் ஆஸ்திரேலியாவு க்குச் சவாலாக விளங்கும் என்று கணிக்கப்பட்டது. இங்கிலாந்தும் இலங்கையும் புறக்கணிக்க முடியாத சக்திகள் என்றும், மேற்கிந்தியத் தீவுகளும் பாகிஸ்தானும் கணிக்க முடியாத சக்திகள் என்றும் சொல்லப்பட்டன.

இந்தியா? கிரிக்கெட் நிபுணர் களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளை வென்றாலே கால் இறுதிக்கு வந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் இந்தியா கால் இறுதிக்கு வரும் என்று கணித்த பண்டிதர்கள், அரை இறுதிக்கு இந்தியாவுக்கு ஆசி வழங்கத் தயாராக இல்லை.

 

 

யூகத்தை மாற்றிய இந்தியா

 

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் அனைவரது தேர்விலும் தவறாமல் இடம் பிடித்தன. நான்காவது அணி பற்றிய ஊகத்துக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்குப் பிறகுதான் இந்தியாவுக்கு ‘வாய்ப்பு’ வழங்கப்பட்டது. “திறமையான அணிதான் ஆனால்…” என்ற பல்லவிதான் பலராலும் சத்தமாகப் பாடப்பட்டது.

 

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா கடந்த சில மாதங்களாக ஆடிவரும் விதம்தான் இதற்குக் காரணம். இந்தியாவின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது, அதன் மட்டையாளர்கள் தன்னம்பிக்கையோ, தீவிரமோ இல்லாமல் காணப்படுகிறார்கள். இப்படி இருக்கும்போது எப்படிக் கோப்பைக் கனவு காண முடியும் என்னும் கேள்வி எழுப்பப்பட்டது.

இரண்டே வாரங்களில் நிலைமை மாறிவிட்டது. இன்று இந்தியா அரை இறுதியைத் தாண்டி, இறுதிப் போட்டிக்கு வரக்கூடிய அணியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அதிதீவிர ஆதரவாளர்கள்கூடத் தொடரின் தொடக்கத்தில் இத்தனை நம்பிக்கையோடு இல்லை. இப்போது அவர்கள் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் சொல்வதுபோல “திருப்பித் தர மாட்டோம்” என்று தெம்புடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

இரண்டே ஆட்டங்களில் இந்தியாவின் நிலைமை மாறிவிட்டது. பாகிஸ்தானையும் தென்னாப்பிரிக்காவையும் வென்றதும் அந்த வெற்றிகள் வந்த விதமும் இந்தியாவின் மீதான நம்பிக்கையைப் புதுப்பித்திருக்கின்றன. வலுவான அணிகளுக்கு எதிராகத் திணறாமல், தடுமாறாமல் பெற்ற இந்த நேர்த்தியான வெற்றிகள் இந்தியாவைப் பற்றிய ஐயங்களைச் சிதற அடித்தன.

 

வலிமையை மீட்ட வீரர்கள்

 

இரண்டு போட்டிகளிலும் இந்தியாவுக்கு

முதலில் மட்டை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா மட்டை வலு கொண்ட அணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த வலிமை வலுவாக வெளிப்பட்டு நாளாகிறது என்பதும் தெரியும். இலக்கைத் துரத்தும் நெருக்கடி இல்லாமல் அந்த வலிமையை மீட்டெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது. மட்டையாளர்கள் அதைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்டார்கள்.

 

இரண்டு போட்டிகளிலும் வலுவான பந்து வீச்சுக்கு எதிராக மட்டையாளர்கள் பிரகாசித் தார்கள். ஏழடி உயரம் கொண்ட முகம்மது இர்ஃபான், புயல் வேக ஸ்டெயின் ஆகிய அச்சுறுத்தல்களை அமைதியாக எதிர்கொண்டார்கள். அக்கினிப் பரீட்சைக்கு உட்பட்டுப் புடம் போட்ட தங்கமாக ஜொலித்தார்கள்.

கடுமையாகத் தடுமாறி வரும் ஷிகர் தவன் தன்னம்பிக் கையையும் தன் மீதான பிறரது நம்பிக்கையையும் மீட்டுக்கொண் டார். சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி தன் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் ஆடினார். அயல் மண்ணில் அதிகம் சோபிக்காத சுரேஷ் ரெய்னா அந்த அவப் பெயரைத் துடைத்து எறிந்தார். அயல் மண்ணில் சிறப்பாக ஆடிவரும் அஜிங்க்ய ரஹானே தன் திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.

 

அசத்திய ரஹானே

 

முதல் முப்பது ஓவர்களுக்குள் அதிக விக்கெட்களை இழக்காமல் இருந்தால் கடைசி 20 ஓவர்களில் அதிக ரன்களை அறுவடை செய்யலாம் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் சொதப்புவதை வழக்கமாகக் கொண்ட இந்தியா இந்த முறை கச்சிதமாக ஆடியது. தொடக்கத்தில் ரன் குவிக்கும் பதற்றம் இன்றி இன்னிங்ஸை நிலைபெறச் செய்வதில் கவனம் செலுத்தியது.

 

சீரான வேகத்தில் ரன் விகிதம் உயர்த்தப்பட்டது. கண்மூடித்தனமான ஆவேசம் இன்றி 300 ரன்களைக் கடந்தது. இந்திய மட்டை வலு தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய மண்ணுக்கு வெளியிலும் ரன் குவிக்கும் என்பதை இந்திய மட்டையாளர்கள் காட்டிவிட்டார்கள். டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல் ஆகியோரை தவனும் ரஹானேயும் கையாண்ட விதம் அற்புதமான மட்டை வீச்சுக்குச் சான்றாக இருந்தது.

 

கட்டுக் கோப்பான பந்துவீச்சு

 

மட்டை வலு தன் மீதிருந்த சந்தேகத்தைப் போக்கிவிட்டது என்றால், பந்து வீச்சு தன் மீது இல்லாதிருந்த நம்பிக்கையைப் பெற்றுவிட்டது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க மட்டையாளர்களுக்கு 300 என்பது அசாத்தியமான இலக்கு அல்ல. பந்து வீச்சில் சற்றே சுணக்கம் இருந்தாலும் கடுமையான தண்டனையைப் பரிசளிக்கக்கூடிய மட்டையாளர்கள் அந்த அணிகளில் இருக்கிறார்கள்.

 

ஆனால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காத விதத்தில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் வீசினார்கள். வேகப் பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பு அபாரமாக இருந்தது. வேகம் மட்டுமின்றித் துல்லியமும் கூடியிருந்தது. எகிறு பந்துகளைப் பயன்படுத்திய விதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

சுழல் பந்தில் முனைப்பும் தீவிரமும் இருந்தன. களத் தடுப்பிலும் தீவிரமும் வேகமும் கூடியது. எதிரணி மட்டையாளர்கள் முடக்கப் பட்டார்கள். இரண்டு பெரிய அணிகளை இந்தியா எளிதாக வென்றது என்று சொல்லுமளவுக்கு ஆட்டத்தின் மீது அதன் கட்டுப்பாடு வலுவாக இருந்தது.

 

அடுத்து ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் முதலில் மட்டை பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. கிறிஸ் கெய்லின் புயலுக்கோ ஏபி டிவில்லியர்ஸின் சூறாவளிக்கோ சவால் விடும் வாய்ப்பு கைநழுவியது.

என்றாலும் வலுக் குறைந்த அணியை எப்படி வெல்ல வேண்டுமோ அப்படி வென்றது. 102 ரன்னுக்குள் அவ்வணியைச் சுருட்டி, 20 ஓவர்களுக்குள் ஒரே ஒரு விக்கெட் இழப்பில் இலக்கை எட்டிக் கம்பீரமாக வென்றது.

 

நம்பிக்கை தரும் அணி

 

இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பற்றிப் பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கால் இறுதி என்பது இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காத சுற்று. அதில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். அது இந்தியாவுக்குச் சாதகமாகவே நிகழும் என்னும் நம்பிக்கையை இந்தியாவின் இதுவரையிலான ஆட்டம் நிரூபித்திருக்கிறது.

தேறாத அணி என்னும் அவப் பெயரை மாற்றி நம்பிக்கை தரும் அணிகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதே உலகக் கோப்பைத் தொடரின் முதல் பாதியில் இந்தியா செய்த சாதனை என்று சொல்லலாம். இந்தச் சாதனைக்குப் பின் இருந்த உறுதியும் தீவிரமும் தொடர்ந்தால் “திருப்பிக் கொடுக்க மாட்டோம்” என்னும் சொல் பலிக்கலாம்.

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்று சொல் லப்படுவதுண்டு. விளம்பரத்தில் சொல்லப்படும் சொல் வெல்லும் சொல்லாக மாறக்கூடும் என்னும் நம்பிக்கையை இந்திய அணி ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நம்பிக் கையை மேலும் வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் தோனி படையின் முன் உள்ள சவால்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6954573.ece?homepage=true&ref=tnwn

 

  • தொடங்கியவர்

ரங்கனவுக்கு காயம்: தயார் நிலை வீரராக சீக்குகே பிரசன்ன

 

இங்­கி­லாந்தை வெலிங்­டனில் இலங்கை வெற்­றி­கொண்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­யின்­போது விரலில் காயத்­திற்­குள்­ளான ரங்­கன ஹேரத்­திற்கு தயார் நிலை வீர­ராக சுழல்­பந்­து­வீச்­சாளர் சீக்­குகே பிர­சன்ன, அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ளார்.

ரங்­கன ஹேரத்தின் இட­துகை விரலில் ஏற்­பட்­டுள்ள காயம் குண­ம­டை­யாத பட்­சத்தில் முன்­னேற்­பா­டாக சீக்­குவே பிர­சன்­னவை அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அனுப்பி வைத்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது.

 

இங்­கி­லாந்­து­ட­னான போட்­டியில் 49 ஆவது ஓவரை வீசி­ய­போது ஜொஸ் பட்லர் ஓங்கி அடித்த பந்தைப் பிடிக்க முயற்­சித்த ரங்­க­னவின் விரலில் இரத்தம் வழியும் அள­விற்கு காயம் ஏற்­பட்­டது. இந்தக் காயத்­திற்­காக அவ­ரது விரலில் நான்கு தையல் போடப்­பட்­டுள்­ளது.

இவ­ரது காயம் குண­ம­டை­வ­தற்கு ஏழு முதல் பத்து தினங்கள் ஆகும் என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இதன் கார­ண­மாக முன்­னேற்­பாட்டின் நிமித்தம் சீக்­குகே பிர­சன்ன நேற்று இரவு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பய­ண­மா­ன­தாக  ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.

காயத்­திற்­குள்­ளா­கி­யுள்ள ரங்­கன ஹேரத், ஞாயி­றன்று நடை­பெ­ற­வுள்ள அவுஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான போட்­டியில் விளை­யா­டு­வது சந்­தேகம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் அவர் தொடர்ந்து விளை­யா­ட­மாட்டார் என்­பது அர்த்­த­மல்ல.

 

ஒரு­வேளை அவ­ரது காயம் குண­ம­டை­யாத பட்­சத்தில் தொடர்ந்து விளை­யாட முடி­யாது என தொழில்­நுட்பக் குழு தீர்­மா­னித்தால் மாத்­தி­ரமே சீக்­குகே பிர­சன்ன குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவார்.

சீக்­குகே பிர­சன்ன கடை­சி­யாக நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக வெலிங்­டனில் ஜன­வரி 29ஆம் திகதி நடை­பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார்.

அப்போட்டியில் 9.2 ஓவர்கள் பந்துவீசிய சீக்குகே பிரசன்ன 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9133#sthash.PLpdKqgK.dpuf

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை 2015: தென் ஆப்பிரிக்கா சாதனைத் துளிகள்
 

 

3

தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 3 முறை டி.ஆர்.எஸ். முறை (நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது) பயன்படுத்தப்பட்டது. உலகக் கோப்பையில் அதிக முறை டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்பட்ட ஆட்டம் இதுதான்.

100

இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட் செய்த அணிகளின் கடைசி 10 ஓவர் சராசரி 100 ரன்களாகும்.

247

அயர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா-டூ பிளெஸ்ஸி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 247 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் 2-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.

2

அயர்லாந்துக்கு எதிராக 411 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் தொடர்ந்து 2-வது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. முந்தைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா. இதுதவிர உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையிலும் 2-வது இடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்கா.

200

உலகக் கோப்பை போட்டியில் 5-வது முறையாக 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 முறை 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.

5

ஒருநாள் போட்டியில் 5 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன்மூலம் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.

ஆம்லா புதிய சாதனை

அயர்லாந்துக்கு எதிராக சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 20 சதங்களை எட்டியவர் என்ற சாதனையைப் படைத்தார் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரரான ஹசிம் ஆம்லா. அவர் தனது 108-வது இன்னிங்ஸில் (111-வது போட்டி) இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

முன்னதாக இந்தியாவின் விராட் கோலி 133-வது இன்னிங்ஸில் (141-வது போட்டி) 20 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அதை இப்போது ஆம்லா முறியடித்துள்ளார்.

இதுதவிர அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்கர்கள் வரிசையில் டிவில்லியர்ஸுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆம்லா. ஹெர்ஷெல் கிப்ஸ் 21 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டி வரலாற்றில் 20 சதங்கள் அடித்த 12-வது வீரர் ஆம்லா.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-2015-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6958156.ece

  • தொடங்கியவர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 129 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடி சதம்

Read more at: http://tamil.oneindia.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடி சதம்

Read more at: http://tamil.oneindia.com/

 

டேவிட் வார்னர் 178 out

  • தொடங்கியவர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸை 129 ரன்களில் வீழ்த்தியும் புள்ளி கணக்கில் கோட்டைவிட்ட பாகிஸ்தான்!

 

நேப்பியர்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் பாகிஸ்தானோ அடித்து நொறுக்கி 339 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேப்பியர் மைதானத்தில் இன்று காலை மோதலை தொடங்கின. டாசில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது தௌகிர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

 

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அபாரம் ஆனால், நிலைமை வேறு மாதிரி மாறிப்போனது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடி்தது நொறுக்கி 50 ஓவர்கள் இறுதியில் 339 ரன்களை குவித்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் அகமது செஷாத் 93 ரன்கள் குவித்தார். ஹரிஷ் சொகைல் 70 ரன்களும், சோயிப் மசூத் 45 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 65 ரன்களும் குவித்தனர்.

 

ரன் குவிப்பு கடைசி கட்டத்தில் அதிரடி காண்பித்த அப்ரிடி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் வகாப் ரியாசுடன் களத்தில் நின்றார். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது.

 

தொடக்கத்தில் சரிவு இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய யு.ஏ.இ அணியில், அம்ஜத் அலி 14 ரன்கள், ஆன்ட்ரி பெரேன்கர் 2 ரன்கள் எடுத்தனர். 'பாலக்காட்டு மாதவன்' கிருஷ்ண சந்திரன் 11 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து யு.ஏ.இ தடுமாறியது.

 

நடுவரிசை அருமை இருப்பினும் குர்ரம்கான் 43, சைமான் அன்வர் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மும்பையை பூர்வீகமாக கொண்டவரான யு.ஏ.இ விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 36 ரன்களும், அம்ஜத் ஜாவித் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

 

யு.ஏ.இ தோல்வி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் யு.ஏ.இ 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

வடபோச்சே இருப்பினும் யு.ஏ.இ அணியை ஆல்-அவுட் செய்வதில் பாகிஸ்தான் பவுலர்கள் கோட்டை விட்டனர். வெற்றி புள்ளிகள் அடிப்படையில், மே.இ.தீவுகளை முந்த கிடைத்த வாய்ப்பு இதனால் பாகிஸ்தானுக்கு பறிபோனது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் 2 வெற்றிகளுடன் 'மைனஸ் 0.313 புள்ளிகளுடன்' 3வது இடத்திலுள்ள நிலையில், பாகிஸ்தான், அதே 2 வெற்றிகளுடன், 'மைனஸ் 0.385' புள்ளிகளுடன் நாலாவது இடத்துக்கே வர முடிந்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/uae-wins-toss-bowls-against-pakistan-222079.html

  • தொடங்கியவர்

95 அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் ஸ்டீவ் ஸ்மித்

 


Australia 382/4 (46.2/50 ov)
Afghanistan
Afghanistan won the toss and elected to field

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் வீரர்களுக்கு ராக்கட் விடும் ஆசையில் மிகுந்த ஆர்வமோ
5 வீரர்களில் 4 வீரர்கள் வாணவேடிக்கையில் வெளியேறியுள்ளார்கள் :D
அவுஸ் 397 / 5 /48

  • தொடங்கியவர்

AUS 400/5

  • தொடங்கியவர்

ஆப்கனுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் குவிப்பு

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

Australia 417/6 (50.0 ov)
Afghanistan 87/3 (17.4 ov)

  • தொடங்கியவர்

இந்திய அணியின் உலகக்கோப்பை சாதனை உடைந்தது: 417 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 413 ரன்கள் எடுத்து இந்திய அணி வைத்திருந்த சாதனையை ஆஸ்திரேலியா இன்று முறியடித்து ஆப்கன் அணிக்கு எதிராக 417 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.

பெர்த்தில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கன் பந்துவீச்சை புரட்டி எடுத்து 417 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

 

 

2007 உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்களை இந்தியா குவித்தது இதுவரை உலகக்கோப்பை சாதனையாக இருந்தது. இன்று ஆஸ்திரேலியா, ஆப்கன் அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து புதிய உலகக்கோப்பை சாதனையை படைத்தது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 133 பந்துகளில் 19 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 178 ரன்களை எடுத்தார். அவர் அவுட் ஆகும் போது 38-வது ஓவர் நடந்து கொண்டிருந்தது. ஒருவேளை 50 ஓவர்களை அவர் ஆடியிருந்தால் ரோஹித் சர்மாவின் உலக சாதனையும் பறிபோயிருக்கலாம். அல்லது அவர் ஒரு முச்சதத்தை கூட பார்த்திருக்கலாம்.

ஸ்டீவ் ஸ்மித் 98 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிவேக உலகக்கோப்பை சதத்தை அச்சுறுத்தினார், ஆனால் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர் சகிதம் 88 ரன்களில் அவுட் ஆனார்.

 

2-வது விக்கெட்டுக்காக வார்னர், ஸ்மித் சேர்த்த 260 ரன்கள் ஆஸ்திரேலிய அணி சாதனையாகும். எந்த ஒரு விக்கெட்டுக்கும் ஆஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ஜோடி ரன்களாகும் இது.

 

ஆப்கன் அணியில் தவ்லத் சத்ரான் 10 ஓவர்களில் 101 ரன்களை விட்டுக் கொடுத்தார். அனைத்துப் பவுலர்களுக்கும் ‘சாத்துமுறை’ நடந்தேறியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் 10 ஓவர்களில் 89 ரன்களையும், ஹமித் ஹசன் 70 ரன்களையும், மொகமது நபி 84 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இந்த சாத்துமுறையிலும் ஜாவேத் அகமதி எப்படி 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார் என்பது புரியவில்லை. இவருக்குத்தான் உண்மையில் ஆட்ட நாயகன் விருது வழங்க வேண்டும்.

 

அனைத்திலும் கொடுமை டாஸ் வென்ற ஆப்கன், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததே. இது ஒன்றுதான் புரியாத புதிராக உள்ளது.

 

ஆஸ்திரேலியா முதல் 10 ஓவர்களில் 68/1, 20 ஓவர்களில் 121/1, 25 ஓவர்களில் 151/1, 30 ஓவர்களில் 203/1; 35 ஓவர்களில் 248/1; 40 ஓவர்களில் 299/2; 45 ஓவர்களில் 366/3; 50 ஓவர்களில் 417/6.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-417-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6959143.ece

  • தொடங்கியவர்

Australia 417/6
v
Afghanistan 135/8 (33.2/50 ov)

  • தொடங்கியவர்

275 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

டேவிட் வார்னர் 178 ரன்கள்; ஆப்கன் 142 ஆல் அவுட்: ஆஸ்திரேலியா சாதனை வெற்றி

 

பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 418 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய ஆப்கானிஸ்தான் 142 ரன்களுக்குச் சுருண்டது.

 

உலகக்கோப்பை வரலாற்றில் 275 ரன்கள் வித்தியாச வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய சாதனையை அன்று சமன் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா இன்று பெற்ற வெற்றி உலகக்கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி.

அதோடு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா நிகழ்த்தியது.

 

டேவிட் வார்னரின் 178 ரன்களை ஆப்கனால் எடுக்க முடியவில்லை என்பதோடு வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் எதிர்கொண்ட மொத்த பந்துகளின் எண்ணிக்கையான 270 பந்துகளைக் கூட ஆப்கன் அணி ஒட்டுமொத்தமும் சந்திக்க முடியாமல் 37.3 ஓவர்கள் அதாவது 225 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 142 ரன்களுக்கு இழந்து தோல்வி தழுவியது.

 

ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா பவுண்டரிகளில், அதாவது 4 ரன்களாக எடுத்த மொத்த ரன்கள் மட்டும் 144 ரன்கள். ஆப்கான் அணி மொத்தம் 142 ரன்கள்.

 

ஆஸ்திரேலியா பவுண்டரிகள் சிக்சர்களில் எடுத்த மொத்த ரன்கள் 228 ரன்களாகும். ஆப்கன் அணி இந்த இன்னிங்ஸ் முழுதும் அடித்த பவுண்டரிகள் 6, சிக்சர்கள் 3.

ஆப்கன் அணியின் நவ்ரோஸ் மங்கல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார்.

இந்த விவரங்களே இந்த ஆட்டத்தின் தன்மையை உணர்த்துவதாக உள்ளது. ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்திய சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியா: வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் விளாசல்

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 413 ரன்கள் எடுத்து இந்திய அணி வைத்திருந்த சாதனையை ஆஸ்திரேலியா இன்று முறியடித்து ஆப்கன் அணிக்கு எதிராக 417 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.

பெர்த்தில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கன் பந்துவீச்சை புரட்டி எடுத்து 417 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியது.

2007-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்களை இந்தியா குவித்தது இதுவரை உலகக்கோப்பை சாதனையாக இருந்தது. இன்று ஆஸ்திரேலியா, ஆப்கன் அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து புதிய உலகக்கோப்பை சாதனையை படைத்தது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 133 பந்துகளில் 19 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 178 ரன்களை எடுத்தார். அவர் அவுட் ஆகும் போது 38-வது ஓவர் நடந்து கொண்டிருந்தது. ஒருவேளை 50 ஓவர்களை அவர் ஆடியிருந்தால் ரோஹித் சர்மாவின் உலக சாதனையும் பறிபோயிருக்கலாம். அல்லது அவர் ஒரு முச்சதத்தை கூட பார்த்திருக்கலாம்.

ஸ்டீவ் ஸ்மித் 98 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிவேக உலகக்கோப்பை சதத்தை அச்சுறுத்தினார், ஆனால் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர் சகிதம் 88 ரன்களில் அவுட் ஆனார்.

 

2-வது விக்கெட்டுக்காக வார்னர், ஸ்மித் சேர்த்த 260 ரன்கள் ஆஸ்திரேலிய அணி சாதனையாகும். எந்த ஒரு விக்கெட்டுக்கும் ஆஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ஜோடி ரன்களாகும் இது.

 

ஆப்கன் அணியில் தவ்லத் சத்ரான் 10 ஓவர்களில் 101 ரன்களை விட்டுக் கொடுத்தார். அனைத்துப் பவுலர்களுக்கும் ‘சாத்துமுறை’ நடந்தேறியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் 10 ஓவர்களில் 89 ரன்களையும், ஹமித் ஹசன் 70 ரன்களையும், மொகமது நபி 84 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இந்த சாத்துமுறையிலும் ஜாவேத் அகமதி எப்படி 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார் என்பது புரியவில்லை. இவருக்குத்தான் உண்மையில் ஆட்ட நாயகன் விருது வழங்க வேண்டும்.

 

அனைத்திலும் கொடுமை டாஸ் வென்ற ஆப்கன், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததே. இது ஒன்றுதான் புரியாத புதிராக உள்ளது.

ஆஸ்திரேலியா முதல் 10 ஓவர்களில் 68/1, 20 ஓவர்களில் 121/1, 25 ஓவர்களில் 151/1, 30 ஓவர்களில் 203/1; 35 ஓவர்களில் 248/1; 40 ஓவர்களில் 299/2; 45 ஓவர்களில் 366/3; 50 ஓவர்களில் 417/6.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-178-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-142-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6959143.ece

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை வரலாற்றில் 275 ரன்கள் வித்தியாச வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும்.

ஆப்கானிஸ்தானை இன்னொரு இன்னிங்ஸ் விளையாட விட்டிருக்க முடியாதா? :D

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தானை இன்னொரு இன்னிங்ஸ் விளையாட விட்டிருக்க முடியாதா? :D

 

டொஸ்ல் வென்ற ஆப்கானிஸ்தான் ஏன் ஆஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அனுமதித்தது :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

டொஸ்ல் வென்ற ஆப்கானிஸ்தான் ஏன் ஆஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அனுமதித்தது :unsure:

இவர்கள் முதலில் துடுப்பெடுத்து ஆடியிருந்தால் ஒரு இன்னிங்ஸ்க்குள்ளே இரண்டு இன்னிங்ஸ் முடிந்திருக்கும்.. :o பிறகு பார்வையாளர்கள் பாதி டிக்கட் கட்டணத்தை திருப்பிக் கேட்டுவிடுவார்களோ என்கிற பயமே காரணம்.. :lol:

  • தொடங்கியவர்

இவர்கள் முதலில் துடுப்பெடுத்து ஆடியிருந்தால் ஒரு இன்னிங்ஸ்க்குள்ளே இரண்டு இன்னிங்ஸ் முடிந்திருக்கும்.. :o பிறகு பார்வையாளர்கள் பாதி டிக்கட் கட்டணத்தை திருப்பிக் கேட்டுவிடுவார்களோ என்கிற பயமே காரணம்.. :lol:

டிக்கெட் காசை கேட்டால் அது ICC இன் பிரச்சினை. இப்படி அவுஸ்ரேலியாவை துடுப்பெடுத்தாட விட்டு இருந்த உலக சாதனை எல்லாத்தையும் முறியடிக்க விட்டு விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.