Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமையாக போட்டார்கள். குறைந்த ஓட்டத்தை, பாகிஸ்தானின் வேகம் பாதுகாத்தது. தென் ஆபிரிக்கா மீண்டும் ஒரு முதன்மைத் தொடரில் நடுங்குகிறதா?

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்து கொண்டே இருக்கிறது

NZ vs AFG

51/4 16 overs

  • கருத்துக்கள உறவுகள்

180 சொச்சம் அடித்துள்ளார்கள்..

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா துடுப்பெடுத்தாட இருக்கிறது

  • தொடங்கியவர்

AUS 41/2 after 9.2 overs

  • தொடங்கியவர்

AUS 199/4 after 35 overs

  • கருத்துக்கள உறவுகள்

376-9-50

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது நியூசிலா

 

நேப்பியர்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து. உலக கோப்பை போட்டியில் இன்றைய 31வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது.

 

உலகக் கோப்பை கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து! இதுவரை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ஆட்டத்திலும் வென்று கால் இறுதியில் நுழைந்து இருக்கிறது. இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆப்கானிஸ்தான் 4 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் வென்றது. பரபரப்பான போட்டியில் ஸ்காட்லாந்தை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3 போட்டியில் தோற்றது. வங்காளதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம் ஆப்கன் தோற்றுப்போனது.

 

இன்றைய ஆட்டத்தில் ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாவித் அகமதி, உஸ்மான் கானி ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஆட்டத்தின் 1.3வது ஓவரில் 7 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் மட்டுமே எடுத்த போது பவுல்ட் வீசிய பந்தில் ஜாவேத் எல்.பி.டபிள்யு ஆனார். அடுத்ததாக உஸ்மான் கானி ரன் எதுவும் எடுக்காத நிலையில் வெட்டோரி வீசிய பந்தில் அவுட்டாகி வாத்து நடை நடந்தார். அடுத்து களம் இறங்கிய மங்கல் தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் அணியின் ரன்களை லாவகமாக உயர்த்தினார். இருந்தபோதிலும் வெட்டோரியின் பந்து வீச்சில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

 

தொடர்ந்து ஆப்கான் அணியின் வீரர்கள் நியூசிலாந்தின் பந்தை எதிர் கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்தனர். இருந்த போதிலும் அணியின் ஷென்வாரி தனது அணியின் ரன்களை உயர்த்த பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். அணியின் கேப்டன் முகமது நபி 1 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக களம் இறங்கிய நஜிபுல்லா தனது அதிரடி ஆட்டத்தின் திறமையால் அணியின் ரன்களை உயர்துவதற்கு கடுமையாக போராடினார். அவர் 56 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்த போது மில்னே பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

 

தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் 47.4வது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி வீரர் வெட்டோரி 4 விக்கெட்டுகளையும், பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், மில்னே 1 விக்கெட்டையும் எடுத்தனர். 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது ஆட்டத்தை தொடங்கியது.

 

நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணி 5.5 ஓவர்களில் 53 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெக்கல்லம் அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். களத்தில் இருந்த கப்தில்லுடன் கை கோர்த்த வில்லியம்சன் நிலைத்து நின்று ரன்களைக் குவிப்பதில் தீவிரம்காட்டினர். வில்லியம்சன் 45 பந்துகளில் 33 ரன்களையும் குப்தில் 76 பந்துகளில் 57 ரன்களையும் குவித்து அவுட் ஆகினர். எல்லியட் 28 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 36.1வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/new-zealand-beats-afghanistan-6-wickets-222332.html

  • தொடங்கியவர்

இலங்கையை பிரித்து மேய்ந்த ஆஸ்திரேலியா! 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவிப்பு!!

 

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியில் இலங்கை வீரர்கள் வீசிய பந்துகளை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்களைக் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ரன்களைக் குவித்து அசத்தினார். உலக கோப்பை போட்டிகளின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின.

 

இப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹேசில்வுட் மற்றும் மிட்சல் மார்ஷுக்கு பதிலாக சேவியர் டொஹர்ட்டியும், வாட்சனும் அணியில் இடம்பெற்றனர். இலங்கையை பிரித்து மேய்ந்த ஆஸ்திரேலியா! 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவிப்பு!! அதே போல் இலங்கை தரப்பிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த கருணாரத்னே மற்றும் ஹெராத், லக்மல் ஆகியோருக்கு பதிலாக சிக்குக பிரசன்னா, உபுல் தரங்கா மற்றும் சசித்ர சேனநாயகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக பிஞ்ச்சும் வார்னரும் களமிறங்கினர். பிஞ்ச் 24 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 12 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இருப்பினும் தொடக்கம் முதலே இலங்கையின் பந்துகளை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் துவம்சம் செய்தனர். ஸ்மித் 88 பந்துகளில் 72, கிளார்க் 68 பந்துகளில் 68 ரன்கள் என அசத்தினர்.

 

இதில் உச்சமாக மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் அடக்கம். இதேபோல் வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்களை எடுத்தா. ஹட்டினோ 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 25 ரன்களைக் குவித்தார். அதுவும் இதில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என ருத்ரதாண்டவமாடினார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா. இந்த அணியை வெல்ல இலங்கைக்கு இலக்காக 377 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மலிங்கா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-cup-2015-david-warner-aaron-finch-depart-uncerta-222323.html

  • தொடங்கியவர்

சர்ச்சைக்குள்ளான அவுட்- சொந்த நாட்டு அணிக்கே வேட்டு வைத்த வெஸ்ட் இண்டீஸ் அம்பயர்!

 

ஹோபர்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்துடனான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீரர் வில்லியம்ஸுக்கு அவுட் கொடுத்தார் மேற்கிந்திய தீவுகள் அணியின் அம்பயர் வில்சன். இதனால் புள்ளி பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியை அயர்லாந்து பின்னுக்குத் தள்ளிவிட்டது. உலக கோப்பை போட்டியில் நேற்று அயர்லாந்துடன் ஜிம்பாப்வே மோதிய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வில்சன் டி.வி. அம்பயராக பணியாற்றினார்.

 

நேற்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 331 ரன்களை குவித்தது. சர்ச்சைக்குள்ளான அவுட்- சொந்த நாட்டு அணிக்கே வேட்டு வைத்த வெஸ்ட் இண்டீஸ் அம்பயர்! இதையடுத்து சேஸ் செய்த ஜிம்பாப்வே 259 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அந்த அணியின் சியன் வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். இந்நிலையில் கெவின் ஓ பிரையன் வீசிய 47வது ஓவரின் 5வது பந்தை தூக்கியடித்தார் வில்லியம்ஸ். அவர் அடித்த பந்தை எல்லைக்கோட்டில் நின்றிருந்த மூனி கேட்ச் பிடித்தார்.

 

ஆனால் கேட்ச்சை பிடிக்கும் போது மூனியின் கால் எல்லைக்கோட்டை தொட்டுக்கொண்டிருந்தது டி.வி. ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. இந்த கேட்ச் குறித்த முடிவு டி.வி. அம்பயராக பணிபுரிந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வில்சனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் டி.வி. ரீப்ளேயை தெளிவாக ஆராயாமல் வில்லியம்சுக்கு அவுட் கொடுத்தார். இதனால் 6 ரன்கள் பறிபோனதுடன் ஜிம்பாப்வே அணி வில்லியம்சின் விக்கெட்டையும் இழந்தது. டி.வி. அம்பயரின் இந்த தவறான தீர்ப்பால் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே காலிறுதி வாய்ப்பையும் தவறவிட்டது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அணி இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

 

அதாவது இந்தியாவுடன் வரும் 10 ஆம் தேதியும், 15-ந் தேதி பாகிஸ்தானுடனும் மோத உள்ள அயர்லாந்து இந்த 2 ஆட்டங்களில் தோற்க வேண்டும். அதே சமயம் 5 ஆட்டங்களை ஆடி முடித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இன்னும் ஒரு ஆட்டமே எஞ்சியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டும். ஆக அயர்லாந்து அணி அடுத்து நடைபெறும் 2 ஆட்டங்களிலும் தோற்கவேண்டும், அதே சமயம் மேற்கிந்திய தீவுகள் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அது காலிறுதிக்குள் நுழைய முடியும்.

 

மாறாக ஒரு ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றுவிட்டால் மேற்கிந்திய தீவுகள் அணியின் காலிறுதி வாய்ப்பு தகர்ந்துவிடும். நேற்றைய போட்டியில் வில்சன் மட்டும் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால், அயர்லாந்து அணியின் காலிறுதி வாய்ப்பு குறைந்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகியிருக்கும். ஆனால் தனது தவறான தீர்ப்பால் சொந்த நாட்டு அணிக்கே வேட்டு வைத்து விட்டார் வில்சன்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/catch-controversy-hits-world-cup-as-sean-williams-zimbabwe-cheated-222338.html

  • தொடங்கியவர்

அதிவேக சதம்..ஒரு பந்தில் உலக சாதனையை நழுவ விட்ட ஆஸி.யின் மேக்ஸ்வெல்!

 

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை ஒரு பந்தில் நழுவ விட்டார் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல். உலகக் கோப்பை போட்டியில் இன்று சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது. அதிவேக சதம்..ஒரு பந்தில் உலக சாதனையை நழுவ விட்ட ஆஸி.யின் மேக்ஸ்வெல்!

 

அந்த அணியின் ஸ்மித் 72 ரன்களிலும், கிளார்க் 68 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், வாட்சன் ஜோடி இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தது. மேக்ஸ்வெல் 51 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் சதமடித்தார். 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் அடித்த முதல் சதம் இது. உலகக் கோப்பை போட்டியில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 சதமும் கூட. முன் கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை தகர்க்க கிடைத்த வாய்ப்பை ஒரு பந்தில் கோட்டை விட்டார் மேக்ஸ்வெல்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/maxwell-misses-on-record-222345.html

  • தொடங்கியவர்

சங்ககாரா 402  ஒருநாள் போட்டியில்  14,000 ஓட்டங்களை கடந்தார்

  • தொடங்கியவர்

213ni34.png

  • தொடங்கியவர்

SL 192/3 AFTER31.3 overs  சங்ககாரா 101 ஓட்டங்கள்  இது 24 வது ஒரு நாள் சதம்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸி.க்கு எதிரான போட்டி: ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்! சங்ககாராவும் சாதனை!!

 

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கையின் தில்ஷன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதேபோல் இலங்கையின் சங்ககரா 14,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 32வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் விளையாடின.

 

ஆஸி.க்கு எதிரான போட்டி: ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்! சங்ககாராவும் சாதனை!! இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 376 ரன்களை குவித்தது. இதையடுத்து வெற்றிக்கு 377 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.

 

2வது ஓவரில் திரிமன்னே அவுட்டானா போதும் சங்ககாராவும், தில்ஷனும் அதிரடியாக விளையாடினர். ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வீசிய 6வது ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் தில்ஷன். இதேபோல் மற்றொரு இலங்கை வீரர் குமார சங்ககாரா 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். 14,000 ரன்களை கடந்த 2வது வீரர் சங்ககாரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/tillakaratne-dilshan-hits-six-fours-off-mitchell-johnson-ove-222359.html

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை கிரிக்கெட்: 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

 

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களையே எடுத்தது. உலக கோப்பை போட்டிகளின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின.

 

இப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹேசில்வுட் மற்றும் மிட்சல் மார்ஷுக்கு பதிலாக சேவியர் டொஹர்ட்டியும், வாட்சனும் அணியில் இடம்பெற்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட்: 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா! அதே போல் இலங்கை தரப்பிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த கருணாரத்னே மற்றும் ஹெராத், லக்மல் ஆகியோருக்கு பதிலாக சிக்குக பிரசன்னா, உபுல் தரங்கா மற்றும் சசித்ர சேனநாயகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக ஃபிஞ்ச்சும் வார்னரும் களமிறங்கினர். ஃபிஞ்ச் 24 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 12 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இருப்பினும் தொடக்கம் முதலே இலங்கையின் பந்துகளை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் துவம்சம் செய்தனர். ஸ்மித் 88 பந்துகளில் 72, கிளார்க் 68 பந்துகளில் 68 ரன்கள் என அசத்தினர். இதில் உச்சமாக மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேக 2வது சதமடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் மேக்ஸ்வெல்.

 

இதில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் அடக்கம். இதேபோல் வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்களை எடுத்தா. ஹடின் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 25 ரன்களைக் குவித்தார். அதுவும் இதில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என ருத்ரதாண்டவமாடினார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா. இந்த அணியை வெல்ல இலங்கைக்கு இலக்காக 377 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கையின் மலிங்கா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் பதிலடி கொடுக்க களத்துக்கு வந்த இலங்கை அணி 2வது ஓவரில் 5 ரன்கல் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால் அதன் பின்னர் தில்ஷனுடன் கை கோர்த்த சங்ககாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதுவும் தில்ஷன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை வீசினார்.

 

60 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சங்ககாரா 107 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களைக் குவித்தார். இந்த போட்டி மூலம் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த 12வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் சங்ககாரா. பின்னர் வந்த இலங்கை வீரர்களும் முடிந்த அளவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வதில் தீவிரம்காட்டினர். ஜெயவர்த்தனே 22 பந்துகளில் 19 ரன்கள், சந்திமால் 24 பந்துகளில் 52 ரன்கள் என அசத்தினார். 42.2வது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.

 

ஆனால் பின்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 46.2 ஓவர்களில் 312 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-cup-2015-david-warner-aaron-finch-depart-uncerta-222323.html

  • தொடங்கியவர்

சங்ககாரா 'சாதனை' சதம் வீண்: ஆஸி.யிடம் வீழ்ந்தது இலங்கை
 

 

| சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற உலக சாதனையை சிட்னியில் வசப்படுத்தினார் இலங்கை வீரர் சங்ககாரா. |

உலகக் கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இப்போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

 

இதனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சதமடித்து புதிய சாதனை படைத்த சங்ககாராவின் முயற்சி வீண் ஆனது. இப்போட்டியில் அவர் 107 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.

தில்ஷன் 62 ரன்களையும், சண்டிமால் 52 ரன்களையும் சேர்த்தனர். மேத்யூஸ் 35 ரன்களையும், ஜெயவரத்தனே 19 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

 

ஆஸ்திரேலிய தரப்பில் ஃபவுல்க்னர் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், வாட்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

சங்ககாரா புதிய உலக சாதனை

 

இப்போட்டியில் சங்ககாரா 39 ரன்களை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் வசப்படுத்தினார்.

தற்போது, 402 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,065 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் சங்ககாரா இரண்டாம் இடத்தில் உள்ளார்.

463 போட்டிகளில் 18,246 ரன்கள் குவித்த ஓய்வு பெற்ற இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

 

இந்தப் பட்டியலில் 375 போட்டிகளில் 13,704 ரன்களுடன் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது. இதன்மூலம், 377 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை இலங்கைக்கு ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்புக்கு மேக்ஸ்வெல் விளாசிய அபார சதம் உறுதுணை புரிந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 24 ரன்களிலும், வார்னர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர், பொறுப்புடன் பேட் செய்த ஸ்மித் - கிளார்க் கூட்டணி அணிக்கு வலுவான ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஸ்மித் 72 ரன்களும், கிளார்க் 68 ரன்களும் சேர்த்தனர்.

 

மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக பேட் செய்து அபார சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்க பலமாக இருந்த வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். ஹிதீன் 25 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் மலிங்கா, பரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், பிரசன்னா மற்றும் தில்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6971763.ece

  • தொடங்கியவர்

50malt.png


2d9vhir.jpg

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

இங்கிலாந்து
v
பங்களாதேஷ்
(14:00 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

இக்கட்டான நிலையில் இங்கிலாந்து: இன்று வங்கத்துடன் மோதல்

 

அடியெல்டு: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால் மட்டுமே இங்கிலாந்து அணி  காலிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று அடியெல்டில் நடக்கவுள்ள ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

 

ஜோ ரூட் நம்பிக்கை:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை 4 போட்டிகளில் 3ல் தோற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். துவக்க வீரர் மொயீன் அலி, பேலன்ஸ் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும். இயான் பெல் பங்களிப்பு அதிகம் தேவை. கடந்த போட்டியில் சதம் அடித்த ஜோ ரூட் நம்பிக்கை அளிக்கிறார். கேப்டன் மார்கன் (0,17, 46, 27) தொடர்ந்து சொதப்புகிறார். இன்றாவது இவர் எழுச்சி காண வேண்டும். ஜேம்ஸ் டெய்லர், பட்லர் தங்கள் பங்கிற்கு ரன் குவிப்பில் ஈடுபடுவது அவசியம்.

 

வேகக்கூட்டணி:

பந்துவீச்சு பலமாக உள்ளது. இருப்பினும், இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தப்பட்டது. இதுவும் தோல்விக்கு வழிவகுத்தது. ஸ்டீவன், ஆண்டர்சன், வோக்ஸ், பிராட் என மொத்த வேகக்கூட்டணியும் கைகோர்க்க வேண்டும்.

 

தமிம் பலம்:

வங்கதேச அணி 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இன்றைய போட்டி தவிர, மீதமுள்ள ஒன்றில் சவால் தரும் நியூசிலாந்தை எதிர் கொள்ள வேண்டும். இதனால், இன்றைய வெற்றி கட்டாய தேவை. தமிம் இக்பால், மகமுதுல்லா துவக்கத்தில் பலம் சேர்க்கின்றனர். ‘மிடில்–ஆர்டரில்’ முஷ்பிகுர், சாகிப் கைகொடுப்பது நம்பிக்கை சேர்க்கிறது. பின் வரும் வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டால் மட்டுமே, இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம்.

பவுலிங்கில் தஷ்கின் அக்மத், நாசிர் ஹொசைன் விக்கெட் வீழ்த்துகின்றனர். ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப் பந்துவீச்சிலும் ஜொலிக்க வேண்டும். ‘வேகத்தில்’ ரூபல், கேப்டன் மொர்டசா எதிரணிக்கு தொல்லை தருவது அவசியம்.

 

வெற்றி பெறும் அணிக்கு காலிறுதி வாய்ப்பு பிரகாசமானது என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

 

http://sports.dinamalar.com/2015/03/1425834002/joerootengland.html

  • தொடங்கியவர்

BAN 176/4 after 37 overs

  • தொடங்கியவர்

6f1h11.jpg

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: வங்கதேசத்தின் மக்மதுல்லா அபார சதம்! 

 

அடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வங்கதேச வீரர் மக்மதுல்லா அபார சதமடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மக்மதுல்லா. வங்கதேசத்தின் மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி பயணித்து வருகிறார். 47 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்துள்ளது. உலக கோப்பை போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதின.

 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: வங்கதேசத்தின் மக்மதுல்லா அபார சதம்! வங்கதேசத்தின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும் காயெஸும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது இங்கிலாந்து. முதல் ஓவரின் 4வது பந்தில் காயெஸ் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். இதேபோல் தமீம் இக்பால் 2.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2.1 ஓவரில் 8 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.

 

இருப்பினும் பின்னர் வந்த சவும்ய சர்க்கார், மக்மதுல்லா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவும்ய சர்க்கார் 52 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஷகிப் அல் ஹசன் 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆனார். மக்மதுல்லா- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி இணைந்து நிதானமான நின்று ரன்களைக் குவித்தனர். 131 பந்துகளில் சதத்தை எட்டினார் மக்மதுல்லா. இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மொத்தம் 138 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில் மக்மதுல்லா அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். 47 ஓவர்களில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/england-wins-toss-bowls-against-bangladesh-world-cup-222374.html

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: 50 ஓவர் முடிவில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள்!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.