Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

சதங்களில் சாதனை படைத்த உலக கிண்ணத் தொடர் : இலங்கை அணி, குமார் சங்கக்கார முன்னிலையில்
 

 

அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து நாடு­களின் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றில் மாத்­திரம் 35 சதங்கள் குவிக்­கப்­பட்­டுள்­ளன.

உலக கிண்ண கிரிக்கெட் வர­லாற்றில் இது புதிய சாத­னை­யாகும்.

இது­வரை நடை­பெற்ற 42 போட்­டி­களில் 35 சதங்கள் குவிக்­கப்­பட்­டுள்­ளன. அணிகளைக் கருத்­திற்­கொண்டால் இலங்கை அணி­யினர் 8 சதங்­களைக் குவித்து முன்­னி­லையில் உள்­ளனர்.

 

 

தென் ஆபி­ரிக்க அணி­யினர் 5 சதங்­க­ளையும், இந்­திய அணி­யினர் 4 சதங்­க­ளையும் மேற்­கிந்­தி யத் தீவுகள் மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­யினர் தலா 3 சதங்­க­ளையும் குவித்­துள்­ளனர். பங்­க­ளாதேஷ், இங்­கி­லாந்து, அயர்­லாந்து, ஸிம்­பாப்வே ஆகி­யன தலா இரு சதங்­களைக் குவித்­துள்­ளன.

இலங்கை அணி வீரர் குமார் சங்­கக்­கார இத்­தொ­டரில் 4 சதங்­களைக் குவித்து சாதனை படைத்­துள்ளார். அவர் மேற்­படி நான்கு சதங்­க­ளையும் பங்­க­ளாதேஷ் (105), இங்­கி­லாந்து(117 ஆ.இ.), அவுஸ்­தி­ரே­லியா (104) ஸ்கொட்­லாந்து (124) ஆகிய அணி­க­ளுக்கு எதி­ரான தொடர்ச்­சி­யான 4 போட்­டி­களில் குவித்­த­மையும் புதிய சாத­னை­யாகும்.

இலங்கை அணியின் மற்­றொரு வீர­ரான தில­க­ரட்ன தில்ஷான், இந்­தி­யாவின் ஷகர் தவான், ஸிம்­பாப்­வேயின் பிரெண்டன் லெய்லர் ஆகியோர் இத்­தொ­டரில் இது­வரை தலா இரு சதங்­களைக் குவித்­துள்­ளனர்.

 

 

மேற்­கிந்­திய அதி­ரடி வீரர் கிறிஸ் கெய்ல் உலக கிண்ண வர­லாற்றில் முத­லா­வது இரட்டைச் சதத்தை (215) இம்­முறை ஸிம்­பாப்வே அணிக்­கெ­தி­ராக குவித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

1975 ஆம் ஆண்டு நடை­பெற்ற முத­லா­வது உலக கிண் ணத் தொடரில் முழு சுற்­றுப்­போட்­டி­யிலும் 6 சதங்கள் மாத்­ திரம் குவிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அத்­தொ­ட ரின் முதல் போட்­டியில் இங்­கி­லாந்து வீரர் டெனிஸ் அமிஸ் முதல் உலக கிண்ண சதத்தைக் குவித்­தி­ருந்தார்.

 

1979 இல் இரண்­டா­வது உலக கிண்ணத் தொடரில்  இரு சதங்கள் மாத்­தி­ரமே குவிக்­கப்­பட்­டன.

 

1983 இல் 3 ஆவது உலக கிண்ணத் தொடரில்  11 சதங்கள் குவிக்­கப்­பட்­டன.

 

1992 ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லியா, நியூஸிலாந்து நாடு­களில் நடை­பெற்ற 4 ஆவது உலக கிண்ணத் தொடரில்  8 சதங்கள் குவிக்­கப்­பட்­டன.

 

அண்­மைக்­கா­லத்தில் நடை­பெற்ற போட்­டி­களில் 2003 ஆம் ஆண்டு 21 சதங்­களும் இறு­தி­யாக 2011 ஆம் ஆண்டு இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ் நாடு­களில் நடை­பெற்ற போட்­டி­களில் 24 சதங்­களும் குவிக்­கப்­பட்­டி­ருந்­தன

 

சங்­கக்­கார தொடர்ந்து விளை­யாட வேண்டும் என்­கிறார் ஜய­சூ­ரிய

இதே­வேளை, இம்­முறை உலக கிண்ணத் தொட ரில் குமார் சங்­கக்­கா­ரவின் துடுப்­பாட்டம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்­வுக்­குழுத் தலை­வரும் இலங்கை அணியின் முன்னாள் தலை­வ­ரு­மான சனத் ஜய­சூ­ரி­யவும் வெகு­வாகப் புகழ்ந்­துள்ளார்.

 

 

நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுட னான காலிறுதிப் போட்டிக்காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் இலங்கை அணி­யினர் நேற்று பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, குமார் சங்­கக்­கா­ரவின் துடுப்­பாட்டம் குறித்து சனத் ஜய­சூ­ரி­ய­விடம் கேட்­கப்­பட்­ட­போது,

 

 

"சங்­கக்­கா­ரவின் துடுப்­பாட்டம் நம்­ப­மு­டி­யாத வகையில் சிறப்­பாக உள்­ளது எனத் தெரி­வித்தார். தொடர்ச்­சி­யாக நான்கு சதங்­களைக் குவிப்­பதை காண்­பது அபூர்வம். அதிஷ்­ட­வ­ச­மாக அந்த நான்கு இன்னிங்ஸ்களையும் நான் இங்கிருந்து பார்க்க முடிந்தது" என சனத் ஜயசூரிய கூறினார்.

2i06kgk.jpg

 

குமார் சங்கக்கார இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து விளையாடுவதை காண்பதற்கு நான் விரும்புகிறேன். ஆனால், எல்லாம் அவரின் கை யில் தங்கியுள்ளது" என ஜயசூரிய கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9297#sthash.nMhLjV5h.dpuf

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்குப் பின்னடைவு: 7 அடி உயர மொகமது இர்பான் விலகல்
 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் 7 அடி உயர வேகப்பந்து வீச்சாளர் மொகமது இர்ஃபான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

அடிவயிற்றுப் பகுதியில் மொகமது இர்ஃபானுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இந்த உலகக்கோப்பையில் விளையாட முடியாது என்று கூறிய பாகிஸ்தான் அணி நிர்வாகம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு மாற்று வீரரை களமிறக்கலாம் என்று தெரிகிறது.

 

ஏற்கெனவே, பாகிஸ்தான் அணி மொகமது ஹபீஸ், மற்றும் ஜுனைத் கான் காயங்களினால் இந்த உலகக்கோப்பையில் சற்றே பின்னடைவு கண்டுள்ள நிலையில் தற்போது நன்றாக வீசி வந்த மொகமது இர்ஃபானும் ஆட முடியாமல் போயுள்ளது.

 

4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் பாகிஸ்தான் ஆடி வருகிறது. ஏற்கெனவே அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் விளையாட முடியாத நிலை ஏற்பட்ட போது ஈஷன் அடில் என்ற வேகப்பந்து வீச்சாளரை பாகிஸ்தான் அணியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-7-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7003263.ece

 

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான போட்டி ‘மிகப்பெரியது’ - ஷாகிப் அல் ஹசன்
 

 

உலகசாம்பியனான இந்திய அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டி ‘மிகப்பெரிய’ ஆட்டம் என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

"எங்கள் அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய போட்டி இது என்று கூறலாம். ஏனெனில் உலகக்கோப்பையில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம். ஆனால் இது மற்றுமொரு போட்டி என்றே புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானது.

 

பெரிய அளவுக்கு மெல்போர்னில் ரசிகர்கள் கூட்டம் வரும் என்பது மிக முக்கியம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடும் போது, 70,000 ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய அனுபவம் உள்ளது. ஆனால், மெல்போர்னில் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று நான் மைதானத்தில் களமிறங்கும் வரை தெரிவிக்க இயலாது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம், இந்தியாவின் டாப் 6 வீரர்கள் பற்றிய அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது. எனக்கு தெரிந்ததை என் அணியினரிடத்தில் பகிர்ந்து கொள்வேன்.

 

இந்திய பேட்டிங் வரிசையில் உள்ள 6 வீரர்கள் உலகின் தலைசிறந்த வீரர்களாவர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் படைத்தவர்கள்.

இவர்கள் ஜோடி சேர்ந்து பெரிய அளவில் ரன்கள் குவிப்பதைத் தடுப்பது அவசியம், இதைவிடவும் முக்கியமானது இவர்களை விரைவில் வீழ்த்துவது.

 

தோனி, பதற்றமடையாத ஒரு வீரர், கேப்டன். அந்த நிதானமும் அமைதியுமே அன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலக்கை வெற்றிகரமாக அவரால் துரத்த முடிந்தது.

உலகக்கோப்பை காலிறுதியில் எந்த அணியையும் எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. நாங்கள் இப்போது நன்றாக விளையாடி வருகிறோம், எங்களது தன்னம்பிக்கை உயரத்தில் உள்ளது.” என்கிறார் ஷாகிப் அல் ஹசன்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article7003321.ece

 

  • தொடங்கியவர்

'சுண்டைக்காய்' 'சுள்ளான்' டீம்.. இந்திய வீரர்களின் எகத்தாளத்தை ஒட்டுக்கேட்ட வங்கதேச கேப்டன் 'ஷாக்'!

 

ஆக்லாந்து: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதியில் தங்களுடன் மோதும் வங்கதேச அணியை இந்திய அணி வீரர்கள் விமர்சித்ததை காதுபட கேட்ட அதன் கேப்டன் மோர்டசா அதிர்ச்சியில் உறைந்து போனாராம். இந்திய அணி கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. இந்த போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. அந்த போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர். அதே ஹோட்டலில்தான் வங்க தேச அணியும் தங்கியிருந்தது.

 

ஹோட்டலில் லிப்ட்டுக்காக இந்திய வீரர்கள் காத்திருந்தபோது, அருகில் வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசாவும் இருந்துள்ளார். 'சுண்டைக்காய்' 'சுள்ளான்' டீம்.. இந்திய வீரர்களின் எகத்தாளத்தை ஒட்டுக்கேட்ட வங்கதேச கேப்டன் 'ஷாக்'! இதனை கவனிக்காத இந்திய வீரர்கள் சிலர், காலிறுதியில் வங்க தேசத்துடன் மோதவுள்ளது குறித்து நையாண்டியாக பேசியிருக்கின்றனர். வங்கதேசம் எல்லாம் ஒரு டீமா? சுள்ளானுக.. என்ற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார்கள்.

 

இதனை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். இதனால் இந்தியாவுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று சூளுரைத்திருக்கிறாராம் அவர். கால் இறுதியில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-bangladesh-believe-they-can-upset-india-quarterfinals-222785.html

  • தொடங்கியவர்

நாக்-அவுட் போட்டியில் நாக்கு தள்ளும் தென் ஆப்பிரிக்கா, இலங்கையுடன் நாளை மோதல்! சோக வரலாறு மாறுமா?

 

சிட்னி: உலக கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் எதிலுமே வெற்றியே பெறாமல் அதிர்ச்சி தோல்வியடையும் வழக்கம் கொண்ட தென் ஆப்பிரிக்கா, நடப்பு உலக கோப்பையில், இலங்கைக்கு எதிராக, புதன்கிழமை நடைபெற உள்ள காலிறுதி (நாக்அவுட்) போட்டியில், அந்த அவப்பெயரை நீக்க துடித்துக் கொண்டுள்ளது. டி வில்லியர்ஸ், ஆம்லா, மில்லர் போன்ற பேட்ஸ்மேன்களும், ஸ்டெயின், மோர்கல் போன்ற முன்னணி பவுலர்களும், தென் ஆப்பிரிக்காவின் இந்த கனவுக்கு வடிவம் கொடுப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

 

2 தோல்வி நடப்பு உலக கோப்பையில் லீக் சுற்றுகளில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் தோற்ற தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, யு.ஏ.இ போன்ற நாடுகளுக்கு எதிராக இமாலய வெற்றிகளை பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இலங்கைக்கும் அதே கதி ஏ பிரிவில் இடம் பிடித்த இலங்கையும், நியூசிலாந்து மற்றும், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் மட்டும் தோல்வியடைந்து, பிற நாடுகளுடன் அபாரமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

நாளை காலை போட்டி தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை நடுவேயான காலிறுதி நாக்-அவுட் போட்டி சிட்னி மைதானத்தில், இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது

தென் ஆப்பிரிக்க அணி தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், ஆம்லா, மில்லர், டுமினி போன்ற அதிரடி வீரர்கள், எத்தகைய பந்து வீச்சையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர். பந்து வீச்சில், ஸ்டெயின், மோர்க்கல், இம்ரான் தாகிர் ஆகியோர் அந்த அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குறைந்த பந்துகளில் 150 ரன்களை எடுத்து டி வில்லியர்ஸ் சாதனை படைத்த மைதானம்தான் சிட்னி என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

 

இலங்கையின் பலம் இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சங்ககாரா எதிரணிகளை அச்சுறுத்தும் ஃபார்மில் உள்ளார். தொடர்ந்து 4 சதங்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் அடுத்தடுத்து, நாற்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 6 போட்டிகளில் 496 ரன்களை குவித்து நடப்பு உலக கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்களில் முதலிடத்திலுள்ளார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் தில்ஷனும் அடித்து நொறுக்கி வருகிறார்.

 

நாக்-அவுட்டுகளில் நாக்கு தள்ளும் தென் ஆப்பிரிக்காவிடம் எல்லா உலக கோப்பைகளிலும் கண்டுவரும் ஒரு பிரச்சினை என்னவென்றால், ஆரம்பத்தில் அசத்திவிட்டு, நடுவில் கோட்டைவிடுவதுதான். தென் ஆப்பிரிக்கா 1991ல் உலக கிரிக்கெட் அரங்கத்தில் பிரவேசிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டது. 1992 உலக கோப்பை தொடங்கி கடந்த 2011 உலக கோப்பை வரை, நாக் அவுட் சுற்றில்தான், நாக்கு தள்ளி மூர்ச்சையாகி விழுந்து வருகிறது தென் ஆப்பிரிக்கா.

 

முதல் உலக கோப்பை 1992 உலக கோப்பையில், காலிறுதி நாக்அவுட் சுற்றாக இல்லை. எனவே அதை தாண்டி, நாக்-அவுட் சுற்றான அரை இறுதிக்கு வந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆனால், மழை காரணமாக மாற்றப்பட்ட விதிகளின் படி 1 பந்துக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சுத்த அபத்தமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருஷ்டத்தை நொந்தபடி தோற்று வெளியேறியது தென் ஆப்பிரிக்கா.

 

மோசமான தோல்வி 1999 உலக கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ஆலன் டொனால்டின் தேவையில்லாத ஓட்டத்தால், ஆட்டம் டையில் முடிந்தது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை கணக்கிட்டு அந்த அணியே பைனலுக்கு சென்றது. தென் ஆப்பிரிக்காவின் மிக சோகமான தோல்வியாக அது பதிவானது.

 

கணக்கில் வீக் சொந்த மண்ணில் நடந்த 2003 உலக கோப்பையில், மழை காரணமாக ஆட்ட விதி மாற்றப்பட்ட போட்டியில், விதியை சரியாக கணிக்காமல் ஆடி தோற்றது தென் ஆப்பிரிக்கா.

 

நாக் அவுட்டில் வெளியேற்றம் 2011ல் காலிறுதி போட்டியின்போது நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது தென் ஆப்பிரிக்கா. இதுபோல முக்கிய தருணங்களில் காலை வாரி விடுவது தென் ஆப்பிரிக்காவின் வாடிக்கை. ஒவ்வொரு முறையும், கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்படுவதும், ஆனால் நடுக்கத்தின் காரணமாக முக்கிய போட்டிகளில் தோற்பதும் தென் ஆப்பிரிக்காவுக்கு கை வந்த கலை.

 

இலங்கை அதுல டாப் அதேநேரம், இலங்கை அணி, முக்கிய கட்டங்களில் சிறப்பாக ஆடக்கூடியது. டி20 சாம்பியனாகியுள்ள இலங்கை, கடந்த இரு உலக கோப்பைகளின்போதும், இறுதி போட்டிவரை வந்துள்ளது. 1996ல் உலக சாம்பியனாகவும் ஆகியுள்ளது. எனவே இவ்விரு அணிகளுக்கு நடுவேயான போட்டி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

வரலாறு மாறும் என்கிறார் வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கூறுகையில், "தென் ஆப்பிரிக்கா இம்முறை வரலாற்றை மாற்றி எழுதப்போகிறது. நாங்கள் அதிர்ச்சி தோல்வி அடைபவர்களாக இல்லாமல், வெற்றி பெறும் அணியாக வலம் வரப்போகிறோம். இதற்கு தென் ஆப்பிரிக்காவின் அனைத்து ஆட்டக்காரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். நம்பிக்கை... அதானே எல்லாம்!

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/south-africa-keen-shrug-off-chokers-tag-against-lanka-222799.html

  • தொடங்கியவர்

ஒரே ஒரு சதம்.. சச்சினுக்கு "ஈக்வலாக" மாறி விடுவார் குமார்!

 

சிட்னி: இலங்கையின் குமார் சங்கக்கரா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் விழுந்து எழுந்து கொண்டுள்ளன. இந்தியாவின் பேட்டிங் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரை அவர் ஓவர் டேக் செய்வாரா என்ற எதிர்பார்ப்பால்தான் இந்த ஆர்வம். நாளை நடைபெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. சிட்னியில் இப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

 

ஒரே ஒரு சதம்.. சச்சினுக்கு அபாரமான பார்மில் தற்போது சங்கக்கரா உள்ளார். கடைசி போட்டிகளில் அவர் அடித்த அடி யாராலும் மறக்க முடியாதது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது. இதுவரை நான்கு சதங்களை அவர் உலகக் கோப்பைப் போட்டியில் போட்டுள்ளார். நங்கூரம் போல இலங்கை அணியைக் காத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது புதிய சாதனை படைக்கும் ஒரு வாய்ப்பு சங்கக்கராவுக்கு வந்துள்ளது.

 

உலகக் கோப்பைப் போட்டியில் அதிக அளவில் சதம் போட்ட சாதனை சச்சினிடம் உள்ளது. அதாவது 6 சதம் போட்டுள்ளார் சச்சின்.

 

சங்கக்கராவிடம் நான்கு சதம் உள்ளது. மொத்தமாக அவர் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 5 சதங்கள் போட்டுள்ளார். இன்னும் ஒரு சதம் போட்டால் அவர் சச்சின் சாதனையை சமன் செய்யலாம்.

 

நாளைய காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறினால், அங்கும் சதம் போட்டால் அவர் புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. 37 வயதான சங்கக்கரா தற்போது உள்ள பார்மைப் பார்த்தால், வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உண்டு என்றே தோன்றுகிறது.

 

சச்சின் 1992ம் ஆண்டு முதல் 2011 வரை விளையாடி 6 சதங்களைப் போட்டுள்ளார்.

 

ஆனால் சங்கக்கராவோ 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் 4 சதம் போட்டுள்ளார்.

 

சங்கக்கராவை அடக்கி ஒடுக்க தனித் திட்டம் தீட்டி வருவதாக தென் ஆப்பிரிக் கேப்டன் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். அதை மீறி பட்டையைக் கிளப்பும் பட்சத்தில் சங்கக்கராவுக்கு சச்சின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்புள்ளது.

 

சச்சின் 44 இன்னிங்ஸ்கள் ஆடி 6 சதம் போட்டுள்ளார்.

 

சங்கக்கரா 34 இன்னிங்ஸ்கள் ஆடி 5 சதம் போட்டுள்ளார்.

 

ரிக்கி பான்டிங் 42 இன்னிங்ஸ் ஆடி 5 சதம் போட்டுள்ளார்.

 

ஏப் டிவி்லியர்ஸ் 21 இன்னிங்ஸ் ஆடி 4 சதம் போட்டுள்ளார்.

 

கங்குலி 21 இன்னிங்ஸ் ஆடி 4 சதம் போட்டுள்ளார்.

 

மார்க் வாக் 21 இன்னிங்ஸ் ஆடி 4 சதம் போட்டுள்ளார்.

 

இலங்கையின் திலகரத்னே, ஜெயவர்த்தனே ஆகியோரும் தலா 4 சதம் போட்டுள்ளனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/chance-sangakkara-equal-tendulkar-s-world-cup-record-222771.html

  • தொடங்கியவர்

"இது அவுட்டா இல்லையா ஓவர் ஓவர்.. அது அவுட்டுதான் ஓவர் ஓவர்.. சரிதான் ஓவர் ஓவர்!!!!"

 

அடிலைட்: உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளின்போது ஆன்பீல்ட் அம்பயர்களுக்கும், டிவி அம்பயர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை ரசிகர்களும் கேட்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இது முதல் முறையாகும். நாளை முதல் உலகக் கோப்பைப் போட்டியில் நாக் அவுட் போட்டிகள் தொடங்குகின்றன. சிட்னியில் முதல் காலிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. நாளையிலிருந்து தொடங்கும் நாக் அவுட் போட்டிகளின்போது வீரர்கள் கேட்கும் அப்பீல்கள் தொடர்பாக, ஆன்பீல்ட் அம்பயர்களும், டிவி அம்பயர்களும் ஆலோசனை நடத்துவதை அனைவரும் கேட்க ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது.

 

போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அம்பயர்களுக்குள் பேசிக் கொள்வதை நேரடியாக ஒலிபரப்பும். இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த ஒரு நாள் போட்டித் தொடரின்போது பரீட்சார்த்த சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதை உலகக் கோப்பையில் ஐசிசி அறிமுகம் செய்கிறது. நடுவர் தீர்ப்புகளை எதிர்த்து அப்பீல் செய்வது, டிஆர்எஸ் உள்ளிட்ட அனைத்து ஆலோசனைகளையும் ரசிகர்களும் இனி நேரில் கேட்க முடியும்

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/new-at-world-cup-listen-tv-umpire-communications-during-kno-222792.html

  • தொடங்கியவர்

ஏம்ப்பா தம்பி கையைப் புடுச்சு இழுத்தியா....? 

 

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிவி வர்னணையாளர் மார்க் நிக்கோலஸைப் பார்த்து இனவாத வார்த்தையை அவர் பயன்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் தான் சொன்னது நிச்சயம் அப்படிப்பட்ட வார்த்தை இல்லை என்று அப்ரிடி மறுத்துள்ளார். உண்மையில் தான் என்ன சொன்னேன் என்பதே தனக்குத் தெரியவில்லை என்றும் அப்ரிடி கூறியுள்ளார். ஏம்ப்பா தம்பி கையைப் புடுச்சு இழுத்தியா....? அயர்லாந்துடன் மார்ச் 15ம் தேதி நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மோதியது. போட்டி இடைவேளையில், அப்ரிடியை மார்க் நிக்கோலஸ் பேட்டி கண்டார்.

 

அப்போது நிக்கர் என்ற வார்த்தையை அப்ரிடி பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. கருப்பர் என்று பொருள்படும் படியான வார்த்தை இது. இதனால் சர்ச்சை வெடித்துள்ளது. இருப்பினும் தான் அப்படிப் பேசவில்லை என்றும், தான் பேசியது சரியாக தனக்கே புரியவில்லை என்றும் அப்ரிடி மறுத்துள்ளார். அயர்லாந்து அணியை இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது நினைவிருக்கலாம். காலிறுதிப் போட்டியில் மார்ச் 20ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/shahid-afridi-lands-controversy-ahead-world-cup-quarter-final-222812.html

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் Thanks my niggar என்று சொல்வதுமாதிரி உள்ளது. ஆனால் Thanks Mark Nicholas என்று சொல்ல வந்தாரோ தெரியவில்லை. Tongue slip ஆகிட்டுது.. :lol:

  • தொடங்கியவர்

ஜஸ்ட்' 3 தான்.. பிரிச்சு மேஞ்சுரலாம்.. 'தில்'லாக பேசும் ரெய்னா!

 

மெல்போர்ன்: வெறும் 3 போட்டிகள்தான் நம் முன் இப்போது உள்ளவை. அதை வென்றால் உலகம் நமது கையில் என்று உலகக் கோப்பை குறித்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இந்த மூன்று முக்கியப் போட்டிகளிலும் இந்தியா மிகுந்த கவனத்துடன் ஆடினால் போதும், உலகக் கோப்பையை வெல்லலாம் என்றும் ரெய்னா் கூறியுள்ளார். 'ஜஸ்ட்' 3 தான்.. பிரிச்சு மேஞ்சுரலாம்.. 'தில்'லாக பேசும் ரெய்னா! காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி குறித்துத்தான் ரெய்னா இப்படிப் பேசியுள்ளார்.

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியின்போது பார்முக்கு வந்தார் ரெய்னா. கடைசி லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய ரெய்னா சதம் போட்டார். சுரேஷ் ரெய்னா முக்கிய கட்டத்தில் பார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மார்ச் 19ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் வங்கதேசத்தை காலிறுதிப் போட்டியில் இந்தியா சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியில் ரெய்னாவின் ஆட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது.

 

உலகக் கோப்பை குறித்து ரெய்னா கூறுகையில், காலிறுதியை வெல்ல நாங்கள் முனைப்புடன் உள்ளோம். நல்ல அணி நம்மிடம் உள்ளது. அனைவரும் சிறப்பாக உள்ளனர், செயல்படுகின்றனர். அனைத்தும் சிறப்பாக நடந்தால், 3 போட்டிகள் மட்டுமே. கோப்பை நமது கையில் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதமாக நாம் காட்டி வந்த அனைத்துத் திறமைகளையும் மொத்தமாக வெளிப்படுத்தி ஆடினால் போதும். வெற்றியைத் தொட்டு விடலாம் என்றார் ரெய்னா.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/winning-world-cup-it-s-about-3-crucial-game-says-suresh-raina-222781.html

  • தொடங்கியவர்

தென் ஆப்ரிக்கா
v
ஸ்ரீலங்கா
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

உலகக்கோப்பையில் இதுவரை 19,122 ரன்கள் குவிப்பு
 

 

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து மைதானமான ஹாமில்டனில் அதிக சிக்சர்கள், பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஹாமில்டன் மைதானத்தில் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் 51 சிக்சர்கள் 153 பவுண்டரிகளும் விளாசப்பட்டுள்ளன. ஆகக்குறைந்த சிக்சர்கள் அடிக்கப்பட்ட மைதானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில். இங்கு 4 சிக்சர்கள் மட்டுமே இந்த உலகக்கோப்பையில் அடிக்கப்பட்டுள்ளது.

 

பேட்ஸ்மென்கள் எதிர்பார்க்கும் உயரத்தில் பந்துகள் எழும்புவதும், பக்கவாட்டு ஸ்விங் அதிகம் இல்லாததும், பேட்ஸ்மென்கள் பந்துகளை வரும் திசையிலேயே நேராகவும், கொஞ்சம் ஷார்ட்டாக பிட்ச் செய்தால் கூட குறைந்த தூரம் உள்ள பக்கவாட்டு பவுண்டரிகளுக்கு சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாச முடிந்துள்ளது.

 

ஒட்டுமொத்தமாக இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 21,593 பந்துகளில் 19,122 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் 35 சதங்கள், 96 அரைசதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 71 பேட்ஸ்மென்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர். ஓவருக்கான ரன் விகிதம் 5.31.

பந்துவீச்சாளர்களுக்கு இந்த உலகக்கோப்பை போட்டிகள் எவ்வளவு பாரபட்சமாக இருந்து வருகிறது என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

 

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் 10,482 பந்துகளில் 9,471 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 21 சதங்கள், 44 அரைசதங்கள் அடங்கும். நியூசிலாந்தில் 11,111 பந்துகளில் 9,651 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 14 சதங்கள், 52 அரைசதங்கள் அடங்கும். மொத்தம் 388 சிக்சர்களும் 1862 பவுண்டரிகளும் விளாசப்பட்டுள்ளன.

 

388 சிக்சர்களில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சிக்சர்கள் எண்ணிக்கை 169. பவுண்டரிகளின் எண்ணிக்கை 893.

நியூசிலாந்து மைதானங்களில் 219 சிக்சர்கள், 969 பவுண்டரிகள்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-19122-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7003764.ece

 

  • தொடங்கியவர்

SL BAT FIRST

  • கருத்துக்கள உறவுகள்

SL 133 all out !!!

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் சுருண்டது இலங்கை! தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 134 ரன்கள் இலக்கு

 

சிட்னி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான, சிட்னி மைதானத்தில், தென் ஆப்பிரிக்கா-இலங்கை நடுவே காலிறுதி நாக்-அவுட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். குசால் பெரேரா, தில்ஷன் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

 

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் சுருண்டது இலங்கை! தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 134 ரன்கள் இலக்கு அணியின் ஸ்கோர் 2 ஓவர்களில் 3 ரன்களாக இருந்தபோது, குசால் பெரேரா 3 ரன்களில் கைல் அப்பாட் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் தில்ஷனுடன், சங்ககாரா ஜோடி சேர்ந்தார். ஆனால், தில்ஷனோ, 7 பந்துகளை சந்தித்த நிலையில், டேல் ஸ்டெயினின் அற்புதமான பந்தில், ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த டுப்ளிசிசிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதன்பிறகு திரிமன்னே சற்று அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில், சங்ககாராவோ நிதான ஆட்டத்தை கையாண்டார். 48 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த திரிமன்னே, இம்ரான் தாகிர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

இதையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் மகேலா ஜெயவர்த்தனேயும், 16 பந்துகளை சந்தித்து, 4 ரன்கள் மட்டுமே எடுத்து தாகிர் பந்து வீச்சில், டுப்ளசிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 23.1 ஓவர்களில், 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில், சங்ககாராவுடன், கேப்டன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், டுமினி பந்து வீச்சில் டு பிளெசிசிடம் கேட்ச் கொடுத்து மேத்யூஸ் 19 ரன்களில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிவடைந்ததால் பேட்டிங் பவர் பிளேயை தேர்ந்தெடுத்தது இலங்கை. சங்ககாரா அடித்து ஆட ஆரம்பித்தார்.

 

அப்போது, மோர்க்கல் பந்து வீச்சில், பவுண்டரி எல்லையில் நின்ற மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் சங்ககாரா. அவர் 96 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல், விக்கெட்டை தாரை வார்த்து சென்றார். 37.2 ஓவர்களில் இலங்கை 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டுமினி 3 விக்கெட்டுகளையும், தாகிர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 134 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தை தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா இதுவரை நாக்-அவுட் சுற்றுகளை தாண்டிய வரலாறு கிடையாது. இம்முறை அந்த வரலாற்றை மாற்றி எழுதுமா தென் ஆப்பிரிக்கா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/18-sl-won-the-toss-elected-bat-222822.html

  • தொடங்கியவர்

நாட்டாமையே நாட்-அவுட்டுன்னாலும், 'தானாக முன்வந்து' அவுட்டான குலசேகரா!

 

சிட்னி: பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறிய நிலையில், அம்பயர் அவுட் தராமலேயே, நேர்மையாக நடையை கட்டினார் இலங்கை வீரர் நுவான் குலசேகரா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நாட்டாமையே நாட்-அவுட்டுன்னாலும், 'தானாக முன்வந்து' அவுட்டான குலசேகரா!  115 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தபோது, 7வது விக்கெட்டாக களமிறங்கினார் குலசேகரா.

 

மறுமுனையில், குமார் சங்ககாரா நீண்ட நேரமாக, போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவருக்கு கம்பெனி கொடுத்தால் மட்டும் போதும், என்றுதான் அணி கேப்டன் மேத்யூஸ், குலசேகராவுக்கு அட்வைஸ் செய்து களம் அனுப்பி வைத்தார். குலசேகரா 1 ரன் எடுத்திருந்தபோது, டுமினி வீசிய சுழற்பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பர் டி காக்கின் கைகளில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து, டுமினி, அம்பையரை நோக்கி முறையிட்டார். விக்கெட் கீப்பரும், அவுட் கேட்டார்.

 

ஆனால், அம்பையர் அசரவில்லை. அவுட் இல்லை என்று தலையை ஆட்டிவிட்டார். ஆனால், இதையெல்லாம் பார்த்த பிறகும், குலசேகராவோ, பெவிலியனை நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தார். இக்கட்டான நேரத்திலும், பேட்டில் பந்து பட்டதை மறைத்து விளையாட குலசேகரா விரும்பவில்லை. நேர்மையான முறையில், வெளியேறிவிட்டார். 2003 உலக கோப்பை அரையிறுதியின்போது, ஆஸ்திரேலியா-இலங்கை மோதிய போட்டியில், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் இப்படித்தான் அம்பையர் அவுட் இல்லை என்ற பிறகும் நடையை கட்டினார். அதைவிட நெருக்கடியான ஒரு சூழ்நிலையில், இன்று குலசேகரா நேர்மையை கடை பிடித்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/kulasekara-walks-away-from-the-crease-even-after-umpire-says-not-out-222843.html

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். ஆனால் இப்படிச் சொதப்புவார்கள் என்று நினைக்கவில்லை !

 

தென்னாபிரிக்கா ஆடிவரும் விதத்தைப் பார்க்கும்போது இதேகளத்தில்தானா இலங்கையும் ஆடியது என்று வியப்பாக இருக்கிறது. 

 

இன்றைய தோல்விக்கு சங்கக்காரவின் அதி நிதானமும் ஒரு காரணம்.


நாட்டாமையே நாட்-அவுட்டுன்னாலும், 'தானாக முன்வந்து' அவுட்டான குலசேகரா!

 

சிட்னி: பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறிய நிலையில், அம்பயர் அவுட் தராமலேயே, நேர்மையாக நடையை கட்டினார் இலங்கை வீரர் நுவான் குலசேகரா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நாட்டாமையே நாட்-அவுட்டுன்னாலும், 'தானாக முன்வந்து' அவுட்டான குலசேகரா!  115 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தபோது, 7வது விக்கெட்டாக களமிறங்கினார் குலசேகரா.

 

மறுமுனையில், குமார் சங்ககாரா நீண்ட நேரமாக, போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவருக்கு கம்பெனி கொடுத்தால் மட்டும் போதும், என்றுதான் அணி கேப்டன் மேத்யூஸ், குலசேகராவுக்கு அட்வைஸ் செய்து களம் அனுப்பி வைத்தார். குலசேகரா 1 ரன் எடுத்திருந்தபோது, டுமினி வீசிய சுழற்பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பர் டி காக்கின் கைகளில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து, டுமினி, அம்பையரை நோக்கி முறையிட்டார். விக்கெட் கீப்பரும், அவுட் கேட்டார்.

 

ஆனால், அம்பையர் அசரவில்லை. அவுட் இல்லை என்று தலையை ஆட்டிவிட்டார். ஆனால், இதையெல்லாம் பார்த்த பிறகும், குலசேகராவோ, பெவிலியனை நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தார். இக்கட்டான நேரத்திலும், பேட்டில் பந்து பட்டதை மறைத்து விளையாட குலசேகரா விரும்பவில்லை. நேர்மையான முறையில், வெளியேறிவிட்டார். 2003 உலக கோப்பை அரையிறுதியின்போது, ஆஸ்திரேலியா-இலங்கை மோதிய போட்டியில், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் இப்படித்தான் அம்பையர் அவுட் இல்லை என்ற பிறகும் நடையை கட்டினார். அதைவிட நெருக்கடியான ஒரு சூழ்நிலையில், இன்று குலசேகரா நேர்மையை கடை பிடித்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/kulasekara-walks-away-from-the-crease-even-after-umpire-says-not-out-222843.html

 

 

ரொம்பத் தேவைதான் !!!!

  • தொடங்கியவர்

ஓய்வு பெறும் சங்ககாராவுக்கு வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து! நெகிழும் ரசிகர்கள்

 

சிட்னி: உலக கோப்பை தொடருடன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லிய சங்ககாரா இன்று அவுட் ஆன அடுத்த நொடியே மழை பெய்ய தொடங்கியது. வருண பகவானே அவரை வாழ்த்தி வழியனுப்பினார் என்று புகழ்கின்றனர் அவரது ரசிகர்கள். இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா நடப்பு உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். கடைசி தொடர் என்பதால், சங்ககாரா முழு உத்வேகத்துடன் ஆடி வந்தார். லீக் சுற்றில் 6 போட்டிகளில் ஆடி, தொடர்ந்து 4 சதங்களையும் விளாசி, ரன் குவிப்பில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் சங்ககாரா 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 

சதம் மிஸ்சிங் இதன்மூலம் தொடர்ந்து 5வது முறையாக செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. நல்ல டச்சில் இருந்த சங்ககாரா, மறுமுனையில், 8 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால், வேறு வழியில்லாமல், அடித்து ஆட தொடங்கி அவுட் ஆனார்.

 

சங்ககாராவுக்கு கடைசி போட்டி.. அவர் அவுட் ஆகும்போது இலங்கை 129 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது, இலங்கை தோல்வியடைய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. எனவே, இந்த போட்டிதான், சங்ககாராவுக்கு கடைசி போட்டியாகவும் அமையும் என்ற கவலை ரசிகர்களை தொற்றியது.

 

வந்தார் வருண பகவான் அப்போதுதான், அந்த சம்பவம் நடந்தது. ஆம்.. சங்ககாரா அவுட் ஆகி பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், திடீரென மழை கொட்டோ கொட்டு என கொட்டத் தொடங்கியது.

 

வானிலை இலாகாவே திணறல் சிட்னியில் இன்று வானம் தெளிவாக இருக்கும் என்று வானிலை இலாகா அறிவித்திருந்த நிலையில், இந்த மழை சங்ககாரா ரசிகர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துள்ளது.

 

ரசிகர்களின் பாசம் சங்ககாரா உலகத்தரம் மிக்க வீரர் மட்டுமின்றி, மனித நேயம் உள்ளவராகும். எனவே, அவர் அவுட் ஆகும்போது, வருண பகவானே மழை தூரி வாழ்த்து தெரிவித்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மழை பெய்ததால், ரசிகர்களும், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். சங்ககாராவுக்கு இயற்கையே 'ஸ்டாண்டிங் ஓவேசன்' மரியாதை கொடுக்க செய்ததாகவும், சமூக வலைத்தளங்களில் சங்ககாரா ரசிகர்கள் உருகிவருகின்றனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/rain-stops-play-at-the-scg-when-sangakkara-got-out-222844.html


எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். ஆனால் இப்படிச் சொதப்புவார்கள் என்று நினைக்கவில்லை !

 

தென்னாபிரிக்கா ஆடிவரும் விதத்தைப் பார்க்கும்போது இதேகளத்தில்தானா இலங்கையும் ஆடியது என்று வியப்பாக இருக்கிறது. 

 

இன்றைய தோல்விக்கு சங்கக்காரவின் அதி நிதானமும் ஒரு காரணம்.


 

 

ரொம்பத் தேவைதான் !!!!

 

தொடர்ந்து இடைவிடாது அடுத்த பக்கம் விக்கெட்டுகள் சரியும்போது என்ன செய்ய முடியும்?
 

  • தொடங்கியவர்

Breaking Now மெல்போர்னில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை இலாகா அறிவிப்பு

Read more at: http://tamil.oneindia.com/


இந்தியா-வங்கதேசம் நடுவேயான காலிறுதி போட்டிக்கு மழையால் குறுக்கீடு ஏற்பட வாய்ப்பு

 

  • தொடங்கியவர்

உகோ காலிறுதி: தென் ஆப்பிரிக்கா-இலங்கை போட்டி பதிவுகள்

 

 

இலங்கையை ஊதிய தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி

 

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதியில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சிட்னியில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாக்-அவுட் சுற்றில் தன் முதல் வெற்றியைச் சுவைத்தது தென் ஆப்பிரிக்கா.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, தென் ஆப்பிரிக்காவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றுக்கு முன்னால் சரணடைந்து 133 ரன்களுக்கு உணவு இடைவேளைக்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த்து. ஜே.பி.டுமினி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட், இம்ரான் தாஹிர் என்று அனைவரும் மிகச்சிறப்பாக வீசினர்.

 

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆம்லா (16) விக்கெட்டை மட்டும் இழந்து 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 18 ஓவர்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

 

ஆம்லா விக்கெட்டை மலிங்கா கைப்பற்றினார். தேர்ட் மேன் திசையில் ஆம்லா தூக்கி அடிக்க அதனை மிக அருமையாக குலசேகரா கேட்ச் பிடித்தார்.

அதன் பிறகு குவிண்டன் டி காக் (78), டு பிளெஸ்ஸிஸ் (21) இணைந்து மேலும் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இலக்கை எட்டினர். முரளிதரனின் ‘டூப்ளிகேட்’ என்று டாஸ் போடும் போது கேப்டன் மேத்யூஸ் வர்ணித்த குஷால் என்ற ஆஃப் ஸ்பின்னருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

ஆம்லா ஆட்டமிழந்த பிறகு உணவு இடைவேளை தருணத்தில் தென் ஆப்பிரிக்கா 6.4 ஓவர்களில் 40/1 என்று இருந்தது. அதன் பிறகு டி காக் சில அருமையான பவுண்டரிகளை அடித்து 9 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிறகு 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழந்தார். டுபிளெஸ்ஸி 31 பந்துகளில் பவுண்டரி எதுவும் இல்லாமல் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

 

 

இருவரும் இணைந்து 11.2 ஓவர்களில் 94 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் மலிங்கா வீசிய பந்தை கவர் திசையில் பளார் பவுண்டரி அடித்தார் டி காக் அதுவே வெற்றி ரன்களாக அமைந்தது. தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

 

மிகவும் நெருக்கமான, கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் காலிறுதிப் போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் ஒன்றுமில்லாமல் போனது. நாக்-அவுட் சுற்றில் முதல் தடையை மிகவும் சுலபமாக தென் ஆப்பிரிக்கா தாண்டியுள்ளது. அடுத்து அரையிறுதியில் களமிறங்கும் போது தென் ஆப்பிரிக்க அணி நிச்சயம் பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

 

இலங்கையை 133 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா

உலகக் கோப்பை முதல் காலிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 133 ரன்களில் தென் ஆப்பிரிக்கா சுருட்டியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, 37.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் என்ற சற்றே எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

தென் ஆப்பிரிக்காவின் அபாரப் பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்கள் ரன் சேர்க்க தவித்து பெவிலியன் திரும்பினர். சங்ககாரா 45 ரன்களும், திரிமன்னே 41 ரன்களும் சேர்த்தனர். மேத்யூஸ் 19 ரன்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கம் மட்டுமே.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், துமினியின் ஹாட்ரிக் விக்கெட்டுடன் இலங்கை பரிதாப நிலையில் பேட் செய்து வந்தது.

 

சங்ககாரா வெளியே... மழை உள்ளே...

முன்னதாக, 36.2-வது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து சங்ககாரா ஆட்டமிழந்தார். அவர் 45 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது மழை கொட்டத் தொடங்கியது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், மழை விட்டதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

 

துமினி ஹாட்ரிக் விக்கெட்:

ஆட்டத்தின் 30-வது ஓவர் கடைசி பந்தில் துமினி பந்துவீச்சில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார். அவர் டூபிளஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது, அவர் 19 ரன்கள் சேர்த்திருந்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய திசாரா பரேரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தாஹிர் பந்துவீச்சில் ரூசோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

 

பின்னர் களமிறங்கிய குலசேகராவும் சட்டென ஆட்டமிழந்தார். அவர் 34.1-வது ஓவரில் துமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குஷால், துமியின் ஹாட்ரிக் விக்கெட் ஆனார். ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

 

மோசமான துவக்கம்:

ஆட்டத்தில் 2-வது ஓவரிலேயே துவக்க வீரரான பெரேரா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் தில்ஷானும் அடுத்த இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த திரிமன்னே - சங்ககாரா இருவரும் அணியின் நிலையை சற்று உறுதியாக்கினர்.

அப்போது, ரன் சேர்க்க தடுமாறினாலும் விக்கெட் இழக்காமல் இருப்பதே முக்கியமாக இருந்தது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 35 ரன்களை மட்டுமே சேர்த்தது.

 

பந்துவீச்சில் இலங்கை ரன் சேர்ப்பை மேலும் நெருக்கிய தென் ஆப்பிரிக்க அணி, அதற்கு பலனாக 20-வது ஓவரில் திரிமன்னே விக்கெட்டை வீழ்த்தியது. அவர் 41 ரன்கள் சேர்த்திருந்தார்.

 

திரிமன்னே விக்கெட்டை வீழ்த்திய இம்ரான் தாஹிர், 24-வது ஓவரில் ஜெயவர்த்தனே விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கைக்கு அதிர்ச்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து இலங்கையின் கேப்டன் மேத்யூஸ், சங்ககாராவோடு இணைந்து, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த முயற்சி பெரிதாக கைகொடுக்கவில்லை.

 

இலங்கை ஸ்கோர்:

 

பரேரா - 3

தில்ஷான் - 0

சங்ககாரா - 45

திரிமன்னே - 41

ஜெயவர்தனே - 4

மேத்யூஸ் - 19

திசாரா பரேரா - 0

குலசேகரா - 1

கவுஷால் - 0

சமீரா (நாட் அவுட்) - 2

மலிங்கா - 3

37.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள்

தென் ஆப்பிரிக்க தரப்பில் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், துமினி 3 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் மற்றும் அபாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

*

சங்காவுக்கு மேலும் ஒரு சிறப்பு:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ரன்கள் எடுத்தபோது, ஓர் உலகக் கோப்பையில் 500 ரன்கள் எடுத்த 7-வது வீரர் என்ற என்ற பெருமையைப் பெற்றார் குமார் சங்ககாரா.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7006569.ece

முதல் நாக்அவுட் வெற்றியை ருசித்தது தென்ஆப்ரிக்கா: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது!

 

லகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

takir.jpg

சிட்னியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்றதையடுத்து, அந்த அணி தென்ஆப்ரிக்க அணியை பீல்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. பெரைராவும், தில்சனும் இலங்கையின் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

ஆனால் இலங்கை அணி 3 ரன்களை எடுப்பதற்கு முதல் விக்கெட்டை இழந்தது. குஷால் பெரைரா, அபாட் பந்தில் கீப்பர் டி காக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து குமார சங்கக்காரா, தில்சனுடன் இணைந்தார். அடுத்து தில்சன் டக் அவுட் ஆனார். தில்சன் விக்கெட்டை ஸ்டெயின் வீழ்த்தினார். இலங்கை அணி 4 ஓவரில் 4 ரன்களை எடுத்தது. அடுத்து  திரிமன்ணே, சங்கக்காராவுடன் இணைந்தார்.

அடுத்து  திரிமன்ணே சங்கக்காராவுடன் இணைந்தார். இந்த ஜோடியும் நிலைத்து ஆடவில்லை. 41 ரன்கள் எடுத்த நிலையில் திரிமன்ணே தாகிர் பந்தில் அவரிடமே பிடிகொடுத்தார். தொடர்ந்து மகிலா ஜெயவர்த்தனே களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தாகிர் பந்தில் டுப்லெசசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இலங்கை அணி 85 ரன்களை எட்டுவதற்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஏஞ்சலா மேத்யூசாவது சங்கக்காராவுக்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்த்தால் அவரும் 19 ரன்னில் டுமினி பந்தில் பலியானார். தொடர்ந்து திசே பெரைரா டக்அவுட்,குலசேகரா ஒரு ரன், குஷால் டக் அவுட் என இலங்கை வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.

விக்கெட்டுகள் போய்க் கொண்டிருந்தாலும் மறுமுனையில் சங்கக்காரா மட்டும் போராடிக் கொண்டிருந்தார். காலிறுதி போன்ற முக்கியமானதொரு ஆட்டத்தில், இலங்கை பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடாதது இலங்கை அணி பேட்டிங்கில் சரிவை சந்திக்க காரணமாக இருந்தது.

மைதானத்தில் போராடிக் கொண்டிருந்த சங்கக்காராவும் 94 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மோர்கல் பந்தில் மில்லரிடம் பிடி கொடுத்து சங்கக்காரா வெளியேறினார். இலங்கை அணி 127 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.  இந்த சமயத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

takir(1).jpg

மழைக்கு பின்  இலங்கை அணி மேற்கொண்டு 6 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 37.2 ஓவரில் 133 ரன்களை மட்டுமே இலங்கை அணி எடுத்தது. தென்ஆப்ரிக்க தரப்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும் டுமினி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து தென்ஆப்ரிக்க அணி பேட் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஆம்லா,டி காக் நிதானமாக ஆடினர். ஆம்லா 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து டுப்லெசிஸ் டி காக்குடன் இணைந்தார். இந்த ஜோடி தென்ஆப்ரிக்க அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

தென்ஆப்ரிக்க அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. டி காக் 78 ரன்களும் டுப்லெசிஸ் 21 ரன்களும் எடுத்தனர். உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 6 முறை நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள தென்ஆப்ரிக்க அணி இந்த முறைதான் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39801&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்

அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி
 

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் இலங்கையை 9 விக்கெட்டுகளால் வென்ற தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ண போட்டியின் நொக்-அவுட் சுற்றில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

 

தென் ஆபிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பை சமாளிக்கமுடியாத இலங்கை அணி  133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும்  இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

 

தென் ஆபிரிக்கா சார்பில் குயின்டன் டீ கொக்  78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய  தென் ஆபிரிக்காவின் இம்ரான் தாஹிர் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/142040#sthash.U7h7489F.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலையில் மகிழ்ச்சியான செய்தி.. :D

  • தொடங்கியவர்

மார்ச் மாதத்தில் இந்தியாவிடம் வங்கதேசம் தோற்றதே இல்லை: அப்போ நாளை?

 

டாக்கா: நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் என்று அந்நாட்டு மக்களும், கிரிக்கெட் வாரியத்தினரும்நம்புகிறார்கள். உலகக் கோப்பை போட்டிகளி்ல் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. நாளைய போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் என அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்தினர் நம்புகிறார்கள்.

 

இரண்டு முறை முன்னதாக இந்தியா, வங்கதேச அணிகள் இரண்டு முறை மார்ச் மாதத்தில் மோதியுள்ளன. இரண்டு முறையுமே வங்கதேச அணி தான் வெற்றி வெற்றுள்ளது. அதனால் நாளைய போட்டியிலும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறது வங்கதேசம்.

 

உலகக் கோப்பை 2007ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் மார்ச் மாதம் 17ம் தேதி மேற்கிந்திய தீவுகளில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் யாரும் எதிர்பாராவிதமாக வங்கதேச அணி இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

ஆசிய கோப்பை 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியை வங்கதேசம் தோற்கடித்தது.

 

டோணி மார்ச் மாதம் என்ன, எந்த மாதமாக இருந்தாலும் வெற்றி பெறுவோம் என்பதை உலகிற்கு தெரிவிக்குமா டோணி அணி?. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-bangladesh-have-never-lost-india-the-month-march-222868.html

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேணுமாம் .......என்று சிறிலங்கன்ஸ் சொல்லுயினம்....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.