Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகெங்கும் பூமியில் ஏற்படும் திடீர் பாரிய குழிகளால் பெரும் குழப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Giant sinkholes

2009 ம் வருடத்தில் இருந்து தீடீரென வீதிகளிலும், மக்கள் வாழும் குடியிருப்புகளிலும் உண்டாகும் பாரிய குழிகளால் பெரும் அதிர்வலைகள் உண்டாகி உள்ளன, 
 
இது எவ்வாறு உண்டாகின்றன என சூழலளியலாளரும், விஞ்ஞானிகளும், மண்டையை உடைந்துக் கொண்டு ஆராய்கினம்.
 
அனேகமா, கீழால, உந்த நிலக்கக்கரிக்கு, கனிமப் பொருட்கள் எடுக்க கிண்டினது, பொறியுது போல தான் எனக்கு படுகுது. உதைச் சொன்னால், சனம் குழம்பிடும் எண்டு கமுக்கமா இருக்கினம் போல தான் படுகுது.
 
அமெரிக்காவில், புளோரிடாவில், கடந்த வாரம் மட்டும் இரண்டு குழிகள் உண்டாகி உள்ளன. இதில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.
 
இந்த இணைப்பினைப் பார்த்து விபரீதத்தினப் புரிந்து கொள்ளுங்கள்.
 
This week, a Florida neighborhood fell victim to its second sinkhole in two days, becoming the latest addition to this global phenomenon.
 
oii2w4.jpg

Workers stand next to a truck which is stuck in a large pit caused by a cave-in on a street in Wuzhou, Guangxi Zhuang Autonomous Region, China, August 14, 2014.

2rz6moy.jpg

People look at a large sinkhole on a street after a water pipe broke underneath it in Xi'an, Shaanxi province, China, October 27, 2013.

35n0k0w.jpg

A car lies in a sinkhole in the road outside the Crimean capital Simferopol, September 28, 2014.

2ntcyza.jpg

Concrete is poured into a 15 foot wide sinkhole on the driveway of a house in Walters Ash, southern England, February 6, 2014.

xp25xd.jpg

A sinkhole that opened up at the intersection of Laurier Avenue E and Waller Street, in Ottawa, February 21, 2014.

j59ttg.jpg

A general view of a large crater that appeared in the early hours in the central German town of Schmalkalden, November 1, 2010.

307m69v.jpg

and More.... check the link...

http://www.msn.com/en-gb/news/photos/giant-sinkholes/ss-BBdFzCf?ocid=mailsignout#image=1

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்னப்பா இது? ஒரு குஞ்சு, குருமனையும் காணம்....
 
இருக்கிற இடத்தில குழி விழுகிற தலை போற பிரச்னை.   :o
 
நாலு பேரு வந்து, நாலு விஞ்ஞான விளக்கம் தந்து, நியாயம் பிளப்பினம் எண்டு பார்த்தால்......  :blink:
 
இது செவ்வாயில இல்லீங்கோ, நம்ம கிரகத்தில தான்....  :(
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

றோட்டிலை.... வடிவாய், தார் போடாத படியால் தான்.... இப்பிடி குழி விழூது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோட்டிலை.... வடிவாய், தார் போடாத படியால் தான்.... இப்பிடி குழி விழூது.

ஹா, ஹா..
 
கவனம் சிறியர்,
 
தலை சிறந்த சூழலியலாளர் என்று நோபல் பரிசை, தந்து துளைக்கப் போறாங்கள்.  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

நிலத்துக்குக் கீழ் சுண்ணாம்புப் பாறை (limestone) இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட மிகவும் வாய்ப்பு உண்டு. சுண்ணாம்பு கரைந்து போதலே காரணம். நீர் அமிலத்தன்மை அடைந்திருக்கவும் வேண்டும் என நினைக்கிறேன்.

தெருக்கள் அமைக்கும்போது நிலத்துக்கு பத்தடிக்கு கீழே என்ன இருக்கு என்று ஆராய மாட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சினை. ஆனால் பெரிய கட்டடங்கள், சுரங்கப் பாதைகள், பாலங்கள் அமைக்கும்போது ஆராய்ந்து பார்ப்பார்கள் (borehole investigation). அதனால் பிரச்சினைகளை அகற்றிக் கொள்ள அங்கெல்லாம் வழியுண்டு. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் இஞ்சினியர்மாரை அந்தக்காலத்திலேயே  மாப்பிள்ளையாகத் தேடுபவர்கள்.

:D:lol: சீதன வீட்டிலை  குழி விழுமோ இல்லையோ என்று உடனேயே கண்டு பிடித்து விடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஹா, ஹா..

கவனம் சிறியர்,

தலை சிறந்த சூழலியலாளர் என்று நோபல் பரிசை, தந்து துளைக்கப் போறாங்கள். :icon_mrgreen:

எனக்கு சிரிச்சு வயிறு வலிக்குது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலத்துக்குக் கீழ் சுண்ணாம்புப் பாறை (limestone) இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட மிகவும் வாய்ப்பு உண்டு. சுண்ணாம்பு கரைந்து போதலே காரணம். நீர் அமிலத்தன்மை அடைந்திருக்கவும் வேண்டும் என நினைக்கிறேன்.

தெருக்கள் அமைக்கும்போது நிலத்துக்கு பத்தடிக்கு கீழே என்ன இருக்கு என்று ஆராய மாட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சினை. ஆனால் பெரிய கட்டடங்கள், சுரங்கப் பாதைகள், பாலங்கள் அமைக்கும்போது ஆராய்ந்து பார்ப்பார்கள் (borehole investigation). அதனால் பிரச்சினைகளை அகற்றிக் கொள்ள அங்கெல்லாம் வழியுண்டு. :D

அப்படி எண்டால் என்னெண்டு ஒரு குழியோட நிக்குது? அந்த ஏரியாவே கணக்க குழிகள் வரும் தானே? 

  • கருத்துக்கள உறவுகள்

பாதையில் குழி விழுந்தால் பதைபதைக்கும் உள்ளங்கள். :o  கன்னத்தில் குழி விழுந்தால் களிப்பது ஏனோ....? :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எண்டால் என்னெண்டு ஒரு குழியோட நிக்குது? அந்த ஏரியாவே கணக்க குழிகள் வரும் தானே?

எல்லா குழிகளும் காலாகாலத்தில் வரும்.. :D

அடியில் எவ்வளவு சுண்ணாம்புப் பாறை இருக்கு; அதன் நீள, அகல, ஆழம் என்ன; எவ்வளவு இழப்பை அது இதுவரைக்கும் சந்தித்துள்ளது; மேற்பரப்பில் எவ்வளவு எடை செலுத்தப்படுகிறது; அடியில் நீரோட்டம் என்ன என்று பலப்பல காரணிகள் உள்ளன.

கீழே குழிகள் இருந்தாலும் அதற்குமேல் குறிப்பிட்ட தடிமனான பாறை இருந்தால் (roof) அது ஒரு பாலம் போல மேற்பரப்பை தாங்கும். மேலும் மேலும் சுண்ணாம்பு கரையும்போது கூரை பலமிழந்து உடைந்துவிடும். இதுவே sink hole.

  • கருத்துக்கள உறவுகள்

பாதையில் குழி விழுந்தால் பதைபதைக்கும் உள்ளங்கள். :o கன்னத்தில் குழி விழுந்தால் களிப்பது ஏனோ....? :D:lol:

கலவரத்தில் ஒரு கிழுகிழுப்பு பாஞ்சருக்கு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா குழிகளும் காலாகாலத்தில் வரும்.. :D

அடியில் எவ்வளவு சுண்ணாம்புப் பாறை இருக்கு; அதன் நீள, அகல, ஆழம் என்ன; எவ்வளவு இழப்பை அது இதுவரைக்கும் சந்தித்துள்ளது; மேற்பரப்பில் எவ்வளவு எடை செலுத்தப்படுகிறது; அடியில் நீரோட்டம் என்ன என்று பலப்பல காரணிகள் உள்ளன.

கீழே குழிகள் இருந்தாலும் அதற்குமேல் குறிப்பிட்ட தடிமனான பாறை இருந்தால் (roof) அது ஒரு பாலம் போல மேற்பரப்பை தாங்கும். மேலும் மேலும் சுண்ணாம்பு கரையும்போது கூரை பலமிழந்து உடைந்துவிடும். இதுவே sink hole.

இதுக்குதான், ஊருக்கு, சா... யாழுக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா இருக்கவேண்டும் எண்டு சொல்லுறது  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்துக்குக் கீழ் சுண்ணாம்புப் பாறை (limestone) இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட மிகவும் வாய்ப்பு உண்டு. சுண்ணாம்பு கரைந்து போதலே காரணம். நீர் அமிலத்தன்மை அடைந்திருக்கவும் வேண்டும் என நினைக்கிறேன்.

தெருக்கள் அமைக்கும்போது நிலத்துக்கு பத்தடிக்கு கீழே என்ன இருக்கு என்று ஆராய மாட்டார்கள். அதனால் இந்தப் பிரச்சினை. ஆனால் பெரிய கட்டடங்கள், சுரங்கப் பாதைகள், பாலங்கள் அமைக்கும்போது ஆராய்ந்து பார்ப்பார்கள் (borehole investigation). அதனால் பிரச்சினைகளை அகற்றிக் கொள்ள அங்கெல்லாம் வழியுண்டு. :D

பத்தாமாண்டோ அல்லது ஒன்பதோ தெரியா இந்தவிடயம் விஞ்ஞானபாடத்தில் ஒரு இடத்தில் மேலோட்டமாக படித்திருந்தோம் அந்த நேரத்திலேயே..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் வீதியில் மழையின் பின் சில இடங்களில் குழிவிழுவதற்கும் இநத சுண்ணகற்கள்தான் காரணம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் வீதியில் மழையின் பின் சில இடங்களில் குழிவிழுவதற்கும் இநத சுண்ணகற்கள்தான் காரணம்..

2.jpg

அது, மாட்டு வண்டில் ஓடுவதால்... ஏற்படுவது. :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது மனிதன் உருவாக்கிய sinkhole. :o

1126.jpg

ஒன்ராரியோவின் வின்ட்சர் நகரத்தில் நிலத்தின் அடியில் இருந்து உப்பு எடுக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த வேலைகள் ஆரம்பித்தன. 700 அடி ஆழத்தில் சிக்குப்பட்டிருக்கும் உப்பை எடுக்க ஆழ்துளைகள் மூலம் நீரை உள்ளே செலுத்துவார்கள். பிறகு அந்த நீரை வெளியே எடுத்து உப்பை வடிகட்டுவார்கள்.

இப்படி அளவு கணக்கில்லாமல் செய்துகொண்டுவர வின்ட்சரின் சில பகுதிகள் தாழ்ந்துபோய்விட்டன. சில இடங்கள் 6 மீட்டர்கள் அளவுக்கு. இப்போது கவனமாக எடுப்பதாக சொல்கிறார்கள். :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

2.jpg

அது, மாட்டு வண்டில் ஓடுவதால்... ஏற்படுவது. :icon_idea:

சரி தலைவா.. :D

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.