Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் இப்படியும் சிலர் (சிட்னி கோசிப் 5)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

50 வயசு பெரிசு ஒன்று பிறந்த நாள் விழாவுக்கு என்னை அழைத்து இருந்தது எனக்கு முதலில் போக விருப்பம் இல்லை மனிசியின்ட ஏச்சு தாங்காமல் அதற்கு ஆஜரானேன் போன போது அந்த 50 வயது பெரிசு வா உள்ளே வா வந்து இரு என்று என்னை சொன்னார் எனக்கு அவர் பேசின பாணி பிடிக்கவில்லை என்றாலும் என்ன செய்வது என்று போய் அமர்ந்தேன்,அமர்ந்தவுடன் அவர் தனது புராணத்தை தொடங்கினார் இவன் நான் இல்லாவிடில் சோர்ந்து போய் விடுவான் வெளியில் போய் விளையாடவும் மாட்டான்.வழமையா நான் வேலையால் வரும் போது ஓடி வந்து கொஞ்சுவான் இன்றைக்கு நான் வந்தது லேட் அதனால் அவர் மூஞ்சியை தொங்கபோட்டு கொண்டு கிட்டவும் வரவில்லை,பிறகு நான் அவருக்கு கிட்ட போய் மெதுவாக முதுகை தட்டி சொறி சொல்லி சிறிது நேரத்தின் பின் சாந்தமானான் சிறிது நேரத்திற்கு பின் மனிசிய கூப்பிட்டு இவன் இன்று சாப்பிட்டவனோ கோயிலுக்கு போய் அர்ச்சனை ஒன்று செய்ய வேண்டும் என்றார்.நான் உடனே மகனுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன் சீ சீ அவனுக்கு ஒன்றும் இல்லை இது எங்கன்ட ஜொனிக்கு என்றார் நான் திக்குமுக்காடி விட்டேன் அப்போது தான் புரிந்தது அவரின் நாயின் பெயர் ஜொனி இவர் அவ்வளவு நேரம் கதைத்தது நாயை பற்றி .

நான் உடனே இலங்கையில் நாயை திட்டுவது தான் மனகண்ணில் ஓடியது அட சீ நாயே வெளியால போ நாத்தம் அடிக்குது நடு வீட்டுகுள்ள வந்து வாலாட்டி கொண்டு காலால் உதையுறது தான் நினைப்பு வந்தது.இல்லாவிடில் சும்மா நிற்கிற நாயுக்கு கல்லடிக்கிறது இதை நினைக்கும் போது எனக்கே என்னை அறியாமல் சிரிப்பு வந்தது.

இது தான் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமோ என்பது.

இது கதையல்ல நிஜம்

:D:lol:

  • Replies 54
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் கவனமாயிருங்கோ. இங்க மிருகங்களைத் திட்டினாலே கொடிபிடிக்க ஒருகூட்டம், அதுகாணாதென்று குறூலிட்டீட்டு அனிமல் என்று கிறிமினல் சாஜ் வேற. எதுக்கும் நீங்கள் கையைக் காலை அடக்கி வைச்சுக் கொண்டு தியானத்தில இருங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா புத்தன் அவர்களே,

உங்களுடைய நன்பரின் நாயிக்கு செலவுசெய்கிற காச கொஞ்சம் சேர்த்து ஈழத்துக்கு அனுப்பி வைச்சால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கொஞ்சம் விளக்கப்படுத்தி அவருக்குச் சொல்லுங்கோ.

அந்த நாயிற்கு வாங்குகிற டின் -மீட்ஸ், Dog Foods. மாட்டு எலும்பு ( அது சைவ நாய் அல்ல தானே?) அத்துடன் நாயை பராமரிக்க மிருக வைத்தியருக்கும் மருந்துக்கும் செலவளிக்கிற காசால எத்தனை அகதிகளான பிள்ளைகளை சுனாமியால பாதிக்கப்பட்ட பிள்ளைகளை ஆதரிக்கலாம், அவர்களுக்கு அப்படி மனசு வருமா?

அவரால காலை கையை அடக்கி வைக்க முடியாததால் தான் இப்படி எல்லாம் உண்மைகளை உடனுக்குடன் தந்து கொண்டிருக்கிறார் என்றாலும் கவனம் ஒரு போடி கார்ட் வைத்து கொள்ளுங்கோ

:oops: :oops:

50 வயசு பெரிசு ஒன்று பிறந்த நாள் விழாவுக்கு என்னை அழைத்து இருந்தது எனக்கு முதலில் போக விருப்பம் இல்லை மனிசியின்ட ஏச்சு தாங்காமல் அதற்கு ஆஜரானேன் போன போது அந்த 50 வயது பெரிசு வா உள்ளே வா வந்து இரு என்று என்னை சொன்னார் எனக்கு அவர் பேசின பாணி பிடிக்கவில்லை என்றாலும் என்ன செய்வது என்று போய் அமர்ந்தேன்,அமர்ந்தவுடன் அவர் தனது புராணத்தை தொடங்கினார் இவன் நான் இல்லாவிடில் சோர்ந்து போய் விடுவான் வெளியில் போய் விளையாடவும் மாட்டான்.வழமையா நான் வேலையால் வரும் போது ஓடி வந்து கொஞ்சுவான் இன்றைக்கு நான் வந்தது லேட் அதனால் அவர் மூஞ்சியை தொங்கபோட்டு கொண்டு கிட்டவும் வரவில்லை,பிறகு நான் அவருக்கு கிட்ட போய் மெதுவாக முதுகை தட்டி சொறி சொல்லி சிறிது நேரத்தின் பின் சாந்தமானான் சிறிது நேரத்திற்கு பின் மனிசிய கூப்பிட்டு இவன் இன்று சாப்பிட்டவனோ கோயிலுக்கு போய் அர்ச்சனை ஒன்று செய்ய வேண்டும் என்றார்.நான் உடனே மகனுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன் சீ சீ அவனுக்கு ஒன்றும் இல்லை இது எங்கன்ட ஜொனிக்கு என்றார் நான் திக்குமுக்காடி விட்டேன் அப்போது தான் புரிந்தது அவரின் நாயின் பெயர் ஜொனி இவர் அவ்வளவு நேரம் கதைத்தது நாயை பற்றி .

நான் உடனே இலங்கையில் நாயை திட்டுவது தான் மனகண்ணில் ஓடியது அட சீ நாயே வெளியால போ நாத்தம் அடிக்குது நடு வீட்டுகுள்ள வந்து வாலாட்டி கொண்டு காலால் உதையுறது தான் நினைப்பு வந்தது.இல்லாவிடில் சும்மா நிற்கிற நாயுக்கு கல்லடிக்கிறது இதை நினைக்கும் போது எனக்கே என்னை அறியாமல் சிரிப்பு வந்தது.

இது தான் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமோ என்பது.

இது கதையல்ல நிஜம்

:lol::lol:

இதை பார்க்கும் போது பேசாம நாமும் நாயா பிறந்திருக்கலாம் என்று பீலிங்கா இருக்கு ஏனெனில் நம்ம அம்மா நாயே என்று எல்லாம் என்னை ஏசுவாவே

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா இருக்கும் போது எதுக்கு கார்ட் எல்லாம் கங்காரு படையனிய இறக்கிறது தானே...

ஜமுனா இருக்கும் போது எதுக்கு கார்ட் எல்லாம் கங்காரு படையனிய இறக்கிறது தானே...[/quote

அதுவும் வாஸ்தவம் தான் ஆனால் இந்த புத்தன் தனக்கு தானே துணை என்று போவார் அது தான் கவனமா இருக்க சொன்னேன்

:wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்க்கும் போது பேசாம நாமும் நாயா பிறந்திருக்கலாம் என்று பீலிங்கா இருக்கு ஏனெனில் நம்ம அம்மா நாயே என்று எல்லாம் என்னை ஏசுவாவே

:cry: :cry: :cry:

சீச்சீ ... உதுக்கெல்லாம் ஏன் அளுறீங்கள். அடுத்தமுறை அப்பிடியாரும் திட்டினா கொலறை இளுத்து விட்டிட்டுச் சொல்லுங்கோ அனிமல் றைட்ஸ் குறூப் பிட்டக் கொம்பிளைன் பண்ணுவனெண்டு. :idea: :idea: :lol::lol:

சீச்சீ ... உதுக்கெல்லாம் ஏன் அளுறீங்கள். அடுத்தமுறை அப்பிடியாரும் திட்டினா கொலறை இளுத்து விட்டிட்டுச் சொல்லுங்கோ அனிமல் றைட்ஸ் குறூப் பிட்டக் கொம்பிளைன் பண்ணுவனெண்டு. :idea: :idea: :lol::lol:

தகவலுக்கு மிக்க நன்றி அடுத்த முறை பாருங்கோ

:roll: :roll:

No..I object this... :evil: எதையும் பற்றி பேசுங்கோ, ஆனால் மிருகங்களை தரகுறைவா தயவு செய்து பேச வேன்டாம். அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்? :evil: உங்களுக்கு காவலாக இருப்பது தான் அவர்கள் செய்த தவறா? அவர்கள் ஒரு விதத்தில் மனிதர்களை விட மேல்!. நாங்கள் பாசத்தை காட்டினால், அதை விட மேலாக எங்களிடம் பாசம் காட்டும் ஜீவன்கள் மிருகங்கள், முக்கியமாக, நாய்கள். சொந்த பிள்ளைகள் கூட, பெற்றவர்களை தனியாக விட்டிடு போகிறார்கள், ஆனால், நாய்கள், தங்கள் எஜமானரை, தங்கள் உயிர் உள்ள வரை, விட்டு பிரிவதில்லை. அதிலும் முக்கியமாக ஊர் நாய்கள்!. இனிமேலாவது, மிருகங்களை கொச்சை படுத்துவதை தவிர்க்கும் படி உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். உங்களுக்கு அது ஒரு நாயாக இருக்கலாம் ஆனால், அந்த நாய்க்கு நீங்க தான் உலகம்."To you, He May Be a Dog, but To him, you are the World".

நான் உடனே இலங்கையில் நாயை திட்டுவது தான் மனகண்ணில் ஓடியது அட சீ நாயே வெளியால போ நாத்தம் அடிக்குது நடு வீட்டுகுள்ள வந்து வாலாட்டி கொண்டு காலால் உதையுறது தான் நினைப்பு வந்தது.இல்லாவிடில் சும்மா நிற்கிற நாயுக்கு கல்லடிக்கிறது இதை நினைக்கும் போது எனக்கே என்னை அறியாமல் சிரிப்பு வந்தது.

:lol::lol:

No..I object this... :evil: எதையும் பற்றி பேசுங்கோ, ஆனால் மிருகங்களை தரகுறைவா தயவு செய்து பேச வேன்டாம். அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்? :evil: உங்களுக்கு காவலாக இருப்பது தான் அவர்கள் செய்த தவறா? அவர்கள் ஒரு விதத்தில் மனிதர்களை விட மேல்!. நாங்கள் பாசத்தை காட்டினால், அதை விட மேலாக எங்களிடம் பாசம் காட்டும் ஜீவன்கள் மிருகங்கள், முக்கியமாக, நாய்கள். சொந்த பிள்ளைகள் கூட, பெற்றவர்களை தனியாக விட்டிடு போகிறார்கள், ஆனால், நாய்கள், தங்கள் எஜமானரை, தங்கள் உயிர் உள்ள வரை, விட்டு பிரிவதில்லை. அதிலும் முக்கியமாக ஊர் நாய்கள்!. இனிமேலாவது, மிருகங்களை கொச்சை படுத்துவதை தவிர்க்கும் படி உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். உங்களுக்கு அது ஒரு நாயாக இருக்கலாம் ஆனால், அந்த நாய்க்கு நீங்க தான் உலகம்."To you, He May Be a Dog, but To him, you are the World".

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதைக் கடந்தால் நாய்க்குணம் என்பதால் தானோ அவரும் நாய் வள்ர்க்கிறார் போலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூகி உங்கள் கருத்துக்கு நன்றி. ஒரு உண்மை சம்பவத்தை குறிப்பிட விரும்புகின்றேன். இது ஊரில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நாள் நள்ளிரவு, நாய் குலைக்கின்றதே என பார்க்க நாயை வளர்த்தவர் வெளியில் வந்தவர் அவரை அறியாமல் ஒரு பாம்பின் அருகில் நிற்க, பாம்பு அவரை கொத்த வர, நாய் குறுக்கே பாய்ந்து பாம்பிடம் கடி வாங்கி தன்னுயிரை கொடுத்து தனக்கு உணவு கொடுத்து வளர்த்தவரை காப்பற்றியது. அவரது பிள்ளைகள் அனைவரும் புலத்தில் இருக்கின்றார்கள். ஒரு மகன் சிட்னியுலும். பிள்ளைகள் அப்படி குறுக்கே பாய்வார்களா? தடி ஒன்றை தேடிக்கொண்டிருந்திருப்பார்

என்னதான் மனுசனாக இருந்தாலும் மிருகங்களுக்கு இருக்கிற அறிவு மனுசனுக்கு இல்லையப்பா..

அவை சாதி, சமயம், பேராசை எல்லாம் கடந்து அன்பைப் பெற்று அன்பைக்காட்டும் அற்புதப் பிறவிகள்..

புத்தன்

நீங்கள் எழுதிய விடயத்தில் கேவலமாக நினைப்பதற்கு ஒன்றுமேயில்லை. மனிதர்களை ஏசுவதற்கு சிலர் நாயே என்று ஏசுகின்றார்கள். ஆனால் மனிதனுடன் அதனை ஒப்பிடும் போது மனிதனை விட மேலாகவே வருகின்றது. உலகத்திலேயே நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படும் ஒரு பிராணி. அப்படியான செல்லப் பிராணிகளை வளர்த்தவர்களுக்குத் தான் புரியும் அதன் நன்றியும் விசுவாசமும்.

ஐயா புத்தன் அவர்களே,

உங்களுடைய நன்பரின் நாயிக்கு செலவுசெய்கிற காச கொஞ்சம் சேர்த்து ஈழத்துக்கு அனுப்பி வைச்சால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கொஞ்சம் விளக்கப்படுத்தி அவருக்குச் சொல்லுங்கோ.

அந்த நாயிற்கு வாங்குகிற டின் -மீட்ஸ், Dog Foods. மாட்டு எலும்பு ( அது சைவ நாய் அல்ல தானே?) அத்துடன் நாயை பராமரிக்க மிருக வைத்தியருக்கும் மருந்துக்கும் செலவளிக்கிற காசால எத்தனை அகதிகளான பிள்ளைகளை சுனாமியால பாதிக்கப்பட்ட பிள்ளைகளை ஆதரிக்கலாம், அவர்களுக்கு அப்படி மனசு வருமா?

இந்த கருத்தையும் நான் வன்மையாக எதிர்கிறேன்! ஒரு உயிருக்கு சாப்பாடு போடுவதை, அதுவும் வாயில்லாத ஜீவன்களுக்கு சாப்பாடு போடுவதை ஒரு நாளும் கணக்கு பார்க்க கூடாது. என் இப்படி, நாய்க்கு பொடும் சாப்பாட்டை மிச்சம் பிடித்து ஈழத்துக்கு அனுப்பம் சொல்லுபவர்கள், என் தாங்கள் செயும் அனாவசியமான செலவுகலை தவிர்த்து, அந்த பணத்தை அனுப்பலாமே? உதாரன்ணமக, பார்டி வைக்கும் செலவுகல், தண்ணி அடிக்கும் செலவுகள், தென்னிந்திய சினிமா பார்ப்பது, காரில் செல்வதை தவிர்த்து, Public Transport பாவிக்கலாம், வீணாக ஊர் சுத்துவதை தவிர்த்து அந்த காசை அனுப்பலாமே? எத்தனையோ த.வி.பு போராளிகள் செல்லபிராணிகள் வைதிருப்பதை நான் பர்திதிருகிரென், ஏன்? அன்டன் & அடேல் பாலசிங்கம் தம்பதியினர் கூட, யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது அவர்களின் அந்த பொமெனெரியன் நாய்குட்டியை போகிமிடமெல்லாம் கொண்டு திரிந்தார்கள் தானே?

அவர்கள் உங்களை மாதிரி நினைத்திருந்தால், அதாவது, நாய்க்கு பொடும் காசை சேமித்தால் ஒரு போராளி வடிவா சாபிடுவான் என்று நினைத்திருந்தால், அவர்கள் நாய் வைத்திருக்க முடியுமா?

வசம்பு சொன்னது போல, செல்லபிராணி வைதிருந்தவ்ர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.

நான் வைத்திருப்பது, ஒரு பெண் நாய், நான் சில நேரங்கலில் அதை "குட்டி அம்மா" என்று அழைப்பது உன்டு. என் தாயை கேவலப்படுத்தவல்ல நான் அப்படி கூப்பிடுவது, அது காட்டும், பாசமும், பரிவும், ஒரு தாய் காட்டும் பாசத்ற்கு ஈடாக இருப்பதால், அதை தாய் ஸ்தானத்துக்கு உயர்த்தி கூப்பிடுவேன். என்னை " நாய் குட்டி விசரி" என்டு அழைப்பவ்ர்களும் உன்டு.but I don't care!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன் நாய் வளர்த்த என்ன? பூனை வளர்த்தா என்ன? ஒருவர் நாய் வளக்கிறதுக்கும் தாயகத்தில பட்டினியில சாகுறதுக்கும் என்ன சம்பந்தம்? தாயகத்தில பட்டினை போக்க மூன்று வேளை உணவில ஒருவேளையை கைவிட்டிட்டு காச கொடுங்கப்பா? ஓவரா எழுத்தில மட்டும் அக்கறையை காட்டுங்க நிஜத்தில அமுக்கி வாசியுங்க.

புத்தனுக்கு தன்ர கருத்து கூட்டனும் அதோட அவரின்ர சகபாடி ஜமுனாவுக்கு, அரட்டை அடிக்க ஒரு தலைப்பு கொடுக்கனும் அதால போட்டிருக்கிறார் பிறகெதுக்கு இதுக்க மற்றாக்கள். அவையன் இருவரும் கூடவே சுண்டலும் காணும் 15 பக்கம் தாண்டும். இவ்வளவு கேவலமாய் கண்டதுகளை கொட்டிற இடமாய் யாழ் போச்சே என்று கவலைப்படும்

-பறவைகள்-

ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை, arguments ஐ substantiate பன்னுவதட்க்கு சில ஆதாரங்களை காட்டுவார்கள், பறவைகள், அதை நீஙகள் குப்பை என்டு கூற முடியாது, மேலும் இது ஒரு கருத்து களம், எவரும் தங்களுடைய கருத்தை கூறலாம், மற்றவர்களின் கருத்து பிழை என்டால், அதை பிழை என்றும் Prove பன்னலாம். அது தவறில்லையே? அத்துடன் புத்தன், ஜமுனா அரட்டை அடிப்பதிலும் தவறில்லை, ஏனென்டால், இதன் தலைப்பே கொசிப் தானே? உங்களுக்கு கொசிப் பிடிக்காட்டி, இதை பார்க்காமல் தவிர்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் தந்ததிற்கு மிக்க நன்றி அப்பு இனி நான் நாய்,பூனையை பற்றி எழுதவில்லை ராசா எனக்கு கருத்து கூட்ட கனவழி கிடக்கு முகநயங்களை போட்டாலே கருத்துகளை கூட்டலாம் கஷ்டபட்டு அடிக்க தேவையில்லை கருத்து கூடினால் போல மோகன் பரிசு தர போவதில்லை கருத்து கூட வேண்டும் என்பதற்கு நான் எழுதவில்லை சும்மா ம....... பில எழுதினான் இப்ப தெளிந்துவிட்டது நீர் சுட்டி காட்டின பிறகு தான் பிழை விளங்குகிறது சொறிடாப்பா

மு.கு

யம்முவையும்,சுண்டலையும் தயவு செய்து இதற்குள் கொண்டுவரவேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

எவன் நாய் வளர்த்த என்ன? பூனை வளர்த்தா என்ன? ஒருவர் நாய் வளக்கிறதுக்கும் தாயகத்தில பட்டினியில சாகுறதுக்கும் என்ன சம்பந்தம்? தாயகத்தில பட்டினை போக்க மூன்று வேளை உணவில ஒருவேளையை கைவிட்டிட்டு காச கொடுங்கப்பா? ஓவரா எழுத்தில மட்டும் அக்கறையை காட்டுங்க நிஜத்தில அமுக்கி வாசியுங்க.

புத்தனுக்கு தன்ர கருத்து கூட்டனும் அதோட அவரின்ர சகபாடி ஜமுனாவுக்கு, அரட்டை அடிக்க ஒரு தலைப்பு கொடுக்கனும் அதால போட்டிருக்கிறார் பிறகெதுக்கு இதுக்க மற்றாக்கள். அவையன் இருவரும் கூடவே சுண்டலும் காணும் 15 பக்கம் தாண்டும். இவ்வளவு கேவலமாய் கண்டதுகளை கொட்டிற இடமாய் யாழ் போச்சே என்று கவலைப்படும்

-பறவைகள்-

***************************************

தணிக்கை செய்யப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

தயவு செய்து நாகரீகமாக எழுதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவையன் இருவரும் கூடவே சுண்டலும் காணும் 15 பக்கம் தாண்டும்.

-

யம்முவும்,சுண்டலும் இதை 20 பக்கம் கொண்டுபோனால் பறவைகளை சந்திக்க இலவசமாக பயணசீட்டு எடுத்து தரபடும் அத்துடன் தஙுமிடவசதியும் செய்து தரபடும்.

:? :? :? :? :?

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளுக்கு ஏது பயண சீட்டு? சூரியனுக்கு ஏது சண்டே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளுக்கு ஏது பயண சீட்டு? சூரியனுக்கு ஏது சண்டே?

இப்ப அப்படி என்ன சொல்ல வாறீங்கள்

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

தூயாண்ட உட்டாங் சம்பல அணுப்புவம்னு சொல்லுறன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயாண்ட உட்டாங் சம்பல அணுப்புவம்னு சொல்லுறன்..

உடாங்சம்பலுடன் கறுப்பியின் சமயல் பகுதியில் உள்ள போண்டாவையும் அனுப்பி வையுங்கோ

:wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.