Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து கரிசனை காட்டவில்லை – ஐ.நா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யுத்த காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து கரிசனை காட்டவில்லை – ஐ.நா
10 டிசம்பர் 2014
un-logo1_CI.jpg

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குpறத்து உரிய கரிசனை காட்டவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனச்சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி அடமா டெயிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் குறிப்பாக அண்டை நாடுகள் உரிய கவனம் செலுத்தாமையே ஆயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்கான பிரதான ஏதுவெனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையை அனுபவமாகக் கொண்டே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்க ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் சில பரிந்துரைகளை முன்வைத்தார் என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


ஏதேனும் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளுக்கு முதனிலை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாரிய அடக்குமுறைகளை சந்திக்கும் மக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.


இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நடைபெறக்கூடியவை அல்ல எனவும், ஒரு காலப்பகுதியில் நடைபெறுவது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இனச் சுத்திகரிப்பினை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114322/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
கொலைக் கருவிகள் ஆளணி ஆலோசனையென ஒரு இனஅழிப்புக்குத் துணை நின்றன அயல்நாடுகள்!
நம்பியார் சகோதரர்கள் ஐநாவில் ராசதந்திரரீதியிலும் இலங்கையில் படைத்துறைசார்    ஆலோசனையென வழங்கியதும் நினைவூட்டத்தக்கது. முதலில் ஐநாவில் இருந்துகொண்டு தனது நாட்டு அரசுகுக்கு இசைவாகச் செயற்பட்ட நம்பியார்போன்ற பக்கச்சார்பான அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும். அதனூடாகப் பாதி அழிவுகளைக் கட்டுப்படுத்தலாம். அதேவேளை நாடுகளின் நலன்சார்ந்து கைப்பொம்மையாக ஐநா இயங்குவதை நிறுத்தி எங்கு மனிதர்கள் கொல்லப்படுகின்றார்களோ அங்கு உடன் நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையொன்றை ஐநா தனது முடிவில் செய்யத் துணியவேண்டும். அதைவிடுத்து இவளவு பெரிய கட்டிடங்களையும் வாகன வசதிகளையும் கொண்டு அறிக்கைவிடுவதற்கா இந்த அமைப்பு. கண்துடைப்பை நிறுத்திக் காத்திரமான செயல்முறைக்கு இறங்குவதே இனிமேல் நடைபெறவுள்ள அழிவுகளைத் தடுக்க உதவும். 
  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து கரிசனை காட்டவில்லை – ஐ.நா////

பிராந்திய வல்லரசு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவிற்கு இப்பிடி ஒரு அவமானம் தேவையா ?

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து கரிசனை காட்டவில்லை – ஐ.நா////

பிராந்திய வல்லரசு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவிற்கு இப்பிடி ஒரு அவமானம் தேவையா ?

 

இந்தியாவிற்கு அவமானம் எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்றுதான் அது கூறும். அதன் ஆசைக்கு அளவில்லை. :wub:

 

இல்லாதவர்களுக்குத்தான் இல்லாததைக் கொடுக்கவேண்டும். இருப்பவர்களுக்கு அதுவும் தேவைக்குமேல் வைத்திருப்பவர்களுக்கு மேலும் கொடுக்க முயன்றால் கொடுத்ததை வாங்கிவைக்க இடமும் தேவையல்லவா. இந்தியாவின் சொந்த இடத்தைக்கூட ஒருபுறம் சீனாவும், மறுபுறம் பாக்கியும் புடுங்கி எடுத்துக்கொள்கின்றனவே!. :o

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியை தீர்க்க அனைத்துலக சமூகம் குறிப்பாக, சிறிலங்காவின் அயல் நாடுகள் தவறிவிட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர் அடமா டையிங்.

நியுயோர்க்கில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தோல்வியின் விளைவாக, அனைத்துலக சமூகத்தின் கண்களுக்கு முன்பாகவே, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

போரின் போது நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவொன்றை அமைத்து, ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் வலுவான தார்மீக பலத்தை வெளிப்படுத்தினார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய நாடுகளில் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த மனித உரிமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஏதேனும் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளுக்கு முதல் நிலையாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பாரிய அடக்குமுறைகளை சந்திக்கும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக, ஐ.நா உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

எமது அனுபவத்தின்படி, இனப்படுகொலை என்பது உடனடியாக நடைபெறக் கூடிய நிகழ்வு அல்ல. அதற்கான செயல்முறைகளை நடைமுறைப்படுத்த காலம், திட்டமிடல், வளங்கள் தேவைப்படும்.

எனவே அது தொடர்பாக  உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இனப்படுகொலைகளைத் எந்தக் கட்டத்திலும் தடுக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/35967/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.