Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவின் ஆளும்கட்சி மைத்திரிக்கு ஆதரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானியாவின் ஆளும்கட்சி மைத்திரிக்கு ஆதரவு! 
[sunday 2014-12-14 09:00]
conservative-party-200-news.jpg
பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாக பிரித்தானியாவின் ஆளும்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள கொன்சவேட்டிவ கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை சந்தித்தனர். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தரவு திரட்டலின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பும் உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சிறப்பான ஆட்சியை கொண்ட அரசாங்கம் ஒன்றையே பிரித்தானிய அரசாங்கம் விரும்புவதாக இதன் போது ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த மூவரும் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜே வி பி முன்னாள் தலைவர் சோமவன்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்குழு தலைவர் கரு ஜெயசூரிய ஆகியோரையும் சந்தித்தனர். இலங்கை தொடர்பான அறிக்கையை தொகுத்து பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கும் முகமாகவே அவர்களின் விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது.http://www.seithy.com/breifNews.php?newsID=122631&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடையை பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் நீக்காவிட்டால் தமிழ்மக்கள் இத்தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும் என்று கஜேந்திரகுமார் அணி மூலம் அறிக்கை வெளியிட வேணும்.. :wub:

இதில் ஒரு சின்னப் பிரச்சினை இருக்கிறது இசை. தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டதால் 2009 எமக்குக் கிடைத்தது. அதேபோல தமிழர்கள் இந்தமுறையும் வாக்களிக்காமல் விட்டால், இப்போதிருக்கும் சர்வாதிகாரத்தனமும், சிங்கள அடக்குமுறையும் தொடரப்போகிறது.

இப்போது எமக்கு எது முக்கியம்? அதிகாரத்தில் இல்லாத, அரச அதிபர் என்கிற அந்தஸ்த்தில்லாத, சர்வதேச விசாரணைகள் என்பதிலிருந்து விலக்கில்லாத மகிந்தவா அல்லது புலிகள் மீதான தடை நீக்கமா?

புலிகள் மீதான தடை நீக்கம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதேவேளை, மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதும் அவசியம். அதற்கு இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாது. புலிகள் மீதான தடை நீக்கத்திற்காக நாம் எப்போது வேண்டுமானாலும் போராடிக் கொள்ளலாம்.

தமிழர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், அதுவும் மகிந்தவுக்கு எதிராக , மைத்திரிபாலவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

மீண்டும் மகிந்தவைக் கொண்டுவருவதானது, அவன் செய்த இனக்கொலையையும், அவன் இன்றுவரை ஆடிவரும் அபிவிருத்தி என்கிற பெயரிலான ஆக்கிரமிப்பையும் தமிழர்களே ஏற்றுக்கொண்டதாகி விடும், இது, புலிகளின் மீதான தடை நீடிப்பு என்பதைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. அதாவது தமிழர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் மழுங்கடிக்கக் கூடியது.

ஒருமுறை மகிந்தவைக் கொண்டுவருவதென்கிற முடிவை எடுத்து மேற்குலகின் வெறுப்பினைச் சம்பாதித்துக்கொண்ட நாம், இன்னுமொருமுறை அதே பாதையில் பயணிப்பதைத் தவிர்த்தல் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு.. இந்த மேற்குலகு என்ன செய்த வருகிறது என்பது நாமெல்லாம் அறியாதவை அல்ல.. தந்திரோபாயத்தில் சிறிய குச்சியையாவது விட்டு வைப்பார்கள்.. ஆனால் தமிழர் தரப்பில் இருந்து எந்தக் குச்சியும் இவர்களிடம் இல்லை.. இப்போது உள்ள நிலையில் இது எமக்கு பாதகம் என்பதைவிட அவர்களுக்கே கூடுதலான சிக்கல்..

மற்றும்படி, மகிந்த, சந்திரிகா, ஜெயவர்த்தன எல்லோருமே என்னைப் பொறுத்த அளவில் ஒருவரே.. இவர்கள் வெறும் முகமூடிகள்தாம். பின்னால் இருந்து இயக்குவது சிங்கள அரச எந்திரம். அதிகாரிகளால் சூழப்பட்டது. அநேகமான நாடுகளுக்கும் இது பொருந்தும். இந்தியாவின் மோடியின் கதையும் இது போன்றதே..

ஆகவே முகமூடியை மாற்றிவிட்டால் பிரச்சினை இளக்கமடையும் என்பதை ஏற்பதற்கில்லை.. வரலாறு இதை ஒப்புக்கொள்ளவில்லை.

இப்பொழுது தமிழர்களிடம் எதையுமே விட்டு வைக்காத மேற்குலகம் தமிழர்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறது. தமிழர்கள் முழு அளவில் (மறைமுகமாக) ஒரு தரப்பை ஆதரித்தால் அந்தத் தரப்பு வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. ஆனால் மேற்குலகால் இன்னொரு மகிந்த தவணையை தாங்க முடியாது. தமிழரின் வலு கூடியுள்ள மூன்று வாரங்கள் இவை.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

நீங்கள் கூறியவாறு, சிங்களத் தலைவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியானவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மகிந்தவைப் பதவியிலிருந்து இறக்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் பாவிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா இல்லையா? எதற்காக இல்லாவிட்டாலும், முள்ளீவாய்க்காலுக்காவது அவனைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா இல்லையா? அதிகாரத்தில் இல்லாத அவனை, அவன் செய்த இனக்கொலைக்காக தண்டிப்பது இலகுவென்று நான் நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

மகிந்தவைத் தொடர்ந்தும் பதவியில் அமர்த்த தமிழர்கள் உதவினால் அது நல்லது என்று நினைக்கிறீர்களா?? இது, அவன் செய்த இனக்கொலையைத் தமிழர்களே அங்கீகரித்துவிடுவது போலிருக்காது என்று நினைக்கிறீர்களா??

தெரியாத பேயை விடவும் தெரிந்த பிசாசு பரவாயில்லை என்பது இனி எம்மைப்பொறுத்தவரையில் செல்லாது. ஏனென்றால், இனி அழிப்பதற்கு எம்மிடம் மீதம் ஏதுமில்லை. ஏனென்றால் தெரிந்த பேயே எல்லாவற்றையும் அழித்து ஏப்பம் விட்டு விட்டது. ஆகவே தெரியாத பிசாசு வந்து இனிமேல் அழிப்பதற்கு எதுவுமில்லை. குறைந்தது தெரிந்த பேயை, அது செய்த இனக்கொலைக்காகவாவது தோற்கடிப்போமே ??!!

புலிகள் மீதான தடையை பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் நீக்காவிட்டால் தமிழ்மக்கள் இத்தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும் என்று கஜேந்திரகுமார் அணி மூலம் அறிக்கை வெளியிட வேணும்.. :wub:

ஐநா விசாரணையை சொதப்பிய கஜேந்திரகுமார் அணிஅறிக்கை விட்டு அதை மக்கள் கேட்பார்கள் என்று இசைக்கும் ஒரு நப்பாசை  :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா விசாரணையை சொதப்பிய கஜேந்திரகுமார் அணிஅறிக்கை விட்டு அதை மக்கள் கேட்பார்கள் என்று இசைக்கும் ஒரு நப்பாசை  :rolleyes:

மக்கள் கேட்பது கேட்காதது இரண்டாம் பட்சம்.. சலசலப்பை உருவாக்குவதுதான் முக்கியம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

நீங்கள் கூறியவாறு, சிங்களத் தலைவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியானவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மகிந்தவைப் பதவியிலிருந்து இறக்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் பாவிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா இல்லையா? எதற்காக இல்லாவிட்டாலும், முள்ளீவாய்க்காலுக்காவது அவனைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா இல்லையா? அதிகாரத்தில் இல்லாத அவனை, அவன் செய்த இனக்கொலைக்காக தண்டிப்பது இலகுவென்று நான் நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

மகிந்தவைத் தொடர்ந்தும் பதவியில் அமர்த்த தமிழர்கள் உதவினால் அது நல்லது என்று நினைக்கிறீர்களா?? இது, அவன் செய்த இனக்கொலையைத் தமிழர்களே அங்கீகரித்துவிடுவது போலிருக்காது என்று நினைக்கிறீர்களா??

தெரியாத பேயை விடவும் தெரிந்த பிசாசு பரவாயில்லை என்பது இனி எம்மைப்பொறுத்தவரையில் செல்லாது. ஏனென்றால், இனி அழிப்பதற்கு எம்மிடம் மீதம் ஏதுமில்லை. ஏனென்றால் தெரிந்த பேயே எல்லாவற்றையும் அழித்து ஏப்பம் விட்டு விட்டது. ஆகவே தெரியாத பிசாசு வந்து இனிமேல் அழிப்பதற்கு எதுவுமில்லை. குறைந்தது தெரிந்த பேயை, அது செய்த இனக்கொலைக்காகவாவது தோற்கடிப்போமே ??!!

உங்களுடைய இந்தக் கருத்தை கவனிக்கவில்லை.

தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட‌ நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நிலைப்பாடுகள் என்று பார்த்தால்..

1) இந்திய ஆதரவு நிலைப்பாடு (சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு)

2) மேற்குலக ஆதரவு நிலைப்பாடு (சில புலம்பெயர் அமைப்புகளின் நிலைப்பாடு)

3) மகிந்த ஆதரவு நிலைப்பாடு (டக்ளஸ், தொண்டமான் நிலைப்பாடு)

இதில் மகிந்த ஆதரவு என்பது இந்திய / மேற்கு எதிர்ப்பு நிலைப்பாடு எனக் கொள்ளலாம். (மகிந்த இந்தியாவைப் புகழுவார்.. அஜீத் தோவல் இலங்கையைப் புகழுவார்.. ஆனால் இவையெல்லாம் நாடக வார்த்தைகள் என்பது புரிந்துகொள்ளக் கூடியவைகளே. உண்மையில் மகிந்த இந்திய எதிர்ப்பில்தான் குறியாக உள்ளார்.)

இங்கே மகிந்தவை தமிழரால் ஆதரிக்க முடியாது. அதற்காக மைத்திரியை ஆதரித்தால் இந்தியா / மேற்கை ஆதரிப்பதுபோல் ஆகிவிடும். அதாவது மகிந்தவுடன் சேர்ந்து தமிழின அழிப்பை மேற்கொண்ட தரப்புகளை ஆதரிப்பது போலாகிவிடும். இதற்கும் மகிந்தவை நேரடியாக ஆதரிப்பதற்கும் அதிக வேறுபாடுகள் கிடையாது. (போர்க்குற்ற விசாரணைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இவர்கள் ஏன் அந்த விசாரணையைக் கொண்டு வந்தார்கள் என்பதில் தமிழர் நலன் அடங்கியிருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்.)

அதே நேரத்தில், தேர்தலைப் புறக்கணித்தால் ஈழத்தமிழரால் பலன் ஏதும் இல்லை என்கிற செல்லாக்காசு நிலை வந்துவிடும். ஆகவே, இதுவும் ஒரு சிக்கலான நிலைதான்.

கடைசி நிமிடம் வரைக்கும் இழுத்தடித்துவிட்டு, மக்கள் தங்கள் விருப்பப்படியே வாக்களிக்கட்டும் என விட்டுவிடலாம். அல்லது மேற்குலகிடம் சில வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டு மைத்திரியை ஆதரிப்பதாக அறிக்கை வெளிவிடலாம். இது கூட்டமைப்பினால் செய்யக்கூடியது.

ஆனாலும் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை அவசியம். அந்த அடிப்படையில், தேவைக்கேற்ப கஜேந்திரகுமார் அணியை பாவிக்க வேண்டியதும் அவசியமாகிறது. மக்கள் இவர்களைக் கவனிப்பார்களா என்பது வேறு விடயம். ஆனால் தமிழர் தரப்பை உருட்டி மிரட்டி, தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள இந்திய, மேற்கு கொள்கை வகுப்பாளர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இசையோடு இசைகிறேன். விடுதலைப்புலிகளின் தடைநீக்கம் மட்டுமல்ல.. தாயகத்தில் நிலப்பறிப்பு.. இராணு இருப்பு.. இராணுவ நிர்வாக மயப்படுத்தல்.. மற்றும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு ஜனநாயக முலாம் பூசி உலாவ விடுதல்.. ஊடக அடக்குமுறை.. இவை தவிர்க்கப்படவும்... அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு.. முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடிகள் நிறுத்தம் மற்றும் அவர்களின் சுதந்திர நடமாட்டமும்.. இயல்பு வாழ்வை உறுதி செய்வது போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து தமிழர்கள் தங்கள் வாக்குகளை இவற்றை தீர்க்க உறுதி அளிக்கும் பட்சத்தில் தான் அளிப்பார்கள் என்று மேற்குலகிடம் டிமாண்ட் பண்ண வேண்டிய தருணம் இது.

மேற்குலகோ.. இந்தியாவோ.. எதனையும் எமக்காக பெற்றுத்தரப் போவதில்லை. நாம் தான் சந்தர்ப்பங்களை பாவித்து.. டிமாண்ட் பண்ணி பெற்றுக் கொள்ள வேண்டும். கூட்டமைப்பு.. இப்படியான எத்த உருப்படியான வேலைத்திட்டத்தையும் இன்னும் முன்னெடுக்க காணம். அந்த வகையில்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணி.. இதில்  முன்மாதிரியாக இருக்கலாம்.

பிரித்தானிய ஆளும் கட்சியினர்.. கூட்டமைப்பை சந்திக்கவில்லை. தமிழர் தரப்பில் யாரையும் சந்திக்காமை.. அவர்கள் தமிழர் தரப்பை புறக்கணித்து.. ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நினைக்கக் கூடும். இது எமக்கு மேற்குலகில் இருந்து வரும்..ஆபத்தான சமிக்ஞை ஆகும்.  எமது போர்க்குற்ற விசாரணைக் குரல்கள் எதிர்காலத்தில் மலினப்படக் கூடிய வாய்ப்பை இது அதிகரிக்கும். இந்தப் போக்கை தமிழர் தரப்பு கட்டாயம் களையக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது மகிந்தரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினால் சரி எந்தவித விசாரணையும் தேவையில்லை புதிய அரசாங்கத்துடன் புதிதாக ஒப்பந்தங்களை போட்டு தமக்கு தேவையானவையை பெற்று கொள்வார்கள் இது பொதுவாக மேற்க்குநாட்டவர்களின் உத்தி இதில் தமிழர்களுக்கு எந்த நலனும் கிட்டாது 

  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்கள் அறிவுரையை கேட்டு கஜன் அண்ட் கஜன் கம்பேனி புலிகள் மீதான தடையை நீக்கச்சொன்னா, பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் வயிறு குலுங்க சிரிப்பர். வேறொண்டும் நடவாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாேரும் தங்கள் தங்கள் பங்குக்கு தமிழரைப் பகடைக் காய்களாகப் பாவித்து பயன்பெற கற்றுக்காெண்டாா்கள். இழப்பதற்காென்றுமில்லை. எந்த சிங்கள அரசும் தமிழருக்கு நன்மை செய்யாது. அவன் வாழ்வே தமிழா் வாழ்விலும், சாவிலுந்தான். நமக்கு வேறு தெரிவுமில்லை. ஆனாலும் எம்மையே அழித்துவிட்டு கட்டியெழுப்புகிறேன் என்று எல்லாா் தலையிலும் மிளகாய் அரைக்கிறவனுக்கு ஒரு வாய்ப்பை நாம் அளிக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.