Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோபிதா, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிகின்றேன்.

அதற்கு முன்னர் ஒரு சிறிய அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். 2002 ம் ஆண்டு நீண்ட காலத்தின் பின்பு யாழ்ப்பாணத்துகு தரைவழியாக சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவம். இலங்கையில் எல்லைகளைக் கடந்து, ஈழத்தின் வரிக்கட்டுப்பாடு சோதனைச்சாவடி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் மட்டுமே. அதை விட நாம் சென்ற வாகனத்தை பதிவதற்காக ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அந்தப்படிவம் ஜப்பானிய பயண அனுபவங்களை நினைவு படுத்தின. படிவம் முற்றிலும் தமிழில் இருந்தது. நான் ஒரு கணம் திகைத்து விட்டேன். காரணம் அந்த படிவத்தில் அடிச்சட்டக இலக்கம் என்க்கேட்கப்பட்டிருந்தது. நான் அறிந்திராத சொல்லாக இருந்தாலும் ஊகிக்க கூடியதாக இருந்தது. அப்போது ஜப்பானியரின் மொழிக்கொள்கையைப்போல ஈழத்திலும் இருப்பதாக தோன்றியது. ஜப்பானியர்கள் அவர்களது அந்த கொள்கையால் அடைந்த நன்மைகள் பல. எந்த ஒரு வேற்று நாட்டு மொழி ஆதிக்கமும் இல்லாமல் உலக சந்தையில் கோலோச்சினார்கள்... காரணம் அவர்கள் திறமையோடு அவர்கள் வேற்று கலாச்சாரங்களுக்கும் மொழிப்பரவல்களுக்கும் இடங்கொடுக்காமையுமேயாகும்.

நாம் ஜப்பானியர்களுக்கோ சீனர்களுக்கோ சிறிதும் சழைத்தவர்கள் அல்ல. சில ஜப்பானிய மற்றும் சீன நண்பர்களே இதனைத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நம்மில் பலர், வேற்று கலாச்சார மோகத்திலும், வேற்று மொழிகளின் பேர் கொண்ட ஆர்வங்களிலும் நேரத்தையும் திறமைகளையும் காட்ட முன் நிற்பதால் எம்மால் சாதனைகள் பல செய்து நமக்கென ஒரு இடம் பிடிக்க முடியவில்லை. ( ஈழத்தில் இருப்பவர்கள் சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது)

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

ஆக நாம் என்ன தான் கலாச்ச்சாரதினை மாற்றினாலும் எங்கு சென்று வாழ்ந்தாலும் நமது வம்சாவழி மாறப்போவது இல்லை.

சிலபேருக்கு இந்த விடயத்தை எப்பிடிதான் சொன்னாலும் புரியவைக்கவே முடியாது.

ஒரு மனிதனை, அவனது கலாச்சார பழக்க வழக்கங்கள், மொழி, வம்சாவழி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு, தமிழர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர், சீனர் என அழைக்கின்றோம். எமது கலாச்சார பழக்கவழக்கங்களை நாம் தொடராது விட்டால், இன்று புலத்தில் உருவாகிய எமது சந்ததியின் நிலை இன்னும் ஒரு சில வருடங்களில் இது தான். ஒரு வம்சாவழி, இன்னொரு அல்லது கலந்து பட்ட ஒரு கலாச்சாரம், வேற்று மொழிப்பாவனை. இது தான் அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும். ஆக இன்னும் சில காலத்தில் நமது சந்ததியினை எப்படி அழைப்பது? கலாச்சாரத்தை தொடராத நமது சந்ததியினை பார்ப்பவர்களை இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ண வைக்கும். அது புதியதொரு இனத்தினை உருவாக்கும் ( பல நாடுகளின் எல்லைகளில், பல புதிய இனங்க்கள் தோன்றி இருக்கின்றன். பெயர்கள் வாயில் கூட நுழைய கஸ்டமாக இருக்கின்றன) . ஆக நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்ப்படுங்கள்.

இதற்கான உதாரணங்கள் பல என்னால் கூறமுடியும்

என்னுடைய அகராதியில காதல் என்பதுக்கு சும்மா ஒரு விளக்கம் குடுத்து இருக்கின்றன். அதை அப்படியே இங்கு தருகின்றேன். தப்பாக இருந்தால் அடிக்க வராதீர்கள்.

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை.

சத்தியமா எனக்கு உதுக்கு மறுமொழி தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் உண்மை, எங்கடா ஒரு அபாவி கிடைகாதா போட்டுச்சிப்பிலியாட்ட என்று இரை தேடும் பி****னி கழுகு கூட்டம் புலத்தில் அதிகம். அதிலும் முக்கியமா எங்கள் சமூகத்தவரிடையே!!!!! இது இருபாலருக்கும் பொருத்தும்.

ஒரு மனைவி கணவனிடமும், ஒரு கணவன் மனைவியிடமும் சந்தர்ப்ப சூழ் நிலைக்களுக்கு ஏற்ற மாதிரி உறவு முறையினை வளர்க்க வேண்டும் .(சந்தர்ப்பவாதிகளாக அல்ல) அதாவது ஒரு அன்னையாக அல்லது தந்தையாக, நண்பனாக அல்லது நண்பியாக, காதலனாக அல்லது காதலியாக, ஒரு நல்ல ஆசானாக இருக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஒரு தப்பு செய்தால், அன்னையாக அல்லது தந்தையாக அல்லது நண்பனாக அல்லது நண்பியாக எண்ணி, அந்த தப்பு எதிர்காலத்தில நடக்கா வண்ணம் அறிவுரை கூறி அல்லது அன்புக்கட்டளை இட்டு வாழ வேண்டும். இப்படி வாழும் கணவன் மனைவிக்கு இடையில் அல்லது காதலன் காதலிக்கு இடையில் இருப்பது தான் காதல்.... இதில நல்ல காதல் கெட்ட காதல், உண்மைக்காதல் பொய்க்காதல் எல்லாம் இல்லை.....

ம்ம்.. விட்டுக்கொடுத்தல், ஒத்துப்போகுதல், பகிர்தல் போன்றவை அரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு அத்தியாவசியமென்பது என்கருத்து. சின்னா என்ன சொல்லுறீங்கள்? (நீங்கள் மூத்த உறுப்பினர் 60ம் கலியாணமெல்லாம் வைக்கிறீங்கள், எங்களுக்கும் கொஞ்சம் ஆலோசனை தாங்கோவன்)

கடைசியா தம்பி சும்மாவிற்கு அண்ணனின் வாழ்த்துக்கள்.

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா பிரின்ஸ்..... மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு......... thanksu....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா பிரின்ஸ்..... மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு......... thanksu....

4-Sad_Girl.gif:lol::lol::lol::lol::lol:

எல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

(என்ன ஆதி சீரியசாக எழுதுகிறேன்?) :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சின்னப்பு என்ன இதுக்குள்ள நிக்கிறிங்க ஆச்சிட்ட சொல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

(என்ன ஆதி சீரியசாக எழுதுகிறேன்?) :wink: :wink: :wink:

சிறகு விரிக்கும் சின்னச் சிட்டின் இறக்கைகளை முடக்கும் முதல் சடங்கு....

அவசியம் ஏற்பட்டால் மேலும் இக்கருத்தில் எவரேனும் பிழையுள்ளதாகச் சுட்டிக்காட்டினால் மீண்டும் வருகிறேன் ஆதிவாசி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்று வரையும் புரியவில்லை ஏன் இந்த சடங்கு என்று ஆனா கட்டுரை எழுதியவர்களில் இருந்து கருத்து சொன்னவர்கள் வரை தெளிவுபடுத்த வில்லை........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்று வரையும் புரியவில்லை ஏன் இந்த சடங்கு என்று ஆனா கட்டுரை எழுதியவர்களில் இருந்து கருத்து சொன்னவர்கள் வரை தெளிவுபடுத்த வில்லை..

- ஆரியா எழுதியது -

இதில் எதில் குழப்பம் ஆரியா?

ஏன் இந்த சடங்குகள் செய்யப்படுகின்றன என்பதற்கான மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ தனக்கு இதுவரை சரியான

முறையில் கிடைக்கவில்லைவீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

என் வீட்டுச் சாமத்திய வீடுமற்றயவர் வீட்டை

விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,

இப்படிப் பெரிதாகச் செய்யா விட்டால் என்ன

நினைப்பார்கள் என்பதான போலி கௌரவத்துக்கும்,

கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன்

கழிப்பதற்கும்..,

என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக்

கொண்டுதான்,புூப்படைந்த பெண்ணைக் காட்சிப்

பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில்

பெரும்பாலான சாமத்தியச் சடங்குகள் நடைபெறு

கின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடுஎன்று

போலி முலாம் புூசப்படுகிறது. அவ்வளவுதான் என்று சொல்வதுடன் அதை களைவதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளா.

அதற்கு சுந்தரி

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள hPதியாகவும், உடல் hPதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அநுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டவும்,

ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து என்கிறா.

இதற்கு கிளியின் கண் ஊரான்

சிறுமிக்கு சாமத்திய சடங்கு மூலம் வாழும் வழிமுறைகளைக் கற்று கொடுப்பதோடு கூடித் திரிந்து விளையாடிய சிறுவர் சிறுமிகளிடத்து வேறுபடுத்திக் காட்டுவதுடன் உற்றார் உறவினர் அயலவர் அனைவர்க்கும் இவளுக்கு இனி பாதுகாப்புத் தேவை என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த சாமத்திய சடங்குகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இல்லாததினால் தான் எத்தனை சிறுமிகள் முதல் கருவிலேயே கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள், உலகிலேயே மிகச் சிறிய வயதில் குழந்தையை பெற்றது என்றால் அது இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தான. எந்தளவிற்கு மருத்துவ வசதிகள் இருந்தும் இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படி குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் என்றால் வளர்ச்சியடைந்து வரும் எங்கள் நாட்டில் எப்படி இருக்கும்? இதற்காகத்தான் எமது இன மக்கள் எமது பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகிறார்கள் என்கிறார்.

தயவுசெய்து எங்கள் நாட்டு கலாச்சாரத்தை இங்கே ஒப்பிடாதீர்கள். அந்த கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் மனம் தளரக்கூடாது. தரமான கேள்விகளை கேட்டு தரமான பதில்களை மக்களுக்கு உரைத்து நல்ல சமுதாயம் மலர வைப்பீர்களாக, என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறார்.

எம்.ஜ.செவின்,

எமது பாரம்பரியத்தில் பிறப்பு, யௌவனப்பருவம் எய்தல், மரணம் என்பன உட்பட அடையாளம் காணக்கூடிய நிகழ்வுகளை வைபவங்கள் மூலம் கொண்டாடி மகிழும் வழக்கம் ஆதி காலந்தொட்டு உள்ளது. இதற்கும் பெண்ணடிமைக்கும் ராதிகா குமாரசாமி முடிச்சு போட்டு பெண் விடுதலையை வேண்டி நிற்கிறார் என்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித வாழக்கை வட்டத்தில் பிறப்பு, யௌவனப்பருவம் எய்துதல், மரணம் எனபன உட்பட அடையாளம் காணக்கூடிய நிகழ்வுகளை வைபவங்கள் மூலம் கொண்டாடி மகிழும் வழக்கம் ஆதி காலந்தொட்டு உள்ளது. குறிப்பாக ஆசிய ஆபிரிக்க யுத கலச்சாரங்களில் உள்ளது. யுூத- கிறிஸ்தவ பண்பாட்டில் வந்த ஐரோப்பியரிலும் இது நடைமுறையில் இருந்ததோ தெரியவில்லை.

இந்தவகையில் பராயம் எய்துவதை கொண்டாடும் பழக்கம் தமிழரைப்போல யுூதர்களிடமும் இன்னமும் இருக்கிறது. நாளடைவில் மாறி வரும் நாகரிகத்தில் அவை குறைந்து போயின. குறிப்பாக நகரப்புறங்களில் வாழ்பவரிடம் அருகி வருகிறது. இதில் பெண்ணடிமைத்தனம் ஏதும் இருப்பதாக தெரியாவிட்டாலும் இதனை பெண் அடிமைத்தனத்தின் வடிவமாக மேற்கத்தைய (அ)நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் சில பெண்ணியவாதிகள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

சிலவருடங்களுக்கு முன்னர் போராட்டத்தில் தமிழ்பெண்களின் பங்கு என்பது பற்றி ஒரு விரிவுரையாற்றிய ராதிகா குமாரசாமி லண்டனிலும் புலம்பெயரந்த நாடுகளிலும் தமிழர்கள் சாமத்திய சடங்குகள் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ் பெண்கள் இன்னமும் விடுதலையடையவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொதுவாகவே கிராமத்து பழக்க வழக்கங்களை படித்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரும் விமர்சிப்பது வழக்கம் அந்த வகையில் இந்தச் சடங்கும் விமர்சிக்கப்படுகிறது.

புலம் பெயரந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இனப்பிரச்சினையின் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள். அவர்கள் வேறுபட்ட சமூக பொருளாதார தளத்திலிருந்து வந்தவர்கள். கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் நகரப்புறங்களிலிருந்து வந்தவர்களைப்போல் தங்களது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பதில்லை. அந்த வகையில் இந்தச்சடங்கும் கொண்டாடப்படுகிறது.

இங்கு நடைபெறும் வைபவங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட இளம்பெண் உட்பட பெண்களின் புூரண விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. ஆகவே பெண்ணடிமைத்தனம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை.

வெறுக்கத்தக்க வி;டயம் என்னவென்றால் இந்த வைபவங்கள் வெறுமனே பகட்டுக்கு செய்யும் சங்கதியாகி விட்டது. இதனால் பணம் வீணாக விரயம் செய்யப்படுகிறது. பண்பாடு பழக்க வழக்கம் என்பதற்கு பதிலாக இவை ஒரு சினிமாத்தனமான போலியாக மாறிவிட்டது.

இந்த ராதிகா குமாரசாமி அவர்கள் திருமணத்தின் போது பெண்கள் கழுத்தில் கட்டப்படும் தாலியும் ஓரு பெண் அடிமை தனம் எள்று விமர்சித்தவரா?

:roll: :roll: :roll:

அல்லது நான் ஆள் மாறி சொல்கிறேனா? :oops: :oops:

உங்கள் உளவு பிரிவு என்ன சொல்கிறது? :idea: :?:

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு என்பது அவசியம் தான். ஆனால் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஆண்களுக்கும் செய்ய வேண்டும்( எத்தனை பேர் ஒத்துக் கொள்வினமோ தெரியாது :wink: ).

இன்று பாலியல்கல்வி என்று ஏன் படிப்பிக்கப்படுகின்றது. அந்த வயதில், இவ்வாறான செயற்பாட்டை எதிர் நோக்க வேண்டும். அல்லது துர்நடத்தையுள்ளவர்கள் எவ்வாறு நடப்பார்கள் என்பதை சிறுவயதிலேயே அவதானத்தோடு இருக்க வேண்டும் என்பதாகக் காரணம் சொல்லப்படுகின்றது.

இப்போது நடக்கின்ற பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொருவரினதும் வசதிக்காகச் செய்யப்படுகின்றது. அல்லது மற்றவர்களுக்கு தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் செய்யப்படுகின்றது. வீடியோ கமராக்காரர்கள் தான், இப்போது நல்ல நேரம் குறிப்பவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே பெற்றோர்கள் செய்கின்ற தப்பை, சம்பிர்ருதாயத்தின் மீது பழியைப் போடுவது தகுமா?

யாராவது இப்படிச் செலவளித்துச் செய்யச் சொல்லி விதி வகுத்தார்களா என்ன? சாத்திய வீடு மட்டும் செய்தால் போதாது, குழந்தைகளுக்கு அது பற்றிய தெளிவையும் செய்ய வேண்டும். அதை எத்தனை பேர்கள் செய்கின்றார்கள்?

சிறுமிகளை உணர்வூட்டலுக்காகத் தான் பூப்புனிதநீராட்டு விழா என்று ஒரு சடங்கு வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஆண்கள் அடங்காப்பிடாரிகள் என்று மறுக்கப்பட்டிருக்கலாம். என்ன இருந்தாலும் அன்று, கருக்கலைப்பு என்பது சாத்தியமற்றதாக இருந்ததால், பெண்களின் தப்புக்களே சமூகத்தில் உணரப்படும் என்ற கண்ணோட்டத்தில் பெண்களை மட்டுமே, கண்டிப்பாக வளர்க்கப்படுகின்றார்கள். அது தலைமுறையாகவும் தொடருகின்றது.

இப்போது அந்த நிலை மாறி தப்பு செய்தாலும் பிடிபடாமல் இருக்கலாம். அல்லது அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற சிந்தனையோடு பல தமிழர் இருப்பதால், புலத்தில், ஏன் கனடாவில் திருமணம் ஆகி கொஞ்ச நாளில் வேறு ஒருத்தரோடு குடும்பம் நடத்துகின்ற ஆண்கள், பெண்களைத் தமிழரில் பார்க்க முடிகின்றது.

வீட்டுக்கு வந்த கணவனின் நண்பரோடு குடித்தனம் நடத்துகின்ற அவல நிலை கூட பத்திரிகைகளில் படிக்க முடிகின்றது. இது தான் அடக்குமுறை அற்ற வாழ்வாகப் பலர் தெரிவு செய்கின்றார்கள் என்பது நிதர்சனம்!

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் 600 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதில் குறைந்தது 350 மில்லியன் வரை பெண்களாக இருப்பர். இதில் எத்தனை சதவீதம் பேர் பூப்புனித நீராட்டு விழா நடத்தி தங்களின் இயற்கையான உடல் உள மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஊட்டபடுகின்றனர்.

விஞ்ஞான ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதை எட்டும் போது ஏற்படும் உடல் உள மாற்றங்கள் பொதுவானதே. இருவருக்கும் உளத் தாக்கங்களும் உடல் தாக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்களுக்கு உடல் தாக்கம் என்பது சற்று அதிகம். அது விலங்கு இராச்சியத்தில் பிரைமேற்றுக்களுக்கு உள்ள சிறப்பம்சம். அது கூட தனது இனவிருத்திக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் நோக்கோடே நிகழ்கிறது.

சமூக வழமைகள் என்பது சமூகத்துக்குச் சமூகம் மாறுபடுகின்ற போது தமிழர் சமூக கலாசார நடைமுறைகளில் பெண் பிள்ளைகள் மீதான கவனிப்புக்கு அதிக முக்கியம் அளிக்கிறது. அந்த வகையிலேயே பூப்புனித நீராட்டுவிழா என்பது குறித்த பெண் பிள்ளைக்கான தனது நிலையுணரும் அறிவூட்டல் என்று கொள்ளலாம்.

மேற்குலகில் இன்று பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பான ஆண் பெண் உடல் சார்ந்த உறவுகளுக்கு என்று கொண்டொம் போன்றவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தமிழர் கலாசாரம் என்பது ஆண் பெண் உடல் ரீதியான உறவு என்பதை திருமணத்தின் பின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மேன்மிய நிலையில் பேணி வந்தது. அந்த நிலையைத் தக்க வைக்க வேண்டின் ஆண் அல்லது பெண் பிள்ளை பருவ வயதை அடையும் போது நிச்சயம் அவர்களின் நிலை குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் பெண் பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தாக்கம் அதிகம் என்பதால் அவர்களைத் தெரிவு செய்து பூப்புனித நீராட்டு விழா என்ற அடிப்படையில் அறிவூட்டலை அவளுக்கு சமூகத்துக்கும் வழங்கினர்.

மேற்குலகு நோக்கிய குடிபெயர்வின் பின்னான இன்றைய நிலை என்ன..?

இன்று தமிழர்கள் மேற்குலகம் ஈழம் என்று உலகெங்கும் பரந்து வாழும் நிலையை எட்டி இருப்பதால் அந்தந்த வாழும் சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் நடமுறைகளைப் பின்பற்ற விளைகின்றனர். அவற்றில் அவர்கள் காணும் நெகிழ்வுத் தன்மையான நிலைப்பாட்டை பெண்களுக்கான உரிமை மறுப்பாக தமது சமூகத்தில் இனங்காட்ட முயல்கின்றனர். அதன் பிரகாரம் பல பெண்கள் மேற்குலக நடைமுறைகள் தங்கள் வாழ்வுக்கு வசதியாக இருப்பதாக எண்ணி அதன் கீழ் வாழப்பழகியும் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் மேற்குலக வாழ்க்கை நடைமுறைகளை ஏற்றுக் கொண்டாலும் சில தனிப்பட்ட தேவைகளுக்கு விளம்பரத்துக்காக என்று இப்படியான பூப்புனித நீராட்டு விழாக்களை களியாட்ட நிகழ்வுகளாக்கிக் கொண்டாடி தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதில் கலாசார பற்றுறுதி என்பது கிடையாது.

இன்னும் சிலர் தங்கள் காலாசார அடையாளத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் இதைக் கொண்டாடுகின்றனர். ஆனால் கலாசாரத்துள் ஏன் இந்த நிகழ்வு உள்ளடக்கப்பட்டது என்ற அடிப்படை, வாழ்வியல் நெறி குறித்து அவர்கள் பிள்ளைகளுக்கு விளக்குபவர்களாக இல்லை.

இன்று மேற்குலகில் ஆண் பெண் அடிப்படைச் சுதந்திரம் என்பது வெகுவாக எல்லோருக்கும் கிடைக்கின்றது. அதற்கேற்பவே வாழ்வியல் நடைமுறைகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பார்வைக்கு மேற்குலக வாழ்வியல் என்பது கவர்ச்சிகரமானதாக அதிக சுதந்திரத்தை உறுதி செய்வதாகக் காணப்படுவதால் தமிழ் பெண்களும் ஆண்களும் அதைனையே விரும்பி மாற்றங்களைத் தேடுகின்றனர். அதை தமிழர் சமூகத்திலும் காண வேண்டும் என்ற நோக்கில் முற்போக்குவாதம் என்ற நிலையில் அதை தமிழர் சமூகத்திலும் புகுத்த விளைகின்றனர். இதனால் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் கூட இழக்கப்பட்டு விடுகின்றன.

தமிழர்களின் தனித்துவ அடையாளம் என்பது சமூகம் சார்ந்தது.

வெறும் பெண்களே அதைக் காவுவதாக பெண்கள் நினைக்கத் தூண்டப்பட்கின்றனர். ஆண்கள் ஏலவே அந்த நிலையைத் தொட்டுவிட்டதால் பெண்களும் அதைத் தங்களின் உரிமையாகக் காட்டி பெற விளைகின்றனர். அதில் அவர்கள் அளவில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.

மேற்குலக வாழ்வு என்பது எவ்வளவு எவ்வளவு கட்டுப்பாடற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரச்சனைக்குள்ளானதாகவும் இருக்கிறது. தமிழர் சமூகக் கட்டமைப்பு என்பது சமூக நடத்தைகளால் இட்ட கட்டுபாடுகள் என்பது மனித வாழ்வியலில் தனி மனிதன் ஒருவன் சீரிய வழியில் மன அழுத்தங்கள் இன்றி தன் வாழ்வை வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் அதிகம் இடம்பிடித்திருக்கிறது.

மேற்குலகில் 13 வயதுச் சிறுமிக்குக் கூட காதல் முறிவுப் பிரச்சனை. அடுத்த போய் (boy) பிரண்டைத் (friend) தேட வேண்டிய கட்டாயம். சுதந்திரத்தின் பெயரால் அவள் வாழ்வியலில் அகலக் கால் வைக்கினும் 15 வயதில் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நிலை. அது அவளின் சுதந்திரம் என்று பார்த்தால் ஒரு சிறுமியால் எந்தளவுக்கு தனது பிள்ளையின் மீதான அன்பை ஆதரவை கவனிப்பை வழங்க முடியும் என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. 13,14 ,15,16 வயதில் திருமணம் செய்தால் இலவச வதிவிடம் பணம் என்று சலுகைகளை அளித்துவிடுவதால் கட்டுப்பாடற்ற வாழ்வியல் தொடர்கிறது.

தமது சுய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து வாழ்ந்துவிட்டால் சரி என்ற என்னம் நிலைக்கிறது. இதனால் பிள்ளைகள் பெற்றோர் இடைவெளி அதிகரிக்கிறது. குடும்ப சமூகக் கட்டமைப்புக்கள் பலவீனமாகி கவன்சிலிங் நிலையங்களை வைத்தியசாலைகளை நோக்கி இள வயதினர் படையெடுக்கின்றனர்.

சொந்த அனுபவத்தில் சொன்னால் குறுகிய பயிற்சிக்காக வைத்தியசாலை ஒன்றுக்கு சென்ற போது அனுமதிக்கப்பட்ட 40% பெண்கள் 13- 16 வயதுடைய பெண்கள் கருக்கலைப்புப் பிரச்சனைக்காக ஸ்கானிங் செய்ய வந்திருந்தார்கள். இந்த வயதில் தான் ஊரில் பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா நடாத்துவார்கள். உண்மையில் அது அறிவூட்டப்பட வேண்டிய வயதுதான் என்பதை மேற்குலகை வந்த போதுதான் அனுபவ ரீதியாக உணர முடிந்தது.

மேற்குலகில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் மருத்துவ சோதனைகளில் சிறு பகுதியே இலங்கை போன்ற நாடுகளில் நடத்தப்படுகிறது. ஆனால் அங்குள்ள சமூகக் கட்டமைப்பு அல்லது சமூக ஒழுக்கம் என்பது சோதனைக்கு மேலான பாதுகாப்பை பெண்களுக்கும் ஆண்களுக்கும் அளிக்கின்றன என்றால் அது தவறே அல்ல.

மேற்குலகில் வாழும் ஆண்கள் மற்றும் பெண்களுக்குள்ள மன அழுத்தமே அவர்கள் அடிக்கடி தங்கள் சோடிகளை நண்பர்களை மாற்றிக் கொண்டு தங்கள் மனதுக்கு தோன்றும் மாறுபடும் சூழநிலைக்கு ஏற்ப வாழ்க்கையை வாழ மாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு நிலையான கட்டமைப்புக்குள்ளான ஒழுக்கம் என்பதான அறிவூட்டல் பெறாத ஒரு வாழ்வியலையே வாழ்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை சமூகக் கட்டுப்பாடு ஒழுக்கம் என்பதெல்லாம் கிடையாது. சட்டம் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்துகிறது. இதுதான் மேற்குலக வாழ்வியல்.

இது எமது தமிழர்களுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் அதனுள் வாழ்ந்து வலிகளை உணரும் போதே அவர்கள் தெளிவு பெறுவர். அதுவரை அவர்கள் உணரப் போவதில்லை.

இந்த நிலைகளைக் கடக்கவே எமது சமூகத்தில் சில கட்டுப்பாடுகள். சம்பிரதாயங்கள். அவை மனிதர்களை வாழ்வியலில் வழி நடத்துகின்றன என்றால் அது மிகையல்ல. ஆனால் சில சம்பிரதாயங்கள் வழங்கும் அளவுக்கு மிஞ்சிய அழுத்தங்கள் மூடநம்பிக்கைகள் உண்மையான பிரதிபலனை அளிக்காமல் தட்டிக்கழிக்க வகை செய்து கொண்டிருப்பதே இப் பூப்புனித நீராட்டு விழா என்பது அதன் உண்மைத் தன்மை இழந்து களியாட்டத்துக்கும் அல்லது புறக்கணிப்புக்கும் உள்ளாகி வரக் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக சனத்தொகை 600 அல்ல 6000 மில்லியன் என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள். அதேபோலேதான் 3500 மில்லியன் பெண்களின் சனத்தொகை. (பருமட்டான அளவுகளில்)

பொறுங்கோ, பொறுங்கோ வாறன்

நிண்டு நிலைச்சு கருத்தாட நேரமில்லாமத் தாவித்திரியிறன்....

கேள்விகளோட வாறன் தெளிவுபடுத்துங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கோ, பொறுங்கோ வாறன்

நிண்டு நிலைச்சு கருத்தாட நேரமில்லாமத் தாவித்திரியிறன்....

கேள்விகளோட வாறன் தெளிவுபடுத்துங்கோ.

இதைதான் கள்ளுண்ட குரங்கென்பதோ? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ, பொறுங்கோ வாறன்

நிண்டு நிலைச்சு கருத்தாட நேரமில்லாமத் தாவித்திரியிறன்....

கேள்விகளோட வாறன் தெளிவுபடுத்துங்கோ.

தாராளமாக வாங்க! ஒரு மாதம் கழிச்சு வந்தாலும் கேள்வியைக் காட்டினீர்கள் என்றால் பதிலளிக்க, அல்லது சலாப்பிக் கொள்ள நாங்கள் தயார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்று வரையும் புரியவில்லை ஏன் இந்த சடங்கு என்று ஆனா கட்டுரை எழுதியவர்களில் இருந்து கருத்து சொன்னவர்கள் வரை தெளிவுபடுத்த வில்லை..

- ஆரியா எழுதியது -

இதில் எதில் குழப்பம் ஆரியா?

ஏன் இந்த சடங்குகள் செய்யப்படுகின்றன என்பதற்கான மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ தனக்கு இதுவரை சரியான

முறையில் கிடைக்கவில்லைவீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய வீடு என்பது அவசியம் தான். ஆனால் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஆண்களுக்கும் செய்ய வேண்டும்( எத்தனை பேர் ஒத்துக் கொள்வினமோ தெரியாது ).

நாங்கள் பெண்களுக்கே நடத்துவதை எப்படி நிறுத்தலாம் என்று நினைக்கும் போது நீங்கல் வேற?????

ஆனா இபப்டி செய்லாம் பெண்களுக்கு நடத்துவதை நிறுத்தி விட்டு ஆண்களுக்கு மாடும் ஆடமரமாக செய்து பார்கலாம் வீடியோவும் எடுகலாம் அதோடு எவளவு பேர் வருகிறார்கள் என்று பார்போம் :roll: :?:

இதைதான் கள்ளுண்ட குரங்கென்பதோ? :lol::lol:

இங்க நாங்க கதைக்கிற விசயமே போதையைக் கொடுக்கப்போகுது பிறகேன் கள்ளுண்ண வேணும்...?

முதல்ல பெண்கள் மன்னிக்கவேணும்.....

உங்களுடைய உணர்வுகளை மதிப்பதனால்த்தான் இங்கு கருத்தாடவே இறங்குகிறேன். உங்களைப்பாதிக்கிறதாக இருந்தாச் சொல்லிப்போடுங்கோ பொடிச்சிகளே!

நீங்க உங்களுக்காக வாதாட வேண்டிய இடத்தில ஆதி இறங்கியிருக்கிறன் அடிச்சுக் கலைச்சுப் போடாதேங்கோ...

தாராளமாக வாங்க! ஒரு மாதம் கழிச்சு வந்தாலும் கேள்வியைக் காட்டினீர்கள் என்றால் பதிலளிக்க, அல்லது சலாப்பிக் கொள்ள நாங்கள் தயார்!

அடப்பாவி :shock: :shock: :shock:

பெண் வயதுக்கு வந்ததை விழாவாக எடுக்கும் சடங்கு பற்றி சில விடயங்கள் தெளிவுபடவேண்டியுள்ளது.

இதுவரை கருத்துவழங்கியவர்கள் நாகரீகமான முறையில் விடயங்களை தந்திருந்தாலும் தெரிந்துகொண்டே சிலவிடயங்களை மூடிமறைக்கிறார்களா? அல்லது தெரியாமல் விட்டுவிட்டார்களா? என்பது தெரியவில்லை.

கருத்துக்களம் என்று வந்தபின் பேசவிரும்பாத விடயங்களைக்கூட பேசவேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாது.....

அந்த வகையில்..... :arrow:

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

இதென்ன ஆதி ஒரு புதுக்குண்டைப் போட்டுவிட்டன்?.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல பெண்கள் மன்னிக்கவேணும்.....

உங்களுடைய உணர்வுகளை மதிப்பதனால்த்தான் இங்கு கருத்தாடவே இறங்குகிறேன். உங்களைப்பாதிக்கிறதாக இருந்தாச் சொல்லிப்போடுங்கோ பொடிச்சிகளே!

நீங்க உங்களுக்காக வாதாட வேண்டிய இடத்தில ஆதி இறங்கியிருக்கிறன் அடிச்சுக் கலைச்சுப் போடாதேங்கோ...

நீங்கள் மதிகிறதால் கருத்தாட இறங்கிறீங்கள். நான் மதிக்கிறதால் அனவசியமா தலையிட்டு மன உளைச்சலைக் கொடுக்க விரும்பவில்லை.

தம்பி பிறின்ஸ்

பெண்களை நாங்க மதித்தால் அவர்களும் எங்களை மதிப்பார்கள் மிதித்தால் அவர்களும் மிதிப்பார்கள்....

உங்களுக்கு எப்படியோ?......

ஆதியால மிதிபட முடியாதப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.