Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

உங்க லண்டன்லதான் போன சனங்களுக்கு தங்க காசு கொடுத்தவையாம்.. இங்க போனவைக்கு வெள்ளீல சின்ன பிள்ளையார் சிலை கொடுத்தவையாம்.. நண்பர் நைசா 2 வாங்கீட்டன் என்று சொல்லி எனக்கொன்று தந்தவர். 'கெட்டிக்காரன்ராப்பா நீ' என்று அவருக்கு ஐஸ் வைச்சுஇ இப்ப பிள்ளையார் சிலையை வீட்டில வைச்சு பால் பருக்குற ஆராய்ச்சீல இறங்கியிருக்குறன்.. ஆராய்ச்சி வெற்றி எண்டால்... உண்டியல் வைச்சுட்டு எல்லாரையும் கூப்பிடுறன்.. வந்திடுங்கோ!! :lol:

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் பொக்கிசம், பெண் பாதுகாக்கப்படவேண்டியவள் என்று சொல்கிறீர்கள் அப்படிப்பார்த்தால் பெண் என்ன சடமா?

ஆதி, பெண் பொகிஷம் தான்... வாலோடு ஒரு ஆதியை நமக்கு தந்ததும் ஒரு பொக்கிஷம் தான்... நீங்கள் உங்கள் தாயாரை பாதுகாக்க மாட்டீர்களா? அப்படி பாதுகாப்பீர்கள் என்றால் உங்கள் தாயார் ஒன்றும் சடம் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் மறக்க விட்டாலும் நாம் அவர்களின் வம்சாவளியை மறக்க மாட்டோமே........ இந்தியன், பாக்கி, கொறியன் என்று தானே அழைப்போம்.....

சோறு என்றும் ஒரு புதிய இனம் உருவாகின்றதாமே கோபிதா லண்டனில்... உண்மையா? :P :P :P :oops:

சோறா? :!:

கறி என்று ஒரு இனம் உருவாகிறது என்றல்லவா நினைத்தேன் :shock:

அதில் எம்மோடு வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கூடவே அடங்குவார்கள்.. :!:

சமரசம் உலாவும் இடம்.. 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோறா? :!:

கறி என்று ஒரு இனம் உருவாகிறது என்றல்லவா நினைத்தேன் :shock:

அதில் எம்மோடு வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கூடவே அடங்குவார்கள்.. :!:

சமரசம் உலாவும் இடம்.. 8)

எங்கட ஆண்களும் பெண்களும் வேறு இனத்தவரை வீட்டுக்கு அல்லது தங்கும் அறைக்கு அழைத்து விருந்து கொடுப்பது (என்ன விருந்து என்று கேட்க வேண்டாம் புரிந்தால் சரி) தனக்கு பெருமை என்று நினைத்து கூத்து அடித்தால், வெள்ளை கறுப்பென்ன சிவப்பும் அடங்கும்... :P :P

ஆதி, பெண் பொகிஷம் தான்... வாலோடு ஒரு ஆதியை நமக்கு தந்ததும் ஒரு பொக்கிஷம் தான்... நீங்கள் உங்கள் தாயாரை பாதுகாக்க மாட்டீர்களா? அப்படி பாதுகாப்பீர்கள் என்றால் உங்கள் தாயார் ஒன்றும் சடம் அல்ல.

அடடா ஆதியையே மடக்கிறீங்களா?

இந்தச் சாமத்தியச் சடங்கு என்பது ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு வேலி என்று நீங்கள் உரைக்க முற்படுவது தெளிவாகத்தெரிகிறது.

ஆனால் ஒரு பெண்ணை முடக்குவதாகவும் இதைக்கொள்ளலாம் அல்லவா! (அடக்குவது, முடக்குவது இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்று நினைக்கிறேன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாக தெரியாது

கேள்விப்படவில்லை :shock:

சோறு என்பதற்கு இப்படி

ஓரு அர்த்தமா? :P :lol:

நான் கறி என்று சொன்னது

கறி சாப்பிடுவதில் அதிக

நாட்டம் உள்ளவர்களை :oops:

சோறு என்பது யுூனிவேசிட்டியில்

சள் அடிப்பது என்று

சொல்வது போல

குழுக்குறி போலும் :roll: :oops: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க லண்டன்லதான் போன சனங்களுக்கு தங்க காசு கொடுத்தவையாம்.. இங்க போனவைக்கு வெள்ளீல சின்ன பிள்ளையார் சிலை கொடுத்தவையாம்.. நண்பர் நைசா 2 வாங்கீட்டன் என்று சொல்லி எனக்கொன்று தந்தவர். 'கெட்டிக்காரன்ராப்பா நீ' என்று அவருக்கு ஐஸ் வைச்சுஇ இப்ப பிள்ளையார் சிலையை வீட்டில வைச்சு பால் பருக்குற ஆராய்ச்சீல இறங்கியிருக்குறன்.. ஆராய்ச்சி வெற்றி எண்டால்... உண்டியல் வைச்சுட்டு எல்லாரையும் கூப்பிடுறன்.. வந்திடுங்கோ!! :lol:

நான் தான் முதல்... ஆயிரம் யூரோ போடுவன்... அப்ப தானே என்ர பேர் வானொலில வரும்... பத்திரிகையில என்ர படம் வரும்....சொல்லிப்போட்டன் சோழியன் அண்ணா... வேறையாரையும் விடுறது இல்ல பிறகு... :P

அப்ப தான் நான் ஆயிரம் யூரோ போடுறத பார்த்திட்டு.. என்னைப்பற்றி தெரியாமல் தங்கட பிள்ளைய கட்டிக்கொடுக்க நிறைய பேர் நிற்பினம்....இப்ப என்னுடைய திருமணம் உங்கள் கையில் சோழியன் அண்ணா..

அப்பா பிள்ளையாரே.. ஒண்டா ரண்டா.. ஆயிரம் யூரோப்பா.. ஆயிரம் யூரோ.. கெதியா பாலைக் குடித்து எனக்கொரு விமோசனத்தைக் காட்டும்!! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

தாசி என்கின்ற பிரிவே, இறைவனுக்கு சேவை செய்ய என்று, அனுப்பப்பட்ட பெண்கள் என்றே அனுப்பபட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் அது குலம் கிடையாது. அங்கே வந்த அரசர்களின் கடைக்கண் பார்வையால் அவர்களின் தொழில் முறை மாற்றமடைந்தது.

பொதுவாக பரத நாட்டியம் என்பதும், தாசியர்கள் தானே பேணிப் பார்த்தார்கள். இறைவன் முன் ஆடிய பரதத்தை பின், மன்னர் முன் ஆட வேண்டிய துர்பாக்கிய நிலை அவர்களுக்கு. அதனால் பரதத்தை தூக்கி வீசிவிட்டீர்களா?

மலையில் இருந்து ஆறு வருகின்றது. வழியில் எத்தனையோ பெயர், அசிங்கம் செய்திருப்பார்கள். ஆனால் நீங்கள் அதற்கு பின்னர் உள்ள இடத்தில், நீராடுவதில்லையா? அல்லது நீர் அருந்தவில்லையா? அப்படி முடியாவிட்டால், அதை விட அழுக்காக நீங்கள் இருப்பீர்கள். அவ்வாறே சடங்கு மூலம் ஒரு தெளிவை ஏற்படுத்தாலாம் என்றால் கட்டாயம் அச் சடங்கு நமக்கு அவசியமானதே!

எனவே, பழைய அருவருப்பு என்று பார்ப்பதை விட, இன்றைய நிலை எவ்வகையான செய்தியைச் சொல்ல விளைகின்றது என்பது தான் முக்கியம்!

முன்னர் முற்றம் பகுதியில் இணைக்கப்பட்ட சாமத்தியச்சடங்கு பற்றி இரண்டு கட்டுரைகள்

சாமத்தியச் சடங்கு

http://www.yarl.com/articles/2003/saamathiyachsadangu/

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

http://www.yarl.com/articles/2003/saamathi...angu_avasiyama/

முன்னைய களத்தில் (ஏற்கனவே மதன் மேலே இணைப்பு தந்துள்ளார் :lol: )

http://www.yarl.com/forum/viewtopic.php?t=235

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலாச்சாரம் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பன சமுகத்துக்கு சமுகம் வேறுபடுகின்றது. எமது காலாச்சாரத்தில் பிறப்பு இறப்பு பருவமடைதல் என்ற நிகழ்வுகள் எல்லாம் சடங்காகக் கொண்டாடப்படுவது வழமை.

அந்த வகையில் இந்த பூப்புனித நீராட்டு விழாவை எடுத்தோமாயின்., ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதை அடையும்போது ஏற்படும் உடல் உள மாற்றங்கள் பொதுவானதாகவே காணப்படும்.

இருவருக்கும் உளத் தாக்கங்களும் உடல் தாக்கங்களும் இருக்ககும் ஆனால் பெண்களுக்கு உடல் தாக்கம் என்பது சற்று அதிகமாக காணப்படும் . இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அநுபவம் உள்ள பெண்கள் ஒன்றுகூடி அவளுடன் பொழுதை போக்கி கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண் என அவளை ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

ஆகவே இந்தச் சடங்கு கட்டயாமாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பது எனது கருத்து., ஆனால் புலம்பெயர் சமுதாயத்தில் இந்தச் சடங்கை ஆடம்பரத்துக்காகவும் பணத்துக்காகவும் நடத்துவது மிகவும் வேதனைக்குரியவிடயம்.

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

நீங்கள் சொல்லித் தான் நான் கேள்விப்படுறன் இதுக்கு முதல் கேள்விப்பட்டதே இல்லை :evil: :evil: :evil:

இதுக்கு ஏன் என்னிடம் முறைப்பு?

இந்தச் சாமத்தியச் சடங்கு என்பது ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு வேலி என்று நீங்கள் உரைக்க முற்படுவது தெளிவாகத்தெரிகிறது.

ஆனால் ஒரு பெண்ணை முடக்குவதாகவும் இதைக்கொள்ளலாம் அல்லவா! (அடக்குவது, முடக்குவது இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்று நினைக்கிறேன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

(என்ன ஆதி சீரியசாக எழுதுகிறேன்?) :wink: :wink: :wink:

நான் பெரிய பெண்ணான பொழுது..- சிறுகதை

நான் வயதுக்கு வந்த போது எனக்கு வயது பதின்நான்கு.

பாடசாலையால் அவசரம் அவசரமாக வந்து டீயுூசனுக்கு

என்று வெளிக்கிடும் போது தான் நான் வயதிற்கு வந்து வி;ட்டதை

உணர்ந்து கொண்டேன் .. ம்..

இப்போ அம்மாவுக்கு சொன்னால் இன்று டீயுூசனுக்கு போக முடியாது..

இன்று தம்பரின் விஞ்ஞானம் பாடம் ..பாடம் பிடிக்காவிட்டாலும் இன்று ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஓருபக்கமும் விட்டு விஞ்ஞானத்தில் கேள்வி பதில் போட்டி வைக்கப்போவதாகச் சொல்லி இருந்தார்.. எனக்கு விஞ்ஞானம் பிடிக்காவிட்டாலும் ஓடும். எல்லோரும் நல்லாப்படித்துக் கொண்டு வர வேண்டும்.. ஆண்கள் பக்கத்தை மண் கவ்வ வைக்க வேண்டு;ம் என்றெல்லாம் தீர்மானங்கள் முன்பே நிறை வேற்றி அதற்கு இரவிரவாக படிப்பும் நடந்தது.. இந்த நேரம் பார்த்து இப்படி நடந்து விட்டது...

சொல்லாமல் போகலாமா? .. பிறகு வயிற்றுக்குள் குத்தி ஏதும் செய்யுமோ.. என்று சிந்தனையில் குழப்பிக் கொண்டிருக்க ..அம்மாவின் குரல் என்னை நிஜ உலகிற்கு கொண்டுவந்தது..

மிகுதி தொடரும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

ஆதி வாசி எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.... என்ன தொழில் என்றாலும் அனுபவம் இருப்பவரிடம் தான் செல்வது வழக்கம்... ஆக எதற்காக இந்த விழா எடுக்க வேண்டும்... மகள் வயதுக்கு வந்தால்.. தாய்க்கு என்ன ஒரு கூடியது ஒரு 35 வயது இருக்குமா?

ஆக இது பொய் என்பது தெளிவாகின்றது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பெரிய பெண்ணான பொழுது..- சிறுகதை

நான் வயதுக்கு வந்த போது எனக்கு வயது பதின்நான்கு.

பாடசாலையால் அவசரம் அவசரமாக வந்து டீயுூசனுக்கு

என்று வெளிக்கிடும் போது தான் நான் வயதிற்கு வந்து வி;ட்டதை

உணர்ந்து கொண்டேன் .. ம்..

இப்போ அம்மாவுக்கு சொன்னால் இன்று டீயுூசனுக்கு போக முடியாது..

இன்று தம்பரின் விஞ்ஞானம் பாடம் ..பாடம் பிடிக்காவிட்டாலும் இன்று ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஓருபக்கமும் விட்டு விஞ்ஞானத்தில் கேள்வி பதில் போட்டி வைக்கப்போவதாகச் சொல்லி இருந்தார்.. எனக்கு விஞ்ஞானம் பிடிக்காவிட்டாலும் ஓடும். எல்லோரும் நல்லாப்படித்துக் கொண்டு வர வேண்டும்.. ஆண்கள் பக்கத்தை மண் கவ்வ வைக்க வேண்டு;ம் என்றெல்லாம் தீர்மானங்கள் முன்பே நிறை வேற்றி அதற்கு இரவிரவாக படிப்பும் நடந்தது.. இந்த நேரம் பார்த்து இப்படி நடந்து விட்டது...

சொல்லாமல் போகலாமா? .. பிறகு வயிற்றுக்குள் குத்தி ஏதும் செய்யுமோ.. என்று சிந்தனையில் குழப்பிக் கொண்டிருக்க ..அம்மாவின் குரல் என்னை நிஜ உலகிற்கு கொண்டுவந்தது..

மிகுதி தொடரும்..

கோபிதா நீங்கள் பெண்ணா ஆணா? ஒரு சந்தேகம் மனதில் உதிக்கின்றது... உங்கள் கதைப்போக்கு நிஜத்துக்கு மாறக இருக்கின்றது போல எனக்கு தோண்றுகின்றது....ஆணாக இருந்தால், ஒரு பெண்ணுக்கு முதலில் மாதவிடாய் வரும் போது என்ன மாற்றங்கள் அவள் உடலில் நடக்கின்றன, மாதவிடாய் என்றால் என்ன என்பதனை தெளிவாக தெரிந்து கொண்டு கதையை தொடருங்கள்...

தாசி என்கின்ற பிரிவே, இறைவனுக்கு சேவை செய்ய என்று, அனுப்பப்பட்ட பெண்கள் என்றே அனுப்பபட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் அது குலம் கிடையாது. அங்கே வந்த அரசர்களின் கடைக்கண் பார்வையால் அவர்களின் தொழில் முறை மாற்றமடைந்தது.

பொதுவாக பரத நாட்டியம் என்பதும், தாசியர்கள் தானே பேணிப் பார்த்தார்கள். இறைவன் முன் ஆடிய பரதத்தை பின், மன்னர் முன் ஆட வேண்டிய துர்பாக்கிய நிலை அவர்களுக்கு. அதனால் பரதத்தை தூக்கி வீசிவிட்டீர்களா?

மலையில் இருந்து ஆறு வருகின்றது. வழியில் எத்தனையோ பெயர், அசிங்கம் செய்திருப்பார்கள். ஆனால் நீங்கள் அதற்கு பின்னர் உள்ள இடத்தில், நீராடுவதில்லையா? அல்லது நீர் அருந்தவில்லையா? அப்படி முடியாவிட்டால், அதை விட அழுக்காக நீங்கள் இருப்பீர்கள். அவ்வாறே சடங்கு மூலம் ஒரு தெளிவை ஏற்படுத்தாலாம் என்றால் கட்டாயம் அச் சடங்கு நமக்கு அவசியமானதே!

எனவே, பழைய அருவருப்பு என்று பார்ப்பதை விட, இன்றைய நிலை எவ்வகையான செய்தியைச் சொல்ல விளைகின்றது என்பது தான் முக்கியம்!

சும்மா!...

தூயவன் எதை நாங்கள் பேசவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன்.......

காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றங்கள் உருவாகித்தான் ஆகவேண்டும்.

சடங்கும், சம்பிரதாயங்களும் காரணங்கள் புரியாமலும், செக்கிழுப்பதாகவும் ஆகிவிடக்கூடாது.

மன்னிக்கவும் ஆதியால் மேற்கொண்டு உங்கள் வட்டத்திற்குள் பயணிக்கமுடியாது ஆதலால் வாலைப்பாதுகாக்க ஓட்டமெடுக்கப் போகிறேன். நன்றி வணக்கம்.

வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவிக் கொள்கிறேன் அம்மா சும்மா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டைய காலத்தில் தேவதாசிகள் என ஒரு குலம் இருந்தது. அவர்கள் திருமணம் முடித்து வாழ்க்கை நடாத்தாது பரம்பரை பரம்பரையாக கோயிலில் நடனம் ஆடி பரதகலையை வளர்த்து வந்தார்கள் எனச்சொல்லப் படுகின்றது. அவர்கள் அன்நாட்களில் வயிற்;றுப்பாட்டுக்கு உடம்பை விற்கும் அளவிற்கு இல்லாது மிக வசதியாவே செல்வந்த பிரபுக்களாலும் மன்னர்களாலும் நடன கலையை வளர்த்து அவர்களையும் மகிழ்விக்கும் ஒரு கலைஞர்களாகவே மதிக்கப்பட்டார்கள். கண்ணகியா? மாதவியா? என்று பட்டிமன்றங்களே நடக்கின்றன. இவர்கள் பரம்பரை பரமபரையாக சலங்கையை தாயிற்கு பிறகு மகள் கட்டுவாள். இதற்கு வாடிக்கையாளர்களை அவர்கள் தேடிப்போவதும் இல்லை. விளப்பரமும் தேவையிருக்கவில்லை. இத்தேவதாசிகள் குலம் சங்கம் மருவிய காலத்தில் சமணர்கள் ஆதிக்கத்தில் குன்றியிருந்தது.

நாளடைவில் பரத்தைகள் எனவும் பிறகு வேசிகள் எனவும் மருவி திரிபடைந்து தேவதாசிகளுக்கு சற்றும் சம்பந்தப்படாத கலைகளுக்கு வெகு தூரமான ரெட் டைட் ஏரியாவில் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமாக்கள் அல்லது மாமிகள் சில வேளை மூன்றாம் தர சினிமாவில் காட்டுவது போல ஏதாவது செய்யலாம். ஆனால் அதற்கும் சாமத்தியசடங்குக்கும் சம்பந்தமே இல்லை.

அவர்கள் அறுகம் புல் தலையில் வைத்து அது போல கெட்டியாகவும் குடும்பத்தில் இன்ப துன்பங்களுக்கேற்ப இசைந்து வளைந்து வாழ வேண்டும் என்றும் வெண்மையான அப்பெண்ணைப்போல் தூய்மையான பாலை தலையில் தூற்றி மங்கலமான குடும்பப்பெண்ணுக்குரிய மஞ்சள் கன்னத்தில் புூசி ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

என்ன ஆதி மொட்டம் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமர்திய சடங்கு குறித்து முன்பும் களத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன. அதில் ஒரு தலைப்பை கீழே இணைக்கின்றேன் படித்து பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=235

உங்கள் இணைப்புக்கு நன்றி

கலகம் பிறந்தால் தான் தெளிவு

ஆதிவாசி எழுதியது:

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

ஆதி கேட்டது இக்கூற்று உண்மையா? என்றுதான் ஆதி இக்கருத்தாடலை விட்டு விலகிய பிற்பாடு இது ஆதியின் கருத்தென கூறமுற்படுவது நல்ல கருத்தாடலுக்கு அழகல்ல.

கோபிதா எழுதியது-

அவர்கள் அறுகம் புல் தலையில் வைத்து அது போல கெட்டியாகவும் குடும்பத்தில் இன்ப துன்பங்களுக்கேற்ப இசைந்து வளைந்து வாழ வேண்டும் என்றும் வெண்மையான அப்பெண்ணைப்போல் தூய்மையான பாலை தலையில் தூற்றி மங்கலமான குடும்பப்பெண்ணுக்குரிய மஞ்சள் கன்னத்தில் புூசி ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

நீங்கள் இங்கு குறிப்பிட்டது ஒரு குடும்பப் பெண்ணுக்கு உரியதாகக் குறலாம் ஆனால் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் சடங்குகள்பற்றி ஆதி கூறித்தான் யாரும் அறியவேண்டும் என்பதல்ல ஊரைக் கூட்டி விழா எடுப்பது எதற்காக?

மன்னிக்கவும் தொடர்ந்து கருத்தாட விரும்பவில்லை.

சந்திரவதனா அக்கா அவர்கள் எழுதியது புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் சாமத்திய வீட்டு முறைகள் கட்டாயம் தேவையா? என்றும் அதனால் இளம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தெளிவாக எழுதியிருக்கின்றா. ஆனால் அதை விட்டு பலர் என்னமோ ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றீர்கள். சில கருத்துக்கள் மூலம் நமது பழைய பண்பாட்டை அறிய முடிகின்றது. ஆனால் பல கருத்துத்துக்கள் :twisted: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.