Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாண மக்கள்- பட்டினிச் சாவுக்கு தயாரான நிலையில்!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு 1 கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்க முடியாத அவலம் -அரிசி 120 ரூபா-160 ரூபா, வெளிச்சந்தையில் பால்மா இல்லை, கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150

யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும் பொருட்களுக்கான விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது.

ஒருகிலோ சீனி சில இடங்களில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் பல இடங்களில் அந்த விலைக்கும் சீனியைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ அரிசி தற்போது 120 ரூபா முதல் 160 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது. கூட்டுறவு சங்கங்களூடாக குடும்பத்துக்கு ஒரு பால்மா விநியோகிக்கப்பட்டபோதும் வெளிச்சந்தையில் பால்மாவைப் பெறமுடியாதுள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ 150 ரூபாவுக்கு கறுப்புச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பாணுக்கும் குடாநாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாணுக்காக தினமும் நீண்ட வரிசையில் கடைகளின் முன்பாக பொதுமக்கள் காத்து நிற்பதை தினமும் காணக்கூடியதாகவுள்ளது.

வெள்ளைப்பூடு ஒரு கிலோ 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை, செத்தல் மிளகாய், சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருட்களின் விலையும் பலமடங்கு அதிகரித்துள்ளன.

அத்துடன் தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபா வரை அதிகரித்துள்ளது.

சவர்க்காரம், சலவைத்தூள், சம்பு உட்பட பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. சவர்க்காரம் ஒன்று 60 ரூபாவாகவும் இரண்டு ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சம்பு 10 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

பெற்றோல் லீற்றர் 500 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது. மண்ணெண்ணெய் டீசல் ஆகியவையும் 150 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. சமையல் எரிவாயு பெறமுடியாதுள்ளது.

தேங்காய் எண்ணெய் லீற்றர் 400 ரூபாவரை விற்கப்படுவதுடன் ஏனைய சமையல் எண்ணெய் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.

உப்புக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னர் ஆனையிறவிலிருந்து தேவையான உப்பு குடாநாட்டுக்கு எடுத்து வரப்பட்டபோதும் தற்போது ஏ-9 மூடப்பட்டுள்ள நிலையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-தினக்குரல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினக்கூலி செய்து பிழைக்கும் மக்களால் 150 ரூபாவிற்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி எப்படிச் சீவிக்க முடியும். மக்கள் பட்டினியால் வாடுகின்றபோது அதைத் தமிழ் கூட்டமைப்புக்காரர்களும் கண்டு கொள்வதில்லை. சம்பந்தமில்லாத வடக்கு -கிழக்கு பிரிப்புத் தான் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகப் போட்டுது!

அரசாங்கம் வேற கதை விடுகின்றது. 3 மாதத்துக்கு தேவையான பொருட்களைக் கொண்டு போய்ச் சேமிக்கப் போகினமாம் இந்த லட்சணத்தில்!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் மனிதாபிமான நெருக்கடியில்

சிக்குண்டிருக்கும் யாழ். குடாநாடு

`

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பர்.

யாழ். குடாநாட்டு மக்களின் நிலைமையை விளக்கப் பொருத்தமான பழமொழி இது.

யாழ். குடாநாட்டுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தாராளமாக அனுப்பப்படுகின்றன என்றும், அங்கு பட்டினிச்சாவு ஏற்படக்கூடிய நெருக்கடி ஏதும் இல்லை என்றும் கொழும்பிலிருந்து வெளியாகும் அறிவிப்புகள் எல்லாம் வெறும் ஏட்டில் வரையப்படும் சுரைக்காய்கள் தாம். அவை யாழ்.குடாநாட்டில் அவலப்படும் அப்பாவி மக்களின் வயிற் றுப் பசியைத் தீர்க்கப் பயன் தரப் போவதில்லை.

அரிசி கிலோ 120 ரூபா முதல் 150 வரை. சீனி கிலோ இரு நூறு ரூபா. மாவு கிலோ நூறு ரூபா. எரிபொருள் முற்றாகப் பற்றாக்குறை. உப உணவுப் பொருள்களின் நிலைமையோ மிக மோசம். வெள்ளைப் பூடு கிலோ ஆயிரம் ரூபாவை எட்டி விட்டது. மல்லி கிலோ நானூறு ரூபா. மிளகாய் கிலோ 350 ரூபா. தேங்காய் எண்ணெய் லீற்றர் நானூறு ரூபா.

பல கடைகள் திறந்திருக்கின்றன. ஆனால், அங்கு விற் பனைக்குத்தான் பொருள்கள் இல்லை.

போதாக்குறைக்கு அன்றாடம் உழைத்து உண்ணுபவர் களின் நாளாந்த ஜீவனோபாயத்துக்கான தொழில்கள் பலவும் தடைப்பட்டுப் போயுள்ளன. மீன்பிடித் தொழில் முடங்கியுள் ளது. கட்டட வேலைகளுக்கான மூலப் பொருள்கள் இல்லாத தால் அத்துறை சார் வேலைகள் நின்றுவிட்டன. அத்துறை யில் ஊதியம் பெற்று வந்த அன்றாடக் காய்ச்சிகள் தமது குடும் பத்தோடு பெரும் அவலத்தில்.

போக்குவரத்து முதல், சாதாரண கைத்தொழில் வரை பல வும் தேய்ந்து போயின.

ஒருபுறம் பொருள்கள் பற்றாக்குறையால் விலைவாசி கட்டு மட்டில்லாத உயர்வு. மறுபுறம் வேலைவாய்ப்பின்மையால் சாதாரண பொதுமக்கள் வருமானமின்றித் தவிக்கும் நெருக்கடி.

இவற்றின் காரணமாக ஒரு நேரத்துக்குக் கூட வயிறாற உணவு உண்ண முடியாத பேரவலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடாநாட்டில் சிக்கியிருக்கின்றன.

வசதியான, வருமானம் மிக்க, செல்வந்த, குடும்பங்கள் கூட வெளிநாட்டிலிருந்து உதவிகள், வருமானங்கள் பெறு வோர் கூட கையில் பணமிருந்தும் வாங்குவதற்குப் பொரு ளின்றி அலைகின்றனர்.

பசி, பட்டினி ஒருபுறம் என்றால் அத்தியாவசிய மருந் தின்றி பெரும் மருத்துவ சுகாதார அசௌகரியத்தை எதிர் நோக்கும் நோயாளர்களின் நிலைமையோ சொல்லுந்தரமன்று.

குறிப்பாக நீரிழிவு, இருதயப் பாதிப்பு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு "கிளி னிக்'குகள் மூலம் வழங்கப்படும் மருந்து வகைகளுக்கும் குடாநாட்டில் பரவலாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டில் உள்ள நெருக்கடி நிலையை ஏனைய வர்த் தகர்கள் கேவலமான முறையில், தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டமை போல மருந்துப் பொருள் விற்பனை யாளர்கள் நடந்து கொள்ளவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அரிசி, மா, சீனி போன்றவற்றின் விலைகளை மூன்று, நான்கு மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுவதுபோல அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் விற்கப்படவில்லை.

எனினும், இருந்த மருந்துப் பொருள்களின் கையிருப்பு முடிந்துவிட்டதால் அவற்றுக்குத் தட்டுப்பாடு.

உரிய மருந்துகளை உரிய நேரத்தில் உட்கொள்ளாததால் பலரின் வாழ்வு அவலமாகும் நிலைமை. குடும்பத்தில் முக் கிய உறுப்பினரின் அத்தியாவசிய அவசர மருந்துத் தேவையை நிறைவு செய்ய முடியாத, அதற்கு வக்கில்லாத குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் விரக்தியின் விளிம்புக் குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வளவும் ஏ9 (கண்டி) வீதி ஊடான போக்குவரத்துத் தடுக்கப்பட்டிருப்பதால் தடை செய்யப்பட்டிருப்பதால் வந்த வினை.

இராணுவத் தந்திரோபாயத் திட்டம் காரணமாக இந்த வீதி யைப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவதில்லை என்று கங் கணம் கட்டி நிற்கிறது அரச பாதுகாப்புத் தலைமை.

இதன் காரணமாக

அரசின் பாதுகாப்பு இறைமையை நடைமுறைப்படுத்து வதற்காக குடாநாட்டில் நிலைகொண்டிருக்கும் அரச இராணு வம், ஆங்காங்கே கடைகளைத் திறந்து அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்ற நிலைமை. அந்தக் கடைகளிலே ஓரிரு கிலோ அரிசியும், ஒரு கிலோ சீனியும், ஒரு கிலோ மாவும், குழந்தை களுக்கான பால்மா பாக்கெட்டும் பங்கீட்டு அடிப்படையில் பணம் கொடுத்து வாங்குவதற்கு கால்கடுக்க நீண்ட வரிசை யில் காத்திருக்கும் அவலம் மக்களுக்கு.

இந்தப் பேரவல நிலைமைக்குக் காரணம் என்ன?

சுமார் ஐந்து லட்சம் மக்களைக் கொண்ட யாழ். குடாநாட் டுக்கான தரைப்பாதை பலவந்தமாக மூடப்பட்டிருப்பதுதான் ஒரே காரணம்.

தன்னுடைய துருப்புகளின் தேவைகளை நிறைவு செய்வ தற்கான விவகாரங்களையே கடல் மார்க்கமாகச் செய்து கொள்வதற்குப் படாதபாடு படும் படைத் தரப்பு, ஐந்து லட்சம் மக்களின் தேவையைக் கடல் வழி விநியோகம் மூலம் நிறைவு செய்யமுடியும் என்று கதை சொல்கிறது.

குடாநாட்டில் மாரி மழை ஆரம்பித்துவிட்டது. இனிவரும் நாள்களில் மழையுடன் கடும் காற்றும் சேர்ந்துவிடும். அதன் பின்னரும் கப்பலில் பொருள்களை ஏற்றிவருவதென்பது பெரிதும் அசாத்தியம்.

இதன் விளைவாக அப்பாவி மக்களே பெரும் சிரமத்தை யும், மனிதாபிமான நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டி யவர்களாக இருக்கின்றார்கள்.

இந்நிலைமை தொடருமானால் பசியும், பட்டினியும், நோய்த் தடுப்பற்ற நோஞ்சான் வாழ்வுமாக, சூடான் நிலை மைக்குக் குடாநாடு தள்ளப்பட்டுவிடும் அபாயம் உண்டு.

எனவே, அடுத்த வார இறுதியில் ஜெனிவாவில் நடை பெறுப் போகும் அரசு புலிகள் சமாதானப் பேச்சில் யாழ். குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையைத் திறந்து விடும் விவகாரம் ஆராயப்பட வேண்டும். அந்தப் பிரச்சினைக்கு ஓர் அவசரத் தீர்வை எட்டுவதற்காக ஏனைய விடயங்களை விட அதற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகின்றது.

ஒட்டுக்குழுக்கள், துணைப் படைகள் என்பவற்றின் பெய ரால் தினசரி அரங்கேறும் மனிதநேயமற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற வன்முறைகளினால் பேரச்சத்தில் மூழ்கியிருக்கும் குடாநாட்டை, தரைவழிப் பாதை மூடப்பட்ட முற்றுகை நிலை, திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கி, அங்கு பட்டினிப் பேரவலத்துக்குள் மக்களை மூழ்க வைத்திருக்கின் றது. என்று நீங்கும் இந்த அதீத நெருக்கடி?

-உதயன்

இங்கு ஒரு சிங்கள பா.உ நேற்று யாழில் எந்த பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை இது செயற்கையாக வியாபாரிகள் பதுக்கலால் வந்த தட்டுப்பாடு என்று கூக்குரல் இட்டது. இராணுவத்துக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்பதனால் கப்பல் விடுகின்றனர். அது பொதுமக்களுக்கு போய் சேர்கின்றதா? போய் கிடைப்பவைகளில் முக்கால் வாசி பாவனைக்கு உதவாதவை. இது பேரின பயங்கரவாதிகளின் உச்சகட்ட இன அழிப்பு. அது சரி யாழில் உள்ள ஒரு சில அரச உத்தியோகத்தரின் வீட்டில் மேலே குறிப்பிட்டுள்ள விலைக்கு பொருட்கள் விற்பனைக்குண்டாம். இது எப்படி.? தகவல் தொலைபேசி மூலம் வந்தது. காற்றுள்ள போதே.... ம்......

ஈழத்திலிருந்து

ஐhனா :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

´ñÊÃñÎ ¸ôÀø §À¡öÅó§¾ Â¡úôÀ¡½ ¿¢¨Ä þôÀʦÂñ¼¡ø À¡¨¾ ÓüÈ¡¸ ãÊÂÀÊ ÅýÉ¢ ¿¢Ä¨Á? ¿¢¨Éø.....

´ñÊÃñÎ ¸ôÀø §À¡öÅó§¾ Â¡úôÀ¡½ ¿¢¨Ä þôÀʦÂñ¼¡ø À¡¨¾ ÓüÈ¡¸ ãÊÂÀÊ ÅýÉ¢ ¿¢Ä¨Á? ¿¢¨Éø.....

யார் சொன்னது வன்னிக்கு பாதை முற்றாக மூடியுள்ளது என்டு???

யார் சொன்னது அங்க லொறிச்சாமான் போய் சேர இல்லை என்டு???

யாழ்வாழ் பொதுமக்களுக்குத்தான் பசி, பட்டினி. வன்னிக்கு இல்லை.

அங்க இப்ப கொப்பி, பேனை எடுக்க ஏலாதாமே? அப்ப இந்தமுறை க.பொ.த. (சாதாரணம்) பரீட்சை எடுப்பவர்களின் நிலை??? நீங்க யாரும் பாடசாலை சாதாரண தர மாணவர்களுக்கு அஞ்சலில் பாடசாலை முகவரிக்கு பேனை, கொப்பிகள் அனுப்பமாட்டீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எப்பவே பாதை திறக்க சம்தம் சொல்லியும் கண்காணிப்பு குழு கூட இந்தபாதையை திறக்க பன்னமுடியவில்லையே?

ஆனால் சுவிஸ்சில் பேச்சில் அரசு வேற வழி இல்லாம பதையை திறந்து விட்டுவிட்டு பேச்சுவார்த்தை வெற்றி என்று சொல்லி இணையத்தள நாடுகளிடம் உதவிகளை தாங்கோ என்று போய் நிப்பார்கள்,,,,,,,,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.