Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90, 95 இடம்பெயர்வுகளால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பலரையும் உள்வாங்கிய பாடசாலை இந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி (முன்னர் மகா வித்தியாலயமாக இருந்தது). பலரிடம் 10,000 ரூபாவரை அறவிட்டு அனுமதி வழங்கிய இக்கல்லூரி இன்று தேசிய பாடசாலைத் தரத்துக்கு உயர யாழ் இடம்பெயர்வுகளே காரணம்.

பாடசாலையின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள மதில்களில் எல்லாம் அசிங்கமா எழுதித் தள்ளிய பலரும் இங்கும் இருக்கிறார்கள் போல. எதற்கும் சோடாப் போத்தல்கள் சகிதம் யாழையும் கல்கிசை நோக்கி கொண்டு செல்லாதவரை....புண்ணியம்.

  • Replies 86
  • Views 9.6k
  • Created
  • Last Reply

நெடுக்காலபோவான்

நீர் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

என்ன நெடுக்ஸ் இந்துவை காடைக்கூட்டமாக சித்தரிக்கிறீர் நீர் சொன்னமாதிரி நான் படித்த 8 வருடங்களாக நடந்தது இல்லை சுவரில் அசிங்கமாக எழுதியதை நான் கண்டதில்லை சோடாப்போத்தல்கள் சகிதம் யாரையும் கண்டதுமில்லை சும்மா தேவையில்லாத குற்றச்சாட்டை இலங்கையின் மிகப்பெரிய தமிழபாடசாலை மீது சுமத்தாதயும்

கிட்டத்தட்ட 4000 மாணவர்களை கொண்ட ஒரு சிறந்த பாடசாலை கல்வியிலும் சரி விளையாட்டிலும் சரி

சும்மா ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை விடும்

இந்துவின் மைந்தர்களை காடைகூட்டமாக சித்தரிக்க முயல்வதை முதலில் நீர் நிறுத்தும்

யாழ் இடப்பெயர்வின்காரணமாக தேசியப்பாடசாலையானது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு 11/9/91 அன்று தேசியபாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட வடகிழக்குக்கு வெளியே இருக்கும் முதலாவது தமிழ் பாடசாலை.

இடப்பெயர்வின் காரணமாக இடம்பெயர்ந்த மாணவர்களை உள்வாங்கியது உண்மைதான் என்னையும் சேர்த்து ஆனால் இடப்பெயர்வால் தேசியப்பாடசாலை ஆனது என்பது சுத்தப்பொய் இதன் மூலம் நீர் சொல்லவருவது அதற்கு முன்னம் கொழும்பில் இருந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவென்பது.ஒவ்வொரு வகுப்பிலும் 50 மாணவர்களை கொண்டு இடவசதியிலாமல் இடம்பெயர்ந்த மாணவரை உள்வாங்கி மிகுந்த இடர்பாடுகளின் நடுவே வளர்ந்த பாடசாலை பாடசாலை தொடங்கி 37 வருடங்களில் தேசியப்பாடசாலையானதுதான் இந்துக்கல்லூரி

83 கலவரத்தின் போது தமிழரின் புகழிடமாக இருந்ததும் இந்துவே.10000 வாங்கியதாக சொன்னீர் என்னத்துக்காக வாங்கப்பட்டது என்று சொல்லவில்லையே??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. சர்மா ஐயா அதிபராக இருந்த போது அகதிகளாக வந்த மாணவர்களிடம் கூட ஈவு இரக்கமில்லாமல் 10,000 ரூவைக் கறந்ததும் ஒரு கட்டிடம் கூட புதிதாகக் கட்டாததும் அதன் பின்னர் அரசின் பண உதவி பெற்று முத்துக்குமாரர் கட்டியதுகளும் பம்பலப்பிட்டிய வாழ் மக்கள் அறிவார்கள்.

2. சரஸ்வதி மண்டபத்துக்கு முன்னால் உள்ள வீதிகளின் மதிலோரங்கள் எங்கும் கறுப்பு எண்ணைச் சோக் கட்டிகளால் எழுதித் தள்ளியதை நாங்களே அழித்திருக்கும் போது நீங்கள் பொய் என்றால் எனிப் புகைப்படத்துடன் தான் தகவல் போட வேண்டும். அதுவரை அது பொய்யாகவே இருக்கட்டும்.

3. சோடாப் போத்தல்கள் சகிதம் கல்கிசை தோமியன் சென்று சிங்கள மாணவர்களோடு மோதியதும் காயங்கள் ஏற்படுத்தியதுவும் கொழும்பில் பரப்பரப்பாக செய்திகளில் பேசப்பட்டதும் பத்திரிகைகளில் வந்து இந்துவின் பெயரை நாறடித்தவும் உண்மை இல்லை என்றாகிடுமா?

பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என்று கொழும்பில் காங் நடத்துவதும் வீதிகளில் நின்று சண்டித்தனம் செய்வதும் தெகிவளை முதல் கொல்பிட்டி வரை தெரிந்த விடயங்கள்.

4. 90, 95 இடம்பெயர்வுக்கு முன்னர் பொதுத்தராதரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் மோசமாக இருந்தமையும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின்னர் பெறுபேறுகளின் உயர்வும் இராமனாதனுக்குப் போட்டியாக இருக்க முடிந்ததுவும் சமகால நிகழ்வுகளை மறைக்கும் செயல்.

5. கொழும்பு வாழ் தமிழர்கள் றோயல் தோமஸ் ஆனந்தா என்று தேடித்தேடி தங்கள் பிள்ளைகளை சேர்த்தது போய் பம்பலப்பட்டி என்று தேடி வந்ததும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின் நிகழ்ந்த பரீட்சைப் பெறுபேறுகளின் உயர்ச்சியின் பிந்தான்.

6. பம்பலப்பிட்டிய இந்துவில் படித்த எல்லோரும் ரவுடிசுமோ அல்லது காங்கோ நடத்தவில்லை. ஆனால் தமிழ் ரவுடிகளை காங்குகளை உருவாக்கிய பெருமையும் பம்பலப்பட்டிய இந்துக் கல்லூரியைச் சாரும்.

7. நீங்கள் குறிப்பிட்டது போல 1991 இல்தான் உங்கள் பாடசாலைக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

8. இன்று பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரி குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒழுக்கத்தில் திகழ்வதற்கு யாழில் இருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் பலரை உள்வாங்கி இருப்பதுவும் காரணம். அதை மறுக்க முடியுமா?

9. உங்கள் பாடசாலை மாணவர்கள் மீது பம்பலப்பிட்டிய கதிரேசன் கோயில் பக்கம் உள்ள அயலவர்கள் அனுப்பி வைத்த முறைப்பாடுகள் குறித்து உங்கள் அதிபரிடம் விசாரித்து அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று அவரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இங்கு தரமுடியுமா?

10. பத்திரிகைகளில் வந்த உங்கள் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை தவறானவை என்று பத்திரிகைகள் மூலம் அறிவிக்க முடியுமா?!

!

உந்த யாழ்பாணத்தானின் பெருமைகளை எப்ப விட்டு தள்ளுவீங்க நீங்கள்.நீர் கூறிய யாழ்பாணத்து பாடசாலைகளில் நடப்பதில்லையா?கிரிக்கட் போட்டியின் போது தோற்கும் மாணவர்கள் வெல்லும் மாணவர்களை தாக்குவதில்லையா அநுபவபட்டனான் என்ற ரீதியில் சொல்லுறேன் இது வந்து மனித இயல்பு,நீங்கள் கூறிய குற்றங்கள் எல்லாம் யாழ் பாடசாலைகளில் நடைபெறுவது

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய சகல குற்றசாட்டுகளும் சகல பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது தான் கொழும்பு இந்துகல்லூரியோ,இலங்கையில் உள்ள ஏனைய இந்துகல்லூரிகளோ,கிறிஸ்தவ கல்லூரிகளோ நடைபெறுகின்றன.தயவு செய்து ஊரையோ பிரேசத்தையோ இதில் பாவிக்க வேண்டாம் இது வந்து ஒரு மனிதனின் சுபாவம்,இதை வைத்து கொண்டு யாழ்பாணத்தான்,கொழும்பான் என்று கதைப்பது மடைமை தனம்.

friendly atmosphere...one of the targets of yarl forum..?????

இது யாழ்களத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கும் பொருந்தும் ஊருக்கும் உபதேசம் அல்ல உனக்கும் தான்

ஜயா நெடுக்கால போவன் hinducollegeonline.org இல் சென்று பாருங்கள் எப்போது தேசியபாடசாலையாக உருமாறியது எண்டு என்னால் அதை உருதிப்படுத்தமுடியும் எனோனின் இந்த இணையத்தை செய்த குழிவில் நானும் இடம்பெற்றிருந்தேன் என் கண்ணால் பாடசாலை வரளாற்று குறிப்பை பார்த்து நானே இதை எழுதினேன்

1.சர்மா அதிபராக இருந்தகாலத்தில் என்ன நடந்தது என எனக்கு தெரியாது ஆனால் அமைச்சர் பொஸி அவர்களால் ஒரு கட்டடம் கட்டிகொடுக்கப்பட்டது(60 லட்ச்சம் செலவில்)

3.அதன் பின்னர் பாடசாலைக்கு வான் கொள்வனவு செய்யப்பட்டது அது மாணவர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் சேர்ந்து செய்த செயல் திட்டத்தில்

4.பாடசாலை விலையாட்டு மைதானம் திருத்தப்பட்டது அதுவும் மாணவர்கள் ஆசிரியர்கள் பழையமாணவரின் உதவியுடன்(கலைநிகழ்ச்சி,வீதிஉ

6. பம்பலப்பிட்டிய இந்துவில் படித்த எல்லோரும் ரவுடிசுமோ அல்லது காங்கோ நடத்தவில்லை. ஆனால் தமிழ் ரவுடிகளை காங்குகளை உருவாக்கிய பெருமையும் பம்பலப்பட்டிய இந்துக் கல்லூரியைச் சாரும்.

எது எப்படியோ இந்த ஒரே ஒரு காரணத்துக்காகதான்

''Fairக்கு'' போது தகுந்த மரியாதை கிடைத்ததுங்கோ! :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த யாழ்பாணத்தானின் பெருமைகளை எப்ப விட்டு தள்ளுவீங்க நீங்கள்.நீர் கூறிய யாழ்பாணத்து பாடசாலைகளில் நடப்பதில்லையா?கிரிக்கட் போட்டியின் போது தோற்கும் மாணவர்கள் வெல்லும் மாணவர்களை தாக்குவதில்லையா அநுபவபட்டனான் என்ற ரீதியில் சொல்லுறேன் இது வந்து மனித இயல்பு,நீங்கள் கூறிய குற்றங்கள் எல்லாம் யாழ் பாடசாலைகளில் நடைபெறுவது

பிரதேசவாதம் என்பது உங்களால் எழுதப்பட்ட ஒன்று. கொழும்பு யாழ்ப்பாணம் வடக்குகிழக்கு என்பவைஇ பொதுவான ஊர்களுக்கான பதங்கள். நீங்கள் உச்சரித்த யாழ்ப்பாண வாதம் என்பது எமக்கு ஏற்புடைய பதப்பிரயோகம் அல்ல. நாம் அந்த வாதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

யாழ் பிரபல்ய பாடசாலை ஆசிரியர்கள் யாழ் பிரபல்ய தனியார் கல்விக்கூட ஆசிரியர்கள் என்று பலரும் 95 இடம்பெயர்வுக்குப் பின்னர் கொழும்பு பம்பலப்பிட்டிய இந்துவில் தான் உள்ளெடுக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின் அதன் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வு கண்டிருந்தது. அதை கொழும்பு பம்பலப்பிட்டிய அதிபர் கூட ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

யாழில் இல்ல இதர தமிழ் பாடசாலைகளில் எல்லாம் சண்டை நடப்பது என்றில்லை. தேசிய அளவில் செய்தியாக்கப்படும் அளவுக்கு பம்பலப்பிட்டிய மாணவர்கள் சிலரின் செயற்பாடு அக்கல்லூரிக்கும் தமிழ் சமூகத்துக்கும் அவமானத்தைத் தேடித்தந்தது என்பதைச் சுட்டிக்காட்டுதல் அக்கல்லூரியின் எதிர்காலச் செயற்பாடுகளில் அவை மீளக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால் நீங்கள் உங்கள் வாதப்படி யாழில் நட்டக்காததா இங்கு கொழும்பில் நடக்கிறது என்ற பாணியில் எழுதுவது தவறுகளைத் திருத்துவதற்குப் பதில் நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது. இது நமக்கு ஏற்புடைய விடையமல்ல.

பிரன்லி அட்மோஸ்பியர் என்பதில் நண்பனின் தவறுகளைக் கூட நண்பனா சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வதும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ராசா இந்துகல்லூரி மேல அவ்வளவு கோபம் சர்மா 10000 ரூபா எல்லோரிட்ட வாங்கினவர் என்று சொல்லூறீர் சரி நான் அதை ஏற்று கொள்கிறேன் பிறகு சர்மாவுக்கு நடந்தது என்னவென்று உமக்கு தெறியாதோ டோனேசன் வாங்கிறது எல்லா பாடசாலைகளிலும் தான் நடக்குது அது சரி இப்ப டோனேசன் வாங்காத மாதிரி தான் உம்முடைய கதை இருக்கு இப்ப அங்கே வாங்கிறவை தான் இப்ப இருக்கும் அதிபர் சிறந்தவர் என்று சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் ,அத்தோடு இப்ப இருக்கும் அதிபரால தான் பாடசாலை வளர்ச்சியடந்தது என்று நீர் சொல்வது சரி ஆனால் சர்மாவுக்கு முன்னம் இருந்தவர்களை உங்களுக்கு தெறியாது போல அப்ப ஆங்கிலத்திலும் எமது பாடசாலை சிறந்து விளங்கினது,முத்துகுமாரசுவாம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்துத்கல்லூறியில் உது எல்லாம் நடந்ததோ எண்டா குருக்காலே போவாரே படிக்க அனுப்பினா படிக்காம உது என்ன புதுக்கதை,காவாலி,கடப்புலி எண்டு.இனி ஆரும் உன்க சிவரில எழுதினால் ஒரே சீவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல் கிறுக்கிகிடந்தது அது எல்லோரும் செய்யும் விடயமாகவே தான் இலங்கையில் நான் கருதுகிறேன் அங்குள்ளவர்கள் பஸ்சில் சரியோ சுவரில் சரியோ கிறுக்குவார்கள் தான் இது இந்து மாணவர்கள் மட்டும் இல்லை எல்லோரும் தான் ஒரு பெட்டையின் பெயரையும் ஒரு பெடியனின் பெயரையும் எழுதுறது எல்லாம் நடக்கிற விசயம் தான் இதை நீங்கள் முதலில் ஏற்க வேண்டும் என்னவோ பம்பலபிட்டி கல்லூரி தான் காங் வைத்திருக்குது என்று சொல்லுறீங்க அந்த காங் இல்லாவிடில் பாடசாலை மாணவர்கள் வேறு பாடசாலை மாணவர்களிடம் பல தரபட்ட பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடிருக்கும் உதாரணத்திற்கு ஒரு வருடங்களிறிகு முன் லுமினியும் வேறு சிங்கள் பாடசாலை மாணவர்களும் சேர்ந்து விளையட்டில் தோற்றதன் காரணமாக வீதியில் போன ஆசிரியர்கல் மற்றும் பாலர் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் அடித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போடுகிறார்கள் என்று முறையிட்டார்கள் என்று சொல்கிறீர்கள் அவர்களின் மகன் 1 வகுப்பில் இருந்து படித்தவர்கள் அதில் அரைவாசி பேர் அதில் சிலர் உதைபந்தாட்டத்தில் ஜொலித்தவர்கள்,எல்லா பாடசாலக்கு பஸ் கொடுத்த அரசு எங்களுகு மட்டும் பஸ் கொடுக்கவில்லை ஏனெனில் தமிழ் பாடசாலை என்ற ஒரு நோக்கத்திற்காக ஆனாலும் பெற்றோர்களும் மாணவர்களும் செர்ந்து ஒரு வான் வாங்கினாங்கள் சரியோ,இந்துவின் மைந்தர்கள் ஒழுக்க சிலர்கள் என்று சொல்லவில்லை எல்லா வயதிலும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தவர்கள் தான்,அங்கிருந்து பார்த்தால் ஒவ்வொரு விநாடிகளும் மகிழ்ச்சியை தரகூடிய வினாடிகள் நீங்கள் சொல்வது ஆதாரம் அற்ற விடயங்கள் அது ஒரு தேசிய பாடசாலை என்று எல்லோருக்கும் தெறியும் அதுவும் கொழும்பில் தமிழ் தேசிய பாடசாலை அதுவே தான்

தொடரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன்85 பம்பலப்பிட்டிய இந்து மகா வித்தியாலயம் என்பது கூட 90களில் தான் இந்துக்கல்லூரி என்ற நிலைக்கு தரமுயர்ந்திருக்க வேண்டும். உங்கள் கல்லூரி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை முழுமையாக நோக்காமல் எம்மால் உங்கள் இணையத்தள செய்தியை உறுதி செய்ய முடியாது.

நீங்கள் குறிப்பிட்டது போல உங்கள் கல்லூரி வடக்குகிழக்கு மாணவர்களை உள்வாங்க முதல் அடைந்திருந்த கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளையும் சதவீதங்களையும் முன்வைப்பீர்களானால் எம்மால் திட்டவட்டமாக அவற்றில் உள்ள வேறுபாடுகளைக் காட்ட முடியும்.

ஒரு பாடசாலை 4000 பேரைக் கொண்டிருக்கிறது என்பதல்ல முக்கியம் அது 4000 பேரில் எத்தனை பிரஜைகளை நாட்டுக்கு நல்ல பிரஜைகளாக வளமான பிரஜைகளாகத் தருகின்றது என்பதே முக்கியம்.

அந்த வகையில் யாழ் ஆசிரியர்களின் வரவின் பின்னர் குறித்த கல்லூரியின் கல்வி வளர்ச்சியும் புகழ்ச்சியும் அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

நீங்கள் ஆரம்பத்தில் மறுத்த விடயங்களைப் பின்னர் ஏற்றுக் கொண்டு உங்கள் கல்லூரி மாணவர்கள் விட்ட தவறுகளை நியாயப்படுத்தி நிற்கிறீர்கள். அதுவல்ல முக்கியம் லோரன்ஸ் வீதியில் வசித்தவர்கள் என்ற வகையில் நாம் கூட உங்கள் பாடசாலை மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளை நேரடியாக கண்டிருக்கின்றோம். கண்டித்திருக்கின்றோம் பாடசாலை அதிபரூடாக.

ஆனால் சமூகத்தில் அதன் பார்வை என்பது அடிதடிக் கோஸ்டி என்றுதான் இருக்கிறது. றோயல் ஆனந்தா என்று படிக்கும் தமிழ் மாணவர்களைக் காட்டிலும் உங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொடர்பில் வன்முறையாளர்கள் என்ற பார்வையை உங்கள் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது என்பதற்கு நாடே சான்று.

இவை பம்பலப்பிட்டிய இந்துவின் மீது குறை கூறுவதற்கான பதிவுகள் அல்ல. குறித்த பாடசாலை தமிழ் சமூகத்துக்கு ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பில் மேலும் அதிக அக்கறையும் நேர்த்தியையும் மாணவ ஒழுக்கத்தில் அதிகம் கவனமும் செலுத்த வேண்டும் என்பதே கோரப்படுகிறது.

ஒரு ஆசிரியரை வீதியில் வைத்து அடித்துவிட்டு பொலீஸைக் கண்டவுடன் ஒளித்து ஓடிய நிகழ்வுகளையும் இக்கல்லூரி மாணவர்கள் செய்துள்ளனர். இவை களையப்பட வேண்டும். இப்படியான செயல்கள் சமூகத்துக்கு தவறான உதாரணங்களாக்கப்பட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் வயசுக் கோளாறு என்பதெல்லாம் வெறும் சாட்டு. உங்களை வயதைக் கடந்துதான் எல்லோரும் வந்திருப்பார்கள். அதற்காக எல்லோரும் வன்முறையாளர்கள் என்றில்லை.

பரியோவான் கல்லூரியைப் பொறுத்தவரை அவர்களும் 10,000 ரூபா ஆட்கள் தான். பணமிருந்தால் கல்வி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்து ஆங்கிலம் பேசும் மக்களின் மதிப்பை உயர்த்த என்று அப்படி அறவிட்ட பாடசாலை என்று அறிந்திருக்கின்றோம். ஆனால் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் அட்டகாசங்கள் அடங்கிய ஒரு கல்விச் சமூகத்தை யாழ்ப்பாணம் கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல் கிறுக்கிகிடந்தது அது எல்லோரும் செய்யும் விடயமாகவே தான் இலங்கையில் நான் கருதுகிறேன் அங்குள்ளவர்கள் பஸ்சில் சரியோ சுவரில் சரியோ கிறுக்குவார்கள் தான் இது இந்து மாணவர்கள் மட்டும் இல்லை எல்லோரும் தான் ஒரு பெட்டையின் பெயரையும் ஒரு பெடியனின் பெயரையும் எழுதுறது எல்லாம் நடக்கிற விசயம் தான் இதை நீங்கள் முதலில் ஏற்க வேண்டும் என்னவோ பம்பலபிட்டி கல்லூரி தான் காங் வைத்திருக்குது என்று சொல்லுறீங்க அந்த காங் இல்லாவிடில் பாடசாலை மாணவர்கள் வேறு பாடசாலை மாணவர்களிடம் பல தரபட்ட பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடிருக்கும் உதாரணத்திற்கு ஒரு வருடங்களிறிகு முன் லுமினியும் வேறு சிங்கள் பாடசாலை மாணவர்களும் சேர்ந்து விளையட்டில் தோற்றதன் காரணமாக வீதியில் போன ஆசிரியர்கல் மற்றும் பாலர் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் அடித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போடுகிறார்கள் என்று முறையிட்டார்கள் என்று சொல்கிறீர்கள் அவர்களின் மகன் 1 வகுப்பில் இருந்து படித்தவர்கள் அதில் அரைவாசி பேர் அதில் சிலர் உதைபந்தாட்டத்தில் ஜொலித்தவர்கள்,எல்லா பாடசாலக்கு பஸ் கொடுத்த அரசு எங்களுகு மட்டும் பஸ் கொடுக்கவில்லை ஏனெனில் தமிழ் பாடசாலை என்ற ஒரு நோக்கத்திற்காக ஆனாலும் பெற்றோர்களும் மாணவர்களும் செர்ந்து ஒரு வான் வாங்கினாங்கள் சரியோ,இந்துவின் மைந்தர்கள் ஒழுக்க சிலர்கள் என்று சொல்லவில்லை எல்லா வயதிலும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தவர்கள் தான்,அங்கிருந்து பார்த்தால் ஒவ்வொரு விநாடிகளும் மகிழ்ச்சியை தரகூடிய வினாடிகள் நீங்கள் சொல்வது ஆதாரம் அற்ற விடயங்கள் அது ஒரு தேசிய பாடசாலை என்று எல்லோருக்கும் தெறியும் அதுவும் கொழும்பில் தமிழ் தேசிய பாடசாலை அதுவே தான்

தொடரும்

இவை மட்டுமல்ல வகுப்பறையில் இருந்து கொண்டே அடுத்த வளவு அடுக்குமாடியில் நடப்பதை வேவுபார்த்து வகுப்பை விட்டு வெளியேற்றுவதும் பெற்றோரை அழைத்து அறிவுரை சொல்வதும் அடிக்கடி நடக்கும் செயல்தானே. இப்படியான செயல்களால் அப்பாடசாலையில் படித்த பிள்ளைகளை வேறு பாடசாலைகளுக்கு மாற்ற பெற்றோர் முனைந்ததையும் மறைக்கக் கூடாதுதானே.

பெயரும் புகழும் ஈட்டித்ததந்த வடக்குக்கிழக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் நீங்கள் மறக்கலாம் கொழும்பு வாழ் இடம்பெயர் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ராசா பரியோவான் கல்லூரி ஆசிரியரை அடித்துவிட்டு மாணவன் பின் பொலீஸ் டேசன் போன சம்பவம் 2 வருடங்களிற்கு முன் நடந்தது அதை பற்றி என்ன சொல்லுறீங்க

ஏன் இந்த (யாழ்) தளத்தில் ஒரே சண்டை?

பாடசாலை எப்போது தேசியப்பாடசாலியாக்கப்பட்டத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்டா தம்பி நெடுக்கால போவான். நீ சொல்லித்தான் பள்ளிக்கூடம் வளரவேண்டும் என்ற நிலை இந்துக்கல்லூரிக்கு இல்லை. நான் 90க்கு முதல் அன்கேதான் படித்தனான். என்னோட படித்த பலர் நல்ல வேலைகளில் உள்ளனர். ழூ என்கட காலத்தில நான் ஒரு குழப்படிககழயும் காணவில்லை. சும்மா எழுதாத அப்

இவை மட்டுமல்ல வகுப்பறையில் இருந்து கொண்டே அடுத்த வளவு அடுக்குமாடியில் நடப்பதை வேவுபார்த்து வகுப்பை விட்டு வெளியேற்றுவதும் பெற்றோரை அழைத்து அறிவுரை சொல்வதும் அடிக்கடி நடக்கும் செயல்தானே. இப்படியான செயல்களால் அப்பாடசாலையில் படித்த பிள்ளைகளை வேறு பாடசாலைகளுக்கு மாற்ற பெற்றோர் முனைந்ததையும் மறைக்கக் கூடாதுதானே.

பெயரும் புகழும் ஈட்டித்ததந்த வடக்குக்கிழக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் நீங்கள் மறக்கலாம் கொழும்பு வாழ் இடம்பெயர் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். :idea:

நீர் கூறும் கருத்துக்களில் இருந்துயார் நீர் எண்டு கணுபிடித்துவிட்டேன் எது வீடு என்பதும் எனக்குதெரியும் அடுத்தவர் வீட்டில் வேவுபார்ப்பதற்கும் பாடசாலை நிர்வாகம் என்ன செய்யும்.நீர் எம்பாடசாலையின் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் எழுதுகிறீர் எண்டு எனக்குத்தெரியும் தயவு செய்து திருந்திக்கொள்ளும்

ஒரு ஆசிரியரை வீதியில் வைத்து அடித்துவிட்டு பொலீஸைக் கண்டவுடன் ஒளித்து ஓடிய நிகழ்வுகளையும் இக்கல்லூரி மாணவர்கள் செய்துள்ளனர். இவை களையப்பட வேண்டும். இப்படியான செயல்கள் சமூகத்துக்கு தவறான உதாரணங்களாக்கப்பட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் வயசுக் கோளாறு என்பதெல்லாம் வெறும் சாட்டு. உங்களை வயதைக் கடந்துதான் எல்லோரும் வந்திருப்பார்கள். அதற்காக எல்லோரும் வன்முறையாளர்கள் என்றில்லை.

இப்படிப்பட்ட நிகழ்வை நான் கேள்விப்படவில்லை இங்கு யாராவது கேள்விப்பட்டீங்கலோ யாழில் ஒரு பாடசாலை அதிபர் தாக்கப்பட்டு மந்திகை ஆஸ்பத்திரியில் இருந்ததை மறந்திற்றீரோ

90, 95 இடம்பெயர்வுகளால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பலரையும் உள்வாங்கிய பாடசாலை இந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி (முன்னர் மகா வித்தியாலயமாக இருந்தது). பலரிடம் 10,000 ரூபாவரை அறவிட்டு அனுமதி வழங்கிய இக்கல்லூரி இன்று தேசிய பாடசாலைத் தரத்துக்கு உயர யாழ் இடம்பெயர்வுகளே காரணம்.

பாடசாலையின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள மதில்களில் எல்லாம் அசிங்கமா எழுதித் தள்ளிய பலரும் இங்கும் இருக்கிறார்கள் போல. எதற்கும் சோடாப் போத்தல்கள் சகிதம் யாழையும் கல்கிசை நோக்கி கொண்டு செல்லாதவரை....புண்ணியம்

நீர் என்ன சொலவந்தீர் எனத்தெரியும் அந்த சம்பவத்தில் தாகுதல் நடத்தியர் ரேயல் கல்லூரியை சேர்ந்த கோபி(பிஸ்ஸு கோபி) என்பவர் தமிழன் எண்டால் இந்து என குற்றம் சாட்டுவது கொழும்பில் வழமை இது தற்போது எல்லாருக்கும் தெரியும் புத்தன் கூட இதனை முதலில் சொல்லியிருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் nedukkalapoovan

யாழ்பாணத்து ஆட்கள் வந்து தான், கொழும்பு இந்துக் கல்லூரி முன்னுக்கு வந்தது என்ற நிருபிக்க முனைகின்றீர் போலிருக்கின்றது. ஆனால் அதை நானும் யாழ்பாணத்துப் பனங்கொட்டை என்ற நிலையில் மறுதளிக்கின்றேன்.

சர்மா காலத்தில் நிர்வாகப் பிரச்சனைகள் நடந்தன. ஆனால் அவருக்கு நடந்ததது என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன்னர் பலர் பாடசாலையின் அதிபர்களாக இருந்து வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினர் என்பதை மறுக்க முடியாது.

குழுச் சண்டை பற்றிச் சொல்கின்றீர்.முந்தி இந்துக் கல்லூரி வளவினுள்ளே, வந்து தமிழ்மாணவர்களை அடித்த சிங்கள மாணவர்கள் பற்றி மறந்து விட்டீர்களா? அப்படியும் ஒரு நிலை இருந்தது. அதை விட தமிழன் என்ற இளங்காரத்தில் பொது இடத்தில் பஸ்சை நிறுத்தி தமிழ்மாணவர்களை அடித்த காலமும் உண்டு. அது எல்லாம் மற்றய பாடசாலை சிறப்பா?

இந்துக் கல்லூரி என்பது வேறு! மாணவர்களின் நிலை என்பது வேறு! ஒவ்வொரு மாணவனின் நிலைக்காகவும் கல்லூரி பொறுப்பெடுக்க முடியாது. ஆனால் சிங்கள மாணவர்கள் தமிழனின் கொண்டுள்ள எரிச்சலில் கட்டிவிடும் கதைக்கு பலியான உம்மைப் போன்றவர்கள் நிலை தான் வருந்தத்தக்கது.

ஆனால் நீர் சொல்வது போல யாழ்பாண வருகையின் பின்னர் என்று எடுத்துக் கொண்டால் கூட, சிங்கள மாணவர்கனோடு சண்டை நடந்தது. தமிழ்சங்கத்தில் முன்றலில் சிங்கள மாணவர்களோடு, சேர்ந்து ஆட்டோக் காரர்களும் தமிழ்மாணவர்களை அடித்தார்கள்.அது அனைத்து பத்திரிகைகளிலும் வந்தது! அப்படி என்றால் யாழ்ப்பாண நிர்வாகம் எங்கே போனது?

சமீபத்தில் றோயல்- சென்தோமஸ் கிரிக்கட் போட்டியில் நடந்த குழு மோதலில் எத்தனை பேருக்கு மண்டை உடைந்தது என்ற சம்பவம் உமக்குத் தெரியுமா?

வெறுமனே பக்கத்து வீட்டில் பந்து பட்டு கண்ணாடி உடைந்த என்ற கடுப்பில் இந்துக் கல்லூரியைப் பற்றி, கதை வலிடும் ஆட்களைப் பற்றி நன்றாக அறிவோம்.

ஆனால் 95ம் ஆண்டு இடப்பெயர்வால், எவ்வித கல்விச் சான்றிதழும் இன்றி கொழும்பு வந்தவர்களுக்கு, அவர்களின் வாய்மொழியை நம்பி தராதரம் பிரித்துக் கொடுக்க கல்லூரி இந்து மட்டும் தான். ஏனென்றால் ஒரு மாணவனின் கல்விக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று தான்.

ரத்மலானை முதல் வத்தளையில் இருந்து

கூட பாடசாலைக்கு வந்த ஏராளமானவர்கள் உண்டு. ஏன் அவர்களுக்கு வேறு பாடசாலையில்லாமலா இங்கு காண வர வேண்டும்?

றோட்டில் சுவரில் எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. அது நீங்கள் பக்கத்து இடத்தில் என்ன நடக்கின்றது என்று பதுங்கிக்பதுங்கிப் பார்த்து, மற்றவர்களுக்கு அவலட்சனமாகச் சொல்லும் நிலையை ஒத்தது. அவ்வளவே!

நான் கூட T நம்பரிலதான் படித்தனான்(தற்காலிகம்-சான்றிதழ்கள் இல்லாதவர்கல்)

ஈழவன்85 பம்பலப்பிட்டிய இந்து மகா வித்தியாலயம்

என்னால் இத்தகவலை 100%வீதம் உருதிப்படுத்தமுடியும்,

இதில் கொழும்பில் தமிழ் மக்களால் பொதுவாக முன்வைக்கப்படும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மீதான் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் சண்டை பிடித்தோம் அவர்கள் வந்து அடித்தார்கள் என்பதற்காக.

நாங்கள் சோடாப் போத்தல் சகிதம் தோமியன்ஸை அடித்தம் றோயலை சாட்சிக்கு இழுக்கிறம்.

நாங்கள் ஆசிரியை வீதியில் விட்டு அடித்தம் (ஆசிரியரின் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவர் வகுப்பில் எங்களுக்கு ரோதனை தந்தபடியால்.

யாழ்ப்பாணத்து நிர்வாகம் இருந்தது. ஆனால் அது என்ன செய்து கொண்டிருந்தது.

நாங்கள் அனுமதி வழங்கினோம். துண்டுப் பேப்பர் கூட ஆதாரம் கேட்கவில்லை ஆனால் துட்டுக்கேட்டம் 10,000 மற்றும் 15,000 என்று.

சர்மா வாங்கியது கல்லூரியின் பெயரால் சுருட்டினது..மாணவரின் பெயரால்...நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை.

யன்னல் கண்ணாடிகள் உடைத்தோம் ஆனால் அதை யாரும் கேட்காதபடிக்கு சுவரெல்லாம் வீட்டுக்காரப் பெண்களின் பெயரைப் பாவித்து ஏதேதோ எழுதினம்.

இன்னும் இன்னும் செய்தம் சொன்னால் திருந்தச் சொன்னால் அதை ஏற்கோம்.

இதில் என்ன நியாயமோ தெரியவில்லை. பழைய மாணவர்கள் விட்ட தவறுகளை புதியவர்களாவது விடாமல் இருக்கட்டும் என்பதே எங்கள் விருப்பம்.

குறித்த கல்லூரியில் ஏதோ படித்த பெருமை எம்மையும் சாரும்.

1. சர்மா ஐயா அதிபராக இருந்த போது அகதிகளாக வந்த மாணவர்களிடம் கூட ஈவு இரக்கமில்லாமல் 10,000 ரூவைக் கறந்ததும் ஒரு கட்டிடம் கூட புதிதாகக் கட்டாததும் அதன் பின்னர் அரசின் பண உதவி பெற்று முத்துக்குமாரர் கட்டியதுகளும் பம்பலப்பிட்டிய வாழ் மக்கள் அறிவார்கள்.

2. சரஸ்வதி மண்டபத்துக்கு முன்னால் உள்ள வீதிகளின் மதிலோரங்கள் எங்கும் கறுப்பு எண்ணைச் சோக் கட்டிகளால் எழுதித் தள்ளியதை நாங்களே அழித்திருக்கும் போது நீங்கள் பொய் என்றால் எனிப் புகைப்படத்துடன் தான் தகவல் போட வேண்டும். அதுவரை அது பொய்யாகவே இருக்கட்டும்.

3. சோடாப் போத்தல்கள் சகிதம் கல்கிசை தோமியன் சென்று சிங்கள மாணவர்களோடு மோதியதும் காயங்கள் ஏற்படுத்தியதுவும் கொழும்பில் பரப்பரப்பாக செய்திகளில் பேசப்பட்டதும் பத்திரிகைகளில் வந்து இந்துவின் பெயரை நாறடித்தவும் உண்மை இல்லை என்றாகிடுமா?

பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என்று கொழும்பில் காங் நடத்துவதும் வீதிகளில் நின்று சண்டித்தனம் செய்வதும் தெகிவளை முதல் கொல்பிட்டி வரை தெரிந்த விடயங்கள்.

4. 90, 95 இடம்பெயர்வுக்கு முன்னர் பொதுத்தராதரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் மோசமாக இருந்தமையும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின்னர் பெறுபேறுகளின் உயர்வும் இராமனாதனுக்குப் போட்டியாக இருக்க முடிந்ததுவும் சமகால நிகழ்வுகளை மறைக்கும் செயல்.

5. கொழும்பு வாழ் தமிழர்கள் றோயல் தோமஸ் ஆனந்தா என்று தேடித்தேடி தங்கள் பிள்ளைகளை சேர்த்தது போய் பம்பலப்பட்டி என்று தேடி வந்ததும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின் நிகழ்ந்த பரீட்சைப் பெறுபேறுகளின் உயர்ச்சியின் பிந்தான்.

6. பம்பலப்பிட்டிய இந்துவில் படித்த எல்லோரும் ரவுடிசுமோ அல்லது காங்கோ நடத்தவில்லை. ஆனால் தமிழ் ரவுடிகளை காங்குகளை உருவாக்கிய பெருமையும் பம்பலப்பட்டிய இந்துக் கல்லூரியைச் சாரும்.

7. நீங்கள் குறிப்பிட்டது போல 1991 இல்தான் உங்கள் பாடசாலைக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

8. இன்று பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரி குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒழுக்கத்தில் திகழ்வதற்கு யாழில் இருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் பலரை உள்வாங்கி இருப்பதுவும் காரணம். அதை மறுக்க முடியுமா?

9. உங்கள் பாடசாலை மாணவர்கள் மீது பம்பலப்பிட்டிய கதிரேசன் கோயில் பக்கம் உள்ள அயலவர்கள் அனுப்பி வைத்த முறைப்பாடுகள் குறித்து உங்கள் அதிபரிடம் விசாரித்து அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று அவரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இங்கு தரமுடியுமா?

10. பத்திரிகைகளில் வந்த உங்கள் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை தவறானவை என்று பத்திரிகைகள் மூலம் அறிவிக்க முடியுமா?!

வணக்கம் nedukkalapoovan,

உங்கள் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ஓர் இந்துக்கல்லூரி கொழும்பு மாணவன் என்னும் வகையில் மறுக்கமுடியும். அதற்கான காரணங்களும் இருக்கின்றன.

எந்தவொரு நிர்வாகத்திலும் சில குறைபாடுகள் இருந்தால் அவை களையப்படும். சர்மா ஐயா அதிபராக இருந்த காலத்தில் அதுதான் நடைபெற்றது. அவரது நிர்வாத் தவறுகள் அதன் பின் நிவர்த்தி செய்யப்பட்டது. இலங்கையில் இருக்கும் பாடசாலைகள் எப்பாடசாலையாவது எந்தவொரு காலத்திலும் பணம் வாங்காது மாணவர்களை தம் பாடசாலைகளில் சேர்த்தார்கள் என்று உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா. 1995ம் ஆண்டு யாழ்இடப்பெயர்வின் மூலம் மக்கள் இடம்பெயர்ந்து கொழும்பு நோக்கி வந்த மாணவர்களை இடவசதி இல்லாதிருந்தும் எந்தவொரு சான்றிதழ்களும் இல்லாது இடம்கொடுத்த பாடசாலை இந்துக்கல்லூரி கொழும்பு. சரஸ்வதி மண்டபத்தின் முன்னுள்ள மதில்களில் இந்துக்கல்லூரி மாணவர்கள் எழுதியிருந்தார்கள் என்று ஓர் குற்றச்சாட்டு. ஆயினும் அம்மதில்களில் அதனை எழுதியவர்கள் யார் என்பதனை அதில் இருக்கும் வாசகங்கள் கூறிநிற்கும்.

கொழும்பிலே தனிப்பெரும் பாடசாலையாக வடகிழக்கிற்கு வெளியே அதிக தமிழ்மாணவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலை இந்துக்கல்லூரி கொழும்பு. கொழும்பிலே தமிழ்மாணவன் என்றவுடன் அனைவரும் கேட்பது பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியா என்பதுதான். எந்தவொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவனாகவிருந்தாலும் அனைவரும் எடுத்த எடுப்பில் நோக்குவது அவன் இந்துக்கல்லூரி கொழும்பு மணவன் என்று என்பது அனைவரும் அறிந்த ஒருவிடயம். அதனால்தான் பாடசாலைக்கு வரும் போது பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைச் சின்னம் அணிந்து வரவேண்டும் என்னும் கட்டாயம் தற்போது அமுலில் உள்ளது. இந்நடைமுறை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

பழையமாணவர்கள் பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் குழுக்களில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பாடசாலையில் நீங்கள் தவறுகாணமுடியாது. அப்படியானால் தமிழ்சமூகத்தில் இருக்கும் குழுக்களிற்கும் குழுச்சண்டைகளிற்கும் முழுத் தமிழ் சமுகத்தின் மீதும் குற்றச்சாட்டு வைக்கவேண்டுமே. பாடசாலையானது விடயங்களை கற்றுக்கொடுக்க மட்டும் முடியுமே தவிர பிடித்து இழுத்து கயிறு போட்டுக் கட்டமுடியாது. ஒரு வருடத்தில் உயர்தரம் படித்து பாடசாலையில் இருந்து கிட்டத்தட்ட 150 மாணவர்கள் வெளியேறுகிறார்கள். இவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி நிற்கிறார்களா அல்லது ஏதாவது குழுக்களில் இணைந்து சண்டைபிடிக்கிறார்களா?

90,95 இடப்பெயர்விற்குப் பின்தான் இந்துக்கல்லூரியினால் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைக் காணமுடிந்தது என்று நீங்கள் கூறுவீர்களானால் பாடசாலையின் வரலாறு உங்களிற்கு தெரியாது என்றே கொள்ளலாம். இந்தக்கல்லூரி கொழும்பு மாணவர்கள் 1980ம் ஆண்டே உயர்தரப்பரீட்சையில் நான்கு பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்று சிறப்பித்தவர்கள். இன்று மிகவும் சிறந்த பதவிகளில் இருக்கிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் றோயல்கல்லூரி சென்பீற்றஸ் கல்லூரிகளில் (ஆனந்தாக் கல்லூரி முற்றுமுழுதான் சிங்களமாணவர்களிற்கான பாடசாலை) தேடிச்சேர்த்தவர்கள் என்பதனை ஒத்துக்கொள்ளும் அதேவேளை அவர்களிற்கான களம் அமைத்துக் கொடுத்தது கொழும்பு இந்துக்கல்லூரி என்பது மறுக்கமுடியாது. இந்துக்கல்லூரி கொழும்பு இற்க இருந்த ஓர் நற்பெயரின் காரணமாகவே அவர்கள் இலகுவாக மற்றைய பாடசாலைகளில் இடம் எடுக்கக் கூடியதாக இருந்தது. அதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் அவர்கள் அப்பாடசாலைகளிற்கு அள்ளிக்கொடுத்த பணம். நீங்கள் இந்துக்கல்லூரி கொழும்பு வாங்கியதாகக் கூறிய பணத்தின் பெருக்கமே அப் பாடசாலைகள் பெற்றுக்கொண்டது.

1991ம் ஆண்டு தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைக்கு அதுபற்றிய தரவு இப்பாடசாலையின் இணையத்தளத்தில் இருக்கிறது. அதனைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அல்லாதவிடத்து உங்களிற்கு வசதியிருப்பின் கல்வியமைச்சில் அறிந்து கொள்ளலாம்.

யாழ்குடாநாட்டு ஆசிரியர்கள் வந்துதான் இந்துக்கல்லூரி மாணவர்களின் கல்வித்தரம் அதிகரித்தது ஒழுக்கம் சீரடைந்தது என்பது உங்கள் வாதத்திற்குச் சரியாகவிருக்கலாம். ஆயினும் அது உண்மையல்ல. ஒரு பாடசாலையின் கல்வித்தரம் அல்லது அங்கு படிக்கும் மாணவர்களின் ஒழுக்கம் மாற்றம் காணவேண்டுமானால் அது ஒரு இரவில் மாற்றம் அடையமுடியாது. இந்துக்கல்லூரி கொழும்பில் படித்து சிறப்புச் சித்தியைத் தந்த மாணவர்களும் ஒழுக்க சீலர்களாக இருப்பவர்களும் அங்கு சிறு வயதில் இருந்து படித்தவர்கள் என்பது அவர்கள் பற்றிய தரவுகளின் மூலம் அறிந்தும கொள்ளலாம். அதைவிட பாடசாலையின் தரவுகளுடன் ஒப்பிட்டும் அறிந்து கொள்ளலாம். யாழ்குடாவில் இருந்து வந்திருந்த ஆசிரியர்களால் சில ஒழுக்கச் சீர்கேடுகள் இடம்பெற்று அவை சீராக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. அதுபற்றி உங்களிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களின் இக்கூற்று பிரதேசம் சார்ந்த கூற்றாக உள்ளதே தவிர வேறொன்றில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.