Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்க புதிய திட்டம் :2015 இல் நடைமுறைக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு  இன்று காலை 10 மணியளவில்  நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைதலுக்கு முக்கிய காரணமாக வன்னீர் பிரச்சனையே காணப்படுகின்றது. அதாவது தண்ணீர் ஏனைய இடங்களை விட வன்னீராக இருக்கின்றது.
 
காரணம் சுண்ணாம்புப் படிவுகள் நீரில் காணப்படுதல்,மலசலகூடங்கள் மூலம் நீரில் ஈகோலி அங்கிகள் கலப்பதனால் மாசடைதல் மற்றும் நீரில் எண்ணெய் கலப்பு ஆகியவற்றால் யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது.அதனைத்   தடுக்க வேண்டும் .
 
அதற்கமைய 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அளவில் மனிதக்கழிவகற்றல் திட்டம்  ஒன்று யாழ்ப்பாணம்,நல்லூர் ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளின் சனஅடர்த்தி அதிகமாக உள்ள பிரதேசங்களில் மட்டும் தான்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  
 
யாழ்-கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் 16000 மலசலகூடங்கள்,குளியலறைகள்,மற்றும் சமையலறைக் கழிவு நீர்க்குழாய்கள் என்பன இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
 
இதன்மூலம் கழிவுகளின் குழாய் வலைப்பின்னல் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
 
குறித்த திட்டத்திற்கு 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான செலவை இலங்கை அரசு,ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்சிய அபிவிருத்தி முகவர் என்பன வழங்கியுள்ளது.
 
மேலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தலா 60,000 ரூபா செலவாகின்றது.இந்தத் தொகையில் 50வீத தொகையை அரசு பொறுப்பேற்கும் அதேவேளை மிகுதித் தொகையை ஒவ்வொரு வீட்டு  உரிமையாளரும் செலுத்த வேண்டும்.அதனைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
 
இதேவேளை இந்தத் திட்டத்தின் சேவைக் கட்டணமாக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ரூபா 200 மாதாந்தம் செலுத்த வேண்டும்.இதற்கு மேலதிகமாக இத்திட்டத்தில் இணைந்த பின்னர் மாதாந்தக் கட்டணமாக மாதாந்த நீர்ப்பாவனை அலகுக் கட்டணத்தின் 18வீதத்தினை கழிவகற்றல் கட்டணமாக மாதாந்தம் செலுத்த வேண்டும்.
 
இலங்கையிலே கொழும்பு,கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுவொரு புதிய திட்டமாக அமையும் என அவர் தெரிவித்தார்.
 
மேலும் இந்த நிகழ்விற்கு யாழ்.மாநகர சபைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த  பொது அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=372623738319746358#sthash.R50HgeZc.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

//இதன்மூலம் கழிவுகளின் குழாய் வலைப்பின்னல் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.//

இந்த நல்ல திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
-----
 
அதற்கமைய 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அளவில் மனிதக்கழிவகற்றல் திட்டம்  ஒன்று யாழ்ப்பாணம்,நல்லூர் ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளின் சனஅடர்த்தி அதிகமாக உள்ள பிரதேசங்களில் மட்டும் தான்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  
 
யாழ்-கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் 16000 மலசலகூடங்கள்,குளியலறைகள்,மற்றும் சமையலறைக் கழிவு நீர்க்குழாய்கள் என்பன இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
 
இதன்மூலம் கழிவுகளின் குழாய் வலைப்பின்னல் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
 
குறித்த திட்டத்திற்கு 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான செலவை இலங்கை அரசு,ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்சிய அபிவிருத்தி முகவர் என்பன வழங்கியுள்ளது.
 
மேலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தலா 60,000 ரூபா செலவாகின்றது.இந்தத் தொகையில் 50வீத தொகையை அரசு பொறுப்பேற்கும் அதேவேளை மிகுதித் தொகையை ஒவ்வொரு வீட்டு  உரிமையாளரும் செலுத்த வேண்டும்.அதனைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
 
இதேவேளை இந்தத் திட்டத்தின் சேவைக் கட்டணமாக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ரூபா 200 மாதாந்தம் செலுத்த வேண்டும்.இதற்கு மேலதிகமாக இத்திட்டத்தில் இணைந்த பின்னர் மாதாந்தக் கட்டணமாக மாதாந்த நீர்ப்பாவனை அலகுக் கட்டணத்தின் 18வீதத்தினை கழிவகற்றல் கட்டணமாக மாதாந்தம் செலுத்த வேண்டும்.
------

கரும்பு... தின்ன, கைக்கூலியா?

நல்ல திட்டம், தனது மண்ணை நேசிக்கும், ஒவ்வொரு தமிழனும், இதில் பங்கு பற்ற வேண்டும்.

இந்தத் திட்டத்தை... செயல் படுத்த, ஆரம்பிக்க முதல்...

அடுத்த 50 ஆண்டுகளுக்கான சனத்தொகை விகித அதிகரிப்பையும்... கவனத்தில் எடுக்க வேண்டும்.

டிஸ்கி: அடுத்த, 50 ஆண்டுகளில்... யாழ்ப்பாணத்தில் தமிழன் இருக்க மாட்டான்...

சிங்களவனும், சோனகனும் தான்... இருப்பான் என்று, நீங்கள்... மனதுக்குள் நினைப்பது, புரிகின்றது. என்றாலும்...

ஒரு, நப்பாசை தான். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழீழத்தின் பொதுமகனும் தனது மண்ணின் சூழலைக் கட்டிக்காப்பதற்கான திடசங்கற்பம் எடுத்துக்கொள்ளல்வேண்டும். இது மட்டுமல்ல எனது தேசத்தை என் எதிர்காலச் சந்ததிகளின் கைகளில் ஒப்படைக்கும்போது செயற்கை அணிகலன்கள் எதுவுமிலாத வெறும் இயற்கையோடு ஒன்றிவிடும் நிலையுடைய மண்ணாக அவர்களது கைகளில் ஒப்படைக்கவேண்டும். ஆதலால் இயற்கை விவசாயத்தை நாம் உக்குவித்தல்வேண்டும்.

அதற்கான காலம் வெகுவிரைவில் வரும்

நம்பிக்கை, தான்..... வாழ்க்கை. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்ல திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திட்டம். வெற்றிபெற வாழ்த்துக்கள்..! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.