Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிகொத்தவில் மோதல் ; பலர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

 
இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

(முதலாம்  இணைப்பு)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளர் மைத்திரியின் ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிறிகொத்த மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
unp%202.jpg
 
unp.jpg
 
Untitled-1%20copy%2860%29.jpg
 
 
1181456464unp%20%281%29.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=264103748624152425#sthash.9DdOMvbO.dpuf

கொழும்பில் ஐதேக தலைமையகம் மீது தாக்குதல் – பதற்றம் DEC 24, 2014by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

srikotha-attack-1-300x200.jpgகொழும்பில் ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவுக்கு வெளியே, ஆளும்கட்சி ஆதரவாளர்களின் குழுவொன்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதையடுத்து, அங்கு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆளும்கட்சி ஆதரவாளர்கள், வன்முறைகளில் ஈடுபட்டனர்.

சிறிகோத்தா மீது பொல்லுகளைக் கொண்டும், கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை, ஐதேக ஆதரவாளர்களும் பதிலுக்குத் தாக்கியுள்ளனர்.

இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியுள்ளது. இந்த வன்முறைகளில் பலர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

srikotha-attack-2.jpg

இந்த மோதலின் போது  சிறிகோத்தா முன்பிருந்த புத்தரின் சிலையும் தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேலதிக காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மோதல்களை அடுத்து கோட்டே பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2014/12/24/news/2122

 

(24.12.2014)  காலை9 ஐக்கிய தேசியக்கட்ட்சியின் தலைமை காரியாலையமான சிறிகொத்தாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பிற்பாடு உயர்கல்வி சம்பந்தமாக எதிர்காலத்தில் எவ்வாறான செயற்திட்டங்களை நாட்டில் அமுல்படுத்துவது போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ,எதிர்க்கட்ட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாரளமன்ற உறுப்பினர்களான ரவி கருனாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், மேல் மாகான சபை உறுப்பினர்களான பைரூச் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களும் நாட்டின் ஆயிரத்துக்கும் அதிகமான கல்வித்துறயில் முக்கியமானவர்களும் சமூகமளித்திருந்தனர்.

இந்த வேலையில் மைத்திரிபால -ரணில் ரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சங்விதான தலைவரும் ஆலோசகருமான டாக்டர் வசந்த பண்டார தலைமையில் எதிர்க்கட்சிக்கு எதிரான கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்ததுடன், சிறி கொத்தா மீது கற்றகாளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனை அடுத்து சிறிகொத்தாவினை கல்லெரிகளில் இருந்து பாதுக்கப்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மேல் மாகான சபை உறுப்பினர்களான பைரூஸ் ஹாஜியும், முஜிபுர் ரஹ்மானும் மிகவும் பிராயசித்ததுடனும் இஸ்தலத்துக்கு விரைந்து வந்த பொலிசாரின் உதவியுடனும் பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தவிருந்த பாரிய பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

மேலும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் ஐக்கிய தேசியக்கட்ட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையில் சிறு கைகளப்பு ஏற்பட்டதுடன், பொலிசாரி உதவியுடன் ஆர்ப்பாட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரங்கள் வரையில் சிறிகொத்தாவுக்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டதுடன், வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இது சம்பந்தமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ரவி கருனாநாயக்கவும் சம்பவ இடத்துக்கு சமூகமளித்து இச்சமபவத்தில் சட்டத்தினை மீறிச் செயற்பட்ட ஆர்ப்பாட்ட காரர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாவட்டத்துக்கான பொலிஸ் உயர் அதிகாரிளிடம் வேண்டிக் கொண்டார்.

சிறிகொத்தாவில் காடையர்கள் தாக்குதல் தொடர்கிறது பதற்றம்….

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தியின் அப்டேட்..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டபோது  இரு தரப்பினருக்கும்  இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைதியின்மை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அமைதியின்மையை அடுத்து சிறிகொத்தவை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் தற்போது பொலிஸாரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன்போது அங்கிருந்த புத்தர் சிலையும் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கின்றனர்.

Seregota-18-600x450.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

srikotha-attack-2.jpg

 

சும்மா.... சிவனே... என்று இருந்த புத்தருக்கு,
யாரப்பா... சாரயப் போத்திலால் எறிந்தவர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.