Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். குடா முற்றுகையும் தமிழ் ஊடகங்களின் அரசியலும் - 02

Featured Replies

முகமாலை மோதலை தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அத்தகைய யுத்த களைமுனை செய்திகளை திரித்து வெளியிடுவதிலுள்ள அபத்தங்கள் பின்னடைவுகள் குறித்தும் அடுத்தவாரம் பார்ப்பதாக இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு முன்பாக ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வது நல்லதென்று நினைக்கின்றேன். கடந்த முறை நான் எழுதியிருந்த இக்கட்டுரையின் முதல் பகுதிக்கு நான் இதுவரை எழுதிய எந்த கட்டுரைக்கும் வராத அளவிற்கு மின்னஞ்சல்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளன. முதல் பகுதி எழுதப்பட்டு இரு வாரங்கள் கடந்தும் இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் கூட கணணியைத் திறந்தால் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருந்து ஒரு மின்னஞ்சலாவது இந்த கட்டுரை தொடர்பாக வந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அவை எல்லாவற்றிலும் ஒருசேர தெரிவது ஒருவித பதற்றமும் பயமும் எமது போராட்டம் குறித்த கவலைகளுமே. அத்துடன் தமிழ் ஊடகங்கள் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

பப்புவா நியுூகி;னியா நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு மின்னஞ்சலிலிருந்த ஒற்றை வாசகம் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களினதும் தற்போதைய மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது. அந்த வாசகம்: 'நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோமா?" இதற்கு ஒற்றை வரியில் சொல்லலாம் 'இல்லை" என்று. ஆனால் அதனை ஒரேயடியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் எமது மக்கள் இல்லை.

போராடும் இனம் ஒன்றுக்கு சமாதான காலம் என்பது பல நெருக்கடிகள் நிறைந்த காலப்பகுதியாகும். சரியாகச் சொன்னால் சமாதானம் என்பதே ஒரு பொறிதான். இதன் சாதக பாதகம் என்று பார்த்தால் சாதகமான அம்சங்கள் எதிரிகளுக்குத்தான் அதிகம். எமக்கான சாதகம் என்று பார்த்தால் எமது போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தல். இதற்குள்தான் எமக்கான ஆதரவு, அங்கீகாரம் எல்லாம் அடங்கும். உலகெங்கும் உற்றுநோக்கினால் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற நாடுகளில் இவ்வாறான ஒரு சாமாதானம் நடைமுறைக்கு வரும்போது அதிகார அரசுகள் பேச்சின்மூலம் அதை தீர்த்துத் தீர்வை தங்க தாம்பாளத்தில் வைத்துத் து}க்கிக் கொடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் அந்த மக்களின் போராடும் பலத்தைக் குறைத்து அதன் வீச்சை மழுங்கடித்து அவர்களின் போராட்டத்தை பகுதியாகவோ அன்றி முழுமையாக சிதைத்து விடுகின்றன.

ஆனால் இது குறித்த பிரக்ஞையற்று எமது ஊடகங்கள் இயங்கத் தலைப்பட்டதன் வெளிப்பாடுதான் மேற்கூறிய எமது மக்களின் இந்த மனநிலை.

இலங்கையிலும் இந்த சமன்பாட்டைத்தான் சிங்கள பிரயோகித்துப் பார்க்கிறது. இதில் அது ஓரளவு வெற்றிபெற்று விட்டதாகத்தான் கூறவேண்டும். சர்வதேசத் தடைகள், கிழக்கு நெருக்கடிகள், துணை இராணுவக்குழுக்களின் தோற்றம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பல்கிப் பெரும் கலாச்சார பாலியல் சீர்கேடுகள், தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்கள் அடைந்திருக்கும் உளவியற் பயம் எல்லாமே இதன் அடிப்படையில் அமைந்த அம்சங்கள்தான்.

இனி நாம் விடயத்திற்கு வருவோம்.

அரசியல் ரீதியாக நாம் அடையும் தோல்வியைக் காட்டிலும் இராணுவ ரீதியாகத் தோற்றுப் போவதை எமது மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.

முகமாலை மோதலை விபரீதமாக கற்பனை செய்து எமது ஊடகங்கள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதைகளால் எமது மக்கள் விரக்தி அடைந்து போயுள்ளனர். போராடும் ஒரு இனக்கூட்டம் விரக்தி அடைவதென்பது களத்தில் 1000 போராளிகள் வீழ்வதைக் காட்டிலும் பல மடங்கு பின்னடைவைத் தரக்கூடியது.

ஊடகங்களின் பொறுப்பற்ற செயலினால் புலிகள் யாழ். குடாவை மீட்க முற்பட்டு தோல்வியடைந்துவிட்டதாக எமது மக்களில் பலர் நம்பத் தலைப்பட்டதன் விளவுதான் அவர்களின் விரக்தியான மனநிலைக்குக் காரணம். முகமாலை மோதல்களை திரித்து வெளியிட்டதால் ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகவே இதை நாம் கருத வேண்டியுள்ளது.

இயல்பாகவே சமாதான காலத்தில் எழும் இந்த மனநிலையைப் போக்க வேண்டிய தமிழ் ஊடகங்கள் அதை வளர்க்கவும் விரிக்கவும் முற்படுவது வேதனையளிக்கிறது.

ஊடகங்களின் இந்த 'புண்ணியத்தால்" தன்னை ஓடிவந்து தழுவிக்கொள்ளும் குழந்தையிடம் தான் எதுவும் வாங்கி வரவில்லை என்ற செய்தியை சங்கடத்தோடு சொல்லும் ஒரு அப்பாவின் தடுமாற்றம் புலிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை இப்படியான உபத்திரவங்கள் எதுவும் செய்யாமலிருந்தாலே போதும் என்று தமிழ் ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்கலாமோ எனுமளவிற்கு தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் பலரிடம் ஒருவித அயர்ச்சியும் களைப்பும் வந்து தொற்றிக்கொண்டுள்ளது.

அண்மைய யுத்த களமுனைச் செய்திகளை திரித்து வெளியிட்டதன் ஊடாக புலிகளுக்கு வேறுபல நெருக்கடிகளையும் சிக்கல்களையும் தமிழ் ஊடகங்கள் உருவாக்கியிருக்கின்றன. அவற்றை விரிவாக ஆராய்வதற்கு முன்பாக புலிகளின் படைபலம், போரிடும் ஆற்றல், போர் முனைப்பு குறித்த சந்தேகங்கள் இன்று பல மட்டங்களிலும் உலாவருவதனால் நாம் அது குறித்துச் சற்று ஆராய்வோம்.

(இந்த ஆய்வு எனது கட்டுரை தலைப்பை விட்டு சற்று வெளியே பயணிப்பதாக இருந்தாலும் இந்த இடத்தில் அதை குறிப்பிடுவது ஒருவிதத்தில் பொருத்தமானது என கருதுகிறேன்).

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான காலகட்டத்தில் புலிகளின் படைபலம் குறித்த ஒரு ஆய்வுக்கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தேன்.

'இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத-புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த புூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்தது முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை. அவர்களின் கணிப்பீடுகள், மதிப்பீடுகள் இன்று தமிழீழத்தில் கலைத்து போடப்பட்டுள்ளன.

உலக இராணுவ மேதைகளினதும் படை வரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்கும் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டு நிற்கிறது புலிகளின் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயொழிய உற்றுப் பார்க்க முடியவில்லை. காற்றைப் போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்களின் போர்த்திறனும் வீரமும். 'இப்படித்தான் இருப்பார்கள்" என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறாhகள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது".

புலிகளின் இந்த போரியற்பண்பு அவர்களிடம் எதுவித மாற்றமுமின்றி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அகராதியில் புலிகள் என்ற சொல்லின் பின்னால் எழுதப்பட வேண்டிய வாசகங்கள் அவை. எனவே எமது மக்கள் அது குறித்து கவலைப்படத்தேவையில்லை. எதிரிகள், துரோகிகள், அந்நிய சக்திகள் எல்லாம் பலமுறை புலிகளிடம் இந்தப் பாடத்தைக் கற்று பித்தம் தெளிந்த பின்னரும் மீண்டும் ஒருமுறை 'சன்னதம்" ஆடுவது அதிர்ச்சியுடன் ஒருங்கே ஆச்சரியத்தையும் தருகிறது.

புலிகள் பின்வாங்கும் ஒவ்வொரு தருணத்திலும் பின்பு என்ன நடந்தது என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் தெரியும்.

இந்த இடத்தில் சுராவின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன. நாளை நடக்கப் போவதும் இதுதான்.

'....வாளுண்டு என்கையில்

வானமற்ற வெளியில் நின்று

மின்னலை விழுங்கிச் சூலுறும்

மனவலி;யுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே

உறக்கமல்ல தியானம்

பின்வாங்கல் அல்ல பதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்

கீழிபடக் காத்துக் கிடக்கின்றன

உனக்கு நரையேற்றும் காலங்கள்."

இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே- புலிகள் எந்தவிதமான இராணுவ வெற்றிகளையும் அடையாத காலத்தில்- தமிழர் பிரதேசம் முழுவதும் சிங்களம் ஆக்கிரமித்திருந்த காலப் பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்து பின்வருமாறு எழுதினார்.

'பிரபாகரன் நான் சந்தித்தவர்களில் மிக உறுதியான மனிதர். அவரது தொலைது}ரப் பார்வை அதிசயப்படவைக்கிறது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர்தான் உணர்வாளர்கள்".

அண்மைய களநிலவரங்கள் இதனடிப்படையில் அமைந்த ஒன்றுதான்.

பிரபாகரன் மாவிலாற்றில் எதைப்பார்த்தார் என்பதை தமிழீழத்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து சிங்களம் தனது படையினரின் உயிரற்ற உடல்களை கூட்டி அள்ளும்போதுதான் உணரும்.

சமாதானம் என்ற போர்வையில் சிங்களம் ஆடிய கூத்துக்களை ஒரு குறிப்பிட்ட எல்லைவரை அனுமதித்த தலைவர் பிரபாகரன், மாவிலாற்றில் அதற்கு ஒரு பொறியை வைத்தார். அந்த பொறியை முகமாலை வரை நீட்டினார்.

தலைவர் பிரபாகரன் விரித்த வலையில் வசமாகச் சிக்குண்ட சிங்களம், தாம் சிக்குண்டதே தெரியாமல் படைகளை நகர்த்தி யுத்தத்தை ஒருதலைப்பட்சமாக தொடங்கியது. விளைவு மாவிலாறில் கிழியத் தொடங்கிய அதன் கோரமுகம் சம்புூர் வரை வரை கிழிந்து தொங்குகிறது.

;யுத்த விரும்பியாக அம்பலப்பட்டுப்போன மகிந்த ராஜபக்ச கிழிந்து தொங்கும் முகத்திரை வழியே வெளித்தெரியும் செஞ்சோலை சிறார்களின் குருதியை மறைப்பதாக எண்ணி அதை அலங்கோலமாக முகமெல்லாம் புூசிக்கொண்டு சர்வதேசத்தின் முன் அபத்தமாக உலா வருகிறார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் நியாயத்தையும் தேவையையும் சர்வதேசத்துக்கு படிப்படியாக புலிகள் உணர்த்தி வருகிறார்கள்.

மாவிலாறிலிருந்து முகமாலை வரை விரிந்த களமுனை இதை வெளிப்படுத்துகின்ற ஒரு இராஜதந்திர நகர்வுதான். இதை உணராத எமது தமிழ் ஊடகங்கள், புலிகளின் நகர்வுகளை வேறு திசைப்படுத்த முற்பட்டது கவலையளிக்கிறது.

தமிழ் ஊடகங்களின் இந்தப் போக்குகள் தம்மையறியாமலேயே தமிழர் போராடத்தின் வீச்சை வீரியம் இழக்கச் செய்கின்றனவா? அல்லது திசை திருப்புகின்றனவா? என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழ்த் தேசியம், ஈழ விடுதலையின் பரிமாணம் குறித்த தீவிர பிரக்ஞையற்று செயற்படும் அதன் இயங்கியல் தளத்தில் முன்பே குறிப்பிட்டதுபோல் ஒருவித ஆர்வக்கோளாறும் அதிமேதாவித்தனமும்தான் அடையாளம் காணப்படுகின்றன.

யாழ். குடா மீட்கப்படுவது என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் மகிழ்விக்கும் விடயம்தான். அதற்காக காலம், நேரம், சூழல், அரசியல் கள நிலவரம், யதயார்த்தம் குறித்த சிந்தனைகள் எதுவுமற்று செய்திகளை வெளியிடுவது என்பது ஏற்புடையது மட்டுமல்ல- ஊடக சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டதும் சிறுபிள்ளைத்தனமும் கூட.

முகமாலை களமுனைச் செய்திகளை தமிழ் ஊடகங்கள் திரித்து வெளியிட்டதால் ஏற்பட்ட குறிப்பான பின்னடைவுகளாக- சிக்கல்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. எமது மக்களை ஒருவித விரக்தியான மனநிலைக்குள் தள்ளியமை

2. உலகளாவிய ரீதியில் தமிழ் ஊடகங்கள் தமது நம்பகத்தன்மையை இழந்தமை. போராடும் ஒரு இனக்கூட்டத்தை பிரதிபலிக்கும் ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிக மிக முக்கியமானது. எமது தமிழ் ஊடகங்கள் இதை இழந்தது தமிழ் தேசியத்தை நேசிக்கும் பலருக்கு பெரும் கவலையைக் கொடுத்திருக்கிறது.

3. உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பாக கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இராணுவத் தாக்குதல் செய்திகளை திரித்து வெளியிடுவதில்லை என்ற உலகின் பிம்பத்தைக் கலைத்தமை.

அதாவது புலிகளின் அதிகாரப்புூர்வ ஊடகங்களான 'விடுதலைப் புலிகள்" பத்திரிகை, 'புலிகளின் குரல்" வானொலி, தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி தவிர்ந்து வேறு எந்த ஊடகங்களும் புலிகளின் 'அதிகாரப்புூர்வ" தொனியை வெளிப்படுத்தும் அதிகாரம் அற்றவை. (சில ஊடகங்கள் புலத்திலும் தாயகத்திலும் புலிகளின் நிர்வாகத்துக்குட்பட்டிருப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டுரை எழுதிய 'துரோகியை'ச் சும்மா விடக்கூடாது.

இப்படிக் கருத்துச் சொல்பவர்கள் தவறான வழியில் பிறந்தவர்களாய்த்தான் இருக்க வேணும்.

இதை இங்க கொண்டுவந்து போட்ட உம்மை என்ன சொல்லித் திட்டிறது?

:lol:

:lol::lol::lol::lol: :wink:

கருத்துகளை தகர்க்க நல்ல கருத்துகளாலேயே மட்டும் முடியும்.

ஏதோ இதுவரை தகர்க்க ஒருவரும் எழுதவில்லை (யாழ்களத்தில் அல்ல) ஊடகங்களில் தேசிய தொலைக்காட்சி வானொலியல் கருத்து பரிமாறவில்லை. இப்ப ஒருவர் தகர்த்து போட்டார் என்று நம்புவோமாக.

உதை வாசிப்பினம் கொண்டு வந்து ஒட்டுவினம் ஆனால் அடுத்த கிழமை ஏதாவது ஒரு சம்பவம் நடந்தா எல்லாரும் முருங்கையில போட்டி போட்டு கொண்டு ஏறுவினம். காதலோ காதல் அப்படி ஒரு காதல்

உள்வாங்கி ஞபகம் இருக்கப் போறது பேராசிரியர் சொன்னது பற்றி எழுதியது மாத்திரம். இனி வடக்கு கிழக்கில அடிக்ற ஒவ்வொரு எறிகணை கடல் சமர், பறக்கும் சன்னங்களும் அவர் சொன்னது தொடங்கீற்றுதோ என்ற அங்கலாய்ப்பிலான்..... :lol:

காலித் தாக்குதல் தொடர்பாக சில ஊடகங்களில் முன்னேற்றம் தெரிந்தது. ஆனாலும் அது நிலைக்குமா தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.