Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......

Featured Replies

இதுதான் விதை. லக்கிலுக் வாக்கெடுப்பு நடத்துறாரே அதுதான் செடி.

லக்கிலுக் வாக்கெடுப்பு நடாத்துவது அல்லிகா என்பவர் எழுதியதற்காக.அல்லிகா எழுதியது நீர் எழுதிய ஒரு கருதுக்காக.இங்கே விதை விதைத்தவர் நீர் தான்.தேவயற்ற பிரச்சினையை உருவாக்கியவர் நீர் தான்.

கலைஞர் சம்பந்தமாக அன்று நடந்த விவாததில் அமைதிகாக்கும் படி நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈழவன் போன்றோர் பின்னர் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டிருந்தனர்.ஆகவே இங்கே நீர் தான் தேவையற்ற இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி உள்ளீர்.உமது நோக்கம் சந்தேகத்திற்கு இடமானது.ஆகவே இத்தோடு உமது சிண்டு முடியும் வேலையை நிறுத்துவது நலம்.

லக்கி எங்கே பிரச்சினை உருவாக்கப்படுகிறது என்பதை இப்போதாவது உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

  • Replies 157
  • Views 11.8k
  • Created
  • Last Reply

இன்னொன்றையும் குறிப்பிட மறந்து விட்டேன் மறவன் புலவின் கட்டுரை வெளியான பின் பல உறவுகள் கூட்டமைப்பு எம்பி மார் மீதும் பல குற்றச்சாடுக்களை எழுதினர் அப்போது லக்கி இரு பக்கத்திலும் பிழைகள் உண்டு உணர்ச்சிவசப் பாடாதீர்கள் நண்பர்களே என்று தான் எழுதினார்.ஆகவே இங்கே இந்தச் சம்பவம் தான் விதை என்று நீர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

  • தொடங்கியவர்

நாரதர் மரியாதையை பழகுங்கள். என்னால் உங்களுடைய தரத்துக்கு இறங்க முடியாது. ஏக வசனத்தில் என்னை அழைக்க வேண்டாம். பண்பற்ற வார்த்தைகளால் ஒருவரை அவசரமாக விமர்சித்ததால் ஏற்ப்படும் தாக்கங்கள் பற்றியே அந்த விமர்சினத்தை வைத்திருந்தேன். எல்லாம் தெரிந்த வல்லவராக செயற்ப்படும் நீங்களுமா??????? :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். நீரே திருப்பிக் கேட்கின்றீர்கள். ரெம்பவே விளக்கம் தான்.

:wink: :P :P

இருந்தாலும் முதலில் நான் கேட்ட விடயத்துக்கு பதில் என்னும் வரவில்லை. இந்திய நண்பர்கள் வெளியேறிய என்று சொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீங்கள் சாடிய விதம் எவ்வகை நியாயம்?

கருனாநிதி கூட்டமைப்பினர் சந்திப்பு பற்றி நடந்த விவாதங்களில் முதலில் கருனாநிதி அவர்கள் விமர்சிக்கப்பட்டது. அந்த சந்திப்பு பற்றி மறவன்புலவு அவர்கள் கட்டுரையில் கூட்டமைப்பினர் செயல்பாடு பற்றி வெளி வந்த விடயங்கள்.

அவசரமான சரியாக அறிந்துகொள்ளும் முன் செய்யப்பட்ட விமர்சனத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பு பற்றியே நான் குறிப்பிட்டிருந்தேன்.

இந்திய நண்பர்கள் விலத்துவதற்கும் மறவன்புலவின் கட்டுரைக்கும் சம்மந்தம் இருப்பதாக நான் எங்கே எழுதினான்???

தூயவன் உங்களுக்கு ரொம்பத்தான் தெளிவு போங்கள். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக் வாக்கெடுப்பு நடாத்துவது அல்லிகா என்பவர் எழுதியதற்காக.அல்லிகா எழுதியது நீர் எழுதிய ஒரு கருதுக்காக.இங்கே விதை விதைத்தவர் நீர் தான்.தேவயற்ற பிரச்சினையை உருவாக்கியவர் நீர் தான்.

கலைஞர் சம்பந்தமாக அன்று நடந்த விவாததில் அமைதிகாக்கும் படி நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈழவன் போன்றோர் பின்னர் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டிருந்தனர்.ஆகவே இங்கே நீர் தான் தேவையற்ற இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி உள்ளீர்.உமது நோக்கம் சந்தேகத்திற்கு இடமானது.ஆகவே இத்தோடு உமது சிண்டு முடியும் வேலையை நிறுத்துவது நலம்.

லக்கி எங்கே பிரச்சினை உருவாக்கப்படுகிறது என்பதை இப்போதாவது உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

நாரதர், அது ஒன்றுமில்லை. யாழ்களத்தில் பிரச்சனை இருப்பதாக பலர் காட்டிக் கொள்ள முனைவதும், அடிக்கடி ஏதோ ஒரு தலைப்பைத் திறந்து தர்மம் போதிப்பதும் பல காலமாக நடக்கின்ற ஒரு விடயம்

இதனால் தர்மவாதி, நியாயவாதி என்ற பெருமை கிடைக்கின்றதோ தெரியவில்லை. அதற்கு பதில் சொன்னால், உடனே அதற்கு ஒரு பழிப்பு செய்வதும் தர்ம சாஸ்திரங்களில் ஒன்று!

இன்றைக்கு இத் தலைப்பு போட்டதற்கு ஒரு தரப்பை இழக்க கூடாது என்று சொல்லிக் கொண்டு, மறு தரப்பை இழக்க, செய்கின்ற வேலையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் மரியாதையை பழகுங்கள். என்னால் உங்களுடைய தரத்துக்கு இறங்க முடியாது. ஏக வசனத்தில் என்னை அழைக்க வேண்டாம். பண்பற்ற வார்த்தைகளால் ஒருவரை அவசரமாக விமர்சித்ததால் ஏற்ப்படும் தாக்கங்கள் பற்றியே அந்த விமர்சினத்தை வைத்திருந்தேன். எல்லாம் தெரிந்த வல்லவராக செயற்ப்படும் நீங்களுமா??????? :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

களத்தில் தேவைக்கு ஏக வசனம் என்ன கற்பனையே எழுதலாம் என்ற விதி வைத்த வல்லவராச்சே அண்ணன். களத்தின் நிர்வாகத்துக்கு நிர்வாகி அண்ணன். அண்ணன் இருக்க அவர் பேச நீங்கள் அழுவதில் என்ன நியாயமோ. எல்லாம் அண்ணன் சித்தம். :lol:

ஏக வசனத்தில் எங்கே எழுதி இருகிறேன் என்று சுட்டிக் காட்டுவீரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று மற்றவர்கள் மீது பழியை போட்டுவிட்டு நாம் தப்பிக்க கூடாது நாம் ஒரு தலைப்பில் கருத்து எழுதினால் அதுக்கான எதிர் கருத்துக்கள்

பலவிதமான முறையில் வரம் அதுக்காக தட்டி கழித்து விட்டு

ஒடுவது நல்ல கருத்தாளனுக்கு அழகு அல்ல.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் தேவைக்கு ஏக வசனம் என்ன கற்பனையே எழுதலாம் என்ற விதி வைத்த வல்லவராச்சே அண்ணன். களத்தின் நிர்வாகத்துக்கு நிர்வாகி அண்ணன். அண்ணன் இருக்க அவர் பேச நீங்கள் அழுவதில் என்ன நியாயமோ. எல்லாம் அண்ணன் சித்தம். :lol:

வாசகன் சொன்ன குற்றசாட்டுக்கு நாரதர் பதில் சொல்ல முன்னே எண்னை ஊற்றிவிடுவதில் சில கில்லாடிகள் வரிந்து கட்டி கொண்டு இங்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • தொடங்கியவர்

தூயவன்

அவசரப்பட்டு கருனாநிதியை விமர்சித்தது பற்றியே நான் எழுதினாாாாாாாாாாாான்.

இந்திய நண்பர்கள் விலத்துவதற்கும் மறவன்புலவின் கட்டுரைக்கும் சம்மந்தம் இருப்பதாக நான் ஒருபோதும் எழுதவில்லைலலலலலலலலலலலலலலலல

  • தொடங்கியவர்

லக்கிலுக் வாக்கெடுப்பு நடாத்துவது அல்லிகா என்பவர் எழுதியதற்காக.அல்லிகா எழுதியது நீர்.

கலைஞர் சம்பந்தமாக அன்று நடந்த விவாததில் அமைதிகாக்கும் படி நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈழவன் போன்றோர் பின்னர் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டிருந்தனர்.ஆகவே இங்கே நீர் தான் தேவையற்ற இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி உள்ளீர்.உமது நோக்கம் சந்தேகத்திற்கு இடமானது.ஆகவே இத்தோடு உமது சிண்டு முடியும் வேலையை நிறுத்துவது நலம்.

வாசகன் நீர் என்பது எப்படி ஒருமை ஆகும்.உமக்குத் தமிழிலையும் பிரச்சினையா? நீ என்பது தான் ஒருமை, நீர் என்பது அல்ல.மேலும் கருத்துக்கு கருத்து எழுதும் பொய்க் குற்றச்சாடுக்களை எழுதி தப்பிக்காதையும் உமது நோக்கம் இப்போது மிகத்தெளிவாக அடையளம் காட்டப்பட்டுள்ளது.

என்ன களத்திலதான் கருத்திலதான் பம்மாத்து என்றால் தமிழ் இலக்கணத்திலுமா?

நீ நீர் (முன்னிலை ஒருமைகள்)

நீங்கள் (முன்னிலை பன்மை) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாசகன் சொன்ன குற்றசாட்டுக்கு நாரதர் பதில் சொல்ல முன்னே எண்னை ஊற்றிவிடுவதில் சில கில்லாடிகள் வரிந்து கட்டி கொண்டு இங்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,

நீங்கள் என்ன ஊற்றிய எண்ணையில் பற்ற வைக்கிற தொழிலைச் செய்து கொண்டிருக்கிறீர்களா?

அண்ணாச்சி இங்கு பலருடன் இப்படித்தான் ஏக வசனத்தில் பேசி அதீத மரியாதையை வழங்கியவர். அவருக்கு எண்ணை ஊற்றி கெளரவிக்க எமக்கு எல்லாம் தகுதியில்ல. உங்களுக்குத்தான் அது அமையலாம். முயற்சியுங்கள். பற்ற வைக்க தெரிந்த உங்களுக்கு எண்ணை ஊற்றுவது கைவந்த கலையாக இருக்கும்.

நாம் இங்கு அதைக் குறிப்பிட்டது வாசகன் முன்னாலேயே இவர் பலரை ஏகவசனத்தில் எழுதிய போது கண்டிக்காமல் கண்காணாமல் இருந்ததற்கான பிரதிபலன் தான் இது. அப்பப்பவே இவர்களின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி தடுத்தி நிறுத்தி இருந்தால் இக்களம் இன்று பல பெறுமதி வாய்ந்தவர்களை இழந்து நிற்காது. நட்புறவும் கூனிக் குறுகி கூட்டணிகள் என்ற நிலையில் நிற்காது.

யார் பெறுமதியற்றவர் மதியற்ற வதனனா? :P :P :P

எரிகிற திரிக்கு எண்ணை ஊறுபவர்தான் கில்லாடி, சும்மா எண்ணை ஊறுபவர் வேஸ்ரு. :idea:

  • கருத்துக்கள உறவுகள்

யார் பெறுமதியற்றவர் மதியற்ற வதனனா? :P :P :P

எரிகிற திரிக்கு எண்ணை ஊறுபவர்தான் கில்லாடி, சும்மா எண்ணை ஊறுபவர் வேஸ்ரு. :idea:

அண்ணாச்சியின் கற்பனை சந்தேக நோய் தொற்றியவர்களில் நீங்களுமா?

சுயமா சிந்திக்கக் கற்றுக் கொண்டால் சுயமா கருத்துக்களை வைக்க முயன்றால் நட்புறவு என்பது மலரும் இங்கு கருத்தாளர்களிடையே. அப்புறம் எண்ணை திரி பற்ற வைப்பு ஆளாளுக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு விழுங்கும் நேரத்தை நல்ல விடயங்களை ஆராயப் பயன்படுத்தலாம். ஆட்களை ஒதுக்கி வைப்பதையும் தவிர்க்கலாம். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன களத்திலதான் கருத்திலதான் பம்மாத்து என்றால் தமிழ் இலக்கணத்திலுமா?

நீ நீர் (முன்னிலை ஒருமைகள்)

நீங்கள் (முன்னிலை பன்மை) :lol:

நீர் என்பது பேச்சு வழக்கு. ஒருமைக்கும் பொருந்தும், பன்மைக்கும் பொருந்தும் (பாவிக்கும்தன்மையைப் பொறுத்தது).

நீங்கள் -- மிக மரியாதை

நீர் -- மரியாதை (கொடுக்க விரும்பாமல் கொடுப்பது)

நீ -- மரியாதையற்றது (தெரியாதவர்களுக்கு), சினேகபூர்வமானது (தெரிந்தர்வர்களுக்கு)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%...%AE%B4%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் என்பது பேச்சு வழக்கு. ஒருமைக்கும் பொருந்தும், பன்மைக்கும் பொருந்தும் (பாவிக்கும்தன்மையைப் பொறுத்தது).

நீங்கள் -- மிக மரியாதை

நீர் -- மரியாதை (கொடுக்க விரும்பாமல் கொடுப்பது

நீ -- மரியாதையற்றது (தெரியாதவர்களுக்கு), சினேகபூர்வமானது (தெரிந்தர்வர்களுக்கு)

நானும் இப்படி தான் நினைத்து பேசுவது

  • கருத்துக்கள உறவுகள்

நட்புறவை வளர்க்க வேண்டும், தேசியப்பற்றை வளர்க்க வேண்டும் என்றெல்லாம் ஏன் அடிக்கடி சொல்ல வேண்டி வருகின்றது?

நட்புறவும், தேசியப்பற்றும் தமிழர்களிடையே மிகக் குறைவு என்பதால்தான்.

சுய நலம், சுய தம்பட்டம் என்று எல்லாம் சுயமயம். போட்டியைவிடப் பொறாமை கூடியவர்கள் எம்மினத்தினர். புலத்தில் இருந்த்தாலும் போட்டி பொறாமைகள் எல்லாம் எம்மினத்துக்குள்தான்.

எங்கோ வாசித்தது : "பிச்சைக்காரன் பணக்காரனைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை; தன்னைவிட வசதியான பிச்சைக்காரனைப் பார்த்துத்தான் பொறாமைப்படுவான்"

இதுதான் இங்கும் நடக்கின்றது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் என்பது பேச்சு வழக்கு. ஒருமைக்கும் பொருந்தும், பன்மைக்கும் பொருந்தும் (பாவிக்கும்தன்மையைப் பொறுத்தது).

நீங்கள் -- மிக மரியாதை

நீர் -- மரியாதை (கொடுக்க விரும்பாமல் கொடுப்பது

நீ -- மரியாதையற்றது (தெரியாதவர்களுக்கு), சினேகபூர்வமானது (தெரிந்தர்வர்களுக்கு)

நானும் இப்படி தான் நினைத்து பேசுவது

தமிழிலே நீர் என்பது மரியாதை இல்லாது பேசுவதாகாது. ஆயினும் அப்படி காலப்போக்கில் கைக்கொள்ளப்படுகிறது. 'கள்' என்னும் விகுதி சேர்ப்பது அஃறிணைக்கு. காலப் போக்கில் அது மாற்றப்பட்டுள்ளது. ஆதாலால் நீர் என்பது முன்னிலை பன்மையே தவிர அதில் மரியாதை வழங்கப்படுகிறதா இல்லையா என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

என்ன களத்திலதான் கருத்திலதான் பம்மாத்து என்றால் தமிழ் இலக்கணத்திலுமா?

நீ நீர் (முன்னிலை ஒருமைகள்)

நீங்கள் (முன்னிலை பன்மை) :lol:

நீர் என்பது பேச்சுத் தமிழில் பயன் படுத்தப்படும் சொற் பிரயோகம் அது ஒருமையாகவும் வரும் பன்மையாகவும் வரும்.கிருபன் இணைத்த இணைப்பில் மேற் கோள் உள்ளது.மேலும் நீர் என்பது இங்கே தடை செய்யப்பட்ட சொல்லாக இதுவரை நான் அறிந்து இருக்கவில்லை.உம்மால் இதை விடக்கீழ்த்தரமான சொற்பிரயோகங்கள் இங்கே எழுதப்பட்டன.

எழுதப்பட்டது: செவ்வாய் கார்த்திகை 25, 2003

//வலைஞன் எழுதியது:

வணக்கம் குருவிகள்,

தயவு செய்து தலைப்புடன் சம்பந்த பட்ட கருத்தினை எழுதுக. முதல் கருது நீக்கப்பட்டதற்கான காரணமும் இதுவே! களம் பற்றிய உங்கள் கருத்தினை எழுதுவதற்கான இடம் "உங்கள் கருத்து" என்னும் பிரிவு ஆகும்.

-----------------------------------------------------

வலைஞன் எழுதியது:

வணக்கம் குருவிகள்,

"நண்பர்(கள்).....!" என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட உங்கள் கருத்து அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------

எங்க நினைக்கிறது கிற்றாரோட உலகம் பூரா திரிஞ்சு புகழ் பெற்ற மைக்கல் ஜக்சனே படுகள்ளனா இருக்கேக்க அதை ஒத்ததுகள் எல்லாம் எப்படி இருக்குங்கள்.... அதுக்க மற்றவைக்கு உபதேசம் வேற.....!

உபதேசம் செய்ய முதல் உனக்கு அந்தத் தகுதி உள்ளதா என ஒரு கணம் சிந்தி.....!

சொல்வது மனிதனுக்கு மனிதன்...!

------------------------------------------------------

காரணம்:

1. தலைப்புக்குப் பொருத்தமில்லாத கருத்து.

2. ஒருமையில் கள அங்கத்துவரைச் சுட்டிக் கருத்தாடியமை.

தயவுசெய்து களவிதிகளை மீறாதவாறு தொடர்ந்து கருத்தாடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

நன்றி //

எமது கருத்து நீக்கப்பட்டது தொடர்பாக எமது நிலைப்பாடு.....!

வலைஞன் அவர்களே...உங்களுக்குக் கருத்தின் ஆழம் உண்மையில் புரிகிறதா....குறிப்பிட்ட கருத்து யாரையும் பெயர் குறித்து எழுதப்படவில்லை அல்லது குவாட் செய்தும் எழுதப்படவில்லை...அத்துடன் பொதுவாக சமூகத்தை அல்லது மனிதனை விளித்து எழுதும் கருத்துக்கள் ஒருமையில் அமைவது இயல்பு உங்கள் நடவடிக்கையானது சிலரை இக்களத்தில் திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது....நட்புக்கு உபதேசம் செய்யும் ஒருவர் வந்து மூன்று நாளிலேயே களத்தில் கருத்தாடும் விதத்தைக் கண்டு நீங்கள் எல்லோரும் இன்புறுவது தெரிகிறது...இப்படியே உங்கள் களம் அநாகரிகத்திற்கு இடமளிக்குமானால்.. :arrow: :lol::lol::lol::lol::(:lol::lol::lol: .நிச்சயம் இக்களம் வருவதை நாம் நிறுத்துவோம்...உங்கள் களத்தில் கருதாட வேண்டும் என்பது எமக்கொன்றும் கட்டாயம் இல்லை....நாம் நாகரிகத்தை தமிழை நேசிப்பவர்கள் அந்தமட்டில்தான் இக்களம் வந்தோம்....!

களப்பொறுப்பாளர்கள் தவிர யாரும் குருவிகளின் தனிப்பட்ட செய்திப் பிரிவுக்கு செய்தி அனுப்புதலைத் தவித்துக் கொள்ளவும்...வானதி எனும் நபர் அனுப்பிய தனிப்பட செய்தி தொடர்பில் நாம் எதிர்காலத்தில் எடுக்கும் செயற்பாடுகளுக்கு அது உதவியாக அமையும்....எனவே தயவு செய்து எமக்கு இது விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவும்...இது தொடர்பில் இக்களம் தவறாக எமக்கெதிராகப் பயன்படுத்தப்படுமானால் நாம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம்...."

:lol::lol::lol::lol::lol::lol::lol:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0

மேலும் நீர், நீங்கள் என்னும் சொற்கள் மரியாதைப் பன்மை என கீழ் குறிப்பட்டவாறு பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி இலக்கணமும் சமூக உறவுகளும் என்னும் ஆய்வில் குறிப்பிட்டு உள்ளார்.

// இது காணப்படாததற்கு அங்குச் சாதியமைப்பு குலக்குழு, கண அமைப்பிலல்லாது தொழிலடிப்படையிலேயே அமைந்திருத்தல் காரணமாகலாம். இலங்கைத் தமிழ் வழக்கிலும் மட்டக்களப்பில் இது நிலவிற்று என்பதற்குச் சான்றாகலாம். இந்த நாம், நாங்கள் வேறுபாடு ஆப்பிரிக்க மொழிகள் பலவற்றிலும் காணப்படுகின்றதென யெஸ்பேர்சன் கூறுவார்.12 அங்குக் குலக்குழு நிலைமை பேணப்பட்டமையை அவதானிக்கும் பொழுது, இதுவரை கூறப்பட்டதன் உண்மை விளங்கும்.

மரியாதைப் பன்மை (நீர், நீங்கள்) சமுதாயத்தில் தோன்றிய உறவுப் பேதங்களைக் காட்டி நிற்பதாகும்.

"ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றினைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கினாகிய உயர் சொற் கிளவி

இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல"

என வரும் தொல்காப்பியக் கிளவியாகச் சூத்திரம் இப்பண்பு தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கி விட்டதென்பதை உயர்த்துகின்றது. பெயரியற் சூத்திரங்கள் 186,187 கூறுவனவற்றிலிருந்து பழைய நிலையில் மரியாதை காரணமாகப் பன்மைக் குறியீடு பயன்படுத்தப்படாத நிலைமையைக் காட்டுகின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளின் வளர்ச்சி காரணமாக இப்பிரயோகம் தோன்றிற்றெனலாம். மரியாதைக் குறியீட்டின் அத்தியாவசியம் காரணமாக அஃறிணைக்கேயுரிய 'கள்' என்னும் பன்மை ஈறு உயர்திணையில் அந்தஸ்து வேறுபாட்டையுணர்த்த, முன்னிலை, படர்க்கை ஆகிய இரு இடங்களிலும் பயன் படுத்தப்படுகின்றது. (நீங்கள், தலைவர் அவர்கள்). மேலும்//

http://noolaham.net/library/books/01/55/55.htm

வாசகன் என்னும் பெயரில் எழுதிய உமது குட்டு அம்பலம் ஆனதால் அதனைத் திசை திருப்ப இப்படி ஒரு நாடாகம் ஆடுகிறீர் என்பது எல்லோருக்கும் தெளிவாக விளங்குகிறது.

இங்கே கீழ்த்தரமாக கள உறுப்பினர்களைடையே பிணக்குகளை உருவாக்கி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் நீர் பல முகமூடிகளில் குள்ளத்தனமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறீர்.இப்படிக் கீழ்த்தரமான சிந்தனை உடைய ஒருவரை ஒருமையில் அழைப்பதில் தவறில்லை.

உமக்கு யாழ்க்களத்தில் இருக்கும் வெறுப்பினால் ஈழத்தமிழர்களையும் இந்தியத் தமிழ் உறவுகளையும் பிரித்து அவர்களை இங்கிருந்து வெளியேற்ரும் நோக்குடன் செயற் பட்டு இருகிறீர்.இது எவ்வளவு கீழ்த்தரமான வேலை. நாங்கள் உறவைக் கட்டி எழுப்ப இங்கே பாடுபடுகிறோம் எனேனில் எமது இனத்தின் வருங்காலத்திற்கு அது அத்தியாவசியமானது என்பதற்காக,ஆனால் நீர் உமது தனிப்பட்ட வெறுப்பினால் அந்த நோக்கத்திற்கு எதிராக இங்கே செயற்பட்டிருகிறீர்.உமது முன்னைய வேடத்திலும் இதையே தான் செய்தீர்.சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்.அகப்பை குருவியாக இருந்தால் என்ன சமாதானமாக இருந்தால் என்ன வாசகனாக இருந்தால் என்ன நெடுக்காலபோவானாக இருந்தால் என்ன ,உமது கெட்ட எண்ணங்கள் மாறப் போவதில்லை.இப்படி கீழ்த்தரமான எண்ணங்களை உடைய ஒருவர் வாழ் நாளில் துன்பத்தையே அனுபவிப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயம் இக்களம் வருவதை நாம் நிறுத்துவோம்...

ஜய்யோ இப்படி தானே சுய தடை போட்டு நாங்கள் வெளியேறினோம் :P

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொல்லப்பட்ட அநாவசிய விடயங்கள் தவிர்த்து இங்கு பாவிக்கப்படும் மொழி நடையில் சிலர் ஏற்படுத்த நினைக்கும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த விளக்கம் தரப்படுகிறது.

வழமையான உங்கள் கற்பனையை விடுத்து விடயத்துக்கு வருவோம்..

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%...%AE%B4%E0%AF%8D

நீர் என்பது தமிழ் இலக்கணப்படி ஒருமை. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் நீ நீர் என்பது மரியாதைக் குறைவான சொற்களாகத்தான் வட்டார வழக்குகள் சிலவற்றில் கருதப்படுகிறது. நீங்கள் நீங்க போன்றவை பேச்சு வழக்கில் பண்புள்ளதாக அமைய நீர் நீ என்பவை பெரிதும் ஒருமையைக் குறிக்கவே பயன்படுகிறது.

இங்கு எழுத்துத் தமிழே அதிகம் பயன்படுத்தப்படுவதால் பன்மையைக் குறிக்காவிடின் மரியாதையைக் குறிக்கும் வகையில் அது நீங்கள் என்றே பயன்படுத்தப்படுதல் அவசியம்.

அந்த வகையில் நீர் நீ போன்றவற்றை யாழில் தவிர்ப்பது வரவேற்கக் கூடியது. யாழுக்கு பல வட்டார வழக்குகளின் கீழ் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வருவதால் இப்படியான பதப்பிரயோகங்களைத் தவிர்த்து நீங்கள் என்றே எழுதுவதே சிறப்பு.

எனி தனிநபர்கள் சிலரின் எழுத்துக்களுக்கான சந்தர்ப்பங்களை நோக்கும் போது...

உங்கள் கருத்துக்களை நோக்கும் போது நீங்கள் "நீங்கள் என்பதை" பாவிக்கும் சந்தர்ப்பங்களையும் "நீர்" என்று பாவிக்கும் சந்தர்ப்பங்களையும் சிவத்தம்பி வந்து ஆய்வுசெய்ய வேண்டியதில்லை. அவை தெளிவாகவே பண்பாட்டுக் குறைவாகப் பேச வேண்டும் அல்லது தரம்குறைத்துப் பேச வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. அதை ஒப்பிக்கும் வகையில் நீங்களே மற்றவர்களை நோக்கி உமக்கேன் மரியாதை தர வேண்டும் என்று கேட்பது உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் நீ நீர் என்ற பதங்களை மரியாதைக் குறைவாக நோக்குபவர்களை நோக்கி நீங்கள் பாவிக்கு உரிமையற்றவராகிறீர்கள். அது சிவத்தம்பியின் விளக்கத்தின் கீழும் வரும். பண்புச் சொல்லாக நீர் என்பதைக் கருதாத போது நீங்கள் அவர்களை நோக்கி அவற்றைப் பாவிக்க முடியாது.

அதுமட்டுமன்றி நீர் என்பது ஒருமைக்கு பன்மைக்கும் பேச்சு வழக்கில் பாவிக்கப்படுவதால் அதைத் தவிர்ப்பதே அநாவசியக் குழப்பங்கள் விளைவிப்பதில் இருந்து தடுக்கும்.

ஓம் ஓம் சிவத் தம்பிக்கும் இலக்கணம் படிப்பிப்பீர் போல . நல்ல சடையல் . நீர் என்பது ஒருமை என்பதற்கான ஆதாராம் எங்கே? நீர் சொல்வாதால் அதனை ஏற்று கொள்ள வேண்டுமா? எங்க வாசகன் எண்ட முகமூடி அதை எப்ப இறக்கிறதா பிளான்?

சடையலும் அல்ல சண்டையும் அல்ல. நீர் பேச்சு வழக்கு ஒருமை என்பதற்கு ஆதாரம் மேலே தரப்பட்டுள்ளது. இலக்கண ரீதியாக நோக்கின் தமிழ் மொழி ஆண்டு 10 புத்தகம் கையில் இருந்தால் எடுத்து நோக்கவும்.

சிவத்தம்பி சொன்னதை வடிவாப் பாருங்கள். குழுமங்கள் என்ற வகையில் அதை வட்டார வழக்காக்கித்தான் தந்துள்ளார். வட்டார வழக்குகள் எல்லாம் இங்கு பேச வேண்டும் என்ற அவசியமில்லை. நீர் என்பதை பண்பாட்டுக் குறைவாக கருதுமிடத்து ஒருமைக்கும் பன்மைக்கும் விளிக்கக் கூடிய அச்சொல்லைத் தவிர்ப்பதே சிறப்பு. சிவத்தம்பி என்ன எந்தக் குரு வந்தாலும் நியாயத்தை சான்றுகளைக் காட்ட எம்மாலும் முடியும்.

உங்களின் கற்பனை சந்தேகத்துக்கு நீங்கள் முடிவு கட்டினால் நிச்சயம் இங்கு பலரும் நட்புறவோடு கருத்துக்களால் இணைந்திருப்பர் என்பது மட்டும் தெரிகிறது வெளிப்படையாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.