Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா

CBK%2BJaffna_CI.jpgபொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் திறவாது வடக்கினை கடந்து சென்றுள்ளார்.

அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே பேசியிருந்தார்.முன்னதாக வவுனியா வைரவர் புளியங்குளத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று 11.30 க்கு அவர்களது பிரச்சாரம் ஆரம்பமாகியிருந்தது.

1549266_617573805037634_9661943341813677

1959319_764186917002635_7651285955807368

10687178_764186297002697_288763328204944

10885296_764186147002712_632900512663492

10888620_764186617002665_810721977299348

10898279_764186490336011_568001947412451

10898306_764187010335959_321486526767091

10906397_764186837002643_750561778550031

CBK%2BJaffna_CI.jpg

download%2B(11).jpg

ரிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது எதிரணியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.தொடர்ந்து மன்னாரில் பொது எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் தனியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக, ராஜித சேனாரத்தின ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா ஆகியவர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக கூட்டமைப்பினர் மேடையேறாத பிரச்சார கூட்டத்தினில் மைத்திரி தரப்பின் கருத்தை அறிந்து கொள்ளவே மக்கள் கூடிய அளவினில் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜீவராசிகள் மீதான வன்முறை. புறா இராக்காலப் பறவை அல்ல. அதனை இரவில் பறக்கவிடுவதால்.. அது போக்கிடம் இன்றி போய் தமிழர்கள் போல் அனாதையாக அகதியாக அலையாது..?????! :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சந்திரிக்கா புறா பறக்க விடுவது இது முதற்தடவை அல்ல. சூரியக் கதிர் பேரழிவு யுத்தத்தினை நடத்தி வெற்றி விழா செய்த போதும்.. புறாக்களை பறக்கவிட்டார். தமிழர் உயிர்களை பறக்கவிட்ட சந்தோசத்தில். சிங்கள டாங்கிகள்.. புறாக்களை கட்டி வைச்சுக் கொண்டே.. பீரங்கிகளால் சுட்டுத்தள்ளின. எந்த முகாந்தரமும் இன்றி.. 1995 இல் இவரது ஆக்கிரமிப்புப்பு படைகளால்..இடிக்கப்பட்ட பல வீடுகளில்.. எங்கள் வீடும் அடங்கும். அதுவும் தரைமட்டமாகும் வரை அழிக்கப்பட்டது. அதற்காக இவரை கைது செய்ய எங்களால் முடியாது.. ஆனால் சந்திரிக்காவும் மனிதன் தான்.. நாங்களும் மனிதர்கள் தான்.. இந்த இயற்கை முன். ஆனால் யார் இந்த மனிதரை.. அதிகாரத்தோடு நிறுத்தி வைத்து வெறியேற்றி விட்டது அவர்களையே தான் இது தொடர்பில் தண்டிக்க வேண்டும். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.