Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் கூறியதை ஏற்க முடியாது: சிவாஜிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sivajilingam-Sampanthan-.jpgதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை தேசிய அரசாங்கத்தில் இணையமுடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற இயக்கமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்றுள்ள பிரதான இரண்டு கட்சிகளாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் விடுதலைப் புலிகள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுக்க வேண்டுமெனக் கோரி புலிகளுக்கு பணம் கொடுத்தே மஹிந்த வென்றார் என ரணில் விக்கிரமசிங்கவும் ரணில் வெல்லதற்காகவே புலிகள் வாக்களிக்கவிடாது மக்களைத் தடுத்தனர் என்று மகிந்த ராஐபக்சவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனைத் தற்போது கேட்க யாரும் இல்லை என்ற நிலையில் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.

இவ்வாறு புலிகள் இல்லாத நிலையில் அரசாங்கம் புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சர்வதிகாரிகளென கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் அவ்வாறு இரண்டு பேரையும் ஒப்பிடவே முடியாது. தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் விடுதலைக்காக தேசிய இயக்கமாக கொள்கை அடிப்படையிலையே புலிகள் செயற்பட்டுவந்தனர். இந்நிலையில் சம்மந்தனின் கருத்தை ஏற்கமுடியாது.

இதே வேளையில் தற்பொதைய ஐனாதிபதி வேட்பாளர் மைத்திபால தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அமையப் போகும் ஆட்சியில் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் முண்டியடித்து வருகின்றனர்.

ஆனால் எம்மைப் பொறுத்தவரை தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச சமூகமும் புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைக்க வேண்டும்.

இங்கு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும். ஆகக் குறைந்தது சமஷ்டித் தீர்வென்றாலும் உடனடியாக வழங்கவேண்டும். எமது நிலைமைகள் இவ்வாறிருக்கையில் அரசனான அரசாங்கத்தை நம்பி புரசனான சர்வதேச சமுகத்தைக் கைவிடுகின்ற நிலை எமக்கு வரக் கூடாது. ஆகவே நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.

 

http://www.virakesari.lk/articles/2015/01/04/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

-----

 விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற இயக்கமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

 

இவ்வாறு, கூறியதற்கு....

சம்பந்தன், தமிழ் மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு,

அரசியலில்... இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இந்திய ஊடகங்களில் முழங்குவார்கள்.. ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டமைப்பே சொல்லிவிட்டது.. புலிகள் இயக்கம்ஈவு இரக்கமற்ற இயக்கம் என்று.. ஏன் தமிழ்நாட்டில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்று கதை போகும்..

சிந்தித்துப் பார்த்தால் யாரை திருப்திப்படுத்த தேவையில்லாமல் சம்பந்தன் இவ்வாறு பேசினார் என்று உணர முடியும். தமிழ்மக்களை முகம் சுளிக்க வைக்கும் பேச்சாக இருந்தாலும் அதைப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை கடந்து போக வேண்டிய நிர்பந்தம் சம்பந்த்ஹனுக்கு மட்டுமில்லை இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கு.

புலத்தில் இருந்து குசியா காலாட்டியபடி புலிப்புராணம் பாடும் கோஸ்டிக்கு இது விளங்காது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை கடந்து போக வேண்டிய நிர்பந்தம் சம்பந்த்ஹனுக்கு மட்டுமில்லை இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கு.

புலத்தில் இருந்து குசியா காலாட்டியபடி புலிப்புராணம் பாடும் கோஸ்டிக்கு இது விளங்காது.

கடந்து போகும் தேவை சம்பந்த்ஹனுக்கு இருப்பதுபோல் தெரியவில்லை.. :D அவரும் அங்கேயேதான் நிற்கிறார்.. :icon_idea:

இவ்வாறு, கூறியதற்கு....

சம்பந்தன், தமிழ் மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு,

அரசியலில்... இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

சம்பந்தரின் சில முடிவுகளில் விமர்சனம் இருந்தாலும் இவ்வாறு உண்மை கூறுவதால் தான் அவர் தமிழர்களின் தலைவர் ஆகின்றார் .பணத்திற்கும் பம்மாதிற்கும் விலை போகும் தலைவர் இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். அதுவே தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.   

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். அதுவே புல யாவாரிகளுக்கு செய்யும் மிகப்பெரும் நன்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை கடந்து போக வேண்டிய நிர்பந்தம் சம்பந்த்ஹனுக்கு மட்டுமில்லை இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கு.

புலத்தில் இருந்து குசியா காலாட்டியபடி புலிப்புராணம் பாடும் கோஸ்டிக்கு இது விளங்காது.

புலிகளை வைத்து மஜாஜாலம் காட்ட முடியுமே தவிர அரசியல் பண்ண முடியாது.
அதற்கான காலம் கடந்து போய்விட்டது.
 
சம்மந்தர் விடுவாரா?
என்னய்யா இந்த உலகில் இருந்துதான் எழுதுகிறீர்களா?
புலிகளை கடந்து சிங்கள பேரினவாதமே போகுதில்லை. தமிழரை ஏமாற்ற அவர்களுக்கு கிடைத்த அவல் அது.
 
இந்த நாக்க மூக்க ஏன் புலிய சுத்துது??? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.