Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகார சனாதிபதி ஆட்சிமுறையில் நடைபெற்ற அழிவுகளைப் பதிவு செய்வோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் கள உறவுகளே!
 
      நிறைவேற்று அதிகார சனாதிபதி ஆட்சி முறை ஏற்பட்டது முதல் இன்றுவரை ஆணைப் பெண்ணாக்குவதையோ பெண்ணை ஆணாக்குவதையோ(ஜே.ஆரால் கூறப்பட்டது) தவிர அனைத்தையும் செய்யமுடிந்த இந்த சனாதிபதிகளின் காலத்தில் நடந்த இனஅழிப்பு சொத்தழிப்பு எனப் பல்வேறு அழிப்பு நடவடிக்கைகளுள் எமக்குத் தெரிந்தவற்றை இணைப்போம். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பலவற்றை மறந்து போகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் ரீதியான பார்வைகள் தேவைகள் இருந்தாலும் அழிவென்று வரும்போது அனைவருமே எதிர்கொள்ள நேர்ந்தது. இனியும் அதுவே. புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளைக் கடந்தவர் முதல் அண்மைக்காலம் வந்தவர்கள்வரை உள்ளோம். எனவே காட்சிகளை நேரில் கண்டது முதல் தாமே அனுபவித்தவர்களும் இருக்கின்றோம். எனவே பகிர்ந்து கொள்வோம். எமது அடுத்தலைமுறை அறியவேண்டியதும் அறிவூட்டவேண்டிய விடயமும் ஆகும். இதனை ஒரு கருத்தாடும் விடயமாகக் கொள்ளாது கள உறவுகள் ஆரோகியமாக நகர்த்திச் செல்ல வேண்டுகின்றேன். 
 
 
 
சிறிலங்காவின் சனாதிபதிகள்: 
jr.jpg                                                        rp.jpg

J. R. Jayawardana                                                  R. Premadas

யூ.றி.ஜெயவர்த்தனா                              ரணசிங்க பிரேமதாச

         (1978 - 1988)                                               (1988 - 1993)

 

 

 

 

db.jpg                                                            cbk.jpg

D. B. Wijethunga                                                     C. B. Kumarathunga  

டி.ப. விஜேதுங்க                                         சந்திரிகா. ப. குமாரதுங்கா

  (1993- 1994)                                                                (1994 - 2005)  

 

 

MR.jpg  

Mahinda Rajapaksa

மகிந்த ராஜபக்ச
( 2005முதல்)


 

படங்கள்- த ஐலண்ட்

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவனிக்க வேண்டிய விடயம்.. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் சிலரை பதவியில் இருந்து அகற்றிய பெருமை புலிகளைச் சாரும்.

 

ஜெயவர்த்தனா - 10 ஆண்டுகள். ( இந்தியப் படைகளின் வரவும்.. புலிகளுடனான மோதலும்.. தலையிடி போய் வீட்டில் இருப்பம் என்று விலகி ஓடினது. ஜே வி பி நெருக்கடியும்..அத்தோடு. எல்லாவற்றையும் பிரேமதாச தலையில் கட்டி விட்டமை.. கூடுதல் கெட்டித்தனம்.)

 

பிரேமதாச  -  4 ஆண்டுகள் (அவர் கொல்லப்பட்டிருக்காவிட்டால் அது 10 என்று நீண்டிருக்கும்.)

 

டிங்கிரி பண்டா - பிரேமதாசவை தொடர்ந்து வந்தவர்.. பூநகரி.. யாழ் தேவி நடவடிக்கை பின்னடைவுகளோடு.. ஓடினவர். (1 ஆண்டு)

 

சந்திரிக்கா அம்மையார் - (ஜனாதிபதி முறையை அழிக்கிறன் என்று வந்து ஒட்டிக்கொண்டிருந்து.. அதி உச்ச கால ஜனாதிபதி பதவியை அலங்கரித்ததோடு.. கடைசி நேரத்தில்.. மாற்றங்களை புகுத்தி தொடர்ந்து பிரதமராக இருக்க விரும்பியவர்.) - குண்டு தாக்குதல் முயற்சி மற்றும் இராணுவத் தோல்விகளால்.. வெளியேற வேண்டி ஏற்பட்டது.

 

தற்போதைய மகிந்த ராஜபக்சே - இவர் அப்படியே சந்திரிக்காவின் பாணியை பின்பற்றி வந்தவர். சர்வதேச சூழல் எமது போராட்டத்திற்கு எதிராக அமைந்ததை வைச்சு.. இந்தியாவின் முழு ஆதரவோடு போரை நடத்தி இந்தியா விரும்பிய படி போரை நிறைவு செய்ய இந்திய படைகளின் உதவியோடு போர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். இப்போ அவரும் அதி உச்ச அளவு ஜனாதிபதி ஆட்சியில் அமர்ந்து அதுக்கு மேல போகவும் விரும்புகிறார். இவரை நீக்க இப்போ... சிங்களவர்களுக்கு தமிழர்களின் வாக்கு தேவைப்படுகிறது. பிற அழுத்தங்களை இவர் மீது கொண்டு வர முடியாத சூழலில் சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகள்..உள்ளன.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jr.jpg

இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவதே குறிக்கோள் என்று சொல்லி வந்தவர்....

 

"போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்"

என்று கூறி சிங்களவர்களையே பாதாளகுழிக்குள் தள்ளிய

துவேஷி...

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி, வட்டுக்கோட்டைக்கு வழி என்ன? என்றுதான் கேட்டவர். பதில் என்னவோ துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்பதாகவே வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொச்சி, வட்டுக்கோட்டைக்கு வழி என்ன? என்றுதான் கேட்டவர். பதில் என்னவோ துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்பதாகவே வருகிறது.

நொச்சிக்கு நொட்டி எடுக்கிறதை விட்டுட்டு நீங்கள் ஒரு பந்தியை எடுத்துவிடுறது??? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இவர்கள் ஏற்படுத்திய அழிவுகள்..

 

ஜே ஆர் ஜெயவர்த்தனா - 10 ஆண்டுகள்.

 

*நிராயுத பாணிகளாக நின்ற தமிழர்களைப் பார்த்து போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று முழங்கியவர்.

 

* 1983 இனக்கலவரம். * யாழ் நூலக எரிப்பு. * வடக்குக்கிழக்கில் இராணுவ இருப்பை அதிகரித்தது. * விசேட அதிரடிப்படையை உருவாக்கி வடக்குக் கிழக்கில் சேவையில் விட்டது. * யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கைதும்.. பொதுமக்களை பலி கொண்ட பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிகழ்த்தியமை. * தென்னிலங்கை நோக்கி பயணித்த வடபகுதி மக்களை குறிவைத்து அனுராதபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல பேரூந்துப் படுகொலைகள். * கிழக்கில் மகாவலி.. அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள குடியேற்றத்தை ஊக்குவித்தமை. * இந்திய - இலங்கை ஒப்பத்தம் என்ற பொறியில் சிக்க வைத்து தமிழர் - இந்திய முரண்பாட்டை உருவாக்கி தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இந்திய எதிர்ப்பு என்ற எல்லைக்குள் கொண்டு வந்து அதனை அழிக்க கால்கோளிட்டமை. *முதலாம் கட்ட ஈழப்போர் மற்றும் இந்திய - புலிகள் மோதலின் சூத்திரதாரி. *பன்னிரு வேங்கைகள்.. திலீபன் உட்பட்டோரின் வீரமரணங்களுக்கு காரணமானவர். * தமிழர் மீது விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் வீச்சு தாக்குதல்களை ஆரம்பித்து வைத்தவர்.

 

*இஸ்ரேலிய மொசாட்.. அமெரிக்க இராணுவ ஆதரவு.. இந்திய படைப் பயிற்சி.. பாகிஸ்தான் இராணுவ நேரடித் தலையீடு..சீன உதவிகளோடு ஒப்பரேசன் லிபரேசன் என்ற பேரழிவு இராணுவத் தாக்குதலை தமிழர்களின் நிலத்தில் ஆரம்பித்து வைத்து வடமராட்சியில் இராணுவ ஆக்கிரமிப்பை விஸ்தரிக்க முற்பட்டவர். இதன் போது பொதுமக்கள் பலர் கொல்லப்பட காரணமாக இருந்ததோடு... லலித் அத்துலத் முதலி மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் வழித்துணையோடு தமிழர்கள் அகதிகளாக இருந்த இந்துக் கோவில்கள் மீதும் விமானத்தாக்குதலை நடத்தியவர். யாழ் வண்ணார் பண்ணை சிவன் கோவில் மீதான தாக்குதல் உட்பட.

 

ஆர். பிரேமதாச  -  4 ஆண்டுகள் (அவர் கொல்லப்பட்டிருக்காவிட்டால் அது 10 என்று நீண்டிருக்கும்.)

 

* தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியமை. * புலிகளை புலிகளைக் கொண்டே அழிக்க ஆயுதங்களை வழங்க முன் வந்தமை. * ஜே வி பி இளைஞர்களை பச்சைப்புலிகள் என்ற இராணுவ பயங்கரவாத அமைப்பை வைத்து கொன்று குவித்தமை. பல படுகொலைகளை அரங்கேற்றியமை.. குறிப்பாக உடுகம்பொல தலைமையில். * டக்கிளஸ் தேவானந்தாவை வெறும் 10..15 வாக்குகளோடு தீவகத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக்கி மகிழ்ந்தமை. * கிளாலி ஏரியில் பயணித்த தமிழ் மக்களைப் படுகொலை செய்தமை. *2ம் கட்ட ஈழப்போரை தமிழர்கள் தலையில் திணித்தமை. * யாழ் கோட்டை முற்றுகையுடன் யாழ் நகரை பல்வேறு வகையிலும் அழித்தமை. * பீ குண்டு.. பீப்பா குண்டு போன்ற குண்டு வீச்சு முறைகளை சிறீலங்கா விமானப்படையை கொண்டு அறிமுகப்படுத்தி வைத்தமை. * ஆகாய கடல் வெளி சமரின் தோல்விக்கு காரணமானவர்.

 

* தமிழ் - முஸ்லீம் மக்களிடையே கிழக்கில் அமைதியற்ற சூழலை உருவாக்கி அதனை அரசியலாக்கி தமிழ் மக்களை முஸ்லீம்களை கொண்டு கிழக்கில் இருந்து விரட்டி அடித்தவர். அதே சூழலை வடக்கிலும் கொண்டு வர முனைந்ததோடு.. 1990 யாழ்ப்பாண முஸ்லீம் இடம்பெயர்வுக்கு முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்.

 

டிங்கிரி பண்டா விஜயதுங்க-  (1 ஆண்டு)

 

* சிறுபான்மை மக்கள் சிங்களவர்களாகிய பெரு விருட்சத்தை சுற்றிப் படர்ந்து வாழும் கொடிகள் என்று சிறுபான்மை இன மக்களை இழக்காரமாகக் கருதியவர். * யாழ்ப்பாணத்தில் என்ன இருக்கு.. வெங்காயமும்.. பனையும் தானே என்று யாழ்ப்பாணம் பற்றி குறை மதிப்பை வெளியிட்டவர். பிரேமதாசவை தொடர்ந்து வந்து இரண்டாம் கட்ட ஈழப்போரை தொடர்ந்து முன்னகர்த்தியவர்...  யாழ் தேவி இராணுவ நடவடிக்கை மூலம் பேரழிவுகளை உண்டாக்க முனைந்தவர். கிளாலி ஏரி படுகொலைகள் சிலவற்றோடும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

 

சந்திரிக்கா பண்டார நாயக்கா விஜய குமாரதுங்கா அம்மையார் - (10 ஆண்டுகள்) * 1995 இல் மாமனார் அனுரத்த ரத்வத்தையுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு 3ம் ஈழப் போரை ஆரம்பித்து வைத்தமை. * யாழ்ப்பாண ஆக்கிரமிப்பை ரிவிரெச இராணுவ நடவடிக்கை மூலம் கொண்டு வந்தவர். * வன்னியை ஆக்கிரமிக்க பல போர் செய்தவர். * ஆசியாவிலேயே நீண்ட முற்றைகைப் போரான ஜெயசிக்குறு போரை நடத்தியவர். * நவாலி தேவாலயம், நாகர்கோவில் பள்ளிக் குழந்தைகள், புதுக்குடியிருப்பு சந்தை, மடு அகதி முகாம், நாவற்குழி இடம்பெயர்ந்தோர் இடைத்தங்கல் முகாம், தென்மராட்சி சங்கத்தானை, யாழ் உதயன் பத்திரிகை ஸ்தாபனம், செம்மணி என்று பல படுகொலைகளுக்கு சொந்தக்காரர். * யாழ் 1995 பெரும் இடம்பெயர்வுக்கு காரணமானவர். * மாங்குளம் புலிகளிடம் இருந்து  வீழ்ச்சி கண்டதோடு.. வெற்றிக்கேடயங்கள் வழங்கி ஒரு சிங்கள மன்னர் போல செயற்படும் பாரம்பரியத்தை கொண்டு வந்தவர். *கிளிநொச்சி தொடங்கி மாங்குளம்..வரை..வன்னியில் பெரும்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர். * முல்லைத்தீவு இராணுவ முகாமை தக்க வைக்க தவறியதோடு பெரும் இராணுவ அழிவுக்கு வித்திட்டவர். * அதேபோல்.. ஓயாத அலைகள் என்ற புலிகளின் எதிர் இராணுவ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து இராணுவப் பேரழிவுகளை தனதாக்கி கொண்டவர்.

 

* தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சர்வதேச தடைகள் வர காரணமாக இருந்தவர். அதற்காக லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை வெளிவிவகார மந்திரியாக்கி அவர் மூலம்.. இந்திய - சீன - பாகிஸ்தான் நலன் சார்ந்து பிராந்தியத்தில் சர்வதேச தலையீடுகளுக்கும் ஒரு பாதுகாப்பு வியூகத்தையும் அமைக்க கற்றுக் கொண்டவர். அதன் கீழ் சிங்களப் பேரினவாத நலன்களை பாதுகாக்கும் பொறிமுறையை வகுத்தவர்.

 

* சம்பந்தன் - நீலன் திருச்செல்வம் - அஷ்ரப் - பீரிஸ் போன்றவர்களுடம் சேர்ந்து தீர்வுப்பொதி என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியவர். அந்த நாடகம் இறுதியில் தீர்வுப் பொதி  நாடாளுமன்றில் வைத்து ஐ. தே. கட்சியால் தீயிடப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.

 

* கொலன்னாவை எண்ணை குத தாக்குதல்.. கொழும்பு மத்திய வங்கி தாக்குதல்.. கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் என்று தென்னிலங்கையின் பொருண்மிய மையங்களை நோக்கி புலிகளின் தாக்குதல்கள் விரிவுபட காரணமாக இருந்தவர்.

 

* யாழ் ஆக்கிரமிப்போடு  மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்தழித்தவர். அதற்கு பதிலடியாக சிங்கள பெளத்தர்களின் புனித வழிபாட்டிடமாகக் கருதப்படும் தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட வித்திட்டவர்.

 

* குண்டு தாக்குதல் ஒன்றில் ஒற்றைக்கண்ணை இழந்தவர்.

 

* நாலாம் கட்ட ஈழப்போரை கடலில் வைத்து விடுதலைப்புலிகளின் கப்பல்களை அழிப்பதோடு ஆரம்பித்து வைத்தவர். சமாதான காலத்திலும்..சம்பூரில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது அடாத்தாக விமானத்தாக்குதல்களை நடத்தியவர்.

 

(இன்றும் பலர் எழிலனும்.. மாவிலாறு அணை கதவடைப்பும்.. ஈழப்போர் 4 க்கு காரணம் என்றிருக்கிறார்கள். அது உண்மையல்ல. ஈழப்போர் 4 ஐ உத்தியோகபூர்வமற்ற வகையில் தொடக்கி வைத்தது அம்மையார் சந்திரிக்கா. அது கடலில் தொடங்கி.. தரைக்கு நகர்த்தப்பட்டது. இதில் ரணில் விக்கிரமசிங்கவின் புலிகளை பலவீனப்படுத்தும் ராஜதந்திர - சர்வதேச கூட்டுச் சதியும் அவருக்கு உதவியது. கருணா என்ற துரோகி உட்பட சிலர் அந்தச் சதிக்கு கூட்டாக இருந்து செயற்பட்டார்கள்.)

 

மகிந்த ராஜபக்சே - (கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்)

 

* கிழக்கு மாகாணத்தை முழுவதுமாக இராணுவ ரீதியில்.. ஆக்கிரமித்தவர். இறுதியாக வடக்கையும் முழுமையாக ஆக்கிரமித்தார். * முள்ளிவாய்க்கால் பேரழிவு இனப்படுகொலையை நடத்தினார். * வன்னி மக்களை பெரும் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைத்து ஆயிரக்கணக்கில் படுகொலைகளை அரங்கேற்றினார்.* ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை ரகசிய சிறையில் அடைத்தார் * தமிழர்கள் இராணுவ ரீதியில் செயலிழக்கச் செய்யப்பட இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டார். * இந்தியாவின் நம்பிக்கைக்கும் நட்புக்கும் உரிய ஒருவராக இருந்து தமிழர்களை அழித்தார். * லக்ஸ்மன் கதிர்காமர் காட்டிக்கொடுத்த.. இந்திய - சீன - பாகிஸ்தான்.. நலன் சார் பூகோள இராணுவ பொருண்மிய அரசியலை மையப்படுத்தி சிறீலங்காவைச் சுற்றி சர்வதேச நலன்களை.. சிங்கள பெளத்த பேரினவாத நலன்களை தக்க வைக்கும் முறைமையை வலுப்படுத்தினார்.

 

* தமிழ் ஆண்கள் இந்து சமுத்திரத்துக்கு தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்துக்கு என்று முழங்கிய.. இவர் தம்பி கோத்தபாய ராஜபக்சவை கொண்டு.. முள்ளிவாய்க்காலில் ஒரே வாரத்தில் 40,000 மக்களை கொன்று குவிக்கவும்.. அதன் பின்னர் பல ஆயிரம் பேரை நிர்வாணப்படுத்தி கொல்லவும் காரணமாக இருந்தவர். *பல சிங்கள இராணுவத் தலைமைகளை அவற்றின்..மிலேச்சத்தன மனித இன விரோதச் செயற்பாடுகளை இன்றும் பாதுகாக்க முற்படுபவர். *போர் குற்ற விசாரணை நோக்கிய நகர்வுகளுக்குள் சிக்கி உள்ள முக்கிய சிங்களத் தலைவர்.

 

* மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக தடயங்கள் இன்றி..இடித்தழித்தவர். போரில் மரணம் அடைந்த தமிழர்களை நினைவு கூறுவது கூட இவருக்கு அருவருக்கத்தக்க நிகழ்வுகளாக உள்ளது.

 

* போர் வெற்றியின் பின் சிங்கள இராணுவத்தை ஏவி தமிழர்களின் நிலங்களை தொடர்ச்சியாக பறித்து வருவதோடு.. புத்த ஆலயங்களை தமிழர்கள் பகுதி எங்கும் நிறுவி உள்ளார். இராணுவ வெற்றி நினைவுச் சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன.

 

ஆக மொத்தத்தில்.. எல்லா சிங்கள ஜனாதிபதிகளும்.. தொடர்ச்சியாக தமிழர்களைக் கொன்றொழிப்பதில்.. இருந்தும்.. அடிமைப்படுத்தி வைத்திருப்பதில் இருந்தும்.. ஒருபோதும் தவறவில்லை..!! எனியும் தவற மாட்டார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவனிக்க வேண்டிய விடயம்.. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் சிலரை பதவியில் இருந்து அகற்றிய பெருமை புலிகளைச் சாரும்.

-----

 

அதற்கு சாட்சியாக, இப்போதும் ஒருவர்.... ஒரு கண்ணுடன் திரிகிறார். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.