Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து, இந்தியா முத்தரப்பு தொடர் செய்திகள்

Featured Replies

cricket_logo_zpsb0dcf8a5.jpg          ecb-logo_zps1ff028ae.jpg       index_zps8f6e19e6.jpg

 

 

 

ஆஸ்திரலியா  எதிர்  இங்கிலாந்து                16 ஜனவரி  சிட்னி

 

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா                      18 ஜனவரி   மெல்போர்ன்

 

இங்கிலாந்து    எதிர்  இந்தியா                        20 ஜனவரி  பிரிஸ்பேன்

 

ஆஸ்திரேலியா  எதிர்  இங்கிலாந்து             23 ஜனவரி  ஹோபார்ட்

 

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா                      26 ஜனவரி    சிட்னி

 

இங்கிலாந்து    எதிர்  இந்தியா                       30 ஜனவரி   பேர்த்

 

இறுதி போட்டி                                                  01 பிப்ரவரி  பேர்த்

  • தொடங்கியவர்

முத்தரப்பு தொடரில் அசத்துமா இந்தியா: ஆஸி., – இங்கிலாந்து இன்று மோதல்
ஜனவரி 15, 2015.

 

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்து வரவுள்ள உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி முழுவீச்சில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னியில் இன்று நடக்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.              

   

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல், உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனால் முத்தரப்பு தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர், உலக கோப்பைக்கான ஒத்திகையாக கருதப்படுகிறது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், உலக கோப்பையிலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.     

      

பைனல் எப்போது: முத்தரப்பு தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். இதன் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் பிப்., 1ல் பெர்த்தில் நடக்கும் பைனலில் மோதும்.           

இந்தியா வாய்ப்பு: முத்தரப்பு தொடருக்கு முன், இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், இந்தியா தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டிகளில் ‘நடப்பு உலக சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்குவதால், வெற்றியை எளிதில் விட்டுக் கொடுக்காது. டெஸ்ட் தொடரில் விளையாடிய கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், அஷ்வின் உள்ளிட்டோர் முத்தரப்பு தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், மைதான அனுபவம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதுமானது. அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோஹ்லி, ரகானே என இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. டெஸ்ட் தொடரில் கண்ட தோல்வியை மறந்து, இந்திய வீரர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், முத்தரப்பு தொடரை கைப்பற்றி, உலக கோப்பையில் முழு நம்பிக்கையுடன் களமிறங்கலாம்.      

 

     

கிளார்க் காயம்: ஆஸ்திரேலிய அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முத்தரப்பு தொடரில் விளையாடமாட்டார். இதனால், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, அணியை வழிநடத்துவார். இவருக்கு, ஸ்டீவன் ஸ்மித் துணைக் கேப்டனாக ஒத்துழைப்பு கொடுப்பார். ‘பேட்டிங்கில்’ டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் சிறந்த துவக்கம் தரலாம். ‘மிடில்–ஆர்டரில்’ வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், பெய்லி, மேக்ஸ்வெல், பிராட் ஹாடின் என நீண்ட வரிசை இருப்பது பலம். உலக கோப்பையில் மைக்கேல் கிளார்க் அணியில் இணையும் பட்சத்தில், பேட்டிங் கூடுதல் வலு பெறும். தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மிட்சல் மார்ஷ் விளையாடுவது சந்தேகம். மிட்சல் ஜான்சன், ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், தோகர்டி அல்லது குரிந்தர் சாந்து வாய்ப்பு பெறலாம். ‘ஆல்–ரவுண்டராக’ ஜேம்ஸ் பால்க்னர், மேக்ஸ்வெல் அசத்தலாம்.           

 

 

குக் இல்லை: இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக், முத்தரப்பு மற்றும் உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் கேப்டன் பொறுப்பு இயான் மார்கனுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சியில் இயான் பெல் 187 ரன்கள் எடுத்து நல்ல ‘பார்மில்’ உள்ளார். ‘பேட்டிங்கில்’ மொயீன் அலி, ஜேம்ஸ் டெய்லர், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ‘ஆல்–ரவுண்டராக’ ரவி போபரா நம்பிக்கை தரலாம். வேகப்பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஸ்டீவன் பின் என நீண்ட படை மிரட்ட காத்திருக்கிறது. முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம். அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லாதது பின்னடைவு. இருப்பினும் ஜேம்ஸ் டிரட்வெல், மொயீன் அலி ஆறுதல் தரலாம்.           

 

முதல் மோதல்: சிட்னியில் இன்று நடக்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

 

எட்டாவது முறை                 

இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக 8வது முறையாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முன்னதாக பங்கேற்ற 7 தொடர்களில், இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டும் கோப்பை வென்றது. கடந்த 2007–08ல் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடன் விளையாடியது. சிட்னி, பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதன்முறையாக கோப்பை வென்றது. இரண்டு பைனலிலும் இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், முறையே 117*, 91 ரன்கள் எடுத்தார். ஆறு முறை (1980–81, 85–86, 91–92, 99–2000, 2003–04, 11–12) ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.

 

 

 

http://sports.dinamalar.com/2015/01/1421327554/IndiaAustraliaEnglandTriSeriesCricket.html

  • தொடங்கியவர்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட மோர்கன் சதம்
 

 

சிட்னியில் நடைபெற்று வரும் கார்ல்டன் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட் செய்து இங்கிலாந்து 50 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 121 ரன்கள் எடுத்ததனால் மரியாதைக்குரிய ஒரு ரன் எண்ணிக்கையை எட்ட முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜ் பெய்லி கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டாஸ் வென்று பேட்டிங் என்றவுடன் முதல் பந்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்து அபாரமான இன்ஸ்விங்கராக அமைய நிலைகுலைந்த இயன் பெல் கால்காப்பில் வாங்கினார். நடுவர் கையை உயர்த்தினார்.

அதே ஓவரின் 3-வது பந்தில் ஜேம்ஸ் டெய்லர், இயன் பெல்லுக்கு வீசப்பட்ட அதே பந்தில் நேராக வாங்கி 0-வில் அவுட் ஆனார். 3 பந்துகளில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளைச் சாய்க்க அதிர்ச்சியடைந்தது இங்கிலாந்து.

 

ஜோ ரூட் ஒரு பவுண்டரி அடித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் டிரைவ் ஆடக்கூடிய லெந்த்தில் கமின்ஸ் வீசிய அந்தப் பந்து விழ ஜோ ரூட் டிரைவ் ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் வாட்சனிடம் கேட்ச் ஆனது. இங்கிலாந்து 12/3 என்று ஆனது.

தொடக்க வீரர் மொயீன் அலி இதற்கிடையே மிட்செல் ஸ்டார்க் வீசிய ஃபுல் லெந்த் பந்தை லெக் திசையில் பிளிக் செய்து ஒருசிக்சரையும் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்த மொயீன் அலி 22 ரன்கள் எடுத்து டீப் எக்ஸ்ட்ரா கவரில் அவருக்கென்றே நிறுத்தப்பட்ட மேக்ஸ்வெல் கையில் குறிபார்த்து அடித்தார். பாக்னர் அப்படி அடிக்குமாறு வீசினார். இப்படி, பொறியில் சிக்கி மொயீன் அலியும் வீழ்ந்தார்.

 

அதன் பிறகு பொபாரா, மோர்கன் இணைந்து ஸ்கோரை 69 ரன்களுக்கு உயர்த்தினர். பொபாரா 13 ரன்கள் எடுத்த நிலையில் இடது கை ஸ்பின் பவுலர் டோஹெர்ட்டியின் பந்தை கட் செய்ய முயன்று பேக்வர்ட் பாயிண்டில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார். 16-வது ஓவரில் இங்கிலாந்து 69/5 என்று ஆனது.

பிறகு ஜோஸ் பட்லரும், மோர்கனும் இணைந்தனர். இருவரும் இணைந்து 19 ஓவர்களில் 67 ரன்களை மேலும் சேர்த்தனர். ஜேவியர் டோஹெர்ட்டி அபாரமான சிக்கனத்துடன் வீசி வந்தார். அவர் 10 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

 

ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். இதில் பவுண்டரிகளே இல்லை. அவர் கடைசியில் ரன் விகிதத்தை உயர்த்துவதற்காக கவர் திசையில் தூக்கி அடித்து வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 136/6 என்ற நிலையில் மோர்கன் 58 ரன்களில் இருந்தார். கடைசியில் 127 பந்துகளில் மோர்கன் சதம் கண்டார். கடந்த 20 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவரது முதல் சதமாகும் இது. ஒருநாள் போட்டிகளில் அவரது 6-வது சதம் இது. அடுத்த 9 பந்துகளில் மோர்கன் 21 ரன்களை எடுத்து 136 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும்.

 

கிறிஸ் ஜோர்டான் 17 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48-வது ஓவரில் ஆல் அவுட் ஆனது.

ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். ஜேம்ஸ் பாக்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலக்கைத் துரத்தி வரும் ஆஸ்திரேலியா தற்போது 10 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 33 ரன்களுடனும், வாட்சன் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6793663.ece

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து தோல்வி.. :D

  • தொடங்கியவர்

வார்னர் சதத்தினால் போனஸ் புள்ளிகளுடன் வென்ற ஆஸ்திரேலியா

 

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெற்றிக்குத் தேவையான 235 ரன்கள் இலக்கை 40 ஓவர்களில் எட்டியதால் ஆஸ்திரேலிய அணி போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் 115 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்தார்.

ஏரோன் பின்ச் 15 ரன்களிலும் வாட்சன் 16 ரன்களிலும் ஜார்ஜ் பெய்லி 10 ரன்களிலும் ஹேடின் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அவசர கதியில் 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. ஆனாலும் போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற முடிந்தது.

 

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஜோர்டான், மொயீன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். பிராட் ஹேடின் பொபாராவிடம் ரன் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணிக்கு 5 புள்ளிகள் கிடைத்துள்ளது.

 

இங்கிலாந்து எடுத்த 234 ரன்கள் என்பது இந்த சிட்னி பிட்சிற்கு எந்த நிலையிலும் போதாது. ரன்களும் போதவில்லை. இங்கிலாந்தின் பவுலிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஒன்று வைட் ஆஃப் ஸ்டம்பில் வீசினர் அல்லது லெக் திசையில் வீசி வார்னருக்கு சிலபல எளிதான பவுண்டரிகளை கொடுத்தனர். அவர் இருக்கும் பார்முக்கு அத்தனை பரிசுகளையும் பவுண்டரிகளாக மாற்றினார்.

 

6-வது ஓவரில் ஸ்டீவ் ஃபின் தன் பந்து வீச்சில் ஏரோன் பின்ச்சிற்கு தானே கேட்ச் ஒன்றைக் கோட்டைவிட்டார். ஆனால் பின்ச் நீண்ட நேரம் நீடிக்கவில்லை அவர் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்தை பேக்ஃபுட் பன்ச் ஆட முயன்று பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார்.

வார்னர் தளர்வான ஃபின் பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்தி விளாச, ஃபின் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒவ்வொரு பவுலரும் வார்னரின் பலத்திற்குப் பந்து வீசினர். அவரை அசவுகரியப் படுத்தவே இல்லை. தொடக்கத்திலேயே மொயீன் அலியின் ஆஃப் ஸ்பின்னை வார்னரை சந்திக்க வைத்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு புதிய முயற்சியையும் இங்கிலாந்து கேப்டன் செய்யவில்லை.

 

16 ரன்கள் எடுத்த வாட்சன், கிறிஸ் ஜோர்டான் வீசிய ஷாட் பிட்ச் பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம் ஆனால் மிட்விக்கெட்டில் அடிக்க பந்து உயரே எழும்ப வோக்ஸ் அதனை சில அடிதூரம் ஓடிப் பிடித்தார்.

ஸ்டூவர் பிராட் ஓவர்க்கு 7 ரன்கள் வீதம் கொடுத்து வந்தார். கடைசி வரையில் அவர் 7 ஓவர்களை வீசி ஓவருக்கு 7 ரன் விகிதம் என்ற அடிப்படையில் ரன்களை விட்டுக் கொடுத்து வந்தார். அவரது பந்து வீச்சு இன்று எதிர்பார்ப்பிற்கு இணங்க இல்லை என்பதே இங்கிலாந்தின் ஒரு பெரிய சங்கடம். 8 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் வார்னர் அரை சதம் எடுத்தார்.

 

ஸ்மித் களமிறங்கி அவரது டெஸ்ட் ஃபார்மை தொடர்ந்தார். மொயீன் அலியை இறங்கி வந்து சிக்ஸர் அடித்தார். 47 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சரருடன் 37 ரன்கள் அடித்த அவர் மொயீன் அலி பந்தை இன்சைட் அவுட் ஷாட் ஆட முயன்று பந்தைக் கோட்டைவிட்டு பவுல்டு ஆனார்.

34-வது ஓவரில் வார்னர் மீண்டும் மொயீன் அலி வீசிய லெக் திசைப் பந்தை பவுண்டரி அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3-வது சதத்தை எடுத்து முடித்த்தார்.

பவர் பிளேயில் அதன் பிறகு 50 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது. போனஸ் புள்ளிகளுக்காக ஆடியதால் கடைசியில் 4 விக்கெட்டுகளை சடுதியில் இழந்தது. ஆனாலும் கடைசியில் பாக்னர் 2 ரன்களை அடிக்க ஆஸ்திரேலியா 40 ஓவர்களில் இலக்கை எட்டி போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றது.

மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரில் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீளவில்லை என்றே அந்த அணியின் இந்தத் தோல்வி எடுத்துரைக்கிறது.

ஆட்ட நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.

ஞாயிற்றுக் கிழமை (ஜன.18) ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6793922.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்து தோல்வி.. :D

 

படுதோல்வி :lol:  கிட்டி பொல்லு தான் சரி இங்கிலாந்து அணிக்கு :o

 

  • தொடங்கியவர்

ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் இஷாந்த், ஜடேஜா இல்லை: தோனி
 

 

மெல்போர்னில் நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா விளையாட மாட்டார்கள் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

 

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் நாளை மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன.

“இந்தத் தொடரில் எங்களுக்கு முக்கியமானது என்னவெனில் உலகக்கோப்பைக்கான அணிச் சேர்க்கையை உருவாக்குவதே. அதே வேளையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ள வீரர்களை விளையாட வைத்து அவர்கள் காயம் பெரிதடைவதை விரும்பவில்லை. அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து அவர்கள் 80 அல்லது 90% உடற்தகுதியை உறுதி செய்வது இப்போதைய நோக்கமாகும்.

 

சில வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லை, நாங்கள் அவர்கள் உடற்தகுதி முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறோம். இதனால், நாளைய போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா விளையாட மாட்டார்கள், அவர்களது பணிச்சுமையை நாங்கள் நிர்வகிக்கவே இந்த முடிவு.

வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது முக்கிய ஆயுதங்களான யார்க்கர்கள், பவுன்சர்களை துல்லியமாக வீசுவது அவசியம், அந்த ஒரு பகுதியைக் குறிவைத்து பயிற்சி செய்து வருகிறோம். யார்க்கர்களை நன்றாக வீசி வருகின்றனர். ஆட்டத்தில் அது சரியாக அமைந்தால், நமக்கு அது திருப்திகரமாக அமையும்.”

இவ்வாறு கூறினார் தோனி.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6796797.ece

  • தொடங்கியவர்

ரோஹித் சதத்தின் துணையுடன் இந்தியா 267 ரன்கள் சேர்ப்பு
 

 

மெல்போர்னில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இந்தியா 268 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் ரோஹித் சர்மா சதமடித்து, மெல்போர்ன் மைதானத்தில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரோஹித் சர்மா, தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரின் 5-வது பந்திலேயே 2 ரன்களுக்கு தவான் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த ரஹானே 12 ரன்களுக்கும், கோலி 9 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 13-வது ஓவர் முடிவில் இந்தியா 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

அடுத்து களமிறங்கிய ரெய்னா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சீராக ரன் சேர்க்கத் தொடங்கினர். ரோஹித் சர்மா, 68 பந்துகளில் தன் அரை சதத்தைக் கடந்தார். ரெய்னா 61 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

ஸ்டார்க் வீசிய பந்தில் 51 ரன்களுக்கு ரெய்னா பெவிலியன் திரும்பினார். ரெய்னா - ரோஹித் சர்மா ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 126 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ரோஹித் சர்மா 109 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் சதத்தை எட்டினார்.

பேட்டிங் பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி ரன் சேர்ப்பை விட, விக்கெட் இழக்காமல் ஆடுவதிலேயே கவனம் செலுத்தியது. ஸ்டார்க் வீசிய 45-வது ஓவரில் தோனி 19 ரன்கள் வீழ்ந்தார், தொடர்ந்து வந்த அக்‌சர் படேல் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகளால் இந்திய அணியின் ஸ்கோர் சேர்ப்பு வேகம் குறைந்தது.

 

49-வது ஓவரில் ரோஹித் சர்மா 138 ரன்களுக்கு ஸ்டார்க் வீசிய ஃபுல்டாஸ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது ஸ்டார்க்கின் 5-வது விக்கெட்டாகவும் அமைந்தது. அடுத்து ஆட வந்த புவனேஸ்வர் குமார் முதல் பந்திலேயே ஸ்டம்பைப் பறிகொடுத்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களை எடுத்தது. ஆஸ்திரெலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-267-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6799045.ece

  • தொடங்கியவர்

இந்தியாவை தடுமாறி வீழ்த்தியது ஆஸ்திரேலியா
 

 

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி இலக்கான 268 ரன்களை அந்த அணி 49 ஓவர்களில் சற்று தடுமாறியே எட்டியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் - ஃபின்ச் ஜோடி சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். 9-வது ஓவரிலேயே ஆஸி. 50 ரன்களை எட்டியது. ஆனால் 10-வது ஓவரில் வார்னர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாட்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகமாக ரன் குவித்து வந்த வாட்சன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஃபின்ச் 80 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

 

தொடர்ந்து ஆடிய ஸ்மித் - ஃபின்ச் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 101 ரன்களைக் குவித்தது. ஆஸி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டே வந்தது. 40-வது ஓவரில் ஷமியின் பந்தில் ஸ்மித் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 96 ரன்களுக்கு உமேஷ் யாதவ்வின் வேகத்தில் வீழ்ந்து சதத்தை தவறவிட்டார்.

அஸ்வினின் சுழலில,் வந்த வேகத்திலேயே 5 ரன்கள் மட்டுமே எடுத்து பெய்லி பெவிலியன் திரும்ப, ஆஸி. 230 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களத்தில் இணைந்த ஹாட்டின், மேக்ஸ்வெல் ஜோடியே ஆஸி. வெற்றி வழிவகுக்க வேண்டும் என்ற நிலையில், மேக்ஸ்வெல் அஸ்வின் வீசிய ஓவரில் 11 ரன்கள் குவித்தார்.

36 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 45-வது ஓவரில் 1 ரன் மட்டுமே வந்தது. அடுத்த அக்சர் படேல் ஓவரில் 6 ரன்கள் வர புவனேஸ்வர் குமார் வீசிய 47-வது ஓவரில் முதல் 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் போன மேக்ஸ்வெல், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு அந்த ஓவரில் ரன் ஏதும் வராமல் போக 18 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்று நிலை மாறியது

 

அக்சர் படேல் வீசிய 48-வது ஓவரிலும் ஆஸி. வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். மேலும் 5 ரன்கள் மட்டுமே வர 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. 6 பந்துகளை சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஃபால்க்னர், 49-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். முக்கியமான 4 ரன்களை ஃபால்க்னர் சேர்க்க, அடுத்த இரண்டு பந்துகளில் ஹாட்டின் ஒரு பவுண்டரி எடுத்தார். 8 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட, ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகில் சென்றது.

49-வது ஓவரின் கடைசி பந்தில் ஃபால்க்னர், பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கைக் தாண்டியது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

ஆஸி. எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்து, கடைசி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனால் இந்திய அணியால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. கடைசி ஓவர்களில் இருந்த சிறப்பான பந்துவீச்சு ஆரம்பத்திலேயே இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து.

இந்த முத்தரப்புத் தொடரின் அடுத்த ஆட்டத்தில் இந்திய இங்கிலாந்தை ஜனவரி 20-ஆம் தேதி சந்திக்கிறது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6799185.ece

  • தொடங்கியவர்

ஆஸி. கேப்டன் பெய்லிக்கு ஒரு போட்டியில் ஆடத் தடை, டேவிட் வார்னருக்கு அபராதம்
 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸி. வீரர் டேவிட் வார்னருக்கு, அவரது ஆட்டத் தொகையில் 50 சதவீதம் அபராதம் விதிகப்பட்டுள்ளது.

 

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், ஆஸி. அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என ஆட்ட நடுவர்களால் புகார் எழுப்பப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில், ஆஸி. அணி மீது இத்தகைய புகார் வருவது இது இரண்டாவது முறை என்பதால், விதிகளின் படி, அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், ஆட்டத் தொகையில் 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முத்தரப்புத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் ஜார்ட் பெய்லி விளையாடமாட்டார்.

 

மேலும் அணியிலுள்ள மற்ற வீரர்களுக்கும், அவர்களது ஆட்டத் தொகையில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர்கள் வந்து சமரசம் செய்யும் வரை இது நீண்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. ஐசிசி விதிமுறைகளின் படி, ஆட்டத்தின் போக்குக்கு தடை ஏற்படும் வகையில் வீரர் நடந்து கொண்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே ஆஸி. வீரர் டேவிட் வார்னருக்கு, அவரது ஆட்டத் தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6801945.ece

  • தொடங்கியவர்

இந்தியாவை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இங்கிலாந்து

 

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 3-வது ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலுமே இந்திய அணியை ஒன்றுமில்லாமல் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இயன் பெல் 91 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஜேம்ஸ் டெய்லர் 63 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ, இங்கிலாந்து 27.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போனஸ் புள்ளியுடன் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி மட்டுமே 8 ரன்களில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 25/1. அதன் பிறகு பெல், ஜேம்ஸ் டெய்லரை இந்தியாவின் மந்தமான, எந்த வித இலக்குமற்ற பந்துவீச்சினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

 

மொத்தமே 70 ஓவர்களுக்குள்ளாக ஆட்டம் முடிந்து விட்டது. மிகவும் ஒருதலைபட்சமான ஆட்டமாக முடிந்தது. பந்துகள் மீதமுள்ள வகையில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியதில் இதுதான் அந்த அணியின் மிகப்பெரிய வெற்றி.

மீண்டும் ஒருமுறை லேசான பவுன்ஸ் இருந்தால் கூட இந்திய பேட்டிங் சரிவு கண்டுவிடும் என்பதற்கு இந்த ஒருநாள் போட்டி ஒரு உதாரணமாகத் திகழ்ந்துள்ளது.

 

 

ஃபின், ஆண்டர்சன் வேகத்தில் சுருண்ட இந்தியா:

முதலில் ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டீவன் ஃபின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய தரப்பில், அதிகபட்சமாக, பின்னி 44 ரன்களைக் குவித்தார். 6 இந்திய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சென்ற போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா, காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் அஸ்வினுக்கு பதிலாக ரோஜர் பின்னி இன்று ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.

ரஹானே, தவான் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். தொடந்து இந்தத் தொடரில் சொதப்பி வரும் தவான், இன்றும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே - ராயுடு ஜோடி சற்று நிதானித்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர்.

 

 

ஆனால் 15-வது ஓவரில் இந்த இணையை ஸ்டீவன் ஃபின் உடைத்தார். ரஹானே 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கோலி 4 ரன்களுக்கும், ரெய்னா 1 ரன் எடுத்தும், நன்றாக ஆடி வந்த ராயுடு 23 ரன்களுக்கும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

தோனியுடன் களத்தில் இணைந்த பின்னி சூழல் புரிந்து நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தார். இருவரும் இணைந்து 70 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். 37-வது ஓவரில் ஃபின் வீசிய பந்தில் தோனி (34 ரன்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே அக்சர் படேல் வீழ்ந்தார்.

ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டு ஓவர்கள் கழித்து, ஆண்டர்சனின் வேகத்திற்கு பின்னி மற்றும் ஷமி அடுத்தடுத்து பலியாயினர். 40 ஓவர்களைக் கூட ஆட முடியாத இந்திய அணி, 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6804942.ece

  • தொடங்கியவர்

'இந்தியில் பேசாதே": சர்மாவை சீண்டிய வோர்னருக்கு அபராதம்
 

இந்தி மொழியில் பேச வேண்டாம் என இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர் வோர்னருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தியா- அவுஸ்திரேலியா இடையேயான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் ரோஹித் சர்மாவிடம் வந்த டேவிட் வார்னர் ஏதோ கூறினார்.

 

இதற்கு ரோஹித் சர்மாவும் ஏதோ ஒன்ழற கூறினர். இதன்போது நடுவரும் உடன் இருந்த சுரேஷ் ரெய்னாவும் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மோதலில் ஈடுபட்டதற்காக அவுஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட் வீரர் டேவிட் வோர்னருக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.

இது கருத்து தெரிவித்துள்ள டேவிட் வோர்னர், ரோஹித் சர்மா தனது மொழியில் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். அதனால் ஆங்கிலத்தில் பேசுமாறு அவரிடம் தெரிவித்தேன். ஏனெனில் எனக்கு இந்தி பேச தெரியாது. சிலமுறை இதை சொல்லியும் தொடர்ந்து அவர் இந்தியில் தான் பேசினார் என்றார்.

 

 

http://www.virakesari.lk/articles/2015/01/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

பேட்ஸ்மென்களின் தோல்வி: தோனி சாடல்
 

 

பிரிஸ்பேன் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் சவாலின்றி சரணடைந்த இந்திய அணியின் தோல்வி குறித்து தோனி பேட்ஸ்மென்களை சாடியுள்ளார்.

பிரிஸ்பேன் போட்டியில் இந்தியா இன்று மீண்டும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு சரண் அடைந்து 153 ரன்களுக்குச் சுருண்டது.

ஸ்டீவ் ஃபின், இவர் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக வீச முடியாமல் திணறினார். ஆனால் இன்று இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக எழுச்சி பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஜேம்ஸ் ஆண்டர்சன், கையும் நகராது, காலும் நகராத ஷிகர் தவன் விக்கெட்டை தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார்.

முதல் 6 ஓவர்களுக்கு பவுண்டரியே வரவில்லை. இன்னிங்ஸ் மொத்தமும் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களே அடிக்கப்பட்டது. ரஹானே ஒரு சிக்சரையும், பின்னி 2 சிக்சர்களையும் அடித்தனர். பந்துவீச்சில் புவனேஷ் குமார் 2 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமாகத் தொடங்கினார்.

உமேஷ் யாதவ் 6 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்தார். அக்சர் படேல் மட்டுமே சிக்கன விகிதத்தில் குறைவாக இருந்த வீச்சாளரானார்.

 

இந்நிலையில், தோல்விக்கு பேட்டிங்கைக் காரணமாகக் கூறிய தோனி, “டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பிறகு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பிட்ச் இரண்டக நிலைமையில் இருந்தது, பேட்ஸ்மென்கள் நன்றாகவே விளையாடவில்லை. கூட்டணியை அமைத்து ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இது மட்டும் நடக்கவேயில்லை. அடிக்க வேண்டிய இடத்தில் பந்து விழுந்ததா, அடிக்க வேண்டியதுதான், இல்லையா, தடுத்தாட வேண்டும், கவனத்துடன் ஆடியிருக்க வேண்டும்.

ரன் விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டத்தில் கையில் விக்கெட்டுகள் இல்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க வேண்டியது அவசியம். 4 மாதங்கள் சொந்த நாட்டைப் பிரிந்து இருப்பது கடினமே. ஆனால் இதனை சரியான முறையில் நாம் நிர்வகிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்பதை வலைப்பயிற்சிகளில் செய்ய வேண்டும். இல்லையேல் தேவைப்பட்டால் விடுதியில் காத்திருக்கட்டும்.”

இவ்வாறு சாடியுள்ளார் தோனி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article6805256.ece

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தியா இந்த மட்ச்சில் தோத்ததையிட்டு பேய் சந்தோசம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்தியா இந்த மட்ச்சில் தோத்ததையிட்டு பேய் சந்தோசம் :D

 

ஏனடி???  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி
 

 

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய பிறகு 2 ஒருநாள் போட்டிகளிலும் 2 மற்றும் 1 ரன்னில் அவுட் ஆகி சொதப்பி வரும் ஷிகர் தவன் தன்னுடைய பார்முக்குத் திரும்புவதற்கான வழிமுறையை தோனி பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஷிகர் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. துணைக்கண்டத்திற்கு வெளியே அடியெடுத்து வைத்தால் வீர்ர்கள் ரன்களைக் குவிக்க விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

 

கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அது அவர்களை தளர்வடையச் செய்து விடுகிறது, அல்லது சோர்வடையச் செய்கிறது. தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வி கண்டு வரும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தங்களை வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டு பார்மை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஆடம் கில்கிறிஸ்ட் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அவர் கொஞ்சம் பார்ம் இல்லாது போனால் கூட களத்திலிறங்கி அடித்து ஆடத் தொடங்குவார். ஆனால் சுத்தமாக பார்ம் இல்லை என்று அவர் உணர்ந்தால், முதல் பந்திலிருந்தே அவர் தாக்குதல் முறையில் ஷாட்களை ஆடத் தொடங்குவார். இந்த உத்தி எப்போதும் கைகொடுக்கும்.

இரண்டு நல்ல ஷாட்களை ஆடிய பிறகு உடனடியாக பார்ம் வந்து விடப்போகிறது. இந்த முறை ஷிகர் தவனுக்கு உதவிபுரியும் என்று நான் கருதுகிறேன்” என்றார்.

 

அதேபோல் 3ஆம் நிலையில் 5000 ரன்களுக்கு மேல் குவித்த விராட் கோலியை திடீரென 4ஆம் நிலையில் களமிறக்கும் உத்தி குறித்து தோனி கூறும்போது, “நடுக்கள பேட்டிங் வரிசையையும், கீழ்வரிசை பேட்டிங்கையும் நாம் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் விராட் கோலி நின்று பிறகு அடித்து ஆட நேரம் கிடைக்கும். ஒரு முனையில் அவர் விக்கெட்டைக் காப்பாற்றுவாரேயானால், நாங்கள் அவருக்கு பின்னால் ஆதரவளிக்க வசதியாக இருக்கும்.” என்றார்.

தோனி கூறுவதில் பிரச்சினை உள்ளது, தொடக்கத்தில் விறுவிறுவென விக்கெட்டுகள் விழுந்தால் விராட் கோலி நின்று ஆடலாம் என்கிறார். ஆனால் அதில் விராட் கோலியும் ஒருவராக ஆகியிருக்கிறாரே என்பதுதானே தற்போதைய கேள்வி...

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6808509.ece
 

  • தொடங்கியவர்

முத்தரப்பு தொடர்: பைனலில் ஆஸி., *ஸ்மித் சதம் * வீழ்ந்தது இங்கிலாந்து
ஜனவரி 22, 2015.

 

ஹோபர்ட்:  ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடர் பைனலுக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இந்தியா விளையாடுகிறது. ஹோபர்ட் நகரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதுகின்றன.

 

ஜார்ஜ் பெய்லி தடை காரணமாக, முதன் முறையாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற ஸ்டீவன் ஸ்மித், ‘டாஸ்’ வென்று ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

டேவிட் வார்னர், வாட்சன் ஆகியோருக்குப் பதில் ஹென்ரிக்ஸ், ஷான் மார்ஷ், காமிரான் ஒயிட் இடம் பெற்றனர்.

 

சிறப்பான துவக்கம்:

இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி, இயான் பெல் இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் இயான் பெல், அரைசதம் விளாசினார்.

மறுமுனையில் கம்மின்ஸ் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்தார் மொயீன் அலி, 46 ரன்னுக்கு அவுட்டானார்.

 

பெல் சதம்:

அடுத்து வந்த ஜேம்ஸ் டெய்லர், 5 ரன்னுக்கு அவுட்டானார். இருப்பினும், சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த இயான் பெல், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 4வது சதம் கடந்தார். ஜோ ரூட் 69, பட்லர் 25 ரன்க்ள் எடுத்தனர்.

50 ஓவரில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது.

 

ஸ்மித் சதம்:

கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணியின் பின்ச் (32), ஷான் மார்ஷ் (42) அடுத்தடுத்து அவுட்டாகினர். காமிரான் ஒயிட் ‘டக்’ அவுட்டானார்.  மேக்ஸ்வெல் 37 ரன்கள் எடுத்தார்.

 

இருப்பினும் மனம் தளராத ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து கைகொடு்தார். கடைசி நேரத்தில் ஹாடின் 42, ஹென்டிரிக்ஸ் (4) அவுட்டான போதும், ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் (102) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்த வெற்றியை அடுத்து, 13 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி, முத்தரப்பு ஒருநாள்  தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

 

http://sports.dinamalar.com/2015/01/1421942732/stevensmith.html

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வழக்கம்போல அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கிறாங்க.. :huh::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வழக்கம்போல அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கிறாங்க.. :huh::icon_idea:

நல்லவர்கள் வாழும் இங்கிலாந்தில் இதுவொன்றும் அதிசயமில்லை :)
  • தொடங்கியவர்

இறுதியில் ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் சதம் வென்றது; இயன் பெல் சதம் தோற்றது

 

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் 3 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஹோபார்ட்டில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதத்துடன் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். நல்ல பேட்டிங் பிட்சில் இங்கிலாந்து அணி இயன் பெல்லின் அருமையான 125 பந்து 141 ரன்கள் இன்னிங்ஸினால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் சதத்துடன் கடைசி பந்துக்கு முதல் பந்தில், 304/7 என்று வெற்றி பெற்று இறுதிக்குள் சென்றது.

 

 

ஆஸ்திரேலிய விரட்டல்:

டேவிட் வார்னர் நீக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் ஏரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் (32), மார்ஷ் (45) ஆகியோர் 76 ரன்கள் என்ற தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இது 12 ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டது.

அடுத்தடுத்து கிளென் மேக்ஸ்வெல் (37), ஜேம்ஸ் ஃபாக்னர் (35) ஆகியோரும் ரன் விகிதத்தை தொய்ய விடாமல் ஸ்மித்துக்கு உறுதுணையாக ஆடினர். பிராட் ஹேடின் இங்கிலாந்து இன்னிங்ஸில் கடைசியில் 2 ரன் அவுட்களைச் செய்ததோடு பேட்டிங்கில் அபாரமாக விளையாடி 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார்.

 

 

ஹேடின் களமிறங்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு 76 பந்துகளில் 88 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 12 பந்துகளில் 9 ரன்களை எடுத்த ஹேடின் அதன் பிறகு அடித்து ஆடத் தொடங்கியதில் அவர் ஆட்டமிழக்கும் போது 15 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் விட்டுச் சென்றார்.

கேப்டன் ஸ்மித்தின் அபாரமான ஃபார்ம் ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்துள்ளது. 92/3 என்ற நிலையில் இங்கிலாந்துக்கு வாய்ப்பு லேசாக ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சில் அச்சுறுத்தல் இல்லை. இந்தியாவிடம் காண்பித்த ஷாட் பிட்ச் பம்மாத்தையெல்லாம் ஆஸ்திரேலியாவிடம் காண்பித்தால் என்னவாகும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஸ்மித் 95 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 

 

இதற்கு முன்பாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக 3 போட்டிகளில் இருந்தார் அதிலும் ஆஸி. தோற்கவில்லை. இது அவருக்கு கேப்டனாக 4-வது போட்டி இதிலும் சதம் மற்றும் வெற்றி. இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்து அனைத்திலும் சதம் கண்டார். தற்போது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கேப்டன்சி, வெற்றி, சதம் என்று அவர் அசத்தல் தொடர்ந்து வருகிறது.

 

 

கடைசியில் கொஞ்சம் போலி பதட்டம் ஏற்பட்டது. கடைசி ஓவரை வோக்ஸ் வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு தேவை 2 ரன்கள். மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்து ஷாட் கவர் திசையில் ரன் இல்லை. 2-வது பந்தில் மேலேறி வந்தார் பந்து யார்க்கர். பந்து ஷாட் கவரைத் தாண்டவில்லை ஆனால் எதிர்முனைக்கு அடிக்கப்பட்ட த்ரோ ஸ்டம்பில் பட்டிருந்தால் ஸ்மித் அவுட் ஆகியிருப்பார். பதட்டம் அதிகமாக அடுத்த பந்தை மிட் ஆஃபில் ஹெண்ட்ரிக்ஸ் அடித்து விட ஸ்மித் பீல்டையெல்லாம் பார்க்காமல் ஓடினார். ஆனால் ரன்னர் முனையில் ஜேம்ஸ் டெய்லர் த்ரோ ஸ்டம்பை பதம் பார்க்க ஹெண்ட்ரிக்ஸ் ரன் அவுட் ஆனார்.

3 பந்துகளில் 2 ரன்கள் தேவை. 4-வது பந்தில் ஸ்மித் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து 1 ரன் எடுத்து சமன் செய்தார். 5-வது பந்தில் ஸ்டார்க் வெற்றி ரன்னை எடுத்தார். ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 10 ஆட்டங்களில் ஸ்மித்தின் 3-வது ஒருநாள் சதம் ஆகும் இது.

அன்று இந்தியாவை மடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இன்று 10 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஸ்டீவ் ஃபின் 10 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

 

இயன் பெல் ஆடிய அற்புத ஆட்டம்! கமின்ஸை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்த மொயீன் அலி!

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு இயன் பெல், மொயீன் அலி அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். 3-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச இயன் பெல் 3 அபாரமான பவுண்டரிகளை அடித்தார். அதன் பிறகு கமின்ஸை 2 பவுண்டரிகள் விளாசினார். ஆனால், 9-வது ஓவரில் கமின்ஸ் பந்தை அடித்து நொறுக்கினார் இடது கை வீரர் மொயீன் அலி. முதல் பந்து ஷாட் பிட்சாக அமைய ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ். இரண்டாவது சிக்சரும் ஷாட் பிட்ச் பந்தை அதே திசையில் அடித்ததுதான். 3-வது பந்தும் புல் ஷாட்தான், இம்முறை டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரியில் மேலே சென்ற பந்தை மார்ஷ் எம்பிப் பிடிக்கும் முயற்சியில் பந்தைப் பிடித்து எல்லைக்கோட்டில் விழுவார் என்று தெரிந்ததால் தூக்கிப் போட முயன்றார். ஆனால் பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது. எனவே அதுவும் சிக்ஸ்.

 

 

இருவரும் 106 பந்துகளில் 113 ரன்களை தொடக்க விக்கெட்டுக்காகக் குவித்தனர். மொயீன் அலி 48 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து பாக்னர் பந்தில் அவுட் ஆனார். ஜேம்ஸ் டெய்லரும் 5 ரன்களில் விழுந்தார். 23-வது ஓவரில் 132/2 என்று ஆனது இங்கிலாந்து. ஆனால் அதன் பிறகு ஜேம்ஸ் ரூட் (69 ரன்கள்க் 70 பந்து 6 பவுண்டரி), இயன் பெல் இணைந்து 19 ஓவர்களில் 121 ரன்களைக் குவித்தனர். 42 பந்துகளில் அரைசதம் கண்ட பெல், 92 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். அதன் பிறகு அதிரடியக் கூட்டி 125 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 141 ரன்கள் எடுத்து 3-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். சாந்து வீசிய பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதே சாந்து ஓவரில் அதிரடி வீரர் இயன் மோர்கன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 253/2 என்ற நிலையிலிருந்து 320 ரன்களுக்கும் மேல் செல்ல வேண்டிய இங்கிலாந்து அடுத்த 6 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குப் பறிகொடுத்தது.

ஆஸ்திரேலிய வீச்சாளர்கள் கடைசி ஓவர்களை அருமையாக வீசினர். பெல் இன்னிங்ஸ் வீணானது.

இந்த வெற்றி மூலம் 3 வெற்றிகளுடன் ஆஸி. அணி இறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு இறுதிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் இந்திய அணி தாறுமாறாக தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்துவது அவசியம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article6815618.ece
 

  • தொடங்கியவர்

Alastair Cook இல்லாத இங்கிலாந்து அணி கொஞ்சம் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் இதை தொடர்வார்களா என்பது சந்தேகம்.

 

இப்படியும் ஒரு செய்தி இருக்கு  http://www.yarl.com/forum3/index.php?/topic/152399-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/

  • தொடங்கியவர்

துவண்டு போன இந்திய அணியை அச்சுறுத்த வருகிறார் மிட்செல் ஜான்சன்
 

 

திங்கட்கிழமையன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, சிட்னியில் மிட்செல் ஜான்சன் தனியாக வேகப்பந்து பயிற்சியில் ஈடுபட்டபோது பயிற்சியாளர் டேரன் லீ மேன் உட்பட அணித் தேர்வாளர்களும் அருகில் இருந்து அவரது உடல் தகுதி, வேகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

 

3 வெற்றிகளுடன் இறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலிய அணி சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்தார்.

ஜான்சன் டெஸ்ட் தொடர் முழுதும் அவரது முழு வேகத்துடன் வீசவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் தனது முழுவேகத்திற்காக கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டார் என்று ஆஸ்திரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் (ரோஹித் சர்மா தவிர) மற்ற வீரர்கள் திக்கித் திணறி வருகின்றனர். மேலும், இந்திய பந்துவீச்சு எந்த ஒரு பெரிய ஸ்கோரையும் கூட பாதுகாக்கத் திராணியற்றதாக இருக்கிறது.

3-ஆம் நிலையில் களமிறங்கி 5,000 ரன்களுக்கும் மேல் குவித்து பல போட்டிகளை வெற்றிபெற்றுத் தந்த விராட் கோலியை 4ஆம் நிலையில் களமிறக்கச்செய்யும் ‘கேப்டன் கூல்’அவர்களின் விசித்திர முடிவும் அவர் அதற்குத் தரும் விசித்திர விளக்கங்களும் ஏற்கெனவே அதன் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஜான்சன் வேறு இந்திய அணியை மேலும் துன்புறுத்த களமிறக்கப்படுகிறார் என்ற செய்தி, ஷிகர் தவன் உள்ளிட்ட வீரர்களுக்கு பெரிய பிரச்சினைதான்.

இதோடு மட்டுமல்லாமல் ஜார்ஜ் பெய்லி, டேவிட் வார்னர், அதிரடி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் அணிக்குள் வரலாம் என்று டேரன் லீ மேன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

ஜான்சன் தேர்வு பற்றி லீ மேன் கூறும்போது, “அணியில் விளையாடுவதற்கு நெருக்கமான வாய்ப்புகள் அவருக்கு உள்ளது. அவர் நன்றாக வீசிவருகிறார். நாளை முழு பயிற்சி மேற்கொள்கிறார், இதனால் தேர்வுக்கு தயாராக இருக்கிறார்” என்றார்

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6818529.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

முரளி விஜயை கழட்டி விட்டவர்களுக்கு நல்லா வேணும்..! :D

  • தொடங்கியவர்

கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா: ஆஸி.,யுடன் இன்று மோதல்
ஜனவரி 25, 2015.

 

சிட்னி: முத்தரப்பு ஒருநாள் தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்திய அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து விளையாடுகிறது. சிட்னியில் இன்று நடக்கும் லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதுகின்றன.     

போனஸ் புள்ளி: முதலிரண்டு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட இந்திய அணி, பைனலுக்கு முன்னேற மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. போனஸ் புள்ளிகளுடன் வெற்றி அடைந்தால் மட்டுமே பைனல் வாய்ப்பை பெற முடியும். இது, இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம்.     

 

 

ரோகித் இல்லை: காயத்தில் இருந்து மீண்ட இந்தியாவின் இஷாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா, லெவன் அணியில் இடம் பிடிப்பது சந்தேகம். ஒருவேளை இஷாந்த் சர்மா தேர்வானால் கூட ஜடேஜாவின் இடம் கேள்விக்குறியாக உள்ளது. தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் ரோகித் சர்மா இப்போட்டியிலும் விளையாட மாட்டார். எனவே ஷிகர் தவானுடன், அஜின்கியா ரகானே துவக்கம் கொடுப்பார். விராத் கோஹ்லியை 3வது அல்லது 4வது இடத்தில் களமிறக்குவது பற்றிய குழப்பம் நீடிக்கிறது. உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இவர், எந்த இடத்தில் களமிறங்கிலாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்லது. கோஹ்லியை 4வது இடத்தில் களமிறக்கினால், 3வது இடத்தில் அம்பதி ராயுடு விளையாடலாம்.     

 

 

‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, கேப்டன் தோனி கைகொடுக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் தந்த ஸ்டூவர்ட் பின்னி இன்றும் இடம் பெறலாம். சுழலுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில், அஷ்வின், அக்சர் படேல் கூட்டணி எழுச்சி கண்டால் நல்லது. வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி நம்பிக்கை தரலாம்.     

மீண்டும் பெய்லி: ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியதால், இன்றைய போட்டியில் நெருக்கடியின்றி விளையாடும். உலக கோப்பை தொடருக்கு தயாராக, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம்.      

 

 

இரண்டாவது முறையாக தாமதமாக பந்துவீசியதால் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவில்லை. இவர், இன்று மீண்டும் அணியில் இணைவது பலம். இங்கிலாந்துக்கு எதிராக சதம் கடந்த ஸ்டீவன் ஸ்மித், மீண்டும் சாதிக்கலாம். காயம் காரணமாக ஷேன் வாட்சன் இன்றும் விளையாடமாட்டார். காயத்தில் இருந்து மீண்ட மிட்சல் மார்ஷ், ஓய்வில் இருந்து திரும்பிய மிட்சல் ஜான்சன், ஜோஷ் ஹேசல்வுட், லெவன் அணியில் இடம் பெறுவது சந்தேகம். ‘சுழலில்’ சேவியர் தோகர்டி அசத்தலாம். வேகப்பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், குரிந்தர் சாந்து மிரட்டலாம். ஒருவேளை ஸ்டார்க்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டால், ஜான்சன் அல்லது ஹேசல்வுட் வாய்ப்பு பெறலாம்.     

 

கட்டாய வெற்றியை நோக்கி இந்தியாவும், 100 சதவீத வெற்றிக்கு ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால் இன்றைய போட்டியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

இம்மைதானத்தில்....

 

சிட்னி மைதானத்தில், இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் 13 முறை மோதின. இதில் ஆஸ்திரேலியா 12ல் வெற்றி பெற்றது. இந்திய அணி ஒருமுறை (2008) மட்டுமே வென்றது.

* இங்கு, இங்கிலாந்து (1985), நியூசிலாந்து (1985), பாகிஸ்தான் (1992) அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் இந்திய அணி வென்றது.

* கடந்த 2004ல் நடந்த போட்டியில், 5 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் அதிக ரன்களை பதிவு செய்தது. கடந்த 2008ல் 299 ரன்கள் எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.

 

மழை வருமா

இன்றைய போட்டி நடக்கும் சிட்னியில் வெப்பநிலை அதிகபட்சம் 23, குறைந்தபட்சம் 19 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை வர 60 சதவீத வாய்ப்பு உள்ளது.

 

http://sports.dinamalar.com/2015/01/1422205372/IndiaAustraliaCricketSydney.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.