Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா
 
எவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். எதிரியின் பலவீனம் அறிந்தவனே வெல்ல முடியும்.
 
ஹிட்லர், கடாபி, பின் லாடன் பலவீனம் பெண்களில் இருந்தது. மகிந்தவின் பலவீனம்  சாத்திர விடயங்களில் இருந்தது.
 
சுமனதாச அபயகுணவர்த்தன என்னும் ஒரு சாத்திரியார், இப்போது குறும்புக் கார இலங்கையர்களின் பாராட்டு மழையில் நனைந்த வாறு உள்ளார். அவரது சாத்திரம் என்னவோ பிழைத்தாலும், அவரோ எதிர்பாராத ஹீரோ ஆகி இருக்கிறார்.
 
தனி ஒரு ஆளாக, 'இத்த கயிறினைக்' கொடுத்து, மகிந்தவை பதவி இறக்கி, நாட்டினை அவரதும், அவர் தம் குடும்பத்திடம் இருந்து காத்த 'மாவீரன்' என்ற பாராட்டு மலையில் நனைந்து, வாய்க்குள் அல்வா இறுக்கின மாதிரி, மனிசன், அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் நிக்கிறார்.
 
இவர் மட்டும் இல்லாவிடில், குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகள், அவர்கள் போட்டு தாக்கி இருப்பார்கள் என்கிறார் இன்னுமொருவர். சாத்திரியாரை வைத்து 'வெளிநாட்டு உளவு' நிறுவனங்கள் விளையாடிப் போட்டுது என்கிறார் இன்னுமொரு குறும்பர்.
 
தேர்தல் அன்று தனது ஊரில் வாக்களித்த மகிந்த, அலரிமாளிகை திரும்பிய போது மிகவும் களைப்புடன் இருந்தார். ஆனால் வெற்றியில் உறுதியாக இருந்தார்.
 
வடபகுதி மக்கள் வாக்களிப்பு 50% மேல் போகாது இருக்கும் வரையும், சிங்கள மக்கள் தன்னை கைவிடாது இருக்கும் வரை தான் தான் வெல்லுவார் என்று நம்பிக்கையுடன் படுக்கைக்கு போனார்.
 
வெற்றிச் செய்தியை காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று படுக்கைக்கு போன அவருக்கு தூக்கம் வரவில்லை. நான்கு கப் பிளேன் கோப்பி வரவழைத்து அருந்தி உள்ளார்.
 
நாலாவது முறை அருந்தியவுடன், மெதுவாக எழுந்து கீழே வந்தால், அங்கே உற்சாகம் இருக்கவில்லை. நீண்ட யோசனையில், பரிதவிப்புடன் தம்பி கோத்தா நின்ருந்தார்.
 
செயலாளர், லலித் முதலில் வந்த கிளிநொச்சி தபால் வாக்களிப்பு விடயங்களைச் சொன்னனதும், முகத்தில் இறுக்கம் படர்ந்தது. அட, 5 வருடங்களுக்கு முன்னர் நல்ல செய்தி தந்த கிளிநொச்சி, இன்று தந்த முதல் செய்தி, அபசகுனமாக இருந்தது. தபால் வாக்குகள் பெரும்பாலும் சிங்கள படைகளுக்குரியது. அப்படியானால் சிங்களவரே தம்மைக் கையை விட்டு விட்டார்களோ?
 
46 வருட அரசியல் அனுபவம் கொண்ட மகிந்தர், உடனடியாக, சகல தேர்தல் முகவர்களை தொடர்பு கொண்டு, மக்கள், முக்கியமாக வடக்கு, கிழக்கு மக்கள், மொத்த வாக்களித்த வீதம் குறித்த அறிக்கையினை பெற பணிப்பு விடுத்தார்.
 
வடகிழக்கில், வாக்களிப்பு வீதம் 65% முதல் 78% வரை என்று அறிக்கை சொன்னதும், தனது தோல்வி உறுதி என்று அவருக்கு புரிந்தது. தமிழர்கள், முஸ்லிம்கள் சேர்ந்த, தமிழ் பேசும் சமூகம் தன்னை தண்டித்து விட்டது என உணர்ந்து, ரணில் உடன் தொடர்பு கொண்டு அலரிமாளிகை வர முடியுமா என அழைத்தார்.
 
ரணில் வந்தார். தனது தோல்வியினை ஏற்றுக் கொள்வதாயும், ரணிலும், மைத்திரியும், சில உறுதிமொழிகள் தந்தால், தான் சுமூகமாக விலகிச் செல்வதாயும் சொன்னார். ரணிலும் அங்கிருந்தே மைத்திரியினை தொடர்பு கொண்டு இருவருமாக வழங்கிய உறுதி மொழிகளைப் எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சிங்கன், ஊர் நோக்கி.
 
தமிழன் வாக்களிக்காமல் விட்டதால் பதவிக்கு வந்து, பெரும் அலையென கிளம்பி வாக்களித்தமையால் பதவி இழந்து கிளம்பியது, தமிழனைக் கிள்ளுக் கீரையென நினைத்த பதர் ஒன்று.
 
புதிய அரசு தமிழ் பேசும் சமூகம் தன்னை பதவியில் இருத்தியது எனற  நிலைமையினை தெரிந்த வகையினால், உடனடியாக, சந்திரஸ்ரீயினை வீட்டுக்கு அனுப்புகிறது. மேலும் அரச சேவைகளில் இருந்தது ராணுவ அதிகாரிகளை நீக்கும் முகமாக, சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு செயலர் பதவி கொடுக்கப் படவில்லை.
 
அதேவேளை, நான் இன்றும் சுதந்திரக் கட்சி காரன் தான் என்று மைத்திரி சொல்ல, சுதந்திர கட்சியில் இருந்து முன்னரே வந்தவருக்கு மேலாக இன்னும் 32 MP க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதிகாரம் கையில் இருப்பதால், கட்சியும், அப்படியே மைத்திரி வசம் வரும். 
 
அனேகமாக ஜனவரி 19 பாராளுமன்று கூடுகையில் தேவையான பெரும்பான்மை பலத்தினை பெறமுடியும் என அரசியல் வட்டாரங்கள் சொல்லுகின்றன. 
 
100 நாட்களுக்கு இடையில் கணிசமான சட்டங்களை மாற்றும் இலக்குடன் செயல் படும் இந்த அரசின் செயல் பாடு, பெரும்பாலும், அறுந்து போயுள்ள சர்வதேச மற்றும் இந்திய தொடர்புகளையும் மீளக் கட்டி அமைப்பதும், நாட்டின் நாசமாகிப் போய்விட்ட நல்லாட்சியினை திரும்பி மீள அமைப்பதும் ஆகும்.
 
ஆக, இலங்கைத் தீவின் பெரும் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது தமிழர்களின் வாக்குக்கள் மட்டுமல்ல, தனி ஒரு ஆளாக இத்த கயிரினைக் கொடுத்து, இரு வருடங்களுக்கு முன்னரே தேர்தலுக்கு போகவைத்து, உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா என ஒரு குடும்பத்தினை புலம்ப வைத்திருக்கும் நம்ம 'ராச சாத்திரியார்' சிங்கன், சுமனதாச அபயகுணவர்த்தன.
 
ஆனால் அவரோ, உலகப் புகழ் வாய்ந்த பத்திரிகைகளில் எல்லாம் வந்து விட்டார். சொல்ல முடியாது சாத்திரியாரை பார்க்க ஹிலாரியும் வரலாம். அந்தளவுக்கு உலக அளவில் பிரபலம் ஆகி விட்டார் நம்மாளு.
 
அவருக்கு ஒரு 'ஓ' போட்டு வைப்போம்.
 


LANKA-articleLarge-v2.jpg

 

 

23-rajapakse35-6598.jpg

 

 An a situation song for Mahinda Mamu 




 
 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிமார் சொல்லுறதை எல்லாம் அப்பிடியே நம்பக்கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு விடயங்களை எழுதிவிட்டு மகிந்தருக்கு ரணிலும், மைத்திரியும் கொடுத்த உறுதிமொழிகள் எவை என கூறவில்லையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விடயங்களை எழுதிவிட்டு மகிந்தருக்கு ரணிலும், மைத்திரியும் கொடுத்த உறுதிமொழிகள் எவை என கூறவில்லையே?

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151952-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிமார் சொல்லுறதை எல்லாம் அப்பிடியே நம்பக்கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்..! :D

இந்த கூத்துதான் .... உண்மையில் நடந்தது.
 
சீன கப்பல் வந்திட்டுது 
 
மேற்கு இனியும் பொறுக்காது 
கிழக்கு வந்திட்டுது 
வடக்கு வாக்கு முக்கியம் 
 
என்று ஒரு ஒரு பீலாவே விட்டு கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சிலர்.
 
நேற்று மைத்திரி செய்த முதலாவது வேலை சீன அதிபருடன் தொலைபேசி 
இலங்கையின் உறவு சீனாவுடன் அப்படியே தொடரும் என்று உறுதி கொடுத்ததுதான்.
 
அந்த செய்தி வெளியாகி 2 மணிநேரத்தில் 
கொழும்பு ஆல் ஷேர் இன்டெக்ஸ் 1.4% ஏறி இருக்கு. (யார் ஏத்தினார்கள் என்பதை நான் எழுத தேவை இல்லை) 
கொமர்சல் பாங்க் ஒப் சிலோன் பங்குனி 2011 இருந்த புள்ளியை எட்டியிருக்கு. 
 
இங்கு சில கருத்துக்களை வாசிக்கும்போது சிரிப்புதான் வரும்.
கூட்டமைப்பும் மகிந்தவும் கால் நீட்டி ஆறுதலாக இருந்து தேநீர் குடித்துக்கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் அவர்களின் தலைக்குள் இருந்து இறங்கியதுபோல் ....
அவர் காயை அப்படி நகர்த்தியதுதான் மிகவும் சரியானது 
இல்லாவிட்டால் தமிழரே அழிந்துபோக வாய்ப்புண்டு என்று பீலா விட்டு கொண்டு இருப்பார்கள். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீதாசாரம்

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகின்றது.

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்.

"இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்."

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிடம் இருந்து நானே நாட்டை காப்பாற்றினேன்!– அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச

 

முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும் அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார் என மகிந்த ராஜபக்சேவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணையாளரையும் பொலிஸ் மா அதிபரையும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பற்றப்பட்டது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்.

நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா?. தேர்தல் 2017ம் ஆண்டே நடைபெறவிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை நடத்த நானே அவரை இணங்க வைத்தேன். அப்படியில்லை என்றால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார்.

 

இவற்றை நாங்கள் பகிரங்கமாக கூற முடியாது.  எவரும் இதனை தமது அறிவை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

நாடு பயணிப்பதை பார்த்த போது, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்தால் எமக்கு நாடு என்று ஒன்று மீதமிருக்காது என்பதை நாம் உணர்ந்தோம். அந்த எண்ணத்திலேயே நாங்கள் இதனை செய்தோம்.

 

ராஜபக்ச ஆட்சியில் இருந்தால் எமக்கு நல்லதாக இருந்திருக்கும், ஆனால் அது நாட்டுக்கு கெடுதியாக முடிந்திருக்கும்.

யார் என்ன கூறினாலும் எமது வயிற்றை விட நாங்கள் எமது நாட்டை நேசிக்கின்றோம். உண்மையில் கடந்த 9 ஆண்டுகள் நாட்டை நாங்களே நிர்வகித்தோம் எனவும் சுமணதாச அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

jothidar1.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்த கையுடன் ஆஸ்பத்திரியில் இருந்து,  இரண்டு கிழமைக்கு பின்... வாய் திறந்திருக்கிறார்.

நன்றாக, பிழைச்சுக் கொள்ளக் கூடிய, சாத்திரியார். :D 
இவரையே... தனது ஆஸ்தான சாத்திரியாரக மைத்திரி நியமிக்க வேண்டும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.