Jump to content

இறால் பிரியாணி

Recommended Posts

இறால் பிரியாணி
o9fw3b.jpg

தேவையான  பொருள்கள்

இறால் – அரை கிலோ

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 2

தக்காளி – ஒன்று

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தயிர் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிது

மல்லித் தழை, புதினா – ஒரு கைப்பிடி

உப்பு  – தேவயான அளவு

இறால்  ஊற வைக்க:

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – கால்  ஸ்பூன்

உப்பு  மஞ்சள் தூள் – சிறிது

தாளிக்க:

பட்டை – சிறு துண்டு

லவங்கம் – 3

ஏலக்காய் – 3

பிரியாணி இலை – ஒன்று

அன்னாசிப்பூ – பாதி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில்  இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை  சேர்த்து 1 மணி நேரம்  ஊற வைக்க  வேண்டும்.

அரிசியை  20 நிமிடம் ஊற வைக்கவும். . பச்சை மிளகாய் . வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி  வைக்கவும்.

குக்கரில்   எண்ணெய் விட்டு காய்ந்ததும்  தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.  பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.  தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.

பின் 2 கப் அரிசிக்கு  3 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்க கொதித்ததும் அரிசியை நன்கு வடித்து போடவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு  சிநிதளவு நெய்  சிறிது புதினா  சேர்த்து நன்கு கிளரி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து 10 நிம்டம் கழித்து இறக்கவும்.

இறக்கி 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி பரிமாறவும் சுவையான  இறால் பிரியாணி   ரெடி.

http://tamilcookery.com/?p=1470

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இறால் பிரியாணிக்கு நன்றி நவீனன். :)
 
இறால் போட்டால் ஒடியல்புட்டும் நல்லாய்த்தான் இருக்கும். :(
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்மதியை அவித்தாலே பத்து நிமிடத்தில் அவிந்துவிடுமே. இருபது நிமிடம் ஊறவிட்டால் அரிசி உடையுமே

Link to comment
Share on other sites

பாஸ்மதியை அவித்தாலே பத்து நிமிடத்தில் அவிந்துவிடுமே. இருபது நிமிடம் ஊறவிட்டால் அரிசி உடையுமே

நாங்கள் பாஸ்மதியை 30 நிமிடம் குளிர் நீரில்  ஊற வைத்து தான் சமைப்போம். ஒரு நாளும் உடைவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்மதியை ஊறவிடுவதன் நோக்கம் என்ன ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுமோ,உங்களுக்கு தெரியாதா?...பசுமதி அரிசியைக் கழுவிப் போட்டு கொஞ்ச நேரம் தண்ணீரில் மஞ்சளும்,(பட்டர் அல்லது எண்ணெய் உதிரியாய் வருமாம்) போட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்து புரியாணி அல்லது பிரைட் ரைஸ்சுக்கு சமைப்பார்கள்

நன்றி ரதி :) 

சுமோ அரிசி வாங்கி வந்தால் சமைத்து சாப்பிட முதல் அந்த பக்கெட்டில் என்ன எழுதி இருக்கு என்பதையும்  வாசிக்கவும் :o:lol:

அரிசியை ஊற விட்ட பின் சமைக்கும்போது சோறு  பொலிந்தும் வரும் சுமோ. ஒரு தரம் செய்து பாருங்கள்.

நான் ஒருநாளும் அப்படிச் செய்ததில்லை ரதி. ஆனால் ஊறவிடாது நான் செய்யும் புரியாணியும் நன்றாக வருகிறதே :D

நன்றி ரதி :)

சுமோ அரிசி வாங்கி வந்தால் சமைத்து சாப்பிட முதல் அந்த பக்கெட்டில் என்ன எழுதி இருக்கு என்பதையும்  வாசிக்கவும் :o:lol:

அரிசியை ஊற விட்ட பின் சமைக்கும்போது சோறு  பொலிந்தும் வரும் சுமோ. ஒரு தரம் செய்து பாருங்கள்.

அரிசியில் என்ன செய்வது என்று தெரியாதவர்கள் அல்லோ பாக்கில் என்ன எழுதி இருக்கு என்று பார்க்க வேண்டும்??? :lol:

சரி இரண்டு பேர் சொல்கிறீர்கள். சனிக்கிழமை செய்து பார்த்துவிட்டுத்தான் உங்களுக்கு இருக்கு :lol:

Link to comment
Share on other sites

சரி இரண்டு பேர் சொல்கிறீர்கள். சனிக்கிழமை செய்து பார்த்துவிட்டுத்தான் உங்களுக்கு இருக்கு :lol:

ஒரு சுண்டு அரிசியில் என்ன குடியா முழுகபோகுது? :o:lol:  கடையில அவன் எத்தனை பியரை கொண்டு போறான். அவனை விட்டு விட்டு

:icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுண்டு அரிசியில் என்ன குடியா முழுகபோகுது? :o:lol:  கடையில அவன் எத்தனை பியரை கொண்டு போறான். அவனை விட்டு விட்டு

:icon_mrgreen::lol:

ஒரு பியர் போனால் ஒன்பது பியர் விக்க இருக்கு. பசிக்குச் சாப்பாடு செய்துபோட்டு சாப்பாடு பிளைச்சுது எண்டால் ????? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.