Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிபிஸியின் பிரச்சாரம்( தவறா இல்லை???????)

Featured Replies

வவுனியாவில் நடந்த கிளேமோர் தாக்குதலில் 3 பேர் பலி

வவுனியாவில் கிளேமோர் தாக்குதலில் மூவர் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை 11 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் சைட் சார்ஜர் வெடித்தாக்குதலில்; இராணுவச் சிப்பாய் ஒருவர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஊர்காவல் படைச்சிப்பாய் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் அதிர்ச்சி காரணமாக மரணமாகியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று விசாரணை நடத்திய வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் குணவர்தன அவர்கள், இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளைத் தவிற வேறு யாரும் செய்திருக்க முடியாது என்றார். அதே சமயம் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவி்ததார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து கருத்துக்கள் எதனையும் உடனடியாகப் பெற முடியவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

ஏன் தாங்கள் இது மட்டுமே கேட்டனியால் முக்காடு போட்டு மூடி வந்த அம்மணி தாலாட்டு பாடினவ கேட்கலயோ...???

உவ சொன்ன பாருங்கோ மக்களின்ர பிரதி நிதியாம்...???

புலிகளுக்கு அவையல பற்றி கதைக்கவும் ஜனநாகம் கதைக்கவும் முடியாதம்...

வந்து பாருங்கோ விசர் பக்கத்தில நிப்பாள இருந்தாள் உட்டி உதைச்சிருப்பன்...உதுகளை விட்டு போட்டு இது ஒரு செய்தி எண்டு இதை போடுறியள்...

கதையோட கதை மோகன் உந்த பத்திரிகையார் மகா நாட்டுக்கு போனவராமே....???

தெரிங்ச சொல்லுங்க...

வன்னி மைந்தன்..

பி.கு...இந்த கருத்து காணமல் போனோர் பட்டியலில் சேர்கப்படும் ஏனெனில் இங்கேயும் வெள்ளை வான் கடத்தலாம்...ம்..ம்..ம்...துலைவரோட பெரிய தொல்லை

  • கருத்துக்கள உறவுகள்

Rebel targets 'hit' in Sri Lanka

A soldier keeps watch in Colombo a day after talks failed in Geneva

Sri Lanka's air force has carried out strikes against Tamil Tiger targets in the eastern town of Batticaloa.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6104970.stm

இதுதான் பிபிசி ஆங்கில இணைத்தளத்தின் பிரதான செய்தி இன்று.

ஆங்கில இணையத்தளத்தில் யாழில் கிழக்கில் நடக்கும் பொதுமக்கள் படுகொலைகள் பற்றிய செய்திகள் வருவதில்லை. ஜெனிவாவில் பேசிக்கொண்டிருந்த போது கூட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்த தமிழூடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் ஜெனிவாவில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி இந்தத் தகவலை சர்வதேச சமூகத்தின் கவனமும் சர்வதேசச் செய்தியாளர்களின் பிரச்சன்னமும் இருந்த சமயத்தில் செய் திருந்தால் அதிக தகவல்கள் போய்ச் சேர வழி பிறந்திருக்கும். குறிப்பாக செய்தியாளர் மகாநாட்டுக்கு முன்னரோ பின்னரோ தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் செயற்பாட்டாளர்கள் இப்படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் சிறியளவிலான கவனயீர்ப்புப் போராட்டத்தை அல்லது கறுப்புப்பட்டி அணிந்தாவது வெளிப்படுத்தி இருக்கலாம். செய்யத் தவறிவிட்டார்கள்.

இப்போ புலிகளே பேச்சு வார்த்தையின் பின்னர் வவுனியாவில் கிளைமோர் வைத்தது போன்று பிபிசி செய்தி சொல்கிறது. இது நேற்றைய மோட்டார் தாக்குதலுக்கு எதிரான விமானத்தாக்குதல் போன்று எழுதும் பிபிசி கிழக்கில் அரச படைகள் தொடுத்த எறிகணைத் தாக்குதலுக்கு பதிலடிதான் புலிகளின் தாக்குதல் என்று குறிப்பிடவில்லை.

இதில் எமது ஊடகங்கள் காவி வரும் தகவல்களின் செல்வாக்கு போதவில்லை. வேகமும் காணாது. அரசு சம்பவம் நடந்த உடனேயே ஏதோ ஒரு அறிக்கையைப் புலிகளை வைத்துக் கூறிவிடுகிறது. ஆனால் புலிகளின் தகவல்கள் தாமதமாகி வருவதால் அவை ஊடகங்களில் இடம்பிடிப்பதில் இரண்டாம் பட்சமாகவே உள்ளன. அதற்கு அரசின் செய்திகள் ஆதிக்கம் செய்து விடுகின்றன. இந்தத் தாமத்தை புலிகளும் தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் தடுத்து அரசுக்கு ஈடாக அல்லது அதை விடத் துரித கதியில் சர்வதேச சமூகத்தை நோக்கி தங்களின் செய்திகளை ஆதாரங்களோடு அனுப்பி வைப்பதே அரசின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து சர்வதேசத்தின் கவனத்தை கரிசணையை தமிழர் தரப்பு மீது உண்டு பண்ண முடியும்.

எல்லாம் ஓய்ந்த பிறகு கவனையீர்ப்புப் போராட்டங்களை மூலைக்கு மூலை நடத்துவதால் வரும் விளைவைவிட சரியான தருணத்தில் நடத்தும் சிறிய போராட்டம் கூட அதீத தாக்கத்தைத் தரும் என்பதை அதுவும் பேச்சு வார்த்தைக் களத்தில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் கவனித்துச் செயற்படுதல் எதிர்காலத்திலாவது நல்ல பயனளிக்கட்டும்.

இப்படியான நடவடிக்கைகள் மூலமே ஜனநாயக வழி என்று கூறிக் கொண்டு அரசின் செய்திகளுக்கு முக்கியம் அளிக்கும்

தமிழோசை போன்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் உள்ள இரட்டை நிலைப்பாட்டை ஆதாரங்களோடு வெளிக்கொண்ர முடியும்.

வெறும் குற்றச்சாட்டுக்களை வைப்பதன் மூலமாக அல்லது பகிர்ந்து கொள்வதன் மூலமாக சிறிய அளவிலான மக்கள் விழிப்பைப் பெறினும் அந்த ஊடகங்கள் மீது இவை தாக்கத்தை மாற்றத்தை உண்டு பண்ணமாட்டாது.

வழமையாக இறக்கும் படைவீரர்களையே மறைக்கும் படைத்தரப்பு இம்முறை காயப்பட்டவர்களைக் கொன்றுவிட்டதா?

வழமையாக இறக்கும் படைவீரர்களையே மறைக்கும் அரசு இன்று காயப்பட்ட வீரர்களைக் கொன்றிருக்கிறதா? தமிழ் ஊடகங்களும் அரச படையினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் மூன்று வீரர்கள் காயம் ஒரு பெண் மணி உயிரிழப்பு என்று செய்தி போட்டிருக்க பிபிசி தமிழோசைக்கு மட்டும் எப்படி செய்தி மாற்றி வழங்கப்பட்டுள்ளது, இது பிபிசியின் குழறுபடியா அல்லது செய்தி வழங்கியோரின் குழறுபடியா?

VAVUNIYA: ONE LTTE CLAYMORE MINE exploded at the GOODSHED road, VAVUNIYA on Wednesday (01) around 11.30 a.m..

One soldier, one Home Guard and a civilian were injured in the incident and were initially admitted to VAVUNIYA hospital.- இராணுவத்தின் செய்தி இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு நெடுக்கு

அப்படியே உம்மட புத்திமதிகளை துடைத்தெடுத்துக் கொண்டு போய் எங்கேனும் பாண்கிணறுவழிய அதை கொட்டு ராசா.

உமக்குத் தெரியுமே யோசப் பரறாயசிங்கம் படுகொலைக்கும், உலகில் உள்ள சிறிய பெரிய தரப் பத்திரிக்கைகள் எல்லாம் புலிகளே காரணம் என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டிருந்தன ஏன் அவர்களுக்கும் புலியைப் பிடிக்காதோ?

இதுதான் மோனே அரசதகவல்களுக்கு சாதாரணமாகவே கிடைக்கின்ற உலக அங்கீகாரம். அதை விடுத்து பிள்ளைய ஆட்டுறன் என்று சொல்லிக் கொண்டு எழுப்பப் பாடுபடாதே!

ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்தே பிபிசி ஈழத்தமிழர் எதிர்ப்பு வானோலியாக மாறிவிட்டது அனைத்துத் தமிழரும் அறிந்த விடயம். அவர்கள் எம் தரப்புச் செய்திகளை திரித்து பாதிப்பு ஏற்படும் வiகையில் வெளியிடுகின்றார்கள் என்று தெரிந்த பின்னும் ஏன் அவர்களின் அந்த தெமழ ஊளையைக கேட்கின்றீhகள். எமது தமிழ் இணையதளங்கள் பலவற்றில் இந்த ஊளை ஓசையின் இணைப்பு கொடுத்திருக்கின்றார்கள். அவைகளை முதலில் கழற்றி எறிய வழி செய்யுங்கள். தவறான பிழையான தகவல்கள் செய்திகள் சொல்கின்றார்கள் என்ற பின் ஏன் அதை நாம் செவிமடுக்க வேண்டும். இந்த வானோலியை தவிர்ப்பதற்கான ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்தை அனைவரும் ஒன்றுபட்டு செய்தால் என்ன?

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.