Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி அளவிற்கு எளிமையான தலைவரை பாப்பரசர் சந்தித்தில்லை!

Featured Replies

ad080c60fb1a2b5af2648d7e32ea2a22_L.jpg
 
இவ்வளவு எளிமையான, சாதாரண வாழ்க்கையை வாழும் ஜனாதிபதி ஒருவரை தான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை எனவும், ஜனாதிபதி மீது தமக்கு புதுமையான அன்பும், கௌரவமும் ஏற்பட்டதாக புனித பாப்பரசர் பிரான்ஸ் தன்னிடம் கூறியதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
 
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பாப்பரசரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட விழாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
 
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
 
இலங்கைக்கு பயணித்ததில் தாம் பெருமகிழ்ச்சியடைந்ததாக புனித பாப்பரசர் தன்னிடம் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.
 
உலகில் பல நாடுகளுக்கு தான் பயணம் செய்துள்ளதாகவும், அரச தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ளதாகவும், எனினும், இவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை எனவும் புனித பாப்பரசர் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறினார்.
 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. எல்லாமே அரசியல்தானப்பா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. எல்லாமே அரசியல்தானப்பா.. :D

 

கனகாலத்துக்குப்பின் 

இலங்கைக்கு புது அரசியல்..

வேலை செய்யுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

----

உலகில் பல நாடுகளுக்கு தான் பயணம் செய்துள்ளதாகவும், அரச தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ளதாகவும், எனினும், இவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை எனவும் புனித பாப்பரசர் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறினார்.

 

மைத்திரியை, பாப்பரசர் சந்தித்த போது.....

அவர் ஜனாதிபதி பதவிக்கு வந்து, மூன்று நாள் தான்... ஆகுது என்று,

ரஞ்சித் ஆண்டகை சொல்லியிருந்தால், பாப்பரசர், இப்படி சொல்லியிருக்க மாட்டார். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.