Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Featured Replies

செய்தி இப்படி வந்திருக்க வேண்டும்

"ஒட்டுக்குழுக்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுபவரும், இராணுவத்திற்கு உளவு பார்ப்பவருமாகிய இளம்பெண் சுட்டுக் கொலை"

பாலியல் தொடர்பு விவகாரத்தை முன்னிலைப்படுத்தக் கூடாது.

அதே வேளை நான் இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் எதிரியுடன் பாலியல் தொடர்பை மட்டும் வைத்திருந்தாலும் கூட, எந்த நேரத்திலும் அப் பெண் தேசியத்திற்கு ஆபத்தான ஒருவளாக மாறிவிடலாம். அந்த வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அப் பெண்ணை "இயங்கா நிலைக்கு" கொண்டு செல்லலாம்.

ஆனால் இதை நாம் வேறு வழியின்றி சகித்துக் கொள்ள வேண்டுமே தவிர, வரவேற்க முடியாது.

ஆனால் எமது சமூகம் அப்படி இல்லாமல், "பாலியல் தொடர்பு" மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்ற கருத்தியலை வளர்த்துக்கொண்டு போகிறதா என்பதே என்னுடைய கேள்வி.

என்னுடைய பார்வையில் பண்பாட்டு மீறல்களை கண்டிக்கலாமே தவிர, தண்டிக்கக் கூடாது.

  • Replies 189
  • Views 18.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் செய்பவர்கள் கொலை செய்ய பட வேண்டும் என்பதில் எனக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும் ஆனாலும் தண்டனை கொடுக்க்கும் காலம் என்பது தான் முக்கியம்

இதை எல்லாளன் படை செய்தது, சரியா பிழையா என்பது குறித்து நான் கதைக்கவில்லை. ஆனால் முறைகேடான பாலியல் உறவுகள் கொள்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான தண்டணைகள் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது தமிழீழ நிர்வாகம் தான்.

ஆனால் சிங்கள இராணுவத்தோடு மட்டுமல்லாமல், தமிழர் தரப்புக்குள்ளும் அவ்வாறு நடப்பின் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பாலியல் தொஅர்பு என்டா என்ன??

யாராவது விளங்கப்படுத்துங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எமது சமூகம் அப்படி இல்லாமல், "பாலியல் தொடர்பு" மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்ற கருத்தியலை வளர்த்துக்கொண்டு போகிறதா என்பதே என்னுடைய கேள்வி.

என்னுடைய பார்வையில் பண்பாட்டு மீறல்களை கண்டிக்கலாமே தவிர, தண்டிக்கக் கூடாது.

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை என்ற கருத்தியல் புதிதாக உருவாக்கப்படவில்லை. அது ஏற்கனவே இருக்கின்ற விடயம் தான். அது புதிய விடயம் கிடையாது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை தான் தேவையானது. பண்பாட்டு மீறலை இன்றைக்கு தண்டிக்காமல் இருப்பதால் தான், இன்றைக்கு வழி முறை தவறிய, அல்லது சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகமாகவே நடக்கின்றன.

சிறிலங்காவின் பத்திரிகைகளில் கிழமையில் ஒவ்வொரு செய்தியாவது சிறுவர் துஸ்பிரயோகம் பற்றி வருவதை நிச்சயமாகப் பலர் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்றால் அது குறித்தான தண்டனைக் காலம் என்று அங்கு குறைவாகும். அதைப் பண்பாட்டு மீறல் என்று கண்டித்துக் கொண்டிருக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்வீட்டுக்குள் இருந்தே புதுப், புதுப் பகைகளுக்கு கல் எறியாதீர்கள் உறவுகளே!

ஒன்றாகக் கரங்களை இணையச்செய்ய வேண்டிய காலம்.

இதை வம்புகளை வளர்க்கும் நேரத்துக்கு விலை கொடுக்க வேண்டாம்.

எமது ஊடகங்களுக்கே கரி பூசுவதற்க்கோ,இல்லை கலைஞர் கட்ச்சிக்காறரை சீண்டிவிடும் பாவத்தையோ இந்த களத்தின் தலையில் போட்டுவிடாதீர்கள்?

சிறுவர் மீதான துஸ்பிரயோகங்களுடனோ, பாலியல் வன்புணர்வுடனோ இதை ஒப்பிட முடியாது.

வயது வந்த ஒரு பெண் சமூகக் கட்டுப்பாடுகளை மீறி ஒருவருடன் பாலியல் தொடர்பை வைத்திருப்பது பற்றியே இங்கு பேசப்படுகிறது.

இப்படி பண்பாட்டை மீறுவது தண்டனைக்குரிய குற்றமா என்று கேட்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சமூகச் சீர்கேட்டை இன்னும் ஒருவர் செய்ய முயலக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை தண்டனையாகவும் இது அமையலாம். அத்துடன் தவறு செய்பவர்களுக்கு ஓரிருதடவைகள் எச்சரிக்கை கொடுத்த பின்னே இப்படியான செயல்கள் இடம் பெறுகின்றன. இன்று தனது ஏழ்மைக்கோ உடற்பசிக்கோ எதிரியிடம் ஒருசில நூறு ரூபாய்களுக்கு சோரம் போபவர்கள் நாளை அதிக பணத்திற்காக எமது இரகசியங்களை நடமாட்டங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். தண்டனை கடுமையானது தான் ஆயினும் இன்றைய நிலைமையில் தவிர்க்க முடியாதது இப்படிப்பட்ட தண்டனை.

ஈழததிலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சரி என்று தெரிகின்ற ஒரு பார்வை சமுதாயத்தில் எவ்வாறு பிழை என்று நோக்கப்படலாம். சிறுவர் துஸ்பிரயோகத்தைக் கூட, நாளைக்கு ஒருவர் பண்பாட்டு மீறல் தானே என்று சொன்னால் கூட உங்களின் வாதம் பொய்த்துப் போகலாம்.

தண்டனைக்கு பயந்து தான் மனிதன் இயல்பாக நடக்கின்றான். கலவரம் வந்தால், ஊரைக் கொள்ளையடிப்பதோ, சிறிலங்கா அரசு பொருளாதாரத் தடை மூலம் யாழ்பாண மக்களைப் பட்டினி போடுகின்ற நிலையில், மறுபக்கம் பதுக்கல் செய்கின்ற கொள்ளை வர்த்தகக் கூட்டம் போல, பல விடயங்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

எனவே, முறை தவறிய எந்த நடத்தைகiளும் தண்டிப்பதன் மூலம் தான் கட்டுப்படுத்தலாம். கண்டங்களோடு மட்டுமிருந்தால் இன்றைய கண்காணிப்புக் குழு போல கையாகத நிலையில் தான் இருக்கும்.

தண்டனைகள் இன்றைய நிலையில் தவிர்க்க முடியாமல் இருக்கிறது என்பது, அதை நாம் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதும் எனக்கு புரிகிறது.

தண்டிக்கப்படும் பெண்கள் பற்றி செய்தியை எமது ஊடகங்களும், சமூகமும் அணுகுகின்ற முறை எனக்கு ஏற்புடையதாக இல்லை.

சிறுவர் துஸ்பிரயோகமும், வன்புணர்வும் மனித உரிமை மீறல்.

ஆனால் ஒவ்வொரு சமூகமும் தனித்துவமான பண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இவைகள் காலத்துக்கு காலம் மாறவும் செய்கின்றன.

தமிழினத்தின் இன்றைய பண்பாட்டின்படி "ஆணும் பெண்ணும் திருமணம் செய்து பின் கூடுதல்" என்பது வலியுறுத்தப்படுகிறது.

இதே நேரத்தில் திருமணத்திற்கு முன்னான கலவி குறித்தும் இன்னொரு பக்கம் விவாதங்கள் கிளம்புகின்றன. காதல் திருமணங்கள் அதிகமான இன்றைய சுூழ்நிலையில் இது சாதரண ஒன்றாகவும் மாறி வருகிறது.

ஆகவே பண்பாடுகள் காலத்திற்கு காலம் மாறும். சில நு}று ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக சமுதாயமும் பலவிதமான கட்டுப்பாடுகளோடு இருந்தது. மேற்குலக சினிமாவின் முதல் முத்தமும் பரபரப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.

ஆகவே 50, 100 வருடங்களிற்கு பிறகு எமது சமுதாயம் இதே பண்பாட்டோடு இருக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது.

இதனால் பொதுவாகவே நாகரீகம் மிக்க எந்த சமுதாயமும் "பண்பாட்டு மீறல்களுக்கு" கடுமையான தண்டனைகளை வழங்குவதில்லை.

ஆனால் நாம் வழங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் எமது போராட்டம் நிற்கிறது. வேறு வழியின்றி தண்டனை வழங்கப்படுகிறது.

இதை கண்டிக்கவும் முடியாது. வரவேற்கவும் முடியாது.

ஆனால் எமது ஊடகங்களும் சமூகமும் அப்படியா இருக்கின்றன?

இதனால் பொதுவாகவே நாகரீகம் மிக்க எந்த சமுதாயமும் "பண்பாட்டு மீறல்களுக்கு" கடுமையான தண்டனைகளை வழங்குவதில்லை.

ஆனால் நாம் வழங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் எமது போராட்டம் நிற்கிறது. வேறு வழியின்றி தண்டனை வழங்கப்படுகிறது.

சபேசன், உங்களையும் இங்கை எழுதுறவை 1 நாளிலை மூளைச்சலவை செய்து போட்டினம் போல கிடக்கு .

ஊடகங்களில் எழுதுகிறார்கள் என்பதால் அற்காகத்தான் என்று நீங்களும் முடிவு எடுத்திட்டியள் போல கிடக்கு.

குறுக்காலபோவான்! நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

ஒரு பெண் இராணுவத்தினருடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பதை நான் துரோகமாக பார்க்கவில்லை.

ஆனால் அதன் மூலம் அப் பெண் துரோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதையும் நான் மறுக்கவில்லை.

அதனால் வேறுவழியின்றி அப் பெண் போராட்டத்தின் நலன் கருதி "அகற்றப்படுவதை" நான் சகித்துக் கொள்கிறேன்.

ஆனால் என்னால் இதை வரவேற்கவும் முடியவில்லை. பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பண்பாடு மாறும் பண்பாட்டு விழுமியங்கள் மாறாது காவப்படும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டு விழுமியம் பாதுகாக்கப்பட வேண்டும். கலவி செய்து காதல் செய்யட்டும் கலியாணம் செய்யட்டும்..காதல் செய்து கலியாணம் செய்து கலவி செய்யட்டும் அது எத்தன்மை வாய்ந்திருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படை நிச்சயம் பேணப்பட வலியுறுத்தப்படும்.

முன்னரே நாம் கூறியது போல வலுவான குடும்பமும் உறவு முறைகளுமே எமது சமூகத்தின் பலம். அதை இழக்கக் கூடிய வகையிலான பண்பாட்டு கலாசாரச் செருகல்கள் ( மாற்றங்கள் அல்ல செருகல்கள் என்பதே சரியான பதம்) அனுமதிக்கப்படமாட்டாது.

வல்லுறவு மற்றும் சட்டவிரோத பாலியல் தொழில் இரண்டுமே ஈழத்தில் தடை செய்யப்படவை. சமூக ஒழுக்கத்துக்கு தனி மனித ஒருக்கத்துக்கு அப்பாலான அனைத்துவித பாலியல் நடத்தைகளும் தவிர்க்கப்படுவது கட்டாயம். அதுவே பலமான சமூக அமைப்புக்கு உதவும்.

குஷ்பு சொன்னது போல கலவி செய்தி திருமணம் செய்யட்டும். ஆனால் அதை அவர் திருமணமாக உள்ளவ்ருடனேயே செய்து கொள்ளலே வலியுறுத்தப்படுகிறது. அதை விடுத்து கலவி செய்தி ஆட்களைத் தெரிவு செய்யச் சொல்லவில்லை. இப்படியான பாலியல் சிந்தனைகள் தான் பாலியல் துர்நடத்தைகளுக்கு மனிதர்களை இட்டுச் செல்கிறது. பாலியல் உணர்வுகளைக் கிளறிவிடுவது இலகு. அதைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமுள்ள மனிதர்களாக மனிதர்களை உருவாக்குதல் அவ்வளவு இலகுவான காரியமல்ல.

பாலியல் என்பது உயிரினங்களின் அடைப்படை. அந்த வகையில் மனிதரில் அது முக்கியம். ஆனால் அது கட்டுப்பாட்டுக்குள் இருந்து பெறப்பட வேண்டியதே மனித சமூக விருத்திக்கும் சமூக ஒழுங்குக்கும் தனிமனித ஒழுக்கத்துக்கும் நல்லது. :idea:

  • தொடங்கியவர்

தண்டனைகள் இன்றைய நிலையில் தவிர்க்க முடியாமல் இருக்கிறது என்பது, அதை நாம் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதும் எனக்கு புரிகிறது.

தண்டிக்கப்படும் பெண்கள் பற்றி செய்தியை எமது ஊடகங்களும், சமூகமும் அணுகுகின்ற முறை எனக்கு ஏற்புடையதாக இல்லை.

சபேசன் ஒரு கைதிக்கு நிதிபதி தண்டனை கொடுக்கும் போது அவரின் நடத்தைகளையும் சுட்டி காட்டுவது இல்லையா?

அதே போல தான் உளவு பார்த்ததோடு சமுக சீரழிவும் சுட்டி காட்டபடுகிறது இதை 5 6 பக்கம் கொண்டு செல்லும் அளவுக்கு பாலியலையும் சுட்டி காட்டியது தவறு என்று வாதாடுவது என்ன என்று சொல்லுவது? :roll:

துயவன் சொன்னது.....

சிறிலங்காவின் பத்திரிகைகளில் கிழமையில் ஒவ்வொரு செய்தியாவது சிறுவர் துஸ்பிரயோகம் பற்றி வருவதை நிச்சயமாகப் பலர் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்றால் அது குறித்தான தண்டனைக் காலம் என்று அங்கு குறைவாகும். அதைப் பண்பாட்டு மீறல் என்று கண்டித்துக் கொண்டிருக்க முடியாது.

தங்களுடைய இந்த கருத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது

''தமிழீழ விடுதலைப் புலிகளின்'' ஆழுகைக்குள் உள்ள பிரதேசத்தில்

இவ்வாறான பாலியல் தொடர்பு உள்ளதா...???

பத்திரிகையில் நாளந்தம் வருகிறதா...???

என்பதே கேள்வி பதில் இல்லை...

ஏன்....???

இது தான் அவர்களது நிர்வாகம். பாதுகாப்பு.சட்டம்.

ஒழுக்கம். எம்தமிழர் பண்பாடு அங்கு தான் கட்டி காக்க படுகிறது

ஆனால் இலங்கை தேசத்தில் அல்ல.

அவர்கள் அங்கு ''சிவப்பு விடுதி' வைத்து நடாத்துகிறார்கள்

அது அவர்களின் சட்டம்.

எத்தனை சிறு பிள்ளைகள் வ Pட்டு வேலைக்கு என

அமர்த்தி எத்தனை இந்த கொடுமை நடக்கிறது

ஏன் எம் தமிழர் கூட இதை செய்கிறார்கள்.

அங்கு லஞ்சம் பாதுகாப்பு. நிர்வாக ஒழுக்கம்

என்பன கெட்டு போய் கிடக்கின்றன.

ஆனால் தமிழீழத்தில் அப்படி அல்ல.

இதற்கு ஒரு உதரணம் சொல்கிறேன் '' பளையில்''

சில வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரியயை வெட்டி கொலை செய்தார்கள் நால்வர்.

தான் காதலித்தபோது அப் பெண் தன்னை காதலிக்கவில்லையாம்

சாதிய அடிப்படையில் நடை பெற்றது.

காதலனே காதலியை கொலை நபரோடு சோந்து துண்டு துண்டாய் வெட்டி கொலை செய்தார்கள்

இதை அறிந் விடுதலை புலிகள் நடவடிக்கையில் இறங்கினர்.

உடனடி விரைவு உளவு தகவலின் அடிப்படையில் சொற்ப்ப மணி நேரத்தில் புலிகள்

அந்த நால்வரையும் கைது செய்து விசாரித்து.

அணைத்தும் ஆதர புர்வமாக உறுதிப் படுத்தி மக்கள் முன்னால் மரண தண்டணை கொடுத்தார்கள்.

அந்த பெண்ணின் தாயும். சகோதரனும். எனக்கு அந்த கதையை சொன்னபோது......

இங்கு தான் புலிகளின் நிர்வாகம். தொடர்பாக நாங்கள் சிந்திக்க வேண்டும்...

எனவே தூயவன் இலங்னை என்ற பதத்திற்குள் எம் தமிழர் நிகழ்வுகளை பார்க்காதீர்கள்.

நன்றி

வன்னி மைந்தன்

சபேசன் சொன்னது

ஆகவே 50இ 100 வருடங்களிற்கு பிறகு எமது சமுதாயம் இதே பண்பாட்டோடு இருக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது.

சபாஸ் சரியான எதிர்வு கூறல்....

இதை எழுதுவதற்காக என்னை எத்தனை பேர் கடித்துக் குதறப் போகிறீர்களோ தெரியவில்லை.

எதிரி நாட்டிற்கு உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். இதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

ஆனால் ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதை, ஒரு நாடோ, இனமோ, சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமா?

quote]

சபேசனின் வாதங்கள் - சில தலைப்புக்களில் - ஆக்கபூர்வமாய் இருந்ததை -கண்டிருக்கிறேன்!

ஆனால் இங்கே??

ஒரே தடுமாற்றம் உங்கள் - கருத்துக்களில்!

முதல் பதிவிலிருந்தே- ஆரம்பம் அது:

எதிரி நாட்டிற்கு உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். இதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

ஆனால் ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

எதிரி படையுடன் - பாலியல் உறவே வைத்துக்கொள்ளும் அளவிற்கு போகும் ஒரு பெண்- உளவு விடயங்களை - அவர்களூடன் - பகிர்ந்திருக்கமாட்டார் என்று -கருதுகிறீர்களா?

ஒரு தேச போராட்டத்தில் - உளவுக்கு தண்டனை - வழங்குவது நியாயம் என்று நீங்கள் - ஒப்புக்கொண்டது - உண்மையானால்- அதே தேச பிரஜை இரண்டையும் - சேர்த்து எதிரிகளுடன் - பகிர்ந்தால்....அதுக்கும்

என்ன தண்டனை - சரியா இருக்குமென்று நீங்கதான் சொல்லணும்!

மற்றும்படி - பாலியல் - அங்கீகாரம்- தொழில்- என்றபோக்கில் - ஒரு விரசமான கருத்தால் - அந்த விடயங்களை பெரிசா விமர்சிக்க விரும்பல!

அதுவெல்லாம் - அரசியல் எல்லைகளை தங்களுக்கும் - அயல் நாட்டுக்குமிடையில் - ஏற்படுத்திக்கொண்டவர்களுக்க

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்...

எம் தமிழ் முன்னி வான் ஊடகம் ஒன்று ஒரு அகதி முகாமில்

பல பெண்களிடம் இது சம்பந்தமாக பேட்டி கண்டது.

அப்போது அந்த பெண்கள் சொன்ன கருத்து...எங்கள் வறுமை ஒழிக்க நாங்கள் இவ்வாறு நடக்க வேண்டி உள்ளது...

வேறு வழியில்லை என பிள்ளைகளை காக்க....

கண்ணீருடன் அந்த தாய்...

இதை என்ன வென்று சொல்ல....???

இடம் பெயர்ந்து பெயர்ந்து சொத்து இழந்து ...

விரக்த்p நிலை வறுமையின் உச்சம்....

இதை கேட்டு எல்லோரும் வாயடைத்து நிண்டார்கள் இவர்களை யார் போய் காத்தார்கள் இது வரை....???

கொழும்பில் இருந்து வெளி வருகின்ற தின.வார முன்னி தமிழ் பத்திரிகை இதை

ஆதர காடசியுடன் அந்த கண்ணீர் செய்தியை வெளியிட்டது.....

என்ன நடந்தது....???

வடக்கு.கிழக்கில் எயிட்ஸ நோய் வந்தது எப்போது...???

யாhரல்.....???

எச் சந்தர்பத்தில்.....???

இவை உருவெடுக்கும் இடங்கள் எவை.....???

பாமரணிடையா...???

பட்டறிவு உள்ளவனிடையா....???

இந்த கருத்து பாலியல் என்ற hPதியில் இதை வைக்கிறேன்...

சபேசன் எடடுத பொருளுக்கும் இதற்கும் பொருத்தமில்லை என நினைக்கிறேன்...

ஆனால் சம்பவம்..''பாலியல் ''

அவ்வளவே....

வன்னி மைந்தன்

தண்டனைகளின் கடும் போக்குத் தான் தற்போது சமூகச் சீர்கேடுகளை திருத்த முடிந்த ஒரே வழி. அதுவும் பாழ்பட்டுக் கிடக்கின்ற எமது சமூகத்திற்கு இப்படியான தண்டனைகள் இன்னும் ஒருவரை அவ்வழிக்கு செல்லவிடுவதை தவிர்க்கும். தடுக்கும். தவறுகளை ஒறுக்கும். தற்போதைய நிலையில் இத்தண்டனைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எமது மண்ணை நாமே ஆளும் பொது இச் சட்டங்களின் கனதியை குறைக்கலாம். ஆனால் தற்போதைய காலத்தில் எதிரியுடனான தவறான உறவு நிச்சயமாய் எமது சமூகததிற்கு விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய ஊறு விழைவிக்கக் கூடியதொன்றே.

ஈழத்திலிருந்து

ஜானா

வர்ணன்! என்னுடைய கருத்துக்கள் இதில் தடுமாற்றமாக இருக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

என்ன செய்வது?

எனக்கு இரண்டு பிரச்சனை

ஒன்று:

"ஆரோக்கியமான விவாதம்" என்றால் என்னவென்று இங்கு உள்ள பெரும்பாலானவர்கள் தெரியாது இருக்கிறார்கள். மிக இலகுவாக எனக்கு துரோகி பட்டம் கட்டி விடுவார்கள்.

இரண்டு:

அதிலும்"பாலியல்" என்று தொடங்கி விவாதிப்பதற்கு எமது சமூகம் இன்னும் முற்று முழுதாக தயாராகவில்லை. அதை ஒரு தீண்டத்தகாத ஒன்றாகவே பார்க்கிறார்கள்.

இந்தக் காரணங்களினால் நான் வெளிப்படையாக கருத்துக்களை தர முடியாமல் இருக்கிறேன்.

  • தொடங்கியவர்

ஒன்று:

"ஆரோக்கியமான விவாதம்" என்றால் என்னவென்று இங்கு உள்ள பெரும்பாலானவர்கள் தெரியாது இருக்கிறார்கள். மிக இலகுவாக எனக்கு துரோகி பட்டம் கட்டி விடுவார்கள்.

சபேசன் வீன் குற்ற சாட்டை போட வேண்டாம் இதுவரை இந்த தலைப்பில் தனிநபர் கருத்தோ இல்லை துரோகி என்றோ கூறவும் இல்லை

நல்ல ஆரொக்கியமாக போகீறது ஆனா ஒவருவரின் பார்வைகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பாக்காதீர்கள்.

இப்போது முதல் முதலாக நீங்கள் தலைப்பை திசை திருப்பும் விதமாக கருத்து வைத்து இருக்கிறீங்கள்

எல்லோரையும் சொல்லவில்லை. ஆனால் பொதுவாகவே (யாழ் களத்தில் மட்டும் என்று இல்லை) தமிழர்களில் பெரும்பாலானவர்கள் "விவாதம்" என்றால் என்ன என்றே தெரியாது இருக்கிறார்கள்.

நீங்கள் ஐரோப்பாவின் தொலைக்காட்சிகளில் நடக்கின்ற அரசியல் விவாதங்களை பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு விவாதத்தில் எமது தமிழர்களை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

இதனால் சில குறிப்பிட்ட விடயங்களில் வெளிப்படையாக கருத்துக்களை சொல்லி விவாதிக்க முடிவதில்லை.

இதை வர்ணனின் கருத்துக்கு பதிலாகவே சொன்னேன். விவாதத்தை திசை திருப்புவது என்னுடைய நோக்கம் அல்ல.

இதனால் பொதுவாகவே நாகரீகம் மிக்க எந்த சமுதாயமும் "பண்பாட்டு மீறல்களுக்கு" கடுமையான தண்டனைகளை வழங்குவதில்லை.

ஆனால் நாம் வழங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் எமது போராட்டம் நிற்கிறது. வேறு வழியின்றி தண்டனை வழங்கப்படுகிறது.

சபேசன், உங்களையும் இங்கை எழுதுறவை 1 நாளிலை மூளைச்சலவை செய்து போட்டினம் போல கிடக்கு .

ஊடகங்களில் எழுதுகிறார்கள் என்பதால் அற்காகத்தான் என்று நீங்களும் முடிவு எடுத்திட்டியள் போல கிடக்கு.

குறுக்காலபோவான்! நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

நீங்கள் சொல்வதை (அடையாளமிடப்பட்டிருக்கிறதை) பார்த்தால் பாலியல் தொடர்பு என்பதாலும் தான் அந்த மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கு என்ற முடிவிற்கு வந்திருக்கிறியள் போல கிடக்கு. அது மாத்திரமல்ல உங்கள் வசன நடையை பார்த்தால் மேற்குறித்த நிகழ்விற்கு அப்பால் வழமையாக (தாயகத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில்?) பண்பாட்டை மீறிய பாலியல் தொடர்புகளிற்கு கடுமையான (மரண?) தண்டனை நிறைவேற்றப்படுகிறது போன்று உள்ளது.

இந்த முடிவிற்கு இங்கு எழுதப்பட்ட கருத்துகளில் இருந்து "சமுதாயத்தின் நிலைப்பாட்டை நாடிபிடித்து" எடுத்த முடிவா இல்லை தாயகத்தில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல் எடுத்து அந்த முடிவிற்கு வந்தீர்களா?

இல்லை ஊடகங்களில் எழுதப்பட்டதை வைத்து வந்தீர்களா?

குறுக்காலபோவான்! மேற்கூறிய வசனங்கள் குறிப்பிட்ட செய்தியை வைத்துக் கூறப்பட்டதல்ல.

ஆனால் "எதிரியுடன் பாலியல் தொடர்பு" வைத்திருப்பவர்கள் தண்டிக்கப்படுவது என்பது எமது மண்ணில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது என்று சொன்னேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.