Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் வயிற்றிலும் அடித்து உங்கள் உறவினர் வயிற்றிலும் அடிப்ப

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வயிற்றிலும் அடித்து உங்கள் உறவினர் வயிற்றிலும் அடிப்பதற்கு உங்கள் பணமே செலவிடப்படுகின்றது.!

சிறிலங்காவிற்குச் செல்லவேண்டாமென சில வெளிநாட்டமைச்சுகள் தமது நாட்டவர்களுக்கு அறிவித்தததையடுத்து, சிறீலங்காவிற்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தமது பயணங்கள் யாவற்றையும் ரத்துச்செய்துவிட்டனர். இதனால் சிறீலங்காவின் விமான சேவையான சிறீலங்கன் ஏயர்லைன்சுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டது. பயணிகளைக் காவிச்செல்லும் இவ் விமானம், தற்போது பொதிகளை மட்டுமே சிறீலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. அவ் விமானங்கள் திரும்பி சிறீலங்கா செல்லும்பொழுது மிகவும் குறைந்த பயணிகளையே காவிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந் நிலையில் விமானச் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தள்ளாடிய விமானச்சேவையின் சந்தைப்படுத்தல் பிரிவு, திடீரென தமது விமானச்சேவையின் கட்டணத்தை சரிபாதியாக அறிவித்தது. லண்டனிலிருந்து செல்வதற்கு 199பவுண்களும் ஐரோப்பாவிலிருந்து செல்வதற்கு 199 ய+ரோக்களும் என அறிவித்தது. அத்தோடு சில கட்டுப்பாட்டு விதிகளையும் அந்த விலையில் செல்வோருக்கென அறிவித்திருந்தது. அதாவது இணையத்தளத்தினூடுதான் இருக்கைகளைப் பதிவு செய்யலாம், பயணச்சீட்டுக்களில் எந்தமாற்றமும் செய்யமுடியாது, குறிப்பிட்ட நாட்களிpலேயே பயணிக்க முடியும், கொண்டு செல்லும் பொதிகள் 20 கிலொவிற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகள்.

இதில் வேடிக்கை என்ன என்றால். சிறீலங்கன் ஏயர்லைன்சின் தூண்களாக இருக்கும் பிரயான முகவர்களுக்கு (ரவல் ஏஜன்ற்ஸ்) இந்தச் சலுகை வழங்கப்படவில்லை. நீங்கள் சாதாரணமா ஒரு ரவல் ஏஜன்ற்றிடம் உங்கள் விமானப்பயணத்திற்கான ரிக்கற்றை கொள்வனவு செய்தீர்களானால் அதன் விலை அண்ணளவாக 460 பவுண்கள். ஆம் சாதாரணமாக நீங்கள் வாங்கும் ரிக்கற்றின் விலையே. சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் இந்த 50வீதச் சலுகையை தனது எந்த பயணமுகவர்களுக்கும் வழங்கவில்லை. தனது நேரடி நிர்வாகத்திலேயே வழங்கிவருகின்றது. இதற்கான காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்க்கையில்... தமிழன் என்றொருகாரணமும் விளங்கக் கூடியதாக உள்ளது.

வெளிநாட்டிலிருக்கும் சிறீலங்கன் ஏயர்லைன்சின் பயணமுகவர்களை எடுத்துப்பார்த்தீர்களானால் அதில் 95 வீதத்திற்கு மேற்பட்டோர் தமிழர்கள் என்றே குறிப்பிட்டுச் சொல்லலாம். சாதாரணமாக ஒரு தகவல் ஏட்டினை எடுத்து பயணமுகவர்கள் பக்கம் திருப்பினீர்களானால் அதில் பக்கம் பக்கமாக எமது தமிழர்களின் நிறுவனங்களே இருக்கும். சாதாரணமாக ஆசிய மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்குச் சென்றுபார்த்தால் அங்கு பல ஈழத்தமிழர்களின் பயணச்சேவை நிறுவனங்களைக்காணலாம். ஆக மொத்தத்தில் நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டுப் பார்க்காமலே இங்கு திட்டமிடப்பட்டு என்ன நடக்கின்றது என்பதை விளங்கக்கூடியதாக இருக்கும்.

அது மட்டுமன்றி; சிறீலங்கன் ஏயர்லைன்ஸ் தனது பயணச்சீட்டினை இணையத்தளத்தினூடாக விற்கும்பொழுது சாதாரணமாக என்ன விலையில் விற்கின்றதோ அதே விலைக்குத்தான் இந்தப் பயணமுகவர்களுக்கும் வழங்குகின்றது. அதாவது விசேட விலைக்குறைப்பு இல்லாத காலங்களில் விற்கும் விலையினையே தனது முகவர்களுக்கும் வழங்குகின்றது. பின்னர் முகவர்கள் அந்த விலையிலிருந்து 5-10 கூட்டி தமது வியபாரத்தை ஓட்டிச் செல்கிறார்கள். காலப்போக்கின் சிறீலங்கன் ஏயர்லைன்ஸ் தனது சேவையை எந்த முகவர்களுமின்றி இணையத்தளத்தினூடே செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுதில்லை.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், இந்த சிறீலங்கன் ஏயர்லைன்ஸ் நாளொன்றிற்கு இரண்டு தடவைகள் தனது லண்டன் கொழும்பு சேவையை நடத்துகின்றது. ஏன் நடத்துகின்றது என்று சிந்தித்துப்பார்த்தால் அங்கும் தமிழர்கள் என்ற பெயரே முன்னுக்கு வருகின்றது. அதாவது நாம் இங்கு தமிழ்க் கடைகளில் கொள்வனவு செய்யும் சிலோன் மரக்கறிவகையிலிருந்து, மீன்வகைகள், பத்திரிகைகள், இன்னோரன்ன உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதற்காகவே இச் சேவை மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆக இரண்டு விதங்களில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இலங்கை அரசுக்கு வெளிநாட்டுச் செலவாணியை வழங்குகின்றோம்.

1. பிரயாண முகவர்களாகி 50வீதம் அதிகரித்த விலைகொடுத்து பயணச்சீட்டை வாங்குகின்றோம்

2. சாதாரண மக்களாகி முருக்கங்காயிலிருந்து நெக்டோ சோடாவரை இறக்குமதிசெய்து வழங்குகின்றோம்.

சாதாரணமாக ஒரு பாதையைத் திறந்து 6 லட்சம் மக்களுக்கு உணவளிக்க மறுக்கும் இலங்கை அரசிற்கு நம்மையறியாமலே? நாம் பணத்தைவழங்குகின்றோம். கொழும்பிலிருந்து யாழ் செல்வதானால் 40ஆயிரத்திலிருந்து 60ஆயிரம் ரூபா வரை இப்போது விமானச் சீட்டு விற்கப்படுகின்றது. ஆனால் லண்டனிருந்து கொழும்பிற்கு வந்துபோவதற்கு ஆம் றிற்றேன் ரிக்கற்றுக்கு அதைவிடக் குறைவாகவே செலவாகின்றது.

யாழிலுள்ள மக்களுக்கு உணவு வழங்குவதற்கு ஒரே ஒரு கப்பல் சேவை மட்டுமே பயன்;படுத்தப்படுகின்றது. அதுவும் வாரத்திற்கு ஒரு முறை. ஆனால் லண்டனிலிருக்கும் ஒரு லட்சம் மக்களிற்கு உணவுப் பொதிகளைஇறக்க இரண்டு விமானசேவைகள் ஒரே நாளில் வந்துபோகின்றது.

யாழிற்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்கள் யாவும் மாதக்கணக்கின் தேக்கிவைக்கப்பட்டு செல்வதால் எடுத்துச்செல்லப்படும் பொருட்கள் அரைவாசிக்குமேல் பழுதடைந்து செல்கின்றது. ஆனால் கொழும்பில் அதிகாலையில் பிடிக்கப்பட்ட மீன் லண்டனில் அதே நாள் காலையில் கிடைக்கின்றது.

யாழிற்கு அனுப்பப்படும் தபாற்பொதிகள் செல்வதற்கு 30நாட்களுக்கும் மேல் ஆம் ஒரு மாதத்திற்கு மேல் எடுக்கின்றது. ஆனால் கொழும்பில் அச்சிடப்படும் பத்திரிகை அடுத்தநாள் லண்டனில் கிடைக்கின்றது.

ஏன் சிறீலங்கன் ஏயர்லைன்ஸ் இப்படி சலுகையைக் கொண்டுவந்தது என்று பார்ப்போமானால் தற்போதைய நாட்டுப் பிரச்சினைகளால் தமிழர்களும் வெளிநாட்டவர்களும் செல்வது மிகவும் குறைந்து விட்டது. எனவே சிங்களவர்கள் செல்வதற்கு மட்டுமே இந்த விலை குறைப்பை சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் செய்துள்ளது. அதுமட்டுமல்லாது அதற்கான வரிப் பணத்திலும்; 100 பவுண்களைக் குறைத்துள்ளது. சாதாரணமாக சிறிலங்கன் ஏயர்பஸ்சின் ஒரு இருக்கையின் கொள்வனவு விலை 270 பவுண்கள். அதாவது இவ் விமானம் 90வீதமான பயணிகளுடன் பயணிப்பதாயின் ஒரு இருக்கைக்குச் செலவாகும் பணம் 270 பவுண்கள். ஆனால் கொள்வனவு விலையை விட 70பவுண்களைக் குறைத்து கொடுக்கின்றது.

அதை விட மற்றய விமானச்சேவைகளை விட சிறீலங்கன் எயர்லைன்சினால் அறவிடப்படும் வரிப் பணம் மிக அதிகம். உதாரணமாக சில விமானச் சேவைகளின் வரி விபரங்களை கீழே தருகின்றோம்.

கட்டார் ஏயர்லனைஸ் - 112.00

குவைத் ஏயர் - 95.00

எடித் எயர் - 102.00

சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் - 140.00

எனவே இது தமிழ் மக்கள் சிந்தித்து செய்லபடவேண்டிய காலம். சிறீலங்கன் ஏயர்லைன்சை பிரதான முகவராகக் கொண்டு இயங்குவதாக தம்பட்டம் அடிக்கு தமிழ் பிரயாண முகவர்களே சிந்தியுங்கள்? உங்கள் வயிற்றிலும் அடித்து உங்கள் உறவினர் வயிற்றிலும் அடிப்பதற்கு உங்கள் பணமே செலவிடப்படுகின்றது.!

நல்லதொரு விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சிந்தித்து செயல் பட வேண்டிய விசயங்களை அழகாக சொல்லி இருக்கிறீங்க

இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், இந்த சிறீலங்கன் ஏயர்லைன்ஸ் நாளொன்றிற்கு இரண்டு தடவைகள் தனது லண்டன் கொழும்பு சேவையை நடத்துகின்றது. ஏன் நடத்துகின்றது என்று சிந்தித்துப்பார்த்தால் அங்கும் தமிழர்கள் என்ற பெயரே முன்னுக்கு வருகின்றது. அதாவது நாம் இங்கு தமிழ்க் கடைகளில் கொள்வனவு செய்யும் சிலோன் மரக்கறிவகையிலிருந்து, மீன்வகைகள், பத்திரிகைகள், இன்னோரன்ன உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதற்காகவே இச் சேவை மிகவும் பயன்படுத்தப்படுகின்றது.

சரி நம்மட கேள்வி??? குறை விளங்கவேண்டாம் உதுக்கு மாற்றுவளி இருக்காாாாா

சரி அதை விடுவம் நாம பேச்சு வார்த்தைக்கு சுவிசுக்கு வாறதெண்டாலும் உந்த பிளேனில தான் வரவேண்டும் எண்டு நினைக்கிறன்

நான் நினைக்கிறது என்ன எண்டா நமக்கு என்று ஒரு விமாசேவையும் விமானநிலையமும் வரும் வரை இதைபயன்படுத்தியே ஆகவேணும் அதன் விலை எவ்வளவு எண்டாலும்

:? :? :? :? :? :? :? :? :? :? :? :? :? :? :?

நன்றீ வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சரி நம்மட கேள்வி??? குறை விளங்கவேண்டாம் உதுக்கு மாற்றுவளி இருக்காாாாா

சரி அதை விடுவம் நாம பேச்சு வார்த்தைக்கு சுவிசுக்கு வாறதெண்டாலும் உந்த பிளேனில தான் வரவேண்டும் எண்டு நினைக்கிறன்

நான் நினைக்கிறது என்ன எண்டா நமக்கு என்று ஒரு விமாசேவையும் விமானநிலையமும் வரும் வரை இதைபயன்படுத்தியே ஆகவேணும் அதன் விலை எவ்வளவு எண்டாலும்

:? :? :? :? :? :? :? :? :? :? :? :? :? :? :?

நன்றீ வணக்கம்

இல்லாவிடில் மிளகாய்த்தூள் அரிசிமா புட்டி இடியப்பம் தோசை முருக்கங்காய் கத்தரிகாய் புடலங்காய் முருங்கையிலை வாழைப்பூ விளைமீன் கணவாய் நண்டு சாப்பிடுவதை நிறுத்தி பஸ்ரா பிசா கேபப் சிப்ஸ் பிஷ் சிக்கன் சாப்பிட்டுப் பழகினீர்கள் என்றாலும் தீர்வு தேடலாம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. வெறும் எழுத்தில மட்டும் வீராப்புப் பேசிடலாம். சிந்திங்க சிந்திங்க என்று எழுதியே பொழுது போய்விடும். மாற்றங்கள் மட்டும் நிஜத்தில் 0 .

இல்லாவிடில் மிளகாய்த்தூள் அரிசிமா புட்டி இடியப்பம் தோசை முருக்கங்காய் கத்தரிகாய் புடலங்காய் முருங்கையிலை வாழைப்பூ விளைமீன் கணவாய் நண்டு சாப்பிடுவதை நிறுத்தி பஸ்ரா பிசா கேபப் சிப்ஸ் பிஷ் சிக்கன் சாப்பிட்டுப் பழகினீர்கள் என்றாலும் தீர்வு தேடலாம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. வெறும் எழுத்தில மட்டும் வீராப்புப் பேசிடலாம். சிந்திங்க சிந்திங்க என்று எழுதியே பொழுது போய்விடும். மாற்றங்கள் மட்டும் நிஜத்தில் 0 .

மிக மிக நன்றி உங்கள் விளக்கத்துக்கு

8) 8) 8) 8) 8) 8) 8) 8)

இப்பொழுது ஆச்சி சமைத்த கோழிக்குளம்பை குப்பையிலே போடச்சொல்லிவிட்டேன்

இன்றில் இருந்து ஒன்லி பஸ்ரா பிசா கேபப் சிப்ஸ் பிஷ் சிக்கன்

நன்றி மீண்டும் ஒரு முறை

வணக்கம்

மற்றது பேச்சு வார்த்தை எண்டு வாறதெண்டா சைக்கில் இல வருவம்

:mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விளங்காப்பயல்;

கருத்துக்கள் அழகாக உண்மை நிலையை காரணங்களோடு விளக்குகிறது.

ஒவ்வொரு தமிழனும் தன் பொறுப் புணர்வுணர்ந்து நடந்தாலே போராட்டத்தின் பாதி பாதை இலகுவாக வெல்லப்படும்.

அரிசி மிளகாய் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய மலேசியா போன்ற நாடுகள் கிடையாதா? அங்கேயே தூள் போன்ற பொருட்களை தயாரிக்க இயலாதா? அதேபோல பயணம் செய்ய வேண்டி நேரிட்டால். அதற்கு வேறு விமான சேவைகளே இல்லையா?

ஸ்ரீலங்காவுக்கு எம்மாலான பொருளாதார இழப்பு ஏற்பட வேண்டுமாயின் எவ்வளவோ மாற்று வழிகள் இருக்கின்றனவே!

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி மிளகாய் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய மலேசியா போன்ற நாடுகள் கிடையாதா? அங்கேயே தூள் போன்ற பொருட்களை தயாரிக்க இயலாதா? அதேபோல பயணம் செய்ய வேண்டி நேரிட்டால். அதற்கு வேறு விமான சேவைகளே இல்லையா?

ஸ்ரீலங்காவுக்கு எம்மாலான பொருளாதார இழப்பு ஏற்பட வேண்டுமாயின் எவ்வளவோ மாற்று வழிகள் இருக்கின்றனவே!

சிறீலங்க கொட் பைசி சிலி தூள் இல்லாமல் சாப்பாடு இறங்குதில்லை என்று பெருமைப்படும் கூட்டத்தினர் மலேசிய பைசி சிலி சாப்பிடுவார்களோ?

யாழ்ப்பாணத்து விளைமீன் பாரைமீன் சாப்பிட நிற்பவர்கள் கேரளக் கடற்கரை குஞ்சு மீனைச் சாப்பிடுவார்களோ?

பனங்காயில் இருந்து தேங்காய் வரை தமிழ் கடையில் கிடைக்க வேணும். கதலி கப்பல் வாழைபழம் வேண்டும். இவை சும்மா கிடைக்குமா? மலேசியாவில் இருந்து இறக்குவதை விட செலவு குறைவு என்பதால் வியாபாரிகள் மலேசியாவை நாடமாட்டார்கள்.

ஆக சாப்பிடுவர்கள் இவற்றைச் சாப்பிடுவதை நிறுத்தினால் வியாபாரிகள் இறக்கமாட்டார்கள். தமிழ் கடைகளில் செஸ்ரேன் ஐரங்கள் அலங்கரிக்க வெஸ்ரேன் காரர்களும் தமிழ் கடைப்பக்கம் மூக்கைப் பிடிக்காமல் வந்து போக வசதியாவும் இருக்கும். பெயர்ப் பலகைகளையும் யாழ் கடை யாழ் சந்தை என்று போடுவதை மாற்றி உள்ளூர் பெயர்களின் போட்டால் நிச்சயம் சிங்கள நாட்டில் இருந்து இறக்கத் தேவை வராது.

சாப்பிடுவதை நிறுத்த எத்தனை தமிழர்கள் தயார்??? :idea: :?:

விளங்காபயல், நல்லதொரு ஆய்விற்கு நன்றி.

பயண முகவர் இல்லாது விமான சேவை நிறுவனங்கள் நேரடியாக மக்களிற்கு பயணச் சீட்டுகளை விற்கும் மாற்றங்கள் என்பது ஒரு பொதுவான மாற்றம் ஏனைய விமான சேவை நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்படுகிறது. இணையத்தில் பயணசீட்டுகளை மலிவான விலைக்கு தேடுவது என்பது ஒரு வழக்கமாகிவிட்டது. 9-11 தாக்குதலிற்கு பின்னர் விமானப்பயணங்கள் பாரிய சரிவை அடைந்து வந்த பொருளாதார நெருக்கடியில் அனைத்து வழிகளிலும் நிர்வாக முகவர் செலவுகளை குறைத்து நட்டத்தை தவிர்க்கவும்; மலிவு விலை பயணச் சீட்டுகள் மூலம் மக்களை பயணம் செய்ய ஊக்குவிக்கவும் என்று இந்த மாற்றங்கள் இணைய தொழிநுட்பத்தின் உதவி மூலம் மூச்சுப் பெற்றது.

வரி என்பது அந்த விமான நிறுவனத்திற்கு நீங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் விமான நிலைய நிர்வாகம் மற்றும் பயணத்தை முடிவுக்கும் விமான நிலைய நிர்வாகம் அறவிடும் கட்டணங்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் தான் சிறீலங்கனிற்கு அதிக வரி.

இன்று எமக்கு இருக்கும் சவால் தமிழ் பயண நிறுவனங்கள் ஒரு அணியில் ஒன்று திரண்டு ஏனைய விமான நிறுவனங்களோடு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது. மற்றும் இந்தியா ஊடான பயணங்களை ஊக்குவிப்பது. ஒன்று திரண்டு ஒரு consortium ஆக பேச்சுக்களில் ஈடுபட்டால் bargaining power கூடும் அதன் மூலம் நியாயமான விலையை பெற்றுக் கொள்ளலாம்.

சிறீலங்கா பொருளாதார புறக்கணிப்பு (Boycott Sri Lanka) என்பது ஒரு Brand ஆகா ஒரு Logo ஆகா விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

இந்த Boycott Sri Lanka Brand/Logo அங்கீகாரமாக நிறுவனங்கள் பெற்றுக் கொள்வது ஒரு பெருமையான விடையமாக மாத்திரம் அல்ல வாடிக்கையாளர்களை கவரும் வழியாகவும் இருக்க வேண்டும். அதற்கு வாடிக்கையாளர்களின் தெளிவு விழிப்புணர்வு அவசியம்.

மாற்று வழிகளில் உணவு இறக்குமதி என்பது முடியாத காரியம் அல்ல. இவற்றிற்கு வாடிக்கையாளர்கள் தயாராக வேண்டும். அதன் மூலம் தான் வியாபார நிறுவனங்களை மாற்றமடைய வைக்கலாம். வாடிக்கையாளர்கள் விழிப்புற இவை பற்றி தொடர்ச்சியாக ஊடகங்களில் கருத்துப்பகிர்வுகள் வரவேண்டும்.

IFT மற்றும் உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளிற்கான consortium ஒன்று இருக்கிறது. இவர்கள் சில முயற்சிகளை எடுத்து Boycott Sri Lanka இற்கான Logo மற்றும் நடைமுறைக்கு ஏற்புடைய வழிமுறைகள் பற்றி ஆலோசனைகளை வெளியிட வேண்டும். ஒவ்வொரு வணிக பொருட்களிற்கும் மாற்றுவழிகள் அதற்கான பொருளாதார இழப்புகள் என்பன பற்றிய ஆக்கபூர்வமான ஆய்வுகள் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ்!

புலத்தில் வினையோகிக்கப்படும் இலவச பத்திரிக்கைகளில் முன்பக்க பெரியவிளம்பரமாக இத்தகவல்களைக் கொண்டுவருவதற்க்கு எமது முயற்சியை எப்படி உபயோகப் படுத்தலாம்.

தவிர கடை உரிமையாளர்களையும் எப்படி விழிப்படைய வைக்கலாம். போராட்டத்துக்கு செலுத்துகின்ற ஆதரவு வேறாகவும், தொழிலின் வாருமானத்தில் காட்டுகின்ற அக்கறை வேறாக்கவுமே அதிகம் பேர் நோக்குவர். என்வே போதிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

boycott srilanka தான் boycott jaffna ஆக மாறியுள்ளதா?

சிறீலங்கா அரசு ஏ9 பாதையைத் திறக்க முடியாது என்று கூறியதில் இரண்டாவது பிரதான காரணம் விடுதலைப் புலிகளிற்கு வரிப்பணம் செல்லாமல் தடுப்பது என்பது?

முன்னரும் களத்தில் இப்படி ஒரு விவாதம் எழுந்த போது இந்த நடைமுறை தாயக மக்களுக்கு மேலதிக சுமையாகும் என்பது சிறீலங்கா அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் இறுக்கமடைவதில் செல்வாக்குச் செலுத்தலாம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மாவிலாறு அணைக்கட்டை மூடப் போய் இப்போ மாவிலாறும் இன்றி சம்பூரும் இன்றி இறுதில் திறந்து கிடந்த பாதையை மூடச் செய்து இன்று அதைத் திறப்பதே அரசியலாகி ஏன் இராணுவ மயமாகி வீணே கால இழுத்தடிப்புகளூடு தமிழர்கள் மீத நெருக்கவாரங்களே அதிகரித்துள்ளது.

இந்த மாவிலாறை மூடாத சூழ்நிலையில் இருந்த நிலையை மீண்டும் எட்டவே இன்னும் பல மாதங்கள் எடுக்கும் போலத் தெரிகிறது. வலிந்து உருவாக்கிய சிக்கலில் தமிழர் தரப்பு மாட்டிக் கொண்டிருப்பது போல வலிந்து உருவாக்கிக் கொள்ளப் போகும் இந்த boycott வார்த்தைக்கு கவர்ச்சியாக இருப்பினும் விளைவுகள் மக்களை தாயக மக்களைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். என்பதில் கவனம் அதிகம் செலுத்தப்பட வேண்டும்.

இதை ஏலவே இங்கு சிலர் முன்வைத்துள்ளனர்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12697

  • கருத்துக்கள உறவுகள்

boycott srilanka தான் boycott jaffna ஆக மாறியுள்ளதா?

சிறீலங்கா அரசு ஏ9 பாதையைத் திறக்க முடியாது என்று கூறியதில் இரண்டாவது பிரதான காரணம் விடுதலைப் புலிகளிற்கு வரிப்பணம் செல்லாமல் தடுப்பது என்பது?

முன்னரும் களத்தில் இப்படி ஒரு விவாதம் எழுந்த போது இந்த நடைமுறை தாயக மக்களுக்கு மேலதிக சுமையாகும் என்பது சிறீலங்கா அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் இறுக்கமடைவதில் செல்வாக்குச் செலுத்தலாம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மாவிலாறு அணைக்கட்டை மூடப் போய் இப்போ மாவிலாறும் இன்றி சம்பூரும் இன்றி இறுதில் திறந்து கிடந்த பாதையை மூடச் செய்து இன்று அதைத் திறப்பதே அரசியலாகி ஏன் இராணுவ மயமாகி வீணே கால இழுத்தடிப்புகளூடு தமிழர்கள் மீத நெருக்கவாரங்களே அதிகரித்துள்ளது.

இந்த மாவிலாறை மூடாத சூழ்நிலையில் இருந்த நிலையை மீண்டும் எட்டவே இன்னும் பல மாதங்கள் எடுக்கும் போலத் தெரிகிறது. வலிந்து உருவாக்கிய சிக்கலில் தமிழர் தரப்பு மாட்டிக் கொண்டிருப்பது போல வலிந்து உருவாக்கிக் கொள்ளப் போகும் இந்த boycott வார்த்தைக்கு கவர்ச்சியாக இருப்பினும் விளைவுகள் மக்களை தாயக மக்களைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். என்பதில் கவனம் அதிகம் செலுத்தப்பட வேண்டும்.

இதை ஏலவே இங்கு சிலர் முன்வைத்துள்ளனர்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12697

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு எழுதியது.

மாவிலாறு அணைக்கட்டை மூடப் போய் இப்போ மாவிலாறும் இன்றி சம்பூரும் இன்றி இறுதில் திறந்து கிடந்த பாதையை மூடச் செய்து இன்று அதைத் திறப்பதே அரசியலாகி ஏன் இராணுவ மயமாகி வீணே கால இழுத்தடிப்புகளூடு தமிழர்கள் மீத நெருக்கவாரங்களே அதிகரித்துள்ளது.

இந்த மாவிலாறை மூடாத சூழ்நிலையில் இருந்த நிலையை மீண்டும் எட்டவே இன்னும் பல மாதங்கள் எடுக்கும் போலத் தெரிகிறது. வலிந்து உருவாக்கிய சிக்கலில் தமிழர் தரப்பு மாட்டிக் கொண்டிருப்பது போல வலிந்து உருவாக்கிக் கொள்ளப் போகும் இந்த boycott வார்த்தைக்கு கவர்ச்சியாக இருப்பினும் விளைவுகள் மக்களை தாயக மக்களைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். என்பதில் கவனம் அதிகம் செலுத்தப்பட வேண்டும்.

அப்பு நெடுக்கு

தமிழ்த்தரப்பின் நடவடிக்கையின் விழைவுகள்; பாதி வெளிச்சத்தில், பாதி இருட்டில் கிடக்கும். மாவிலாறு போன்ற விவகாரங்களின் விழைவுகள் எல்லாம் இருட்டிலேயே கிடக்கின்றன, அதைக்காட்டி எதிரிக்கு படிஅளக்கும் கறுமங்களின் கவலைகள்தான், துன்பம் சொல்லி அழ வரவேண்டும்.

தேவன், முதலில் புறக்கணிப்பு சிறீலங்கா (Boycott Sri Lanka) என்ற விடையம் மக்களிடத்தில் கருத்துப்பரிமாற்றத்தை தூண்டுவதாக மாற வேண்டும். சிலரில் ஆரம்பித்து பலராகி ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த சமூகமாக இதைப்பற்றி சிந்தித்து கருத்துப்பரிமாறும் பொழுது ஒரு உறுதியான நிலைப்பாடு நோக்கி செல்லலாம் நடைமுறையிலும். பலர் சிந்தித்க்கும் பொழுது நல்ல பொருத்தமான தீர்வுகளை காண்பதும் சுலபமாகிறது.

அந்தவகையில் தற்பொழுது புறக்கணிப்பு சிறீலங்கா என்பது பலரின் கவனத்தை பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு வல்வைசகாறா வின் ஆக்கத்தையும் விளங்காபயலின் ஆக்கத்தையும் கூறலாம். அதே போல் ஆங்கில மொழியில் சங்கத்திலும் சில ஆக்கங்கள் வந்திருந்தது கடந்த வாரங்களில். தாயகபறவைகளில் வல்வைசகாறா போன்றவர்கள் இது விடையமாக ஒரு ஆக்கத்தை எழுதலாம். ஒருபேப்பருக்கு எழுதலாம். அந்த ஆக்கங்களிற்கு பிறகு வாசகர்கள் பதில் கருத்துக்களை கடிதங்களில் அனுப்புவார்கள். அவ்வாறு இந்த விடையம் தொடர்பான கருத்தாடலிற்கு பரவலாக momentum அதிகரிக்கும். மக்கள் முற்று முழுக்க இதில் உடன்பட வேண்டும். அதற்கு அவர்களை உணரவைக்கக்கூடிய ஆக்கங்கள் (விளங்காபயலின் போல்) வெளிவர வேண்டும்.

இது புலம்பெயர்ந்த சமூகங்களில் உள்ள பல நுறூ லட்சம் மக்களின் அன்றாட அத்தியாவசிய வாழ்வை பாதிக்கும் விடையம். எனவே மாற்றங்கள் கொண்டுவருதற்கு நீண்ட தயார்படுத்தல் தேவை. புரட்சிகரமாக திடீர் என்று ஒன்றையும் அமுல்படுத்த முடியாது. அத்தோடு மாற்று வழிகள் பற்றி அந்தந்த வர்த்தக துறையில் இருப்பவர்களினாலும் விடையம் தெரிந்தவர்களினாலும் ஆய்வுகள் செய்யப்பட்டு ஒட்டு மொத்த சமூக நலனிற்கா ஊடகங்களில் அவற்றை பகிர வேண்டும். ஏனை வர்த்தகர்களிற்கு வழிகாட்ட வேண்டும்.

ஒரு பரந்து பட்ட எழுச்சி விழிப்புணர்வை இந்த விடையம் தொடர்பாக ஏற்படுத்துவது முதலாவது அடிப்படைத் தேவை. அடுத்த கட்டமாக இதை பின்னபற்றுவதை அளவிட, தக்க வைத்துக் கொள்ள புறக்கணிப்பு சிறீலங்கா என்பதை நிர்வாக மயப்படுத்த வேண்டும். அதை ஒரு Brand Campaign ஆக செய்ய வேண்டும் Logo ஓடு. மேலும் புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் மாற்று வழிகள் தொடர்பாக ஒரு விபரமான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஒரு பலசரக்கு கடையை எடுத்தால் அவர்கள் தமது விளம்பரத்தில் தாம் புறக்கணி சிறீலங்கா வின் விதிகளின் படி 20 வீதம் அமுல் படுத்துவதாக சொல்லி அடுத்த 6 மாதங்களில் தாம் அதை 30 வீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு போட்டியாக இன்னொரு வியாபார நிறுவனம் தாம் ஏற்கனவே 35 வீதம் அமுல்படுத்துவதாக கூறி மக்களை கவர முயற்சிக்கிற நிலையை கொண்டுவர வேண்டும். வர்த்தக கோவைகளில் (Tamil yellow pages, business directories) இந்த அளவீடு ஒரு குறிப்பாக வர வேண்டும் ஒவ்வொரு தமிழரை நோக்கி வியாபாரத்தை எதிர்பார்த்து நிற்கும் நிறுவனங்களிற்கும்.

இதை வெற்றிகரமாக முழுக்க அமுல்படுத்த பல வருடங்கள் ஆகும். பல நுறூ லட்சம் மக்களின் சிந்தனையில், அன்றாட வாழ்வை பாதிக்கும் விடையத்தில் மாற்றத்தை கொண்டு வருவது என்பது இலகுவான விடையம் அல்ல. எனவே விறுவிறுப்பாக ஆரம்பித்து விட்டு சில வாரங்களில் மாதங்களில் மாற்றம் எதுவும் இல்லை என்று கைவிடுவது இதை பற்றி எதுவும் செய்யாதற்கு சமம். இந்த விடையத்தை தொடர்ச்சியான கவனத்திற்குரியதாக ஒரு நீண்ட கால நிகழ்ச்சி நிரலில் நிதானமாக அர்ப்பணிப்போடு அணுகினால் தான் வெற்றிகாணலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்காப்பயல் என்று பெயரை வைத்தால் விளங்காமல் எழுதலாமா? சோழியான் அண்ணா, நெடுக்காலபோவான், குறுக்காலபோவான், விளங்காப்பயல், கறுப்பி அக்கா, எல்லோருக்கும் ஒன்று சொல்ல நினைக்கின்றேன். சிறிலங்கன் எயர்லைன்ஸ் என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தை பற்றி, அதன் organisational culture பற்றி நன்றாக தெரிந்து கொண்டு கருத்து சொல்வது நல்லது.

எதற்காக ஒரு நிறுவனத்தையும் தமிழ் சிங்களவர் பிரச்சனையயும் இனைக்கின்றீர்கள்.

சிறிலங்கன் என்று பெயர் இருந்தால், சிங்களவர் அதிகாரிகளாக இருந்தால், அவர்கள் தங்கள் விருப்பம் போல நடந்து கொள்ளவும், நிறுவன சட்ட திட்டங்களை தமிழருக்கு எதிராகவோ அல்லது சிங்களவருக்கு சாதகமாகவோ மாற்றி அமைக்க முடியும் என நீங்கள் நினைப்பது தவறு.

சிறி லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தில் எமிரேற்ஸ் நிறுவனம் 43.6 சத விகித ஸ்ரேக் (stake) கை கொண்டுள்ளது. அந்த நிறுவனதின் செயற்பாடுகளில் என்ன முடிவு எடுப்பதாயினும், அது எமிரேற்ஸ் நிறுவனத்தின் கையிலும் தங்கி உள்ளது. விலைக்குறைப்பு, எவர் வயிற்றிலும் அடிப்பதற்காக அல்ல, இலங்கைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், அதனை ஊக்குவிப்பதற்காகவும், எமிரேற்ஸ் நிறுவனம் தனது நிலையை தக்க வைப்பதற்காகவும் எடுக்கப்பட்டது,..... இதனைக்கூட அரசியலாக்கும் நாம் எப்படி சமாதனாமாவது? நினைப்பது போல இலங்கை அரசாங்கம் சிறி லங்கன் எயர்லைன்ஸ் ல் முடிவுகளை மாற்ற முடியாது. மேலதிக விபரம் தேவை எனில் தருகின்றேன்.....

முழு விபரமும் அறியாமல் கருத்துகளை எழுதி சிங்களவர் சிரிக்கின்ற மாதிரி நடந்து கொள்வதை தடுப்போம். இலண்டன் நகரில் இப்படியான் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன். உதாரணமாக ஆர்ப்பாட்டங்கள், முடக்குதல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் பொருட்களை ஏற்று மதி செய்வதன் மூலம் வரும் சுங்க வரிப்பணத்தில் மேலதிக லாபம் அடைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் சிந்தித்து தானாக செயற்படவேண்டிய நேரமிது.

உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக இம்முயற்சியில் ஈடுபட்டு மற்றோரையும் அவ்வழிக்கு கொண்டு வர முழுமூச்சோடு முனைய வேண்டும்.

ஊடகங்களின் விளம்பரங்கள் முக்கியமாக தவிர்க்கப்பட வேண்டியது ஒன்று.

ஆரம்பகட்ட நிலையில் எம்மவர் வாழ்ந்த நிலையை சற்றே அலசிப் பார்த்து அதிலிருந்து எம்முனைப்பை ஆரம்பிப்போம்.

அத்தியாவசிய பொருட்களை மட்டுமா ஏற்றுமதி செய்யினம் நெட்டோ, ஹோர்லிக்ஸ் என்று இப்படி இங்கேயே விட்டமின் நிறைந்த பொருட்கள் தரமானது பல கிடைக்கின்றன. ஊரில் குடித்த பழக்கம் விட்டுப்போகவில்லை எண்டு குடிக்கினம் அவர்களுடன் நிற்கினமே அதையே பிள்ளையளுக்கும் பழக்கப்படுத்தி விடுகினம்.

அதைப்பபோல்தான் குடிவகை இங்கே தரமான குடிவகை இருக்க அங்குள்ள குடிவகைகளை நாடுகினம்.

இதை என்ன எண்டு சொல்றது.?

இது போன்று பலவற்றை எண்ணித்தான் சிங்களவன் சிரிப்பான் தமிழரின் விழிப்புணர்வு அற்ற நிலையை எண்ணி.

சிறீலங்கன் எயர்லைன்ஸ், சிறீலங்கா ரெலிக்கொம் என்பவை எல்லாம் சிறீலங்காவின் கட்டமைப்புகள். ஒருகாலத்தில் சிறீலங்கா அரசாங்கத்திடம் 100வீதம் செந்தமாக இருந்தவை இந்த நிறுவனங்கள். சிறீலங்காவின் பொருளாதார வீழ்ச்சியால் அரச சொத்துகள் பகுதி பகுதியாக தனியார் நிறுவனங்களிற்கு விற்கப்பட்டது. அவ்வாறு பகுதி பகுதியா விற்கப்பட்டும் பொழுது சும்மா கூறியது போல் ஒரு தரப்பினரால் controlling stake இற்கோ அல்லது அதற்கு அதிகமாகவோ உரிமை வரும் பொழுது அவர்களின் நிர்வாகத்தின் கீள் ஒரு உடன்பாட்டில் போகிறது. இந்த controling stake þüÌ §¾¨Å¡ ӾģðΠţ¾õ நாட்டிற்கு நாடு வேறுபடும், சில இடங்களில் 33% இன்னும் சில இடங்களில் 51% என்றும் மற்றது சட்டரீதியாக நிறுவனத்தின் வகையையும் (pvt owned or public listed etc) பொறுத்தது.

அந்த வகையில் எமிரேற்ஸ் இன் நிர்வாகத்தில் சிறீலங்கன் பல வருடங்களாக (1990 இன் பிற்பகுதிகளில் இருந்து) இருக்கிறது. ஆனாலும் சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு சிறீலங்கா அரசாங்கத்திடம் தான் ஒரு தரப்பு முதலீட்டாளர் என்றரீதியில் இன்றும் இருக்கிறது. எனவே சிறீலங்கன் எயர்லைன்ஸ் இன் நட்டம் என்பது பொருளாதார ரீதியில் சிறீலங்கா அரசை பாதிக்கும் என்பது ஒன்றும் அடிப்படைகள் விழங்காதவர்களின் மாயை அல்ல. அடுத்தாக symbolic ஆக பார்த்தால் சிறீலங்கன் எயர்லைன்ஸ் என்பது சிறீலங்காவின் National Flag carrier இன்றும். தமிழரது "புறக்கணிப்பு சிறீலங்கா" திட்டத்தினால் சிறீலங்காவில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் எந்த குழப்பமும் தேவையில்லை. அது தவிர்க்க முடியாதது. ஆரம்பத்தில் நிர்வாகம் குறுகிய காலத்து தீர்வாக விலைகளை குறைப்பது இயற்கை. ஆனால் அவர்களால் குறைந்த விலையில் குறைந்த profit margin அல்லது நட்டத்திலோ (loss) தொடரமுடியாது. அதனால் தான் தமிழரது "புறக்கணிப்பு சிறீலங்கா" திட்டம் என்பது எம்மால் நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்ளக் கூடியதாக மாற்று வழிகளோடு நிதானமாக நீண்டகால நோக்கோடு அமுல்படுத்தப்பட வேண்டியது. ÒÃ𺢸ÃÁ¡¸ ஒரு 2...4 மாதங்கள் ¿õ¨Á வருòதி புறக்கணித்து விட்டும் மீண்டு பழய படி º¢È£Äí¸¡ ¦À¡ÕÇ¡¾¡Ãò¨¾ ÀÄôÀÎòÐõ Ѹ÷¨Å தொடர்வது முற்றிலும் அர்த்தமற்றது. வெளிநாட்டு நிறுவனங்களால் நீண்டகால தொடர் பொருளாதார இழப்புகளை தாங்க முடியாது அவர்களது முதலீடுகளையும் நிர்வாக முயற்சிகளையும் அர்த்தமற்றதாக்கி விட தமது முதலீடுகளை மீளப் பெறவைக்கும். அதன் மூலம் இழப்புகளும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தான்.

சிறீலங்கா ரெலிக்கொம் எடுத்தாலும் யப்பானின் NTT Docomo தான் controlling stake வைத்திருக்கிறது. அதனால் அவர்களின் நிர்வாகத்தின் கீள் சிறீலங்கா ரெலிக்கொம். º¢È£Äí¸¡Å¢ý ¦¾¡¨Ä §Àº¢î §º¨Å¸¨Ç ¦À¡Úò¾Å¨Ã அவர்களிடம் ஏகபோக உரிமை இல்லாவிட்டாலும் யதார்த்தத்தில் சிறீலங்கா ரெலிக்கொம்மை புறக்கணித்து பொருளாதார ரீதியில் பாதிப்புகளை கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல்¸û இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலபோவான், நன்றி உங்கள் கருத்துக்கு. நல்ல ஆரோக்கியமான் கருத்துக்களமாக இருக்கின்றது. சிறிலங்கன் நிறுவனத்தை பொறுத்தவரையில், அதன் முழு முகாமைத்துவமும் எமிரேற்ஸ் இடமே இருக்கின்றது. எனது கருத்து என்னவெனில், நாம் சிறிலங்கனை தவிர்த்தால் மட்டும் போதாது. காரணம் சிறிலங்கன் நிறுவனம் பல கோட்செயார் சேவைகளையும் நடத்துகின்றார்கள். எது எப்படி நடந்தாலும் இலங்கையின் எக்கொனமி யை வீழ்த்துவது நமது குறிக்கோள் என்று நாம் இறங்குவது நல்லது அல்ல. நமது மக்களும் அங்கு இருக்கின்றார்கள். ஆக அந்த நாட்டின் எக்கொனமி நம்மில் தங்கி இருக்கின்றது போல செய்ய வேண்டும். அதாவது GDP.

மிக ஆழமாக பார்த்தால், யுத்தம் இல்லாமல் நாம் சாதிக்க முடியும் வெல்ல முடியும் என்றே தோன்றுகின்றது. . GDPஜ் வைத்து நாம் அவர்களை நம் பின்னால் வர செய்ய முடியும். பல வழிமுறைகள் இருக்கின்றன். தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்' date=' முதலில் புறக்கணிப்பு . அதை ஒரு Brand Campaign ஆக செய்ய வேண்டும் Logo ஓடு

இவ்வாறு செய்யும் போது சட்ட ரீதியான சிக்கல்கள் பல வரலாம்.

சும்மா, உமது GDP மூலம் செய்ய முடியும் என்றதற்கு மேலதிக விளக்கத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறன், எவ்வாறு என்ன கால வரையறையில் அது சாத்தியம் போன்ற விபரங்களோடு.

மேலும் உந்த "சட்ட சிக்கல்கள் பல வரலாம்" பற்றி சொல்லுவது என்றால், அவ்வாறான negative campaign மற்றவர்களால் வேறு நாடுகள் நோக்கி நடத்தப்பட்டிருக்கு. சிறீலங்கா ஒரு பயங்கரவாத அரசு, ஒரு தோல்வி அடைந்த அரசு என்பதற்கு தாராளமான ஆதாரங்கள் உண்டு. எனவே சட்டரீதியில் தவறு என்று யாராவது சிறீலங்கா ஆதரவுத் தரப்பு contest பண்ணினால் நல்லம். அதை சட்டரீதியில் எதிர் கொண்டு வெற்றி கொள்வது எமக்கு நல்லதொரு பிரச்சார களமாக அமையும்.

http://www.counterpunch.org

http://www.divestterror.org/SAmodel.html

http://www.thecrimson.com/article.aspx?ref=503490

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்ஸ், GDP மூலம் சாதிக்கலாம் என்பதை புதிய ஒரு தலைப்பில் எழுதலாம் என நினைக்கின்றேன். ஏனெனில், விரிவாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஆயுதம் ஏந்தியது தவறான முடிவு போலும் தெரிகின்றது. தமிழர் பிரச்சனையை வேறு விதமாக கையாண்டிருக்காலாம் போலவும், இன்றும் ஆயுதப்போராட்டத்தை விட்டு, வேறு வழியில் இதற்கு தீர்வு காண முடியும் என்பதற்கு சாத்தியம் இருப்பதாக தெரிகின்றது.அதனால், ஒரு கட்டுரையாக எழுதி யாழில் எல்லோரிடமும் தர்ம அடி வாங்கலாம் என நினைக்கின்றேன்.

சட்ட சிக்கலைப்பொறுத்தவரை, இலங்கை சுற்றுலா பயணிகள் மூலம் கணிசமான வருவாயை பெறுகின்றது. நாம் இவ்வாறு செய்வதானால், தமது வருவாய் குறைந்து விட்டது என்று இலங்கை அரசாங்கம் நிருபித்தால், பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி வரலாம். இதே நேரம், சில நாடுகள் தமது நாட்டு மக்களை இலங்கைக்கு செல்வதை தவிர்க்க சொல்லி கூறுவது வேறு விடயம்.

இன்னமும் எழுதி முடிக்கவில்லையா சும்மா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.