Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வீரர் பிரபாகரனின் ஆதரவாளர்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

frontpage1ck1.gif

முகமாலை முன்னரங்க காவலரண் இராணுவ வீரர் பிரபாகரனின் ஆதரவாளர்?

அநுராதபுரம் நகரில் வைத்து பிரபாகரனின் புகைப்படத்துடன் இராணுவ வீரர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் இராணுவப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரை அநுராதபுரம் இராணுவ பொலிஸ் தரப்பு அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததாகவும் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச மேற்படி குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த தினம் இந்த இராணுவ வீரர் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அவரை ஆஜர் செய்த இராணுவப் பொலிஸ் தரப்புக்கு, நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.

மேற்படி இராணுவ வீரர் கைது செய்யப்பட்டது இராணுவ பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப குறித்த இராணுவ வீரரை அநுராதபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வைத்து கைது செய்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களும் மற்றும் சினைப்பர் துப்பாக்கியின் பகுதி ஒன்றும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இராணுவ வீரரர் முகமாலையிலுள்ள பாதுகாப்பு முன்னரணில் சேவை செய்பவர் எனவும் இவ்வாறு சேவையிலிருந்தபோதே இவர் விடுமுறை அனுமதியின்றி அங்கிருந்து வெளியேறி காரைதீவு பிரதேசத்தில் வசிக்கும் தனது தற்காலிக மனைவியின் வீட்டுக்குச் செல்லும் நோக்கத்தில் மேற்படி பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தார் எனவும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே அவரைத் தாம் கைது செய்ததாகவும் இராணுவ பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் வீடு வனாத்தமுல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஆனால் படையினரால் விடுவிக்கப்படாதுள்ள காரைதீவுப் பகுதியிலேயே அமைந்துள்ளதாகவும் தற்போது முகமாலை முன்னரணில் சேவையில் இருக்கும் மேற்படி இராணுவ வீரர் உயர் அதிகாரியிடம் விடுமுறை அனுமதி பெறாமலே கடமையைக் கைவிட்டு, அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார் எனவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே தெரிவித்ததாக இராணுவ பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

அத்துடன், குறித்த பெண்ணின் வீட்டுக்கு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் அடிக்கடி வந்துபோவதாகவும் மேற்படி இராணுவ வீரர் விசாரணையின் போது கூறியுள்ளதாகவும் எனவே, இதன் மூலம் அவருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதிசெய்ய முடியும் எனவும் இராணுவப் பொலிஸ் தரப்பு, நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், இந்த இராணுவ வீரரின் தாயார் தமிழ் இனத்தவர் என்றும் தகவல் தெரியவந்துள்ளது. அவர் சிங்களப் பெயர் மூலமே இராணுவத்தில் சேர்ந்துள்ளார் என்றும் இது சம்பந்தமாக மேலதிக புலன்விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் மேலும், இராணுவ பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

தற்போது இந்த இராணுவ வீரர் கஜபாகு இராணுவப் பிரிவைச் சேர்ந்த படையினராக முகமாலை இராணுவ முகாம் தொடரின் பாதுகாப்பு முன்னரணில் கடமை செய்வதாக விசாரணைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ள மேற்படி இராணுவ வீரரின் பெயர் எச்.ஏ.பிரீயமால் இரத்னசிறி எனவும் இவர் 28 வயதுடையவர் என்றும் இவர் மொறட்டுவப் பிரதேசத்தில் லக்சபதிய பகுதியிலுள்ள மகாவிகாரை வீதியில் 50/3 இலக்க இல்லத்தில் வசிப்பவர் எனவும் நீதிமன்றத்தில் இராணுவ பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப:01.11.2006

Thanx Thinakkural News paper

அடடாh..என் மாற்றம்....இவரை போல இன்னும் எத்தனை பேர் இருப்பார்களோ...???

எல்லாம் காலத்தின் மாற்றம்....

  • கருத்துக்கள உறவுகள்

என் னடாயிது?

இவ்வாறு பலபேர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களால் அதை வெளிக்காட்ட முடிவதில்லை அது தான் உண்மை.

2001 வருடம் நான் மடு மாதா தேவாலயத்துக்கு சென்றிருந்த போது இப்படி பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் சப்போட்டாக பேசி அதையும்விட அவர்கள்தான் உயர்ந்தவர்கள் இராணுவத்தினரைவிட என்று கூறிய 2 சிங்களக் குடும்பத்தை சந்தித்தேன் அவர்கள் எல்லோரும் ஒரு இராணுவ சிப்பாயின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நானும் அவ்விடத்தில் இவ்வாறு தான் ஆச்சரியப்பட்டேன். இது எவ்வாறு சாத்தியப்படும் என்று யோசித்துவிட்டு அவர்களிடமே அதற்குரிய பதிலைக் கேட்டேன் அதற்கு வந்த பதில் கட்டாயத்தின் காரணமாக தங்கள் மகன் இராணுவத்தில் இணைந்ததாக தங்களில் யாருக்கும் அதில் விருப்பம் இல்லை என்றும.; அவர்களில் பேச்சில் இராணுவத்தினர் மேல் அவர்கள் கோவப்படுவதும் புரிந்தது.

கட்டாயத்தின் பேரில் இராணுவத்தில் ஆட்களை இணைகிறார்கள் என்பது பிழையான கருத்தாக விருக்கக்கூடும். ஆனால் வெளிக் கவர்ச்சிகளில் முதலில் இணைந்து பின்னர் தப்பியோடியோ அல்லது வெளியேற முடியாமல் தவிக்கும் இராணுவ வீரனுடைய குடும்பமாகவிருக்கும்.

நீங்களும் புலிகளுக்கு சப்போட்டா கதைச்சுட்டு வந்திருந்தீங்க என்டா, நீங்க இப்ப இப்பிடி யாழ்களத்தில இருந்து அலவளாவ முடியாது. எப்பவோ கைது செய்யப்பட்டிருப்பியள் அல்லது வெள்ளை வானைப் பார்த்திருப்பியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.