Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது; புதிய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2e94c9b64a9c76c6efc6bd683ce56de2.jpg

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
 
வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை அவ்வாறு அகற்றினால் நாங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
 
இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவத குறித்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.
 
கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமற்றதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
 
அத்துடன் மேலதிக பாதுகாப்பு அவசியமில்லை என ஜனாதிபதியே தெரிவித்துள்ளார் எனவும், வீதி தடைகளை திறக்குமாறு ஜனாதிபதி கேட்டுகொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி அதிகாலை சதி முயற்சியில் ஈடுப்பட்டமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விசாரணைக்குட்படுத்த முடியாது .எனினும் அதன்போது முன்னாள் பிரதம நீதியரசர் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறித்து விசாரணை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=388633855004266924

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்துதான் பார்ப்பமே ,பாலும் தேனும் இந்தா ஒடபோகுது என்று குடு குடுப்பை அடித்தவர்கள் முன்னுக்கு வரவும்.

பொறுத்துதான் பார்ப்பமே ,பாலும் தேனும் இந்தா ஒடபோகுது என்று குடு குடுப்பை அடித்தவர்கள் முன்னுக்கு வரவும்.

மகிந்தவுக்கு வாக்களித்திருந்தால் தமிழர்களுக்காக உலக நாடுகளே இரங்கியிருக்கும் அவர்களது தேவையை நிறைவேற்ற தமிழர்கள் தேவைப்பட்டிருப்பார்கள்
  • கருத்துக்கள உறவுகள்

உயர் பாதுகாப்பு வலயங்களை எந்த சிங்கள கட்சியும் அகற்றாது.

  • கருத்துக்கள உறவுகள்

ததமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது தமிழர் மீதான சிங்கள பேரினவாத அடக்குமுறையின் அடையாளங்கள். இது மகிந்த இருந்தாலென்ன, ரணில் வந்தாலென்ன மாறப்போவதில்லை. தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்கும் சிங்கள மேலாதிக்க வாதத்தின் தூண்களான இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் சிங்கள இனம் தமிழர் மீதான காழ்புணர்வையும், அடக்குமுறை மனோபாவத்தையும் நீக்கும்வரை அகலப்போவதில்லை.

 

இங்கே இன்னொரு பதிவில் யாரோ குறிப்பிட்டதுபோல, சிங்கள ராஜ்ஜியத்துக்கும், ஒரு சிங்கள அரசுக்குமான வேறுபாட்டை நாம் விளங்கிக் கொண்டால், இதைப் புரிந்துகொள்வது சுலபம். தமிழரின் இருப்பிற்கு எப்போதுமே எதிரானது சிங்கள ராஜ்ஜியம். அவ்வப்போது அரசாளும் அரசுகள் அந்த ராஜ்ஜியத்தில் ஏவலர்கள். நேரத்துற்கேற்ப அவர்களது குரலின் தொனி கூடிக் குறையலாம். ஆனால் இறுதியில் நடப்பதென்னவோ என்றுமே நிரந்தரமான சிங்கள ராஜ்ஜியத்தின் விருப்பம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.