Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்! எமது தமிழ் மக்கள் பார்ப்பன மாயைக்குள் எவ்வளவு தூரம் சிக்குப்பட்டுப் போய் இருக்கிறார்கள் என்பதற்கு எங்களின் நெடுக்காலபோவான் ஒரு உதாரணம்.

பிராமணியம் பற்றிய விமர்சனத்திற்கு பதிலை சூத்திரர்களையே சொல்ல வைத்திருக்கும் பிராமணியத்தின் திறமையைப் பாருங்கள்.

இந்த மாயைக்குள் சிக்கி இருப்பவர்களை இலகுவில் வெளியில் கொண்டு வர முடியாது.

தாங்கள் சொல்வது தவறு என்று தெரிந்தும், அவர்களுடைய மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

பிராமணர்கள் என்ற சாதி இல்லை என்றால் கடவுளிடம் எப்படி தொடர்பு கொள்வது என்ற அச்சத்தில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள்.

இதுதான் இங்கு நடக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை மனிதம் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்கின்றோம். வேதாந்தக் கருத்துக்களை அழிக்க நினைக்கும் நீங்களே சூத்திரர் சூரியர் என்று கொண்டு மிகவும் அடிமட்டமான கருத்துக்களை விதைக்கின்றீர்கள். நாம் பிராமண சமூகத்தையோ அல்லது எந்த சாதிய அடிப்படைகளையோ பிரதிநிதித்துவப்படுத்த அல்ல. எல்லோரும் தமிழர்கள் என்ற அந்தக் கண்ணோட்டம் முதலில் உங்களிடம் பிறக்க வேண்டும். தமிழர்களுக்கு மேலால் எல்லோரும் மனிதர்கள் என்ற சிந்தனை பிறக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் பார்ப்பர்ணிய ஆரிய பிராமண கசப்புணர்வுகளில் இருந்து வெளிவர முடியும்.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல வேதாந்தங்கள் உங்களை அவற்றை பின்பற்ற வற்புறுத்தவில்லை. அவை தம்மை கடைப்பிடிக்கச் சொல்லி திணிக்கவில்லை. புறக்கணிக்க நினைப்பவர்கள் அவற்றைப் புறக்கணித்துச் செல்லலாம். பிறகேன் அவற்றின் அடிப்படையில் நீங்கள் உங்களை சூத்திரர்களாகவும் பிறரை பிராமணர்களாகவும் கருதுகிறீர்கள். ஆக உங்கள் மனதளவில் உங்கள் மீது உங்களின் மனிதத்தின் மீது நம்பிக்கையில்லை. நீங்களே உங்களை பிறரோடு வேதத்தோடு ஒப்பிட்டு கீழ்நிலைப்படுத்தும் போது இதில் பிராமணர்களின் மீது பழியை மட்டும் சுமத்தி விட்டு அவர்களே எல்லாவற்றிற்கு கால்கோள் என்று உரக்கக் கூச்சலிடுகிறீர்கள். இது உங்களின் அறியாமையின் வெளிப்பாடு.

பிராமணர்கள் கோயிலுக்கு வாருங்கள் இன்றேல் இறைவன் உங்களை தண்டித்துவிடுவார் என்று கூறியதற்காக நீங்கள் கோயிலுக்குப் போகிறீர்களா அல்லது உங்களுக்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கையில் கோயிலுக்குப் போகிறீர்களா? ஆக உங்களில் உங்களின் மீது முழு ஆளைமையும் நம்பிக்கையும் இருக்குமானால் நீங்கள் பின்பற்றும் வழிமுறைகளுக்கு பிறர் மீது குற்றம் காணாமல் நீங்களே வேண்டாதவற்றைத் தவிர்த்துக் கொண்டு வாழ்ந்து காட்டலாம். மனிதன் வாழ்வதற்கு கோயில் குளம் வேதம் மதம் ஆரியம் பிராமணம் என்று எதிர்ப்புக்களைக் கக்க வேண்டியதில்லை.

மேற்கு நாடுகளில் உள்ள நடைமுறைகளைப் பாருங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும் அதனதன் அடையாளங்களை அனுஷ்டானங்களை பின்பற்ற கடைப்பிடிக்க அனுமதி உண்டு. உரிமை அளிக்கப்படுகிறது. அதில் வெள்ளையின மக்கள் தலையிடுவதில்லை. அவர்களும் உங்களைப் போல ஆரிய வாதம் பேசி திராவிடரை கொன்றொழியுங்கள் அல்லது கறுப்பர்களை அழித்தொழியுங்கள் என்று நாசியம் பேச முனைந்தால் என்னாகும் சிந்தித்தித்துப் பாருங்கள்.

பிராமண சமூகத்தின் நிலையில் இருந்து பார்த்தால் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய சாயத்தோடு வைக்கும் இக்கருத்துக்கள் ஐயோ தமிழ் தேசியம் எங்கள் இருப்பையே அகற்றிவிடுமோ என்ற அளவுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. இவை நிச்சயம் கண்டிக்கத்தக்கதோடு இவை தமிழ் தேசிய விரோத பிரச்சாரங்களாகவே இனங்காணப்பட வேண்டியவை.

சமூக அடக்குமுறைகள் தகர்க்கப்படுவது வேறு. சமூக அழிவுகளுக்கு பழிவாங்கல்களுக்கு பரிந்துரைப்பது வேறு. நீங்கள் விடுதலைப்புலிகளின் ஏட்டில் குறிப்பிட்ட படி புரிந்துணர்வுக்களூடான சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பதில் பிராமண சமூகம் சாதிய எச்சம் என்ற தவறான பார்வைகளை விதைத்து அவர்களின் இருப்பை அழிக்கக் கோருவது கொடிய நாசியம். அது தமிழர்களுக்கு அவசியமில்லை. அதனால் தமிழ் தேசியம் மீதான கொடிய பார்வைகளும் வீணான அச்ச உணர்வுமே மேலோங்கும். இவை விடுதலைப்புலிகள் என்ன எந்த தமிழ் தேசிய ஆதரவாளர்களாலும் மிகவும் வன்மையாக எதிர்க்கப்படும்.

  • Replies 152
  • Views 25.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வேளாள சமூகம் என்ற சொல்லை இதுவரை நீங்கள் கேள்விப்படவில்லை என்பது என்னுடைய குற்றம் இல்லை.

அப்படி ஒரு சமூகம் இழக்கப்பட்டிருக்கலாம். காரணம் அது சாதியக் கோட்பாடுகளைக் களைந்ததால். ஆனால் நீங்கள் அந்தச் சாதிய சமூகத்தை ஏன் மீண்டும் முன்னிறுத்த முயல்கின்றீர்கள்.

மனித சமூகம் என்ற சொல் கூட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பிராமணர் என்பது ஒரு சாதி இல்லை என்று நீங்கள் சாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

நாம் முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். பிராமணர்கள் மத அனுஷ்டானிகள். அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய சமூக சாதியத்தாக்கம் அவர்கள் மீதும் இருந்திருக்கும். அவை சாதியக் களைவோடு களையெடுக்கப்பட்டிருந்தன ஈழத்தைப் பொறுத்தவரை. இதை நாம் சுட்டிக்காட்டிய பின்னரும் நீங்கள் அதில் அர்த்தமில்லை என்றால் ஏன் ஈழத்தில் இன்னும் பிராமண சமூகம் கோயில் அனுஷ்டானங்களோடு தங்களின் பிரத்தியேகத் தன்மையைக் காக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏன் விடுதலைப்புலிகள் அந்த சமூகத்தின் இருப்பை கலைக்கவில்லை?? பிராமண இருப்பை சாதியமாக அறிவித்து கலைத்திருக்கலாம தானே? ஏன் அப்படிச் செய்யவில்லை. காரணம் என்ன?

பிராமணர்கள்தான் சாதிகள் குறித்து எழுதி உள்ளார்கள். அதில் அவர்கள் பிராமணர்களைத்தான் உயர்ந்த சாதி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மீண்டும் இது தவறு. யாழ்ப்பாண சாதிய முறைக்குள் பிராமணர்களா உயர்ந்த சாதியாக கருதப்பட்டனர்? இல்லையே. வேறு யாரோதான் என்று மல்லிகையில் வாசித்த ஞாபகம். மல்லிகைக்கு யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பை போராக்காலத்துக்கு முன்னரே எதிர்த்த பெருமை உண்டென பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். அந்த வகையிலேயே மல்லிகையை உதாரணமாக்குகின்றோம்.

நெடுக்காலபோவான்! நீங்கள் பிராமணர் ஒருவரிடம் சென்று "நீங்கள் என்ன சாதி" என்று கேளுங்கள். அவர்களே உங்களுக்கு நல்ல விளக்கம் தருவார்கள்.

நாம் தான் சாதியம் என்பதை வெறும் மனித கற்பனை என்று விட்ட பின்னர் வேலை மிணக்கட்டு இவற்றைப் போய் கேட்டுக் கிளறிக் கொண்டு இருக்கப் போவதில்லை. மனிதம் வாழவே வழியைக் காணவில்லையாம். மனித உரிமைகளையே பாதுகாக்க முடியவில்லையாம். இதற்குள் மனிதப் பிரிவினைகளைத் தூண்டக் கூடிய மனிதக் கற்பனைகளுக்கு ஏன் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவர்களை சாதி கேட்டி உசார்படுத்தினால் தான் அவர்களும் அதோடு ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அதுவே கவனிப்பாரற்றுப் போகும் போது தானே வழக்கொழிந்து போகும்.

அதன் பிறகு நீங்கள் எங்களோடு சேர்ந்து எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%...%AE%AA%E0%AF%81

நெடுக்காலபோவான்! தயவு செய்து இந்த இணைப்பை பார்த்து சில விடயங்களை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த இணைப்பென்ன இன்னும் பல இணைப்புக்களை யாழ்ப்பாணத்தவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் புனைந்து தருவார்கள். நாம் நம்பத்தயார் இல்லை. நமக்குத் தேவை ஆதாரங்களுடனான விளக்கங்கள். வெறும் ஒப்பீட்டியலை வைத்து தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாது. அதுவும் சாதியம் என்ற ஒரு மன அனுஷ்டானத்துக்கு முடிவு? மனப்புரிதலிலேயே அன்றி உங்களைப் போல நாசியம் பேசுவதால் கிடைக்கும் என்பதில் எமக்குத் துளியளவும் நம்பிக்கையில்லை

பிராமணர்கள்தான் சாதிகள் குறித்து எழுதி உள்ளார்கள். அதில் அவர்கள் பிராமணர்களைத்தான் உயர்ந்த சாதி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்கள் 90% க்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களிற் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. இங்கே சாதியப் படிநிலை அமைப்பில் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட போதிலும்,

அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள்.

யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.

உங்கள் இணைப்பே உங்களின் கருத்துக்கு மாறாகச் சொல்கிறதே. அவற்றில் முக்கியமானவை

1.பிராமண மேலாதிக்கம் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை.

2. வேளாள மேலாண்மை என்பதும் பிரபுத்துவ அமைப்புருவாக்கமும் என்ற இன்னொரு விடயம் சாதியம் தொழில் சார்ந்து அதாவது நிர்வகிப்புத்துறை சார்ந்து எழுந்துள்ளதாகச் சொல்கிறதே.

3. இந்து சமயத்தை சாதியக் கோட்பாட்டுக்கான காரணி என்று கூறும் குறித்த இணைப்பு இந்து சமயத்தோடு தொடர்போடிருந்த பிராமண சமூகத்தினரை எப்படிப் பிந்தள்ளியது? அதாவது மேலாண்மைக்குரிய நிலைக்குக் கொண்டு வரத்தவறியது?

குழப்பகரமாக ஆதாரங்களற்று உள்ளதே இணைப்பு.

  • தொடங்கியவர்

யாழ்பாணத்து சாதியமைப்பு பற்றி நான் கொடுத்;த இணைப்பை வாசித்தீர்களா?

பிராமணர் என்பது ஒரு சாதி என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

பார்ப்பனிய மாயைக்குள் சிக்கி பிராமணர்களை கடவுளுக்கு சமன் என்று நம்புகின்ற உங்களுக்கு உண்மை கசப்பாகத்தான் இருக்கும்.

சாதிகள் இல்லாத தமிழினத்தையே நாம் விரும்புகிறோம்.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகின்ற பொழுது தமிழீழத்தில் சாதியை ஒழிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

இன்றைக்கு உயர்குல வேளாளர்கள் கூட "வெளிப்படையாக" சாதி பற்றி பேசுவதற்கு வெட்கப்படுகின்ற நிலை வருகிறது. அதை மனதுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் முன்பு போன்று வெளிப்படையாக சாதிய அடையாளத்தை காட்டுவது குறைந்து வருகிறது என்பது ஒரு முன்னேற்றம்.

காலப் போக்கில் இன்னும் முன்னேற்றம் வரும் என்று நம்புகிறேன்.

ஆனால் ஈழத்தில் ஒரு சாதி மட்டும் தொடர்ந்து தன்னுடைய சாதிக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து கொண்டு, சாதிய அடையாளங்களை பேணிக் கொண்டு இருந்தால் சாதியை எப்படி ஒழிக்க முடியும்.

ஈழத்தில் தமிழ்நாட்டைப் போன்று பிராமணர்கள் ஆதிக்க நிலையில் என்பதால், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தட்டிக் கழித்து விட முடியாது

ஆதிக்க நிலையில் இல்லை என்பதால் என்று திருத்தி வாசிக்கவும்.

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டைப் போன்று தமிழீழத்தில் பார்ப்பனியத்தின் ஆபத்து உணரப்படாததன் காரணம் அந்த இணைப்பில் உள்ளது போன்று, பார்ப்பனர்கள் ஈழத்தில் இரண்டாம் இடத்தில் இருந்ததே.

இப்படி அவர்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணமும் அந்த இணைப்பில் மேலோட்டமாக கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையிலும், கல்வியிலும் முன்னேற்றம் காணுகின்ற ஒரு சமூகம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான் மற்றைய சமூகங்களுக்கு கல்வி வசதி மறுக்கப்பட்டது என்பதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் பார்ப்பனர்களை சாதியைக் களையச் சொன்னால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

விடுதலைப்புலிகள் மக்களின் ஆதரவை இழக்க வேண்டி வரும்.

மக்களின் விழிப்புணர்வு அவ்வளவில்தான் இருக்கிறது. உடனடியாக சில மாற்றங்களை செய்ய முடியாது.

செய்வோம் என்று சொல்லவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பட்டியலில் மலையகத்தார் சோனர்கள் என்றும் சிலது குறிப்பிட்டு மொத்தம் 40 சொல்லப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ப ஒரு பெயரிருக்கும்.

உதாரணமாக- தபால் விநியோகிப்பவர் - போஸ்ட் மன்.

தபால் நிலைய முகாமையாளர் - போஸ்ட் மாஸ்டர்

இப்படித்தான் அதிலும் தொழில் சார்ந்து சொல்லப்பட்டுள்ளது. அவற்றை பூரண சாதியக் குறியீடுகள் ஆக்கியது போல முட்டாள் தனம் ஏதுமில்லை.

சோனகர் என்பது வியாபாரம் செய்யும் இஸ்லாமியரை. ஆக அவர்களும் ஒரு சாதி அப்படியா?

மலையகத்தாரும் ஒரு சாதி..?? அப்படியா?

மலைய மக்கள் ஒரு சமூகம். முஸ்லீம்கள் ஒரு சமூகம். சொன்னமே சாதியத்தாக்கம் பிராமண சமூகத்தையும் சாதியத்துள் தள்ளி விட்டிருக்கிறது. யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பும் அதன் நவீன விளக்கங்களும் இதை அழகாக வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே இதை நாமும் சுட்டிக்காட்டி விட்டோம். மேலே சொன்னதை வாசித்தீர்கள் தானே :D ?

ஆக பிராமணர்களும் சோனர்களை எப்படி சாதி ஆக்கப்பட்டார்களோ அப்படி ஆக்கப்படுள்ளனரே தவிர அவர்களின் சமூக அடையாளங்கள் சாதிய அடையாளங்கள் அல்ல. அவை மத அடிப்படை அடையாளங்கள். அதுமட்டுமன்றி வேளாளர்களே சாதிய உருவாக்கத்தின் முன்னிலைப் பங்காளிகள் என்பது தெளிவாக உங்கள் இணைப்பிலேயே உள்ளது. அந்த வகையில் பிராமண மத அடிப்படைச் சமூகத்தின் மீது அவதூறான சாதிய வெறியை ஊட்டுவதும் அவர்களை அழிக்க நாசியக் கருத்துக்களை விதைப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்ய முனைந்து தமிழ் தேசியத்தின் மீது நாசியப் பார்வையை உருவாக்காதீர்கள்.

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவன்! நீங்கள் அந்த இணைப்பை ஒரு முறை முழுமையாக வாசியுங்கள்.

அதில் தெளிவாக பிராமணர்கள் ஒரு சாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது பட்டியலில் யாழில் இருக்கின்ற அனைத்து விதமான "சமூகங்களையும்" குறிப்பிட்டு, பின்பு அதன் கீழ் இப் பட்டியலில் இருக்கின்ற அனைத்தும் சாதிகள் அல்ல என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்பு இன்னொரு பட்டியலில் சாதிகள் மட்டும், அதுவும் முக்கியமான சாதிகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிராமணர்கள் முக்கிய "சாதியா" வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள

நீங்கள் இவ்வளவு தூரம் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது அழகு அல்ல.

வரி வசுலிப்புக்காக வெளியிடப்பட்ட சாதி வாரியான பட்டியலில் யாழில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டிருக்கும் பட்டியல் அது

பறங்கியர்கள், சோனர்கர்கள் போன்ற சாதி இல்லாதவர்களையும் அவர்களை அழைக்கப்படும் பெயர் கொண்டு பட்டியல் இடப்பட்டுள்ளார்கள்.

மற்றையபடி பிராமணர் குறித்து எழுதுகின்ற பொழுது எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று படியுங்கள்.

"இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும்இ அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. இங்கே சாதியப் படிநிலை அமைப்பில் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட போதிலும்இ அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள்."

யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:

சாதி தொழில்

பிராமணர் கோயில்களில் பூசை செய்தல்இ குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்.

வெள்ளாளர் நில உடைமையாளர் ஃ வேளாண்மை

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பின்பும் உங்களுக்கு விளங்கவில்லையா?

பிராமணர்கள் யாழ்பாணத்தின் முக்கிய சாதி என்று மிகத் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இவ்வளவு தூரம் விளங்காத மாதிரி அடம்பிடிப்பது அழகு அல்ல.

வரி வசுலிப்புக்காக வெளியிடப்பட்ட சாதி வாரியான பட்டியலில் யாழில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டிருக்கும் பட்டியல் அது

பறங்கியர்கள், சோனர்கர்கள் போன்ற சாதி இல்லாதவர்களையும் அவர்களை அழைக்கப்படும் பெயர் கொண்டு பட்டியல் இடப்பட்டுள்ளார்கள்.

மற்றையபடி பிராமணர் குறித்து எழுதுகின்ற பொழுது எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று படியுங்கள்.

"இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும் அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. இங்கே சாதியப் படிநிலை அமைப்பில் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட போதிலும் அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள்."

யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:

சாதி தொழில்

பிராமணர் கோயில்களில் பூசை செய்தல் குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்.

வெள்ளாளர் நில உடைமையாளர் வேளாண்மை

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பின்பும் உங்களுக்கு விளங்கவில்லையா?

பிராமணர்கள் யாழ்பாணத்தின் முக்கிய சாதி என்று மிகத் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள

  • தொடங்கியவர்

சரி, உங்களுக்கு ஒரு முறை மீண்டும் ஒரு முறை விளங்கப்படுத்த முனைகின்றேன்.

சாதி அமைப்பு என்பது இந்து மதத்தின் ஒரு முக்கிய பிரிவு.

அதன்படி பிராமணர்கள் உயர்ந்த சாதியினர். அவர்கள் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவர்கள்.

நானும் நீங்களும் அவர்களின் அடிமைகள். கடவுளின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள்.

இந்தியா இன்றும் 3 வீதமாக இருக்கின்ற பிராமணர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது. (அரசு வேலைகளில் முக்கிய துறைகள், ஊடகங்கள்)

அங்கு அவர்களை தாண்டி மற்றைய சாதியினரால் முன்னேற முடியவில்லை. அதனாலேயே இடஒதுக்கீடு அங்கு தேவையாக இருக்கிறது. இதை பிராமணர்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள்.

அங்கு நிலமை இப்படி இருக்க, யாழ்ப்பாணத்தில் நிலமை மாறுபட்டது.

மக்கள் தொகையில் அதிகமாக இருந்த வேளாள சமூகம் கல்வி அறிவையும் பெற்றதும், அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது.

ஆயினும் பிராமணர்களின் இருப்பை அனுமதித்ததோடு, அவர்களை உயர்ந்த சாதி என்ற அந்தஸ்தையும் பேண அனுமதித்தது.

இதில் ஒரு சூட்சுமம் உண்டு.

பிராமண சாதியை முற்று முழுதாக இல்லாது செய்து விட்டால், சாதியின் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும். வேளாள சமூகத்தால் மற்றைய சமூகங்களை அடக்க முடியாது போய்விடும். கடவுளின் பெயரை சொல்லி அச்சுறுத்துவதற்கு வேளாள சமூகத்திற்கு பிராமணர்களின் துணை என்றும் தேவை. இரு சமூகங்களும் இணைந்து நின்றால்தான் மற்றைய சமூகங்களை அடக்குவது இலகுவாக இருக்கும்.

இப்பொழுது வேளாள சமூகத்தை சேர்ந்தவர்கள் பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் காரணம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

சாதியம் என்பது புரிந்துணர்வினூடு களையப்பட வேண்டிய ஒன்றே தவிர நீங்களும் நாரதரும் உச்சரிக்கும் ஆரிய வேதாந்த எச்சங்களைக் காவும் பிராமண சமூக அழிப்பு என்பது கொடும் நாசியக் கருத்து என்பதோடு அதற்கு தமிழ் தேசிய சாயம் பூசி இந்துக்களையும் பிராமணர்களையும் தமிழ் தேசியத்தின் பெயரால் அச்சுறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

1)சாதியம் என்பது புரிந்துணர்வோடு களையப்பட வேண்டியது என்பதே எனது கருத்து.

2)பிராமணர்கள் என்போர் ஒரு சாதி அவர்களே அந்தணர் என்போர் எனப்படுகின்றனர்.

3)அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதௌ ஆய்வு குட்பட்ட விடயம், ஆனால் சாதிகள் களையப் பட வேண்டும் என்றால் பிராமணர் என்னும் சாதியும் இல்லமற் போக வேண்டும்.

4) இங்கே சாதிகளைத் தூக்கிப் பிடிக்கும் நீர் சொல்வது தான் நாசியக் கருத்து.

5)இங்கே எவரும் எவரியும் அச்சுறுத்தவில்லை, ஆய்வு ரீதியாக கருத்து ரீதியாக கருதுக்கள் முன் வைக்கப்படுள்ளன.இவற்றில் உங்களுக்குச் சரி எனப்பட்டதை நீங்களே தீர்மானியுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது.

6) அவ்வாறு வைக்கப்படும் கருதுக்கள் நாசியம் எனவும் எதோ இங்கே நாம் பிராமணர்களைக் கொலை செய்ய கோருவது போலவும் கதையளக்கும் நீர் தான் அச்சுறுத்தல் செய்கிறீர்.

7)விடுதலைப் புலிகல் ஏட்டில் சொன்னவற்றை மீண்டும் வாசிப்பது நலம்.

''சாதியம்'' என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக் கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சினை. வேதகால ஆரிய நாகரிக்கத்தின் வர்ணகுல அமைப்பில் இருந்து சாதிப் பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராச்சியாளர்கள் கூறுகிரர்கள்.பிராமணர் வேத நூல்களை எழுதினார்கள்.மனு நீதி சாஸ்திரங்களைப்படைத் தார்கள்.இவற்ரில் எல்லாம் பிராமணரை அதி உயர் சாதியாக கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப் படுதினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.சாதியத்தின் மூலத்தை ஆராஇந்த படி செல்வது இங்கு அவசியம் இல்லை.எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அனீதி முறை தமிழீழ சமுதாத்திலும் வேரூன்றி விருட்ச்சமாகி விட்டது.தம்ழீழ மக்களின் சமூக உறவுகளுடன் பொருளாதார வாழ்வுடன் சம்பிரதாயங்களுடனும் கருதுலகப்பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாக சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை.சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதால் பொருளாதார உறவுகளிலிரிந்து எழுகிறது.மத நெறிகளும்,சித்தாந்தங்களும்,ச

ட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

தமிழ் மக்கள் ஒரே இன மக்கள் என்ற இன உணர்வும் பிறந்தது.சாதிய வேர்களை அறுத்து எறிந்து எல்லா சமூகப் பிரிவுகளில் இருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரே தேசிய விடுதலை இரணுவத்தை புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது.ஒரே தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்ச்சிகர அரசியல் இலட்ச்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது.தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடி விட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பில் குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் இல்லை.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்ப்பந்தங்கள் வாயிலாகவோ சதியப்பேயய் விரட்ட முனைவதும் புத்திசாலித் தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்த்தப்பிரச்சினைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அதியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல்,இதுகொடூரமானது, அனுமதிக்க முடியாதது.

மற்றயது, சாதியரீதியான ஏனைய முரண்பாடுகள்,இவற்றை அதனதன் தன்மை களுக்கு ஏற்ற விததிதில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலுழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதைப் போராட்டமும்.அதனால் எழுந்த புரட்ச்சிகர புற நிலைகளும் சாதிய அமைப்பைத்தகர்க்கத் தொடங்கியிருக்கிறது.எனினும் பொருளாதார உறவுகளிலும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப் போவதில்லை.எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்ச்சியுடன் மனப் புரட்ச்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமதுவத்தை நோக்கமாகக் கொண்ட சமுதாயப் புரட்சியை முன் நெடுப்பது விடுதலைப் விடுதலைப்புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும்.தேசிய விடுதலை பெற்று,ஆட்ச்சியதிகாத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்தில் இருந்தே கட்டுப் பாட்டுப் பிரதேச்னக்களில் புரட்ச்சிகரமான பொருளாதாரத்திட்டங்களிச் செயற்படுத்தை கூட்டுத் தொழில் முயர்ச்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத் தெறிவது சாத்தியமனதொன்று.

சமூகச் சிந்த்னையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது.ஏனெனில் சாதிய வழக்குகளும்,சம்பிரதயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது, இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்ச்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம்.இங்கு தான் புரட்ச்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.எமது இளம் பரம்பரையினருக்கு புரட்ச்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.பழமையான பிற்போக்கான கருதுக்கள் கோட்பாடுகள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.அறியாமை இருள் நீங்கி, புதிய விழிப்புணர்வும் புரட்ச்சிகர சிந்தனைகலும் இளம் மனங்களைப்பற்றிக் கொண்டால் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிரிந்து நீங்கி விடும்.

-விடுதலைப்புலிகள், இதழ் 20.

quote name='nedukkalapoovan' date='Nov 12 2006, 02:20 PM' post='237240']

ஆக தமிழ் தேசியத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே பிராமண சமூகத்தின் மீதான நாசியக் கருத்துக்களை இந்து மத எதிர்ப்பை தமிழ் தேசியத்தின் பெயரால் முன்னெடுத்து வருகின்றீர்கள்.

தமிழ் தேசியத்தின் இருப்பே இந்து மதச் சூழலில் இருக்கும் போது அதன் மீது கடுமையான இந்து மத உணர்வாளர்களின் எதிர்ப்பை ஏற்படுத்திவிட்டால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் எதிர்ப்பு தமிழ் தேசியத்தின் மீது பலமாகும் என்பதே உங்களின் நோக்கு. இது தமிழ் தேசியத்தைப் பலவீனப்படுத்தும் துரோகத்தனத்தின் வெளிப்பாடு.

இந்தியாவில் தான் பிராமண சமூகம் ஆதிக்க சமூகமாக ஒரு வரலாற்றுக் காலத்தில் இருந்து இருந்து வருகிறது. ஆக இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பை தமிழ் தேசியத்தின் மீது தூண்டுவதே இக்கருத்தாக்கங்களின் நோக்கமாக எமக்குப் புலப்படுகிறது.

காரணம் விடுதலைப்புலிகளோ இதர அரசியல் கட்சிகளோ பிராமண சமூக எதிர்ப்பை அல்லது இந்து மத எதிர்ப்பை சாதியத்தின் பெயரால் கையில் எடுத்ததே கிடையாது. ஆனால் நீங்கள்...???! :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி, உங்களுக்கு ஒரு முறை மீண்டும் ஒரு முறை விளங்கப்படுத்த முனைகின்றேன்.

சாதி அமைப்பு என்பது இந்து மதத்தின் ஒரு முக்கிய பிரிவு.

அதன்படி பிராமணர்கள் உயர்ந்த சாதியினர். அவர்கள் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவர்கள்.

நானும் நீங்களும் அவர்களின் அடிமைகள். கடவுளின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள்.

நீங்கள் திரும்பத்திரும்ப ஒன்றைக் கூறிவிட்டால் அதுவே உண்மை என்பதாக நம்பிவிட மக்களும் தயாரில்லை நாமும் தயாரில்லை. நீங்கள் பிராமண அடிமைகளாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளலாம். அது உங்கள் உரிமை. ஆனால் நாம் அப்படி யாராலும் அடிமைப்படுத்தப்படவும் இல்லை. அடிமைகளாக உணரவும் இல்லை. எங்களை உங்களோடு இணைப்பதைத் தவிருங்கள். நமக்கு உங்களின் நாசியம் அவசியமில்லை. நாம் பிராமண சமூகத்தின் மத அடையாளங்களை சாதியக் கூறுகளாக காணவோ அதற்காக பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றோ கோரப்போவதில்லை. அது அவர்களின் மத உரிமையைப் பறிக்கும் செயல்.

இந்தியா இன்றும் 3 வீதமாக இருக்கின்ற பிராமணர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது. (அரசு வேலைகளில் முக்கிய துறைகள், ஊடகங்கள்)

அங்கு அவர்களை தாண்டி மற்றைய சாதியினரால் முன்னேற முடியவில்லை. அதனாலேயே இடஒதுக்கீடு அங்கு தேவையாக இருக்கிறது. இதை பிராமணர்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள்.

அங்கு நிலமை இப்படி இருக்க, யாழ்ப்பாணத்தில் நிலமை மாறுபட்டது.

மக்கள் தொகையில் அதிகமாக இருந்த வேளாள சமூகம் கல்வி அறிவையும் பெற்றதும், அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது.

ஆயினும் பிராமணர்களின் இருப்பை அனுமதித்ததோடு, அவர்களை உயர்ந்த சாதி என்ற அந்தஸ்தையும் பேண அனுமதித்தது.

இந்திய அரசியல் சமூக நிலவரம் வேறு, ஈழத்து அரசியல் சமூக நிலவரம் வேறு, இரண்டுக்கும் இடையில் நீங்கள் அநாவசியமாக குழம்பி தமிழ் தேசியத்தை உங்களின் இஸ்டத்துக்குப் பயன்படுத்தி நாசியம் பேசுவதை அதுவும் ஈழத்தமிழரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசுவதைத் தவிருங்கள்.

இதில் ஒரு சூட்சுமம் உண்டு.

பிராமண சாதியை முற்று முழுதாக இல்லாது செய்து விட்டால், சாதியின் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும். வேளாள சமூகத்தால் மற்றைய சமூகங்களை அடக்க முடியாது போய்விடும். கடவுளின் பெயரை சொல்லி அச்சுறுத்துவதற்கு வேளாள சமூகத்திற்கு பிராமணர்களின் துணை என்றும் தேவை. இரு சமூகங்களும் இணைந்து நின்றால்தான் மற்றைய சமூகங்களை அடக்குவது இலகுவாக இருக்கும்.

இப்பொழுது வேளாள சமூகத்தை சேர்ந்தவர்கள் பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் காரணம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

அழகான கற்பனை. ஈழத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே வேளாள சாதிப்பிரிவு ஏனைய சாதிப்பிரிவுகளோடு சாதியக் களையெடுப்போடு களையப்பட்டு வரும் நிலையில் பிராமண சமூகத்திடமிருந்த புகுத்தப்பட்ட சாதிய சிந்தனைகளும் அழிந்து வரும் நிலையில் பிராமண சமூகத்தின் சமய அடையாளங்களைச் சாதியக் கூறுகளாக்கி அவர்களை அழிக்க வேண்டும் என்பதான நாசியம் வெறும் கற்பனையே அன்றி அது மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட செயல். கிட்லரின் நாசியக் கொடுமைக்கு நிகரானது உங்கள் சிந்தனை. அவரவர் மத உரிமைகளை சாதிய களையெடுப்பு என்ற பெயரில் பறிக்க முனைய முடியாது என்பதைத் தெளிந்து கொள்ளுங்கள். அது அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.

வேளாளருக்குள்ளும் மடப்பள்ளி வேளாளர் என்று கடவுளுக்கு இன்னமும் அருகில் இருக்கும் ஒரு பிரிவும் இருக்கு. பிராமணருக்கு அடுத்தாக அவர்கள் தான் கேயில் விடையங்களை கைய்யாள போன பிறப்பில புண்ணியம் செய்தவை.

ஜயாக்களே..குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்...

எம்தமிழர் தேசத்தில்..தொழில hPதியாக சாதி பிரிக்கப்பட்டு..இழிவு படுத்தப்பட்டது...

ஆனால் அதே மக்கள் புலம் பொயர் நாடுகளில் ஒரு விழா என வரும் போது அங்கு கூடி கொஞ்சி மகிழ்கிறார்களே..

இது எவ்வாறு

சாத்தியப் பட்டது...??ஃ

அடிப் படை பொருளாதாரத்தில் தானே தங்கி உள்ளது....???

அவ்வாறாயின் இது தமிழீழ தேசத்தில் பொருன்மிய கட்டமைப்பு வலுப்பெறும்

காலத்தில் உச்சம ; ஆடைந்து இந்த சாதியம் என்ற நிலை

தகராது என எவ்வாறு கூறுவீர்கள்....???

90 களின் பின் இது முன்னர் இருந்த ஆதிக் சாதி வெறி தற்போது

குறைவடைந்து வலுவிழந்து இருக்கிறது..இது எப்படி...???

பழைய வரலாறுகளை விட்டு..தற்கால எதிர் கால நிகழ்வுகளறி;கு கட்டியம் கூறுங்கள்...

மாற்று திருமணங்கள் தற்போது பல்கி பெருகி வளர்ந்து வருகிறது..

இது எதனை குறிக்கிறது....???

அறிவியலின் வளர்ச்சியா..இல்லை

மனித மனத்தின் புரிந்து கொள்ளுதலா....???

வன்னி மைந்தன்

  • தொடங்கியவர்

சாதிய முறையில் இந்தியாவிலும் ஈழத்திலும் வேறுபாடுகள் காணப்படுகிறது என்பதை நானும் கூறியுள்ளேன். அந்த வேறுபாடு எப்படி வந்தது என்று என்பதையும் சொல்லி உள்ளேன்.

நான் ஏற்றுக் கொண்ட ஒன்றை எனக்கு மீண்டும் சொல்லத் தேவையில்லை.

உங்களுக்கு யாழ்பாணத்தில் நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். சிலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். சிலருக்கு இது சாதரணமாக இருக்கும்.

யாழ் இடப்பெயர்வின் காலத்தில் நடந்த சம்பவம்.

வடமராட்சியை சேர்ந்த ஒரு ஆசிரியர் இடம்பெயர்ந்து வேறு ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர். விடுதலைப்புலிகளுடன் வெளிப்படையாக தொடர்புகளை பேணிய ஒருவர்.

அவர் அங்கு இருந்த உயர் சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்தார். அவருடன் அங்குள்ளவர்கள் அன்பாகவும் மரியாதையாகவும் பழகி வந்தார்கள். சில ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

அப்பொழுது சூரியக்கதிர் நடவடிக்கை தொடங்கியது. மக்களும் விடுதலைப்புலிகளும் இடம்பெயரத் தொடங்கினார்கள்.

அந்த ஆசிரியர் இருந்த கிராமத்தில் அவரும், ஒரு சில மக்களுமே இருந்தார்கள். விடுதலைப்புலிகள் யாரும் இருக்கவில்லை.

அந்த ஆசிரியர் வழமை போன்று அந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்றார். அப்பொழுது ஒரு உயர் சாதி அயலவர் ஓடி வந்து அவருடைய கன்னத்தில் அறைந்தார். அந்த ஆசிரியரின் சாதிப் பெயரை சொல்லித் திட்டி, நீ இங்கே தண்ணீர் அள்ள முடியாது என்று சொன்னார்.

இது உண்மையாக நடந்த சம்பவம். நாகரீகம் கருதி பெயர், ஊர் விபரங்களை தவிர்த்துள்ளேன்.

பாருங்கள்! விடுதலைப்புலிகள் இருக்கும்வரை வாய் மூடி இருந்தவர்கள், அவர்கள் இல்லை என்றதும் புத்தியைக் காட்டி விட்டார்கள்.

வெளிப்படையாக சாதி பார்ப்பதில்லை என்று சொல்வார்கள். மனதுக்குள் சாதியை பத்திரமாக வைத்திருப்பார்கள்.

சிலர் "நான் சாதி பார்ப்பதில்லை" என்று சொல்வதே தான் உயர்ந்த சாதி என்பதை வெளிப்படுத்துவதற்குத்தான்.

சில சாதி வெறியர்கள் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் மேற்சொன்ன சம்பவத்தில் இருந்து உணர்ந்து கொண்டேன்.

அவர்கள்தான் கல்வியையும், கடவுளையும் வைத்து மற்றைய சமூகங்களை அடக்கத் துடிக்கிறார்கள். இதற்காக பிராமணர்கள் மீது உள்ள புனித பிம்பத்தை தொடர்ந்து பேணி வருகிறார்கள். பிராமணர்களை அவர்கள் எக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் இவர்களின் எண்ணம் ஈடேறப் போவதில்லை.

விடுதலைப்புலிகள் நிதானமாக சாதி ஒழிப்பை செய்து வருகிறார்கள். தமது ஊடகங்களில் "வேதங்கள், மனுதர்மம்" பற்றிய விமர்சனங்களை இடை இடையே செய்கிறார்கள். அவர்கள் மெது மெதவாக செய்ய வேண்டியதை செய்தே வருகிறார்கள்.

மக்களிடம் விழிப்புணர்வு சரியான முறையில் வரும்வரை இப்படி மெதுவான ஆணுகுமுறை தவிர்க்க முடியாதது.

அவர்களுடைய பணிக்கு நாங்கள் செய்கின்ற தீவிரமான பரப்புரைகள் துணையாக இருக்கும்.

சாதி என்பது சமூகப் பிரிவினைக்கும் தமிழர்களைப் பலவீனப்படுத்தும் ஒரு சமூக வழங்கல் என்ற அடிப்படையில் அதை பலரும் எதிர்க்கின்றனர். புரிந்துணர்வுள்ள எந்த மனிதனும் அதை அங்கீகரிக்கப்போவதில்லை. அந்த வகையில் இந்தியாவை விட ஈழத்தில் சாதியத்தின் சமூகத்தாக்கம் என்பது மிகவும் குறைவடைந்துள்ளது. முற்றாக அகற்றப்படவில்லை.

அது தனித்து ஆராயப்பட வேண்டிய விடயம். நாம் இங்கு குறிப்பிடுவது கிறிஸ்தவ மதத்தை நடத்தும் தமிழ் சமூகம் போல இஸ்லாமிய மதத்தை இட்டுச் செல்லும் இஸ்லாமியச் சமூகம் போல இந்து மதத்தை இட்டுச் செல்லும் ஒரு சமூகமாக பிராமண சமூகம் உள்ளது. அவர்கள் மற்றைய மதத்தவர்களைப் போலவே தமது மத அடையாளங்களைத்தான் வெளிப்படுத்துகின்றனர். அவை சாதிய அடையாளங்களாக நீங்கள் இனங்காட்டுவதையே நாம் எதிர்கின்றோம் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

விடுதலைப்புலிகள் கூட சர்வ மதத் தலைவர்களை அழைக்கும் போது பிராமணப் பிரதம குருக்களைத்தான் அழைக்கின்றனர். அவர்களின் அடையாளங்களுடனேயே அவர்கள் மேடையில் தோற்றமளிக்கின்றனர். அது அவர்களின் மத அடிப்படை உரிமை என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதையே அது காட்டுகிறது. அந்த வகையில் பிராமண சமூகத்துக்கு தமது மதப் பணிக்கான அடையாள மிடலுக்கு உரிமை உண்டு. அது அவர்களின் மதம் சார்ந்ததும் சமூகம் சார்ந்ததுமான மனித உரிமை. அதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிராமண சமூகத்துள் ஆரிய திராவிட பார்ப்பர்ணிய சிந்தனைகள் (-இந்தச் சிந்தனைகள் தொடர்பில் நாம் மிகவும் மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்கள். எந்தச் சிந்தனையும் மனிதனைக் கட்டுப்படுத்தாது. அவரவர் அதற்குக் கட்டுப்படுவதற்கு சிந்தனைகளை அல்லது அதனை ஆக்குபவர்களை அல்லது பரப்புபவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அது அவர்களின் உரிமை. அதை பகுத்தாய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக் கொள்வது தவிர்க்க வேண்டியதை தவிப்பதும் அவரவர் உரிமை. அதில் எவரும் தலையிடுவதில் எமக்கு உடன்பாடில்லை. அந்த வகையில் உங்களின் இந்த பகுத்தறிவு புகட்டலில் எமக்கு உடன்பாடில்லை. உதாரணத்துக்கு..உங்களின் இந்த நாசிய சிந்தனைகளை ஏற்பதும் விடுவதும் அடுத்தவர் உரிமை. நாம் ஏற்கும் அளவிற்கு இல்லை-) இருப்பதென்பது புதிய விடயமல்ல. அது தனி ஒரு சமூகத்தை மட்டும் கொண்டு பற்றிக் கொண்டதாகவும் தனித்துக் குறிப்பிட முடியாது. இவற்றின் தாக்கம் தமிழினம் பூராவும் பரவி விரிந்துள்ளது. அந்த வகையில்

உங்களுக்கு யாழ்பாணத்தில் நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். சிலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். சிலருக்கு இது சாதரணமாக இருக்கும்.

யாழ் இடப்பெயர்வின் காலத்தில் நடந்த சம்பவம்.

வடமராட்சியை சேர்ந்த ஒரு ஆசிரியர் இடம்பெயர்ந்து வேறு ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர். விடுதலைப்புலிகளுடன் வெளிப்படையாக தொடர்புகளை பேணிய ஒருவர்.

அவர் அங்கு இருந்த உயர் சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்தார். அவருடன் அங்குள்ளவர்கள் அன்பாகவும் மரியாதையாகவும் பழகி வந்தார்கள். சில ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

அப்பொழுது சூரியக்கதிர் நடவடிக்கை தொடங்கியது. மக்களும் விடுதலைப்புலிகளும் இடம்பெயரத் தொடங்கினார்கள்.

அந்த ஆசிரியர் இருந்த கிராமத்தில் அவரும், ஒரு சில மக்களுமே இருந்தார்கள். விடுதலைப்புலிகள் யாரும் இருக்கவில்லை.

அந்த ஆசிரியர் வழமை போன்று அந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்றார். அப்பொழுது ஒரு உயர் சாதி அயலவர் ஓடி வந்து அவருடைய கன்னத்தில் அறைந்தார். அந்த ஆசிரியரின் சாதிப் பெயரை சொல்லித் திட்டி, நீ இங்கே தண்ணீர் அள்ள முடியாது என்று சொன்னார்.

இது உண்மையாக நடந்த சம்பவம். நாகரீகம் கருதி பெயர், ஊர் விபரங்களை தவிர்த்துள்ளேன்.

பாருங்கள்! விடுதலைப்புலிகள் இருக்கும்வரை வாய் மூடி இருந்தவர்கள், அவர்கள் இல்லை என்றதும் புத்தியைக் காட்டி விட்டார்கள்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் அவர்கள் மக்களை நிர்ப்பந்திக்கவில்லை. அவர்கள் மக்களின் மனமாற்றங்கள் நோக்கியே தங்களின் செயற்பாடுகளை பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அடுத்தவரை அல்லது தனிநபரை பாதிக்கக் கூடிய சாதிய விளைவுகளை மட்டுமே அவர்கள் கடுமையாக் கண்டு அவற்றைத் தடுக்க முனைந்தனர்.

சில மாற்று இயக்கத்தினர் பூநூலை அறித்தெறிந்த சம்பவங்களில் விடுதலைப்புலிகளும் ரெலோ இயக்கத்தினரும் அதைத் தடுத்து நிறுத்தி அது அவர்களின் மத உரிமை என்று அங்கீகரித்ததை இங்கு உதாரணமாகக் காட்டலாம். எமது இக்கருத்தின் நோக்கம் யாழ் குடாநாட்டில் சாதியம் வாழ்கிறதா வீழ்ந்துவிட்டதா என்பதல்ல.

பிராமண சமூகத்தின் மத அடையாளங்களை சாதிய அடையாளமாகக் காட்டுதல் தவறு என்பதையே இங்கு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நமக்கும் சாதியம் என்ற கற்பனையில் எழுந்த அடிப்படை ஆதாரமற்ற வாய் மொழி மூல மனித வழங்களில் எப்பவும் அக்கறை இருந்ததில்லை. அதைப் பெரிது படுத்தியதும் கிடையாது. அந்த வகையில் நாம் மனித இனத்தைச் சேர்ந்த -Homo sapiens sapiens- Homo சாதியைச் சேர்ந்தவர்கள். நீங்கள் என்ன உலகில் உள்ள நவீன மனிதன் எல்லாம் அந்தச் சாதிதான். இதை விட எதுவும் மனிதனில் சாதி என்று எமக்குப் புகட்டப்படவில்லை. நாமும் நீங்கள் குறிப்பிட்ட யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வந்திருக்கின்றோம்.

வெளிப்படையாக சாதி பார்ப்பதில்லை என்று சொல்வார்கள். மனதுக்குள் சாதியை பத்திரமாக வைத்திருப்பார்கள்.

நீங்கள் தேவையற்ற வகையில் இதற்கு அளிக்கும் முக்கியத்துவமே அவர்கள் மனசுக்குள் பூட்டி வைத்திருக்கவும் நீங்கள் அதைத் தேடிப்பிடிக்கவும் வகை செய்கிறது என்று நாம் திடமாக நம்புகின்றோம். சாதியை உச்சரிப்பவர்களைக் காட்டினும் எதிர்ப்பவர்களே அதிகம் தங்களை சாதியால் அதிகம் அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். இது மறைமுக விளம்பரம் போன்றது. சாதி என்ற அடிப்படையற்ற ஒன்று சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்றுக்கு ஏன் மீள மீள முக்கியமளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அது மீள உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பாகி விடுகிறது.

அதைக் கண்டுகொள்ளாமல் எல்லோரும் புறக்கணிக்கின்ற போது அதுவாகவே அது வீழ்ந்துவிடும். புரிந்துணர்வு மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது.

சிலர் "நான் சாதி பார்ப்பதில்லை" என்று சொல்வதே தான் உயர்ந்த சாதி என்பதை வெளிப்படுத்துவதற்குத்தான்.

இதிலும் உங்களின் தவறான அணுகுமுறை தெரிகிறது. நான் சாதி பார்ப்பதில்லை என்பதைச் சொல்லி அதை உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் தான் சொல்வான் என்று நீங்கள் குறிப்பிடுவதன் மூலம் உங்களுக்குள் பொதிந்துள்ள எண்ணத்தை தவறாகக் காட்டி அடுத்தவர்களை தவறாக வழிநடத்த முயல்கிறீர்கள். ஏன் அதை எவரும் சொல்லலாம் தானே. அநாவசியமாக நீங்கள் அந்த வார்த்தைப் பிரயோகத்துக்கு உயர்சாதி அந்தஸ்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்களோ தெரியவில்லை. நிச்சயம் புரிந்து கொள்ள முனைய வேண்டும்.

சில சாதி வெறியர்கள் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் மேற்சொன்ன சம்பவத்தில் இருந்து உணர்ந்து கொண்டேன்.

இது முகவும் தவறான பார்வை. காரணம் வடக்குகிழக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் சாதி பற்றிய சிந்தனைக்கு முக்கியமளிப்பவர்களா இல்லை. மிக நீண்ட காலம் கொழும்பில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் இதை நாங்கள் திடமாகக் குறிப்பிட முடியும். ஆக விடுதலைப்புலிகளால் தான் மக்கள் சாதி பற்றிப் பேசவில்லை என்பதிலும் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மக்களை சிந்திக்கச் செய்திருக்கிறது என்பதை இன்று புகலிடத்தில் வாழும் தமிழர்கள் பலரிடம் காணலாம். நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இதுவிடயத்தில். ஆனால் உங்கள் போன்ற சிலர் சிறீலங்கா அரசும் சங்கரியும் சொல்வது போல எல்லாம் புலிகளால் தான் என்ற தோற்றப்பாட்டைக் காட்டுவது புலிகள் மக்களை அடக்கி ஆழ முற்படுகின்றனர் என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்வதாகவே கொள்ள வேண்டி உள்ளது. ஏற்கனவே பிராமண சமூகத்தின் மத அடையாளங்களை சாதியமாக்கி தமிழ் தேசிய சாயத்தோடு பிராமணர்களை அழிக்க வேண்டும் என்ற குரல் மூலம் தமிழ் தேசியத்தின் மீது நாசியப் பார்வையை விதைத்துள்ள நிலையில் இப்போ இப்படி ஒரு தோற்றப்பாடு. இது தமிழ் தேசிய விரோத நிலைப்பாடுகளின் பிரதிபலிப்பா?

அவர்கள்தான் கல்வியையும், கடவுளையும் வைத்து மற்றைய சமூகங்களை அடக்கத் துடிக்கிறார்கள். இதற்காக பிராமணர்கள் மீது உள்ள புனித பிம்பத்தை தொடர்ந்து பேணி வருகிறார்கள். பிராமணர்களை அவர்கள் எக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அவர்கள் ஏன் தங்கள் சமூகத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். தமிழர்கள் வந்தேறுகுடிகள் சிங்கள பெளத்தத்துடன் சேர்ந்து கலந்து வாழலாம் தானே என்ற சிங்களத்தின் கோரிக்கையை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏன் அங்கு தமிழர்கள் தாங்கள் தனி இனம் பாரம்பரிய நிலம் கொண்ட தேசிய இனம் என்று வலியுறுத்துகின்றனர்.

அது போலவே பிராமண சமூகமும் இந்து சமய அனுஸ்டான சமூகமாக அது தனது தனித்துவத்தை வெளிப்படுத்த சகல உரிமைகளும் உண்டு.

ஆனால் இவர்களின் எண்ணம் ஈடேறப் போவதில்லை.

விடுதலைப்புலிகள் நிதானமாக சாதி ஒழிப்பை செய்து வருகிறார்கள். தமது ஊடகங்களில் "வேதங்கள், மனுதர்மம்" பற்றிய விமர்சனங்களை இடை இடையே செய்கிறார்கள். அவர்கள் மெது மெதவாக செய்ய வேண்டியதை செய்தே வருகிறார்கள்.

இதுவும் தவறான கருத்து. விடுதலைப்புலிகள் வேதங்கள் மனுதர்மம் போதிக்கும் காலத்துக்கு ஒவ்வாத சமூகத்தில் பலவீனத்தைத் தூண்டக் கூடிய விடயங்களையே எதிர்கின்றனர். அவர்கள் வேதங்கள் படிக்கப்படுவதையோ அவற்றின் அடிப்படையில் இந்து மதம் செழிப்பதையோ தடுக்க முனையவில்லை. அதேபோல் பிராமணர்கள் என்ற மதம் சார் சமூகத்தின் மத அடையாளங்களை சாதியக் கூறாக்கி அழிக்கவும் நினைக்கவில்லை. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் இதை முன்னரே சுட்டிக்காட்டி விட்டோம். வேதங்களைச் சாட்சி வைத்து வரலாறு சமைக்க முடியாது. அதேபோல் வேதங்களில் காலத்துக்கு ஒவ்வாததை கைவிடுவது வேதங்களின் கையில் இல்லை. அதை கையாள்பவர்களின் கையிலேயே உண்டு. அதற்கு பிராமண சமூகம் விழிப்பூட்டப்பட்டே வருகிறது. அதற்காக அவர்களின் இருப்பை சாதிய அழிப்போடு அழித்தொழிக்க நினைப்பதை விடுதலைப்புலிகள் வலியுறுத்துவதாக நீங்களும் நாரதரும் தவறான அர்த்தம் கற்பிக்க விளைகிறீர்கள்.

மக்களிடம் விழிப்புணர்வு சரியான முறையில் வரும்வரை இப்படி மெதுவான ஆணுகுமுறை தவிர்க்க முடியாதது.

அவர்களுடைய பணிக்கு நாங்கள் செய்கின்ற தீவிரமான பரப்புரைகள் துணையாக இருக்கும்.

உங்களின் நாசியப் பரப்புரை மக்களை சிந்திக்கக் கூட அனுமதிக்குமோ சந்தேகமே. உங்களுக்கு இலவச விளம்பரம் மட்டும் கிடைக்கலாம். மற்றும் படி தமிழ் தேசிய விரோத எண்ணங்களையே இது வளர்க்கப் போகிறது. அதுதான் உங்கள் நோக்கமெனில் அதில் பலன் கிடைக்கும் உங்களுக்கு. தமிழ் தேசிய ஆதரவு என்ற தளத்தில் இருந்து கொண்டே வலுவான எதிர்ப்பிரச்சாரத்தை செய்ய இது உதவும் உங்களுக்கு.

  • தொடங்கியவர்

கிறிஸ்தவ மதத்தை நடத்தும் தமிழ் சமூகம் போல இஸ்லாமிய மதத்தை இட்டுச் செல்லும் இஸ்லாமியச் சமூகம் போல இந்து மதத்தை இட்டுச் செல்லும் ஒரு சமூகமாக பிராமண சமூகம் உள்ளது. "

இவ்வளவு தூரத்திற்கு யாராலும் "தெளிவாக" எழுத முடியாது

என்றாலும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

கிறிஸ்தவ மதம் : - தமிழ் சமூகம்

இஸ்லாமிய மதம் : - இஸ்லாமிய சமூகம்

இந்து மதம் : - பிராமண சமூகம்

மூன்று மதங்களை மூன்று சமூகங்கள் வழிநடத்துகின்றன

மூன்று மதங்கள் : கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து

மூன்று சமூகங்கள் : தமிழர், இஸ்லாமியர், பிராமணர்

தமிழீழத்தில் உள்ள மூன்று மதங்களையும் மூன்று சமூகத்தினர் வழி நடத்துகிறார்கள்.

ஒரு மதத்தை ஒரு இனம் வழி நடத்துகிறது, ஒரு மதத்தை அந்த மதமே வழி நடத்துகிறது. ஒரு மதத்தை ஒரு சாதி வழி நடத்துகிறது.

அப்பாடா, ஒருவாறு விளங்கி விட்டது.

பிறகென்ன? நீங்களும் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். நல்லது.

ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்கிறேன்.

சாதியின் அடிப்படையே பார்ப்பனியம்தான். அதை ஒழிக்காது சாதி ஒழியப் போவது இல்லை.

சாதியை இல்லாது செய்ய விரும்புபவர்கள் பார்ப்பன சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பார்கள். (இங்கு சாதி என்பது மனிதர்களை குறிப்பது அல்ல)

சாதியை தொடர்ந்து பேண விரும்புபவர்கள் பார்ப்பன சாதியை காக்க முனைவார்கள். சில காரணங்களினால் (விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம்) அவர்கள் அடக்கி வாசித்தாலும், சரியான கால நேரத்திற்கு (சிறிலங்கா அரசின் வெற்றி) காத்திருப்பார்கள். அந்த நேரம் வரும் வரை எக் காரணம் கொண்டும் பார்ப்பன சாதியை கை விட மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்க்கின்ற கால, நேரம் வரப் போவதில்லை. பார்ப்பன சாதியை காக்க முனைவதில் அர்த்தம் இல்லை.

உங்களுக்குத் தெளியவில்லை என்பது கீழே காட்டப்பட்ட அட்டவணை கூறுகிறது.

என்றாலும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

கிறிஸ்தவ மதம் : - தமிழ் சமூகம்

இஸ்லாமிய மதம் : - இஸ்லாமிய சமூகம்

இந்து மதம் : - பிராமண சமூகம்

ஈழத்தில் தமிழினம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் என்று மக்கள் மூன்று மதங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாகத் தனித்தனி சமூக அந்தஸ்துகளோடு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் பாதிரியார்கள் மூலம் கிறிஸ்தவத்துக்கான அடையாளம் காக்கின்றனர். தமிழ் பேசும், தமிழர்கள் அல்லாத முஸ்லீம் சமூகத்தினர் பள்ளிவாசல் மெளலவிகள் மூலம் இஸ்லாமிய மத அடையாளம் காக்கின்றனர். தமிழ் பேசும் இந்துக்கள் பிராமண சமூகத்தின் மூலம் மத அடையாளம் காக்கின்றனர் என்பதையே அங்கு சுருக்கிச் சொல்லி உள்ளோம். எனி நீட்டி விளங்கிக் கொள்ளுங்கள்.

மூன்று மதங்களை மூன்று சமூகங்கள் வழிநடத்துகின்றன

மூன்று மதங்கள் : கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து

மூன்று சமூகங்கள் : தமிழர், இஸ்லாமியர், பிராமணர்

தமிழீழத்தில் உள்ள மூன்று மதங்களையும் மூன்று சமூகத்தினர் வழி நடத்துகிறார்கள்.

ஒரு மதத்தை ஒரு இனம் வழி நடத்துகிறது, ஒரு மதத்தை அந்த மதமே வழி நடத்துகிறது. ஒரு மதத்தை ஒரு சாதி வழி நடத்துகிறது.

அப்பாடா, ஒருவாறு விளங்கி விட்டது.

பிறகென்ன? நீங்களும் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். நல்லது.

ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்கிறேன்.

சாதியின் அடிப்படையே பார்ப்பனியம்தான். அதை ஒழிக்காது சாதி ஒழியப் போவது இல்லை.

ஈழத்துப் பிராமணர்களை பார்ப்பர்ணியக் காவிகளாகச் சித்தரிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அவர்கள் தமிழினத்தைப் பிரதிபலிப்பவர்கள். அவர்கள் ஈழவிடுதலைப் போரில் கலந்து நீண்ட வரலாற்றையும் எழுதியுள்ளனர். எனவே உங்கள் இந்த பிராமணர்களுக்குள் பார்ப்பர்ணியம் ஆரியம் போன்ற குழப்பம் விளைவிக்கக் கூடிய பதங்களை நேரத்துக்கு நேர மாற்றி புகுத்தும் நாசியப் பிரச்சாரம் எடுபடப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகிறது. நீங்கள் பார்ப்பர்ணியத்தை உச்சரித்தால் என்ன ஆரியத்தை உச்சரித்தால் என்ன வேதத்தை உச்சரித்தால் என்ன சமஸ்கிரதத்தை உச்சரித்தால் என்ன தமிழினத்தின் ஒரு அங்கமான பிராமண மத அடையாளச் சமூகத்தை சாதியொழிப்பின் கீழ் அழித்தொழிக்க நினைக்கும் செயற்பாடு கை கூடாது. அது தவறான அணுகுமுறை மட்டுமன்றி அதற்கு தமிழ் தேசிய ஆதரவுத்தளத்தை உங்கள் இஸ்டத்துக்குப் பாவிப்பது தமிழ் தேசியத்தின் மீது நாசியப் பார்வைகள் ஏற்பட வகை செய்யும். அது தமிழ் தேசிய விரோதம் ஆகும்.

சாதியை இல்லாது செய்ய விரும்புபவர்கள் பார்ப்பன சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பார்கள். (இங்கு சாதி என்பது மனிதர்களை குறிப்பது அல்ல)

மனிதனில் ஒரு சாதி இரண்டு பால் மட்டுமே உண்டு. மிச்சமெல்லாம் நீங்களும் நாரதரும் உருவாக்கிக் கொண்டவை. மக்கள் மறந்தாலும் மறக்க நினைத்தாலும் நீங்கள் ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீர்கள். பிராமண சமூகம் சாதிய அடிப்படைகளைக் கைவிட்டு அதிக தூரம் வந்துவிட்டது. அவை நல்ல மாற்றங்கள். அந்த வகையில் மத அடையாளம் காவும் சமூகமாக பிராமண சமூகம் நோக்கப்படுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒன்றே. அது அவர்களின் அடிப்படை மனித உரிமையும் கூட.

சாதியை தொடர்ந்து பேண விரும்புபவர்கள் பார்ப்பன சாதியை காக்க முனைவார்கள். சில காரணங்களினால் (விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம்) அவர்கள் அடக்கி வாசித்தாலும், சரியான கால நேரத்திற்கு (சிறிலங்கா அரசின் வெற்றி) காத்திருப்பார்கள். அந்த நேரம் வரும் வரை எக் காரணம் கொண்டும் பார்ப்பன சாதியை கை விட மாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் கூட இந்த விடயத்தில் அடக்கி வாசிக்கவில்லை. அவர்கள் தெளிவாக விளங்கித்தான் வாசிக்கின்றனர். தமிழினத்தின் இன அடையாளத்துக்கு மதமும் முக்கியமானது. அந்த வகையில் பிராமண சமூகத்தின் மத அடையாளப் பாரம்பரிய இருப்பு அவசியமாகிறது. ஐநாவின் இனத்துவப் பாகுபாட்டுக் கோவைகளைப் படித்துப்பாருங்கள் புரியும். ஒன்று புரிகிறது பிராமண சமூகம் எதிர்பார்க்கிறதோ இல்லையோ நீங்கள் அஞ்சுகிறீர்கள் புலிகள் மீது நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறீர்கள் அவர்கள் அரச வெற்றி வழி செய்துவிடுவார்களோ என்று என்பது தெளிவாகப் புலப்படுகிறது உங்கள் வரிகளில்.

ஆனால் அவர்கள் எதிர்பார்க்கின்ற கால, நேரம் வரப் போவதில்லை. பார்ப்பன சாதியை காக்க முனைவதில் அர்த்தம் இல்லை.

பார்பர்ணியத்தைக் காப்பதல்ல ஈழத்துப் பிராமணர்களின் தொழில். அவர்களின் சேவை இந்து மத அனுஸ்டானங்களை மக்களுக்குள் வழக்கப்படுத்துவது. அந்த வகையில் அவர்கள் மதத்துக்கான சேவைச் சமூகம். அதற்கான அடையாளமிட்டுக் கொள்ள அவர்களுக்கு எப்போதும் உரிமை உண்டு. தமிழீழம் இந்து மதத்தை மட்டுமல்ல கிறிஸ்தவம் இஸ்லாம் என்று அனைத்து மத அடிப்படைகளையும் அடையாளங்களையும் சமூகங்களையும் உள்வாங்கும் ஒரு நாடாகவே அமையும். தமிழ் மக்கள் மதமற்ற மக்களாக தமிழீழத்தில் வாழப் போவதில்லை. உங்களின் இந்து மத எதிர்ப்புப் பிரச்சாரமும் ஆரிய எதிர்ப்புக் கோசங்களும் பார்ப்பர்ணிய சிந்தனைகளை காவுதலும் என்ற ஈழத்துப் பிராமணர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் நாசிய நஞ்சூட்டலுக்கு உதவலாம். தமிழ் தேசியம் மீது கோரப்பார்வை விழ உதவலாம். நிச்சயம் தமிழீழ மண்ணில் பிராமண சமூகமற்ற நிலையை உருவாக்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்

சரி, இப்பொழுது புதிய அட்டவணை போட்டுப் பார்ப்போம்!

இஸ்லாம் - மௌலவிகள், இமாம்கள்

கிறிஸ்தவம் - பாதிரிமார்

இந்து - பிராமணர்

இமாம்கள், பாதிரிமார்களை விட பிராமணர்களிடம் ஒரு பாரிய வேற்றுமை இருக்கிறது.

இஸ்லாமியர் யார் என்றாலும் அதற்கான வேதங்களை கற்று ஒரு இஸ்லாமிய மத குரு ஆக முடியும். எந்தக் கிறிஸ்தவராலும் பாதிரியார் ஆக முடியும்.

துணி துவைக்கின்ற தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்கின்ற ஒருவன் பிராமணன் ஆக முடியுமா?

மிக மிக குறைந்த இடங்களில் விதிவிலக்காக பூசாரி வேலை பார்க்கின்ற ஒரு சிலராலேயே பிராமணர் ஆக முடியவில்லை.

இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இவ்வளவு பேசுகின்ற உங்களாலேயே நீங்கள் ஆயிரம் வேதங்களை கற்றாலும் ஒரு பிராமணர் ஆக முடியாது.

காரணம் சாதியின் கட்டமைப்பின் அடிப்படைத் தத்துவமே அதுதான். ஒரு பிராமணனுக்கு பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும், அவன் பிராமணனே.

ஆனால் மற்றவர்கள் யாராலும் பிராமணர் ஆக முடியாது.

இது சமத்துவத்திற்கு, மனித உரிமைக்கு எதிரானது அல்லவா? இதைத்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.

இது இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

மனுதர்மம், வேதங்களில் இருக்கின்ற மானிடத்திற்கு எதிரான கொள்கைகளை நிராகரியுங்கள்.

பிராமணர் என்பது ஒரு சாதி என்பதே விளங்காத மாதிரி நடிக்கின்ற நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள்.

மாறாக உங்களின் ஆதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்ந்து அடக்குவதற்காகவும் பிராமணர்களை காப்பற்றவே முனைகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.

இன்றும் இது போன்ற மனநிலை புலம்பெயர்ந்த வாழும் சில தமிழர்களிடம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறேன்.

ஏன் முடியாது. வேதங்களைக் கற்று இந்து மத நெறிகளைக் கற்று அதற்குரிய தனித்துவத்தைப் பேணிக் கொண்டால் நீங்களும் பிராமணர் ஆகலாம். அப்படி ஆக முடியவில்லை என்றால் அதற்காக கேள்வி எழுப்புங்கள். அது நியாயம். ஆனால் பிராமண மத அடையாளங்களை சாதியமாக்கி பிராமண சமூகமே இருக்கக் கூடாது என்பது நாசிய வாதம். வத்திக்கான் கூட பெண்களுக்கு பிஷப் ஆக முடியாது என்றிருந்த நிலையைத் தளர்த்தி அண்மையில் அமெரிக்காவில் ஒரு பெண்மணி பிஷப் ஆனார். நீங்களும் பிராமணராவதற்குரிய வேதங்களை கிரிகை நெறிகளை வாழ்க்கை முறைகளை அனுஷ்டிக்கத் தயாரானால் நிச்சயம் பிராமணராக முடியும். அங்கு தடையிட யாருக்கும் உரிமை கிடையாது.நீங்கள் விடயங்களை சாதியக் கண்ணோட்டத்தில் அணுகுவதே தவறானது. அதுவும் நாகரிகமான உலகில் இருந்து கொண்டு.

மிக மிக குறைந்த இடங்களில் விதிவிலக்காக பூசாரி வேலை பார்க்கின்ற ஒரு சிலராலேயே பிராமணர் ஆக முடியவில்லை.

இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இவ்வளவு பேசுகின்ற உங்களாலேயே நீங்கள் ஆயிரம் வேதங்களை கற்றாலும் ஒரு பிராமணர் ஆக முடியாது.

காரணம் சாதியின் கட்டமைப்பின் அடிப்படைத் தத்துவமே அதுதான். ஒரு பிராமணனுக்கு பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும், அவன் பிராமணனே.

ஈழத்தில் சாதியத் தாக்கம் பிராமண சமூகத்திலும் இருந்திருக்கலாம். ஆனால் அந்த நிலை மாறி வந்திருக்கிறது. வந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்னவே சுட்டிக்காட்டி விட்டோம்.

பிராமண சமூகம் தனிச் சாதியாக அடையாளப்படுத்தப்பட்டது பிரபுத்துவ வாதிகளால் என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். பிராமண சமூகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முனைவது அல்லது மாற்ற முனைவது வேறு. பிராமண சமூகமே இருக்கக் கூடாது அது ஒரு சாதியக் கூறு அவர்களின் மத அடையாளங்கள் சாதியம் என்று கூறி சாதிய ஒழிப்புக்குள் பிராமண சமூகத்தை இலக்காக்குவது என்பது வேறு. இரண்டுக்கும் பாரிய வேறுபாடுண்டு.

சாதாரண கிறிஸ்தவன் பாதிரியாரானதும் அதற்குரிய அடையாளங்களையும் வாழ்க்கை முறையும் கடைப்பிடிக்க வேண்டியவன் ஆகிறான். அதற்காக நிறைய தன்னில் மாற்றங்களை அவன் பெற வேண்டி உள்ளது. சாதாரண சமூகப் பிரஜை நிலையிலிருந்து அவன் சில கட்டங்களில் வேறுபட வேண்டி இருக்கிறது. அதனடிப்படையில் அவன் தனி ஒரு சமூக வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். அப்படிப்பட்டவர்களாகவே பிராமணர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்களாகின்றனர். அவர்களுக்குள் சாதியம் காலத்தால் புகுத்தப்பட்டது. அதன் கோட்பாடுகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டு வரும் இவ்வேளையில் பிராமணர்கள் மத அடையாளங்களுடன் தனி ஒரு சமூகமாக இந்து மதத்தின் சேவகர்களாக வாழ்வதை அங்கீகரிக்க வேண்டியது இன்று அவசியமாகிறது.

பூசாரிகள் எல்லாம் வேதங்கள் இந்து மத நெறிகள் அறிந்தவர்கள் அல்ல. நாளை கிறிஸ்தவக் கல்லூரிகளில் பாதிரிகளாக கல்வி புகட்டுவது போல பிராமணக் கல்விக்கான பிராமணக் கல்லூரிகளை அமைக்க உங்களால் வழிகாட்ட முடியுமா? அப்படி செய்யச் சொல்லுங்கள் அது நியாயம். பிராமண சமூகத்தில் உள்ள சில இறுக்கமான நடைமுறைகளைக் காலத்தின் போக்கில் தளர்த்தச் சொல்வது நியாயம். ஆனால் பிராமண சமூகம் சாதியக் கூறு அதன் மத அடையாளங்கள் சாதியத்தின் இருப்பு என்பதும் பிராமணர் சமூகம் இருக்கவே கூடாது அதன் நாமம் தொலைக்கப்பட வேண்டும் அழிக்கப்பட வேண்டும் என்பது கிட்லர் யூத நாமத்தை அழிக்க நினைத்ததற்கு ஒப்பானது. அந்த வகையிலேயே உங்கள் கருத்து நாசியக் கருத்தாகப் பார்க்கப்படுகிறது. இப்படியான நாசியக் கருத்துக்களை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்வது தமிழ் தேசியத்தின் மீது பயங்கரத் தோற்றப்பாட்டை அச்சத்தை உண்டு பண்ண விளைகிறீர்கள் என்றே காட்ட விளைகிறது. இதுவே தமிழ் தேசிய விரோதமாகிறது. துரோகமாகிறது.

ஆனால் மற்றவர்கள் யாராலும் பிராமணர் ஆக முடியாது.

இது சமத்துவத்திற்கு, மனித உரிமைக்கு எதிரானது அல்லவா? இதைத்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.

நீங்கள் வைத்த கோரிக்கைகள் என்பது பிராமணர்கள் சாதியத்தின் எச்சங்கள். பிராமணர் என்ற நாமமே அழித்தொழிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆரிய எச்சங்கள் பார்ப்பர்ணிய சிந்தனைக் காவிகள் எதிரிகள் அவர்களின் சமூக இருப்பும் அடையாளமும் அடையாளம் தெரியாதபடி அழிக்கப்பட வேண்டும், அப்போதுதான் சாதியம் அழியும் என்று.

ஆனால் நாங்கள் இதில் தெளிவாகக் குறிப்பிட்டோம். பிராமண சமூகம் மத அடையாளங்களைக் காவும் இந்து மத வழக்கங்களை மக்களிடம் கொண்டு செல்லும் சேவை செய்யும் சமூகம். அது ஈழத்தின் சாதியத்தாக்கத்துக்கு உட்பட்டிருப்பினும் இன்று பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவர்கள் ஈழத்தமிழினத்தின் ஒரு அங்கம். அவர்களுக்கும் ஈழப்போராட்டத்தில் பங்களிப்பு உண்டு. அவர்களுக்கு தங்கள் மத அடையாளங்களோடு மதக் கடமைகள் செய்ய உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் அடிப்படை உரிமை என்று.

இப்போ நீங்கள் உங்கள் சுருதியை மாற்றி இருக்கிறீர்கள். மற்றவர்களும் பிராமண சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று. நிச்சயம் இதை நாம் வர வேற்கிறோம்.

பிராமணக் கல்விக்கான கல்லூரிகளை அமைத்து இந்து மதத்துக்கான சேவை வழங்களை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதோடு பிராமண சமூகம் மீதான சாதியப் பூச்சில் இருந்து அதை முழுமையாக விடுவிக்க வேண்டியதும் கட்டாயமாகிறது. அதன் இருப்பு என்பது இந்து மதத்தின் சேவைக்கானது என்பதை தமிழர்களுக்குப் புரிய வைப்பதோடு எவரும் பிராமண சமூகத்தில் தகுதி அடிப்படையில் இணைய வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் நாமும் வலியுறுத்துகின்றோம். பிராமண சமூகத்தில் இருக்கும் சில அதீத கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அதன் சமூகப்பங்களிப்பு என்பது எளிமைப்படுத்தப்பட வேண்டும். பிராமணக் கல்வியைப் பெறும் எவரும் பிராமணராகி சமயப் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். அதில் எமக்கும் மாறுப்பட்ட கருத்துக் கிடையாது.

ஆனால் பிராமண சமூகமே ஒரு சாதியக் கூறு அதன் நாமமே உலகில் இருக்க கூடாது அது பார்ப்பர்ணியக் காவி ஆரிய எச்சம் என்பதெல்லாம் எம்மால் நாசியச் சிந்தனைகளாகத்தான் பார்க்கப்படுகின்றன.

இது இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

மனுதர்மம், வேதங்களில் இருக்கின்ற மானிடத்திற்கு எதிரான கொள்கைகளை நிராகரியுங்கள்.

பிராமணர் என்பது ஒரு சாதி என்பதே விளங்காத மாதிரி நடிக்கின்ற நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள்.

மாறாக உங்களின் ஆதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்ந்து அடக்குவதற்காகவும் பிராமணர்களை காப்பற்றவே முனைகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.

இன்றும் இது போன்ற மனநிலை புலம்பெயர்ந்த வாழும் சில தமிழர்களிடம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறேன்.

மீண்டும் முன்னுக்குப் பின் முரணாக எழுதுகின்றீர்கள். பிராமண சமூகத்தின் இருப்பை சாதியமாகக் பார்க்காத வரைக்கும் அது சாதியமாகத் தெரியாது. கிறீஸ்தவ சமூகத்தில் பாதிரியாரும் கன்னியாஸ்திரிகளும் தனித்துப் ஒரு சமூகக் குழுமமாக நோக்கப்படுகிறார்களே தவிர தனிச் சாதிகளாக அல்ல. யாழ்ப்பாணத்தில் பாதிரியார் குடும்பங்களைக் "கனக்கர்" குடும்பம் என்பார்கள். அவர்களுக்கு ஒரு தனி மரியாதையை சமூகம் அவர்களின் சமயப் பணிக்காக வழங்கும். இந்த நிலை பிராமண சமூகம் மீது வர வேண்டும். அதேபோல் பிராமண சமூகத்துள் தகுதி அடிப்படையில் இந்து மதச் சேவைக்காக எவரும் இணைக்கப்பட வழி வகைகளும் செய்யப்பட வேண்டும். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதில் சில மாற்றங்கள் அவசியமே. ஆனால் பிராமண சமூகம் சாதிய அடையாளம். அதன் நாமமே இல்லாமல் அது அழிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் தவறான நாசியக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு. அதைப் புகலிடத்தில் இருந்தென்ன தாயகத்தில் இருந்தும் எதிர்க்கத்தான் வேண்டும். நாசியக் கொள்கைகள் கிட்லரோடு அழிக்கப்பட வேண்டியவை. இது மனித உரிமைகளுக்கு முக்கியமளிக்கும் சிந்தனைக் காலம். அந்த வகையில் உங்களின் பிராமண சமூகத்துக்கு எதிரான பரப்புரையே கவலை அளிக்கிற விடயமாக இருக்கிறது.

நான் முன்னர் இணைத்திருந்த விடுதலைப் புலிகளின் கட்டுரையில் சாதிப் பேய் எம் இனத்தில் புரையோடிப் போன பிரச்சினை என்றும் எவ்வாறு அது இன்றும் இருக்கிறது என்பது கூறப்படுள்ளது.அத்தோடு இது பற்றி பல கட்டுரைகள் பலராலும் எழுதப்படுள்ளது.எந்த திருமண விளம்பரத்தையோ அல்லது பேச்சுவார்த்தையிலோ இன்றும் சாதி முக்கிய இடம் வகிகிக்றது.இதனை மறுதலிப்பது பூனை கன்ணை மூடிக் கொள்வது போன்றதாகும்.இங்கே நாரதரும் சபேசனும் மட்டும் இது பற்றி எழுதுவதாகக் கூறுவது

முற்று முழுதான ஒரு பொய்யுரை.இதில் எமக்கு எதோ தனிப்பட்ட நலன் இருப்பதாக் கூறுவதும் இவரின் தனி நபர் தாக்குதலே அன்றி வேறொன்றும் அல்ல.கருத்து பதிற் கருத்து எழுத முடியாமையின் பிரதிபலிப்புக்கள் தான் இவை.

மேலும் ஆரியரே உலகில் சிறந்த இனம் என்னும் கொள்கை கிட்லரின் நாசிகள் மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் பார்ப்பனரும் கொண்டிருந்தனர்.இவர்கள் இரண்டாம் உலக யுத்ததின் போது நாசிகளுக்கு ஆதரவு தெருவித்து வாழ்த்துச் செய்திகளை அனுபினார்கள்.இங்கே சாதியமும், பார்ப்பனியமும் தான் நாசியம்.

மனிதர்கள் எல்லோரும் ஒன்று பிறப்பால் ஒருவர் உயர்ந்த சாதி இல்லை என்று கூறுவது ' நாசியம்' ஆக வேண்டுமென்றே நெடுக்கால போவானால் சித்தரிக்கப் படுவது ஆங்கிலத்தில் கூறுவதானால் மிகப் பெரிய ஐரனி அல்லது துயரம்..இப்படியான கருத்தாடலை விட்டு விட்டு பிராமணர் ஏன் ஒரு சாதி இல்லை என்பதற்கான ஆதரங்களை முன் வைப்பதே இவரின் கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருக்கும்.உலகில் இவரைத் தவிர வேறு எவரும் இவ்வாறு கூறி இருக்கமுடியாது.ஏனெனில் முழுப் பொய்களை அவிழ்த்து விடுவதே இவரின் கருத்தாடல்.

உங்களின் அனைத்துக் கருத்துகளுக்கும் மேலே தெளிவாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

சாதியம் ஈழத்தில் இருக்கவில்லை என்பது எமது வாதமல்ல, சாதியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் எமது வாதமல்ல. சாதியம் இனப்பலவீனம் என்பதில் விடுதலைப்புலிகள் இதழில் சொன்னது போலவே நமக்கும் உறுதியான நம்பிக்கை உண்டு. சாதியம் என்பது மனிதர்கள் வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதிலும் நாம் தெளிவாகவே உள்ளோம்.

பிராமண சமூகம் என்று வருகின்ற போது அது இந்து மதம் சார் ஒரு மதச் சமூகமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அவர்கள் சாதிய ஆதிக்கத்துள் இருந்திருக்கலாம். சாதியக் கோட்பாடுகளைக் காவி இருக்கலாம். அவற்றை எல்லாம் அவர்கள் கைவிட்டு பிராமணர் என்பவர்கள் இந்து மதத்தின் சேவகர்களாக மத அடையாளங்களைப் பாதுகாக்கின்ற ஒரு சமூகமாக நோக்கப்பட வேண்டும். அதில் சாதிய உச்சரிப்பு இருக்கக் கூடாது. பிராமண சமூகத்தின் இருப்பு அந்த வகையினதாகவே இருக்க வேண்டும். மற்றைய மதங்களுக்கு உள்ளது போல இந்து மதத்துக்கும் சேவை செய்ய ஒரு தனிச் சமூகம் தன்னை அர்பணித்திருப்பதை நாம் அடையாளப்படுத்த வேண்டும். அதை சாதியச் சாயத்தால் சாதிய அலகாக்கி அழிப்பதையே நாம் எதிர்க்கின்றோம். என்பதை தெளிவாக நாம் மேலே விளக்கி உள்ளோம்.

நாசியக் கொள்கை என்பது தனது கோட்பாடு இருப்புக்காக இனங்களை அழித்தல் அடுத்த கோட்பாடுகளை அழித்தல் என்பதாக இருந்தது. அந்த நிலையை பிராமண சமூகம் நோக்கி தமிழ் தேசியத்தின் பெயரால் செய்வதை நாம் நாசியமாகவே பார்க்கின்றோம். இது தொடர்பிலும் விளக்கி உள்ளோம்.

எனவே மேலதிக விளக்கங்கள் தொட்டுச் செல்லும் விடயத்துக்கு எனியும் அவசியமில்லை. மேலே உள்ளவற்றை விளங்கிக் கொண்டால் போதுமானது.

தமிழில் பூசை செய்வது பற்றி நெடுக்காலபோவனனின் கருத்து என்ன?

தமிழ் நாட்டில் யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ் நாட்டு அரசால் எடுக்கப்பட்ட முயற்ச்சிகள் பிராமண சங்களால் குழப்பபட்டன. நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டன என்று நினைகிறேன்.தமிழ் ஈழத்தில் அவ்வறான நிலை வராது என்று கருதுகிறேன்.யாரும் பிராமணர் ஆகலாம் என்பதை நானும் வரவேற்கிறேன்.ஏனெனில் படிப்படியான நிலைகளினூடாகத் தான் நாம் அடைய வேண்டிய நிலையை அடையலாம் என்பது எனது கருத்து.

  • தொடங்கியவர்

இன்றைக்கு ஈழத்தில் அதிகமாக சாதியக் கருத்துக்களை காவிக் கொண்டு திரிவது பிராமண சமூகமே. அது புலம்பெயர் நாடுகளிலும் தொடர்கிறது.

நம்பாதவர்கள் ஒரு பரிசோதனை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுக்கு தெரிந்த பிராமணர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழையுங்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.