Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்குள் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்கவே கூடாது-ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகை: துக்கநாளாக அனுசரிக்க ராமதாஸ் கோரிக்கை ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வருகிற 17ந் தேதி இந்தியாவுக்கு வரும் போது துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சிங்கள அரசின் உணவுத் தடையினால் யாழ்ப்பாணத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் பசி, பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதாக செய்தி வெளிவந்திருக்கிறது. ராஜபக்சே இந்தியா வரும் நாளான 17.11.2006 தமிழகத்தில் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும்.

- மாலைச் சுடர்

http://www.maalaisudar.com/0511/pol_news_1.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவிற்கு கறுப்பு கொடி...!

நவம்பர் 17ஆம் நாள் மகிந்த இராசபக்சே 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்திய தலைமை அமைச்சரை சந்தித்து இலங்கை அரசியல்-பொருளாதாரா பிரச்சனைகளை பற்றியும் அரசியல் ஆதரவையும் படைகலன்கள் ஆதரவையும் எதிர்பார்த்து பிச்சை பாத்திரம் தூக்கிக்கொண்டு வரப்போகிறார். எம் தமிழ் மக்களை கொண்றொழிக்க எம் வரிப்பணத்தில் பங்கு கேட்க வரும் மகிந்தவிற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் கறுப்பு கொடி காட்டி எதிப்பு காட்ட வேண்டிய தருணமிது. அரசியல் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் கட்சிகளையும் ஒன்றினைத்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் அழித்தொழிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று ஒன்றுபட்ட "ஈழத்தமிழ்மக்கள் ஆதரவு போராட்டம்" மூலம் தமிழர்கள் தமது உணர்வினை காட்ட வேண்டும்.

இன்றைய தமிழக அரசியல் களம் தமிழர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசியல் பாகுபாடின்றி இப்போராட்டத்தை முன்னெடுக்கவும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும். எப்போதும் என்நேரமும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் "ஈழத்தமிழ்மக்கள் ஆதரவு கூட்டமைப்பும்" ம.தி.மு.க தலைவர் வை.கோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு போன்றவர்கள் இப்போராட்டத்தினை முன்னெடுக்க முன்வரவேண்டும். தேசியத் தலைவர் மீதுள்ள மதிப்பினால் தமது மகனுக்கு "பிரபாகரன்" என்று பெயர் வைத்தாகவும் ஈழத்தமிழர்கள் அவலம் தீரும் வரை தமது பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என்று கூறும் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் அவர்களும் இப்போராட்டத்தில் பங்குபெறவேண்டும். அ.தி.மு.கவும் தி.மு.கவும் இப்போராட்டத்தில் இணைந்து அனைத்து கட்சி கூட்டமைப்பின் மூலம் இப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். தமிழ் இயக்குனர்கள் பாரதிராசா மகேந்திரன் மற்றும் முன்னணி தமிழ் நடிகர்களும் இப்போராட்டத்திற்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தலைமை அமைச்சரை சந்திக்க முடியாமல் திரும்பியது தமிழ்நாட்டு அரசியலால் மட்டுமல்ல இந்திய அரசின் ஈழத்தமிழ்மக்கள் மீதான பாரா முகமும் தான். இவர்கள் விடுதலை புலிகளை தானே தடை செய்தார்கள் ஈழத்தமிழ்மக்களை அல்லவே. பின்பு ஏன் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்தும் கண் மூடி வாய் பேசாதவர்களாய் இருக்கிறார்கள். எப்படியோ விடுதலை புலிகள் தான் ஈழத்தமிழர்கள் ஈழத்தமிழர்கள் தான் விடுதலை புலிகள் என்று வெளிப்படையாக சொலாமலே விடுதலை புலிகள் தான் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டது வரை மகிழ்ச்சியே.

போர்களத்திற்கு அப்பால் சிங்கள படைகள் மீது விடுதலை புலிகள் இலக்கு வைக்கும் போது கூப்பாடு போடும் சர்வதேசம் சிங்கள படைகளின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்கள் தெரிந்தெடுத்த விடுதலை புலிகள் இலக்கு என்று மருத்துவமனைகள்இ பாடசாலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதில்லை. விடுதலை புலிகள் சிங்கள படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டால் கண்டனம் தெரிவிக்கும் சர்வதேசம் சிங்கள படைகள் மருத்துவமனைகள் பாடசாலைகள்இ பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் போது வருத்தம் தெரிவிக்கின்றார்கள். என்னே சர்வதேசத்தின் அனுகுமுறைகள்...! ஏதோ வருத்தம் தெரிவிக்கவாவது செய்தார்களே...!

தமிழ்நாட்டு அரசியல் பாகுபாடும் 1991 ஆம் ஆண்டுகளுக்கு பிந்திய அரசியல் மாற்றங்களே விடுதலை புலிகளுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது என்பதும் இருப்பினும் பல இலக்க தி.மு.க தொண்டர்கள் ஈழத்தமிழர் விசுவாசிகள் என்பதனையும் நாம் மறுக்க முடியாது. இன்றைய இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது இந்த அரசியல் சாதகங்களை கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு முழுமையாக குரல் கொடுக்கவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தமிழகம் உள்ளது என்பதனை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டிய காலமிது. தமிழக தலைமை ஈழத்தமிழ் நாடுளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தலைமை அமைச்சரை சந்திப்பதில் முட்டுக்கட்டை போட்டது என்று என்னாமல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் திரு. இரவிக்குமார் அவர்களை எதிக்கட்சியாக இருப்பினும் ஈழத்தமிழ் அகதிகளுக்கான நிலைமையை கண்டறியும் பொறுப்பளித்ததை இங்கு நினைவு கூர்வது பொருத்தமுடையதாகும்.

ஆகவே ஈழத்தமிழர்களின் அவல நிலையை தமிழக அரசியல் கட்சிகள் அரசியலாக்குவதை விடுத்து அனைத்து தரப்பினர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. இப்போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யமுடியாமல் போயினும் சிங்கள படைகளுக்கு உதவி போகாமல் பார்த்துக்கொள்ளவாவது இயலும்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்ற சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"

பின்குறிப்பு:

இக்கட்டுரையை எழுதி முடித்த தருவாயில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் புதுடெல்லி வரும் மகிந்தவிற்கு சென்னையில் கறுப்பு கொடி காட்டுவோம் என்றும் அன்று அனைத்து தமிழர்கள் வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்றி துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன் மோகன்சிங்குக்கு கடிதம்

இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தின் முப்படைகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருகின்றன. பிரதமர் விக் கிரமநாயகாவின் பேச்சு இதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. 2001ம் ஆண்டில் டிசம்பர் மாதம் விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தத்தை மேலும் ஒரு ஆண்டு நீடித்தன. அதன்பிறகு நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை அப்போதைய அதிபர் சந்திரிகாவால் தோல் வியில் முடிந்தது. ஏ9 பாதையை திறந்து விடும்படி இலங்கை அரசை வற்புறுத்துங்கள்.தமிழர்களின

18ம் திகதி அவர் பதவியேற்று ஒரு வருடம் முடிகின்றது அதற்காக ஒரு இராணுவ வெற்றியை(தமிழின அழிப்பை) நடத்துமாறு இராணுவதளபதிக்கு கட்டளை இட்டுவிட்டு முன்னைய அரச அதிபர் போல் வெளிநாட்டிற்கிற்கு தப்பி ஓடுகின்றாரா????

18ம் திகதி அவர் பதவியேற்று ஒரு வருடம் முடிகின்றது அதற்காக ஒரு இராணுவ வெற்றியை(தமிழின அழிப்பை) நடத்துமாறு இராணுவதளபதிக்கு கட்டளை இட்டுவிட்டு முன்னைய அரச அதிபர் போல் வெளிநாட்டிற்கிற்கு தப்பி ஓடுகின்றாரா????

அப்ப ஜே.வி.பி( ராஜீவுக்கு) மாலை போட்டது மாதிரி போட்டிட வேண்டியது தான்..............................சங்கு ஊதிடுவோம் ..... :lol::lol::lol:

மிலேச்சததனம் மிக்க அரசின் ஒரு வருட புூர்த்தியை ஒரு பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட மகிந்தன் திட்டமிட்டுள்ளதாக ஈழத்திலிருந்து செய்தி அந்த வெற்றி எங்காவது ஈழததில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டாடவே முயலலாம். அம்மணியும் புலிகளின் விஷேட நாட்களுக்கு டூர் கிளம்பி விட்ட மாதிரி இவரும் கிளம்புகிறார் போல இருக்கு. இன அழிப்பு நடத்தி விட்டு அங்க இருந்து கொண்டு ஐயோ எனக்கொண்டுமாத் தெரியாது என்டு புறுடா விடலம் பாருங்கோ.

ஈழததிலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை விட, தமிழ்நாட்டுக்கு ஒரு சிங்கள அமைச்சர் உத்தயோகபுூர்வமாகப் போக இருக்கின்றார். இலங்கைக்கு அங்கிருந்து மின் எடுக்கப் போகின்றினமாம்.

தமிழ் நாட்டில் இருந்து கேபிள் போடப்போகினமா என்ற கேள்விக்கு அப்பால் 2 வித விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

1. சேது சழுத்திரத்தை நிறுத்த முன்பு பாலம் போடுவோம் என்ற சூழ்ச்சியோடு ரணில் செயற்பட்டார். இப்போது கறண்ட் எடுப்பதாக சொல்வது கூட, இந்த மாதிரி ஒரு செயற்திட்டம் தான்.

இரண்டாவது சிங்கள அமைச்சரை தமிழ்நாடு வரவேற்கின்றது என்று காட்டுவது கூகூலம் ராமதாசின் மகிந்தவின் வருகைக்கு எதிரான முயற்சியை மழுங்பகச் செய்தலாகும். ஏனென்றால் இவரின் விஜயத்துக்கு பிறகு தான் மகிந்த வரவிருக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குள் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்கவே கூடாது: தமிழ்நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்- கண்டனங்கள்

ஈழத் தமிழர்களை பட்டினயின் கோரப் பிடியில் சிக்க வைத்து படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் முப்படைகளையும் கொண்டு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்து வரும் சிங்கள இனவெறி அரசு இப்போது முக்கிய நெடுஞ்சாலையையும் மூடி யாழ்ப்பாண வளைகுடாவுக்கு உணவு, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் எதுவும் செல்ல முடியாமல் தடை விதித்திருக்கிறது.

சிங்கள அரசின் இந்த உணவு தடையினால் யாழ்ப்பாணத்தில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் பசி, பட்டினியால் மடித்து கொண்டு இருக்கிறார்கள். இது போதாதென்று தமிழர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தரை, வான் மற்றும் கடல் வழியாக பெரும் தாக்குதல் தொடுக்கப் போவதாகவும் இலங்கை பிரதமர் புதிதாக கொக்கரித்து இருக்கிறார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வருவதாக செய்தி வெளிவந்து இருக்கிறது. இவரை போன்று அரக்க குணம் படைத்த தலைவர்கள் எவரும் இருக்க முடியாது. ஒருபுறம் பேச்சுவார்த்தை என்று நாடகமாடுகிறார். இன்னொரு புறம் இராணுவ தாக்குதல்களை முடுக்கிவிட்டு குண்டுமாரிப் பொழிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து கொண்டு இருக்கிறார். இது போதாதென்று உணவு தடையையும் ஏற்படுத்தி தமிழர்களை பட்டினிச் சாவின் விளிம்பிற்கு தள்ளி சாகடித்து வருகிறார். இலங்கை அதிபரின் இந்த ஈவு இரக்கம் அற்ற நடவடிக்கை உலகெங்கும் வாழும் தமிழர்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய அரக்க குணம் படைத்த ராஜபக்சே இந்தியா வரும்போது அவருக்கு தமிழர்கள் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு அடையாளமாக அவர் இந்தியா வரும் நாளில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி, ஒவ்வொரு வீடுகளிலும், பொது இடங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றி சாத்வீக முறையில் தமிழர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த அறவழி போராட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். ஈழத் தமிழர்களை காக்க வேண்டும் என்று கருதும் ஒருமித்த கருத்துடைய அனைவரும் இந்த அறவழி போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். ராஜபக்சே இந்தியாவரும் அதே நாளில் (17 ஆம் தேதி) தமிழகத்தில் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கறுப்புக்கொடி பறக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் கறுப்பு சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன்:

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி வரும் ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டம் மென்மேலும் கொடூரமான முறையில் தொடர்கிறது. மும்முனை தாக்குதல்களோடு மட்டுமின்றி யாழ்ப்பாணத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை பட்டினியால் படுகொலை செய்யும் கேவலமான அடக்குமுறைகளையும் செய்து வருகிறது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ-9 சாலையை அடைத்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டிய உணவு மருந்து உள்ளிட்ட இன்றியமையாத தேவைகளை தடுத்து வருகிறது. இதனால் கடுமையான உணவு பஞ்சம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டு வருகிறது.

சிங்கள இராணுவத்தினரே கப்பல் மூலம் சிங்கள அரசு அனுப்பி வைக்கிற உணவுப் பொருட்களை தமிழ் மக்களிடம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறது. இதனால் இன்றியமையாத பொருட்கள் விலை 100 மடங்காக கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பட்டினி கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலமாக குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். இத்தகைய விமானங்கள் பாகிஸ்தான் இராணுவத்தை சார்ந்த விமானிகள் ஓட்டுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நேரடியாக உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்க ஆவண செய்ய வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களை மறுபடியும் ஒரே மாகாணமாக இணைத்திட அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட வேண்டும்.

17 ஆம் திகதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வர அனுமதிக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி, ராஜபக்சே இந்தியாவுக்கோ அல்லது தமிழகத்திற்கோ வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

ராஜபக்சேவின் வரவை தடுத்திட வலியுறுத்தி 17 ஆம் திகதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை:

யாழ்ப்பாணத்தில் பசியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதவிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. அப்படி அனுப்பப்படும் உணவு உள்ளிட்ட பொருள்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்காமல், செஞ்சிலுவை சங்கங்கள் மூலமாக அனுப்பினால்தான் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக போய்ச் சேரும்.

இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியா வருவதும், பிரதமர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துவிட்டு செல்வதையுமே ஒரு இராஜதந்திர அணுகுமுறையாக கையாள்கிறார்கள். அவர்கள் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது அல்லது இந்தியாவின் ஒப்புதலோடு தான் இலங்கை அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன என்று உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி நம்ப வைக்கும் சூழ்ச்சியும் இதில் இருக்கிறது.

இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வடகிழக்கு மாகாண இணைப்பு - மாநில தன்னாட்சி இவற்றிலிருந்து எந்தக் காரணத்தை முன்னிட்டும் இலங்கை அரசு விலகிச் செல்லக் கூடாது என்கிற உறுதியினை பெறுவதோடு, அவை நடைமுறைக்கு வருவதிலும் இந்திய அரசு கண்டிப்பும், உறுதியும் காட்ட வேண்டும். கருணாநிதி அரசும் இந்த உணவு பஞ்சத்திற்கு பரிகாரம் தேடிட மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

இவற்றை வலியுறுத்தும் தன்மையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 12 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தஞ்சாவூரில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் (கி.வீரமணி) கலந்து கொள்கிறேன்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரான நடிகர் விஜயகாந்த்

சொந்த நாட்டு மக்களையே யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகை இட்டுள்ளது. அங்குள்ள மக்கள் உணவு, மருந்து முதலிய இன்றியமையாத பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஒரே நெடுஞ்சாலையை இலங்கை இராணுவம் முடக்கி வைத்துள்ளது. தமிழர் பகுதிகளை முப்படை கொண்டு தாக்குவதாலும், உணவுப் பொருட்கள் செல்லவிடாமல் தடுப்பதாலும் இலங்கை அரசு ஒரு தமிழ் இனப்படுகொலையை செய்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா வந்து பிரதமரை சந்திக்க உள்ளார். இலங்கை செய்து வரும் அட்டூழியத்தை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்.

இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான இந்தப் போக்கை தடுத்து நிறுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டும். முதல்கட்டமாக, தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை அரசு தனது இராணுவத்தை திரும்பப் பெற, இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்படவும், அதற்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான தீர்வு காணவும் இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.