Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியாவேன் என கனவு கூடக் கண்டதில்லை! - என்கிறார் மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Maithri-final-campain-200-news.jpg

இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப விஞ்ஞாபன கூடக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

   

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, எனது வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை வெல்வதற்கு எனது ஆத்ம நம்பிக்கை உறுதுணையாக இருந்துள்ளது. நாம் சில வேளை இலகுவானது பற்றியே சிந்திக்கின்றோம். கஷ்டம் என்றால் அதனை கைவிட்டு விடுகின்றோம். மாணவர்கள் தமது இலக்கு அல்லது சாதகமான வெற்றியை அடைய இத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பது முக்கியம். நான் இதுபோன்ற பலவற்றைக் கடந்தே இன்று நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளேன்.

நான் அப்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் நான் எனது பாடசாலையான பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 50 வருட நிறைவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. நான் மண்ணோடு மண்ணாகியிருப்பேன். அதுவே உண்மை நிலை.

தேர்தல் காலங்களில் மாலைப்பொழுதில் தொலைக்காட்சி பார்க்க எனக்கு நேரம் இருக்கவில்லை. எனினும் என்னைப் பற்றி என் நற் பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும் எந்தளவு மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை எனது நண்பர்கள் மூலம் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.

அரச ஊடகங்கள் என்னை எந்தளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அந்தளவு மோசமான சிந்தனைக்கு உட்படுத்தின. அரசியல் வாதிகளுக்கு இது போன்ற நிந்தனைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் நான் எதிர்கொண்டது மிக மோசமாக அமைந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.சாதாரண அரசியல்வாதியொருவர் ஜனநாயக நாடொன்றில் முகங்கொடுப்பது போலன்றி இது மிகக் கொடுமையானது. நான் இந்த சந்தர்ப்பங்களில் எனது இந்த ரோயல் கல்லூரி மாணவர்கள் பற்றி கவலைப்பட்டேன். அவற்றைப் பார்க்கும் மாணவர்கள் இந்த பாடசாலையின் பழைய மாணவனான நான் இந்தளவு ஒழுக்கமில்லாத, நேர்மையில்லாதவனா என சிந்தித்திருக்க வாய்ப்புண்டு.

எனினும் இந்த நாட்டின் புத்திசாதுர்யமிக்க மக்கள் உண்மைக்குப் புறம்பானதை நம்பாது நாட்டுக்காக மக்கள் தமது தீர்ப்பினை வழங்கினர். அதனால்தான் எனது பாடசாலையின் 50வது வருட நிறைவு நிகழ்வில் இன்று ஜனாதிபதியாக இங்கு வருகை தர முடிந்துள்ளது. 732 வருடங்களுக்குப் பின் பொலன்னறுவையிலிருந்து நாட்டுத் தலைவர் ஒருவர் உருவாகியுள்ள சந்தர்ப்பம் இது.

இதனால் கடந்த கால முள் பாதை அனுபவங்களே கடும் சவாலான போராட்டத்தோடும் இந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர். புதிய அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் பல மாற்றங்களுக்கு நாம் வித்திட்டுள்ளோம். இந்த சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.

 

ms-polonnaruwa-royal-100215-seithy.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=126273&category=TamilNews&language=tamil

Maithri-final-campain-200-news.jpg

இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

 

http://seithy.com/breifNews.php?newsID=126273&category=TamilNews&language=tamil

 

 

அட நாக்களுந்தான் நினைக்கவே இல்லை.. வாழ்வைய்யா உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டுமா, தன்னோட இருந்து முட்டை ஆப்பம் திண்டு போட்டு, எல்லா ஆப்பத்தையும் Wholesale ஆய் ஆட்டையை போடுவார் எண்டு, மகிந்தாவே நினைக்கவில்லையே. :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா ஜனாதிபதி முறையை 3 மாதத்தில் ஒழிக்கப் போறன் என்று வந்திட்டு.. இப்ப இப்படிச் சொல்லுறார். எல்லாரும் உள்ளூர மகிந்த இடத்தில குந்தத் தான் ஆசைப்பட்டிருக்கினமே தவிர... அதனை விலக்க நினைக்கல்ல. :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

“இரா­ஜி­னாமா செய்வேன்” ஜனா­தி­பதி மைத்திரி எச்சரிக்கை

 

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்­றது.

புதிய அர­சாங்­கத்தின் இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்­தினை ஆத­ரிப்­பது தொடர்பில் இந்தக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போது கருத்து தெரி­வித்த பல உறுப்­பி­னர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுயா­தீ­ன­மாக முடி­வினை எடுப்­ப­தற்கு எமக்கு தலைமை அனு­மதி வழங்க வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ர­வாக மட்டும் நாம் செயற்­ப­ட­மு­டி­யாது. இவ்­வி­ட­யத்தில் எமது நிலைப்பாட்டுக்கு கட்­சியின் தலைமை இணங்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் கலைக்­காது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கொண்­டு­செல்ல வேண்டும். தற்­போது தேசிய அர­சாங்­கமே ஆட்­சியில் உள்­ளது. எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என்றும் பல உறுப்­பி­னர்­களும் இந்தக் கூட்­டத்தில் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­க­ளை­ய­டுத்து உரை­யாற்­றிய ஜனா­தி­ப­தியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன, இடைக்­கால வர­வு­செ­லவுத் திட்டம் தொடர்பில் நீங்கள் விரும்­பி­ய­வாறு கருத்­து­களை, விமர்­ச­னங்­களை தெரி­வித்­தி­ருக்­கலாம். ஆனால் வரவு செலவுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று கட்­சியின் தலைமை முடி­வு­செய்­துள்­ளது. எனவே இந்த முடி­வுக்கு அனை­வரும் கட்­டுப்­ப­ட­வேண்டும்.

அவ்­வாறு கட்­சியின் தலை­மைக்கு நீங்கள் கட்­டுப்­ப­டா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நான் இரா­ஜி­னாமா செய்து ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை உரு­வாகும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்திலேயே வரவுசெலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 163பேர் வாக்களித் திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.jvpnews.com/srilanka/96895.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.