Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: மண்ணை கவ்வியது சென்னை : பைனலில் மும்பை

 

  

மும்பை: சென்னை அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் தொடரின் முதல் 'ப்ளே-ஆப்' சுற்று போட்டியில் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு நேரடியாக தகுதி பெற்றது. மண்ணை கவ்விய சென்னை அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு தள்ளப்பட்டது.

 

 

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன் லீக் சுற்று போட்டிகளின் முடிவில், சென்னை, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் 'ப்ளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. 'ப்ளே-ஆப்' சுற்றின் முதல் போட்டி மும்பையில் துவங்கியது. இதில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

 

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. கடின இலக்கை துரத்திய சென்னை அணி 19 ஓவரில் 162 ரன்களுக்கு 'ஆல் அவுட்டாகி' 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி வரும் 24ல் கோல்கட்டாவில் நடக்கும் பைனலுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

 

 

சென்னை அணி தோல்வியடைந்த போதும் வரும் 22ல் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கவுள்ள இரண்டாவது 'எலிமினேட்டர்' போட்டிக்கு முன்னேறியது. அதில் வெல்லும் பட்சத்தில் சென்னை அணி மீ்ண்டும் பைனலுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1256777

  • Replies 449
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்னையுடன் மோதப்போவது பெங்களூரா, ராஜஸ்தானா? இன்றைய எலிமினேட்டரில் முடிவு!

 

 

புனே: 8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் இன்று இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாது. ராஞ்சியில் 22ம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.

 

அதில் வெற்றி பெற்றால் தான் கொல்கத்தாவில் 24ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

 

  இந்த சுற்றில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இவ்விரு அணிகளும், ஐபிஎல் தொடரில் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 7 வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்த சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை எளிதில் வென்றது.

 

மற்றொரு லீக் ஆட்டம் மழையால் ரத்தானது. இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தரமான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதிரடிக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி, சோனி செட்மேக்ஸ், சோனி கிக்ஸ் டெலிவிஷன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-royal-challengers-bangalore-vs-rajasthan-royals-227123.html

  • தொடங்கியவர்

Breaking Now அம்பயர் முடிவை விமர்சனம் செய்த டோணிக்கு அபராதம்

 

ட்வைன் ஸ்மித்துக்கு கொடுத்த எல்.பி.டபிள்யூ முடிவை விமர்சனம் செய்திருந்தார் டோணி

 

போட்டி ஊதியத்தில் 10 சதவீதத்தை பிடித்தம் செய்தார் போட்டி ரெப்ரி

 

Read more at: http://tamil.oneindia.com/

 

 

leg stump க்கு வெளியில் போகும் பந்துக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தால் யார் தான் விமர்சிக்கமாட்டான் :icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்

அம்பயர் முடிவை மைக் பிடித்து விமர்சனம் செய்த டோணி.. அபராதம் விதித்தார் போட்டி ரெப்ரி! 

 

மும்பை: நடுவர் முடிவை மைக் பிடித்து விமர்சனம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் டோணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் முதலாவது குவாலிஃபையரில் நேற்று, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. முதலில் பேட் செய்த மும்பை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 187 ரன்கள் குவித்தது.

 

வலுவான தொடக்கம் தேவை எனவே, இரண்டாவதாக பேட் செய்ய வந்த சென்னை தனது துவக்க ஆட்டக்காரர்களான ட்வைன் ஸ்மித் மற்றும் மைக்கேல் ஹஸ்சி ஆகியோரின் வலுவான தொடக்கத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், மலிங்கா வீசிய ஃபுல்டாஸ் பந்தில் ட்வைன் ஸ்மித் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

 

தவறான தீர்ப்பு ஆனால், டிவி ரிப்ளேயில், அந்த பந்து, லெக் ஸ்டெம்ப்புக்கு வெளியே மிக தொலைவில் (5 ஸ்டம்ப் இருந்தால் அதில் பட்டிருக்கும்) சென்றது தெரியவந்தது. அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இந்த முடிவை எடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

மறக்க முடியுமா போட்டிக்கு பிறகு, பரிசளிப்பு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த டோணி, தனது அணி பேட்டிங்கில் சொதப்பிவிட்டது என்று கூறினார். மேலும், ட்வைன் ஸ்மித்துக்கு, மோசமான விதத்தில் அவுட் கொடுத்ததையும் மறக்க முடியாது என்று கூறினார்.

 

அபராதம் பொது இடத்தில், அம்பயர் முடிவை விமர்சனம் செய்து டோணி இவ்வாறு கூறியது, ஐபிஎல் நடத்தை விதிமுறைகள் படி தவறானதாகும். எனவே, போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே, டோணிக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார்.

 

மறக்க முடியாத செவ்வாய் டோணி தலைமையிலான சென்னை அணி முக்கியமான நேற்றைய குவாலிஃபையர் போட்டியில் தோற்றது. டோணி, முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார். இந்நிலையில், டோணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், டோணிக்கு இது மறக்க முடியாத செவ்வாய்க்கிழமையாகியுள்ளது. ஒழுக்கமாக ஆடும் அணி என்பதற்காக ஃபேர்பிளே விருது பெறுவதை வழக்கமாக கொண்ட சென்னை அணி கேப்டனுக்கே, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-205-forgettable-tuesday-ms-dhoni-golden-duck-defeat-227134.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2015: சென்னை அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த மும்பை!!

 

 

மும்பை: நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இறுதிப்போட்டிக்கான முந்தைய சுற்றின் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

 

 

 ஐ.பி.எல். 2015 முதலில் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 65 ரன்கள், படேல் 25 பந்துகளில் 35 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இறுதியாக விளையாடிய அதிரடி பொல்லார்டு 17 பந்துகளில் 41 ரன்கள் என சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.சென்னை அணி வெல்ல 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பின்னர் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் ஹஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஸ்மித் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

 

இருப்பினும் ஹஸ்ஸியும் டூபிளெசிஸ்ஸும் சற்று நிலைத்து நின்றனர். 5.1வது ஓவரில் ஹஸ்ஸி 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். ரெய்னா தம் பங்குக்கு 25 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் கேப்டன் டோணி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி சொதப்பினார். டூபிளெசிஸ்தான் நிலைத்து அதிகபட்சமாக் 45 ரன்களை எடுத்தார். பின் வரிசை வீரர்களில் பிராவோ 20, ஜடேஜா 19, அஸ்வின் 24 ரன்கள் மட்டுமே நடையைக் கட்டினர். சென்னை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-mumbai-indians-march-into-final-227110.html

  • தொடங்கியவர்

லீக் சுற்றில் 2வது இடம்.. அச்சச்சோ, அப்போ மும்பைதான் ஐபிஎல் கப்பை தூக்குமா?

 

சென்னை: ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்களில் 2வது இடத்தை பிடிக்கும் அணிதான் கோப்பையை வெல்லுவது கடந்த நான்கு சீசன்களில் நடந்துள்ளது. இம்முறை அதே பார்முலா ஒர்க்அவுட் ஆனால், மும்பை கோப்பையை வெல்வது கன்பார்ம். நடப்பு 8வது சீசன் ஐபிஎல் தொடரில், லீக் ஆட்டங்கள் முடிந்து பிளேஆப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் ஆட்டத்தில் சென்னை முதலிடத்தையும், மும்பை இந்தியன்ஸ் 2வது இடத்தையும் பிடித்தன.

 

எனவே அந்த அணிகள் முதல் பிளேஆப் சுற்றில் மோதின. அதில் மும்பை வென்று பைனலுக்குள் சென்றுவிட்டது.

 

இன்று நடைபெற உள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நடுவேயான போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையுடன் மோதும். அதில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி, மும்பையை வரும் ஞாயிற்றுக்கிழமை பைனலில் சந்திக்கும். இந்நிலையில், ஒரு புள்ளி விவரம் சென்னை ரசிகர்களை அச்சுறுத்துகிறது. அதாவது, கடந்த நான்கு சீசன்களிலும், லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்த அணிதான், கோப்பையை வென்றுள்ளது. இம்முறை, மும்பை லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்தது. முதலில் அடுத்தடுத்து தோற்ற மும்பை, முஷ்டியை மடக்கி, 2வது இடத்துக்கு முன்னேறிவிட்டது.

 

இதனால், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த சென்னையை விட 2வது இடம் பிடித்த மும்பை மீதே ரசிகர்கள் கவனம் திரும்பியுள்ளது. ஐபிஎல் தொடர்கள் நடந்த ஆண்டுகள், கோப்பையை வென்ற அணி ஆகியவையும், லீக் சுற்றில் அவை பிடித்த இடங்கள் அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட்டுள்ளது. பாருங்கள்.

 

2008- ராஜஸ்தான் ராயல்ஸ் (1)

 

2009- டெக்கான் சார்ஜர்ஸ் (4)

 

2010- சென்னை சூப்பர் கிங்ஸ் (3)

 

2011- சென்னை சூப்பர் கிங்ஸ் (2)

 

2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2)

 

2013- மும்பை இந்தியன்ஸ் (2)

 

2014- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2)

 

2015- ?

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-power-no-2-mumbai-indians-could-win-ipl-2015-227148.html

  • தொடங்கியவர்

டிவைன் ஸ்மித் தீர்ப்பு குறித்து கருத்து: தோனிக்கு அபராதம்
 

 

டிவைன் ஸ்மித் சர்ச்சை எல்.பி. தீர்ப்பை விமர்சித்த சென்னை கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் முதல் பிளே ஆஃப் சுற்றில் நேற்று டிவைன் ஸ்மித்திற்கு நடுவர் தவறான தீர்ப்பளித்தது குறித்து எதிர்ப்பு கருத்தை வெளியிட்ட கேப்டன் தோனிக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

மும்பை அணியிடம் சென்னை நேற்று 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது டிவைன் ஸ்மித்துக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக பொதுமேடையில் தோனி தெரிவித்தார்.

 

"நடுவரிசையில் விக்கெட்டுகளை இழந்தோம், டிவைன் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட மோசமான தீர்ப்பை மறந்து விடவேண்டாம்” என்று தோனி பரிசளிப்பு மேடையில் கூறினார்.

இலக்கைத் துரத்திய சென்னை அணியின் தொடக்க வீரர் டிவைன் ஸ்மித், மலிங்காவின் முதல் ஓவரில் தாழ்வான புல்டாஸை கால்காப்பில் வாங்க நடுவர் இல்லிங்வொர்த் கையை உயர்த்தினார். ஆனால் பந்து லெக்ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.

 

இதனை தோனி ‘மோசமான தீர்ப்பு’ என்று பொதுமேடையில் விமர்சனம் செய்தார். தவறை தோனி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரது சம்பளத்தில் 10% தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

 

வரும் வெள்ளிக்கிழமை ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்குள் நுழையும் மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதாவது இன்று நடைபெறும் பெங்களூர்-ராஜஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணியை சென்னை அணி சந்திக்கும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7226940.ece

  • தொடங்கியவர்

டிவிலியர்ஸ், மன்தீப் சிங் அரைசதம்


 

புனே: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., 'எலிமினேட்டர்' போட்டியில், டிவிலியர்ஸ், மன்தீப் சிங்கின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பெற்ற பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

இந்த அணியில் கைவிரல் காயம் காரணமாக டிண்டா நீக்கப்பட்டு அரவிந்த் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் பரிந்தர் ஷ்ரணுக்குப் பதில் அன்கித் சர்மா இடம் பெற்றார்.
துவக்கம் மோசம்: பெங்களூரு அணிக்கு கோஹ்லி, கெய்ல் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய கெய்ல், 6 ரன்னில் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிப் பிழைத்தார்.

 

இதைப் பயன்படுத்திக் கொண்ட கெய்ல், குல்கர்னி ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். தொடர்ந்து மோரிஸ் ஓவரில் 2 பவுண்டரி அடித்த இவர், 27 ரன்னுக்கு குல்கர்னி வேகத்தில் போல்டானார்.

 

தொடர்ந்து நம்பிக்கை தந்த குல்கர்னி, தனது அடுத்த ஓவரில் கோஹ்லியை (12) பெவிலியனுக்கு அனுப்ப, 9.3வது ஓவரில் தான் பெங்களூரு அணி 50 ரன்னை எட்டியது.
'சூப்பர்' ஜோடி: பின் இணைந்த டிவிலியர்ஸ், மன்தீப் சிங் ஜோடி சுதாரித்துக் கொண்டது. சற்று வேகமான ரன்குவிப்பை வெளிப்படுத்திய மன்தீப் சிங், வாட்சன், பால்க்னர் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஜோடியின் அசத்தலான ரன் குவிப்பு காரணமாக, 14.1 ஓவரில் பெங்களூரு அணி 100 ரன் எடுத்தது.
டிவிலியர்ஸ் அரைசதம்: அன்கித் சர்மா, மோரிஸ் ஓவர்களில் தலா 2 சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், அரைசதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு 67 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்த நிலையில், டிவிலியர்ஸ் (66 ரன், 38 பந்து) அவுட்டானார்.

 

மறுமுனையில் மிரட்டலை தொடர்ந்த மன்தீப், 32வது பந்தில் அரைசதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் (8) வந்த வேகத்தில் திரும்பினார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. மன்தீப் (54), சர்பராஸ் கான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1256551

 

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: முடிந்தது ராஜஸ்தான் ராஜ்ஜியம்

  • கருத்துக்கள உறவுகள்

முடிகிறது வெள்ளியுடன் CSK ராஜ்ஜியம்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை சக வீரருக்கு கொடுத்து மகிழ்ந்த டிவில்லியர்ஸ்!

 

புனே: பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தனது மேன் ஆப் தி மேட்ச் விருதை சக ஆட்டக்காரர் மான்தீப் சிங்கிற்கு வழங்கியுள்ளார். ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் நேற்று, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை குவித்தது.

 

நல்ல பார்ட்னர்ஷிப் கோஹ்லி, கெய்ல் உள்பட முதல் 3 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்து தடுமாறிய பெங்களூர் அணி, இந்த அளவுக்கு ரன் குவிக்க காரணம், டிவில்லியர்ஸ் மற்றும் மான்தீப் சிங் நடுவேயான 113 ரன் பார்ட்னர்ஷிப்பாகும்.

 

ராஜஸ்தானை வீழ்த்தியது டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 66 ரன்களும், மான்தீப் சிங், 34 பந்துகளில் 54 ரன்களும் விளாசினர். இந்த ஸ்கோரின் உதவியுடன், ராஜஸ்தானை 71 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது பெங்களூர் அணி.

 

மான்தீப் சிங் ஆட்ட முடிவில், டிவில்லியர்சுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய டிவில்லியர்ஸ் என்னை பொறுத்தளவில் மான்தீப் சிங்தான் மேன் ஆப் தி மேட்ச். அவருக்குதான் நான் எனது விருதை வழங்கப்போகிறேன் என்றார். அதே போல பரிசளிப்பு நிகழ்ச்சிகளுக்கு பிறகு விருதை மான்தீப்பிடம் டிவில்லியர்ஸ் கொடுத்துள்ளார்.

 

கொஞ்சமாதான் எதிர்பார்த்தேன் மேலும் கூறிய டிவில்லியர்ஸ், பெங்களூர் அணி 140 ரன்கள்தான் எடுக்கும் என்று நினைத்திருந்தேன். 180 ரன்கள் எடுத்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார். கோஹ்லி கூறுகையில், முதலில் பவுலிங் செய்திருக்கலாம் என்று ஒரு கட்டத்தில் யோசித்தேன். ஆனால், ஸ்கோர் உயர்ந்ததால் மகிழ்ச்சியடைந்தேன் என்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-ab-de-villiers-gifts-his-man-of-the-match-award-ma-227217.html

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்துவது கடினம்: டிவில்லியர்ஸ்
 

 

ஐபிஎல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸை எளிதாக வெளியே அனுப்பிய போதிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டி கடினமாக இருக்கும் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

 

"அது ஒரு கடினமான போட்டியாக அமையும் என்று கருதுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நல்ல அணி, சவால் ஏற்படுத்தும் அணி என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் அந்த அணியை வீழ்த்துவது கடினமே.

 

ஆனாலும், ராஞ்சிக்குச் சென்று அவர்களை வீழ்த்துவதை விரும்புகிறோம். அங்கிருந்து இறுதிக்கு முன்னேறி கோப்பையை வென்றால் மேலும் வியக்க வைக்கும். இதற்கான முயற்சிகளை படிப்படியாக மேற்கொள்வோம்” என்றார்.

 

ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் பற்றி...

நேர்மையாகக் கூற வெண்டுமென்றால் நான் நேற்று நன்றாக ஆடவில்லை. மந்தீப் சிங்குக்குதான் நான் அனைத்து பெருமைகளையும் சேர்ப்பேன். என்னைப் பொறுத்தவரையில் நான் நினைத்த அளவுக்கு அனாயசமாக ஆட முடியவில்லை. நான் சில ஓவர்கள் தடுமாறினேன். போராடி நின்று கடைசியில் அடித்தது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

3-ம் நிலையில் களமிறங்குவதால் எனது இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு நகர்த்த முடிகிறது. நேற்றைய பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது அல்ல. என்னால் இஷ்டப்படி ஷாட்களை ஆட முடியவில்லை. தொடக்கத்திலேயே ஸ்லாக் செய்ய நினைத்தேன் ஆனால் முடியவில்லை.

 

இதனால்தான் மந்தீப் சிங் இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன், அவர் எனது சுமையை சற்றே இறக்கினார்” என்ற டிவில்லியர்ஸ் இளம் வீரர்களுக்கு அணியில் உதவிகரமாக இருப்பது பற்றி கூறும் போது,

 

“மற்றவர்களிடத்தில் நல்ல விதத்தில் தாக்கம் ஏற்படுத்துவதைத் தவிர வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது. நான் நேர்மறையான செல்வாக்கு செலுத்துகிறேன். மந்தீப், என்னால் தாக்கம் பெற்றேன் என்று கூறினால் அது என்னை ஒரு மகிழ்ச்சியான மனிதனாக்குகிறது. நான் எனது குறிக்கோளை எட்டியதான உணர்வை என்னுள் இது ஏற்படுத்துகிறது.

 

மந்தீப் சிங்கிடம் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவெனில் அவர் மிகவும் நிதானமாக செயல்படுகிறார், நெருக்கடியிலும் நல்ல முடிவுகளை எடுக்கிறார் என்பதே”

இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7231167.ece

  • தொடங்கியவர்

முடிகிறது வெள்ளியுடன் CSK ராஜ்ஜியம்

 

அது கஸ்டம் :o:D  ராஞ்சி டோனியின் சொந்த இடம். தல இடம் இருந்து அப்படி இலகுவில் வெற்றியை தட்டி பறிக்க முடியாது :lol: பார்ப்பம் என்ன நடக்குது என்று

  • கருத்துக்கள உறவுகள்

அது கஸ்டம் :o:D ராஞ்சி டோனியின் சொந்த இடம். தல இடம் இருந்து அப்படி இலகுவில் வெற்றியை தட்டி பறிக்க முடியாது :lol: பார்ப்பம் என்ன நடக்குது என்று

தோனிக்கு வயசு போட்டுது

  • தொடங்கியவர்

தோனிக்கு வயசு போட்டுது

  • தொடங்கியவர்

இறுதி போட்டிக்கும் இவரே நடுவர்
 

riew49.jpg

டுவைன் ஸ்மித்துக்கு தவறான அவுட் கொடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளாகியுள்ளார் நடுவர் ரிச்சர்ட் இல்லிங் வொர்த்.

 

51 வயதாகும் இல்லிங்வொர்த் இங்கிலாந்தை சேர்ந்தவர். சுழற் பந்து வீச்சாளரான இவர் இங்கி லாந்து அணிக்காக 9 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகளில் பங்கேற் றுள்ளார். 1992, 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடியுள்ளார்.

 

2006-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் முதல் தர கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக செயல்பட்டு, 2009-ம் ஆண்டு ஐசிசி-யின் சர்வதேச நடுவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். 2013-ம் ஆண்டு ஐசிசி-யின் சிறந்த நடுவர்கள் குழுவில் இடம் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் நடுவராக பணியாற் றினார்.

 

ஐபிஎல் போட்டிகளில் உள்ளூர் நடுவர்கள் இடம் பெறவில்லை. சிறு தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சிறந்த நடுவர்களே களமிறக்கப்படுகின்றனர். எனினும் இல்லிங்வொர்த் முதல் ஓவரி லேயே அளித்த தவறான அவுட் போட்டியின் போக்கையே மாற்றி விட்டது என்பதே சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

 

கிரிக்கெட் ஆடுகளத்திலும், வெளியிலும் எதற்குமே பெரிய அளவில் அதிருப்தியை வெளிப்படுத்தாத ‘கேப்டன் கூல்’ தோனி கூட, இல்லிங்வொர்த்தின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து, அதனை போட்டி முடிவில் வார்த்தையாக வெளிப் படுத்தியுள்ளார்.

 

இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் ரிச்சர்ட் இல்லிங் வொர்த் கள நடுவராக செயல் படவுள்ளார். இலங்கையின் குமார் தர்மசேனா அவருடன் மற்றொரு கள நடுவராக பணியாற்ற இருக்கிறார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article7230405.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் துளிகள்
 

 

ஐபிஎல் இறுதி போட்டிக்கு மும்பை இண்டியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளதை அந்த அணி வீரர்களுடன் இணைந்து நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “இது எனக்கு புதிய தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

 

டெல்லியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், மிகவும் குறைந்த கட்டணம் (ரூ.100) செலுத்தி முக்கிய விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு வளாகங்களை காலை நேரத்தில் தனிநபர்கள் பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பள்ளிகளில் உள்ள மைதானங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்படவுள்ளது.

 

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர், வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளராக லாங்கர் நியமிக்கப்படலாம் என்ற செய்தி முடிவுக்கு வந்துள்ளது.

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் விளை யாடும் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக், முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது சமி சுமார் 3 ஆண்டுக ளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7230412.ece

  • தொடங்கியவர்

இரண்டு கேப்டன்களுக்கான சவால்: சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை
 

2u6i789.jpg

 

இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே வெள்ளிக்கிழமை ராஞ்சியில் இறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கிய ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.

 

கேப்டன் கூல் தோனிக்கும் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான தன்னம்பிக்கை சோதனைப் போட்டியாக இது நாளை அமையும். தோனியின் நுட்பத்துக்கும் அனுபவத்துக்கும் கோலியின் அதிரடிக்கும் இடையேயான போட்டியாக இது அமையும் என்று ரசிகர்களிடையே இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு பயங்கரமாக கூடியுள்ளது.

 

முந்தைய போட்டித் தொடர்களை வைத்துப் பார்க்கும் போது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் வெற்றி பெற சாதகங்கள் இருப்பதாக தெரிகிறது.

இந்தத் தொடரில் இருமுறை இந்த இரு அணிகளும் எதிர்த்து விளையாடிய போது இரண்டிலும் சென்னை வெற்றி பெற்றிருக்கிறது. லீக் சுற்றுகளில் இரண்டு போட்டிகளில் முறையே 27 மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோனி அணி விராட் கோலி அணியை தோற்கடித்துள்ளது.

 

ஆனால் நடப்பு பார்ம் படி பார்த்தால் பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக மடிந்தது, மற்றும் தோனியின் பேட்டிங் பார்ம், அவரது கேப்டன்சி பிழைகள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது பெங்களூருவுக்கு வாய்ப்புகள் கூடியிருப்பதாக தெரிகிறது.

 

அன்று முதல் 6 ஓவர்களில் அஸ்வின், நெஹ்ரா இருவரையும் பயன்படுத்தியது, ஜடேஜாவுக்கு 2 ஓவர்களே கொடுத்தது, ரெய்னா ஆட்டமிழந்தவுடன் தோனியின் ஷாட் தேர்வு ஆகியவை சென்னை அணிக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஐபிஎல் தொடர்களில் மிகவும் அபாரமான அணி என்றால் அது சென்னைதான். இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, மேலும் இறுதிக் கட்டத்துக்கு 5 முறை தகுதி பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் பேட்டிங்கில் பிரெண்டன் மெக்கல்லமின் அதிரடி பங்களிப்பு, ஆஷிஷ் நெஹ்ராவின் எதிர்பாராத எழுச்சி, மற்றும் டிவைன் பிராவோவின் கடைசி கட்ட பந்து வீச்சு மற்றும அவரது பீல்டிங், அஸ்வினின் பயனுள்ள சிக்கனப் பந்து வீச்சு ஆகியவற்றினால் சென்னை அணி வெற்றி பெற்றது.

 

ஆனால் பிரெண்டன் மெக்கல்லம் இடத்தை இப்போது இட்டு நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் தோனி தொடக்கத்தில் களமிறங்கி அப்படியொரு ஆட்டத்தை முயன்று பார்க்கலாம், அவரது ஃபார்மையும் அது வெகுவாக உயர்த்துவதோடு, அடுத்தடுத்த இந்திய தொடர்களில் தோனியின் பேட்டிங் தன்னம்பிக்கை இந்திய அணிக்கு உதவும். அவருக்கும் இனி இந்த 2 வடிவங்கள் மட்டுமே உள்ளது. இதில் விரைவு ரன்களைக் குவிக்க என்ன பயிற்சிகள் செய்ய வேண்டுமோ அதனை அவர் செய்து தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

 

ஏற்கெனவே தோனி வெறும் ‘மேலாண்மை’ கேப்டனாக மாறிவிட்டார் என்று பலரும் கருத நேரிட்டுள்ளது. அதாவது அணியை களத்தில் நிர்வகிப்பதை மட்டுமே செய்கிறார், கேப்டனாக தனது சொந்த ஆட்டத்திறன் மூலம் வழிநடத்தும் தலைமைத்துவம் அவரிடம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மற்ற வீரர்களிடம் தனது பரிசோதனைக் காய்களை நகர்த்தும் தோனி, கொஞ்சம் சுயபரிசோதனையிலும் ஈடுபடுவதில் தவறில்லை.

சென்னை அணி பந்துவீச்சிலும் நாளை திறமையுடன் செயல்படவேண்டும், ஏனெனில் கெயிலுக்கு ஆட்டம் பிடித்தாலோ, கோலிக்கு ஆட்டம் பிடித்தாலோ பின்பு டிவில்லியர்ஸ் வந்து காய்ச்சி எடுத்து விடுவார். எனவே நல்ல திட்டமிடுதல் அவசியம்.

 

பவன் நெகி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்துள்ள தோனி ஜடேஜாவை நீக்க மறுத்து வருகிறார். எனவே தோனி தனது கன்சர்வேட்டிவ் அணுகுமுறைகளைக் கைவிட்டு கொஞ்சம் கற்பனைத் திறனுடன் கிரியேட்டிவ் ஆக செயல்படுவது அவசியம்.

 

பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க்குடன் பெங்களூரு பலமாகத் திகழ்கிறது. எனவே தோனி தனது ‘மேலாண்மை’ அணுகுமுறையை விடுத்து ஆக்ரோஷ தலைமைத்துவ அணுகுமுறைக்கு திரும்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

எது எப்படியிருந்தாலும் நல்ல சவாலான கிரிக்கெட் ஆட்டம் மூலம் ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article7231435.ece

  • தொடங்கியவர்

சென்னை அணி தோற்றது ஏன்: ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

 

மும்பை: ''மும்பை அணிக்கு எதிரான தகுதிச் சுற்று- 1ல் ரெய்னா, தோனி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது,'' என, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

 

மும்பையில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று 1ல் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 187 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய சென்னை அணி, ஹர்பஜன் சிங் வீசிய 11வது ஓவரில் ரெய்னா (25), கேப்டன் தோனி (0) விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால் 19 ஓவரில் 162 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

 

இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியது: மும்பை அணிக்கு எதிரான தகுதிச் சுற்று- 1ல், சென்னை அணி சிறப்பாக தான் 'சேஸ்' செய்தது. இருப்பினும் ஹர்பஜன் ஓவரில் ரெய்னா, தோனி அடுத்தடுத்து அவுட்டானது, ஆட்டத்தில் திருப்பம் ஏற்படுத்தியது.

 

மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலான விஷயம். 'டுவென்டி-20' போட்டியில் முதல் 6 ஓவர்கள் முக்கியமானது. இதில் நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஆனால் மும்பை அணியின் சிம்மன்ஸ், பார்த்திவ் படேல் ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து எங்கள் பவுலர்களுக்கு நெருக்கடி தந்தது.
ஒரு கட்டத்தில் மும்பை அணியினர் 200 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தது. கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்தியதால் 187 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் 20 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம் என்று தான் கூற வேண்டும்.

 

இப்போட்டியில் தோல்வி அடைந்தது மிகப் பெரிய ஏமாற்றம். இருப்பினும் மற்றொரு வாய்ப்பு இருப்பது ஆறுதலான விஷயம். இப்போட்டியை தோனியின் சொந்த ஊரில் நடக்க இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேற முயற்சிப்போம்.
இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறினார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1257382

  • தொடங்கியவர்

பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று பெங்களூருவுடன் பலப்பரீட்சை

 

ராஞ்சி: ஐ.பி.எல்., இரண்டாவது தகுதிச்சுற்றில் தோனியின் சென்னை அணியும், கோஹ்லியின் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும் என்பதால், இரு அணியும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 24ம் தேதி நடக்கும் பைனலுக்கு மும்பை அணி ஏற்கனவே முன்னேறிவிட்டது. இன்று ராஞ்சியில் நடக்கும் 2வது தகுதிச்சுற்றில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லும்.
சென்னை அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் அசத்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. இருப்பினும், 'தகுதிச்சுற்று-1' ல் மும்பையிடம் வீழ்ந்த சோகத்தில் உள்ளது. அணியின் துவக்க வீரர் பிரண்டன் மெக்கலம் இல்லாதது பெரிய இழப்பாக உள்ளது. இவருக்குப் பதில் வந்த மைக்கேல் ஹசி, பந்துகளை எதிர்கொள்ளவே தடுமாறுகிறார். இதனால் டுவைன் ஸ்மித், டுபிளசி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

லீக் சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக இரண்டு அரைசதம் (52, 62) கடந்த ரெய்னா, மீண்டும் 'பார்மிற்கு' திரும்பினால் நல்லது. தவிர, சொந்தமண்ணில் விளையாடும் கேப்டன் தோனி, ஜடேஜா, நேகி, டுவைன் பிராவோவும் ரன் குவிப்பது அவசியம்.

 

நெஹ்ரா நம்பிக்கை: வேகப்பந்துவீச்சில் பெங்களூருவுக்கு எதிரான 2 போட்டியிலும் 7 விக்கெட் வீழ்த்திய நெஹ்ரா, இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பிராவோ (23), மோகித் கூட்டணி கைகொடுக்க வேண்டும். சுழலில் அஷ்வின், ஜடேஜா, நேகி என, மூன்று பேர் இருந்தும் விக்கெட் வேட்டை அதிகமாக இல்லாதது ஏமாற்றம்.
கெய்ல் வருகை: பெங்களூரு அணியின் லீக் சுற்றில் சென்னை அணிக்கு எதிராக இரு முறையும் களமிறங்காத கெய்ல், கோஹ்லி, டிவிலியர்ஸ் என, மூன்று பேரை எப்படி சமாளிக்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் சென்னை அணியின் வெற்றி அடங்கியுள்ளது. தவிர, இவர்களுடன் மன்தீப் சிங்கும் அதிரடி காட்டுவது பெங்களூருவுக்கு பலம் தான். தவிர, 'எலிமினேட்டர்' போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக பெற்ற இமாலய வெற்றியும் கூடுதல் நம்பிக்கை தந்துள்ளது. 'மிடில் ஆர்டரில்' தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் தொடர்வது சோகம்.

 

ஸ்டார்க் பலம்: வேகப்பந்து வீச்சில் மிட்சல் ஸ்டார்க், அரவிந்த், ஹர்சால் படேல், டேவிட் வைஸ் என வேகக்கூட்டணி அசத்துகிறது. இன்றும் இவர்களின் விக்கெட் வேட்டை தொடர்ந்தால், சென்னைக்கு பெரும் தொல்லையாகி விடும். சுழற்பந்துவீச்சாளர் சகால் அதிக ரன் விட்டுத்தருவதை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்திய ஒருநாள், 'டுவென்டி-20' அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் அணியின் கேப்டன் கோஹ்லி என, இரு கேப்டன்களும் மோதுவதால், பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 

யாருக்கு வாய்ப்பு
ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, பெங்களூரு அணிகள் இதுவரை 19 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 11, பெங்களூரு 7 போட்டிகளில் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இம்முறை இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டியிலும் சென்னை அணி வென்றது.

மழை வருமா
ஐ.பி.எல்., தொடரில் இன்று 2வது தகுதிச் சுற்று போட்டி நடக்கும் ராஞ்சியின் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 40, குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் தௌிவாக இருக்கும் என்பதால் மழை வர வாய்ப்பு இல்லை.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1258130

  • தொடங்கியவர்

பொறுத்தது போதும் பொங்கியெழுங்கள்.. சென்னை பேட்ஸ்மேன்களுக்கு பிளெமிங் 'கட்டளை'!

 

ராஞ்சி: சென்னை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தயாராக வேண்டும், நமக்கு நேரம் போதிய அளவில் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறினார். குவாலிஃபையர் 1 ரவுண்டில் மும்பையிடம் தோற்ற சென்னை அணி, குவாலிஃபையர்2ல் இன்று, பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

 

டுபிளெசிஸ் தேற வேண்டும் இந்நிலையில் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: ஃபாப் டுப்ளெசிஸ் அதிகப்படியான பந்துகளை சந்தித்து ரன் சேகரிக்கிறார் என்று நான் குறை சொல்லவில்லை. ஆனால், நேரம் கெட்ட நேரத்தில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்துவருகிறார். இந்த நிலையை அவர் மாற்ற வேண்டும்.

 

அதிக விக்கெட் விழுகிறது கடந்த கால ஐபிஎல் சீசன்களை ஒப்பிட்டால் இம்முறை சென்னை அணி அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்துள்ளது. எனவே பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இந்த ஐபிஎல் சீசனில் குறைந்துள்ளதை மறுக்க முடியாது. இந்த குறையை நீக்கி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

 

டாப்பில் டண்டனக்கா டாப்-ஆர்டரிலுள்ள நாலைந்து பேட்ஸ்மேன்களாவது கணிசமாக ரன் அடிக்க வேண்டும். கடந்த காலங்களில் சென்னை அப்படித்தான் செய்தது. இம்முறை அது நமக்கு மிஸ்சிங். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை சென்னை மிகவும் எதிர்பார்க்கிறது.

 

நேரம் இல்லை மக்களே இந்த குறையை நிவர்த்தி செய்ய இன்றைய மற்றும் ஞாயிற்றுக்கிழமை போட்டி உதவும் என்று நம்புகிறேன். நம்மிடம் திறமையான டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், இதுவரை கூட்டாக அனைவரும் ஆட்டத்திறனை காண்பிக்கவில்லை. சென்னை மைதானம், பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால், பேட்ஸ்மேன்கள் தங்கள் வழக்கமான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர நேரம் பிடித்து வருகிறது. ஆனால் தற்போது நமக்கு நேரம் இல்லை. நேரம் ஓடிக்கொண்டுள்ளது. உடனடியாக பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை காண்பிக்க வேண்டும். இவ்வாறு பிளெமிங் கூறினார்.

 

தலயே தகிடுதத்தோம் பேட்டிங்கை பொறுத்தளவில் கேப்டன் டோணியும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. அவர் 15 போட்டிகளில் 328 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 124.71 ஆகும். மும்பைக்கு எதிராக முதல் பந்தில் அவர் டக்-அவுட் ஆனது போட்டியை புரட்டிப்போட்டுவிட்டது. 400 ரன்களுக்கு மேல் குவித்திருந்த மெக்கல்லம் நியூசிலாந்துக்காக ஆட சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-we-are-running-of-time-csk-coach-stephen-fleming-227274.html

  • தொடங்கியவர்

சிஎஸ்கே வீரருடன் இரவு முழுக்க ஹோட்டல் அறையில் தங்கிய இளம் பெண்! திடுக் தகவல் அம்பலம் 

 

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பல அணிகளும், விதிமுறைகளை மீறியுள்ளதை ஊழ் தடுப்பு பிரிவு கண்காணித்து இ-மெயில் மூலம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. சிஎஸ்கே வீரர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இளம் பெண் இரவு முழுவதும் தங்கியிருந்தார் என்றும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013ம் ஆண்டு பெரும் முறைகேடுகள் நடந்தன. வீரர்கள் பலரும் சூதாட்ட புக்கிகளிடம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தடை செய்யப்பட்டனர் பல வீரர்கள், அதில் முக்கியமானவர் ஸ்ரீசாந்த்.

 

மேலும் பல முறைகேடு இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு அடுத்த ஐபிஎல் சீசனான 2014லும் பல முறைகேடுகள் நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பாதுகாப்பு யூனிட் தலைவர் என்ற முறையில், கடந்த ஆண்டு முறைகேடுகள் பற்றி ரவி சாஸ்திரி, பல அணி நிர்வாகங்களுக்கும் இ-மெயில் மூலம், தாங்கள் கண்டறிந்தவை குறித்து குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.

 

படகு பார்ட்டி அதில் சில விதிமீறல்கள் இதோ: 2014, ஏப்ரல் 30ல், பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணி வீரர்களுக்காக மும்பை கடல்பகுதியில் படகு ஒன்றில் பார்ட்டி கொடுத்தார். வெளியாட்கள் யாருமே பங்கேற்காத அந்த பார்ட்டியில் ஒரு பெண் மட்டும் வெளியில் இருந்து பங்கேற்றுள்ளார்.

 

பலர் பங்கேற்பு 2014 மே 8ல், ஷாருக்கானின் வர்த்தக பார்ட்னர் ஒருவர் கொல்கத்தா அணிக்கு கொடுத்த பார்ட்டியில் பல நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கான அனுமதி ஐபிஎல் அமைப்பிடம் பெறப்படவில்லை.

 

ராத்திரி முழுக்க 2014 மே 8ல், மும்பை ஐடிசி கிராண்ட் மவுரியா ஹோட்டலில், தங்கியிருந்த சிஎஸ்கே வீரர் ஒருவரை, சம்மந்தம் இல்லாத இளம் பெண் ஒருவர் சந்தித்துள்ளார். இரவு 9.50 மணிக்கு சிஎஸ்கே வீரரின் அறைக்குள் நுழைந்த அந்த பெண்மணி, மறுநாள் காலை 6 மணி 5 நிமிடங்களில்தான் அறையை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்த வீரரிடம் விசாரித்தபோது, அந்த பெண் தனது தோழி என்று தெரிவித்தார்.

 

மறுநாளே மற்றொருவர் 2014 மே 9ல், மற்றொரு சிஎஸ்கே வீரர் தங்கியிருந்த அறைக்குள், மற்றொரு இளம் பெண் சென்றார். இரவு 10 மணி 10 நிமிடங்களுக்கு அறைக்குள் சென்ற அந்த பெண், மறுநாள் காலை 7 மணி 30 நிமிடங்களுக்குதான் வெளியே வந்தார். இதுகுறித்து அந்த வீரரிடம் விசாரித்தபோது, அந்த பெண் தனக்கு மிகவும் நெருக்கம் என்றும், அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், விசாரித்தபோது, அந்த பெண் ஏற்கனவே ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வேறு சில மூத்த வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், அடிக்கடி ஸ்டேடியங்களில் அவரை பார்க்கலாம் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது.

 

அது போன வருஷம் இதுகுறித்து சிஎஸ்கே மற்றும் கேகேஆர் தரப்பில் பதில் வரவில்லை என்றபோதிலும், பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற பிற அணிகளின் தரப்பில் பேசியவர்கள், தாங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டோம் என்றும், போன வருட கதை அதோடு முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-woman-who-spent-the-night-the-room-a-csk-player-227288.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கட் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். :o

  • தொடங்கியவர்

ae887b.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.