Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

தீபக் ஹூடோ அரை சதம்: ராஜஸ்தான் 'திரில்' வெற்றி


தீபக் ஹூடோ அரை சதம்: ராஜஸ்தான் 'திரில்' வெற்றி

 

டில்லி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தீபக் ஹூடோ அரை சதம் விளாச, ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. டில்லியில் இன்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

 

டில்லி அணிக்கு மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. சவுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அகர்வால் 37 ரன்களில் அவுட்டானார். மோரிஸ் பந்தில் ஸ்ரேயாஸ் (40) ஆட்டமிழந்தார். 2 சிக்சர் விளாசிய யுவராஜ் 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் மாத்யூஸ், டுமினி அதிரடி காட்டினர். டில்லி அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. டுமினி (44), மாத்யூஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹூடோ அசத்தல்:

ராஜஸ்தான் அணிக்கு ரகானே, சாம்சன் துவக்கம் தந்தனர். சாம்சன் (11) நிலைக்கவில்லை. ஸ்மித் (10), கருண் நாயர் (20), ஏமாற்றினர். ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன் மட்டும் எடுத்தார். ரகானே 47 ரன்களில் அவுட்டானார். பின் வந்த தீபக் ஹூடோ, உனக்தத் ஓவரில் 2 சிக்சர் விளாசி அசத்தினார். இவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பால்க்னர் (17) விரைவில் வெளியேறினார்.

 

கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் என்ற நிலையில், சவுத்தீ ஒரு பவுண்டரி அடிக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மோரிஸ் (13), சவுத்தீ (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1228442

Edited by நவீனன்

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஹர்பஜன்.. அப்படியிருந்தும் பஞ்சாப்பிடம் தோற்றது மும்பை!

 

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- பஞ்சாப் அணிகள் மோதிய 7-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியைச் சேர்ந்த சேவாக்- முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி வேகமாக ரன் குவித்தனர். இதனால் 5.2 ஓவரில் பஞ்சாப் அணி 50 ரன்னைக் கடந்தது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஹர்பஜன்..

 

அப்படியிருந்தும் பஞ்சாப்பிடம் தோற்றது மும்பை! 7வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் சேவாக் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன் விளாசினார். அடுத்து அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களம் இறங்கினார். இவர் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய விஜய் 29 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

 

இருப்பினும், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் பெய்லி, மில்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடி பின்னர் அதிரடி காட்டியது. மில்லர் அதிரடியாக விளையாடிய நிலையில், மலிங்காவின் ஸ்லோ பந்தில் 24 ரன்களுடன் வெளியேற்றப்பட்டார். ரிஷி தவான் 6 ரன்னில் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் மலிங்காவே வீழ்த்தினார். அடுத்து ஜான்சன் களம் இறங்கினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் பெய்லி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 27 பந்தில் 50 ரன் அடித்தார். அதில் 3 சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் பெய்லி 32 பந்தில் 64 ரன்கள் எடுத்தார்.

 

இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் 177 ரன்களை இலக்காக கொண்டு தனது பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் சந்திப் சர்மா பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து பஞ்சாப் பவுலர்கள் ஆதிக்கம் தொடங்கியது. மும்பை அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கின. ராயுடு 13, பின்ஞ் 8, போலார்ட் 20 ரன் என முக்கிய வீரர்கள் அனைவரும் அவுட்டாகி மைதானத்தில் குவிந்திருந்த மும்பை ரசிகர்களை ஏமாற்றினார்கள்.

 

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், களத்தில் இறங்கியது முதலே, ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியின் பந்துகளை எல்லை கோட்டுக்கு அனுப்பியபடி இருந்தார். இதனால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் எட்டிப்பார்த்தது. ஹர்பஜன் சிங் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இது தான் மும்பை அணி வீரரின் ஒருவரின் வேகமான அரைசதமாகும். மும்பை வெற்றி பெற கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்படும் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

 

 

ஆனால் அந்த ஒவரில் 12 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது மும்பை. ஹர்பஜன் சிங் 24 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அந்த ஒவரின் 5வது பந்தில் ஆட்டம் இழந்தார். 32 பந்தில் 64 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணியின் கேப்டன் பெய்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக ஹர்பஜன் 4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து. 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, நேற்றைய போட்டியில் ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-george-bailey-help-kings-xi-punjab-beat-mumbai-indians-224598.html

  • தொடங்கியவர்

RCB 94/4 (12.1/20 ov)
v Sunrisers

  • தொடங்கியவர்

RCB 166 (19.5/20 ov)

  • தொடங்கியவர்

பெங்களூரு பேட்டிங் சரிவு* 166 ரன்னுக்கு ஆல் அவுட்

 

பெங்களூரு: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக்  போட்டியில் பெங்களூரு 19.5 ஓவரில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் 8வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 

‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பீல்டிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் இன்றும் ‘வேகப்புயல்’ ஸ்டைன் இடம் பெறவில்லை. தவிர, இஷாந்த் சர்மா, பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு ஆஷிஸ் ரெட்டி, பிரவீண் குமார் சேர்க்கப்பட்டனர்.

 

கோஹ்லி நம்பிக்கை:

பெங்களூரு அணிக்கு கெய்ல், கோஹ்லி துவக்கம் கொடுத்தனர். பவுல்ட் பந்தில் சிக்சர் அடித்த கெய்ல் (21) இம்முறை நிலைக்கவில்லை.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 9 ரன் மட்டும் எடுத்தார். பவுல்ட், பிரவிண் குமார் ஓவர்களில் தலா 1 சிக்சர், பவுண்டரி அடித்தார் கோஹ்லி.

 

போபரா திருப்பம்:

போட்டியின் 12வது ஓவரை வீசிய போபரா திடீர் திருப்பம் தந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் கோஹ்லி (41) போல்டானார். அடுத்த பந்தில் மன்தீப் சிங் ‘டக்’ அவுட்டானார்.

 

போல்ட் ‘3’:

இதன் பின் டிவிலியர்ஸ் சற்று அதிரடியாக ரன்கள் சேர்த்த போதும், ஸ்கோர் வேகம் குறைவாகவே இருந்தது. இதனிடையே 19வது ஓவரை வீசிய பவுல்ட், அபாய டிவிலியர்ஸ் (46), அபாட்டை (14) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கினார். தொடர்ந்து இதே ஓவரில் ஹர்சால் படேலையும் (2) வெளியேற்றினார். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் வருண் ஆரோன் (6), அகமது (4) போல்டாக, பெங்களூரு அணி 19.5 ஓவரில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

 

18 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் என்றிருந்த பெங்களூரு அணி, கடைசி 18 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

 

http://sports.dinamalar.com/2015/04/1428858412/BangaloreHyderabadIPLCricketViratKohli.html

  • தொடங்கியவர்

Sunrisers won by 8 wickets (with 16 balls remaining)

  • தொடங்கியவர்

வார்னர் விளாசல்: வீழ்ந்தது பெங்களூரு

 

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய பெங்களூரு அணி, ஐதராபாத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 27 பந்தில் 57 ரன்கள் விளாசிய வார்னர், ஐதராபாத் அணிக்கு கைகொடுத்தார்.

 

இந்தியாவில் 8வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் ‘வேகப்புயல்’ ஸ்டைன் இடம் பெறவில்லை. இஷாந்த், ரசூல் நீக்கப்பட்டு ஆஷிஸ் ரெட்டி, பிரவீண் குமார் சேர்க்கப்பட்டனர்.

 

கோஹ்லி நம்பிக்கை:

பெங்களூரு அணிக்கு கெய்ல், கோஹ்லி இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். பிரவீண் குமார் ‘வேகத்தில்’ கெய்ல்(21) அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. அடுத்து வந்த ‘காஸ்ட்லி’ தினேஷ் கார்த்திக்(ரூ. 10.5 கோடி ஒப்பந்தம்) 9 ரன்னுக்கு நடையை கட்டினார். பவுல்ட், பிரவீண் குமார் ஓவர்களில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய கேப்டன் விராத் கோஹ்லி நம்பிக்கை தந்தார்.

 

போபரா திருப்பம்:

இந்த நேரத்தில் போட்டியின் 12வது ஓவரை வீசிய போபரா திருப்பம் ஏற்படுத்தினார். 5வது பந்தில் கோஹ்லியை (41) போல்டாக்கினார். அடுத்த பந்தில் மன்தீப் சிங்(0), வார்னரின் கலக்கல் ‘கேட்ச்சில்’ அவுட்டானார்.

 

போல்ட் 3 விக்.,:

டிவிலியர்ஸ் மட்டும் அதிரடி காட்டியதால், ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. 19வது ஓவரை வீசிய பவுல்ட் அடுத்தடுத்த பந்துகளில் டிவிலியர்ஸ் (46), அபாட்டை (14) அவுட்டாக்கினார். இதே ஓவரில் ஹர்ஷல் படேலையும் (2) வெளியேற்றினார். 18 ரன்களுக்கு கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்ததால், பெங்களூரு அணி 19.5 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 

வார்னர் அரைசதம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு வார்னர், ஷிகர் தவான் சேர்ந்து அதிரடி துவக்கம் தந்தனர். சியான் அபாட் வீசிய முதல் ஓவரில் தவான் 2 பவுண்டரி அடித்தார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரில் வார்னர் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். வருண் ஆரோன் ஓவரிலும் வார்னர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, பெங்களூரு அரங்கம் அதிர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், சாகல் பந்தில் வார்னர்(57) வெளியேறினார். கேன் வில்லியம்சன்(5) நிலைக்கவில்லை.

பின் பொறுப்பாக ஆடிய தவான், லோகேஷ் ராகுல் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். ஐதராபாத் அணி 17.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. அரைசதம் எட்டிய தவான்(50), ராகுல்(44) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கெய்ல் ‘200’

நேற்று பவுல்ட் பந்தை சிக்சருக்கு விரட்டிய பெங்களூரு அணியின் கெய்ல், ஐ.பி.எல்., வரலாற்றில் 200 சிக்சர்(70 போட்டி) அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் இவரே முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சென்னை அணியின் ரெய்னா(117 போட்டி, 134 சிக்சர்) உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1428858412/BangaloreHyderabadIPLCricketViratKohli.html

  • தொடங்கியவர்

பெங்களூர் வீரர் சட்டை காலரை பிடித்து உலுக்கினாரா கொல்கத்தா வீரர் உத்தப்பா? திடீர் சர்ச்சை 

 

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் சர்ப்ரஸ் கான் சட்டை காலரை பிடித்து உலுக்கியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா மீது புகார் எழுந்துள்ளது. இருப்பினும், போட்டி ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத், அதுபோன்ற செய்தியை மறுத்துள்ளார். கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் ஏப்ரல் 11ம்தேதி, சனிக்கிழமை, கொல்கத்தாவில் மோதின. அதில் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

 

சண்டையா.. இந்நிலையில், போட்டி முடிந்த நிலையில் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூரு இளம் வீரரான சர்ப்ராஸ் கான் சட்டை காலரை பிடித்து உலுக்கியதாகவும், டி வில்லியர்ஸ் ஓடிவந்து விலக்கி விட்டதாகவும், டைம்ஸ்நவ் சேனல் செய்தி வெளியிட்டது.

 

ராபின் உத்தப்பா மன்னிப்பு இந்த சம்பவம், சைட் ஸ்கிரீனுக்கு பின்னால் நடந்ததாகவும், இதைத் தொடர்ந்து, நள்ளிரவு, 1.30 மணிவரை, போட்டி ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் விசாரணை நடந்ததாகவும், ராபின் உத்தப்பா மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, பிரச்சினை கைவிடப்பட்டதாகவும், அந்த சேனல் செய்தி வெளியிட்டது.

 

ஸ்ரீநாத் மறுப்பு ஆனால், அதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று, ஜவகல் ஸ்ரீநாத் மறுப்பு கூறியுள்ளார். இந்த செய்தி எப்படி வெளியானது என்றே தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். தனக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

கோஹ்லி-கம்பீர் மோதல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கேப்டன் கம்பீர் மற்றும், பெங்களூரு வீரர் கோஹ்லி ஆகியோர் இடையே, கடந்த சீசன் ஐபிஎல் ஆட்டத்தின்போது மைதானத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பு உருவாகும் நிலை வந்தது. சக வீரர்கள் தடுத்து விலக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/kkr-rcb-players-involved-a-scuffle-at-ipl-2015-claims-report-224680.html

  • தொடங்கியவர்

முதல் வெற்றியை ருசிக்குமா மும்பை? - ராஜஸ்தானுடன் இன்று மோதல்
 

 

அகமதாபாத்தில் இன்றும் நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

முதல் இரு ஆட்டங்களிலும் தோற்றுள்ள மும்பை அணி, இந்த ஆட்டத்தில் எப்படியாவது ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணியோ, முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளதால் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளது. இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும்.

 

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கு இப்போது மிகப்பெரிய பலமாக இருப்பது பரோடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாதான். பஞ்சாபுக்கு எதிராக 15 பந்துகளில் 30 ரன்களும், டெல்லிக்கு எதிராக 25 பந்துகளில் 54 ரன்களும் எடுத்து அசத்திய ஹூடாவின் மீது இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருடைய அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹூடா தவிர, அஜிங்க்ய ரஹானே, கேப்டன் ஸ்மித், ஸ்டூவர்ட் பின்னி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். ஜேம்ஸ் ஃபாக்னர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் ராஜஸ்தானுக்கு பலம் சேர்க்கின்றனர்.

 

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ், டிம் சவுதி, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பேவையும் நம்பியுள்ளது ராஜஸ்தான்.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஆரோன் ஃபிஞ்ச், ஆதித்ய தாரே, அம்பட்டி ராயுடு,ஆண்டர்சன், கிரண் போலார்ட் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், கடந்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பையின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

 

எனவே பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலொழிய மும்பை வெற்றி பெற முடியாது.மும்பை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித் சர்மா எப்படி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்துதான் அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு ஆரோன் ஃபிஞ்ச், கிரண் போலார்ட், ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக ஆடுவது முக்கியம். பஞ்சாபுக்கு எதிராக 24 பந்துகளில் 64 ரன்கள் குவித்த ஹர்பஜன் சிங்கிடம் இருந்து இந்த முறையும் ஒரு நல்ல இன்னிங்ஸை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், சுயால் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி வீசவில்லை. மலிங்கா, வினய் குமார் ஆகியோர் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே மும்பையின் வெற்றி வாய்ப்பு அமையும்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7099331.ece

  • தொடங்கியவர்

Mumbai Indians 164/5 (20/20 ov)
Rajasthan Royals
Mumbai Indians won the toss and elected to bat

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் 'ஹாட்ரிக்' வெற்றி *மும்பைக்கு மூன்றாவது தோல்வி


ராஜஸ்தான் 'ஹாட்ரிக்' வெற்றி *மும்பைக்கு மூன்றாவது தோல்வி

ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்தது மும்பை அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்மித்தின் ஆவேச அரைசதம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

மும்பை அணியில் ஹர்பஜன் சிங், ஆதித்ய தாரே, அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, உன்முக்த் சந்த், பார்த்திவ் படேல், ஸ்ரேயாஷ் கோபால் சேர்க்கப்பட்டனர்.

 

 

துவக்கம் மாற்றம்:
மும்பை அணிக்கு இம்முறை பார்த்திவ் படேல், பின்ச் துவக்கம் கொடுத்தனர். பின்ச் 10 ரன் எடுத்த போது, தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் 'பெவிலியன்' திரும்பினார்.
அடுத்த சில நிமிடத்தில் பார்த்திவ் படேல் (16), ரோகித் சர்மா 'டக்' அவுட்டாகினர். உன்முக்த் சந்தும் (12) அணியை கைவிட, மும்பை அணி 12வது ஓவரில் தான் 50 ரன்களை தாண்டியது.

 

 

'சூப்பர்' ஜோடி:
போலார்டு, ஆண்டர்சன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். சவுத்தீயின் 16வது ஓவரில் 16 ரன்கள் எடுத்த இந்த ஜோடி, அடுத்து 17வது ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. 28வது பந்தில் அரைசதம் அடித்த போலார்டு, 70 ரன்னுக்கு (34 பந்து) அவுட்டானார். இவருக்கு கைகொடுத்த ஆண்டர்சன் தன் பங்கிற்கு அரைசதம் (50) எடுத்தார். கடைசி 6 ஓவரில் 90 ரன்கள் எடுத்த, மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஷ் (1), சுசித் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

ஸ்மித் அரைசதம்:
சற்று கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (17) அதிர்ச்சி தந்தார். பின் இணைந்த ரகானே, கேப்டன் ஸ்மித் ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரகானே (46) அவுட்டான பின், ஹூடா (13) மலிங்காவின் 'யார்க்கரில்' போல்டானார். மலிங்கா வீசிய போட்டியின் 17வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் விளாசினார் ஸ்மித். இவரது ஆவேச அதிரடி கைகொடுக்க, ராஜஸ்தான் அணியின் பக்கம் வெற்றி திரும்பியது. தொடர்ந்து அசத்திய ஸ்மித், மலிங்கா ஓவரில் 2 பவுண்டரி அடிக்க, வெற்றி உறுதியானது.

 

 

ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் (79 ரன், 53 பந்து), பால்க்னர் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இத்தொடரில் ஏற்கனவே, பஞ்சாப், டில்லி அணிக்கு எதிராக அசத்திய ராஜஸ்தான் அணிக்கு இது 'ஹாட்ரிக்' வெற்றியாக அமைந்தது. மும்பை அணிக்கு இது மூன்றாவது தோல்வி.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1230127

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Kings XI Punjab 165/7 (20/20 ov)
Delhi Daredevils 169/5 (19.5/20 ov)
Delhi Daredevils won by 5 wickets (with 1 ball remaining)

  • தொடங்கியவர்

அப்பாடா... டில்லிக்கு முதல் வெற்றி *யுவராஜ், அகர்வால் விளாசல் ஏப்ரல் 15,2015
 

அப்பாடா... டில்லிக்கு முதல் வெற்றி *யுவராஜ், அகர்வால் விளாசல்

புனே: ஐ.பி.எல்., அரங்கில் 11 போட்டிகளுக்குப் பின், ஒரு வழியாக டில்லி அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. யுவராஜ் சிங், மயங்க் அகர்வால் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினர்.

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின.
இதில் 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார். டில்லி அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகிர் கான், முகமது ஷமி காயம் சரியாகாததால், நேற்றும் களமிறங்கவில்லை.

 

 

சேவக் ஏமாற்றம்:
பஞ்சாப் அணிக்கு முரளி விஜய், சேவக் ஜோடி சுமரான துவக்கம் கொடுத்தது. முத்துசுவாமி ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த முரளி விஜய் (19), டுமினியின் 'சூப்பர் கேட்ச்சில்' திரும்பினார்.

 

3 சிக்சர் அடித்த சகா, 39 ரன்னுக்கு (28 பந்து) அவுட்டானார். இம்ரான் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி என, அடுத்தடுத்து விளாசினார் சேவக் (47) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். மேக்ஸ்வெல் (15) மறுபடியும் ஏமாற்றினார்.

பின் 'கில்லர்' மில்லரும் (5), டுமினி சுழலில் சிக்க, பஞ்சாப் ஸ்கோர் வேகம் குறைந்தது. கடைசி 2 பந்தில் பெய்லி (19), அக்சர் படேல் (13) அவுட்டாக, பஞ்சாப் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. சுழலில் அசத்திய இம்ரான் தாகிர் 3, கேப்டன் டுமினி 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

 

டுமினி பாவம்:
சற்று கடின இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு ஸ்ரேயாஷ் (6) துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். தமிழ் புத்தாண்டில் பிறந்த நாள் கொண்டாடிய டுமினி, 21 ரன்னுக்கு துரதிருஷ்டவசமாக 'ரன் அவுட்' ஆனார்

 

 

சபாஷ் ஜோடி:
பின் இணைந்த யுவராஜ் சிங், மயங்க் அகர்வால் ஜோடி பஞ்சாப் அணியின் பவுலிங்கை துணிச்சலாக எதிர்கொண்டது. யுவராஜ் சிங், சந்தீப் சர்மா, ஜான்சன் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இவருக்கு உதவிய அகர்வால், ஜான்சன் பந்தில் சிக்சர் அடித்து, அரைசதம் எட்டினார்.
மறுமுனையில் அசத்தல் ஆட்டத்தை கொடுத்த யுவராஜ் சிங், அக்சர் படேல் சுழலில 2 சிக்சர் அடித்து அரைசதம் எட்ட, டில்லி அணி வெற்றியை நெருங்கியது.

 

இந்த நேரத்தில் யுவராஜ் சிங் (55 ரன், 39 பந்து), அகர்வால் (68 ரன், 48 பந்து) இருவரும் அனுரீத் சிங்கின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டான போதும், டில்லி அணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

 

 

டில்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாத்யூஸ் (6) அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ச்சியான 11 தோல்விக்குப் பின், டில்லி அணி பெற்ற முதல் வெற்றி இது.

 

 

சேவக் '4000'
நேற்று 15 ரன்கள் எடுத்த போது 'டுவென்டி-20' கிரிக்கெட்டில் 4000 ரன்கள் எடுத்த 25வது வீரர் ஆனார் பஞ்சாப் வீரர் சேவக். இதுவரை 151 போட்டிகளில் சேவக் 4,032 ரன்கள் எடுத்துள்ளார்.

 

 

438
ஐ.பி.எல்., வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக முறை (438) பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே அனுப்பிய வீரர்களில் முதலிடம் பெற்றார் சேவக் (99 போட்டி, 332 பவுண்டரி, 106 சிக்சர்). இவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு வீரர் கெய்ல் (70 போட்டி, 232 பவுண்டரி, 200 சிக்சர்) உள்ளார்.

 

11
ஐ.பி.எல்., அரங்கில் கடந்த 2012, 2013 தொடரில் புனே அணி தொடர்ந்து 11 போட்டிகளில் தோற்றிருந்தது. இதற்கு அடுத்து டில்லி அணி கடந்த 2014 ல் 9 மற்றும் இம்முறை 2 என, மொத்தம் 11 முறை வீழ்ந்தது. நேற்று வென்றதை அடுத்து, டில்லி அணியின் தோல்விப்பயணம் முடிவுக்கு வந்தது.

 

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1231009

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஷமி "அவுட்".. டெல்லி டேர்டெவில்ஸுக்கு பெருத்த அடி!

 

டெல்லி: வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் முழங்கால் காயம் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் ஷமி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஷமி, உலகக் கோப்பைப் போட்டியில் 18 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். உலகக் கோப்பைப் போட்டியின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு புவனேஷ் குமார் அவருக்குப் பதில் இடம் பெற்றார். ஷமி இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஷமி டெல்லி அணியில் இடம் பெற்று ஆடுவதாக இருந்தது.

 

 

ஆனால் காயம் பெரிதாகியுள்ளதால் அவர் இடம் பெறவில்லை. முழுத் தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு விரைவில் முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று தெரிகிறது. அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்களாகும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி நேற்றுதான் தனது முதல் வெற்றியைப் பெற்றது என்பது நினைவிருக்கலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/delhi-daredevils-paceman-mohammed-shami-ruled-of-ipl-2015-224833.html

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 127/5 (20/20 ov)

Rajasthan Royals 131/4 (20/20 ov)

Rajasthan Royals won by 6 wickets (with 0 balls remaining)

  • தொடங்கியவர்

தோனி படையை வீழ்த்தி கணக்கைத் தொடங்குமா மும்பை?
 

 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் 3 போட்டிகளிலும் தோல்வி தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி வெள்ளிக்கிழமை, மும்பை வான்கடே மைதானத்தில் வலுவான அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது.

 

தற்போதைய நிலவரங்களின் படி நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கையே ஓங்கியுள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக 18 ரன்களில் தோல்வி தழுவியது. பிறகு கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய கவலை அதன் சொத்தையான பந்துவீச்சுதான்.அதுவும் மெக்கல்லம் இருக்கும் ஃபார்மில் இந்த சொத்தைப் பந்துவீச்சை வைத்துக் கொண்டு மும்பை நாளை சமாளிப்பது மிக மிகக் கடினமே.

 

 

மாறாக தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வெற்றிகளுடன் பலமாக திகழ்கிறது. மும்பை அணியின் சவாலாக அதன் அதிரடி தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் காயம் காரணமாக ஐபிஎல்-ல் தொடர்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் லெண்டில் சிம்மன்ஸ் அல்லது எய்டன் பிளிசார்ட் போன்ற வீரர்கள் கைவசம் உள்ளனர்.

சென்னை கேப்டன் தோனி அன்று முன்னதாக களமிறங்கி தனது பாணி அதிரடி சுழற்றலில் 29 பந்துகளில் அரைசதம் எடுத்து தனது பலத்தைக் காட்ட மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவோ அடுத்தடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக டக் அவுட் ஆகியுள்ளார்.

 

 

 

எனவே கோரி ஆண்டர்சன், கெய்ரன் பொலார்டை நம்பியே மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ஹர்பஜன் ஒரு போட்டியில் வீரவாள் சுழற்றினார். ஆனாலும் பயனில்லாத ஆட்டமாக அது போனது.

 

பந்து வீச்சில் மலிங்கா ஒன்றுமில்லாமல் இருக்கிறார். நாளை மெக்கல்லம் கண்ணெதிரே அவரை காண்பிக்காமல் இருப்பது நலம் என்றே இப்போதைக்கு தெரிகிறது.

ஆனால் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இதுவரை 20 முறை சென்னை-மும்பை அணிகள் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் முறையே 10 போட்டிகளில் வென்று சமநிலை வகித்து வருகின்றன.

 

சென்னை பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. அஸ்வின் இதுவரை சிறப்பாக வீசி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே சென்னையை வீழ்த்த முடியும் என்ற நிலையே உள்ளது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/article7109616.ece

  • தொடங்கியவர்

ராஜஸ்தானிடம் வீழ்ந்தது ஐதராபாத்
 

 

எட்­டா­வது ஐ.பி.எல். போட்­டியின் லீக் சுற்றில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் ஐத­ரா­பாத்தை வெற்­றி­கொண்­டது ராஜஸ்தான்.

விசா­கப்­பட்­டி­னத்தில் நேற்று நடை­பெற்ற ஆட்­டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்­ரைசர்ஸ் ஐத­ராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஐத­ராபாத் 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 127 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

 

 

ஐத­ராபாத் அணி சார்­பாக வோர்னர்(21), தவான்(10) ஓஜா(25), மோர்கன்(27), பொப்ரா (23) என தங்கள் பங்­கிற்கு ஓட்­டங்­களைச் சேர்த்­தனர்.

அதி­கூ­டிய ஓட்­ட­மாக 27 ஓட்­டங்­கள்தான் பதி­வா­னது. அபா­ர­மாக பந்­து­வீ­சிய ராஜஸ்தான் அணி வீரர்­க­ளான குல்­கர்னி மற்றும் தம்பே ஆகியோர் தலா இரண்டு விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தினர்.

 

 

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 5 விக்கெட் இழப்­பிற்கு 127 ஓட்­டங்­களைச் சேர்த்­தது. இதை­ய­டுத்து 128 ஓட்­டங்கள் என்ற இலக்­குடன் ராஜஸ்தான் அணி கள­மி­றங்­கி­யது. அவ்­வணி 20 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 131 ஓட்­டங்­களைப் பெற்று போட்டியை வெற்றி கொண்டது.

ராஜஸ்தான் அணி வீரர் ரஹேனா 62 ஓட்டங்களை விளாசினார். சம்சன்(26), ஸ்மித்(13), பின்னி(16) ஓட் டங்கள் என்று சேர்த்தனர். ஆட்ட நாயகனாக 62 ஓட்டங்களை விளாசிய ரஹேனா தெரிவு செய்யப்பட்டார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/04/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில் மும்பை முதலில் பேட்டிங்

 

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்' வெற்றியை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. டாசில் வென்ற மும்பை முதலில் பேட் செய்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில் மும்பை முதலில் பேட்டிங் டோணி தலைமையிலான சென்னை அணி தனது முதல் இரு ஆட்டங்களில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளை சாய்த்தது.

 

 

5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு சென்னை அணி புத்துணர்ச்சியுடன் களம் இறங்கியுள்ளது. அதிரடி மன்னர்கள் வெய்ன் ஸ்மித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரின் தொடக்கத்தைத் தான் சென்னை அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. இவர்கள் வலுவான தொடக்கம் அமைத்து கொடுத்தால் சென்னை அணி பெரிய ஸ்கோரை குவித்து எதிரணியை மிரட்டலாம். அதே சமயம் தொடர்ச்சியான தோல்விகளால் மும்பை அணி வீரர்களின் தன்னம்பிக்கை குறைந்துள்ளதாக கேப்டன் ரோகித் சர்மாவும், தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

 

இந்த தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணி மும்பை தான். அந்த அணி இதுவரை கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே, டாசில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். சென்னை அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்குகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ipl-2015-mumbai-indians-face-formidable-csk-224942.html

  • தொடங்கியவர்

மும்பை 12/3  3.4ஓவரில்


PA Patel lbw b Nehra 0 (1b 0x4 0x6) SR: 0.00

 

CJ Anderson c du Plessis b Nehra 4 (7b 1x4 0x6) SR: 57.14

 

LMP Simmons c du Plessis b Pandey 5 (13b 1x4 0x6) SR: 38.46


Mumbai Indians 15/3 (4.1/20 ov)


Mumbai Indians 20/3 (5/20 ov)

  • தொடங்கியவர்

Mumbai Indians 31/3 (6/20 ov)

  • தொடங்கியவர்

Mumbai Indians 44/3 (7.6/20 ov)

  • தொடங்கியவர்

Harbhajan Singh c Jadeja b Sharma 24 (21b 2x4 1x6) SR: 114.28


Mumbai Indians 57/4 (9.3/20 ov)


Mumbai Indians 61/4 (9.5/20 ov)


Mumbai Indians 71/4 (10.6/20 ov)


சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக மெல்ல மீளும் மும்பை..10 ஓவர்கள் முடிவில் 62/4

 

 

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால், சிஎஸ்கே அனல் பறக்கும் பந்து வீச்சால் 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து திணறலுடன் ஆட்டத்தை தொடங்கியது. 5 ஓவர்கள் முடிவில் 20 ரன்களுக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு மெல்ல மீண்ட மும்பை 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

 

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக மெல்ல மீளும் மும்பை..10 ஓவர்கள் முடிவில் 62/4 டோணி தலைமையிலான சென்னை அணி தனது முதல் இரு ஆட்டங்களில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளை சாய்த்தது. 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு சென்னை அணி புத்துணர்ச்சியுடன் களம் இறங்கியுள்ளது. அதிரடி மன்னர்கள் வெய்ன் ஸ்மித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரின் தொடக்கத்தைத் தான் சென்னை அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. இவர்கள் வலுவான தொடக்கம் அமைத்து கொடுத்தால் சென்னை அணி பெரிய ஸ்கோரை குவித்து எதிரணியை மிரட்டலாம். அதே சமயம் இந்த தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணி மும்பை தான். அந்த அணி இதுவரை கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. இதனிடையே, டாசில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார்.

 

 

சென்னை அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. நெஹ்ராவின் அபார பந்து வீச்சால் மும்பை 1 ரன்னிலேயே பார்திவ் பட்டேலை டக் அவுட்டில் இழந்தது. அந்த அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் நெஹ்ரா பந்தில் வீழ்ந்தார். 2.5 ஓவரிலேயே மும்பை அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்த ஓவரிலேயே 5 ரன் எடுத்திருந்த தொடக்க வீரர் சிமண்ட்ஸ் ஈஸ்வர் பாண்டே பந்தில், டு பிளசிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

இதனால் 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களுடன் போராடிக் கொண்டிருந்தது. ரோகித் ஷர்மா மற்றும், ஹர்பஜன் சிங் களத்தில் நின்றனர். இந்த ஜோடி அணியை மெல்ல மீட்டெடுத்தது. ஆனால் 9.3 ஓவரின்போது 24 ரன் எடுத்திருந்த ஹர்பஜன், மோகித்ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கிரண் போலாட், ரோகித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ipl-2015-mumbai-indians-face-formidable-csk-224942.html


Mumbai Indians 85/4 (12.1/20 ov)


Mumbai Indians 98/4 (13/20 ov)

  • தொடங்கியவர்

Mumbai Indians 124/4 (14/20 ov)

  • தொடங்கியவர்

Mumbai Indians 132/5 (15/20 ov)

RG Sharma c Bravo b Nehra 50 (31b 5x4 1x6) SR: 161.29

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சுப்பர் கிங்கை இப்ப யார் வச்சிருக்காங்க, நவீன்ஜி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.