Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ௯ வீதியை அரசு திறக்கா விட்டால் பொருட்களை சேகரித்து அலரிமாளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ௯ வீதியை அரசு திறக்கா விட்டால் யாழ். மக்களுக்கான பொருட்களை சேகரித்து அலரிமாளிகைக்கு அனுப்புவோம் -புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் மாநாட்டில் தெரிவிப்பு

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரென அரசாங்கம் தெரிவிப்பது கண்துடைப்பாகும். அரசாங்கம் ஆயுதங்களால் தமிழ் மக்களை ஒருபுறம் அழித்துக் கொண்டு மறுபுறம் உணவை அனுப்பாது தமிழ் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியுள்ளதென தெரிவிக்கும் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உடனடியாக ஏ- 9 பாதையைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அம் மக்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்து அலரிமாளிகைக்கு அனுப்பி வைப்போமென்றும் தெரிவித்தார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள ஏ௯ பாதையை திறப்பதற்கும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும் வலியுறுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பேராசிரியர் சுச்சரித்த கம்லத் இதனைத் தெரிவித்தார்.

இன்றும் (நேற்று புதன்கிழமை) வாகரையில் படையினரின் தாக்குதல்களினால் நூறு தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க காலத்திலிருந்து தமிழ் இன சங்காரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது 1980 களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தென்கிழக்காசியாவிலேயே இவ்வாறான கொடூரம் இடம்பெறவில்லை.

அரசாங்கம் சமாதானத்திற்கு தயாரென தெரிவிப்பது வெறுமனே நடிப்பாகும். தமிழ் மக்களை விமானத் தாக்குதல்களின் மூலமும் ஆயுதங்களாலும் இதுவரை காலமும் அழித்து வந்த அரசாங்கம் வடபகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகளை அனுப்பி வைக்காது திட்டமிட்டு பட்டினியிட்டு கொலை செய்கிறது.

வடபகுதியில் வாழும் மக்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குத் தேவையான மாத்திரையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. உயர் இரத்த அழுத்த நோயாளர்களும் பரிதவிக்கின்றனர். மாத்திரைகளுக்காக பல மைல் தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனை அரசாங்கம் திட்டமிட்டே மேற்கொள்கிறது. இது தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் செயலாகும்.

வடபகுதிக்குத் தேவையான உணவு வளங்களை அனுப்பி வைப்பதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரங்களில் எதுவித உண்மையுமில்லை.

எனவே, அரசாங்கம் ஏ ௯ பாதையை திறக்க வேண்டும். வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமானமாகத் தீர்க்க வேண்டும். அதுவரையில் ஒன்றிணைந்துள்ள நாம் தேசிய சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போமென்றும் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அஜித் சமரநாயக்க, அசோக ஹந்தகம உட்பட கலைஞர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

http://www.thinakkural.com/news/2006/11/9/...s_page14857.htm

அனுப்பினால் வாங்கி அம்பாந்தோட்டைக்கு குடுத்துவிட்டு விருந்துண்டு ஏப்பம் விடுவார் மகிந்த இவனுக்கெல்லாம் இந்த நடைமுரை சரிவராது

பேராசிரியர் சுச்சரித்த கம்லத் அவர்களுக்கு என் நன்றிகள்

ஒரு சிங்களவராக இருந்தும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் மக்களின் துயர் உணர்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அவருக்கு என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

எங்கே எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள்... ஒ அவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதில் படு தீவிரமாக இருப்பதால் நேரமில்லைப் போலும்.

அவர்களைப் பொறுத்தவரை ஒரு அறிக்கை மகிந்தவுக்கும் ஐ.நா வுக்கும் அனுப்பினால் சரி.

front-l.jpg

பட்டினி அவலத்தை எதிர்நோக்கும் யாழ்.குடாநாட்டு மக்களுக்காக கொழும்பு கோட்டையில் நேற்று புதன்கிழமை உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அரசியல் தீர்வுக்கான நீர்கொழும்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் பிரெடி கமகே தலைமையில் மனிதாபிமான நோக்கத்துடன் பொருட்கள் சேகரிக்கப்படுவதை இங்கு காண்கிறீர்கள். ...

http://www.thinakkural.com/news/2006/11/9/...ews/front-l.jpg

தொடர்பு பட்ட செய்தி

ஏ-9 வீதியை அரசு திறக்கா விட்டால் யாழ். மக்களுக்கான பொருட்களை சேகரித்து அலரிமாளிகைக்கு அனுப்புவோம் -புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் மாநாட்டில் தெரிவிப்பு

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரென அரசாங்கம் தெரிவிப்பது கண்துடைப்பாகும். அரசாங்கம் ஆயுதங்களால் தமிழ் மக்களை ஒருபுறம் அழித்துக் கொண்டு மறுபுறம் உணவை அனுப்பாது தமிழ் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியுள்ளதென தெரிவிக்கும் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உடனடியாக ஏ- 9 பாதையைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அம் மக்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்து அலரிமாளிகைக்கு அனுப்பி வைப்போமென்றும் தெரிவித்தார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள ஏ-9 பாதையை திறப்பதற்கும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும் வலியுறுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பேராசிரியர் சுச்சரித்த கம்லத் இதனைத் தெரிவித்தார்.

இன்றும் (நேற்று புதன்கிழமை) வாகரையில் படையினரின் தாக்குதல்களினால் நூறு தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க காலத்திலிருந்து தமிழ் இன சங்காரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது 1980 களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தென்கிழக்காசியாவிலேயே இவ்வாறான கொடூரம் இடம்பெறவில்லை.

அரசாங்கம் சமாதானத்திற்கு தயாரென தெரிவிப்பது வெறுமனே நடிப்பாகும். தமிழ் மக்களை விமானத் தாக்குதல்களின் மூலமும் ஆயுதங்களாலும் இதுவரை காலமும் அழித்து வந்த அரசாங்கம் வடபகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகளை அனுப்பி வைக்காது திட்டமிட்டு பட்டினியிட்டு கொலை செய்கிறது.

வடபகுதியில் வாழும் மக்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குத் தேவையான மாத்திரையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. உயர் இரத்த அழுத்த நோயாளர்களும் பரிதவிக்கின்றனர். மாத்திரைகளுக்காக பல மைல் தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனை அரசாங்கம் திட்டமிட்டே மேற்கொள்கிறது. இது தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் செயலாகும்.

வடபகுதிக்குத் தேவையான உணவு வளங்களை அனுப்பி வைப்பதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரங்களில் எதுவித உண்மையுமில்லை.

எனவே, அரசாங்கம் ஏ -9 பாதையை திறக்க வேண்டும். வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமானமாகத் தீர்க்க வேண்டும். அதுவரையில் ஒன்றிணைந்துள்ள நாம் தேசிய சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போமென்றும் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அஜித் சமரநாயக்க, அசோக ஹந்தகம உட்பட கலைஞர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

http://www.thinakkural.com/news/2006/11/9/...s_page14857.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=15386

தெரியும் கந்தப்பு இந்த படத்துடன் தொடர்பு பட்ட செய்தி என்பதால் இணைத்தேன் இவ்விணைப்பை தேடினேன் கிடைக்கவில்லை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.