Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

இனியவளே

எப்போது வருகிறாய்

உன் மடியில் தலை சாய,

ஒரு போற்வையில் உலாவர,

என் வயதை திருப்பிபோட,

என் ஒவொவொரு அணுவையும் உனதாக்க

எப்போது வருகிறாய்

என்னவளே

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

என்னவளே

என்னிதயம்

ஆள்பவளே

சின்னவளே

கறுப்பான

என் மேல்

மையல் கொண்டவளே

இதயப் பொய்கையில்

அடிக்கடி அமிர்தம்

வார்பவளே

வருவேன் மீண்டுமென

வார்த்தையால்

வருடிச் சென்றவளே

எங்கையடி சென்றாய்

என்னை விட்டு

வானை விட்டு

நிலவு பிரிந்தால்

வானென்ன செய்யும்

வாடி என் பெண்ணே

முகில் துப்பட்டாவால்

உன் மேனி மூடி

தொட்டணைக்க

உள்ளம் துடிக்குதடி!

துடிக்குதடி

எனஅழைத்திட்ட

என் அன்பே

உன் வருகைபார்த்து

வாசலில் காத்து

நின்ற எனை

மறந்து போனது

நீதானே

சின்ன விழி

பார்வை பூத்திருக்க

ஆசையுடன் உனக்காய்

காத்திருக்க இவள்

நினைவுமறந்து

நீஇல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

quote name='கஜந்தி' date='May 23 2007, 08:14 PM' post='306250']

துடிக்குதடி

எனஅழைத்திட்ட

என் அன்பே

உன் வருகைபார்த்து

வாசலில் காத்து

நின்ற எனை

மறந்து போனது

நீதானே

சின்ன விழி

பார்வை பூத்திருக்க

ஆசையுடன் உனக்காய்

காத்திருக்க இவள்

நினைவுமறந்து

நீஇல்லையா?

நீயே என்

தாய்

அன்பென்னும்

உருவமாய் என்னேடு

வாழ்ந்தவள் நீயம்மா?

வேதனைகளை சுமந்து

கொண்டு எனை

சிரிக்க வைத்தவளும்

நீயம்மா

அன்னை திரேசாவின்

வெள்ளை உள்ளம்

ரசித்தவள் நான்

இன்று உன்

வெள்ளை மனதை

ரசிக்கின்றேன்

பூவே

ஒவ்வொரு பூவும்

உன் முகம் காட்டுவதால்

இன்று பூக்கள்

மட்டுமே எனக்கு

பிடித்துள்ளது

பிடித்துள்ளது

என்று சொன்னாய்

நீ ...

பிளேன் ஏறி

இங்கு வந்த பின்

பிடிக்கவில்லை

என்றாய்

வெறும்

தோற்ற மயக்கத்தில்

தொலைந்து

போனதோ

உன் காதல்?

காதல் செய்ய

நான் இப்போது

உன்னிடம் வரவில்லை...

என்னிடம் நீ

முன்பு சுருட்டிய காசைத்

திருப்பித் தந்துவிடு...

போய் விடுகின்றேன்...

இல்லாவிடில்...

நீ

சாவதைத் தவிர

வேறு மார்க்கம்

இல்லை...

இல்லை

என்னிடம் அழகு

இல்லை அதனால்

என் காதலும்

உனக்கு வேடிகையானது

இல்லை

என்னிடம் அறிவில்லை

அதனால் என்

அன்புகூட உனக்கு

நகைச்சுவையானது

இல்லை என்னிடம்

நாகரிகமில்லை

அதனால் என்னை

பார்காமலே

போய்விட்டாய்

இப்போது காதலை

தப்பாய் சொல்கின்றாய்

நீ எதைகபர்த்து

காதலித்தாய்

தாயென்ற அன்புறவு வாழ்வில்

தருகின்ற இனிய சுகம்..

காலை எழுந்தவுடன் நீ

நீட்டுகின்ற தேனீர் முதல்

இரவில் நான் தூங்கியதும் எனை

போர்த்துவிடுவது வரை...

தினமும் என் வாழ்வில்

எனக்காக நீ செய்யும்

சேவைகள் பலநூறு...

சிரமங்கள் பலநூறு....

கூலி கேட்காமலே

எனக்காக வாழ்கின்ற

உனக்காக கைமாறாய்

எதை நான் தந்திடுவேன்?

எதை நான் தந்திடுவேன்?

என் உயிரையா, அல்லது

என் உயிரையா விட உயர்ந்த காதலையா

நீ கொடுத்த முத்தத்தையா, அல்லது

அதனினும் இனிய உன் நினைப்பையா

எதை நான் தந்திடுவேன்?

உன் திருமண பரிசாக

Edited by கர்ணன்

உன் திருமண பரிசாக

என் காதலை தியாகம் செய்கிறேன்

என் மனதறியா காதலியே

காதலியே ஏப்படி இருப்பாய்

அழகில் நீலக்கடலாய் இருப்பாயோ,

அறிவில் சூரியனாய் இருப்பாயோ,

அன்பில் தாயாய் இருப்பாயோ,

பாசத்தில் குழந்தையாய் இருப்பாயோ

என்னில் மட்டும்

உயிரில் கலந்து

தமிழாய் இருந்துவிடு

தமிழாய் இருந்துவிடு..

தங்கமாய் ஜொலித்துவிடு..

தரணியில் உயர்ந்துவிடு.

தரத்தின் மேன்மையை உணர்த்திவிடு..

தாய்மொழி தமிழாய்க் கொண்ட

தவத்தினை ஊட்டிவிடு..

அழகிய நயங்களின் ஆட்சிமை புரியவிடு..

அந்நியமொழி மோகம்..

அத்மாவைத் தாலாட்டுமா..

தாய்த்தமிழ் லட்சணங்கள்

பிற மொழியில்தான் கிட்டுமா..

அழியாமல் நம் மொழியைக் காக்க

அதன் பெருமையும்..

புகழும் ஓங்க ஒவ்வொரும்

பெற்றோரும் மற்றோரும்

உழைப்போம்..நம் தமிழைக்

கண்ணாகக் காப்போம்..

வாழ்க தழிழ்..

வளர்க தமிழ்..

தமிழ் என்னும்

அமுதினை

திகட்டாது நான்

உண்டு தொலைந்திடும்

காலம்தனை

கவியென நான்

வரைத்து

வாழ்ந்திடும்

நிமிடங்களை உனக்காய்

நான் தந்து

உன்னேடு வாழும்

காலம்தனை நான்

ரசித்ததால்

இழந்தேன்

என் மனதை

என்னிடத்தில்

என்னிடத்தில் என்ன இருக்கிறது..

ஏன் இவ்வளவு முண்டியடித்துக்கொண்டு

என்னை சூழ்ந்து தொல்லை தருகிறீர்கள்..

உங்கள் தேவை என்ன..

உங்களுக்கு என்னால் ஆவதென்ன..

விரக்தியின் உச்சத்தில்.நானும்..

முண்டியடித்த மந்தைகளை

அடித்து விரட்ட எண்ணி

கையை ஓங்கிய என் கண்களில்பட்ட

கைகள்..கைகளிலிருந்த தடி..

தடியிலிருந்த சில பச்சை இலைகள்...

பச்சைஇலைக்கு எச்சி விழுங்கும்..

மந்தைகள் போல எதையோ

தேடி முண்டியடித்து ஓடும்

மனித வாழ்க்கை இன்னும்

ஆர்வமிக்கஆசைகளோடு..

என்னிடத்தில் என்ன இருக்கிறது..

ஏன் இவ்வளவு முண்டியடித்துக்கொண்டு

என்னை சூழ்ந்து தொல்லை தருகிறீர்கள்..

உங்கள் தேவை என்ன..

உங்களுக்கு என்னால் ஆவதென்ன..

விரக்தியின் உச்சத்தில்.நானும்..

முண்டியடித்த மந்தைகளை

அடித்து விரட்ட எண்ணி

கையை ஓங்கிய என் கண்களில்பட்ட

கைகள்..கைகளிலிருந்த தடி..

தடியிலிருந்த சில பச்சை இலைகள்...

பச்சைஇலைக்கு எச்சி விழுங்கும்..

மந்தைகள் போல எதையோ

தேடி முண்டியடித்து ஓடும்

மனித வாழ்க்கை இன்னும்

ஆர்வமிக்கஆசைகளோடு..

ஆசைகளோடு

வாழும் மனிதா...உன்

ஆசைகள் தொலைந்தால்

நீ பூச்சியமாவாய்...!

ஆறடி நிலத்தில்

அடங்கிடும் வரைக்கும்

ஆசைகள்தானே

உனை ஓட்டிடும் காண்பாய்...!

நியாயமான ஆசை கொள்

நிம்மதித்தூக்கம் உன்னிடம் சேரும்!

நீ - கொள்ளும் ஆசை....

தன்னலம் காணா பொதுநலமாயின்

தரணியில் சுபீட்சம் பெருகிடும் பாரு...!

ஆசைகொள் மனிதா ...

ஆசைகொள்...

புதியதோர் பூமி

செய்திட வேண்டும்....அதில்

இருக்கின்ற மனிதரெல்லாம்

மன்னர்களாக .....

ஆசை கொள்..!

ஆசைகள் நீ

கொண்டால்

உன் வாழ்கையும்

அழகாய் விரியும்

வாழ்வுதனை நீ

ரசித்தால் உன்

விம்பம் உனேக்கே

அழகாய் தோன்றும்

உன்னை நீ

ரசித்திட்டால்

உலகமே ரசிப்பதாய்

தோன்றும்

ரசனைகொண்டு

வாழ்த்து பார்

நீ

இழந்தவை உனக்காய்

மீண்டும்

ரசனைதனையிழந்து

வாழ்ந்தென்னலாபம்

வாழ்ந்தென்ன லாபம்

என்றெனக்குத் தெரியாது

தெரிந்ததெல்லாம்

நான் உரைப்பேன்

காது கொடுத்துக்

கேட்பாய்...

பூத்திருக்கும்

என் மனசில்

பூவொன்று வந்திருந்து

காது மடல்

வருடி

கன்னத்தில் கனி

முத்தம் கொடுத்து

தேகம் தொட்டணைத்தால்

கோடி இன்பம்

என்பேன்

வாழ்வதால்

வந்தவின்பம்

இதுவென்பேன்

தாலி கட்டி

என் சொந்தம்

என ஆன பின்

சில்லறைச்

சண்டைகளும்

சிணுங்கல்

பேச்சுக்களும்

கொத்தாக என்

முடி கோதும்

அவள் விரல்

தரும் இன்பமும்

வற்றாத வாஞ்சையோடு

வடிவழகி

எனக்குக் கொஞ்சம்

ஊட்டி

மிச்சம்

தானுண்ண

உருகிப் போகுமே

என்னுள்ளம்

இதற்கேது ஈடு?

திங்கள்

பத்தாக

திங்களே

என்னவள்

வயிற்றில்

வந்துதிக்க

சிறு நிலவை

பெரு நிலவு

ஈன்றெடுக்க

வண்டாகி

சுற்றியலைந்த நான்

தண்டாகி

சிறு நிலவை

என் கையோடணைக்க

குளிர் புன்னகை

செய்யுமே

என் முத்தாகி வந்த

சிறு பிஞ்சு

எத்துணை யின்பம்

இது...

சொல்லிக் கொண்டு

போக

இது போல்

பல கதை

விரியும்

என்னுள்ளத்தில்

காத்திருந்து

நீ கேட்பாயா?

Edited by kavi_ruban

கேட்பாயா..வெள்ளாடே..

ஓநாயின் அறிவரைகள்..

சந்தேகமிருந்தாலும்..

ஓதிடுவேன்..கேட்பாயா..

பழகு..பார்த்துப் பழகு..

பட்டாடை சூடி

பவனி வரும்

திருவிழா நாள் தேவதையே..

பார்த்துப் பழகு..

பவள இதழ்கள்

விரிந்து சிரித்து..

களங்கமின்றி

கதைபேசும்

கண்ணே..

யார் இவர்கள்..

பார்த்துப் பழகு..

மஞ்சள் நிறத்து

வெண்டை விரல்கள்

மேகமாய் முகம் மூட

நெஞ்சையள்ளும்

நீல நிலவே

பார்த்துப்பழகு..

பத்தோடு பதினொன்றாய்

பதம் பார்க்கவிளைந்தவனை

பால் என்று எண்ணிவிட்டாய்

பாவி நான் நீ

அப்பாவி..பெண்ணே..

பார்த்துப் பழகு..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழகும் போது தெரியவில்லை

பாவியிவள் மனம் குரங்கென்று

பாதியில் வந்தவள் பாகாகி கரைந்தவள்

பாதி வழியிலே அப்பாவி எனை

பதம் பார்த்து சென்றுவிட்டாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதம் பார்த்து சென்றுவிட்ட இதயத்குக்கு

ஒத்தடமாய் அள்ளத்தெளிக்க நல்

இதமான வார்த்தைகள் கொண்டு

நாதனாய் நயம் மிகு கவிதைகள் வடித்த

நாதனுக்கு அகமுகம் கொண்ட வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தந்த அழகி கறுப்பிக்கு

வந்தனங்கள் பல கோடி

பாசி படிந்த இதயத்தை

பசுமையாய் வருடிய

கறுப்பிக்கு நன்றிகள்

நன்றிகள் சொன்ன

நல்லவர்கள் நீங்கள்

கள் மறந்தீர்கள் -வல்

சொல் மறந்தீர்கள்

இளமைக்காலங்களை

ஏன் மறக்கவில்லை-இன்னும்

காதலியை மறக்கவில்லை

அவள் சின்னவயதுமுகம்

சிந்தை மறக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறக்கவில்லை மறக்கவில்லை

மறந்தும் உன் பளிங்கு

முகத்தை மறக்கவில்லை

பசுமையான அந்த நினைவுகளை

மறக்கவில்லை

மறக்கவும் முடியவில்லை

முடியவில்லையென்பது

முயலாமையின் முரண்பாடு..

முயல முற்படு..

முயற்சியால்

முன்னேற முற்படு..

முன்னேறி

முன்னேற முயற்சிக்கும்

முயற்சிகளை முடக்கிவிடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.