Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வேன் மனதின் இசை கேட்டு மனதின் வாசலில்

செல்வேன் என் இனிய உறவினை நாடி

செல்வேன் என் தாயகம் நோக்கி ஒரு போராளியாய்

செல்வேன் எந்தாயக கனவில் நிஜமாகும் அந்த வேளையில்

  • Replies 1.9k
  • Views 183.4k
  • Created
  • Last Reply

வேளை பார்த்து காத்திருந்தால்

காலை எமக்கில்லை

துணிந்துவிட்டால்

விரைந்து செல் விடியும் எம் தேசம்

அருவிபோல திரண்டு கொள்வோம்

தடைகள் எமக்கில்லை

ஏறி இறங்கி அறிந்துகொண்டோம்

இனி வலி|யும் எமக்கில்லை

எமக்கில்லை எம்தேசம்..

ஏனிந்த வெளிவேசம்....

தேர்தல் வேளையில்

தெரிகின்ற வெள்ளாடை..

பொய்கொண்ட கறையென்று

தெரியாதோ..நீயிட்ட

ஓட்டுக்கள்... தேசத்துக்கு

விழுந்த வேட்டுக்கள்..

அரசியல் சூனியத்தால்

ஏழை அடுக்களையும்

சூனியமாய்..

பூங்காவனங்கள் பாலைவனங்களாய்..

கலைக்கூடங்கள் கல்லறைகளாய்..

மணமண்டபங்கள் பிணக்கூடங்களாய்..

பளிங்கு மாளிகை பாலடைந்து..

குடிசைவீடுகள்.

சாம்பல்க்குவியலாய்..

தெருவோரத்தில் நம் தேசச் சொத்துகள்.

பசியில் அழுது

ஒட்டிய வயிறு..

கந்தலாடை..

நெஞ்செல்லாம் ஏக்கமாய்..

எம்தேசம் எமக்கில்லையா?

இந்த நிலையை

யார் மாற்றுவார்..?

எப்போது ?

அப்போது அரசியல் இருக்காது தானே..

இருக்குமென்றால்..

மாற்றங்கள்.. திருத்தமாக ஆகாது

அபத்தமாகத்தான் ஆகும்..

சாபக்கேட்டின் சத்திரம்

எம் தேசம் என்றால்

விமோசன நாள்

எப்போது?

எப்போது

கண்ணே

என் தேசம் விடியும்?

கடிகார முள்

சுற்றுகிறதே தவிர

எம் வாழ்க்கை

இன்னும்

சூனியமாய்...

சுழன்றடித்த காற்றில்

பறந்து போன

சருகுகள் போல

ஆளுக்கு ஒரு பக்கம்!

இன்று வரும்

நாளை வரும்

என்று சொன்னாலும்

என்று வரும்

என்று தெரியாததால்

எம் நம்பிக்கையின்

நாடித் துடிப்பும்

தளர்கிறது கண்ணே

முற்றத்து மண்ணில்

பாயின்றிப் படுத்தாலும்

பயங்கரமாய் தூக்கம்

வருமே...

குமுறி அழுகின்றேனடி

குங்குமப் பூக் கன்னம்

தடவி...

குவிகின்ற இதழ் தொட்டு

முத்தமிட துடிக்கின்றதே

என் மனது

நடக்குமாடி கண்ணே?

அடுக்குமாடியில் குடியிருந்து

அங்கேயும் இங்கேயும்

விழியசைந்தாலும்

ஓரு மையத்தில்

வட்டமிடுதே நினைவெல்லாம்

உற்றுப் பார்த்தால்

அது நீயும் என் தேசமும்!

நீயும்என் தேசமும்

நான் சுமப்பதும்

என்னைச் சுமப்பதுமாய்..

நினைவுகளாய் மட்டுமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவுகளாய் மட்டுமே

நீ என்னுடன் வாழ்கிறாய்

உனை நான் தேட நீயில்லை

நீ எனை தேட நான் இல்லை

விதி வசம் தான் நம் வாழ்க்கையோ

வாழ்கையோ

போர்களத்தில்

வெற்றி தான்

எப்போது

காத்துக் காத்து

காலங்கள் போக

விடுதலை ஏக்கங்கள்

எம் இதயத்தை

வாட்ட

தீர்க்க முடியா

பேச்சுவார்தையால்

கரைந்திட்ட காலங்கள்

மீட்க முடியா

இறப்புகளின் வலிகள்

முடிவில்லா பயணத்தில்

ஒன்று சேரா

இதயங்கள்

எப்போது தான்

விடுதலை

நினைவுகளாய் மறைந்துவிட

ஈழம் என்ன காதலா ?

காதலா...

காதலை ஏலம் விடும்..

தோழா...

ச்சே..

மனிதனா..நீ..

அதையும் தாண்டி..

அற்பமானவன்..

என் திருமணத்தில்

உன்னை நான்

காணவிரும்பவில்லை..

உன் வாழ்த்துச்செய்தி

எனக்கு வேண்டாம்..

உன் இதயம்

வங்கிக் கணக்கை மட்டும் காதலிக்க

லாயக்கானது..

நீ வாழத் தகுதியிழந்த

கோழை வணிகன்

போய்விடு

என் நினைவுகளை விட்டுப்

போனது போல்

நிஜத்திலும்

நிஜத்திலும் நிழலிலும்

நினைவிலும் கனவிலும்

நீ எனது குடியிருப்பை

பலாத்காரமாக பாய்ந்து

ஆக்கிரமித்துக் கொண்டதால்

அகதியாய் அலைகின்றேன்...

இதயமின்றி இப்பொழுது...

இப்பொழுதிலும் எப்பொழுதிலும்

காதல் என்ற மாயை

ஆட்டிவைத்து ஆடவைத்து

மோகத்தீயை மூட்டவைத்து

பித்தம் தெளிந்து

சித்தம் கலைந்து

மொத்தமாய்

சத்தமின்றி

சருகாகி

மண்ணோடு

மருகாகிவிட்டேன்

இன்று மரத்துக்கு

உரமாகிவிட்டேன்

உரமாகிவிட்டேன்

இன்று நான்

உனது பாதங்களில்...

நாளை நீ மலர்விக்கும்

பூக்களின் மகரந்தமாகி

என்றென்றும் உனதுயிரில்

நான் வாழ்வேன்..

வாழ்வேன்

வாழ்கிறேன்

வாழ்ந்து காட்டுவேன்..

ஏமாற்றுக்காரியே...

நீ இன்றி நான்.

நீ இன்றி

நான் வாழும்

வாழ்க்கையில்

சுகமில்லை...

நான் இன்றி

நீ வாழும்

வாழ்க்கையில்

சுவையில்லை...

நான் இன்றி நீயும்

நீ இன்றி நானும்

இன்னுமேன்

தவிக்கின்றோம்?

தவித்தபோது தாங்கி நின்றாய்

துடித்தபோது தோள்கொடுத்தாய்

மறுத்தபோது மலைத்துநின்றாய்

இன்று

இணைய நினைக்க

எட்டி உதைக்கின்றாய்

இன்னுமேன்

தவிக்கிறோம்..

எனக்கு பிடித்து

எனக்குப் பிடிக்காததால்..

உனக்குப் பிடித்து

எனக்குப் பிடிக்காததால்

இல்லை

இருவருக்கும் பிடித்து

நம் காதலை

ஏற்றுக்கொள்ளாத

சமூகத்தின்

ஏற்றத்தாழ்வுகளால்..

ஏற்றத்தாழ்வுகளால்

எனது வாழ்வில்

நான்பட்ட அல்லல்கள்

இன்னமும்தான் என்னை

விட்ட பாடில்லை...

இன்றுகாலை நான்குடித்த

கொக்கோக் கோலா

நேற்றுத் தின்ற இடியப்ப

கொத்துரொட்டியுடன்

வயிற்றில் கலக்க....

இப்போது எனக்கு

விக்கல் விக்கலாய்

வருகின்றது!

அக் அக் அக்....

ஆ......

ஆசையோடு அள்ளவந்தேன்

வாஞ்சையோடு கொஞ்ச வந்தேன்

வாரியணைத்து மார்பில் சுமக்க

வீரியத்துடன் விரைந்துவந்தேன்

அய்யகோ என்ன பரிதாபம்

கண்முன்னே என் கருவாச்சியை

கயவன் கவர்ந்து சென்றானே

ஆ...

அழகான வெள்ளைரோஜா...

மல்லிகை சூடி நடக்கிறது..

மல்லிகை

ரோஜாவை நுகர்ந்து பார்த்து

முகம் வாடிப்போனது

நானும் பார்க்கிறேன்

பல வருடங்களின் பின்னும்

அந்த ரோஜா

இன்னும் வாடாது

நேரிலும்

என் நெஞ்சிலும்

என் நெஞ்சினைக் கவர்ந்த

கள்ளி நீ என்று

கள்வன் நான் சொல்லமாட்டேன்!

ஏனென்றால்...

நாம் எல்லோருமே

திருடர்கள்!

உனக்கு நான் திருடன்..

எனக்கு நீ திருடி...

இதனால்...

இழப்புக்கள் ஏனோ நம்

இதயங்களிற்கு மட்டும்தான்!

இதயங்களிற்கு மட்டும்

சிலஇழப்புக்கள் புரியும்

இழப்புகளிற்கு மட்டும்

சிலஉண்மைகள் தெரியும்

அறிந்தும் அறியாமல்

புரிந்தும் புரியாமல்

காதல் என்னும் படகில்

துடுப்பின்றி புறப்பட்டு

இன்று

வடுக்கொண்டு நிற்கின்றேன்

நெஞ்சென்னும் கூட்டினுள்

நினைவாய் சில முட்கள்

விருப்போ வெறுப்போ

அடைபட்டு குறுக்கின்றன

ரோஜாவை பறிக்க நினைத்து

முட்களைப் பரிசாயப்பெற்றேன்

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் ரோஜாக்கள்

Edited by Paranee

ஓராயிரம் ரோஜாக்களை

உன் காலடியில் தூவி

உன்னிடம் ஓர்

உண்மையைக் கேட்கின்றேன்!

என்னுடன் சேர்த்து நீ

எத்தனை பேரை

இதுவரை உன்வாழ்வில்

காதலித் துள்ளாய்?

காதலித்த கதைசொல்ல

காத்திருப்பாயா ?

பொறுமைக்கு பெயரான

பூமா தேவியே

என் உரிமைக்குரியவளே

அன்னையை காதலித்தேன்

ஆண்டவனான என்

தந்தையை காதலித்தேன்

ஓரு வயிற்றில் உழன்ற

உடன் பிறப்புகளை காதலித்தேன்

அரிவரி சொல்லித்தந்த

ஆசானைக்காதலித்தேன்

அன்றிலிருந்து இன்றுவரை

அருகே இருக்கும்

தாய் மொழியைக்காதலித்தேன்

பிறந்தபோது தாங்கி

நடந்தபோது பாதம் தடவி

என்னை அணுவணுவாய்

வளர்த்தெடுத்த தேசத்தை காதலித்தேன்

இறக்கும்வரை இறுக்கமாய் வரும்

உன்னையும் காதலித்தேன்

போதுமா என்

புலன் திறந்த தேவதையே !

Edited by Paranee

தேவதையே என் அருகில் வந்தாலும்

தேன் ஒழுக என்னுடன் கதைத்தாலும்..

முட்டாள் எனது மரமண்டை மூளைக்கு

ஆயகலைகளை போதிக்கும்

கலைமகள் கிருபை கிடைக்காதவரை..

வாழ்வு என்றென்றும் அமாவாசை இரவுகளே!

அமாவாசை இரவுகளே

விரைந்து செல்லுங்கள்

பெளர்ணமி நிலவுக்காக

என்னவன் வானை நோக்கி

நீண்டநேரம் காத்திருக்கின்றான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.