Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

நீண்ட நேரம்

காத்திருக்கின்றான்

நிலவும்

வந்துவிட்டது..

அப்படியானால்..

இந்த இரவில்

யாருக்காக..

ஒரு பொழுதுமே வராத

அவன் காதலிக்காக

என்றால்

அவன் முட்டாளலல்ல

பைத்தியக்காரன்..

  • Replies 1.9k
  • Views 183.4k
  • Created
  • Last Reply

பைத்தியக்காரன் நான் அல்ல

பைத்தியக்காரன் நீயே தான்

ஆமாம் எனக்குள்

பைத்தியத்தை தொற்ற

வைத்த பைத்தியமே

நீதான் பைத்தியம்

நானல்ல

நானல்ல..நானல்ல

நான் அவன் அல்ல

பூவைச்சூடும் உந்தன் காதில்

பூவைச் சூட்டி

கட்டில் வித்தை காட்டி..

கம்பி நீட்டிக்கொண்டானா..

ஐயையோ..

நான் அவனல்ல..

பொய்யை எல்லாம்

மூட்டை கட்டி..

கற்பனையால் ஓர் கோட்டை கட்டி

இளவரசியை போல் உன்னை சொல்லி..

உன் தங்கம் யாவும்..

கொள்ளை கொண்டானா..

ஐயையோ..

நான் அவனல்ல..

ஏமாற்றும் பெண்களையும்

ஏமாற்ற ஆணுண்டு

என்று

சின்ன சந்தோசம் நானே கொண்டாலும்..

பாவி நான் அவனல்ல..ஐயையோ..

நான் அவனல்ல..

நான் அவன் இல்லைத்தான்

ஆமாம்

பூவை பறித்து

வாசம் நுகர்ந்து

வீதியில் வீசிய காமுகன்

முளைவிடும் முன்னே

முதிர்கனி கேட்ட மூடன்

நான் அவன் இல்லை

தமிழே மூச்சாய்

ஈழமே சுவாசமாய்

வாழ்ந்த மக்களை

வீதியில் வெட்டி

வேருடன் சாய்த்த

கொடிய சிங்களவன்

நான் அவன் இல்லை

கொன்று தின்று

நுகர்ந்து சுவைத்து

சேயுடன் தாயை

சீற்றமாய் துவைத்த

சிங்களக்காடை

நான் இல்லை

தாய் மொழியே மூச்சாய்

தாய் மண்ணே வாசமாய்

புலம்பெயர்ந்தாலும்

தடம் மறவாத தமிழன் நான்

நான் அவன் இல்லைத்தான்

ஆமாம்

பூவை பறித்து

வாசம் நுகர்ந்து

வீதியில் வீசிய காமுகன்

முளைவிடும் முன்னே

முதிர்கனி கேட்ட மூடன்

நான் அவன் இல்லை

தமிழே மூச்சாய்

ஈழமே சுவாசமாய்

வாழ்ந்த மக்களை

வீதியில் வெட்டி

வேருடன் சாய்த்த

கொடிய சிங்களவன்

நான் அவன் இல்லை

கொன்று தின்று

நுகர்ந்து சுவைத்து

சேயுடன் தாயை

சீற்றமாய் துவைத்த

சிங்களக்காடை

நான் இல்லை

தாய் மொழியே மூச்சாய்

தாய் மண்ணே வாசமாய்

புலம்பெயர்ந்தாலும்

தடம் மறவாத தமிழன் நான்

தமிழன் நான் என்றேன்

-எம் நாட்டில்

அடிகள் போட்டார்கள்

புலம் பெயர்ந்து வந்தேன்...

இங்கும்....

நீ யார் என்றார்கள்...?

தமிழன் நான் என்றேன்...

புலியோ என்றார் கள்!

இல்லை ''பூனை'' நான் என்றேன்..

புலியாய் நான் இருந்தால்

புலம்- பெயர்ந்திருக்கேன்...

என்றாலும் தமிழை

மொழியாய் பேசுகின்ற

மனிதன் நான் என்றேன்...!

ஓ....

டமிழன் நீ என்றால்

கோஷ்டிச் சண்டை களும்

கிறடிட் காட் - புறோடுகளும்

இடுற இனமோ என்றார்...!

இல்லை ...இல்லை..

தமிழன் நான் என்றேன்...!

அப்போ அவர்கள்

யாரென்றார்...>>?

வெட்கித் தலை குனிந்தேன்..... ! :lol:

வெட்கி தலை

குனிந்தேன்

வாழ வழியின்றி

அயல்நாட்டில்

தஞ்சம்கோட்டும்

அடங்காத எம்

சகோதரன் வீரம்

தனைப் பார்த்து

பார்த்து..

பழகி...

பட்டுடல்

தொட்டு..

பவளவிதழ்

பருகி

பாழான மோகம்

பழசாகிப்போக

பரிசப்பிடிப்பின்றி

பாவையை விலகி..

பரதேசம் போக

பணம் நாடி

பணப்பை விரிக்க

படுக்கை விரித்தவள்

பணத்தோடு

பறந்தது..மெல்லப்

புரிந்தது

ஆம்..

ஏமாற்றம்

ஏமாற்ற

நினைப்பனுக்குத்தான் என்று

என்றுதான்

புரிந்துகொள்வாய்

என்ன

அறிவுள்ள

கல்லே

உன்னையெடுப்பவர்

எல்லாம்

சிற்பமாக்கி எறிந்து

விட்டுப்போக

கண்ணீரும்

தண்ணீரும்

ஏனோ

இதில் ஆண்னென்ன

பெண்னென்ன

எடுப்பவர் கை

செதுக்குவதை பொறுத்தே

வாழ்வதும் தாழ்வதும்

வாழ்வதும் தாழ்வதும்

வாழும் முறையில்

சிற்பியின் கையில்

சிலையாகி

பக்தனின் கையில்

ஆண்டவனாகி

கைம்மாறும்போதெல்லாம்

கலை மாறி

வாழ்வதுததான் வாழ்க்கை

நிலையாக நீண்டிருக்க

வாழ்க்கை என்ன

வைரக்கல்லா

பொத்தி வைக்க

பொத்தி வைக்க ஏங்கும்

முகில்க் கூட்டம்...

போல் நானும்

விட்டோடும் நிலவாட்டம்

நழுவுகின்ற பெண்

நீயும்..

தாமரைஇதழ் விழுந்த

பனித்துளியில்

குளிக்க எண்ணும்..

என் எண்ணம்

வழுக்கமரம் ஏறும்

வழக்கமான கதை..

கதையில் திருப்பங்கள்

உண்டாகலாம்..

உண்டான திருப்பம்

நீ கல்

மனம் கொண்ட சிற்பம்..

சிற்பம் ஒரு

கிழக்கோவிலில் சிறை ஆனதே..

மீட்கமுடியாமல் நீ சிறையில்..

கேட்கமுடியாமல் நான் தொலைவில்..

வேறு ஜென்மங்கள்

நமக்கில்லை எனக்கதில்

நம்பிக்கையுமில்லை..

ஒரே ஒரு கேள்வி..

என்னை மறுத்தவள்..

இரண்டாவது போகத்திற்கு

எப்படி சம்மதித்தாய்?

சம்மதம்

மலரின் சம்மதத்துடனா

வண்டின் ஊடல்

கரையின் சம்மதத்துடனா

அலையில் வருடல்

இளமை இருக்கும்வரை

இணைவும் இருக்கும்

நீ இராமானானால்

நான் சீதை

நீ கோவலானால்

நான் மாதவி

கண்ணகியாக மாற

காலம் ஒத்துழைத்தாலும்

கஸ்டம் ஓத்துழைப்பதில்லை

இல்லை என்று

ஒரே சொல்லில்

என் இதிகாசத்தையே

முடித்துவைத்தாய்...

மூடி வைத்த

பைபிளாய்

ஆயிரம் விடயங்களை

உள்ளடக்கி

அம்சடக்கியாய்..

நடந்து போவாயே..

பிரித்துப் படிக்க

நினைத்ததென்

பிழைதான்..சொல்

ஆர்வக்கோளாறு

யாருக்கில்லை..

ஓ இது வயதுக் கோளாறு

என்கிறாயா..இருக்காது

இருதயம் வரை இழப்பு

ஏற்பட்டிருக்கிறதே..

இன்னும் வரிசையில்

உனக்காக என் போல்

பல இளைஞர்கள்

இருப்பார்கள்..

அவர்களுக்காக நான்

வேண்டுவது..

நீ அசினாக இருந்தது

போதும் அசிங்கமாக மாறிவிடு..

எல்லாப் பெண்களுக்கும்

இல்லை என்ற சொல்

மறக்கக் கடவாய்..

மறக்க நினைத்தாலும்

நிறைந்து நிற்கின்றாயே

நினைவெல்லாம்

ஓற்றைப்பனை நிழலிலே

ஓட்டியுறவாடிய காலத்தை

சுற்றம் மறந்து

சுகம் சுவைத்து

கட்டியணைத்து

கதைகள் பல பேசி

கடற்கரையோரம்

கொஞ்சி மகிழ்ந்தோமே

எதை மறக்கச்சொல்கின்றாய்

தாய்வாசம் தேடி

தவித்து நீ வந்தவேளை

தாயாகி உன்னை

சேயாக்கி நின்றேனே

பரீட்சை முடிவில்

நீ பலமிழந்து பரிதவித்தவேளை

பக்கமிருந்து உன்னை

பக்குவமாக்கி வைத்தேனே

மறக்கச்சொல்கின்றாயா ?

ஒட்டி உறவாடும்வரை

உள்ளிருக்கும் சுகம்

சுடும்வரை - உனக்கு

காதல் கசக்கவில்லை

இன்று

சுவைத்தெறிந்த கனியாய்

நான் துவண்டு விழுந்தேனே

நீ

துரோகம் செய்கின்றாயே

பாவி

நீ காதலிக்கவில்லை

காமவெறியை

களைந்துவிட வந்தவனல்லவா ?

வந்தவனல்லவா வாடி நிற்கிறான்...

தமிழ்ப பண்பாடு எங்கே..

விருந்தோம்பல் எங்கே..

இன்முகம் எங்கே..

இன் சொல் எங்கே...

இதெல்லாம் இருக்கட்டும்

தறிகெட்டுக்கிடக்கும்..

இப்பிள்ளைகளை ஈன்ற என்

தம்பியும் அவன் தாரமும் எங்கே..

கேளிக்கையால்.. கடமை

மறந்துவிட்டதோ..

பழையன கழிந்து

புது நாகரீகம் கொண்ட உங்கள்

விருந்தோம்பல் எனக்கேள்..

இலண்டன் சுற்றுலாவா..

ஐயோ தலை சுற்றுகிறதே..

வேண்டாம்.. என்று

சொல்லிவிட்டு செல்லக் கூட

ஆளில்லை...இந்த வீட்டில்..

நான் மீண்டும்

ஊருக்கே போகிறேன்

போகின்றேன் என்று

போய் போய் வந்தவனே

சூடுகண்ட பூனை

அடுப்பங்கரை நாடாது

நீ ருசி கண்டவன்

பசியில்லையெனினும்

பாசாங்காய் வந்து நிற்பாய்

கட்டியவள் மெட்டி

வலிக்குதென்றாள்

கழட்டித்தான் வீசுவாளோ ?

ஓட்டிய உறவு உன்னை

ஓன்றாய் வாழத்தான்

நினைத்து நீள்கின்றாள்

வந்தவளை வாழவைத்துவிடு

வாழும்வரை வளம் சேர்த்துவிடு

சேர்த்துவிடு இதழ்

அவள் செவ்விதழ் மேல்

கோர்த்து விரல்

அவள் பூங்கரத்தில்

எனவுந்துகிற மனம்

ஆசையில் நீந்தும்

அவள் அணைக்கும்

கணமென்னும் இந்த

இளையவன் விரகதாபம்

கொழுந்துவிட்டு எரியும்..

எரிதழலில்

இதம்காணும்

குளிர்நடுவில்

குதூகலிக்கும்

காதல்

எரிந்த பிணத்தில்

|ஏறிநின்றாடும்

சரிந்த சரீரத்தையும்

சபலத்துடன் அணுகும்

சிங்கள கொடிய

சிற்றெறும்புகளை

வெந்தணலில் வேகவைத்து

ஈழத்தின் விடியல்

காண்போம் வா

வா! தமிழீழம்

காண்போம் வா

வா தமிழ் தன்னை

காப்போம் வா

கடல் கடந்து சென்று

நிலை குலைந்த பண்பு

இனம் மறந்து சென்று

தமிழ் மறக்க முன்பு

தடை கடந்து வென்று

தமிழீழம் காண்போம் வா

தலை நிமிர்ந்து நின்று

தமிழ் முழங்க அன்று

புலி சிறப்பை கொண்டு

புகழ் அனைத்தும் வென்று

புதுப்புரட்சி செய்து

தமிழீழம் காண்போம் வா!

வா! தமிழீழம்

காண்போம் வா

வா தமிழ் தன்னை

காப்போம் வா

Edited by vettri-vel

காண்போம் வா! தமிழீழம்

காண்போம் வா

கடல் கடந்து சென்று

நிலை குலைந்த பண்பு

இனம் மறந்து சென்று

தமிழ் மறக்க முன்பு

தடை கடந்து வென்று

தமிழீழம் காண்போம் வா

தலை நிமிர்ந்து நின்று

தமிழ் முழங்க அன்று

புலி சிறப்பை கொண்டு

புகழ் அனைத்தும் வென்று

புதுப்புரட்சி செய்து

தமிழீழம் காண்போம் வா!

காப்போம் வா

தமிழ் தன்னை காப்போம் வா

தமிழ் தனைக் காப்போம் வா...

தரணியில் இங்கு

தமிழ்தனை அழிப்பது

சிங்களன் அல்ல

நம்மவர் என்பதை முதலினில்

ஏற்போம் வா....

வட மொழி கலந்த

இடரது தொலையும் முன்

இன்னும்.. பிற மொழி

கலந்திங்கு..

துயரது செய்வது

நம்மினம் என்பதை

ஏற்போம் வா.....

தமிழதை வளர்த்திட வேண்டாம்

அதில் இருக்கின்ற சொல்லை

பாவித்தால் போதும்..

இணையாக இன்னொரு சொல்

இன்னொரு மொழியினில்

என்றுமே வேண்டாம்....

தமிழர் நாம்

தமிழ் தனில் பேசி

தமிழ்தனில் எழுதி

தமிழ் தனை காப்போம் வா......

வெள்ளிச் சலங்கை கட்டி

துள்ளி வரும் வெண்ணிலவே..

பள்ளி வரத் தாமதமேன்..

அள்ளியே நானணைக்க..

கொள்ளையாசையடி..தொடத்

தள்ளிப்போவதென்ன கண்ணம்மா..

வெட்கமா..நாணமா..

அழகான கவிதை விகடகவி. வாழ்த்துக்கள்

வா என்று வருந்தியே

நீ அழைக்க

மலர்வாசம் மனதெங்கும் வீச

ஓடோடி வந்தேனே

கடுகதியில் வந்த என்னை

கண்டும்

காணமல் நீ இருக்க

மலர்ந்த என் ஆசை

வாடி உதிர்ந்தடா

காத்திருந்து காத்திருந்து

காலம் என்னை கழற்றிவிட

நோய் விழுந்து என் உடம்பும்

நொந்து நூலாக

பாய் அணைக்க

நான் துடிக்க

பாவி நீ

இன்றுவரை

விழி வீச மறுக்கின்றாயே

விழி வீச மறுக்கின்றாயே

என்றென்னை வீம்பாய்

கேளேன்-அடி

வேற்றாளா நீ

என்னதான் உன் கோபம்..

வேலை..நிமித்தம்

கடுகதி ரயிலானேன்..

கால்மணி கூட

கிடைக்காமல்..

காட்டாறாய் ஓடுகிறேன்..

உனக்காகத்தானே அன்பே..

ஓடாகத் தேய்கின்றேன்..

வெறுப்பை வெளிக்கொணர்ந்து

வேற்றுமையைக் காட்டுவதேன்..

வேண்டாமடி..வேண்டாம்..

நான் வேறு நீ வேறு..

என உன் நாவுரைக்க..

நான் கேட்க வேண்டாம்..

ஆருயிர் சகியே..

Edited by vikadakavi

ஆருயிர் சகியே

ஆசை முகமே

அன்பு மலரே

அடிபணியா பெண்மையே

உன்னை வாரியணைத்து

வசைமொழி பேசி

வாஞ்சையுடன்

வையப்போகின்றேன்.

போகின்றேன்

உன் பொய் முகம்

பிடிக்கவில்லை

அதனால்

போகின்றேன்..

உன் நடிப்பை நான்

கண்டு கொண்டேன்

அதனால்

போகின்றேன்..

உன் சிரிப்பில்

யதார்த்தமில்லை

நான் போகின்றேன்..

இதுவரை காலமும் நீ ஏழைப்பெண்..

இன்று நடிகையாகிவிட்டாய்..

செல்வத்துக்காய்

பண்பைச் சேதாரமாக்கிவிட்டாய்..

பெண்ணே..நிம்மதியான நான்

உன்னைவிட்டுப்

போகின்றேன்..

போகின்றேன் என்று பலதடவைகள் எழுதிவிட்டோம். அதனால் உன்னை விட்டு என்று தொடங்குகின்றேன்

உனைவிட்டகல

உரிமையேதுமில்லை

பிறந்தபோதும்

தவழ்ந்தபோதும்

தாங்கிய தாய் மண்ணே

உன்னைவிட்டகல

என்மனம் ஏவுமா ?

கண்ணிவெடிகளாலும்

கன்னியழிவினாலும்

உன்னுடல் சிதையலாம்

உன்கரங்கள் ஓடியலாம்

எனக்கும் உனக்கும்

இடையில் ஓடும்

உணர்வு அழியுமா ?

உரிமை குறையுமா ?

தாயே

உன்னை தழுவிட

முகம்புதைத்து

முழுதாய் துயின்றிட

காலம் பார்த்து

காவல் காத்து நிற்கின்றேன்

Edited by Paranee

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.